Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நியூ யார்க் பயணக் கட்டுரை

Featured Replies

நியூ யார்க் பயணக் கட்டுரை - 1

மெமோரியல் டே மே 26 அமெரிக்காவில் கொண்டாட படுவதால் அந்நாள் விடுமுறை. ஒரு வருடத்தில் மிக குறைந்த நாட்களே  தேசிய விடுமுறையாக US ல்  அனுசரிக்க படுகிறது. அதனால் இந்த விடுமுறையை வீணடிக்காமல் நியூ யார்க் நகரம் செல்ல முன்கூட்டியே நானும் மனைவியும் திட்டமிட்டுவிட்டோம். மே 21 கிளம்பி வழியில் ஓர் இரவு தங்கி விட்டு மொத்தம் ஐந்து நாட்களும் நியூ யார்க்கில் கழிக்க திட்டம். நியூ யார்க் நகரத்தில் தாங்கும் விடுதிகளின் வாடகை அதிகம் இருந்ததால் நியூ யார்க் நகர எல்லையில் இருக்கும் நியூ ஜெர்சியின் ஈஸ்ட் ஆரஞ்சு என்னும் இடத்தில் விடுதி முன்பதிவு செய்து விட்டோம்.

map.png

மே 21 2 மணி அளவில்  அலுவகத்தில் இருந்து சீக்கிரம் கிளம்பி வந்துவிட்டேன். மதியம் 2:30 மணிக்கு கிளம்பினோம். அமெரிக்கர்கள் அதிகம் விரும்பும் வெயில் கொளுத்தி கொண்டிருந்தது. முதல் பயணம் கிட்ட தட்ட 500 மைல்கள் கார் ஓட்டி கொண்டு செல்ல வேண்டும்.  பென்சில்வானியாவில் டேன்வில்லெவில் இரவு தங்கள். போகும் வழியை காரின் GPS காட்டிவிடும். கிளம்பி முக்கால் மணி நேரத்திலேய ஓஹயோ மாகாணத்தில் உள்ள டோலீடோ என்னும் நகரத்தை அடைந்தோம். அதை  அடையும் தோறும் வழி  எல்லாம் தொழிற்சாலைகள் பல இருந்ததை பார்த்தோம். இந்த டோலீடோ நகரம் நம் கோவை நகரத்துக்கு சிஸ்டர் சிட்டி ஆகும்.


மிசிகனில் நான் இருக்கும் இடத்தில இருந்து வெகு தூரத்திற்கு சென்றால் தான் விவசாய நிலங்களை  பார்க்க முடியும் ஆனால் ஓஹயோ மாகாணத்தில் டோலீடோ நகரத்தில் இருந்து சிறிது விலகியதுமே விவசாய நிலம் ஆரம்பித்து விட்டது.அது ஏன் என்று பிறகு திரும்பி வரும் போது  புரிந்தது. அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் சுங்க சாலைகளை தவிர்க்க சொன்னார்கள். அதன் பேரில் avoid tolls என்று GPSயை அமைத்து விட்டதால் அது சுங்கம் கட்ட வேண்டிய Freewayயை தவிர்த்து விட்டது அதனாலேயே அந்த விவசாய நிலங்கள் கண்ணில் பட்டது போலும்.  எந்த வவிவசாய நிலத்திலும் எதிவும் பயிர் செய்ய படவில்லை. பனி காலம் இப்போது தன் முடிந்துள்ளது. இனிமேல் தான் பயிரிடுவார்கள் என்று நினைகிறேன். எல்லா விவசாய நிலத்திலுமே பான் (Barn),  ஒரு உயரமான தோட்டத்து வீடு அமைக்க பட்டிருக்கும்.

பான்

ஓஹாயோ மாகாணத்தில் OH 2 எனும் பிரீவேயில் சென்றோம் ஈரி குளதின் கரையின் ஓரத்தில் அமைந்த வழி. டொலெடொவில் இருந்து 1 மணி  நேரத்திற்குள் கிளீவ்லன்ட் நகரத்திற்கு சென்றுவிட்டோம் அங்கு துறைமுகங்கள் இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட டெட்ராய்ட் இருந்து கிளீவேலன்ட் வழியாக நியூ யார்க் சீல்லும் கப்பல் போக்கு வரத்து இருந்திருக்கிறது. இப்போது ஒவ்வொரு குடும்பத்திடமும் கார்கள் இருப்பதால் அது தேவை இல்லை.

US பிரீவேகளில் பயணம் செய்பவர்களின் வசதிக்காக சராசரியாக ஒவ்வொரு 30 - 40 மைல்களுக்கு ஒரு ஒய்வு வெளி - Rest area இருக்கும். கழிப்பறைகள், சிற்றுண்டி வாங்கும் எந்திரங்களும், மேப்பும், அருகமையில் உள்ள  சுற்றுலா தளங்களை பற்றிய விவரங்களும் இருக்கும். ஓஹாயோ மாகாணத்தில் சாலை குறியீடுகள் குழப்பகரமாக இருந்ததால் ஒரு  ஒய்வு வெளியை தவற விட்டு அடுத்த ஒய்வு வெளியை நெடு நேரம் காத்திருந்து பிடித்தோம்.

மாலை 6:30 மணி அளவில் வீட்டிலிருந்தே கட்டி வந்த சாப்பாட்டை சாப்பிட்டோம். சாப்பாட்டை கட்டி கொண்டு வந்து விடுவது காசு மிச்சம் செய்வதுமில்லாமல் ஹோட்டல் தேடி நிறுத்தும் நேரத்தையும் மிச்சம் செய்கிறது. சிறிது நேரத்தில் பென்சில்வினியா அடைந்து விட்டோம். நியூ யார்க் செல்வதற்கு பென்சில்வேனியாவை குறுக்காக கடந்தாக வேண்டும். பென்சில்வேனியா முழுக்க I80 என்ற பிரீவேயில் பயணம் செய்தோம் இரண்டே லேன்கள் கொண்ட சாலை. ஆங்காங்கே சாலை சீரமைப்பு பனி நடந்தமையால் வேகம் அளவு குறைக்க பட்டிருந்தது. 

மிசிகன் மாகாணத்தில் 70 மைல் தான் அதிக பட்ச வேகம். ஓஹயோ, பென்சில்வேனியா, நியூ ஜெர்செய்யில் அதிக பட்ச வேகம் 65 மைலாக இருந்தது. போகும் போதே முடிவு செய்துவிட்டேன் வேக அளவை மீற கூடாதென்று.

பென்சில்வேனியா சாலையின் இரு புறமும் அடர்ந்த காடாக இருந்தது. அடர் பச்சை நிற மரங்கள். ஒரே மாதிரியான மரங்கள். மேடு பள்ளமாக மர வெளி. மர பரப்புக்கு கிழே மலை ஒளிந்திருந்தது. மலைகளுக்கு வகுடு எடுத்து சீவி விட்டது போல் மரங்கள் ஒரே உயரத்தில் சீராக பரவலாக அமைந்திருந்தது. அங்கங்கே பணி படலம்  mist சாலையின் காட்சியை குறைத்தது. வழி நெடுக ஆங்கங்கே மான்கள் வண்டிகளில் அடிபட்டு செத்துக்கிடந்தது. இரவு தொடங்கி விட்டுருந்த்தல் ட்ரக்குகள் சாலையில் அதிகம் இருந்தது.  

dead_deer.jpg
போகும் வழியில் கடைகள், வீடுகள், விவசாய நிலங்கள், எதுவுமே தென் படவில்லை. ஏதோ காட்டுக்குள் சாலை போட்டிருப்பார்கள் போலும். ஆனால் 30 மைலுக்கு ஒரு ஒய்வு வெளி இருந்தது. 10 மணிக்கு மேல் சாப்பாடு வாங்கி கொண்டு தங்கும் விடுதிக்கு சென்று விடலாம் என்று இருந்தோம். என் மனைவி ஷாலினி எச்சரித்தது போலவே 10 மணிக்கு மேல் நாங்கள் செல்லும் வழியில் எந்த கடைகளுமே இல்லை. அப்படியே இருந்தாலும், சைவ உணவு கடைகளாக இல்லை. இரவு 11:30 மணிக்கு விடுதிக்கு சென்று சேர்ந்தோம். எந்த உணவகமும் அந்த நேரத்தில் திறந்திருகாது. அந்த நேரத்தில் திறந்து இருக்கும் Drive through உணவு கடைகளும் அருகில் ஏதும் இருக்கவில்லை. அதனால் அருகில் இருக்கும் Walmart சென்று கேக், நொறுக்கு தீனி, வாழை பழம் வாங்கி வந்து சாப்பிடுவிட்டு தூங்கினோம். அவ்வளவு பசி இல்லாததால் அது போதுமாக இருந்தது.


நல்ல வேலையாக நாங்கள் விடுதி  வந்து சேரும் வரை மழையேதும் இல்லை. விடுதி வந்து டிவியில் பார்த்தால் அந்த இடத்திற்கு storm warning அறிவுதிருந்தர்கள். இரவு நல்ல மழை பெய்தது. மே 22 காலை பத்து மணி அளவில் கிளம்பினோம் இன்னும் இரண்டரை  மணி நேர பயணம். பென்சில்வேனியாவின் மிச்ச தூரத்தையும் கடந்து நியூ ஜெர்செயின் கிழக்கு எல்லைக்கு சென்றாக வேண்டும். நியூ ஜெர்சி மாகானமும் மலைகளாக இருந்தது அனால் வெவ்வேறு பச்சை நிறத்தில் மரங்கள் சிறிதும் பெரிதுமாக தோன்றியது. பென்சில்வேனியாவிழும், நியூ ஜெர்செயிலும், சில மலை சரிவுகளில் Falling Rocks என்ற குறி இருந்தது. நியூ ஜெர்செர்யில் சில மலை  சரிவுகளை கம்பி வலையில்ட்டு போர்த்தி இருந்தார்கள். நியூ யார்க் நகரை நெருங்கும் வரை நியூ ஜெர்செய்யும் அமைதியான சாலையுடன் இருந்தது. அதே I80 பிரீவேயில் தான் சென்றோம் நியூ யார்க் அருகே சென்றதும் I280 என்ற ப்ரீவே தொடங்கியது. பரப்பான போக்குவரத்து தொடங்கியது நான்கு லேன் சாலையாக மாறியது.

நியூ யோர்கையும், நியூ ஜெர்செய்யையும் பிரிப்பது ஹட்சன் என்ற நதி. நியூ ஜெர்சியின் கிழக்கு எல்லையில் இருந்து நியூ யார்க்குக்கு நகரத்திற்கு ஒரு துரித ரயில் போக்குவரத்து PATH இருக்கிறது. 15 நிமிடத்திற்கு ஒரு வண்டி என 24 மணி நேரமும்  இருக்கிறது. நாங்கள் தாங்கும் விடுதி இருக்கும் ஈஸ்ட் ஆரஞ்சுக்கு பக்கம் ஹாரிசன் என்னும் இடத்தில இருந்து நியூ யார்க் 33வது வீதி வரைக்கும் அந்த ரயில் செல்லும். அதனால் நேராக ஹாரிசன் ரயில் நிலையத்திற்கே சென்று விட்டோம்.


நியூ ஜெர்சி ஹாரிசன் நகரத்தில் பிரீவேயில் இருந்து நகரத்திற்குள் நுழைந்தோம். காரை நிறுத்த பார்கிங் கண்டு பிடித்தாக வேண்டும். மிசிகன் மாகாண சாலை விதிக்கும் நியூ ஜெர்சி சாலை விதிக்கும் ஒன்று பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் சாலைகளில் நெரிசல் அதிகம், புது இடம், சாலையில் பூசபட்டிருக்கும் வெள்ளை, மஞ்சள் கோடுகள் எல்லாம் அழிந்திருந்தது அதனால் காருக்கு பார்கிங் கண்டு பிடிப்பது பெரும் பாடாக  ஆகிவிட்டது. பார்கிங் ஸ்டேஷன் முகவரி எதுவும் எடுத்து வராததால் தேடவேண்டியதாகி விட்டது.
புது இடம் என்பதால் ஒன் வேயில் நுழைந்து விட கூடாது, அபராத டிக்கெட் வாங்கிவிட கூடாது என்பதால் மெதுவாக தேடி கொண்டே சென்றோம். கடுப்பான உள்ளூர் வாசிகள் ஹாரன் அடித்தார்கள். அவ்வாறு ஹாரன் அடிப்பது ஒருவரை திட்டுவதற்கு சமம் ஆனால் பெரு நகரங்களில் அது சாதாரணம். எப்படியோ ஒரு வழியாக பார்கிங் கண்டு பிடித்து காரை நிறுத்தி விட்டு ரயில் ஸ்டேஷன்க்குள் நுழைந்தோம்.

இதை போன்ற நகர ரயில்கள் எல்லாம் ஒரு காசு அட்டையை தந்து விடுகிறார்கள் முன்னமே ஒரு 5 பயன்களுக்கான பணத்தை கொடுத்து அந்த அட்டையை பெற்று கொள்ள வேண்டும் பின்பு தேவை பட்ட ஸ்டேஷனில் swipe செய்து பயணம் செய்து கொள்ளலாம். அதை விநியோகிக்க ஒரு தானியங்கி எந்திரம்.
ரயில் ஸ்டேஷன் இரும்பு வாடையுடன் இருந்தது. ஹாரிசன் நகர சாலைகளும் அதிக தூசு படிந்து தான் இருந்தது. அந்த நகரத்தில் சிறிது சிறிதாய் நெருக்கமான வீடுகள். சாலையின் இரு ஓரங்களிலும் அவர்களுக்கான சாலைகள். அங்கு இந்தியர்கள் தான் அதிகமாக தென்ப்பட்டார்கள். அது ஒரு residental area. நியூ யோர்கில் பனி புரியும் அணைத்து நடுத்தர வர்க்க குடும்பங்களும் இது போன்ற எல்லையில் உள்ள நகரங்களில் வசிக்கிறது போலும் .

ஸ்டேஷனில் வெள்ளையர்கள் மிக குறைவாக தான் இருந்தார்கள். இந்தியர்கள், சீனர்கள், லத்தின் அமெரிகர்கள், கருப்பர்கள் தான் அதிகம் இருந்தார்கள். ரயில் வந்தது. ஹட்சன் ஆற்றை கடந்தோம். பெரும் பாலம் ஒன்று தெரிந்தது, சாலையாக இருக்க வேண்டும் நிறைய கண்டேய்னர்கல் இருந்தது. துறைமுக நகரமல்லவா. பாலைடந்த வீடுகள் சில. நெரிசலான கட்டங்கள். கட்டடங்களின் சுவர்களில் எல்லாம் Grafitti எழுத்தோவியம். ஒரு சீக் ஆலயம் தென்ப்பட்டது. ரயில் பாதை மிகவும் அழுக்காக இருந்தது. அழுக்கு நீர் தேங்கி, பிளாஸ்டிக் காகிதத்துடன் நின்றது. 

ரயிலுக்குள் பலவரியான விளம்பரங்களும் டிவியில் நியூஸ்ம் ஓடி கொண்டிருந்தது. உட்கார இடம் கிடைக்கவில்லை. இன்னொரு ரயில் மாற வேண்டும் Journal Square எனும் இடத்தில். அங்கிருந்து நியூ யார்க் சப் வே தொடங்கி விட்டது. கிரிச்சிடும் சப்தங்களுடன் ரயில் வேகமாக சென்றது. நியூ யார்க் நகரம் 33வது வீதியில் சென்று இறங்கினோம். படி ஏறி மேலே வந்து பரப்பான நியூ யார்க் சாலையில் நாங்களும் இனைந்து கொண்டோம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Athavan CH said:

நியூ யார்க் பயணக் கட்டுரை - 1

மொத்தம் ஐந்து நாட்களும் நியூ யார்க்கில் கழிக்க திட்டம்.

நியூ யோர்க்கை பார்வையிடுவதற்கு..... ஐந்து நாட்கள் காணாது. 
ஆகக் குறைந்தது.... நான்கு கிழமை வேண்டும். 
இரண்டு முறை... அங்கு சென்று வந்ததால்,
நாம் படங்களில் பார்த்த நியூ யோர்க்கை , நேரில் பார்த்து அனுபவிக்கும் போது... பாரிய வித்தியாசம் தெரியும்.
கட்டுரையாளாரின் அனுபவத்தை வாசிக்க, ஆவலாக உள்ளேன். தொடர்ந்து இணையுங்கள் ஆதவன்.

  • தொடங்கியவர்

நியூ யார்க் பயணக் கட்டுரை - 2

 

அமெரிக்க நகரங்களை சுற்றி பார்ப்பதற்கு, அங்குள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்கு முன்னதாகவே மொத்தமாக அனுமதி சீட்டை சில தனியார் நிறுவனங்கள் தந்து விடுகின்றன. சிட்டி பாஸ், நியு யார்க் பாஸ் போன்றவை. அந்த சுற்றுலா தளங்களில் தனி தனியாக வாங்கும் அனுமதி சீட்டை விட மொத்தமாக வாங்குவதால் இதில் விலை குறைவாக கிடைத்துவிடுகிறது. ஆனால் ஒவ்வொரு அனுமதி சீட்டும் உபயேகிக்க ஆரம்பத்தித்தில் இருந்து 3 அல்லது 5 நாட்களுக்குள் காலாவதி ஆகிவிடும். அதனால் நாங்கள் முதல் நாள் சென்று சேர்ந்த போதே 2 மணிக்கு மேலே ஆகிவிட்டதால், அந்த நியு யார்க் பாஸை அடுத்த நாளில் இருந்து உபயோகிக்க தொடங்கலாம் என்றும் அதனால் இன்று நியு யார்க் நகரில் சுற்றி திரியலாம் என்றும் முடிவு செய்தோம்.

இறங்கி சிறிது நேரத்திலேயே ஷாலினிக்கு பசி. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஏதாவது சிறிதளவு சாப்பிடாக வேண்டும். அதனால் ஒரு உணவகத்தை தேடி அலைந்தோம். இடம் தெரியாத இடத்தில் ஒரு உணவகத்தை தேடுவது நேரத்தை அதிகம் எடுத்து கொள்கிறது. அதுவும் அங்கு சைவ உணவு கிடைக்க வேண்டும்.

சாலைகளில் அகல நடைபாதை இருந்த்து ஆனாலும் ஜனங்களின் தெரிசல். இந்திய நகரங்களில் இருப்பது போல் இருந்தது. அதிக மக்கள் இல்லாத மற்ற அமெரிக்க ஊர்களில் இருந்து வந்து இத்தனை மக்கள் நிறைந்து கலை கட்டிய இந்த வீதிகளை பார்ப்பது புத்துனர்வு தருவதாக இருந்தது. சாலைகளிலும் கார்களின் நெரிசல். இதனாலேயே நான் காரை ஊருக்கு வெளியே நிறுத்திவிட்டு வருவது என்று முடிவு எடுத்தேன். தனி நபர் கார்களை விட மஞ்சள் நிற டாக்ஸிகள் தான் அதிகம். ஹாரன் ஒலி கேட்டு கொன்டே இருத்தது. சாலையும், நடைபாதையும் தூசி நிரம்பி அழுக்காக இருந்தது. எங்கும் உயர்ந்த கட்டடங்கள் சாலையை அடைத்து கொன்டு இருந்தது. பழைய கற்களினாலான, வண்ணம் பூசபடாத கட்டிடங்கள். ஷிகாகோ நகரம் இப்படி இருக்கவில்லை. அங்கும் உயர்ந்த கட்டிடங்கள் இருந்தது, ஆனால் இவ்வளவு அதிகமான கட்டிடம் இல்லை. அங்கு சாலையும் நடைபாதையும் இன்னும் விசாலமாக இருந்தது, சுத்தமாக இருந்தது. ஆனால் இது அதை விட பெரிய நகரம் என்பதால் இந்ந நெரிசல் புரிந்து கொள்ள கூடியதே. 

newyrkst.jpg

இங்கு தான் சாலையில் பெட்டி கடைகளை பார்க்க முடிந்தது. ஆங்காங்கே தெரு மூலைகளில் ஹலால் செய்யபட்ட அரபு உணவு விற்கப்பட்டது. ஆனால் அந்நகரில் அத்தனை முஸ்லிம்களை பார்க்கவில்லை. அந்த கடைகளின் தரத்தை பார்த்தால் அங்கு வாழும் நடு வர்கத்திற்கும் கீழ் உள்ள மக்கள் வாங்கி சாப்பிடும் கடை போல் தெரிந்தது. ஆங்காங்கே புகை பொருள், பத்திரிகை, தின்பண்டம் விற்கும் கடை. அதை இங்கு நியூஸ் ஸ்டான்ட் என்று சொல்கிறார்கள். அந்த கடைகளில் எல்லாம் இந்திய துனை கண்டத்தை சேர்ந்த முகங்கள் தான் கடைகார்ர்களாய் காணபட்டனர். பிறகு ஆங்காங்கே கருப்பர்கள் பைகளையும், கொடைகளையும் குவித்து வைத்து கூவி கூவி விற்று கொன்டு இருந்தார்கள்.

எப்படியோ ஒரு உணவு விடுதியை தேடி கண்டு பிடித்தோம். அங்கு நான் ஒரு வெஜ்ஜி பீட்ஸா துன்டை சாப்பிட்டேன். ஷாலினி மொட்ஸரெல்லா பனினி வாங்கி கொன்டாள். வாயில் வைக்க விளங்காத ஒரு சாப்பாடு அது. சீஸில் ஏதோ ஒரு வாடை, அதில் சவித்து போட்டது போல் ஸ்பினச் பச்சையாக இருந்தது. சரி வந்த இடத்தில் ருசிக்கு முக்கியத்துவம் இல்லை, காட்சிக்கு தான் என்று சாப்பிட்டு அந்த உணவகத்தில் சிறுநீர் கழித்துவிட்டு கிளம்பினோம். இந்த சுற்றுலா செல்லும் போதெல்லாம் அதிகம் தொல்லை தந்து நேரத்தை வீனடிப்பது இந்த சிறுநீர் பிரச்சனை தான். அதனால் கிளம்பும் போதே அளந்து தண்ணிர் குடிப்பது, கிடைத்த சமயத்தை பயன்படுத்தி கொள்வதென்று முடிவு எடுத்தேன். அது பயன் தந்தது.

உணவகத்திற்கு அருகிலேயே டைம் ஸ்க்யர் இருந்தது. ஷாலினி தான் வழி நடத்தி கூட்டி சென்றாள். சுற்றுலா தளங்களும், அதற்கு வழி பார்த்து வைக்கும் பொறுப்பும் அவளது. உயரமான கட்டங்களை அன்னாந்து பார்த்து கொன்டும் புகைபடம் எடுத்து கொன்டும் நடந்தோம். நாங்கள் அப்படி பார்த்து கொன்டு நடப்பதே வெளியூர்காரர்கள் என்று காட்டி கொடுத்துவிடும். ஆனால் அங்கு உள்ளுர்காரர்கள் குறைவாக தான் தென்பட்டார்கள். நிறைய சுற்றுலா பயணிகள் தான் இருந்நது போல் தோன்றியது.

டைம் ஸ்க்யர் உயரமான கட்டடங்களுக்கு நடுவே இருக்கும் ஓர் சதுக்கம். அந்த சதுக்கத்தை சுற்றி கட்டிடங்களின் வெளி சுவரில் மாபெரும் விளம்பர பலகைகளில் விளம்பர படங்கள் ஓடி கொன்டு இருந்தது. ஒளி வெள்ளமாக நிரைந்நிருந்த்து. ஏராளமான சுற்றுலா பயனிகள் நிரம்பி இருந்தார்கள். எல்லாரும் பல் வேறு விதமாய் ஃபோட்டோ எடுத்து கொன்டு இருந்தனர். முழுக்க முழுக்க மணிதனால் உருவாக்கபட்ட செயற்கை அழகு.
டிஜிட்டல் யுகத்தின் ஒரு சாதனை சின்னம் போல் இருந்தது அந்த இடம். நாள் தோறும் விளம்பரங்களை கண்டு சலித்து போயிருக்கும் மக்களை விளம்பரங்களை கொன்டே கவர்வது ஒரி விந்தை தான். துனி விளம்பரங்கள், திரைபட, சின்னத்திரை முன்னோட்டங்கள், குளிர் பானம், மின்னனு சாதனம், நகரில் ஓடும் மேடை நிகழ்வுகள் என்று பலவற்றிற்கும் விளம்பரம் ஓடி கொன்டு இருந்தது. அதில் பெண் கவர்ச்சி, அரை நிர்வான விளம்பரங்களும் பூதாகார அளவில் ஓடி கொன்டு இருந்தது.டைம் ஸ்க்யர் நியூ இயர் பால் ட்ராப் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த சமயத்தில் இந்த சதுக்கத்தில் இடம் கூட கிடைக்காமல் போய்விடும். எந்நேரமும் அங்கு கூட்டம் இருந்து கொன்டு இருந்தது. 

NYC_-_Time_Square_-_From_upperstairs.jpg
டைம் ஸ்க்யர்

எல்லா நாட்டு மக்களும் அங்கு இருந்தார்கள். அதில் இந்தியர்களும் அதிகமாக இருந்தார்கள். எல்லா மக்களும் கண் வழியே சுற்றி பார்பதை மறந்து விட்டிருந்தார்கள். கேமரா திரையில் தான் பார்த்து கொன்டிருந்தார்கள். சீனர்கள் புகைபடம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொன்டு இருந்தனர். அதுவும் சீன பெண்கள் வித விதமான கை முத்திரையுடன், முக பாவனையுடனும் புகைபடம் எடுத்து கொன்டனர். இந்தியர்களும் சலைக்காமல் எடுத்தார்கள். இதற்கெல்லாம் கேமராவும், நினைவில் நிறுத்தி கொள்வது மட்டும் காரனமல்ல. ஃபேஸ்புக் - அதற்கு தான் இத்தனை ஆர்பாட்டமும். வெள்ளையர்கள் ஒன்றிரண்டு போட்டகளுடன் நிறுத்தி கொன்டார்கள்.

அங்கு பார்வையாளர்கள் அமர்வதற்கு ஒரு கேளரி அமைத்திருக்கிறார்கள். அந்த படிகளில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொன்டிருந்தோம். நியு யார்க் வீதிகளில் புறாக்களை நிறைய பார்த்தோம். நாங்கள் அமர்ந்திருந்த கேளரி படிக்கட்டுகளில் மக்களுக்கு நடுவே ஒரு புறா பயம்மில்லாமல் நடந்து வந்தது. அமெரிக்காவில் எங்குமே பறவைகளுக்கு மணிதர்கள் இடம் பயம் இல்லை. மனிதர்கள் பக்கத்தில் நடந்து சென்றால் கூட  பயமில்லாமல் நிற்கும். ஆனால் நியு யார்க்கில் ஒரு வெள்ளை புறாவை கூட நான் பார்க்கவில்லை. புறாக்கள் கூட அழுக்காக இருப்பதாக தோன்றியது.

http://agapuram.blogspot.ch/2014/05/2.html

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பை, சென்னையை, டெல்கியை, பம்பையை, நியூ யோர்கை, சிட்னி யை பார்க்கும் போதெல்லாம், இந்த பிரிட்டிஷ் காரர் கடுமை உழைப்பினை மறுக்க முடியாத நிதர்சனம் தோன்றுகின்றது....

இந்த நியூ யோர்கை, குறிப்பாக மன்ஹட்டன் பகுதியை, டச்சுக் காரர்களிடம் இருந்து, கரும்புத் தோட்டங்கள் நிறைந்த சூரினாம் நாட்டினை பண்டமாட்டு செய்தே பிரிட்டிஷ் கார்கள் எடுத்துக் கொண்டார்கள்...

மக்கள் தொகையில் குறைந்த, ஒரு தீவில் இருந்து உலகையே கட்டி ஆள, கிளம்பியவர்களின், பின்னால், கல்வியாளர்களின் அறிவு பூர்வமான பங்களிப்பு இருந்ததால் தான் சிகரம் தொட்டார்கள்.

போர்துகேயர் சாப்பாடு, கோவில் கொள்ளை தவிர வேறு எதுவும் இல்லாத படியால் தான், அனைத்தினையும் இழந்து, போர்துகலையும் இழந்து மன்னரே, பிரேசிலுக்கு ஓட வேண்டி வந்தது. 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

நியூ யார்க் பயணக் கட்டுரை - 3

 

டைம் ஸ்க்யரின் பக்கவாட்டிலேயே ப்ராட்வே வீதி நெடுக்காக செல்கிறது. பல தொலைகாட்சி நிறுவனங்களின் மேடை நிகழ்வுகள், நட்சத்திர பேட்டிகான அரங்கங்கள் அங்கு உண்டு. உதாரனமாக டேவிட் லேட்டர்மேன் லேட் ஷோ. அது போக பல இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், காமேடி ஷோக்கள் என நடக்கும். அதற்கு டைம் ஸ்க்யரிலேயே டிக்கட் விநியோகம் செய்யும் ஒரு மையம் இருந்தது. அதற்கு முன்னால் நீளமான ஒரு வரிசை நின்று கொன்டு இருந்தது. விலைகள் அதிகமாகவே இருந்தது.

டைம் ஸ்கயரில் கறுப்பர்களை அவ்வளவு பார்க்கவில்லை என்று தான் தோன்றியது. அங்கு உள்ளுர் மக்களும் அவ்வளவாக இல்லை. லிபர்டி ஸ்டாட்சு போல் வேட அனிந்த சிலருடன் நின்று மக்கள் புகைபடம் எடுத்து கொன்டனர். சரி அப்படியே நகரின் உள் நகருவோம் என்று ப்ராட்வேயில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.

ராக்பெல்லர் சென்டருக்கு போகலாம் என்று அழைத்து சென்றால் ஷாலினி. 'நி என்ன பெரிய ராக்பெல்லர் ஃபெமலியா' என்று கேட்போமே அதே ராக்பெல்லர் தான். ஜான் டி. ராக்பெல்லர் 20ம் நூற்றன்டின் பெரிய தொழில்அதிபர், பணக்காரரர். அவரது குடும்பத்தால் அமைக்கபட்ட ராக்பெல்லர் சென்டர் நகரின் நடுவே 19 உயரமான கட்டிடங்களை உள்ளடக்கியது. அதில் மிகவும் உயரமான GE buildingம் அடக்கம். அமெரிக்க அரசு இந்த ராக்கபெல்லர் சென்டரை ஒரு தேசிய வரலாற்று சின்னமாக அறிவித்துள்ளது.

John_D._Rockefeller_1885.jpg
ஜான் டி. ராக்பெல்லர்

rockcenter.jpeg

ராக்பெல்லர் சென்டர்

இதே GE கட்டிடத்தின் மேல் ஏறி பார்பதற்கு எங்களது நியு யார்க் பாஸை உபயோகிக்கலாம் ஆனால் நாளை தான் அதை உபயோகிக்க ஆரம்பிப்பது என்று இருந்ததால் வெளியே மட்டும் சுற்றி பார்த்தோம். அங்கிருந்து பொடி நடையாக சென்ட்ரல் பார்க்கிற்கு நடந்தோம். நியு யார்க் மன்ஹாட்டன் பகுதியின் அங்கு பெரும்பாலன தெருக்களுக்கு எண்கள் தான் பெயராக இருந்த்து. 45வது வீதி, 46வது வீதி என்று மேற்கிலிருந்து கிழக்கு செல்லும் வீதிகளுக்கும், வட தென் வீதிகள் 1ம் அவென்யு, 2ம் அவென்யு என்று பெயரிட பட்டிருந்தது.

உள்ளுர் பெண்கள் நல்ல மேக்கப் அணிந்திருந்தார்கள், அவர்களின் உடை வெளியுரிலிருந்து வந்தவர்களில் இருந்து தனிதன்மையோடு தெரிந்த்து. பொதுவாக உள்ளுர்வாசிகள் வேகமாக நடக்கிறார்கள். அவர்களுக்கு அந்த நெரிசலிலும், ட்ராப்கிலும் எப்படு வேகமாக செல்வது என்று நன்றாக தெரிந்திருக்கிறது.  கவர்ச்சியான ஆடை அமெரிக்கா எங்கும் உள்ள பெண்கள் அங்கும் அணிந்திருந்தார்கள். இருந்தாலும் அதிலும் ஒரு புதுமை தெரிந்தது. உள்ளுர் ஆன்களும் நல்ல ஆடைகள் அணிந்திருந்தார்கள். பெரும்கார்பரேட் அலுவகங்களுக்கு அருகில் நடக்கயில் கோட் அணிந்த ஆண்களை பார்க்க முடிந்தது. அவர்களின் சிகையலங்கரங்கள் வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருந்தது.

பெண் போல் பாவனை காட்டி நடக்கும் ஆண்களை நிறையவே பார்க்க முடிந்தது. நல்ல உடல் கட்டு, நல்ல உடை அணிந்து நலினத்துடன் நடந்து செல்லும் ஆண்கள் சிலரை கண்டேன். ஆணும் ஆணும் கை கோர்த்து செல்லும் ஜோடிகள் சில இருந்தன். புருவத்தின் ஒரங்களை மழித்து, புருவங்களை வரைந்து, புருவங்களில் ஜோலிக்கும் கடுக்கன் அணிந்து, காலின் ரோமங்கலை மழித்து, பிங்க் நிற ஆடை அனிந்து, பெண் போன்ற நலினத்துடன் பேசும் விதம் என்று பல விஷயங்கள் அவர்கள் ஓரின சேர்கையாளர்கள் என்று தோன்ற செய்தது. ஆண்கள் கை கோர்த்து நடப்பது, பிங்க் ஆடை அனிவது இந்தியாவில் சாதாரனம். ஆனால் அமெரிக்காவில் அதற்கு அர்த்தம் இப்படி தான்.

மன்ஹாட்டன் நகரின் உயர்ந்த அடைந்த கட்டிடங்களுக்கு நடுவே 800 ஏக்கர்களுக்கு மேல் விருந்து கிடக்கறது இந்த சென்ட்ரல் பார்க். பார்க்கின் முகப்பை அனுகும் போது குதிரை வீச்சம் அடித்தது.  ஒற்றை குதிரை சாரட்டடுகள், வாடைகை சைக்கிள்கள் முகப்பில் இருந்தது. பார்க்கின் உள் குழந்தைகள் பல விளையாடி கொன்டிருந்தன. ஜாகிங் செல்பவர்கள், ஸ்கேட்டிங், சைக்கிள் ஓட்டுபவர்கள்,நாயுடன் வாக்கிங் போவர்கள் எல்லாம் அந்த மாலையில் நடந்து கொட்டிருந்தது.  நிறைய பறவைகள் இருந்தன, வித்தியாசமான நீல நிற பறவை ஒன்றை பார்த்தேன். நிறைய மரங்களும் புள் வெளியுமாக நிறைந்திருந்தது.

central-by-grandcanyon-freedotfr.jpg
சென்ட்ரல் பார்க்

பார்க்கின் முன்னே ஒரு குறு மலை முகடு. அங்கே பல ஜோடுகள் உட்கார்ந்யு கொன்டு இருந்தது. பல் வேறு இணங்களும் கலந்து ஜோடியாக அமர்ந்து முத்தமிட்டு கொன்டிருந்தது. முகட்டின் உச்சியின் மறைவில் ஒரு டீன் ஏஜ் கூட்டம் பம்மலுடன் உட்கார்ந்நுருந்தது, என்ன என்று உத்து பார்த்தால் சிறுவர்கள் புகைத்து கொன்டு இருந்தனர். இந்த ஊர் சட்டம் படி 21 வயதுக்கு மேல் தான் புகைத்தல் அனுமதிக்கபட்டுள்ளது. அந்த பார்க் உள்ளுர்காரர்களுக்கு நம் சென்னை மெரினா பீச் போல என்று தோன்றியது.

அங்கு இன்னும் சிறிது நேரம் கழித்துவிட்டு கிளம்பி பொடி நடையாக டைம் ஸ்கயர் பக்கமே திரும்பினோம். வரும் வழியில் ஒரு சப் வேக்கு அடியில் இசை கலைஞர்கள் வாசித்து கொன்டிருப்பது கேட்டது. வரும் வழியில் ஒரு சைவ உணவகம் இருந்தது, சைவ உணவகப் வைக்கும் ஒரே ஆட்கள் இந்தியர்களாகதான் இருப்பார்கள். மெனுவை படித்து பார்த்ததில் அது ஊர்ஜிதமானது.வெஜ் பிரியானி இருந்தது. ஒன்று வாங்கி இருவரும் சாப்பிட்டோம் சூடாக நன்றாக இருந்தது. உப்பு கொஞ்சம் கம்மியாக இருந்தது. ஆனால் கடை கல்லாவில் இந்தியர்களே இல்லை, கருப்பர்கள் தான் இருந்தார்கள். அவர்களே சமைத்துவிடுவார்கள் போலும்.

jatti_boy.jpg

9 மணி அளவில் தான் இந்த ஸ்பிரிங், சம்மர், ஃபால் ஸீஸனில் இருட்டம். நாங்கள் வரும் போது டைம் ஸ்கயர் இருட்டி இருந்தது. இரவில் அது இன்னும் வண்ண ஒளியுடன் அழகாக இருந்தது. அங்கு கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தோம். 9 அளவிலும் அங்கு தரையில் புறாக்கள் இரை தேடி அலைகிறது. அஅந்த அளவுக்கு அங்கு பகல் போல வெளிச்சம். ங்குள்ள சுற்றலா பயனிகள் அங்கு சாப்பிடும் எச்சங்களையே தின்று வளரும் புறாக்கள். டைம் ஸ்கயரின் ஒரு ஓரத்தில் ஜட்டி மட்டும் அனிந்து கொன்டு ஒரு கருப்பன் கிடாருடன் பாட்டு பாடி கொன்டு இருந்தான். அவனோடு சில பெண்கள் நின்று புகைபடம் எடுத்து கொன்டனர். அவன் பல கோமாளிதனத்துடன் புகைபடத்திற்கு போஸ் கொடுத்தான். அடுத்த நாற் அதே இடத்தில் இன்னொரு கருப்பன் சட்டையில்லாமல் கோமாளித்தனம் செய்து கொன்டுருந்தான்.

தொடர்ந்து நடந்து கொன்டே இருந்ததில் கால் மிகவும் வலித்தது. அங்கிருந்து எம்பயர் ஸ்டேட் பில்டிங்கிற்கு நடந்து சென்றோம். அங்கே கொஞ்ச நேரம் சுற்றி விட்டு, இரவு உணவு பனேரா எனும் உணவகத்தில் வாங்கிக் கொன்டு வந்து ஹெரால்டு ஸ்கயர் எனும் இடத்தில் வைத்து சாப்பிட்டோம். இங்கு ஆங்காங்கே ரோட்டை மறித்து பயனிகள் அமர நாற்காலியும் மேசையும் போட்டு வைத்துள்ளார்கள். அது ஒரு தல்ல வசதி. சாப்பிடவுடன் மழை வந்தது. இரவு 10;30 இருக்கும் என்று நினைக்கிறேன். மழையில் சப் வே ஸ்டேசன் கச்டு பிடிப்பது சிரமமாகி விட்டது. திரும்பி ஹாரிசன் வந்து காரை எடுத்து கொன்டு ஈஸ்ட் ஆரஞ்சு சென்று விடுதியில் நுழைந்தோம்.

http://agapuram.blogspot.ch/2014/05/3.html

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி , தொடருங்கள்....!

  • கருத்துக்கள உறவுகள்

அழகான படங்களும் எளிதான எழுத்து நடையும் தொடர்ந்து வாசிக்க வைக்கின்றது.
இணைப்பிற்கு நன்றி ஆதவன் 

  • தொடங்கியவர்

நியூ யார்க் பயணக் கட்டுரை - 4

 

மே 23 காலை நேரம் கழித்துதான் எழுந்தோம். எல்லா நாளும் அப்படி தான் இருந்தது. நடந்து நடந்நு அலுப்பாகி விடுகிறது. எவ்வளவு சிக்கரம் எழும்ப நினைத்தாலும் செய்ய முடியவில்லை. சரி, பழக்கமிருந்தால் தானே அதெல்லாம் நடக்கும். எப்படியோ எழுந்து விடுதியிலே காலை உணவு, அதற்கும் சேர்த்து தான் கட்டனம் வாங்குகிறார்கள். பெரும்பாலும் ரொட்டி, கேக்கள் தான், மற்றபடி சீரியல்ஸ், பால், பழரசம், முட்டை. முன்பொரு விடுதியில் பேன் கேக் மாவு இருக்கும் எடுத்து அகப்பையில் ஊற்றி சுட்டு கொள்ள வேண்டியது தான்.

சாப்பிட்டு கிளம்பி, ரயில் ஏறி நியூ யார்க் நுழைவதற்கு மதியம் 1 மணி ஆகிவிட்டது. ஆனால் என்ன, இது நியூ யார்க், தூங்க நகரம், என்னை போன்ற ஆட்களுக்கு ஏற்ற இடம். சில சுற்றுலா தளங்கள் இரவு 7, 8 மணி வரை கூட திறந்து இருக்கிறது. ம்யூசியம் மட்டும் தான் 5, 6 மணிக்கு மூடி விடுகிறார்கள். 

முதிலில் போக முடிவு செயுதிருந்தது, ம்யூசியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட்ஸ். அது 53வது வீதி அருகே இருந்தது அதற்கு முன்னால் நியூ யார்க் பாஸ் கவுன்டரில் சென்று ரசிது காட்டி பாஸை வாங்கி ஆக வேண்டும். அதை செய்துவிட்டு ம்யூசியத்திற்கு வந்தோம். மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. அருங்காட்சியகத்தில் நுழைந்தோம் அங்கேயே தோள் பையை வைத்து செல்வதற்கு ஒரு இடம் இருந்தது, வைத்து விட்டு முதல் தளத்தில் இருந்து துவங்கினோம். மொத்தம் 5 தளங்கள்.

hqdefault.jpg

sigmar_polke_das_paar_d5363049h.jpg

 

முதல் தளத்தில் சிற்பங்கள். மாடர்ன் சிற்பங்கள். கற்களாலும், உலோகத்தாலும் செய்யபட்ட சிற்பங்கள். இரும்பால் செய்ய பட்ட ஒரு ரோஜா பூ.. என பல இருந்தன. அதை பார்த்து விட்டு மேல் தளத்திற்கு சென்றோம். மாடர்ன் ஓவியங்கள், சிலவற்றையே சிரமப்பட்டு ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது, மற்றவை மூளைக்கு சிக்கவில்லை. முந்தய நூற்றண்டுகளில் ஓவியங்கள் இருப்பதை இருப்பது போல் பிரதி எடுப்பதற்காக தான் வரையப்பட்டது. ஆனால் கேமராவின் கண்டு பிடிப்புக்கு பின் அந்த ஒவியங்களின் தேவை இல்லாமல் ஆகிவிட்டது. அப்போது ஓவியங்கள் புதிய கலை வடிவம் பெற்று வந்தது. இருப்பதை இருப்பது போல் வரைய அவசியம் இல்லை, ஓவியங்களின் மூலம் இல்லாததை, கற்பனையில் தோன்றுவதை, கருத்து சொல்வதை என பல வகையான விஷயங்களுக்கு ஒவியம் ஊடகமாக அமைய தொடங்கியது. அதுவே நவீன ஓவியம்.

நவீன ஓவியங்களை பற்றி மேலும் படிக்க

சிக்மர் போல்க்ன் ஒவியங்கள் பல அரைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.கோத்தே, ஜாஸ்பர் ஜான்ஸ் போன்ற பலரின் ஓவியங்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தது. பல வகையான ஒவியங்கள், வண்ண கலவையிலான ஒவியங்கள், வண்ண புள்ளிகளாலேயே வரையப்பட்ட ஓவியங்கள், ஒரே இடத்தை, ஒரே கோனத்தில் வெவ்வெறு வண்ணங்களில் வரைந்த சில ஒவியங்கள் இருந்தது. அவை கூட்டாக பார்த்து பொருள் கொள்ள வேண்டியது போலிருக்கிறது. ஆங்காங்கே தொலைகாட்சிகளில் சில வீடியோக்கள் ஓடி கொன்டு இருந்தது, ஒன்று கூட என்ன சொல்ல வருகிறது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. 

பல வருடங்களாய் வளர்ந்து வந்த மின் ஒளி தொழில் நுட்ப வளர்ச்சியை காட்சிக்கு வைத்திருந்தார்கள். புகைபட கேளரி ஒன்று இருந்தது. சர் ரியலிஸ்டிக் ஓவியங்கள். இன்னும் பல வகையான ஓவியங்கள் மற்றும் கலை பொருட்களால் நிறைந்து இருந்தது. கட்டயமாக இதை  எல்லாம் புரிந்து கொள்ள ஒரு பயிற்சி தேவை. ஒரு பாமர தனமாக இந்த அருங்காட்சியகத்தை ரசித்து விட்டு வந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.


கால் வலிக்க ஆரம்பித்து விட்டது. ஒவ்வொரு அருங்காட்சியகமும் பெரிது பெரிதாக இருந்தது. ஆங்காங்கே உட்கார்ந்து உட்கார்ந்து தான் எல்லாவற்றையும் சுற்றி பார்த்தோம். அங்கிருந்து வெளி வந்த போதும் மழை பெய்து கொன்டு இருந்தது. குடை பிடித்து கொன்டு மெதுவாக நடந்து போனோம். ஆன்கள் இங்கு பெரும்பாலும் நீள கம்பி குடை தான் வைத்திருந்தார்கள்.

ராக்பெல்லர் சென்டரில் இருக்கும் ஜீ ஈ பில்டுங்கின் மேல் பார்வை மேடை (Observatory deck) இருந்தது. இதை "Top of the Rock" என்று அழைக்கிறார்கள். இதே கட்டிடத்தில் தான் NBC TVயின் ஸ்டுடியோ உள்ளது. அவ்வளவு பெரிய கட்டிடமாக இருந்தாலும் பல கட்டிமங்களுக்கு நடுவே அதை தேடி கண்டு பிடிக்க மிகவும் சுத்த வைத்துவிட்டது. 67வது மாடிக்கு லிப்டில் சென்றோம். 70 மாடிகள் கொன்ட கட்டிடம் இது. ஆனல் இதை விட பல உயரமான கட்டிடங்கள் நியூ யார்க்கில் இருக்கிறது.  67, 68, 69 மாடி மூன்றிலும் சென்று பார்பதற்கு அனுமதிக்கிறார்கள். அந்த உயரத்தில் இருந்து நகரின் பெரும் பகுதி தெரிகிறது, அதற்கு அப்பால் மேகம் மறைத்துவிடுகிறது. பல புகை படங்கள் எடுத்து கொன்டோம். எல்லோரும் அதை தான் செய்து கொன்டுருந்தார்கள். இடம் தெரிந்தவர்கள் கட்டிடங்களை சுட்டி பெயர் குறிப்பிட்டு கொன்டிருந்தனர். 

அங்கிருந்து வெளி வந்ததும். ஷாலினிக்கு பசி தாங்க முடியவில்லை. சுற்றி பார்த்து கொன்டே இருந்தத்தில் மதியம் சாப்பிட மறந்துவிட்டோம். உணவகம் தேடி அலைந்தோம், சிப்பாட்லே கண்னில் தட்டுப்பட்டது. ப்ராட் வேயில் நடந்து மேடம் டுஸார்ட் சென்றோம். மெழுகு பொம்மைகளாள் ஆன காட்சியகம். பிரபல ஹாலிவுட் நடிகர்கள், அரசியல் தலைவர்கள், அமேரிக்க ஜனாதிபதிகள், விளையாட்டு வீரர்கள், இசை கலைஞர்கள என பல பேரின் உருவங்கள் மெழுகு பொம்மையாக செய்து வைக்கப்பட்டுருந்தது. நம் நாட்டு அமிதாப் பச்சனும், ஷாருக்கானும் கூட இருந்தார்கள். லிபர்டி ஸ்டாட்சிவின் முகம், கோரில்ல உருவமும் இருந்த்து. சில சிலைகள் தத்ருபமாக இருந்தது. எல்லாரும் இஷ்டத்திற்கு புகைபடம் எடுத்து கொன்டனர். ஆண்கள் நடிகைகளை கட்டி பிடித்தவாறு புகைபடம் எடுத்து கொன்டனர். பெரும் தலைவர்களுக்கு அருகில் குறும்பு தனமாய் ஷேஷ்டை செய்து சிலர் படம் எடுத்து கொன்டனர். நான் ஜாக்கி சானுடனும், மைக்கல் ஜாக்ஸன் உட்பட பலருடன் புகைபடம் எடுத்த் கொன்டேன். கேட்டி பெர்ரியுடனும். ஷாலினி தன் அபிமான ஷாருக்கானுடன் எடுத்து கொன்டாள்.

  madame-tussauds-in-new-york-1300277301-v

Madame-Tussauds-Museum-Michael-Jackson-2

obama.jpeg


மேடம் டுஸார்ட் உலகில் பல இடங்களில் உள்ளது. அவர்களின் இனைய தளத்தில் அனைத்து கிளைகளில் இருக்கும் பொம்மைகளின் புகை படங்கள் சில வற்றை போட்டிருந்தார்கள். அதனால் பல எதிர்பார்ப்புடன் சென்றோம். ஆனால் நியூ யார்க்கில் இருந்த்தில் நாங்கள் எதிர் பார்த்தது சிலவை இல்லை. அது ஏமாற்றம் அளித்தது. ஹ்ரித்திக் ரோஷனிடம் புகைபடம் எடுக்க நினைத்த ஷாலினிக்கோ பலத்த ஏமாற்றம். சிறிது நேரம் கழித்து நியூ யார்க்கிலேயே சாப்பிட்டு விட்டு விடுதிக்கு திரும்பினோம்.

http://agapuram.blogspot.ch/2014/05/4.html

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஆதவன் நீங்கள் நியூயோர்க் வந்து போயிருக்கிறீர்கள்.ஒரு சிறு தகவல் தந்திருந்தால் நிச்சயம் வந்து சந்தித்திருப்பேன்.பரவாயில்லை.

இனி யாராவது நியூயோர்க் வந்தால் தனி மடலில் அறியத்தாருங்கள்.இங்கு நின்றால் நிச்சயம் சந்திப்பேன்.

மற்றைய நகரங்களுடன் ஒப்பிடும் போது நியூயோர்க் சிற்றி மிகவும் பழைமையான நகரம்.24 மணி நேரமும் பேரூந்து நிலக்கீழ் புகையிரதம் என்று பல வகையான வசதிகளையும் கொண்டது.நீங்கள் சிக்காக்கோவுடன் நியூயோர்கை ஒப்பிட்டு எழுதியுள்ளீர்கள்.சிக்காக்கோ பயர் என்ற படம் பார்த்தால் இதன் இரகசியம் புரிந்திருக்கும்.1871 ம் ஆண்டு முழு சிக்காக்கோ நகரமுமே எரிந்து புதிதாக கட்டி எழுப்பப்பட்ட நகரம்.5 வருடம் முன்னர் மகள் வேலை செய்யும் போது நானும் போய் உங்களை மாதிரி தான் சிக்காக்கோ மிகவும் பயங்கரமான இடம் என்று சொல்வார்கள் இப்படி அழகாக துப்பரவாக இருக்கிறதே என்று விசாரித்தால் பிரச்சனை அப்போது தான் புரிந்தது.

On May 29, 2016 at 0:22 AM, தமிழ் சிறி said:

நியூ யோர்க்கை பார்வையிடுவதற்கு..... ஐந்து நாட்கள் காணாது. 
ஆகக் குறைந்தது.... நான்கு கிழமை வேண்டும். 
இரண்டு முறை... அங்கு சென்று வந்ததால்,
நாம் படங்களில் பார்த்த நியூ யோர்க்கை , நேரில் பார்த்து அனுபவிக்கும் போது... பாரிய வித்தியாசம் தெரியும்.
கட்டுரையாளாரின் அனுபவத்தை வாசிக்க, ஆவலாக உள்ளேன். தொடர்ந்து இணையுங்கள் ஆதவன்.

அடபாவி இரண்டு தரம் வந்தும் மூச்சே விடலை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அடபாவி இரண்டு தரம் வந்தும் மூச்சே விடலை.

யாழ்களத்தில் இணைய முன்பு.... 1985´ம், 1990 களிலும் வந்தது ஈழப்பிரியன்.

  • தொடங்கியவர்
On 1.6.2016 at 4:25 PM, ஈழப்பிரியன் said:

 ஆதவன் நீங்கள் நியூயோர்க் வந்து போயிருக்கிறீர்கள்.ஒரு சிறு தகவல் தந்திருந்தால் நிச்சயம் வந்து சந்தித்திருப்பேன்.பரவாயில்லை.

 

ஈழப்பிரியன் நான் நியூயோர்க் வரவில்லை, இது இணையத்தில் கிடைத்த ஒரு பயணக்கட்டுரை, வந்தால் நிச்சயம் உங்களைச் சந்திப்பேன். 

  • தொடங்கியவர்

நியூ யார்க் பயணக் கட்டுரை - 5

 

மே 24 அன்று லிபர்டி ஸ்டாட்சுவிற்கு செல்ல முடிவு செய்திருந்தோம். மதியம் ஒரு மணி அளவில் நியூ யார்க்கிற்கு ரயிலில் சென்றோம். அங்கிருந்து பேட்டரி பார்க் என்ற இடத்தில் இருந்த்து படகின் மூலம் லிபர்ட்டி சிலைக்கு செல்ல வேண்டுமாம். மேப்பை பார்த்து பேட்டரி பார்க்கிற்கு நடப்பதற்காக ஒரிடத்தில் இறங்கி கொன்டோம். ஆனால் அது தவறான இடம். அங்கிருந்து ஃபெர்ரி படகு ஏற்றதிற்கு வெகு தொலைவு நடந்தாக வேண்டும். அதனால் ஒரு டாக்ஸியில் செல்வது என்று, ஒரு டாக்ஸியில் ஏறினோம். இந்திய முகத்துடன் ட்ரைவர். பாக்கிஸ்தானியாக கூட இருந்திருக்கலாம். நியூ யார்க்கின் டாக்ஸிகளில் பெரும்பான்மையாக இந்திய, பாக்கிஸ்தான், பங்கலாதேஷ் காரர்கள்தான் ஓட்டுகிறார்கள். 9 டாலர் ஆனது, 10 டாலராய் குடுத்துவிட்டு இறங்கினோம்.

அங்கே ஒரு காபி குடித்துவிட்டு லிபர்டி ஸ்டாட்சுவிற்கு டிக்கட் வாங்கும் இடத்தை காண சென்றோம். மேப்பில் துள்ளியமாக இடத்தை பார்த்துவிட்டு வராததனால் இடத்தை கண்டுபிடிப்பது சிரமமாகி விட்டது. ஏனென்றால் அங்கு ஏகப்பட்ட படகு தளங்கள். அங்கு சுற்றுலா பயணிகளுக்கு சரியாக வழிகாட்டும் வகையில் வழிகாட்டும் பலகைகள் இல்லை. டிக்கட் கவுண்டருக்கு ஒரு பெரிய வரிசை நின்று கொன்டு இருந்தது. நாங்கள் நியூ யார்க் பாஸ் வைத்து இருந்ததால் எங்களுக்கு அந்த வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. சீக்கிரமே டிக்கட் வாங்கி கொன்டு வெளியே வந்தோம் அங்கு அதைவிட பெரிய வரிசை. அதில் சென்று நின்றோம். இங்கு நியூ யார்க் பாஸால் வரிசையை தவிர்க்க முடியாது. ஆனால் அந்த பாஸின் விளம்பரங்களில் எந்த க்யூவிலும் நிற்க தேவையில்லை என்பது போல தான் எழுதியிருந்தார்கள்.

ஒரு அரைமணி நேரம் நின்று இருப்போம். நிறைய இந்தியர்களும் க்யூவில் இருந்தார்கள். முதியவர்கள், குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். குழந்தைகள் ப்ராமில் இருந்ததால் எந்த கவலையும் இல்லாமல் எல்லாரையும் வேடிக்கை பார்த்து கொன்டிருந்தது. அந்த நேரத்தில் குழந்தைகள் மேல் ஒரு பொறாமை வந்தது. ஒரு வயதான கருப்பர் நின்று கிடார் வாசித்து பாடி கொன்டு இருந்தார். எல்லாருக்கும் வாழ்த்து சொல்லி கின்டல் செய்து மகிழ்ச்சியாய் இருந்தார். அவருடைய டப்பாவில் சிலர் காசு போட்டனர். உள்ளே சென்றோம். பாதுகாப்பு பரிசோதனை செய்தார்கள். ஏறகுறைய எல்லா இடங்களிலுமே விமான நிலையத்தில் செய்வது போல பாதுகாப்பு சோதனை செய்தார்கள். ஃபெர்ரி படகு வந்து நின்றது. அதில் ஏறி கொன்டோம்.

மூன்று அடுக்கு கொன்ட படகு அது. எல்லாரும் ஏறியவுடன் மேல் தளத்திற்கும், ஜன்னலுக்கும் தான் வேகமாக சென்றார்கள். நாங்கள் மேல் தளத்திற்கு சென்றோம். ஒரங்களில் எல்லாம் அடைத்து நின்று கொன்டு புகைபடம் எடுக்க தொடங்கினார்கள். இந்தியர்களும், சீனர்களும் இடம் பிடிப்பதில் வள்ளுனர்களாக இருக்கிறார்கள். அது புரிந்து கொள்ள கூடியதே. நகரத்தின் உயர்ந்த கட்டங்களையே பார்த்து கொன்டு வந்த கூட்டம் சட்டென்று மறு திசைக்கு திரும்பியது. லிபர்டி சிலை பிரம்மான்டமாய் தெரிய துவங்கியது. பச்சை நிறமான பிரம்மான்டமான சிலை. இந்த 'வாய்ப்பு தரும் தேசத்தை' நோக்கி வருவபவர்களுக்கு கலங்கரை விளக்கம் போல் கைதூக்கி அழைக்கும் சின்னம். இந்த ஐக்கிய மாநாட்டின் பெருமிதத்தை பறை சாற்றும் ஒரு அடையாளம்.

படகிலிருந்த எல்லா கைகளும் அதை கேமராவில் பதிவு செய்து கொன்டுருந்தது. உலகிலேயே அதிகம் புகைபடம் எடுக்கப்பட்ட இடங்களை பட்டியலிட்டால் இந்த சிலை அதில் மிகவும் மேலே இடம் பிடிக்கும். எங்களது படகு அந்த சிலையை மெதுவாய் வலம் வந்து கரையை சென்று தொட்டது.இறங்கி நடத்தோம். வாயிலில் அனைவருக்கும் ஆடியோ டுர் என்று ஒரு பதிவு செய்யப்பட்ட ஒலி வழிகாட்டியை கையில் கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் அது அவ்வளவு உபயோகமாக இல்லை. கண்னுக்கு முன் அவ்வளவு பிரம்மான்டமாக இருக்கும் காட்சிக்கு முன்னால் அந்த ஒலியில் கவனம் செலுத்த முடியவில்லை. அப்படியே சிலையின் பின் புறத்திலிருந்து முன்புறத்திற்கு நடந்தோம்.

சிறப்பு கட்டனத்தின் பேரில் லிபர்டி சிலையின் உள்ளே சென்று பாதத்தையும், கிரிடத்தைநும் பார்க்க அனுமதிக்கிறார்கள். ஆனால் அந்த டிக்கட்டுகள் முன் பதிவு செய்து வர வேண்டும், அதுவம் அது பல மாதங்களுக்கு முன்பாகவே விற்று தீர்ந்து விடுமாம். அதனால் வெளியே தான் சுற்றி பார்த்தோம். லிபர்டி சிலை மன்ஹாட்டான் நகரத்திற்கும் நியூ ஜெர்சிக்கும் நடுவில் ஒரு சிறு தீவில் இருக்கிறது. தீவின் விளிம்புகளில் அலைகள் வேகமாக அடித்து தெரித்து கொன்டு இருந்தது. சீகல் பறவை பறந்து கொன்டு இருந்தது. சிலையை சுற்றி தீவின் விளிம்பில் ஒரு அகல நடைபாதை இருந்தது. நல்ல காட்சி கிடைக்கும் இடத்தில் எல்லாம் நின்று புகைபடம் எடுத்து கொன்டர்கள். ஜோடியாக, குடும்பத்துடன் வந்தவர்கள் எல்லாரும் அடுத்தவர்களிடம் கேமராவை குடுத்து குடும்ப புகைபடம் எடுத்து கொன்டனர். நானும் சில பேருக்கு எடுத்து தந்தேன். எனக்கு கேமரா தந்தவர்கள் எல்லாரும் ஒரே மாதிரியான கேமரா தான் தந்தார்கள் கருப்பு நிற கெனான் எஸ் எல் ஆர் கேமரா. எஸ் எல் ஆர் கேமரா, புகைபட வல்லுனர்களுக்கான கேமரா என்பது மாறி வெகு ஜன கேமராவாகிவிட்டது. நாங்களும் பல புகை படங்கள் எடுத்து கொன்டோம்.

liberty.JPG

ஒருவர் கூட அந்த சிலையை ஒரு நிமிடம் கூட கவனிக்கவில்லை. புகைபட்டதில் தான் முழு கவனமும். அந்த சிலையின் முன் குதிப்பது போல், சிலையின் தலையை பிடித்து தூக்குவது போல, சிலைக்கு மூக்கு நோன்டி விடுவது போல என்று ஆயிரம் நிலைகளில் எடுத்து கொன்டனர். அந்த சிலையை அதைவிட உயரமான ஒரு கல் மேடையில் நிறுவி இருந்தார்கள். சிலை உலோகத்தால் ஆனாது கடல் காற்றினால் பச்சையாக ஆகியிருக்கிருக்கிறது. அதனை கையில் ஒங்கி இருக்கும் பந்தத்தில் சுவாலை மட்டும் தங்க நிறத்தில் இருந்தது. உடல் முழுவதும் நிறைய துணிகளை சுற்றி இருந்தது. வயதான ஆனால் திடமானான அன்னை போல் இருந்தது. சிலையின் கைகள் பருமனாக இருந்தது. முகம் இருகி பட்டையாக இருந்தது. அந்த சிலையின் உச்சியில் எந்த பறவையுமே பறக்கவில்லை. எதிர்பாராத வண்ணம் ஒரு ஐந்து ரானுவ எலிகாப்டர்கள் தீவை ஒட்டி பறந்து சென்றது.

ஐக்கிய மாகானத்திற்காக பிரான்ஸ் அன்பளிப்பாக தந்தது அந்த சிலை. பிரம்மான்டமான இந்த சிலை பல பாகங்களாய் பிரிக்கப்பட்டு கப்பலில் 1886ல் நியூ யார்க் வந்து சேர்ந்தது. அந்த சிலையை ஒன்றாக பொருத்தி நிறுவி இருக்கிறார்கள். சிலையின் உயரம் மட்டும் 151 அடி, அது தரையில் 300 அடி இருக்கும் வகையில் கல் மேடை அமர்த்தி நிறுவி இருக்கிறார்கள். இந்த சிலையின் முகம் அந்த சிற்பத்தை வடித்தவரின் அன்னையின் முக சாயல் கொன்டது. இந்த சிலை சுதந்திரத்தற்கான ரோம பெண் கடவுளான லிபர்டாவை குறிக்கிறது.

அப்படியே வந்த வழியே திரும்பி ஒரு சுற்று வந்து படகில் ஏறினோம். இந்த டிக்கட்டிலேயே அருகில் இருக்கும் எல்லிஸ் தீவிற்கும் அனுமதி உண்டு. அங்கே ஒரு அருங்காட்சியகம் உள்ளது. அங்கு செல்வதும் படகில் தான். 20 நிமிடம் வரிசையில் நின்று படகில் ஏறினோம். படகு சவாரி, லிபர்டி சிலை, அருங்காட்சியகம் எல்லாவற்றிர்க்கும் சேர்த்து 14 டாலர் தான் டிக்கட் என்பது மிக குறைவு தான்.

எல்லிஸ் தீவில் தான் கப்பல் வழியாக வருபவர்களுக்கு குடியேற்றம் நடந்திருக்கிறது. இப்போது அதே கட்டிடத்தை சீரமைத்து அருங்காட்சியகம் ஆக்கி இருக்கிறார்கள். 1875 - 1925 வரையிலுமான கால கட்டதில் அதிகமான குடியேற்றம் இங்கு நடந்திருக்கிறது. அந்த மக்கள் எப்படி பரிசோதனை செய்யபட்டனர், எப்படி குடியேற்றதிற்கு தேர்வு செய்யப்பட்டனர், நிராகரிக்க பட்டவர்கள் என்ன செய்தார்கள், தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டவர்கள் என்ன ஆனார்கள். அனுமதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சேவை தரப்பட்டது. எவ்வளவு நபர்கள் ஒரு நாளைக்கு குடியேற்றதிர்க்காக காத்திருப்பார்கள். அவர்களின் உடமைகள் எப்படி அவர்களுக்கு கொன்டு சேர்க்கப்பட்டது என்று விளக்கமாக காட்சி படுத்தி இருந்தார்கள்.

இது போக  அமெரிக்கவை தேடி மக்கள் ஏன் வந்தார்கள். எந்த நாட்டில் இருந்து மக்கள் எந்தேந்த காலகட்டதில் இருந்து வந்தார்கள். வந்து அவர்களுக்கு இங்கு என்னன்ன கஷ்டங்கள் ஏற்பட்டது. அவர்கள் அமேரிக்காவிற்கு எப்படி பங்களித்தார்கள், அவர்களை அந்நாட்டு மக்கள் எப்படி எதிர் கொன்டார்கள் என பலவகையான விபரங்கள் இருந்தது.எனக்கு மிகவும் ஆர்வமிக்கதாக இருந்தது அங்கு கிடைத்த தரவுகள். என்ன தான் புத்தகம், இனையம் இருந்தாளும், ஒரு அருங்காட்சியகத்திற்கு செல்லும் போது அங்கு மாதிரியுடன் நமக்கு கிடைக்கும் தகவல்கள் கண்டிப்பாக படிக்கும் வண்ணம் உபயோகமாக இருக்கிறது. அருங்காட்சியகத்திலேயே அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு டாக்குமென்றி படம் கான்பிக்கபடுகிறது, ஐலேன்ட் ஆ்ஃப் ஹோப், ஜலேன்ட் ஆஃப் டியர்ஸ் என்று அந்த தீவினை பற்றிய டாக்குமென்டரி.

அமேரிக்கா நோக்கி மக்கள் வர ஆரம்பித்தற்கு முக்கியமான காரனங்கள் சிலவே இருந்திருக்கிறது. முதலாவதாக, மதம். ஐரோப்பாவில் ரோமன் கத்தோலிக்க சபைக்கு எதிராக பதினாராம் நூற்றான்டில் உருவான சில சபைகள். அவைகளை மொத்தமாக ப்ரோட்டஸ்டான்ட் கிறித்துவர்கள் எனப்படுவர். அவர்கள் கத்தோலிக்க சபையால் ஒடுக்கப்பட்டதின் காரனமாக இந்த புது தேசத்திற்கு பயனம் செய்திருக்கிறார்கள். தூய்மைவதிகள், ப்ரெஸிபிட்டேரியன்கள், லூத்தரன்கள் என பல்வேறு கிறித்துவ பிரிவுகளும் இங்கு வந்திருக்கிறது. இரான்டாவது, தொழில் அதிபர்கள், அமேரிக்காவின் பரந்த நில பகுதியும் அதன் வளங்களும் ஒரு தங்க சுரங்கம் போல் மக்களை ஈர்த்திருக்கிறது. புகையிலை ஆரம்ப காலத்தில் மிகவும் லாபகரமான தொழிலாக இருந்திருக்கிறது. மூன்றாவது காரனம், தொழில் புரட்சி, ஐரோப்பாவின் நவின கண்டுபிடிப்புகளும் அதனால் உன்டான தொழிற்சாலைகளும் விவசாயிகளை ஓரம் கட்டிவிட்டது. அதனால் பிழைப்புக்காக பல பேர் இங்கு ஓடி வந்திருக்கிறார்கள்.

உருளை கிழங்கு பஞ்சத்தால் ஐரிஷ் மக்களும், ஜன தொகை நெருக்கடியால் சீனர்களும் வந்திருக்கிறார்கள். இத்தாலியர்கள், கத்தோலிக்கர்கள், யூத மக்கள் எல்லாம் கடைசியாக தான் வந்திருக்கிறார்கள். இந்திய மக்களின் குடியேற்றத்தை பற்றி எந்த தகவலும் இல்லை. ஒரு வேலை தனி தனியாக அல்லது சிறு கூட்டங்கலாக குடியேரி இருப்பின் குறிப்பிடும் படியாக இருந்திருக்காது.

அருங்காட்சியகத்தில் மூன்று தளங்கள் இருந்தது, சுற்றி பார்க்க பார்க்க கால் வலி தாங்க முடியவில்லை. பார்த்து வெளியே வந்தால் மழை பெய்து கொன்டு இருந்தது. ஒரு படகு நிரம்பி மக்கள் போக நாங்கள் அடுத்த படகில் காத்திருந்து ஏறி கொன்டோம். மழையினால் மக்கள் படகில் கூரைக்கு அடியில் அடைத்து நின்று கொன்டு வந்தார்கள். படகில் இருந்து இறங்கும் போது மழை ஓய்ந்திருந்தது.  வெளி செல்லும் வழியில், ப்ளாஸ்டிக் டப்பாவை கவுத்தி போட்டு ஒரு கருப்பு இளைஞன் வாசித்து கொன்டு இருந்தான். கேரிகேட்சர் ஒவியங்கள் வரைபவர்கள் ஒரு இந்திய ஜோடியை வரைந்து கொன்டு இருந்தான். வயிறு தன் இருப்பை உனர்த்தியது சப் வே உணவகத்திற்கு சென்று வெஜி சப் சாப்பிட்டோம்.

http://agapuram.blogspot.ch/2014/06/5.html

  • தொடங்கியவர்

நியூ யார்க் பயணக் கட்டுரை - 6

லிபர்ட்டி சிலை இருப்பது மன்ஹாட்டன் நகரின் தெற்கு கரையில். அங்கிருந்து கரைக்கு வந்து சிறிது தாரம் நடந்தால் ஃபினான்ஸியல் டிஸ்ட்ரிக்ட். வால் ஸ்ட்ரீட், உலக வர்த்தக மையம். விமானத்தால் தீவிரவாத நாச வேலைக்கு உள்ளான பழைய இரட்டை கோபுரங்களின் நினைவிடம் அங்கே தான் உள்ளது. முதலில் வால் ஸ்ட்ரீட் நடந்து சென்றோம்.

வால் ஸ்ட்ரீட் போகும் வழியிலேயே 'ஜார்ஜிங் புல்லின்' - துரத்தும் காளையின் உலோக சிலை இருந்தது. அதை யாரை துரத்துகிறது என்று தெரியாது. தினவுடன், முரட்டு தனமான உறுதியான காளை கோபத்துடன் துரத்துகிறது. இது அமெரிக்க பங்கு சந்தையின் உருவகம். அந்த பங்கு சந்தையின் திடமான ஆனால் கணிக்க முடியாத தன்மையை குறிக்கிறது. இதை சில இந்தி படங்களில் பார்த்திருக்கிறேன். நியூ யார்க்கை குறிப்புனர்த்த இது காட்டப்படும். ஆனால் அதன் முன் நின்று புகைபடம் எடுத்து கொள்ள பெரும் வரிசை நின்று கொன்டு இருந்தது. இதுக்கு கூட வரிசையா என்று தோன்றியது. அப்படி வரிசையில் நின்று எடுக்குமளவுக்கு இது முக்கியமில்லை என்றும் தோன்றியது. ஷாலினி வரிசையை கண்டு எரிச்சல் அடைந்து காளையின் பக்கவாட்டில் நின்று எடுத்து கொன்டால். அவளுக்கு அது முக்கியம், பொருளாதாரம் தொடர்பான படிப்பும் வேலையும் என்பதால். காளையை தத்துருபமாக வடித்திருந்தார்கள். சில வெள்ளை இளைஞர்கள் காளையின் பின் பக்கத்தில் குனிந்தும், காளையின் விரையை கையில் ஏந்தியவாரும் எடுத்து கொன்டனர். இந்திய இளைஞர்களுக்கு சற்றும் சளைக்காதவர்கள் அல்ல.

chargingbull.jpg
ஜார்ஜிங் புல்

அங்கிருந்து நகர்ந்து வால் ஸ்ட்ரீட் அருகில் நடந்தோம். ஷாலினி வால் ஸ்ட்ரீட் வழிகாட்டி தகட்டின் கீழ் நின்று புகைபடம் எடுத்து கொன்டாள். வால் ஸட்ரிட் என்பதால் ஒரு பிரம்மான்டமான எண்னமே மணதில் இருந்தது. உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடம் அதற்கு உண்டு. ஆனால் அந்த வீதி அவ்வளவு பிரம்மான்டமாய் இல்லை. வீதியின் அகலம் சாதாரனமாகவே இருந்தது. பெரும் பொருளாதார நிறுவனங்களின் அலுவலகங்கள் இருந்தது. எனக்கு அதிகம் எதுவும் தெரியவில்லை. ஷாலினிக்கு சில அடையாளம் தெரிந்தது. எனக்கு அங்கே நியூ யார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மட்டும் தான் கேள்வி பட்ட பெயராக இருந்தது. வீதி வெகு சாதாரனாமாக இருந்தாலும் அங்கிருந்த கட்டிடங்களும் அதன் அமைப்பு முறையும் கம்பிரமாக இருந்தது. கட்டிடங்களின் முன் சுவரில் நுட்பமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுருந்தது. நல்ல மண் நிற கல் கட்டங்கள் பார்க்க அழகாக இருந்தது.

கரையின் அருகில் இருந்ததால் வால் ஸ்ட்ரீட்  300 ஆண்டுகளுக்கு முன்னேரே ஒரு வணிக மையமாக விளங்கி இருக்கிறது. அதனுடன் இந்த வீதி, அடிமைகளை விற்கும் சந்தையாகவும் இருந்திருக்கிறது. அமெரிக்கவை வளத்தெடுத்த பிதாமகர்களின் ஒருவர், அமெரிக்க புரட்சி போரின் தளபதி, அமெரிக்காவின் முதல் குடியரசு தலைவரான ஜார்ஜ் வாஷிங்க்டன் 1789ல் பதவிபிரமானம் எடுத்து கொன்ட ஃபெடரல் ஹால் இங்கு தான் இருக்கிறது. அதன் நினைவாக இப்போது அங்கு ஜார்ஜ் வாஷிங்க்டனின் நினைவு சின்னம் இருக்கிறது.

Federal_Hall_front.jpg
ஃபெடரல் ஹால்

மேலும் வீதியின் உள் நடந்து சுற்றி பார்த்தோம். ஆங்காங்கே சில கட்டிடங்களின் வரலாற்று சிறப்பை எழுதி போட்டிருந்தார்கள். அப்படியே அந்த விதியில் இருந்து வெளியே வந்தால், முச்சந்தியில் ட்ரினிட்டி தேவாலயம் இருந்தது. சீரமைப்புகாக மூடப்பட்டிருந்தது. அங்கிருந்து 911 நினைவிடத்திற்கு சென்றோம். இரட்டை கோபுரங்கள் நின்ற இடம். அந்த இரு கோபுரங்களும் இடிந்து விழுந்த இடத்தில் இரு அகன்ற சதுர குழியை அமைத்திருக்கிறார்கள். அதில் குழியில் கரும்பளிங்கு கற்கள் பதித்திருக்கிறார்கள. குழியில் தன்னிர் ஊற்று அமைத்திருக்கிறார்கள். அந்த குழியின் நடுவே இன்னோரு குழி ஆழமாய், அடித்தரை கண்ணுக்கு தெரியாதது போல் செல்கிறது. அதனுள் தண்ணிர் வழிந்து செல்கிறது.

அந்த நினைவகத்தை சுற்றி இருந்த இடுப்பளவு சுவற்றில் அந்த விபத்தில் இறந்தவர்களின் பெயர்களை செதுக்கி வைத்துள்ளார்கள். அதில் பல இந்திய பெயர்களும் இருந்தது. அதை ஒட்டியே அந்த விபத்தின் அருங்காட்சியகம் இருந்தது. மாலையாகி விட்டதால் மூடப்பட்டிருந்தது. அருகிலேயே புதிதாய் கட்டபட்ட புது உலக வர்த்தக மையம் இருக்கிறது.  நினைவகத்தின் அருகில் இன்னும் சில கட்டுமான பனிகள் நடந்து கொன்டுதான் இருந்தது. நிறைய காவலர்கள் நின்று கொன்டு இருந்தார்கள். யாரோ அந்த நினைவிடத்தில் ஒரு பூங்கோத்து வாங்கி வைத்திருந்தார்கள். பார்த்துவிட்டு அகன்று நடந்து வந்த போது இந்திய முகங்களுடன், ஒரு இஸ்லாமிய குடும்பம் குழந்தைகளோடு நின்று கொன்டு இருந்தார்கள். அவர்கள் மனதில் என்ன ஓடும்? நிச்சயம் என் மனதில் ஓடிய நினைவுகளாக தான் இருக்கும்.

911-memorial-with-rose.jpg
911 நினைவகம்

அடுத்து எங்கே போவது? நியூ யார்க் வந்தால் பார்ப்பதற்காக சுற்றுலா தளங்கள் இருக்கும், ஆனால் உன்மையான ஊரை எப்படி சுற்றி பார்ப்பது. மேப்பை எடுத்து பார்த்தோம். சைனா டவுன், லிட்டில் இட்டாலி ஆர்வத்தை தூன்டியது. அமெரிக்க வந்தும் அந்நாட்டு மக்கள் தங்களுக்கு என்று ஒரு பகுதியை நிறுவி கொன்டு வாழ்கிறார்கள். அமெரிக்கர்களுக்கு மத்தியில் வாழும் குடும்பங்களை விட இப்படி கூட்டாக வாழும் மக்கள் அவர்களின் கலச்சாரத்தை இன்னும் வலுவாக பின்பற்றுவார்கள், அவர்களின் பிரத்யேக தேவைக்கான கடைகள் அங்கு உருவாகி இருக்கும். அங்கு செல்ல எந்த சப் வே ரயில் என்றும் தெரியவில்லை, காலும் கடுக்க ஆரம்பித்தது. எங்காவது சிறிது நேரம் உட்கார வேண்டும் போலிருந்தது. ஒரு சிறு இந்திய உணவகம் தென்ப்பட்டது அங்கு சென்று இரு சமோசாவும், மசாலா டீயும் சாப்பிட்டோம். பிறகு கிளம்பி சென்று ரயிலில் ஏறினோம். இரண்டு ரயில் மாறி செல்ல வேண்டும். ரயில் நிலையத்தில் ஒரு இளைஞன் கிடார் வாசித்து கொன்டு பாட துவங்கினான். சப் வே ரயில் தன்டவாளங்கள் அழுக்கும் குப்பையுமாய் எலிகள் ஓட இருந்தது.

சைனா டவுன் சென்று இறங்கினோம், ஒரே  சீன முகங்கள். திடீர் என்று சென்னையின் ஒரு கடைவீதியில் நுழைந்தது போலிருந்த்து. அமெரிக்காவில் வழக்கமாக பார்க்கும் கடைகள் போல அல்லாமல் சென்னை பான்டி பஜாரில் இருப்பது போன்ற கடைகள். நெருக்கமான கடைகள். மின் அலங்கார விளக்குகள் தொங்கி கொன்டு இருந்தது.  எல்லா கடை பெயர்களும் சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. அமெரிக்க கடைகள், சேஸ் பாங்க் அனைத்தும் சீன மொழியிலும் பெயர் எழுதப்பட்டிருந்தது. நிறைய நகை கடைகள் இருந்தது. சின்ன சின்ன துனி கடைகளில் பல முஸ்லிம் பெயர்களுடன், இந்திய முஸ்லிம் இளைகர்களுடன் இருந்தது. அந்நகரத்தின் சாலை நெரிசலை விட இங்கு அதிகமாகவும் இரைச்சலுடனும் இருந்தது போலிருந்த்து. அங்கு ஒரு கடையில் ஒரு சீனப்பென் வேடிக்கையான தனது ஆங்கில உச்சரிப்புடன் 'கம் இன் அன்ட் சீ' என்று அழைத்து கொன்டு இருந்தால்.

china_town.jpg

சைனா டவுன்    

அப்படியே லிட்டில் இட்டாலி உள்ளே சென்றோம். இட்டாலி வீதி ஆரம்பித்ததுமே ரெஸ்டாரன்டுகள், பிட்சாரியாகள் தொடங்கிவிட்டது. பட்லர் உடையனிந்து உணவு பரிமாறி கொன்டிருந்தார்கள். கடைக்குள் மட்டுமில்லாமல் வீதீயின் திறந்த வெளியிலும் மேசைகள் போட்டிருந்தார்கள். உள்ளுர் மக்கள், இளைஞர்கள் பலர் அங்கு வந்து சாப்பிட்டு கொன்டு இருந்தார்கள். ஒரு நெடும் வீதி முழுக்க ஒரே ரெஸ்டாரன்டுகள் தான் வேறு கடையே பார்க்கவில்லை.

little_italy.jpg
லிட்டில் இட்டாலி

 அந்த வீதியில் இருந்து இன்னும் உள்ளே சென்றதும் திருவிழா போல பாட்டும், ஒளியுமாய் ஒரு வீதியில் கடைகள் அமைத்திருந்தார்கள். உணவு கடை, ஆடை அணிகலன்கள், பொம்மைகள், விளையாட்டுகள் என்று வரிசையாக கடைகள். அங்கு ஒரியோ பிஸ்கட்டை மாவில் முக்கி என்னையில் தாலித்து தருகிறார்கள், நம்மூர் போன்டா போல. அதை சில வெள்ளையர்கள் வாங்கினார்கள். நம் வடை போல் ஒரு பண்டம் இருந்தது, அது என்ன என்று கேட்டேன், ஸெப்பொலி (Zeppole) என்றார்கள், இரண்டு டாலருக்கு இரண்டு என்று வாங்கினேன். சர்க்கரை மாவில் தொட்டு கொடுத்தார்கள். வெறும் மாவினால் செய்யப்பட்டது. உப்பு காரம் எதுவும் இல்லை. அதை சர்க்கரை மாவில் தொடாமல் சாப்பிட்டாலும் நன்றாக இருந்திருக்கும். இவர்கள் சிற்றுன்டியில் இனிப்பை தவிர வேறு சுவையை சேர்க்க மாட்டார்கள் போலிருக்கிறது. தொப்பி, கை பை, பொம்மை என பலவையும் விற்று கொன்டிருந்த இடத்தில் ஒரு விநாயகர் படம் போட்ட திரை துனியையும் விற்று கொன்டிருந்தார்கள்.

Zeppole-3-500x334.jpg

ஸெப்பொலி

அங்கிருந்து அப்படியே சோஹோ எனும் பகுதியின் வழியாக நடந்தோம். அந்த பகுதியில் அவ்வளவு ஆர்ப்பாட்டம் இல்லை. நிறைய டிசைனர் கடைகள் இருப்பதாக ஷாலினி சொன்னாள். அங்கு ஒரு பெஞ்சில் சற்று அமர்ந்தோம். அருகில் ஒருவர் ஜாஸ் இசையை ஸ்பீக்கரில் ஒலிக்கவிட்டு அமர்ந்திருந்தார். இரவு நேரங்களில் ஜோடியாக பல உள்ளுர்வாசிகள் வெளியே வருகிறார்கள். ஆண், பெண் இருவருமே கச்சிதமாக உடை அணிந்திருக்கிறார்கள். அவர்கள் அதற்கு எவ்வளவு நேரம் செலவளிப்பார்கள் என்று தான் எனக்கு தோன்றியது. நாயை நடைக்கு அழைத்து கொன்டு சிலர் சென்றனர்.  இரவு சாப்பிட்டுவிட்டு விடுதிக்கு திரும்பினோம்.

http://agapuram.blogspot.ch/2014/06/6.html

  • தொடங்கியவர்

நியூ யார்க் பயணக் கட்டுரை - 7

மே 25 மதியம் ஒரு மணி அளவில் அமேரிக்கன் நேச்சுரல் அரங்காட்சியகத்திற்கு சென்றோம். நியு யார்க்கில் அருங்காட்சியகங்கள் தான் அதிகமாக இருக்கிறது. அருங்காட்சியகத்தில் நுழைந்த்துமே, முதலில் வானவியல் சம்பத்தப்பட்ட காட்சி பொருட்கள் தான் இருந்தது. பூமி, அதின் அருகே உள்ள கிரகங்கள் அதை பற்றிய தகவல்கள் என நிறைய இருந்ந்தது.அந்த ஒரு சின்ன பகுதியை முழுமாயாய் பார்ப்பது என்றாலே பல மணி நேரம் தேவைப்படும். அதற்கு மேலிருந்த தளத்தில் உலகின் உருவாக்கம் பற்றியும், அதன் வயது மற்றும் எந்த காலத்தில் என்னன்ன மாற்றங்கள் உருவாயிற்று, உயிர்கள் எப்படி உருவாயிற்று என்பதை விவரிக்கும் ஒரு சுருள் படிக்கட்டு டைம் லைன் இருந்தது.

அதன் பின் வேற்று கிரக்கத்தில் பல டன் எடையுன் பூமியில் விழுந்த மிட்டியோராய்ட் கற்களின் பகுதிகளை வைத்திருந்நார்கள். இரும்பு கற்கள். வேற்று கிரகத்தின் உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாய் கிடைத்த ஃபாசில்கள் வைத்திருந்தார்கள். எரிமலைகளை பற்றி, பூமியை பற்றி என்று பல தகவல்கள். இப்படியே பார்த்தால் இந்த அருங்காட்சியகத்தை பார்த்து முடிக்க ஒரு வாரத்திற்கும் மேல் ஆகும். அதனால் நமக்கு எந்த இடம் பார்க்க ஆசை இருக்கிறதோ அதை பார்த்துவிட்டு கிளம்புவது என்று முடிவுக்கு வந்தோம். அதன் படி விளங்குகள், பறவைகளின் தோலில் பஞ்சிட்டு அடைத்து வைத்திருந்தார்கள், அதன் வழியே பார்த்து கொன்டே நகர்ந்தோம். சமுத்திர உலகம் எனும் இடத்தில் கடலுக்குள் இருக்கும் உயிரினங்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள். அமெரிக்க தாவரங்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள். அதில் அமெரிக்காவில் இருக்கும் 2000 வருடங்களுக்கு முன்னிருந்தே இன்றும் உயிருடன் இருக்கும் சிக்காயோ மரத்தின் குறுக்கு வெட்டு தோற்றதின் மாதிரியை வைத்திருந்தார்கள். 20 அடி விட்டம் உள்ள வட்டமாக தோன்றியது.

மனித பரினாம வளர்ச்சியை குறித்து ஒரு பகுதி ஒதுக்க பட்டிருந்தது. ஆதி மனிதனின் எலும்பு கூடுகள். அவன் உடற் கூறு விவரங்கள். அவனின் தொழில் நுட்பம் மற்றும் அவனிடம் எப்படி மொழி வளர்ந்து வந்தது என்பதை காட்சி படுத்தி விவரித்திருந்தார்கள்.ஒரு பகுதியில் ஆசிய மக்களை பற்றிய ஒரு பகுதி இருந்தது. ரஷ்ய, சீன, திபத்திய, இந்திய, ஜாப்பானிய நாட்டு மக்களின் கலச்சாரங்கள், அவர்களின் இசை, மதம், முந்தய தொழில்நுட்பம் என பல பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள். மதத்தின் வகையில் இந்தியா ஆசியாவிற்கே பெரிய பங்காற்றி இருக்கிறது. புத்தரும், இந்து தெய்வங்களும் பல நாடுகளில் வழிபட பட்டிருக்கிறது.

இன்று நியூ யார்க் சுற்றுலாவின் கடைசி நாள், அதனால் பார்க்கவிட்டு போன இடங்கள் இன்னும் நிரைய இருந்தது. அதனால் ஒரு இரண்டு மணி நேரம் அந்த அருங்காட்சியகத்தில் செலவிட்டு விட்டு வெளியேறினோம். அதற்கு பின் புறம் நியூ யார்க் ஹிஸ்டார்க்கள் சொசைட்டி இருந்தது. அங்கு சென்றோம். அதில் அமெரிக்க புரட்சி போரில் சம்பத்தபட்ட பல பொருட்கள் வைத்திருந்தார்கள். அமெரிக்க சிவில் வாரின் போது பயன் படுத்தப்பட்ட காட்டன் கில்ட் போர்வைகளை பல வைத்திருந்தார்கள். அந்த போர்வைகளில் தேசப்பக்தி உருவகங்களும், தேச கொடியும் வரையப்படிருந்தது. அது மக்களையும் போரில் இருக்கும் ரானுவ வீர்ர்களையும் இனைக்கும் ஒரு பொருளாக இருந்திருக்கிறது. 

1930களில் நியூ யார்க்கில் எடுக்கப்பட்ட புகைபடங்களை காட்சிக்கு வைத்திருந்தார்கள். மேல் தளத்தில் யாரோ ஒரு ஓவியரின் ஓவியங்களை வைத்திருந்தார்கள். அவர் பறவைகளை மட்டுமே வரைந்திருந்தார். அதற்கு மேல் அங்கு வரலாற்று காட்சியகங்கள் எதுவும் இல்லை. அங்கிருந்நு வெளியேரினோம்.

நியூ யார்க் கடலோரத்தில் பல தீவுகளாக இருப்பதால் அதை நீரில் சுற்றி காட்ட பல படகு சவாரிகள் இருக்கிறது. அதனால் படகு சவாரி போவதாக முடிவு செய்து 42வது வீதியில் இருக்கும் படகு துறைக்கு சென்றோம். அந்த வீதியில் எல்லாம் குடியிருப்பு கட்டிடங்கள் பல்லடுக்கு மாடிகளாய் இருந்தது. படகு துறைக்கு செல்லும் போது 5 மணியாகிவிட்டது. கடைசியில் ஒரே ஒரு அதி வேக படகு சவாரி இருந்தது. அதில் சென்றோம். தன்னிரை கிழித்து கொன்டு சென்றது. 4000 குதிரை வேகம் என்று சொன்னார்கள், ஆனால் அவ்வளவு வேகமாக செல்வதாக தெரியவில்லை. நியூ யார்க் கரை முழுக்க படகு துறைகள் இருந்தது. அரை மணி நேர சவாரி முடிந்து திரும்பினோம்.

அங்கிருந்து சப் வே ரயில் மூலமாக ப்ருக்ளின் பாலத்திற்கு சென்றோம். இதுவும் நியூ யார்க் நகரின் ஒரு அடையாள சின்னம். நான்கு நாட்களாய் நியூ யார்க்கில் சுற்றியும் நியூ யார்க்கின் மன்ஹாட்டன் பகுதியை விட்டு இப்போது தான் வேறு பகுதிக்கு வருகிறோம். ஏனெனில் மன்ஹாட்டன் பகுதியில் சுற்றலா தளங்கள் அதிகம், மற்றும் மன்ஹாட்டன் பகுதி வளர்ந்த அளவிற்கு பிற பகுதிகள் வளரவில்லை என்று தான் நினைக்கிறேன். சப் வே ரயிலில் ப்ரூக்ளின் பாலம் அருகே இறங்கி பாலத்திற்கு நடந்தோம் சூரியன் மறைய துவங்கி இருந்தது. பாலத்தின் மேல் மக்கள் பலர் நடந்து கொன்டிருந்தனர். சைக்கிள்களில் பலர் சென்று கொன்டுருந்தனர். பாலத்தில் இரு தளங்கள், கீழ் தளத்தில் கார்கள் ஓடி கொன்டு இருந்தது, மேல் தளத்தில் பாதசாரிகளும், சைக்கிளும்.

Brooklyn_Bridge_Postdlf.jpg
ப்ரூக்ளின் பாலம்

பெரிய பாலம். 1883ல் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மாபெரும் தூன்களின் மேல் பாலம் செல்கிறது. மன்ஹாட்டனையும், ப்ரூக்ளினையும் இனைக்கிறது. பாலத்தை பல இரும்பு கம்பிகளால் தூன்களில் பினைக்கபட்டிருந்தது. தூன்களில் இருந்து விரியும் விலா எழுப்புகள் போல் இருந்தது அந்த கம்பிகள். பாலத்தின் உள்ளிருந்து பார்க்கும் போது ஏதோ பெரிய வலையில் அடைக்கப்பட்டது போலிருந்தது.  அது கட்டப்பட்ட காலத்திற்கு இது பெரும் சாதனை. இப்படிப்பட்ட செயல்களை செய்து காட்டுவது உலக அளவில் அந்நாட்டின் வல்லமையை பறைசாற்றுகிறது. பாலங்களின் விளிம்பு தடுப்பிகள் இரும்புகளால் ஆனது. அதில் சுற்றுலா வருபவர்கள் அவர்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு சென்றுருந்தார்கள். பாலத்தில் சில இடங்களில் பூட்டை பூட்டி, அந்த பூட்டில் அவர்களின் பெயர்களை எழுதி இருந்தார்கள். ஜோடிகளின் பெயர்களாக தானு இருந்தது. அதற்கு பெயர் காதல் பூட்டு - love lock. நாங்கள் பூட்டு எடுத்து செல்லவில்லை. ப்ருக்ளினில் இருந்து மன்ஹாட்டன் நோக்கி நடக்கும் போது, மன் ஹாட்டன் நகரின் கட்டட வரிசைகள் அழகாக தெரிந்தது. பாலத்தின் கீழு படகுகள் சென்று கொன்டிருந்தது. அனைவரும் புகைபடங்கள் எடுத்து கொன்டனர். விபரிதமாக ஒரு வெள்ளை இளைஞன் பாலத்தின் விளிம்புகளில் ஏறி புகைபடம் எடுத்த கொன்டிருந்தான். பாலத்தை நடந்தே கடந்து மன்ஹாட்டன் வந்தோம். பார்க்க இருந்த கடைசி இடம் எம்பயர் ஸ்டேட் கட்டிடம். அங்கு சென்றோம்.

locks28k-6-web.jpg

காதல் பூட்டு

இரவு 9;30 ஆகி இருந்தது. ரயிலில் இருந்து இறங்கி உணவகம் தேடி நடந்து சென்றோம். இரவு நேரங்களில் நியூ யார்க்கின் வீதிகள் குப்பை பைகளாள் நிரம்பி இருக்கிறது. ஒவ்வொரு கடையும் மூடும் நேரத்தில் குப்பைகளை எடுத்து வீதியில் வைத்து கடையை சுத்தம் செய்கிறார்கள். வீதிகளில் நீர் வழிந்தோட குப்பைகளுடன் இருந்ந்து. எம்பயர் ஸ்டேட் அருகே ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். எம்பயர் ஸ்டேட்டை சுற்றி இருக்கும் வீதிகள் சுத்தமாக இருந்தது. சாப்பிட்டு வெளிவந்தால் பெரிய வரிசை நின்று கொன்டிருந்தது. மேல சென்று பார்க்க இரண்டு மணி நேரமாகும் என்றார்கள். அதை தவிர்க்க விரைவு டிக்கட்டுகளும் விற்று கொன்டிருந்தனர்.

எம்பயர் ஸ்டேட் பில்டிங் 103 தளங்களுடன் அமேரிக்காவின் நான்காவது உயரமான கட்டிடம், உலக அளவில் 23 வது உயரமான கட்டிடம். 1931ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டிடம் கட்டப்பட்ட வருடத்தில் இருந்து 40 ஆண்டுகள் உலகின் உயரமான கட்டிடமாக இருந்திருக்கிறது. நியூ யார்க்கின் உயரமான கட்டிடங்களுக்கு அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் இருக்கிறது 19ம் நூற்றான்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றான்டின் தொடக்கத்திலும் அமேரிக்காவின் அசாதாரன வளர்ச்சியை இந்த கட்டிடங்கள் குறிக்கிறது. அந்த காலங்களில் இந்த கட்டிடங்களின் தலை சுற்ற வைக்கும் உயரத்தில் தொழிலாளிகள் (Iron workers) எப்படி அநாயாசமாக வேலை செய்தார்கள் என்பது ஆச்சரியத்துக்குரியது.

Lunch-atop-a-skyscraper-c1932.jpg

இரும்பு தொழிலாளிகள்

asleep.jpg
திருப்பதி தேவஸ்தான வரிசை போல் வளைந்து வளைந்து சென்றது வரிசை. கட்டிடத்தின் உயரமான தளத்திற்கு கூட்டி சென்று அங்கிருந்து நகரத்தை பார்கலாம். அவ்வளவு தான் விஷயம். நேற்றும் இங்கு வந்தோம் ஆனால் மேகத்தினால் காட்சி சுத்தமாக தெரியாது எள்றார்கள். இன்று தெளிவான வானம், இரவு வார இறுதி அதனால் தான் பெரும் கூட்டம். வரிசையில் கால் கடுக்க இரண்டு மணி நேரம் நின்றோம். எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் மின் சக்தியை சேமிக்க எவ்வளவு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள் என்று எழுதிப்போட்டிருந்தார்கள். கட்டிடம் கட்டப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைபடங்கை வைத்திருந்தார்கள். இந்த கட்டிடத்தின் ஒவுவொரு தளமுமு உயரமாகவே இருந்தது. இப்போது கட்டப்படும் பல்லடுக்கு கட்டிடங்களில் தளங்களின் உயரத்தை குறைத்த கட்டுகிறார்கள் போலும்.

87வது மாடியில் இருந்து நகரத்தை பார்த்தோம். நான்கு திசைகளில் இருந்து பார்த்தோம். விமானத்தில் இருந்து பார்ப்பது போல் இருந்தது. நகரத்தின் மேல் மின் மினிகள் போர்வையாக போர்த்த பட்டிருந்தது போல் இருந்தது. நிறைய கட்டிடங்களில் தேவை இல்லாமல் விளக்கு எரிந்து கொன்டிருக்கிறது என்று தோன்றியது.  பல கட்டிடங்களின் சிகரங்களில் சிவப்பு விளக்கும் அதன மேல் நீல விளக்கும் எரிந்யு கொன்டிருந்தது. அமெரிக்க கொடியின் நிறத்தை குறிக்கிறது என்று நினைக்கிறேன். மன் ஹாட்டனை தவிர நியூ யார்க்கின் மற்ற பகுதிகளில் உயர்ந்த கட்டிடங்கள் மிக குறைவாகவே தென்ப்பட்டது.

நியூ யார்க்கில் இன்னும் ரிக் ஷாக்கள் ஓட்டுகிறார்கள். எம்பயர் ஸ்டேட்டில் இருந்த வெளிவந்ததும். ரிக்ஷா நின்றது அதில் ஏரி டைம் ஸ்க்யர் சென்றோம். 1 நிமிடத்திற்கும் 4 டாலர் என்று 9 நிமிடத்திற்கு பனம் கேட்டான் ரிக்ஷாகாரன், அது மிகவும் அதிகம் காரில் வந்தாலே 10 டாலருக்கு வந்திருப்போம் என்று பேரம் பேசி குறைத்தேன். நாளைக்கு ஊருக்கு கிளம்புவதால் நள்ளிரவில் நகரத்தை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என்று தான் அங்கு வந்தோம். அந்த நேரத்திலும் டைம் ஸ்கயரில் நல்ல கூட்டம். விளம்பரங்கள் ஓடி கொன்டே இருந்தது. ஒரு ஒன்றரை மணி நேரம் அங்கு உட்கார்ந்திருந்து விட்டு இரவு 2;30 மணி அளவில் விடுதிக்கு திரும்பினோம்.

மே 26, 11 மணி அளவில் காரில் ஊருக்கு கிளம்பினோம். நியூ ஜெரிஸியில் காருக்கு பெட்ரோல் போட்டோம். அமெரிக்காவில் நாம் தான் பெட்ரோல் பங்கில் பம்புகளை இயக்க வேண்டும் ஆனால் நியூ ஜெரிஸியில் இந்தியாவை போல் பெட்ரோல் போட ஊழியர்கள் இருக்கிறார்கள். மொத்தம் 10;30 மணி நேரம் காரை ஓட்ட வேண்டும். நல்ல வெயிலுடன் ஓட்டுவதற்கு இதமாக இருந்தது.வேக அளவை மீராமல், 2 மணி நேரத்திற்கு ஓரிடத்தில் நிறுத்தி ஓட்டி வந்தேன். திரும்பும் போது இயற்கை காட்சிகள் வரும் போது இரிந்தது போல் சிறப்பாக இல்லை. நிறைய பேர் வேக வரம்பை மீறியதால் காவலர்களால் பிடிக்கப்பட்டனர். இந்த முறை டோல் சாலைகள் வழியாக தான் வந்தேன். மொத்தம் 11 டாலர் சுங்கம் கட்டவேண்டி இருந்தது. இரவு 11;30 அளவில் வீட்டுக்கு வந்தோம். இன்னும் புத்துனர்ச்சி இருந்து கொன்டிருந்தது.

http://agapuram.blogspot.ch/2014/06/7.html

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது..., நீங்கள் வீட்டுக்குப் போய் விட்டீர்களா... நாங்கள்  இன்னும் நியூயார்க்கிலேயே நிக்கின்றோம்....!!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்க்கு நன்றி ஆதவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.