Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் அழுத்தம் போதுமானதாக இல்லை : தமிழர் மனித உரிமை மையம்

Featured Replies

கூட்டமைப்பின் அழுத்தம்  போதுமானதாக இல்லை : தமிழர் மனித உரிமை மையம் 

s.v.kirubakaran.jpg(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து  அரசாங்கம் நடத்தவுள்ளதாகக் கூறப்படும்  உள்ளக விசாரணை பொறிமுறையில்  சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கவேண்டும் என்ற   விடயத்தில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  அழுத்தங்கள் போதுமானதாக இல்லை என்று பிரான்ஸை தலைமையகமாகக்கொண்ட  தமிழர் மனித உரிமை மையத்தின்  செயலாளர் ச.வி. கிருபாகரன் தெரிவித்தார். 

கூட்டமைப்பின் எம்.பி.  சுமந்திரன்  மிகவும் திறமையான முறையில்  உலக நாடுகளுக்கு சென்று இந்த விடயத்தை  அழுத்தம் திருத்தமாக கூறிவந்தாலும்   கூட்டமைப்பின் நான்கு கட்சிகளினதும் பிரதிநிதிகள் ஒன்றாக சேர்ந்து  அழுத்தம் வெளியிடுவதே சிறப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தில் புலம்பெயர்ந்தோர் அமைப்புக்கள்   ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெற்றுவரும்   32 ஆவது கூட்டத் தொடர்  மற்றும்  உபகுழுக் கூட்டங்களில் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிக்காக குரல் கொடுத்துவருகின்ற நிலையில் இன்று ஜெனிவா வளாகத்தில்  வீரகேசரி இணையத்தளத்துக்கு தகவல் வெளியிடுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். 

மனித உரிமை உரிமை பேரவை வளாகத்தில் வைத்து அவர் தொடர்ந்து கருத்து  வெளியிடுகையில் 

இம்முறை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல்{ஹசேன் இம்முறை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் வெ ளியிடவுள்ள வாய்மூல அறிக்கையானது அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தங்களை கொடுப்பதாக அமைய வேண்டும். 

குறிப்பாக சர்வதேச நீதிபதிகள் உள்ளக விசாரணை பொறிமுறையில் உள்ளடங்க வேண்டுமென்ற அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நீதிபதிகள்  என்ற விடயத்தை உலகில் எந்தவோர் இடத்திலும் மறுக்கவில்லை. எனவே புலம்பெயர் அமைப்புக்களாகிய நாங்கள் இதனை உலகளவில் வலியுறுத்தி வருகிறோம். ஐ.நா. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இந்த விடயத்தை கூறிவருகிறோம். 

தற்போதைய நிலைமையில் புலம்பெயர் அமைப்புக்கள் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும். அதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடியும். எனவே புலம்பெயர் அமைப்புக்கள் இந்த விடயத்தில் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். 

எனினும் முன்னர் காணப்பட்ட ஒற்றுமையை தற்போது காண முடியவில்லை.  இலங்கை அரசாங்கம் நல்லிணக்க குழுவை அமைத்து செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் அவை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். இம்முறை வாய்மூல அறிக்கை மென்மை போக்கை கொண்டிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அமைந்தாலும்கூட செயிட் அல்{ஹசேனின் இறுதி அறிக்கையானது மிகவும் அழுத்தம் கொடுப்பதாக அமைய வேண்டுமென எதிர்பார்க்கின்றோம். 

http://www.virakesari.lk/article/8196

6 hours ago, நவீனன் said:

மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து  அரசாங்கம் நடத்தவுள்ளதாகக் கூறப்படும்  உள்ளக விசாரணை பொறிமுறையில்  சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கவேண்டும் என்ற   விடயத்தில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  அழுத்தங்கள் போதுமானதாக இல்லை என்று பிரான்ஸை தலைமையகமாகக்கொண்ட  தமிழர் மனித உரிமை மையத்தின்  செயலாளர் ச.வி. கிருபாகரன் தெரிவித்தார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  அழுத்தங்கள் போதுமானதாக இல்லை என்பது உலகறிந்த விடயம்.

இவர் முன்னர் தனக்கு மட்டும் தான் ஐநா மட்டத்தில் மனித உரிமை விடயங்கள் பற்றி பேசத் தெரியும். இலங்கையில் இருந்து வருபவர்களுக்கு அது தெரியாது. அவர்கள் வராமல் இருப்பதே நல்லது என்றார். இப்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  அழுத்தங்கள் போதுமானதாக இல்லை சொல்கிறார். இவர் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்?

6 hours ago, நவீனன் said:

கூட்டமைப்பின் எம்.பி.  சுமந்திரன்  மிகவும் திறமையான முறையில்  உலக நாடுகளுக்கு சென்று இந்த விடயத்தை  அழுத்தம் திருத்தமாக கூறிவந்தாலும்   கூட்டமைப்பின் நான்கு கட்சிகளினதும் பிரதிநிதிகள் ஒன்றாக சேர்ந்து  அழுத்தம் வெளியிடுவதே சிறப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

கூட்ட்டமைப்பில் எம்.பி.  சுமந்திரன்,சம்பந்தன் ஐயா இருவரைத்தவிர மற்றைய எம்.பி.மார்களுக்கு மொழி பிரச்சனையான விடயம் ,தற்போது பிரித்தானிய பாராளுமன்ற குழுவின் அழைப்பில்   எம்.பி.  சுமந்திரன்  லண்டனில் நிற்கின்றார் .

7 hours ago, நவீனன் said:

சம்பந்தனுக்கு தெரிந்த ஜனநாயகம் இது தான்.

கூட்டணிக் கட்சிகளை புறக்கணித்து, அவர்கள் கருத்துக்களைக் கேளாமல், உண்மைகளை நேரடியாக சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் காலத்தை வீணாக்கி எதிரிகளிடம் மதிப்பை பெற உதவும் தனது கையாளை மட்டும் ரகசியமாக அனுப்புவதே சம்பந்தனுக்கு தெரிந்த ஜனநாயகம்.

தான்தோன்றித் தனமாக செயற்படுவதே இதுவரை சம்பந்தன் வெளிப்படுத்திய  ஜனநாயகம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Gari said:

கூட்ட்டமைப்பில் எம்.பி.  சுமந்திரன்,சம்பந்தன் ஐயா இருவரைத்தவிர மற்றைய எம்.பி.மார்களுக்கு மொழி பிரச்சனையான விடயம் ,தற்போது பிரித்தானிய பாராளுமன்ற குழுவின் அழைப்பில்   எம்.பி.  சுமந்திரன்  லண்டனில் நிற்கின்றார் .

இனி சிங்களமும் ஆங்கிலமும் தெரிந்தால் தான் தேர்தலில் சீட் கொடுங்கோ.

34 minutes ago, MEERA said:

இனி சிங்களமும் ஆங்கிலமும் தெரிந்தால் தான் தேர்தலில் சீட் கொடுங்கோ.

உண்மை + நியாயம். சிலர் மாதிரி எதுவும் புரியாமல் எதையும் பேசமுடியாமல் ஜெனீவாவுக்கு போய் என்ன பிரயோசனம். 

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்க தெரியாமையால் பலவற்றை இழந்து வருகிறோம். நாட்டினுள் கூட பல தமிழ் அரசியல்வாதிகளுக்கு மொழிப் பிரச்சனை.

8 minutes ago, ஜீவன் சிவா said:

உண்மை + நியாயம். சிலர் மாதிரி எதுவும் புரியாமல் எதையும் பேசமுடியாமல் ஜெனீவாவுக்கு போய் என்ன பிரயோசனம். 

கதைக்க தெரியாமையால் பலவற்றை இழந்து வருகிறோம். நாட்டினுள் கூட பல தமிழ் அரசியல்வாதிகளுக்கு மொழிப் பிரச்சனை.

10 minutes ago, ஜீவன் சிவா said:

உண்மை + நியாயம். சிலர் மாதிரி எதுவும் புரியாமல் எதையும் பேசமுடியாமல் ஜெனீவாவுக்கு போய் என்ன பிரயோசனம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.