Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருப்போர் இல்லாதோரின் இடர்களைக் களைய முன் வாருங்கள்

Featured Replies

இருப்போர் இல்லாதோரின் இடர்களைக் களைய முன் வாருங்கள்

இருப்போர் இல்லாதோரின் இடர்களைக் களைய முன் வாருங்கள்
வெளிநாட்டில் வாழ்பவர்கள் வெறும் ஆடம்பரச் செலவுகளுக்கு இடங் கொடுக்கக் கூடாது. இல்லாதோரின் இடர்களைக் களைய முன்வரவேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் "மணிமேகலை உணவுக்கூடம்" இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
 
அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில் , 
 
எம் தமிழ் மக்களிடையே கொடுக்கும் பழக்கம், கொடை அளிக்கும் பழக்கமானவை முக்கியத்துவம் பெற்று வருகின்றன. வெளி நாட்டில் உள்ளவர்கள் இங்குள்ளவர்கள் உருப்படியாகச் செலவு செய்யும் படியாகக் கொடைகளை வழங்க வேண்டும். 
 
வெறும் ஆடம்பரச் செலவுகளுக்கு இடங் கொடுக்கக் கூடாது. எம்மைச் சுற்றி தேவைகள் தாண்டவமாடுகின்றன. வறுமை வாட்டுகின்றது. இருப்போர் இல்லாதோரின் இடர்களைக் களைய முன்வரவேண்டும். 
 
இதனால்த்தான் நாங்கள் “உதவிப் பாலம்” என்ற ஒரு கொடை அலகை உருவாக்கியுள்ளோம். பெரிய கொடைகளை எதிர் பாராமல் எத்துணை சிறிய கொடையாக இருந்தாலும் மக்கள் மனமுவந்து தரும் உதவிகளை அல்லல்படும் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி வருகின்றோம். 
 
நாங்கள் கொடுத்த ஒரு சிறு தொகைப் பணத்தில் எவ்வாறு ஒரு வயது முதிர்ந்த அம்மையார், அதுவும் உற்றார் உறவினர்களைப் போரில் பறிகொடுத்த ஒருவர், தன் வாழ்க்கையை மறுசீரமைப்புச் செய்து கொண்டார் என்பதைக் கூற விரும்புகின்றேன். 
 
புதன்கிழமைகளில் மக்கள் என்னை நாடி வருகின்றார்கள். அன்று குறை கேட்கும் நாள். இந்த அம்மையார் ஒரு சிறு பணத் தொகையைக் கேட்டார். நீங்கள் எனக்குக் கொடை உதவி செய்யத் தேவையில்லை. கடனாகவே தாருங்கள் என்றார். 
 
பணத்தைப் பெற்று விட்டுப் பல்டி அடிக்கும் பலரை நான் பார்த்துள்ளேன். ஆனால் அந்த அம்மையாரின் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது. வாக்கில் தெளிவிருந்தது. கேட்டதைக் கொடுத்தேன். சுமார் 6 மாதங் கழித்து வந்து “இந்தாருங்கள் உங்கள் பணம்” என்றார். 
 
என்ன நடந்தது என்று கேட்டேன். நீங்கள் தந்த பணத்திற்கு ஏலம், கறுவா, கராம்பு, வெந்தயம்  போன்ற உணவிற் சேர்க்கும் மூலிகை உணவுகளை வாங்கினேன். அவற்றைச் சிறு சிறு பக்கெட்டுக்களாக ஆக்கினேன். பள்ளிக்கூடங்கள் காலை 10, 11 மணியளவில் சிறிய இடைவேளை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கொடுப்பார்கள். அந்த நேரத்தைப் பயன்படுத்தி கல்லூரிகளில், பாடசாலைகளில சென்று இந்தப் பொதிகளை விற்றேன். அதிகம் அல்ல. ஒவ்வொரு பொதியும் 10, 20 ரூபாய்தான். ஒவ்வொரு நாளைக்கும் ஒரு பள்ளிக்கூடம். சில பள்ளிக் கூடங்கள் உள்ளே விடமாட்டார்கள். அதிபர்களைக் கண்டு போரில் பாதிக்கப்பட்ட என்னை நேர்மையுடன் வாழ வழிவிடுங்கள் என்று கேட்டேன். பலர் எனக்கு அனுமதி அளித்தார்கள். அந்தவாறு விற்றதில் தான் என் கடனை அடைக்க முடிந்துள்ளது என்றார். 
 
நான் திருப்பி வாங்கவில்லை. அவரின் ஊக்கத்திற்கான பரிசு என்று கூறி அனுப்பி விட்டேன். இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் கொடுப்பதால் இடர்ப்பட்ட எங்கள் மக்கள் வாழ்வில் ஒளி ஏற்ற முடியும் என்பதை இங்கு கூறி வைக்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133550/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
உணவுக்கூடம் திறப்பு...
 
article_1467109246-13532938_110408947299

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மணிமேகலை உணவுக்கூடத்தை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று செவ்வாய்க்கிழமை (28) திறந்து வைத்தார்.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தலைவர் கா.ஆ.தியாகராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆசியுரைகளை, நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய ஆதீன குருக்களான சிவஸ்ரீ சம்பு மகேஸ்வர குருக்கள், கைலை வாமதேவ குருக்கள், பா.பாலகணேஸ்வர குருக்கள், ப.முத்துக்குமாரசாமி குருக்கள் மற்றும் நயினாதீவு விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸதேரோ ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக, வேலணை பிரதேச செயலாளர் சுகுணாவதி தெய்வேந்திரம், வேலணை முன்னாள் பிரதேச செயலாளர் மஞ்சுளா சதீஸன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறைத் தலைவர் பேராசிரியர் மா.வேதநாதன், தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி.விசாகரூபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆலயத்தில் இவ்வளவு காலமும் திருமண மண்டபத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இனிவரும் காலங்களில் இந்தப் புதிய உணவுக்கூடத்தில் அன்னதானம் வழங்கப்படும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

article_1467109261-13537789_110408946299article_1467109270-13533158_110408446633article_1467109279-13529101_110408443966

- See more at: http://www.tamilmirror.lk/175767/உணவ-க-க-டம-த-றப-ப-#sthash.HoZw6eBt.dpuf

Edited by நவீனன்

2 hours ago, நவீனன் said:

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் "மணிமேகலை உணவுக்கூடம்" இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

பசித்தவர்களுக்கு, ஏழைகளுக்கு உணவளிப்பது மிகப் பெரிய சேவை. அந்த வகையில் இந்தப் பணி மிகவும் பாராட்டுக்கு உரியது.

பிரசித்தி பெற்ற கோவில்கள் தமது சேவையை அடுத்த கட்டத்துக்கும் விரிவு செய்ய வேண்டும். குறிப்பாக ஏழை மாணவர்களின் கல்வி, வறியவர்களின் சுகாதாரம், அவர்கள் பொருளாதார முன்னேற்றம் கண்டு சொந்தக் கால்களில் நிற்கக் கூடிய செயற்திட்டங்கள் போன்றவற்றை இந்தக் கோவில்கள் செய்ய முன்வர வேண்டும்.

இவற்றை செய்யக் கூடிய ஆற்றல்கள் பல கோவில்களுக்கு உண்டு. 

2 hours ago, போல் said:

உண்மை போல்

சில கோவில்கள் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று நிர்வாகம் பண்ணுகிறார்கள். உதாரணத்துக்கு தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம். ஆனாலும் சில கோவில்கள் வசதி இருந்தும் அதனை கோபுரம் கட்டுவதிலும், காணி வாங்கி கோவிலை பெருப்பிப்பதிலும்தான் கவனம். அந்த கோவிலிலும் மக்கள் வந்து தமது குறைகள், தேவைகளை முறையிட்டு அழுவதை பாக்க - எனக்கும் தாங்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஜீவன் சிவா said:

உண்மை போல்

சில கோவில்கள் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று நிர்வாகம் பண்ணுகிறார்கள். உதாரணத்துக்கு தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம். ஆனாலும் சில கோவில்கள் வசதி இருந்தும் அதனை கோபுரம் கட்டுவதிலும், காணி வாங்கி கோவிலை பெருப்பிப்பதிலும்தான் கவனம். அந்த கோவிலிலும் மக்கள் வந்து தமது குறைகள், தேவைகளை முறையிட்டு அழுவதை பாக்க - எனக்கும் தாங்க முடியவில்லை.

அனாவசிய செலவுகளை குறைத்தால் நல்லது தானே குறிப்பாக ஒரு குடியினர் ஒரு லட்சம் ரூபாய்க்கு பட்டாசு கொளுத்தியது அடுத்த நாள் இன்னும் ஒரு குடி 2லட்சம் ரூபாய்க்கு இது வீண் செலவுதான் இப்படியாவற்றையும் குறைத்து கொண்டு செல்ல வேண்டும் 

2 hours ago, போல் said:

பசித்தவர்களுக்கு, ஏழைகளுக்கு உணவளிப்பது மிகப் பெரிய சேவை. அந்த வகையில் இந்தப் பணி மிகவும் பாராட்டுக்கு உரியது.

பிரசித்தி பெற்ற கோவில்கள் தமது சேவையை அடுத்த கட்டத்துக்கும் விரிவு செய்ய வேண்டும். குறிப்பாக ஏழை மாணவர்களின் கல்வி, வறியவர்களின் சுகாதாரம், அவர்கள் பொருளாதார முன்னேற்றம் கண்டு சொந்தக் கால்களில் நிற்கக் கூடிய செயற்திட்டங்கள் போன்றவற்றை இந்தக் கோவில்கள் செய்ய முன்வர வேண்டும்.

இவற்றை செய்யக் கூடிய ஆற்றல்கள் பல கோவில்களுக்கு உண்டு. 

உன்மைதானுங்க??

23 hours ago, நவீனன் said:

இருப்போர் இல்லாதோரின் இடர்களைக் களைய முன் வாருங்கள்

இருப்போர் இல்லாதோரின் இடர்களைக் களைய முன் வாருங்கள்
வெளிநாட்டில் வாழ்பவர்கள் வெறும் ஆடம்பரச் செலவுகளுக்கு இடங் கொடுக்கக் கூடாது. இல்லாதோரின் இடர்களைக் களைய முன்வரவேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் "மணிமேகலை உணவுக்கூடம்" இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
 
அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில் , 
 
எம் தமிழ் மக்களிடையே கொடுக்கும் பழக்கம், கொடை அளிக்கும் பழக்கமானவை முக்கியத்துவம் பெற்று வருகின்றன. வெளி நாட்டில் உள்ளவர்கள் இங்குள்ளவர்கள் உருப்படியாகச் செலவு செய்யும் படியாகக் கொடைகளை வழங்க வேண்டும். 
 
வெறும் ஆடம்பரச் செலவுகளுக்கு இடங் கொடுக்கக் கூடாது. எம்மைச் சுற்றி தேவைகள் தாண்டவமாடுகின்றன. வறுமை வாட்டுகின்றது. இருப்போர் இல்லாதோரின் இடர்களைக் களைய முன்வரவேண்டும். 
 
இதனால்த்தான் நாங்கள் “உதவிப் பாலம்” என்ற ஒரு கொடை அலகை உருவாக்கியுள்ளோம். பெரிய கொடைகளை எதிர் பாராமல் எத்துணை சிறிய கொடையாக இருந்தாலும் மக்கள் மனமுவந்து தரும் உதவிகளை அல்லல்படும் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி வருகின்றோம். 
 
நாங்கள் கொடுத்த ஒரு சிறு தொகைப் பணத்தில் எவ்வாறு ஒரு வயது முதிர்ந்த அம்மையார், அதுவும் உற்றார் உறவினர்களைப் போரில் பறிகொடுத்த ஒருவர், தன் வாழ்க்கையை மறுசீரமைப்புச் செய்து கொண்டார் என்பதைக் கூற விரும்புகின்றேன். 
 
புதன்கிழமைகளில் மக்கள் என்னை நாடி வருகின்றார்கள். அன்று குறை கேட்கும் நாள். இந்த அம்மையார் ஒரு சிறு பணத் தொகையைக் கேட்டார். நீங்கள் எனக்குக் கொடை உதவி செய்யத் தேவையில்லை. கடனாகவே தாருங்கள் என்றார். 
 
பணத்தைப் பெற்று விட்டுப் பல்டி அடிக்கும் பலரை நான் பார்த்துள்ளேன். ஆனால் அந்த அம்மையாரின் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது. வாக்கில் தெளிவிருந்தது. கேட்டதைக் கொடுத்தேன். சுமார் 6 மாதங் கழித்து வந்து “இந்தாருங்கள் உங்கள் பணம்” என்றார். 
 
என்ன நடந்தது என்று கேட்டேன். நீங்கள் தந்த பணத்திற்கு ஏலம், கறுவா, கராம்பு, வெந்தயம்  போன்ற உணவிற் சேர்க்கும் மூலிகை உணவுகளை வாங்கினேன். அவற்றைச் சிறு சிறு பக்கெட்டுக்களாக ஆக்கினேன். பள்ளிக்கூடங்கள் காலை 10, 11 மணியளவில் சிறிய இடைவேளை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கொடுப்பார்கள். அந்த நேரத்தைப் பயன்படுத்தி கல்லூரிகளில், பாடசாலைகளில சென்று இந்தப் பொதிகளை விற்றேன். அதிகம் அல்ல. ஒவ்வொரு பொதியும் 10, 20 ரூபாய்தான். ஒவ்வொரு நாளைக்கும் ஒரு பள்ளிக்கூடம். சில பள்ளிக் கூடங்கள் உள்ளே விடமாட்டார்கள். அதிபர்களைக் கண்டு போரில் பாதிக்கப்பட்ட என்னை நேர்மையுடன் வாழ வழிவிடுங்கள் என்று கேட்டேன். பலர் எனக்கு அனுமதி அளித்தார்கள். அந்தவாறு விற்றதில் தான் என் கடனை அடைக்க முடிந்துள்ளது என்றார். 
 
நான் திருப்பி வாங்கவில்லை. அவரின் ஊக்கத்திற்கான பரிசு என்று கூறி அனுப்பி விட்டேன். இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் கொடுப்பதால் இடர்ப்பட்ட எங்கள் மக்கள் வாழ்வில் ஒளி ஏற்ற முடியும் என்பதை இங்கு கூறி வைக்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133550/language/ta-IN/article.aspx

முதலமைச்சரின் ஒளிப்படத்துக்கு பதிலாக ஏன் பேரவைக்காரரின் படம் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.