Jump to content

மொறுமொறுப்பான... இட்லி மாவு போண்டா


Recommended Posts

பதியப்பட்டது

மொறுமொறுப்பான... இட்லி மாவு போண்டா

Crispy And Tasty Idly Maavu Bonda Recipe

 

 மாலையில் மேகமூட்டத்துடன் இருக்கும் போது சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஏதேனும் சாப்பிட நினைத்தால், அதுவும் வித்தியாசமாக செய்து சுவைக்க ஆசைப்பட்டால், வீட்டில் இருக்கும் இட்லி மாவைக் கொண்டு போண்டா செய்து சுவையுங்கள்.

இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதோடு, மிகவும் ஈஸியாக செய்யலாம். இங்கு அந்த இட்லி மாவு போண்டாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

 

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு - 2 கப்

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

சீரகம் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

 

செய்முறை:

முதலில் இட்லி மாவுடன் எண்ணெயைத் தவிர, அனைத்து பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் சிறிதும் சேர்க்காமல் கலவை சற்று கெட்டியாக இருக்குமாறு போண்டா பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

ஒருவேளை மாவில் தண்ணீர் அதிகம் இருந்தால், அதில் அரிசி மாவு சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இட்லி மாவு போண்டா ரெடி!!!

Read more at: http://tamil.boldsky.com/recipes/soups-snacks-drinks/2016/crispy-and-tasty-idly-maavu-bonda-recipe-011826.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நோ... இது போண்டாவல்ல... ஒரு வாழைப்பழத்தையும் சேர்த்துப் பிசைந்து விட்டால் ருசியான வாய்ப்பன்....!

போண்டா என்றால் அதில் உருனள அல்லது மரவள்ளீ கண்டிப்பா இருக்க வேணூம்...! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

நோ... இது போண்டாவல்ல... ஒரு வாழைப்பழத்தையும் சேர்த்துப் பிசைந்து விட்டால் ருசியான வாய்ப்பன்....!

போண்டா என்றால் அதில் உருனள அல்லது மரவள்ளீ கண்டிப்பா இருக்க வேணூம்...! tw_blush:

சும்மா நம்மள சுத்தேலாது! tw_anguished:

வாழப்பழம் போடுறதென்டா, மற்ற சாமான்கள் போடக்கூடாதே சுவியர். 

நான் நினைக்கிறன், இது மிஞ்சிப் போன இட்லி மாவுக்கு அலுவல் நடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு இந்த வேண்டாத விருந்தாளீ போல மூன்றூ நாளா "வின்டோச் 10" வந்து கணணீக்குள்ள குந்தியிருந்து கொண்டு எழுத்துக்களீல் குழப்பம் செய்யுது. குறீலை நெடிலாகவும், லகரம் ணகரம் எல்லாத்தையும் நரகமாக்குது. இந்த வாய்ப்பன் போன்டா போல....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

எனக்கு இந்த வேண்டாத விருந்தாளீ போல மூன்றூ நாளா "வின்டோச் 10" வந்து கணணீக்குள்ள குந்தியிருந்து கொண்டு எழுத்துக்களீல் குழப்பம் செய்யுது. குறீலை நெடிலாகவும், லகரம் ணகரம் எல்லாத்தையும் நரகமாக்குது. இந்த வாய்ப்பன் போன்டா போல....!  tw_blush:

Please check this thread..

 

Posted
2 hours ago, suvy said:

எனக்கு இந்த வேண்டாத விருந்தாளீ போல மூன்றூ நாளா "வின்டோச் 10" வந்து கணணீக்குள்ள குந்தியிருந்து கொண்டு எழுத்துக்களீல் குழப்பம் செய்யுது. குறீலை நெடிலாகவும், லகரம் ணகரம் எல்லாத்தையும் நரகமாக்குது. இந்த வாய்ப்பன் போன்டா போல....!  tw_blush:

கறுப்பு கொடி காட்டுவதை விட்டு விட்டு...:grin: காசு காசு பண்ண வழி..tw_blush:

போண்டா திரி விண்டோஸ் 10 திரியாக மாறிவிட்டது..tw_blush:

"மொறு மொறுப்பான விண்டோஸ் 10 போண்டா"  என்று மாத்துவமா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, ராசவன்னியன் said:

Please check this thread..

 

 

வின்டோஸ் கிடக்கட்டும் கழுதை....,  உங்கள  இங்கு கண்டது சந்தோசம்...!  tw_blush:

ஒவ்வொன்ரயும்  இரண்டு மூன்டு தரம் குத்த வேண்டிக் கிடக்கு நவீனன்...! tw_blush:

Posted
3 hours ago, suvy said:

ஒவ்வொன்ரயும்  இரண்டு மூன்டு தரம் குத்த வேண்டிக் கிடக்கு நவீனன்...! tw_blush:

கவனம் கீ போர்ட் - கோபத்தில் அதுவேற எக்குத்தப்பா ஏதாவது உங்கடை குத்தலையும் மீறி எழுதிடும். அப்புறம் மட்டூஸ் வந்து நிப்பினம் வாசலுக்க.

Posted
1 hour ago, ஜீவன் சிவா said:

கவனம் கீ போர்ட் - கோபத்தில் அதுவேற எக்குத்தப்பா ஏதாவது உங்கடை குத்தலையும் மீறி எழுதிடும். அப்புறம் மட்டூஸ் வந்து நிப்பினம் வாசலுக்க.

அவர்களை இங்கு வரவழைக்கதான் நிக்கிறீர்கள்.. இப்படியான திரிகளிலும்..:grin:

Posted
18 minutes ago, நவீனன் said:

அவர்களை இங்கு வரவழைக்கதான் நிக்கிறீர்கள்.. இப்படியான திரிகளிலும்..:grin:

போண்டா வாய்ப்பனாகி, அப்புறம் விண்டோஸ் 10 ஆகி, அப்புறம் கறுப்பு கொடியாகி அப்புறம் கீ போர்ட்டாகி இப்ப மட்டூசில வந்து நிக்குது. இதுக்கு பிறகும் இந்த திரிக்கு எண்ணெய் ஊத்தினா - 9 தாரா, திரிஷா எண்டு வந்து நிக்கும்.

ஜீவன் ஓடுடா இந்த திரியை விட்டு.

runner smiley

Posted
14 hours ago, ஜீவன் சிவா said:

போண்டா வாய்ப்பனாகி, அப்புறம் விண்டோஸ் 10 ஆகி, அப்புறம் கறுப்பு கொடியாகி அப்புறம் கீ போர்ட்டாகி இப்ப மட்டூசில வந்து நிக்குது. இதுக்கு பிறகும் இந்த திரிக்கு எண்ணெய் ஊத்தினா - 9 தாரா, திரிஷா எண்டு வந்து நிக்கும்.

ஜீவன் ஓடுடா இந்த திரியை விட்டு.

runner smiley

எங்க ஓடுகிறீர்கள் 9 தாராவிடமா..<_<

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.