Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கேசன்துறையில் 100 வீடுகளை அமைக்கிறது இராணுவம்!

Featured Replies

9 minutes ago, கலைஞன் said:

இன்று அம்மா சொன்னார் எங்கள் வீடு இடிக்கப்பட்டு விட்டதாய்; கூகிழ் படம் மூலம் அண்ணா பார்த்து கூறியதாக. ஜீவன், குருநாதசுவாமி கோயில் பகுதி சம்மந்தமாக ஏதாவது தகவல்? 

குருநாதசுவாமி கோயில் இருந்த இடம் எங்க எண்டு அதை விட்டாப்பிறகு வாங்கோ சேர்ந்து தேடுவம். அங்கு அத்திவாரமே இல்லை.

அவங்க விட்டாலும் இஞ்ச சிலரின் அலப்பறை தாங்கமுடியல்ல. ஒருத்தருக்கும் சொல்லாம வாங்கோ எங்க கோவில் இருந்ததென்று இரண்டு பேருமா  சேர்ந்து தேடுவம். என்ன ஒரு கல்லு கூடவா கிடைக்காது?

Edited by ஜீவன் சிவா

காங்கேசன்துறையில் "காணியற்ற" மக்களுக்கு  வீடமைக்கப்படுவது மிக  நல்ல விடயம்.

ஏனைய வீட்டு திட்டங்களுக்கு 2011 முதல் 4 முதல் 7 இலட்சம் மட்டும் வழங்கும் நிலையில் தமிழினப் படுகொலைகளை நிகழ்த்திய சிங்கள-பௌத்த இராணுவ பயங்கரவாத இயந்திரம் மக்கள் விருப்பங்களை அறியாது, வட மாகாணசபை கருத்துக்களை அறியாது திணிப்பாக, அதுவும் ஒரு வீட்டுக்கு 25 இலட்சம் என்று சொல்லப்படுவது இன்னொரு பாரிய சதித்திட்டம், பாரிய பகற்கொள்ளை என்ற சந்தேகம் எழுவது இயல்பு. அப்படி சந்தேகம் இல்லையென்றால் வேறு ஏதோ கோளாறாகவே இருக்க முடியும்.

உண்மையில் இந்த வீடமைப்பை செய்ய வேண்டியது வட மாகாணசபை. தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி, தமிழ் மக்களின் காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்திருக்கும் சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாத இயந்திரம் இல்லை.

இன்னொரு விடயம் இங்கு தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் காணியின் அளவு காணியாற்ற சிங்கள மக்களுக்கு கடந்த காலங்களில் வழங்கியது போல் குறைந்தது 1/2 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரையாவது ஆவது இருக்க வேண்டும்.

எனவே அரசியல் சாசனத்தின்படி காணி, போலீஸ் அதிகாரத்தைக் கொண்டுள்ள வட மாகாணசபை செய்ய வேண்டிய வேலையை போர்க்குற்றவாளிகள் 3 மடங்கு செலவில் செய்வது நல்லிணக்கம் இல்லை. இது நல்லாட்சி சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் இனவழிப்பு பயங்கரவாதமே.

தமிழ்  மக்களை பிச்சைக்காரர்கள் போல், அடிமைகள் போல் நடத்தும் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட வேண்டும்.

உண்மையில் இந்த தமிழ் மக்களுக்கு குறைந்தது 1/2 ஏக்கர் காணியும், ரூபா 25 இலட்சத்தையும் வட மாகாணசபை ஊடாக கொடுத்து, அவர்களே தமது வீடுகளை அமைக்க செய்வதே நேர்மையான நல்லிணக்க முயற்சியாக இருக்க முடியும்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

காங்கேசன்துறையில் "காணியற்ற" மக்களுக்கு  வீடமைக்கப்படுவது மிக  நல்ல விடயம்.

எனவே அரசியல் சாசனத்தின்படி காணி, போலீஸ் அதிகாரத்தைக் கொண்டுள்ள வட மாகாணசபை செய்ய வேண்டிய வேலையை போர்க்குற்றவாளிகள் 3 மடங்கு செலவில் செய்வது நல்லிணக்கம் இல்லை. இது நல்லாட்சி சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் இனவழிப்பு பயங்கரவாதமே.

தமிழ்  மக்களை பிச்சைக்காரர்கள் போல், அடிமைகள் போல் நடத்தும் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட வேண்டும்.

  

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

காங்கேசன்துறையில் "காணியற்ற" மக்களுக்கு  வீடமைக்கப்படுவது மிக  நல்ல விடயம்.  

போல் அண்ணா.. இதில் உள்ள இன்னொரு சூட்சுமம் என்ன என்றால்..

செய்தி சொல்லுது வலி வடக்கு உயர் பாதுக்காப்பு வலயத்தில் காணிகளற்ற..

இது சிங்கள மக்கள் என்றால்.. இராணுவக் குடியேற்றக்காரர்கள் என்பது வெளிப்படை உண்மை. அவர்களுக்கு அங்கு பூர்வீகக் காணிகள் இல்லை. எனவே.. அவைக்கு உது சரியாகப் பொருந்தும்.. மேலும் அவைக்கு அங்கு இராணுவத்தோடு குடியிருக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.

தமிழ் மக்களில் வலி வடக்கில் நிரந்தர.. பூர்வீகக் காணி இல்லாதவன்.. எதுக்கு மாவிடிக்கவும்.. வேலியடைக்கவும் வலி வடக்கில் தான் காணி வீடு வேண்டும் என்று கிடக்கப் போறான்..??! அவங்க இன்றைய நிலையில் வருவாய்க்கு உகந்த சிறந்த இடங்களில் காணியை பெற்றுக் குடியேறவே நினைப்பார்கள். 

மேலும் ஒருவேளை பூர்வீகக் காணி இல்லை என்றாலும்.. பூர்வீகமாக வாழ்ந்த மண் என்று அங்க போக நினைக்கும் மக்கள் தமக்கு வருவாயும் வாழ்வும் தந்தப் பூர்வீக மண்ணுக்கு போக நிற்பார்களே தவிர.. இராணுவம் வழங்கும் வீட்டுக்கும் காணிக்குமாக வேறு எங்கோ போய் ஏன் குடியிருக்க வேண்டும்..?!

இன்று நாவற்குழி வீட்டுத்திட்டம் சிங்கள மக்களுக்கு என்றாகி நிற்பது போல இது ஏன் ஆகி நிற்காது...?! அதற்கான உத்தரவாதம் என்ன..?!

நாங்கள் அறிய மலையகத்தில் இருந்து வந்த எத்தனையோ காணிகள் அற்ற மக்கள் வன்னி.. தீவகம்...மன்னார் என்று காணி பெற்றுக் குடியேறி இருக்கிறார்கள்.

இந்த தமிழ் மக்கள் அங்க தான் போவம் என்று காத்துக்கிடக்கினம் என்றால்.. இவர்கள் எப்படி காணியற்றவர்கள் ஆனார்கள் என்ற கேள்வி எழுகிறது..!

அவர்களின் காணிகள் நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரப்படும் வகையில் கூட இந்த உயர் பாதுகாப்பு வலயத்தில் "காணியற்ற" மக்கள் என்ற வரையறை வரையப்பட்டிருக்கலாம். ..

மேலும்.. இராணுவம் எதற்கு இந்தச் சிவில் சமூக நடவடிக்கையில் மூக்கை நுழைக்கிறது..?!

இன்றைய யுத்தமற்ற சூழலில்.. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சிவில் நிர்வாக - அரசியல் அமைப்பு ஒன்று நடைமுறையில் இருக்கத் தக்கதாக எதற்கு இராணுவமும் அரச அதிகாரிகளும் மட்டும் கூட்டிணைந்து இந்த திட்டத்தை அமுலாக்கனும்..??!

இப்படி இன்னோரென்ன கேள்விகள் உள்ள இடத்தில்...

மக்களுக்கு வீடு கிடைக்குது என்றால்.. சொந்த நாட்டையும் மண்ணையும் காட்டிக்கொடுப்பேன்.. தாரைவார்ப்பேன் என்று சிலர்.. மனிதாபிமான மேலீடு காட்டுவதுதான் வேடிக்கை விநோதமாக உள்ளது..!

இந்த வீடமைப்புத் தொடர்பில்.. உடனடியாக வடக்கு மாகாண சபையும் சிவில் அமைப்புக்களும் இராணுவத்திடம் விளக்கம் கோருவதோடு... இந்த 100 வீட்டுத் திட்டப் பயனாளிகள் குறித்த விபரம் அறியப்பட்டு.. அவர்கள் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களா.. அவர்கள் விருப்பு என்ன.. அவர்களின் விருப்புக்கு அமையத்தான் இந்த பயன் அமைகிறதா.. என்று நோக்க வேண்டும். அதைவிடுத்து ஒரு இன அழிப்பு இராணுவம்.. நில ஆக்கிரமிப்பு இராணுவம் செய்வதை மனிதாபிமான உச்சரிப்பால்.. பாதுக்காக்க வெளிக்கிட்டு.. நாமே நம் தலையில் மண்ணள்ளிப் போட்ட கதை மீள நடக்காமல் இருக்கும் எச்சரிக்கை இங்கு அவசியம். அதைச் செய்யக் கூட எம்மில் சிலர் அனுமதிக்காமல்.. கூவுவதுதான் இன்னும் ஆச்சரியமாக உள்ளது. :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

இது திருந்தாது.

ஐயோ உந்த மக்களுக்கு ஒண்டையும் கொடுத்துடாதீங்க, காங்கேசன்துறையில் கைப்பற்றிய காணிகளையும் கொடுத்துடாதீங்கோ. அப்புறம் ஊரை  அடிச்சு உலையில் போடுற உந்த டியஸ்போரா கோஸ்ட்டி சாப்பாட்டிற்கு என்ன பண்ணுவாங்க. அவங்க சாப்பாட்டுக்கு, இருக்கிற ஊர்ல அரசு ஏதாவது  பண்ணுவாங்க. ஆனால் சாப்பிட்டு விட்டு இவங்கதான் புளிச்சல் ஏவறை விட ஒண்ணுமில்லாமல் அலைய போறாங்க. உந்த பாவம் நமக்கேன்.

மக்களே, நீங்கள் உந்த முகாமுக்குள்ளயே இருங்கோ, இந்த கோஸ்ட்டி நல்லூர் திருவிழாவுக்கு படம் காட்ட வரேக்க உங்களோடையும்  நிண்டு படம் எடுத்து மூஞ்சி புத்தகத்தில் போடோணும். உங்களை காணி குடுத்து வீடு கொடுத்து குடியேற்றினால் அவர்கள் பிழைப்புக்கு என்ன பண்ணுவாங்க.

என்ன பிறப்புகளோ!!!

மற்றவனின் கஷ்டத்தில் வயிறு வளர்க்கும் இதுகள் தின்னுற ஓசி சாப்பாடு எப்படித்தான் இதுகளுக்கு செமிக்குதோ.

  • கருத்துக்கள உறவுகள்

திருந்தாத ஜென்மங்கள் என்பது மக்களின் துயரில் சுயவிளம்பரம் தேடும் நீலிக்கண்ணீரிகள் தான். 

இப்படி.. நிறைய.. நீலிக்கண்ணீர்களை மக்களும் நாங்களும் கண்டிட்டம். இந்த மக்கள் இடம்பெயர்ந்து வந்த போது அரவணைத்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் நாங்கள் எல்லாம். அப்போது வெளிநாடுகளில் மக்கள் என்ன மண் என்ன என்ற எந்தச் சிந்தனையும் இன்றி தாங்களும் தங்கள் குடும்பமும் என்று சுகபோகங்களோடு மக்கள் சிந்தனை என்ற ஒன்றின்றியே வாழ்ந்து கிடந்தவர்கள்.. இப்போ அந்த மக்களுக்கு என்று சொல்லி எதிரி விரிக்கும் சதிக்குள் அவர்களைச் சிக்க வைத்து அதில் தாங்கள் மனிதாபிமானிகள் என்ற விளம்பரத்தை ஒட்ட நினைக்கிறார்கள்.. இந்த மக்கள் ஏதிலியாக ஓடிவந்த போது அரவணைக்க வக்கற்று இருந்தவர்கள்... தான் இவர்கள். 

26 வருச ஏதிலி வாழ்க்கையின் பின்னும் கூட அந்த மக்களுக்கு சுதந்திரமான.. நிம்மதியான.. தாம் விரும்பும் வாழ்வுக்கு வழியில்லை. சிங்களவன் காட்டும் இடத்தில் கட்டுண்டு கிடக்கனுன்னு விதி சமைக்கிறார்கள்.. அதே 26 ஆண்டுகளை வெளிநாடுகளில் சுகபோகத்தில் கழித்தவர்கள்.

இவர்களின் நீலிக்கண்ணீரை விட அந்த மக்களின் உண்மைக்குரலுக்கு தான் கூடிய மதிப்பளிக்க வேண்டும்.

அந்த மக்கள் கோரி நிற்பது... சொந்த நிலத்தில்.. சுய வருவாயுடன் கூடிய.. ஒரு சுதந்திரமான நிம்மதியான.. வாழ்க்கை. அரச காணியில் சிங்கள இராணுவக் குடியிருப்பில் வீடு அல்ல. மக்களிடம் அவர்களுக்குரிய காணியை வழங்கி நீதியான நேர்மையான.. அந்த மக்களின் தெரிவாகவுள்ள.. மாகாண அரச மற்றும் சிவில் அமைப்புக்களிடம் காசை வழங்கினால்.. மக்கள் விரும்பும் வாழ்க்கையை அவர்கள் அமைத்துக் கொடுப்பார்கள். 

இவர்கள் நீலிக்கண்ணீர் வடிக்கத் தேவையில்லை. இன்னும் அந்த மண்ணின் மைந்தர்கள் வெளிநாட்டுக்கு ஓடாமல் அங்கு வாழ்ந்தும் வருகின்றனர். அவர்கள்.. இவர்களை விட எல்லாம் அறிந்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய முனைவதே சிறந்தது. மக்களின் உண்மையான மனநிலை அவர்களுக்கே புரியும்.. அதிகம். tw_blush:

Edited by nedukkalapoovan

11 hours ago, ஜீவன் சிவா said:

குருநாதசுவாமி கோயில் இருந்த இடம் எங்க எண்டு அதை விட்டாப்பிறகு வாங்கோ சேர்ந்து தேடுவம். அங்கு அத்திவாரமே இல்லை.

அவங்க விட்டாலும் இஞ்ச சிலரின் அலப்பறை தாங்கமுடியல்ல. ஒருத்தருக்கும் சொல்லாம வாங்கோ எங்க கோவில் இருந்ததென்று இரண்டு பேருமா  சேர்ந்து தேடுவம். என்ன ஒரு கல்லு கூடவா கிடைக்காது?

ஒவ்வொரு தடவையும் விடுவிக்கப்படுவதாக கேள்விப்பட்டு தொடர்ந்து ஏமாற்றம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆளை ஆள் திட்டாமலுக்கு

யாரு குத்தினாலும் அரிசி ஆனால் சரி என்ற நிலையில் தான் நான்  இப்போது உள்ள மக்களும் அதே நிலையில் 

 

ஒரு பொருளாதார நிலையத்திற்கே வேட்டி அவுண்டு கிடந்தது இப்படி இருக்கிறது நிலமை 

வார்த்தைகளை வாரி இறைக்காதீர்கள் அதன் வடு மாறாது இங்கே மக்களின் நலனுக்காக நாம் எல்லோரும் பாடுபட்டோம் அன்றிலிருந்து இன்று வரை என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். 

16 hours ago, போல் said:

உண்மையில் இந்த தமிழ் மக்களுக்கு குறைந்தது 1/2 ஏக்கர் காணியும், ரூபா 25 இலட்சத்தையும் வட மாகாணசபை ஊடாக கொடுத்து, அவர்களே தமது வீடுகளை அமைக்க செய்வதே நேர்மையான நல்லிணக்க முயற்சியாக இருக்க முடியும்.  

வன்னியில் இப்பவும் அரைகுறையா கட்டப்பட்ட வீடுகளை பார்த்த பின்னருமா இந்த கேள்வி?

11 hours ago, ஜீவன் சிவா said:

வன்னியில் இப்பவும் அரைகுறையா கட்டப்பட்ட வீடுகளை பார்த்த பின்னருமா இந்த கேள்வி?

இப்ப என்ன நடந்து போச்சு?  இந்தக் கேள்வியின் அர்த்தம், நோக்கம் என்ன?

நான் ஒரு கேள்வியும் இல்லையே. அப்படி என்ன மயக்கம்?

14 minutes ago, போல் said:

இப்ப என்ன நடந்து போச்சு?  இந்தக் கேள்வியின் அர்த்தம், நோக்கம் என்ன?

நான் ஒரு கேள்வியும் இல்லையே. அப்படி என்ன மயக்கம்?

வன்னியில் ஆரம்ப கட்டத்தில் மக்களுக்கு படிப்படியாக பணத்தை அவர்களிடமே கொடுத்து வீடு கட்ட சொன்னார்கள். அதாவது ஒரு கட்டத்தை நிறைவு செய்த பின்னரே அடுத்த கட்டத்துக்கான பணம் வழங்கப்படும் என்பது ஒப்பந்தம். இவர்கள் பணத்தை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி விட்டு அடுத்த கட்ட நிர்மாணத்தை பூர்த்தி செய்யாமல், அதனால் மிகுதி பணத்தையும் பெற முடியாமல் அரை குறை வீடுகளுடன் வசிக்கிறார்கள். எனவேதான் இவர்களிடம் பணம் கொடுத்து வீடு கட்டக் சொல்வது சாத்தியமில்லை. யாராவதுதான் வீட்டை முழுமையாக கட்டி இவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை குறிக்கவே இதை எழுதினேன்.

2 hours ago, ஜீவன் சிவா said:

வன்னியில் ஆரம்ப கட்டத்தில் மக்களுக்கு படிப்படியாக பணத்தை அவர்களிடமே கொடுத்து வீடு கட்ட சொன்னார்கள். அதாவது ஒரு கட்டத்தை நிறைவு செய்த பின்னரே அடுத்த கட்டத்துக்கான பணம் வழங்கப்படும் என்பது ஒப்பந்தம். இவர்கள் பணத்தை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி விட்டு அடுத்த கட்ட நிர்மாணத்தை பூர்த்தி செய்யாமல், அதனால் மிகுதி பணத்தையும் பெற முடியாமல் அரை குறை வீடுகளுடன் வசிக்கிறார்கள். எனவேதான் இவர்களிடம் பணம் கொடுத்து வீடு கட்டக் சொல்வது சாத்தியமில்லை. யாராவதுதான் வீட்டை முழுமையாக கட்டி இவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை குறிக்கவே இதை எழுதினேன்.

நன்றி ஜீவன் உங்கள் பொறுப்பான பதிலுக்கு!

ஒருசிலர், 2% முதல் 4% மக்கள் மட்டுமே, நீங்கள் சொன்னது போல் கொடுத்த உதவியில் சிறுபகுதியை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி உள்ளனர். இதில் பெரும்பாலான மக்கள் (இனவழிப்பு போரால் சகலதையும் இழந்த மக்கள்) வயிற்றுப் பசியை, பிள்ளைகளின் கல்வியை தொடர பயன்படுத்தினார்களே தவிர வேறு காரணம் ஒன்றும் இல்லை.

ஆனால் உண்மை என்னவென்றால் அவர்களுக்கு 2010 இல் 550 - 600 சதுர அடி வீடு, கழிவறை, கிணறு அமைக்க வீட்டுத் திட்டத்தில் பிச்சைக்கார இந்தியவால் கொடுக்கப்பட்ட 3.75 இலட்சம் ரூபாவானது போதவே போதாது என்பது தான். இந்த தொகை பின்னர் சிறிது அதிகரிக்கப்பட்டது. இப்போது பெரும்பாலும் 5.5 இலிருந்து 6.5 இலட்சம் வரை கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் 70 - 80% ஆன வேலைகளையே முடித்தனர் இது சாத்தியமாக அந்த மக்களின் கடுமையான சரீர உழைப்பும் காரணம் என்பதையும் மறக்க வேண்டாம். (பெரும்பாலும் வெளிப் பூச்சு  பூசல் வர்ணம் அடித்தல், போன்ற வேலைகள் முடியவில்லை).
 
2004 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய வீட்டு திட்டத்தின் ஆக்க குறைந்த மதிப்பளவு 5.5 இலட்சம். அப்போதே 2006இல் சுனாமி வீட்டு திட்டத்தின் தொகை குறைந்தது 7.5 இலட்சமாக உயர்ந்துவிட்டது.

இது இப்படியிருக்க தனது நாசகார உதவியால் அழிக்கப்பட்ட தமிழ் மக்களின் வீடுகளுக்கு பிச்சைக்கார இந்தியா 2010ல் வெறும் 4 இலட்சம்  அளவில் மட்டுமே கொடுக்க முன் வந்தது, பாதிக்கப்பட்ட மக்களை மேலும் சிரமப் படுத்தவும், கடனாளிகள் ஆக்கவுமே என்ற உண்மையை நாம் உணர்ந்து பாதிக்கப்பட்ட நம் மக்கள் மேல் குறை சொல்வதை தவிர்க்கலாமே.

தமது சொத்துக்களை இழந்த மக்கள் தாங்களே தமது வீடுகளை அமைப்பதென்றால் வெறும் 6.5 இலட்சம் வரை மட்டும் வழங்கும் போது, அதே வீட்டை சொத்துக்களை நாசாமாக்கிய கும்பல் மீளக்கட்டிக் கொடுப்பதென்றால் 25 இலட்சம் செலவாகும் என்று சொல்வது பெரும் பகற்கொள்ளை என்று சிலருக்கு விளங்காதது விபரீதமாக இல்லையா?

தமிழர் வீடுகளை ஆக்கிரமித்து அழித்த பயங்கரவாதக் கும்பல் ஒரு வீட்டில் 15 - 16 இலட்சம் வரை கொள்ளையடிக்கும் போது கைதட்டி பாராட்டவும் முடியுமா?

அதனால் தான் அந்த 25 இலட்சத்தையும் மக்கள் கைகளிலேயே கொடுத்தால் (அது அந்த மக்களுக்கு உரிய பணம்) அவர்கள் நிச்சயம் மேலும் பலமடங்கு சிறப்பான வீடுகளை காட்டுவார்கள்.

2010 இன் பின்னரும் வன்னியின் பெரும்பாலான உட் பகுதிகளுக்கு போய் வருபவன், அங்கு பல ஆயிரம் மக்களை சந்தித்தவன் என்ற அடிப்படையில் இவற்றை சொல்கிறேன்.

சிவில் நடவடிக்கைகளில் முப்படையும் தலையிடக்கூடாது

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆமின்னா சிலருக்கு அலேர்ஜி.. அவங்கள் நல்லவங்கள்.. நாங்கள் கொழும்பில பெட்டைக்குப் பின்னால திரிய அவங்கள்.. சும்மா தான் சென்ரிக்கு நின்றவங்கள்.. இப்ப.. காங்கேசந்துறையில வீடு கட்டிக் கொடுக்கல்ல.. சனத்துக்கு.. இதை ரவிகரன் செய்யுறாரோ.. அரைகுறையாக் கிடக்கு அவர் கட்டின வீடு... உவர் என்ன சொல்லுறது.. சிங்கள இராணுவம்.. இருக்கத்தான் வேணும்.. அப்ப தான்.. யார் குத்தினாலும்... குண்டைப் போட்டாலும்.. எவன் செத்தாலும்.. காங்கேசந்துறையாருக்கு வீடு கிடைக்கும்.

இப்படியான சிந்தனை உள்ள தமிழர்களிடம் போய்..  சிங்கள முப்படையும் சிவில் நடவடிக்கைக்களில் ஈடுபடக் கூடாது என்பது எந்தளவுக்கு எடுபடும். தமிழரிடமே எடுபடாத போது.. தனது ஆக்கிரமிப்பு இராணுவத்தை வைச்சு.. மொத்த இலங்கையையும் சிங்கள பெளத்த நாடாக்கிவிட துடிக்கும் சிங்களவனிடம் அது எப்படி எடுபடும்...??! tw_blush::rolleyes:

இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன எல்லைக்குள் நுழைந்தால்.. அடித்துவிரட்ட நிற்கும் பலஸ்தீனனுக்கும்.. (இஸ்ரேலின் பலம் என்ன பலஸ்தீனர்களின் பலம் என்ன..??! இருந்தும்..) எம்மவருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். இதனை உலகமும் அவதானிச்சுக் கொண்டு தான் இருக்குது. எம்மவர்களே.. எம் நிலையை உலக அளவில் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.. அடிமைத்தனம் சுகிப்புக்கு சுகமானது என்ற போலிச் சிந்தனையோடு உலாவரும் சிலரினால் இது வெகுவாக முன்னெடுக்கப்படுகிறது.. குறிப்பாக போர் ஓய்ந்த பின்.. கண்ட குள்ள நரிகளும் மக்கள் மத்தியில் வெள்ளாடுகளாக உலாவரக் கூடிய சூழல் தோன்றி உள்ளதால். tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இன அழிப்புச் செய்த அதே சிங்கள இராணுவம்.. காங்கேசந்துறையில் உல்லாச விடுதி கட்டிய அதே சிங்கள இராணுவம்.. இப்போ காங்கேசந்துறையில் சிலருக்கு குடிசை போட்டுக் கொடுக்குதாம். இதன் மூலம்... அது தமிழர்களை பாதுகாக்கும் படையாகுதாம்... 

===========

Colombo demonstrates military diktats over resettlement in Jaffna after Geneva ‘update’

[TamilNet, Tuesday, 12 July 2016, 13:10 GMT]
The commander of the occupying military of genocidal Sri Lanka in Jaffna has re-iterated the military diktat on Monday by going on record that there was no reduction in the camps or number of military troops in Jaffna. Claiming that there would be no such consideration of reducing the troops in 10 years in the future, Major General Mahesh Senanayake was also demonstrating that any resettlement of uprooted Eezham Tamils in the former ‘High Security Zone’ in Valikaamam North could only take place at the mercy of the Sinhala military. A few uprooted Tamil women and the Additional Government Agent of Jaffna were asked to be present in the ‘inauguration’ ceremony of the military-conceived, SL government-funded housing scheme for 100 families at a limestone quarry land near Maavidda-puram. The quarry lands belong to KKS Cement factory. 

The ‘housing-scheme’ to be constructed by the SL military is an attempt to permanently enslave the uprooted Tamils as a slave population in pre-determined pockets in the outskirts of the largest military base in North, said the representatives of uprooted Eezham Tamils in Valikaamam North. 

Around 3,400 uprooted Tamil families below the poverty line are languishing in 34 ‘welfare’ camps. The SL military has been continuously trying to deceive the people to opt for slave settlements at useless lands while robbing their fertile lands. 

The latest deception by the SL military is to locate 2nd generation landless people from the camps of uprooted Tamils and lure them into accepting military-conceived ‘housing’ with 20 perches of lands per family. 

Colombo government and its external partners who want to muffle protest coming from Eezham Tamils are actively promoting the ‘Sinhala-only’ determined military ‘reconciliation’ for war-affected Tamils. This is not different from the so-called military rehabilitation and enslavement of former LTTE members into the so-called ‘Civil Security Division’ personnel, who are forced to work at military-run farms in Vanni, commented an uprooted Eezham Tamil residing at Chunnaakam ‘welfare’ centre. 

In the meantime, the US Establishment wants the Sinhala military to be deployed in military missions outside the island, informed sources in Colombo said. 

The recognition given to SL military by Washington and New Delhi is interpreted by Eezham Tamils as continued abetment to protracted genocide against them, as the irreversible colonisation of the occupied homeland of Eezham Tamils and the structural genocide is spearheaded by genocidal Sri Lanka through militarization of North and East. 

Eezham Tamils view the occupying SL military not only as a genocidal military, but also as a 'Lascarine' force, which is re-enacting the services of the Sinhalese to European colonialism of the past, to today's imperialists. Lascarine was a popular term in Sinhala to mean the local Sinhala soldiers who served the Portuguese and the Dutch.

SL commander at Maaviddapuram

Maaviddapuram  housing scheme by SL military

Sinhala soldiers posing for media at Maaviddapuram 7

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=38323

இதுக்கு தானே ஆசைப்பட்டாய் ராசகுமாரா.........

 

 

Edited by nedukkalapoovan

4 hours ago, nedukkalapoovan said:

Around 3,400 uprooted Tamil families below the poverty line are languishing in 34 ‘welfare’ camps.

 

4 hours ago, nedukkalapoovan said:

The latest deception by the SL military is to locate 2nd generation landless people from the camps of uprooted Tamils and lure them into accepting military-conceived ‘housing’ with 20 perches of lands per family. 

உந்த தமிழ் நெட்டையும், விக்கிப்பீடியாவையும் விட்டுட்டு வெளியில வந்தா உலகம் ரொம்ப பெரிசு கண்ணா. இல்லை உந்த நிலமற்ற அன்றாடம் உழைத்து வாழும் மக்களுக்கு எதுவுமே கிடைக்க கூடாது என்றால் நீங்கள் உதுக்குள்ளயே சுத்துங்கோ. உங்களுக்கு புரியணும் என்பதற்காக இந்த மக்களின் இன்றைய வாழ்க்கை நிலையை படம் பிடித்து போட நான் தயாரில்லை. எனக்கு அவலங்களை படம் பிடிப்பதில் உடன்பாடில்லை. 

இங்கு எப்பவோ வாசித்தது + பிடித்தது  - தாகத்தில் இருப்பவனுக்கு தண்ணி கொடுக்கணுமே தவிர குளத்துக்கு வழக்கு நடத்த முடியாது. நீங்க வழக்க நடத்துங்கோ. இங்குள்ள மனிதர்கள் அவனுக்கு தண்ணி கொடுப்பார்கள்.

ஆமா ஒருமாதிரி கத்தி குளறி உந்த 65000 வீட்டை நிப்பாட்டியாச்சு. இப்ப அந்த மக்களின் கதி! அதுக்கு என்ன மாற்று? யாராவது கேட்டீங்களா? எப்படியாவது இதையும் நிப்பாட்டி விடுங்கோ. அப்பதான் நீங்களும் உண்டியல் குலுக்கலாம். சகல வசதிகளுடனும் வெளிநாட்டில் இருந்து கணணியில தேசிய விண்ணாணம் கூவலாம்.

மக்களாவது மண்ணாங் கட்டியாவது எக்கேடு கேட்டு போனால் என்ன.

பி கு: அண்ணை எப்படியாவது இதையும் நிப்பாட்டிடுங்கோ. அல்லது உங்கட பிழைப்பில் மண் என்ன மலையே விழுந்துடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.