Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கீரிமலை தீர்த்தக்கடலில் கற்பாறைகள் அகற்றல்

Featured Replies

கீரிமலை தீர்த்தக்கடலில் கற்பாறைகள் அகற்றல்
 
 
கீரிமலை தீர்த்தக்கடலில் கற்பாறைகள் அகற்றல்
யாழ். கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் தீர்த்தக் கடலில் உள்ள கற்பாறைகள்  பக்தர்கள் நீராடுவதற்காக சுமார் 5.6 மில்லியன் ரூபா செலவில்   அகற்றப்படவுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் என்.வேதநாயகன் கூறியுள்ளார்.
 
இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
 
தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவிலுள்ள கீரிமலை தீர்த்தக்கடலானது இந்து மக்கள் ஆடி அமாவாசை
தினத்தில் பிதிர்க்கடன் செலுத்துவதில் முக்கியம் வாய்ந்த இடமாகும்.
 
இவ்வாறு விசேட தினங்களில் தீர்த்தக்கடலில் நீராடுபவர்கள் அங்கு காணப்படும் கடற்பாறைகளினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர். இதன் முக்கியத்துவத்திற்காக இந்து அமைப்புக்களால் மேற்படி விடயம் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
 
இதனை சீர்செய்வதற்கென மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சிடமிருந்து 5.6 மில்லியன் ரூபாய் இவ்வருடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டமானது கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களத்தின் அனுமதி கிடைத்தவுடன் ஆரம்பிக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://onlineuthayan.com/news/15897

  • கருத்துக்கள உறவுகள்

சில சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தலங்களில், கீரிமலையும் ஒன்று.
அப்படியான இடங்களில்... பக்தர்களுக்கு இடைஞ்சல்  என்று, அந்தக் கடலின் இயற்கையை மாற்றி அமைப்பது  தவறு.
அதே... கடலில்,  ஈழத்தில் வாழும்  தமிழர்கள்  எல்லாரும் பரம்பரை பரம்பரையாக....  
ஆயிரக் கணக்கான வருடங்களாக தீர்த்தமாடி வந்த இடம்.
அதில் இப்போது எந்த பக்தருக்கு இடர் வந்தது? 

நிச்சயமாக.... இப்படியான இடர், சிங்கள பக்தருக்கு தான்... ஏற்பட்டிருக்கும்.
அதனால்.... பாறையை அகற்றப் புறப் பட்டு விட்டார்கள்  எமது தமிழ் அரச சேவகர்கள்.

பக்தர்களுக்கு இடைஞ்சலாக  கற்பாறைகள்.... சிகிரியா, சிவனொளி பாத மலை போன்ற இடங்களிலும் உள்ளது.
அதனை... அகற்ற, எவராவது   முன் வரட்டும், அதன் பின்... கீரி மலையின் கற்பாறையை அகற்றுவது பற்றி.... யோசிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் இங்கை இருந்து நாம யோசித்து என்ன செய்கிறது.மக்கள் பிரதி நிதிகளை தோ்வு செய்யும் தகுதியாவது இருக்கா.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

சிறியர் இங்கை இருந்து நாம யோசித்து என்ன செய்கிறது.மக்கள் பிரதி நிதிகளை தோ்வு செய்யும் தகுதியாவது இருக்கா.:rolleyes:

Bildergebnis für newspaper sampanthan  reading.     Bild in Originalgröße anzeigenBild in Originalgröße anzeigen  Bild in Originalgröße anzeigen   Bild in Originalgröße anzeigen   Bild in Originalgröße anzeigen

சுவைப் பிரியன்...... எமக்கு, மக்கள் பிரதிநிதிகளை  (சம், சும், மாவை..... கோஸ்டி) தெரிவு செய்யும் அதிகாரம் இல்லை என்றாலும்,  எமது ஆதங்கத்தை, கவலையை... இங்கு  பதிவு  செய்யா  விட்டால், காலம்..... எம்மை மன்னிக்காது.  என்பதால் தான், என்  பதிந்தேன்.
இதனை எதிர்த்து....  முதல்வர் விக்னேஸ்வரனை தவிர, எந்த ஒரு ******** குரல் கொடுக்கவில்லை 
இதுதான்... மக்கள் பிரதிநிதிகளின் லட்சணம். வெட்கம் கெட்டவர்கள்.... 

பாரிய அலைகள் அற்ற கடலில் உள்ள பாறைகளை எடுத்து சற்று கடலின் உள்ளே (100 m) தொலைவில் போடுவதில் தவறில்லை. பலரது காலில் பாறை கிழித்து காயங்கள் வரமால் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, போல் said:

பாரிய அலைகள் அற்ற கடலில் உள்ள பாறைகளை எடுத்து சற்று கடலின் உள்ளே (100 m) தொலைவில் போடுவதில் தவறில்லை. பலரது காலில் பாறை கிழித்து காயங்கள் வரமால் இருக்கும்.

போல்.....
என்னுடைய, உங்களுடைய... முப்பாட்டனின் காலில், அந்தப் பாறை கீறும் போது, வந்த வலியை.....  
எம் பிள்ளைகளும் உணர வேண்டும். அது...பெரிய  வலி அல்ல.
அத்துடன்.... "கீரிமலை"  ஈழத்து தமிழர்களின்   உணர்வு சம்பந்தப் பட்டது.
அதில்....... கை, வைத்தவனை,  அங்கு, அஸ்தி கரைக்கப்பட்டு இருக்கும், இறந்த  எம் முன்னோர்களுக்கு செய்யும் பாவம், சும்மா.. விடாது.

அத்துடன்.... கீரிமலையை  "ஸ்விம்மிங்   பூல்"  என்ற நினைப்பை கைவிடுங்கள். 
அதுக்கு...  வேறை, இடத்தை பாருங்கள். 

Edited by தமிழ் சிறி

3 hours ago, தமிழ் சிறி said:

போல்.....
என்னுடைய, உங்களுடைய... முப்பாட்டனின் காலில், அந்தப் பாறை கீறும் போது, வந்த வலியை.....  
எம் பிள்ளைகளும் உணர வேண்டும். அது...பெரிய  வலி அல்ல.
அத்துடன்.... "கீரிமலை"  ஈழத்து தமிழர்களின்   உணர்வு சம்பந்தப் பட்டது.
அதில்....... கை, வைத்தவனை,  அங்கு, அஸ்தி கரைக்கப்பட்டு இருக்கும், இறந்த  எம் முன்னோர்களுக்கு செய்யும் பாவம், சும்மா.. விடாது.

அத்துடன்.... கீரிமலையை  "ஸ்விம்மிங்   பூல்"  என்ற நினைப்பை கைவிடுங்கள். 
அதுக்கு...  வேறை, இடத்தை பாருங்கள். 

தமிழ்சிறி! உங்கள் முப்பாட்டனைப் போலவே நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ஈழத்தமிழ் மண்ணில் வாழ்ந்து கொண்டு இதை எழுதியிருந்தால் உங்கள் கருத்துக்கு கொஞ்சமாவது மதிப்பு இருந்திருக்கும்.
அதை விட்டுட்டு வீம்புக்கு பதில் கருத்து எழுதுவதை தவிர்த்தால் நல்லது.

உங்கள் விருப்பத்துக்கு "ஸ்விமிங் பூல்" போன்ற கற்பனைகளை திணித்து உங்கள் வெட்டி அரட்டைக்கு வேறு இடத்தைப் பாருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.