Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

342 கோடி ரூபாயுடன் சென்னை வந்த ரயிலில் ரிசர்வ் வங்கிப் பணம் கொள்ளை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
342 கோடி ரூபாயுடன் சென்னை வந்த ரயிலில் ரிசர்வ் வங்கிப் பணம் கொள்ளை
 

சேலத்திலிருந்து 342 கோடி ரூபாய் கிழிந்த ரூபாய் நோட்டுகளை ஏற்றிக் கொண்டு சென்னை வந்த ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க 3 ஆய்வாளர் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வங்கிகளில் இருந்து பெறப்பட்ட 342 கோடி ரூபாய் கிழிந்த ரூபாய் நோட்டுகள் சேலம் பேர்லேண்ட்ஸ் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டது. 

இந்த பணத்துடன் சேலத்திலிருந்து  விரைவு ரயில் புறப்பட்டது. ரயில் கண்டெய்னரில் 226 மரப்பெட்டிகளில் அந்தப் பணம் கொண்டுவரப்பட்டது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்த ரயில், சேத்துபட்டு பகுதியில் உள்ள ரயில்வே பணிமனைக்குச் சென்றது. 

பின்னர் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு எழும்பூர் ரயில் நிலையம் வந்த ரயிலில் இருந்து பணத்தை கொண்டுசெல்வதற்காக ரிசர்வ வங்கி அதிகாரிகள் வந்தனர். அப்போது, கண்டெய்னரின் ஒரு பகுதி உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

box.png

கண்டெய்னர் உள்ளே சென்று ஆய்வு செய்த போது 2 மரப்பெட்டிகள் மட்டும் உடைக்கப்பட்டு 3 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் கொள்ளை சம்பவம் குறித்து ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர். 

விருதாச்சலத்தில் ரயில் 1 மணி நேரம் நின்றதாக தகவல் தெரிவிக்கப்படும் நிலையில் கொள்ளை சம்பவம் எப்போது நிகழ்ந்தது என தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.

 

http://ns7.tv/ta/342-crore-chennai-central-bank-money-train-robbery.html

ரயிலின் மேற்கூரையை உடைத்து வங்கிப் பணம் கொள்ளை..! - அதிர்ச்சி க்ளைமாக்ஸ்

trainthieflong1.jpg


சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகே இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தெரியவந்த நிலையில், இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சேலத்திற்கும், சேலத்தில் இருந்து சென்னைக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னையில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு காலை 6.35 மணிக்கு சென்றடைகிறது. பின்னர் சேலத்தில் இருந்த இரவு 9 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு, அதிகாலை 4.45 மணிக்கு வந்தடைகிறது.

இந்த நிலையில், சேலத்தில் இருந்து நேற்றிரவு 9.45 மணிக்கு இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டுள்ளது. இந்த ரயிலின் பார்சல் பெட்டியில்,  228 பெட்டிகளில் ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.342 கோடி என்று கூறப்படுகிறது. இந்த ரயில் அயோத்தியாபட்டினம், வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம்  வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை அதிகாலை 4 மணிக்கு வந்தடைந்தது. பயணிகள் இறங்கிச் சென்ற பிறகு, துப்புரவு பணியாளர்கள் ரயிலில் ஏறி, ஒவ்வொரு பெட்டிகளையும் சுத்தம் செய்துள்ளனர். ஆனால், பார்சல் பெட்டியை மட்டும் அவர்கள் சுத்தம் செய்யவில்லை என்று தெரிகிறது.

இதனிடையே, நண்பகல் 12 மணி அளவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ரயில் பெட்டியில் இருந்த பணத்தை ஆய்வு செய்ய சென்றுள்ளனர். அப்போது, ரயிலின் மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரயில்வே காவல்துறையினருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். தடயவியல் நிபுணர்களுடன் விரைந்து வந்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர். ரயிலில் 23 டன் ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே ஐ.ஜி ராமசுப்பிரமணியன் நேரில் விசாரணை நடத்தினார்.

 

trainthieflong.jpg

கொள்ளை நடந்தது எங்கே ?

சேலம் பகுதிகளில் உள்ள வங்கிகளில் 5 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பணம் சேகரிக்கப்பட்டுள்ளது. சேலம் டிஐஜி நாகராஜ் தலைமையில் துப்பாக்கி ஏந்திய 10 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்திருக்கிறார்கள். பார்சல் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் இவர்கள் பயணித்துள்ளனர். கொள்ளையர்கள் ரயிலின் மேற்கூரையை வெல்டிங் மிஷின் மூலம் ஒரு ஆள் செல்லும் அளவுக்கு துளை போட்டுள்ளனர். இந்த சத்தம் அடுத்த பெட்டியில் இருந்து காவல்துறையினருக்கு தெரியவில்லை. சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை ரயில் டீசல் என்ஜின் மூலமே இயக்கப்பட்டுள்ளது. விருத்தாசலத்தில் ரயிலை நிறுத்தி இன்ஜின் மாற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து ரயில் இங்கிருந்து புறப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட இடங்களில்தான் கொள்ளை நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை, சேலம், விருத்தாசலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே பாதுகாப்புப்படை பாதுகாப்பு ஆணையர் அஸ்ரா தெரிவித்துள்ளார்.

அதே சமயம் இதில் கொள்ளையர்கள் எதிர்பார்க்காத அதிர்ச்சி க்ளைமாக்ஸ் ஒன்று உள்ளது. அது, 'கொள்ளையடிக்கப்பட்ட அந்தப் பணம் அனைத்தும் செல்லாதவை’ என்பதுதான்.

இருப்பினும் ரயிலின் மேற்கூரையை உடைத்து வங்கிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/66989-dacoits-loot-rbi-money-salem-chennai-express.art

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

பணத்தை களவு கொடுத்திட்டு கள்ள நோட்டு என கதை விடினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, நவீனன் said:

ரயிலின் மேற்கூரையை உடைத்து வங்கிப் பணம் கொள்ளை..! - அதிர்ச்சி க்ளைமாக்ஸ்

அது சரி மியூசிக் யார்? tw_blush:

ஓடும் ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல்கள்!

t2.jpg

சென்னை: சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த கொள்ளைச் சம்பவம் நடந்தவுடன், இந்த வழக்கை மத்திய ரயில்வே படை பிரிவு விசாரிக்க ஆரம்பித்தது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கு திடீரென தமிழக ரயில்வே போலீஸுக்கு மாற்றப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில இது குறித்து விசாரித்தபோது, ''இந்த வழக்கு இன்று இரவு தமிழக சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாகத்தான் தமிழக ரயில்வே போலீஸுக்கு முதலில் மாற்றி அங்கிருந்து, சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட இருக்கிறது. இது வழக்கமாக நடக்கிற ஒன்றுதான்" என்றனர்.

t1.jpg

இந்த கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, நேற்று இரவு 9 மணியளவில், தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யான அசோக்குமார், யாருக்கும் தகவல் சொல்லாமல் நேரிடையாக  எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்று, பணம் கொள்ளையடிக்கப்பட்ட  ரயிலின் பார்சல் கோச்சை பார்வையிட்டார். அவருடன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யான திரிபாதியும் வந்திருந்தார். இதே போல், சுவாதி கொலை நடந்த இடத்தையும் யார் கண்ணிலும் படாமல், இரவு நேரத்தில் அசோக்குமார் பார்வையிட்டுச் சென்றார். 'இருட்டில், டார்ச் லைட் வெளிச்சத்தில் டி.ஜி.பி. ஏன் ரகசியமாக வரவேண்டும்? பகல் வேளையிலே வரலாமே...' என்று அதிகாரிகள் முணு முணுக்கிறார்கள்.

சேலத்திலிருந்து பணத்துடன் பயணிப்பதற்கு முன்பு, காலி கோச் ஈரோட்டில் ஒரு நாள் முழுக்க நின்றிருந்ததாம். அங்கிருந்து கோவை சென்றதாம். பிறகுதான், சேலம் வந்து சேர்ந்ததாம். இந்த ரூட்டில் காலி கோச் ரவுண்ட் வருவதற்கு முன்பே, கோச்சின் கூரையை மர்ம நபர்கள் துளை போட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

t3.jpg

''துளையை போட்டுவிட்டு, அதை வெறுமனே மூடி வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட கோச்சில்தான் பணம் பயணிக்கிறது என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட சிலர்தான் இந்த வேலையை பார்த்திருக்கிறார்கள். ஏனென்றால், ஒடும் ரயிலின் கூரையில் துளையிட முடியாது. இதை தெரிந்து கொண்டு வெறுமனே மூடி வைத்ததை எங்கோ ஒரு இடத்தில் ரயில் நிற்கும்போது, அப்புறப்படுத்தி உள்ளே இறங்கி பணத்தை கொள்ளையடித்திருக்கிறார்கள். இந்த கோணத்திலும் விசாரிக்கிறோம்" என்கிறார்கள் போலீஸார்.

அவர்களிடம் நாம் இடைமறித்து, ''செல்லாத பணம்தானே..? இதை தெரியாமல்தானே கொள்ளையடித்திருக்கிறார்கள்?" என்றோம். அதற்கு, ''பணம் பயணிக்கிற கோச், பணம் எவ்வளவு.. என்கிற அனைத்து விவரங்களையும் சேகரித்த கொள்ளை கோஷ்டியினர், செல்லாத பணத்தை எடுக்க திட்டமிடுவார்களா..? பழைய நோட்டுகள்தான் என்பதை நன்கு தெரிந்து கொண்டுதான் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள். குற்றவாளிகள் பற்றி நிறைய க்ளூக்கள் கிடைத்துள்ளன. பொறுத்திருந்து பாருங்கள்" என்றார்கள் நம்மிடம்!

http://www.vikatan.com/news/tamilnadu/67032-chennai-train-robbery-case-case-goes-to-cbcid.art

ரூ.5.75 கோடி கொள்ளை விவகாரம்: ரயில் டிரைவர், உதவியாளரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை - மாதிரி ரயில் பெட்டியை உடைத்து ‘கொள்ளை’ சோதனை

பணம் கொள்ளையடிக்கப்பட்ட ரயில் பெட்டியின் மேற்கூரையில் ஆய்வு நடத்தும் ரயில்வே பாதுகாப்பு போலீஸார் | உள்படம்: கொள்ளையடிக்க வசதியாக ஆள் நுழையும் அளவுக்கு ரயில் பெட்டியின் மேற்கூரையில் வெட்டப்பட்ட பகுதி.
பணம் கொள்ளையடிக்கப்பட்ட ரயில் பெட்டியின் மேற்கூரையில் ஆய்வு நடத்தும் ரயில்வே பாதுகாப்பு போலீஸார் | உள்படம்: கொள்ளையடிக்க வசதியாக ஆள் நுழையும் அளவுக்கு ரயில் பெட்டியின் மேற்கூரையில் வெட்டப்பட்ட பகுதி.

ரிசர்வ் வங்கி பணம் கொள்ளை யடிக்கப்பட்ட விவகாரத்தில் ரயிலை ஓட்டி வந்த டிரைவர், அவரது உதவியாளரிடம் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

சேலத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி இரவு சென்னை வந்த ரயிலில், பெட்டியின் மேற்கூரையை உடைத்து ரூ.5.75 கோடி கொள்ளை யடிக்கப்பட்டது. இது தொடர் பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாகசேலத்தில் இருந்து விருத்தாசலம் வரையும், அங்கி ருந்து சென்னை எழும்பூர் வரையும் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.

ரயிலில் பணப் பெட்டிகளுக்கு பாதுகாப்புக்காக வந்த போலீஸார், வங்கி மற்றும் ரயில்வே ஊழியர் களிடமும் விசாரணை நடத்தப் பட்டது. ஆனால், இந்த வழக்கில் போலீஸாருக்கு எந்த உறுதியான தகவலும் கிடைக்க வில்லை.

இதைத் தொடர்ந்து ரயிலை ஓட்டி வந்த டிரைவர் கோபால கிருஷ்ணன், உதவியாளர் ரகுபதி ஆகியோர் நேற்று காலை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டி ருந்தனர். அவர்களிடம் காலை முதல் மதியம் வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கொள்ளை நடந்த நாளில் சந்தேகப்படும்படி யாரையாவது பார்த்தீர்களா, பெட்டியை உடைக் கும் சத்தம் கேட்டதா, எத்தனை மணிக்கு பணியை முடித்துவிட்டு புறப்பட்டீர்கள், பணம் கொள்ளை போனது பற்றி உங்களுக்கு எத்தனை மணிக்கு தகவல் தெரியும் என சரமாரியாக கேள்விகளை கேட்டுள்ளனர். அவர்கள் கூறிய பதில்கள் அனைத்தையும் டேப் மூலம் பதிவு செய்துகொண்டனர்.

மாதிரி பெட்டி உடைப்பு

அதைத் தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் மாதிரி ரயில் பெட்டி ஒன்றை தயார் செய்து அதை கொள்ளையர்கள்போல உளி, சுத்தியல் வைத்து சதுரமாக உடைத்து, பின்னர் பேட்டரி மூலம் இயங்கும் ஆக்ஸா பிளேடால் அறுத்தனர். இதற்கு 50 நிமிடம் ஆனது. எனவே, கொள்ளையர்கள் ஒரு மணி நேரம் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும் என தெரிகிறது.

அந்த ஒரு மணி நேரத்தை கொள்ளையர்கள் எப்போது, எங்கு பயன்படுத்தினர் என்பது குறித்து துப்பு துலக்கப்பட்டு வருகிறது. பணம் கொள்ளையடிக்கப்பட்ட மரப்பெட்டியின் உடைந்த பாகங்களை ரயில்வே பாது காப்பு படையினர் சிபிசிஐடி போலீ ஸாரிடம் ஒப்படைத்தனர். அதை வைத்தும் விசாரணை நடந்து வருகிறது. சேலத்தில் ஒரு தனிப் படையினர் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு ரயிலில் பணம் அனுப்பும் தனியார் நிறுவனத் தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் பற்றியும் விசாரிக்கப்படுகிறது.

போலீஸார் மீது நடவடிக்கை

கொள்ளை நடந்த ரயிலில் பணத்துக்கு பாதுகாப்பாக வந்த உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ் பெக்டர் கோபி, உதவி ஆய்வாளர் ஆனந்த், தலைமைக் காவலர்கள் கோவிந்தராஜன், சுப்ரமணியன், காவலர்கள் கணேஷ், பெருமாள், செந்தில், ரமேஷ் ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் பதில் திருப்தி இல்லை என்றால் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/ரூ575-கோடி-கொள்ளை-விவகாரம்-ரயில்-டிரைவர்-உதவியாளரிடம்-சிபிசிஐடி-போலீஸார்-விசாரணை-மாதிரி-ரயில்-பெட்டியை-உடைத்து-கொள்ளை-சோதனை/article8988280.ece?homepage=true&relartwiz=true

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் முதல் முறையாக

 
தமிழகத்தில் முதல் முறையாக ஓடும் ரயிலில் கொள்ளை நடந்துவிட்டதாம், ஊடகங்கள் பொங்குகின்றன, ஆனால் உலகில் என்ன நடந்திருக்கின்றது?

உலகின் மிக பிரபலமான கொள்ளை இன்றுவரை இங்கிலாந்தில் நடந்த ஓடும் ரயிலில் நடந்த தங்க கொள்ளை, 22 மே 1855ல் நடந்த பிரமாண்ட கொள்ளை அது

ஒரு கொள்ளை எப்படி அடிக்கபடவேண்டும் , எப்படி திட்டமிட வேண்டும் என்பதற்கு இன்றுவரை அகராதியாக திகழும் சம்பவம் அது.

அதாவது ரயிலின் ஒரு பெட்டியில் தங்கம் கொண்டு செல்லபடும், ரயில் புறப்பட 5 நிமிடம் முன்னால்தான் காவலோடு ஏற்படும், சீல் வைக்கபட்டு ரயில் கிளம்பும், இறங்குமிடமும் கடும் காவல் ரயில் நிற்காது, ஒரே வீக்னஸ் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டியில் இது இணைக்கபட்டிருக்கும்

அதன் லாக்கரில் 4 சாவிகள் வசதி உண்டு, பிரமாண்ட லாக்கர் அது, உருவாக்கவே 2 வருடம் ஆனது. உடைப்பதோ, தூக்குவதோ சாத்தியமே இல்லை

சாவிகள் இன்றி திறக்கமுடியாது, 4 சாவிகளும் ஒரே நேரத்தில் செலுத்தபடவேண்டும்.

ஒரு சேர 4 அதிகாரிகள் திறப்பார்கள், தங்கம் நிரப்பபட்டு சீல் வைக்கபடும், பின் சேருமிடத்தில் அதுபோல் 4 அதிகாரிகள் காவல் சூழ திறப்பார்கள்.   4 சாவிகளும் 4 இடங்களில் பாதுகாப்பாக இருக்கும். உச்சமாக ஒரு அதிகாரி கழுத்திலே சாவி தொங்கவிட்டிருப்பது யாருக்கும் தெரியாது, 4ம் சாவி இடம் மாறி மாறி பாதுகாக்கபடும்.

இதில் எப்படி கொள்ளை சாத்தியம்

ஒரு பெரும் கில்லாடி திட்டமிட்டான், ஒரு விலை மாது உட்பட 3 பேரை சேர்த்துகொண்டான், 4 சாவிகளையும் கடும் பாதுகாப்பிலும் தந்திரமாக நுழைந்து நகல் எடுத்தான். ஒரு முறை ஒத்திகையும் பார்த்தான், எல்லாம் டைமிங் ஒத்திகை,

எப்படி 4 சாவி நகல் எடுத்தான், எப்படி செய்தான் என்பதெல்லாம் மயிர் கூச்செறியும் விஷயங்கள், எழுதினால் தாங்காது. ஆனால் அட்டகாசமான வில்லன், நம்ம ஊர் திருடர்கள் எல்லாம் சும்மா.

கொஞ்சம் உளறிய ஒரு கூட்டாளியினை கொன்றும் போட்டான்

எப்படி ஒத்திகை பார்த்தான் என்றால், பிணபெட்டியில் பிணமாக ரயிலேறி படுத்துகொண்ட கில்லாடி அவன்.

ஒரு சுபநாளில் கொள்ளையிட திட்டமிட்டான், எல்லாம் சரி, அவனும் அவளும் ரயில் ஏறினர். நடு வழியில் ரயில்பெட்டி மேல் நடந்து சிறிய துளை வழியாக இறங்கி லாக்கரை திறந்து தங்கத்தை எடுத்துவிட்டு, மிக சரியாக கூட்டாளி நிற்க சொன்ன இடத்தில் எறிந்துவிட்டு சாதுர்யமாக வந்து அமர்ந்தும் கொண்டான், டைமிங்

லண்டனே அலறியது, பிரிட்டன் அவமானத்தில் சிவந்தது, ஸ்காட்லாந்து யார்டு களமிறங்கியது, என்ன பெரிய கில்லாடி என்றாலும் ஒரு விஷயத்தில் மாட்டுவான் அல்லவா? அவன் மறந்தது என்ன? அது புகை வண்டி. ரயில்பெட்டி மேல் இவன் திறமை காட்டியபொழுது உடலெல்லாம் கரி அப்பி கொண்டது, அது முகத்திலும் இருந்தது, சிலர் கவனித்ததை போலிசிடம் சொன்னார்கள்

அவ்வளவுதான் எல்லா பயணிகள் வந்தவர்கள், போனவர்கள் எல்லோரையும் சோதித்து குற்றவாளியியில் ஒருவனை பிடித்தார்கள், அவன் மூலவரை காடிவிட்டான். அவர் அடுத்த காப்பி கடையில் காபி குடித்தபொழுது பிடித்தார்கள்

அவன் லண்டனில் மகா பிரபலமானான், இப்படி ஒரு கில்லாடியா என அவனை கோர்ட்டில் ஆஜர் படுத்தியபொழுது பார்க்க அடுத்த நாடுகளில் இருந்தெல்லாம் மக்கள் விசா வாங்கி வந்தார்கள். லண்டன் கண்ட பெரும் கூட்டத்தில் அதுவும் ஒன்று

கோர்ட்டில் அவன் கொடுத்த வாக்குமூலத்தில் அரண்டு போய் இருந்தது நீதிமன்றம், இப்படியும் ஒருவன் திட்டமிட முடியுமா? இவ்வளவு நுட்பமா? என வியந்தார்கள்

நமது நாட்டில் இப்படி ஒரு அறிவாளியா என சிலர் காலரை தூக்கிகொண்டார்கள்.

அவன் பக்க்கத்து கல்லறை தோட்டத்தில் கல்லறையில் தங்கத்தை புதைத்து வைத்ததாக சொல்லிவிட்டு வெளிவந்தான், ஒரு பெண் வாயில் முத்தம் கொடுத்தாள், அவள் அதே விலைமாது

முத்தம் கொடுத்தவள் வாய்க்குள் ஒரு பின்னை செலுத்திவிட்டு சென்றதை யாரும் கவனிக்கவில்லை, அந்நாளைய குதிரை வண்டி காவலில் செல்லும்பொழுது அந்த பின்னை வைத்து கை விலங்கினை திறந்து
 தப்பினான் அவன்.

அதன் பின் அவனையும் காணவில்லை, அவளையும் காணவில்லை ,

பெரும்பான்மை தங்கத்தையும் காணவில்லை, உலகிலே கொள்ளையிட்டு அகபபட்டால் எப்படி மீதி தங்கத்தோடு தப்பி என்ன செய்யவேண்டும், என திட்டமிட்ட முதல் கொள்ளையன் அவனே, அவ்வளவு எச்சரிக்கை அவனுக்கு.


இன்று வரை உலகின் சுவாரஸ்யமான கொள்ளை அது, உலகறிவுள்ள திருடர்களுக்கெல்லாம் அவனே குரு, துர் ஆத்மா,  வழிகாட்டி எல்லாம், அப்படி ஒரு திறமையான திருடன் இனி பிறக்க வாய்ப்பில்லை என்கின்றார்கள், பெரும் கொள்ளையர்கள் அவன் ஆளுயர படத்தினை வைத்து ரகசியமாக வணங்குவர் என்பார்கள்

இப்பொழுது என்ன நடந்திருக்கின்றது, சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் அதே போல 340 கோடி ரூபாய் ஓடும் ரயிலில் கொள்ளையடிக்கபட்டிருக்கின்றது, தமிழ்நாடு அலறுகின்றது

இங்கிலாந்து கொள்ளையில் ஸ்காட்லாண்டு யார்டு தன்னை யார் என நிரூபித்தது, இதில் தமிழக போலிஸ் எப்படி தன்னை நிருபிக்கின்றது என பார்க்கலாம்

மகா சுவாரஸ்யமான கொள்ளை இது, குற்றவாளிகள் பிடிபடும்பொழுதுதான் உண்மை தெரியும், இப்பொழுதெல்லாம் குற்றவாளிக கழுத்தினை அறுத்துகொள்கின்றார்களாம், ஆனாலும் ஒரு விவர வட்டம் வெளிவரும்

நமது அவதானிப்பு எல்லாம் விரைவில் இதனை மையமாக வைத்து பல திரைப்படம் வரும், விடுவார்களா சினிமாக்காரர்கள்? சூர்யாவினை வைத்து ஒரு திருட்டுபடம் எடுத்தால் முடிந்துவிடும்.

இன்றைய 570கோடி கண்டெய்னர் விவகாரத்தை 21 ஆண்டுகளுக்கும் முன்பே சினிமா எடுத்த தமிழகம் இது, இந்த ரயிலை விடுமா? சும்மாவே ரயில் சென்டிமென்ட் ஜாஸ்தியான தமிழ் சினிமா இது. இனி வரிசையாக வரும்

நாம் இப்படி யோசித்தால் வெள்ளையன் எப்படி யொசிப்பான், அந்த ரயில் கொள்ளையினை வைத்து பல படம் வந்தாயிற்று  "The Great Train Roberry " அதில் ஒன்று,

இது போக ஏகபட்ட நாவல்களும் வந்தது, டைட்டானிக் மூழ்கும் வரை இதுதான் பெரும் விற்பனை பொருள்

காரணம் கொள்ளையன் மக்களை அதிசயிக்க வைத்தது அப்படி, மனதிற்குள் மக்கள் ரசித்தார்கள். ஒரு கட்டத்தில் அவன் தாடியும் உடையும் கூட பேஷனாகிபோனது

அதன் பின் எத்தனையோ ஓடும் ரயில் கொள்ளை மேற்குலகில் நடந்தாலும் இன்று வரை போலிசாரே வாசித்து மலைத்து நிற்பது இந்த முதல் பிரமாண்ட ரயில்கொள்ளையே, அந்த எட்வர்ட் போலிசாருக்கே பல்கலை கழகமாக ஆகி இருக்கின்றான்

எப்படியோ இந்தியா பின் தங்கிய நாடுதான், அவர்கள் 1855ல்  நிகழ்த்திய கொள்ளை சாதனையினை நாம் 161 வருடம் கழித்து நிறைவேற்றி இருக்கின்றோம், எவ்வளவு காலம் பின் தங்கிவிட்டோம்

சரி அந்த கொள்ளையினை கண்டுபிடித்து பெரும் புகழ் பெற்றது ஸ்காட்லாந்து யார்டு, காரணம் கொள்ளையன் எட்வர்ட் விதைதிருந்த மர்மம் அப்படி, ஒவ்வொன்றாக அவிழ்த்து அவனை நெருங்கினார்கள், அந்த கரி மட்டும் முகத்தில் இல்லை என்றால் நிச்சயம் ஸ்காட்லாண்ட் போலிஸ் முகத்தில் கரிதான்

நமது தமிழக போலிஸ் எப்படி என பார்க்கலாம், இங்கு என்ன நடக்கும் என நினைக்கின்றீர்கள்? வழக்கு ரயில்வே போலிசா அல்லது மாநில போலிசா, சிபிசிஐடியா, சிபிஐ யா? என ஒப்படைப்பதற்கும் 340 கோடி எங்கோ சென்றுவிடும்

அது என்னமோ வங்கிகளுக்கு சோதனையான காலம், மல்லையா மொத்தமாக கம்பி நீட்டிவிட்டார், 570 கோடி நடுதெருவில் கிடக்கின்றது, இதோ ரயிலில் வந்ததும் போனது இனி என்ன செய்ய?

எவனாவது விவசாயி கறவை மாடு கடனோ அல்லது பாவபட்டவன் வீட்டுலோனோ, அல்லது விதவை நகை கடனோ வாங்கி இருப்பாள்,  இல்லாவிட்டால் கல்வி கடனை அம்பானி போல இன்னொருவனிடம் ஒப்படைத்து வசூலிக்கலாம், எவன் செத்தால் என்ன? 4 பில்லை கூட்டிபோட்டால் முடிந்தது விஷயம்

எனினும் தமிழக கொள்ளையர்கள் அந்த எட்வர்ட்டை வணங்கிவிட்டு வந்தார்களா இல்லையா என தெரியாது, ஆனால் அவனை பின்பற்றி இருந்தால் இவர்களை நெருங்க கூட முடியாது

எமபாதகன் எனும் சொல்லுக்கு முற்றிலும் பொருந்தியவன் அந்த கொள்ளையர் நூலகம் எட்வர்ட் எனும் ஜெகஜால கில்லாடி.

http://vallioorpost.blogspot.ca/2016/08/blog-post_10.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.