Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொக்குளாய் விகாரை அமைப்பு தீர்மானம் எவரும் எடுக்கமுடியாது-அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு - கொக்குளாய் பிரதேசத்தில் அமைக்கப்படுகின்ற பௌத்த விகாரை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ அல்லது வேறு எவருக்கோ கிடையாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

கொக்குளாய் பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படுவது தொடர்பில் அப்பிரதேச மக்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் நிலையிலேயே அரசா ங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்க ளத்தில் இன்று பகல் நடபெற்றது.

 

இதன்போது கொக்குளாய் பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படுவது தொடர்பில் எழுந்துள்ள எதிர்ப்பு கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

 

இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன, சிங்கள கிராமம் எங்கு அமைய வேண்டும் என்பது தொடர்பில் கூட்டமைப்பினரால் தீர்மானிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

 

“யுத்தம் முடிவுற்ற பின்னர் அமைச்சரவையில் சிங்கள அமைச்சர்கள் இருந்த போதிலும் நான் ஒருவனே கொக்குளாய் பகுதிக்கு விஜயம் செய்திருந்தேன். கொக்குளாய் பகுதியில் உள்ள மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி இன்றும் என்னிடமே வருகின்றனர். ருக்மால் என்ற நபர் அங்குள்ள மீனவக் குழுத் தலைவராக உள்ளார். கொக்குளாய் மற்றும் நாயாறு ஆகிய இரண்டு பகுதிகளையும் தமிழீழ விடுதலைப் புலிகளே அழித்திருந்தனர். இவ்வாறான பிரச்சினைகள் மத்தியிலும் அங்குள்ள மக்கள் முகங்கொடுத்து வந்தனர். எனினும் சிங்கள மக்களது தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் எவரும் அப்பகுதிக்கு செல்லவில்லை. இன்றுதான் அந்த பிக்குவைப் பற்றிப் பேசுகின்றனர். அந்தப் பிக்கு தொடர்பில் எதுவும் இல்லை. அங்கு வீதிகளை செப்பனிட, தண்ணீர் வசதி பெற்றுக்கொடுக்க, வீட்டு வசதிகளை செய்துகொடுக்க நானே யோசனைகளை முன்வைத்திருந்தேன். அங்கு பலதரப்பட்ட அழுத்தங்கள் காணப்படுகின்றன. எனினும் இதுபற்றி பேசுகிறவர்களது பேச்சுக்கள் அனைத்தும் சட்டமாகிவிடாது.

 சிங்கள கிராமம் எங்கு அமைய வேண்டும், தமிழ் கிராமம் எங்கு அமைய வேண்டும் என்பது குறித்து அவர்கள் தீர்மானிக்க முடியாது. இம்மக்கள் முன்பிருந்தே கொக்குளாய் சிங்கள கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்களுக்கு வழிபாட்டுத்தலம் தேவை என்றால் அங்கு அமைக்க முடியும். விகாரை வேண்டுமா, தேவையில்லையா என்பது தொடர்பில் வேறு எவரும் தீர்மானிக்க முடியாது” - என்றார்

http://www.onlineuthayan.com/news/16386

  • கருத்துக்கள உறவுகள்

எனி சிங்களவனின் ம*ரை யாரும் புடுங்க முடியாது என்ற எகத்தாளம் அப்படியே தொனிக்குது. இதுக்கு எம்மவர்கள் சூட்டி உள்ள நற்சான்றிதழ்.. நல்லாட்சி அரசாங்கம். :rolleyes:

மகிந்தவை விட கொஞ்சமும் இந்த அரசு மாறுபட்டதல்ல. ஆட்கள் தான் மாறி உள்ளனர். கொள்கைகள் ஒன்றே. 

  • கருத்துக்கள உறவுகள்

சம் ..பல்கலை மானாவருக்கே சொன்னது நல்லாட்சியை குழப்ப வேண்டாம் என்றூ...இதுக்கும் சொல்லுவார்......இதுக்கு மேலையும் சோல்லுவார்..

  • கருத்துக்கள உறவுகள்

rajitha-senaratna-200-news2.jpg

வடக்கில் கண்ட கண்ட இடங்களில் அரச மரம் வைத்தும் புத்தர் சிலை அமைத்தமையும் “தவறான” செயல் என்று அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரத்ன, தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

   

கொக்கிளாய், நாயாறு கிராமங்களில் சிங்கள மக்கள் பரம்பரையாக வாழ்ந்தார்கள். அவர்களுக்கு பௌத்த விகாரை தேவையென்றால் கட்டிக் கொடுக்கத் தயாராகவுள்ளோம். அம் மக்கள் தொடர்பில் எவரும் தீர்மானம் எடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=163717&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.