Jump to content

துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு


Recommended Posts

பதியப்பட்டது
துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு
 
 
துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு
சுவிஸ்நாட்டில்   வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழர் ஒருவர் தனது மகளின் பிறந்த நாளை முன்னிட்டு வறுமை கோட்டிற்கு கீழ்வாழும் 11 மாணவர்களுக்கு இலவச துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார். 
 
சுவிஸ் நாட்டில் வசித்து வரும் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் தனது மகள் கீர்த்திகாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்றையதினம் 11 துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார். இந்நிகழ்வு வடமாகாண முதலமைச்சர் விக்னே ஸ்வரன் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள மாகாணசபையில் இடம்பெ ற்றது.
 
யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட போராசிரியர் புஸ்பரட்ணம் மூலம் குறித்த நிதியுதவி வழங்கப்பட்டது.. இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் வறுமை கோட்டிற்கு உட்பட்ட 10 மாணவர்களுக்கும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வேலணை மத்திய கல்லுாரி மாணவிக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து உள்ளுராட்சி ஆணையாளரின் பன்முக ப்பட்ட நிதி மூலம் பருத்தித்துறை பிரதேசசபைக்கு மலக்கழிவு ஏற்றும் புதிய வண்டியும் வழங்கப்பட்டுள்ளது.

http://onlineuthayan.com/news/17020

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாராட்டுக்கள், நல்லதொரு  எடுத்துக்காட்டான முன்மாதிரி.

இப்படி தாயகம் சென்றுவரும் ஒவ்வொரு குடும்பமும் வடமாகாணசபை ஊடாக இவ்வாறான உதவிகளையாவது செய்திருந்தால்  

இன்று எமது மக்கள் தன்னிறைவு கண்டிருப்பர்.

கோயிலுக்கும்

கூல் ரிங்சுக்கும் கொட்டியதில் ஒரு  சிறு தொகை தான் இதுவும்..

இனியாவது.......???

யாழ் கள உறவுகளாவது இதை பின் பற்றலாமே....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

பாராட்டுக்கள், நல்லதொரு  எடுத்துக்காட்டான முன்மாதிரி.

இப்படி தாயகம் சென்றுவரும் ஒவ்வொரு குடும்பமும் வடமாகாணசபை ஊடாக இவ்வாறான உதவிகளையாவது செய்திருந்தால்  

இன்று எமது மக்கள் தன்னிறைவு கண்டிருப்பர்.

கோயிலுக்கும்

கூல் ரிங்சுக்கும் கொட்டியதில் ஒரு  சிறு தொகை தான் இதுவும்..

இனியாவது.......???

யாழ் கள உறவுகளாவது இதை பின் பற்றலாமே....

நல்ல விடயம் பாராட்டுக்கள்
செய்யலாம்.... ஆனால் இப்படி செய்தி வந்தால் விளம்பரம் செய்கின்றார்கள் என்று சொல்லவும் எம்மிடையே மனிதர்கள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, வாத்தியார் said:

நல்ல விடயம் பாராட்டுக்கள்
செய்யலாம்.... ஆனால் இப்படி செய்தி வந்தால் விளம்பரம் செய்கின்றார்கள் என்று சொல்லவும் எம்மிடையே மனிதர்கள் உண்டு.

நல்லவிடயங்களுக்கு

நாலு  பேருக்கு போய்ச்சேருவதற்கு விளம்பரமும் வேண்டும்

அதை விளங்காதவர் போல் முட்டையில் மயிர் புடுங்குவோர் பற்றிய ஆதங்கம் எம்மை மேலும் மேலும் பின் தங்கி

அவர்களுக்கு விளம்பரம் தந்துவிடும் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, வாத்தியார் said:

நல்ல விடயம் பாராட்டுக்கள்
செய்யலாம்.... ஆனால் இப்படி செய்தி வந்தால் விளம்பரம் செய்கின்றார்கள் என்று சொல்லவும் எம்மிடையே மனிதர்கள் உண்டு.

வாத்தியார்! 
தற்போதைய ஊர் நிலவரங்களை பார்க்கும் போது இப்படியான செய்திகளுக்கு கட்டாயம் விளம்பரம் தேவைப்படுகின்றது.
புலம் பெயர்ந்தவர்களில் 80 வீதமானோர் தாயகத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துடனேயே இருக்கின்றார்கள். பலர் நம்பகத்தன்மையான வழிகள் தெரியாமலே இருக்கின்றார்கள். அதற்காகவாவது  விளம்பரம் அவசியம்.

அரசியல்வாதிகளிடம் கையேந்தாமல் எம்மக்கள் சொந்தக்காலில் நிற்கவேண்டும். அவர்களுக்கான சொந்த தொழில்வசதிகளை இலகுவாக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.


ஈழத்து புலம்பெயர் தேச மக்கள் போரை விரும்பியவர்களில்லை என்பதை இங்குள்ள/அங்குள்ள வெள்ளாந்திகளுக்கு புரிய வைக்க வேண்டும்.  

போரை சிங்களமே எம்மவர் மீது திணித்தது என்பதையும் நாம் புரிய வைக்க வேண்டும்:)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாராட்டுக்கள் 

நிட்சயமாக அரசியல் வாதிகளை நம்ப வேண்டாம் உதவி செய்ய விரும்புவர்கள் ஊரில் உள்ள கிராம சேவகரை அணுகி அவர் மூலமாக வறிய குடும்பங்களை கண்டறித்து உதவலாம் அவரிடம்சகல குடும்பங்களின் விபரங்கள் உண்டு  என்பதை தெரிந்து கொள்ளுங்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யுத்தம் நடக்கும் பூமிகள் யாவற்றிலும் இவை போன்ற துயரங்கள் நடந்தபடிதான் இருக்கும் ........ என்ன செய்வது கடந்து போய்த்தான் ஆகவேண்டும் . .......!   பகிர்வுக்கு நன்றி சகோதரி . ......!
    • முன்பு உசுபபேற்றல்கள்  செய்து கொண்டிருந்த  தமிழ் தேசியவாதிகள் இப்போது  அநுரகுமார திசாநாயக்கவிடம் தமிழர்கள் பொறுமை காத்து மிகுந்த பொறுப்புணர்சியுடன்  யோசித்து ஸ்ரீலங்காவின் ஒருமைபாட்டிற்கு எதுவிதமான பாதிப்பு வராதபடி நடந்து கொள்ளுமாறு பாடம் எடுக்கின்றனர்.
    • அர்ச்சுனாவின் செயற்பாடுகள் பற்றி Island, கிருபன் நன்றாகவே விளங்கபடுத்தி உள்ளார்கள் தமிழர்கள் பிரச்சனைகளை தீர்காமல் கையில் எடுத்து அதை பேசிப் பேசியே கோமாளி தனங்கள் செய்து தமிழர்களை ஏமாற்றுவது . தமிழரிடையே உள்ள லூசுத்தனங்களை நன்றாக பயன்படுத்தி கொள்வது. [அர்ச்சுனாவின் இந்த வக்கிர போக்கும் ஒரு அதிகார துஷ்பிரயோகம் தான். நீதியை நிலைநாட்ட புறப்பட்டவர் எக்காலக்கட்டத்திலும் பண்பு தவறி நடக்கவோ அராஜகத்தை கையில் எடுக்கவோ கூடாது] வணங்காமுடியின் நல்ல கருத்து ஆனால் முகபுத்தகம் சமூகவலைதளங்களில் அதிகம் படிப்பவர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் சொன்னபடி அர்ச்சுனாவின் கோமாளிதனங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவருக்கான உறுதியான ஆதரவும் அத்தகைய தமிழர்களிடையே மிகவும் அதிகரித்தே வருகின்றதாம -------------------- கொலஸ்ரோலினால் பக்கவாதம் மாரடைப்பு வரும்போது வாய்க்குள் குழாயை விட்டு கொலஸ்ரோல் கொழுப்பை அகற்றும் மருத்துவ முறை ஒன்று வெளிநாடுகளில் உண்டா🙄
    • தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு:  அவசர செய்தி! உயிர்காக்க விரைவாகப் பகிருங்கள்   நிலமை கடும் தீவிரமாகச் செல்கிறது. எலிக்காய்ச்சல் யாழ்ப்பாணத்தில் வெகு வேகமாகப் பரவுகின்றது.   பருத்தித்துறை வைத்தியசாலை மருத்துவ நிபுணர் வெளியிட்டுள்ள செய்தியில் ,    இதுவரை பருத்தித்துறை வைத்தியசாலையில் மட்டுமே 5 பேர் உயிரிழந்துள்ளனர். பத்து நோயாளிகள் நோய் தீவிரமாகி யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.   உங்களுக்கு காய்சல் , உடம்பு வலி , மூட்டு வலி , கண் சிவப்பாதல், சிறுநீர் கழிப்பது குறைதல், கண் சிவப்பாகுதல், வயிற்று வலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.   சேற்று நிலங்களில் வேலை செய்தவர்கள், விவசாயிகள், மீனவர்கள் , அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெள்ள நீரில் நடந்து திரிந்தவர்கள் பருத்தித்துறை சுகாதார பணிமனையை தொடர்புகொண்டு (MOH office) , நோய் வருவதற்கு முன்பான மாத்திரைகளை பயன்படுத்தி உங்களை உயிராபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவை தடுப்பூசிகள் அல்ல , அன்டிபயட்டிக் மாத்திரைகள். தடுப்பூசிக்கு பயப்படுவார்கள் கூட அச்சப்படாமல் இதைப் பயன்படுத்தலாம்.   அவசரமாக பகிருங்கள். உங்களுக்குத் தெரிந்து மேலே சொன்னதுபோல தேங்கி நிற்கும் நீர் நிலைகளோடு தொடர்பு பட்டு ஆபத்தில் உள்ளவர்களை உடனடியாக சுகாதார பணிமனைக்கு ( MOH office) யிற்கு அழைத்துப் போங்கள்.   உங்களுக்குத் தெரிந்த எல்லோருக்கும் இந்த செய்தியை அனுப்புங்கள். நீங்களும் யாரோ ஒருவரை மரணத்தில் இருந்து காப்பாற்றலாம். இதை புறக்கணிக்காமல் பகிருங்கள்.   தகவல் மூலம் : செல்லத்துரை பிரசாந், பொது மருத்துவ நிபுணர் பருத்தி துறை ஆதார வைத்தியசாலை . பிரதி - சி.சிவச்சந்திரன் https://www.facebook.com/share/p/18UmzZibeV/
    • நெளிவு சுளிவு தெரிந்தவர்களிடம் கழுத்தைக் குடுக்க வேண்டும் ...... கண்டபடி யாரிடமும் குடுக்கக் கூடாது . ........ அதுக்கென்றே பிறந்த சிலர் இருக்கின்றார்கள் .....அவர்களை நாடவேண்டும் . ......!    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.