Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பரவிபாஞ்சான் மக்களுக்கு வாக்குறுதிகள் வந்து குவிகின்றன.

Featured Replies

தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பரவிபாஞ்சான் மக்களுக்கு வாக்குறுதிகள் வந்து குவிகின்றன.

தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவரும்  பரவிபாஞ்சான் மக்களுக்கு வாக்குறுதிகள் வந்து குவிகின்றன.

 தங்களது காணிகள் விடுவிக்கப்படும் வரை இரவு பகலாக தொடா்ந்து கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும்  பரவிப்பாஞ்சான் மக்களை இன்று ஞாயிற்று கிழமை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன்  காணி விவகாரம் தொடா்பில்  ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு தீா்வு பெற்று தரப்படும் என வாக்குறிதி அளித்துள்ளாா்

ஜந்தாவது நாளும் இரவு பகலாக தொடர்கின்ற பரவிபாஞ்சான் மக்களின் கவனயீா்ப்பு போராட்டம் நடைபெறுகின்ற  இடத்திற்கு இன்று காலை பத்து மணியளவில்  விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்  அங்கையன் இராமநாதன் அங்குள்ள  மக்களுடன் உரையாடியதனை  அடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் எவ்வளவு குறுகிய காலத்துக்குள் முடிக்க முடியுமோ அதற்குள் முடிப்பதற்கு ஜனாதிபதிடம் பேசி ஒரு நல்ல முடிவை எடுப்பேன், ஆனால் எபொழுது விடுவார்கள் என்ற காலத்தை  என்னால் இன்று கூறமுடியாது எனவும்  எண்பத்து ஏழு ஏக்கராக இருந்தது இன்று பத்து ஏக்கராக மாறி உள்ளது வெகு விரைவில் காணிகளை பெற்றுத் தருவதற்கான ஏற்பாடுகளை நிச்சயம் நான் செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கையளிக்கப்பட்ட காணிகள் பல இன்னமும் மக்கள் பாவனைக்கு விடவில்லை என மக்கள் கூறியதை அடுத்து நான் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட போது எனது வேண்டுதலுக்கு அமைய  நாளையதினம் காணி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு அவர்களது பத்திரங்கள் ஆராயப்பட்டு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்

இதேவேளை எதிா் கட்சி தலைவா் இரா.சம்மந்தன், தமிழரசு கட்சியின் தலைவா் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினா் சிறிரதன் ஆகியோா் பரவிபாஞ்சான் மக்களுக்கு ஏற்கனவே இவ்வாறு வாக்குறுதி அளித்திருந்த நிலையில் இன்று பாராளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராதநாதன் அவா்களும் வாக்குறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135594/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குறுதிகளை தவிர எதுவுமே மக்களுக்கு கிடைக்காது . யாராவது இக்கூற்றுக்கு சவால் விட்டால் அறியத்தரவும்.

வட  மாகாணத்தில் இருக்கும் 10 லட்சம் தமிழரும் ஒருபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் என்ன ?? தமிழனின்  தோல்விக்கு இது தான் முக்கிய காரணம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Dash said:

வட  மாகாணத்தில் இருக்கும் 10 லட்சம் தமிழரும் ஒருபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் என்ன ?? தமிழனின்  தோல்விக்கு இது தான் முக்கிய காரணம் 

ஈழத்தமிழர்களுக்கு ஒழுங்கான தலைமை இல்லை. வழிகாட்டக்கூடிய தலைமை இல்லை. சிறந்த கொள்கை வகுப்பாளர்கள் இல்லை. தைரியமான பொது நோக்குடைய முன்னெடுப்பாளர்கள் இல்லை.

நான் இதற்கு மேலும் சொன்னால்........
இவ்வளவும் சொல்லுற நீர் முன்னுக்கு நிண்டு செய்யலாம் தானே எண்டு சொல்லுறதுக்கு பல்லாயிரம் பேர் இருக்கினம். tw_blush:

6 hours ago, nunavilan said:
25 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர்களுக்கு ஒழுங்கான தலைமை இல்லை. வழிகாட்டக்கூடிய தலைமை இல்லை. சிறந்த கொள்கை வகுப்பாளர்கள் இல்லை. தைரியமான பொது நோக்குடைய முன்னெடுப்பாளர்கள் இல்லை.

நான் இதற்கு மேலும் சொன்னால்........
இவ்வளவும் சொல்லுற நீர் முன்னுக்கு நிண்டு செய்யலாம் தானே எண்டு சொல்லுறதுக்கு பல்லாயிரம் பேர் இருக்கினம். tw_blush:

வாக்குறுதிகளை தவிர எதுவுமே மக்களுக்கு கிடைக்காது . யாராவது இக்கூற்றுக்கு சவால் விட்டால் அறியத்தரவும்.

செய்தவனை தானே சுயநலத்துக்காக காட்டி கொடுத்து அளித்த இழி பிறவிகள் ஆச்சே எமது இனம்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.