Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசத்துரோகியாக நான் செயற்படப்போவதில்லை

Featured Replies

தேசத்துரோகியாக நான் செயற்படப்போவதில்லை

 

(எம்.சி.நஜிமுதீன்)

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே பல்வேறு ஒப்பந்தங்களை செய்துள்ளோம். அவை தேசத்துரோக செயல்கள் அல்ல. நான் தேசத்துராகியாக ஒருபோதும் செயற்படப்பேவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்தார். 

Cr_AhgRUMAAZoA_.jpg

தனது தேர்தல் வெற்றிக்காக விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்தவர் தேசத்துரோகியா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்தார்.

கொழும்பு கெம்பல் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது சம்மேளத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து இன மக்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளது. தமிழ் சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக நாங்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளோம். அதற்காக பல்வேறு ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளோம். ஆனால் இவை எதுவும் தேசத் துரோக செயல்கள் அல்ல. தேசத் துரோகியாக நான் செயற்படபோவதில்லை. 

 

தேர்தலில் வெற்றி பெறவேண்டுமென்பதற்காக விடுதலைப்புலிகளுக்கு பணத்தைக் கொடுத்து நான் துரோகியாகவில்லை. அவ்வாறு விடுதலைப்புலிகள் அமைப்பின் ஸ்தாபகத்தலைவர் பிரபாகரனுக்கு பணத்தைக் கொடுத்து வெற்றி பெறுவதை விட தோல்வியே எனக்கு மேலானது என நான் ஒதுங்கிக் கொண்டேன்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், சி.விகுணரட்னம் போன்றவர்களை படுகொலை செய்த விடுதலைப்புலிகளுடன் ஒப்பந்தம் செய்து தேர்தலில் வெற்றி பெற்றவர் தேசத்துரோகியா? அதனை நிராகரித்த நான் தேசத்துரோகியா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். 

அதேபோன்று நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக தனது தந்தையின் ஆரம்ப அரசியல் கட்சியுடன் இணைந்து பயணிக்கின்ற ஒப்பந்தத்தை மேற்கொள்வது தேசத்துரோகமா? இல்லை தமது குடும்பத்திற்காகவும் தனிப்பட்ட நலன்களுக்காகவும் ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றமை தேசத்துரோகமா? என்பதையும் மக்களே தீர்மானிக்கவேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/article/11198

  • கருத்துக்கள உறவுகள்

ரனில் சிங்கள மக்களுக்கு வேண்டுமானால் துரோகம் செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் தமிழ் மக்களிற்கு செய்த துரோகங்களை தமிழ் மக்கள் நன்கறிவர்.இவருக்கு இப்போதும் வாக்களிக்கும் தமிழ் மக்களை என்னவென்பது??

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nunavilan said:

.இவருக்கு இப்போதும் வாக்களிக்கும் தமிழ் மக்களை என்னவென்பது??

ரணிலுடன் ஐக்கியமான" ஐக்கிய தேசிய தமிழர்கள்."

14 hours ago, நவீனன் said:

நான் தேசத்துராகியாக ஒருபோதும் செயற்படப்பேவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்தார்

யாழ் நூலகத்தை  எரித்ததிலிருந்து இன்றுவரை இந்த சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளின் "தேசத்துரோகியற்ற" செயல்கள் என்னவென்று தமிழ் மக்களுக்கு தெரியும்.   

6 hours ago, nunavilan said:

ரனில் சிங்கள மக்களுக்கு வேண்டுமானால் துரோகம் செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் தமிழ் மக்களிற்கு செய்த துரோகங்களை தமிழ் மக்கள் நன்கறிவர்.இவருக்கு இப்போதும் வாக்களிக்கும் தமிழ் மக்களை என்னவென்பது??

சொந்த இரத்தங்களை திட்டுவதற்கு பயமாக இருக்குப்போல ?வி .பி பொன்னம்பலத்திலிருந்து தொடங்கலாம் ---

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Gari said:

சொந்த இரத்தங்களை திட்டுவதற்கு பயமாக இருக்குப்போல ?வி .பி பொன்னம்பலத்திலிருந்து தொடங்கலாம் ---

சிலர் உண்மையான தமிழ் துரோகிகளை துரோகிகள் என்று சொல்லவும் விடமாட்டார்கள். அதற்கு மேலாக சிங்கள இனவாதிகளை இனம் காட்டினால் அதை விட அதிகம் கோபம் கொள்பவர்களாகவும் இருக்கிறார்(கள்) ஏன் ஏன் ஏன் (அதிர்வு.........................)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, Gari said:

சொந்த இரத்தங்களை திட்டுவதற்கு பயமாக இருக்குப்போல ?வி .பி பொன்னம்பலத்திலிருந்து தொடங்கலாம் ---

ஒரு சிலருக்கு இருக்கிற பரம்பரை குணம் எல்லாருக்கும் இருக்கும் எண்டில்லை.....இருக்கோணும் எண்டுமில்லை.:cool:

மனிசன் திருந்தக்கூடாது என்பதற்கு நல்ல உதாரண புருஷர்.:202_dark_sunglasses:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.