Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனதை நெகிழச் செய்யும் கிளிநொச்சி வர்த்தகர்களின் சோகம்

Featured Replies

மனதை நெகிழச் செய்யும் கிளிநொச்சி வர்த்தகர்களின் சோகம்
 
 
மனதை நெகிழச்  செய்யும் கிளிநொச்சி வர்த்தகர்களின் சோகம்
கிளிநொச்சி சந்தையில் இடம்பெற்ற தீ விபத்தானது கிளிநொச்சி நகரத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக வடமாகாண வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் பா. டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர் டெனீஸ்வரன், பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள், பிரதேச சபையின் செயலாளர், வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் தீயை அணைப்பதற்கு உதவிய இளைஞர்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.   
 
பாதிக்கப்பட்டவர்களில் பெண் தலைமைத்துவத்தை கொண்டவர்களும், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளும், மாற்றுத்திறனாளிகளும், நாளாந்தம் உழைத்து தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்பவர்களுமே அதிகமாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இவர்களின் சோகம் மனதை நெகிழச் செய்வதாகவும், இவர்களின் சோகத்தை நீக்க வேண்டுமெனில் பழைய நிலைக்கு அவர்களை கொண்டு வருவத்திலேயே தங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
தீக்கிரையான கடை மற்றும் பொருட்களைக்கூட எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்ட அவர், அவர்களது பெறுமதி மிக்க ஆவணங்களின் இழப்புக்கள் எப்பொழுதுமே ஈடுசெய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
 
பெரும்பாலான வர்த்தகர்கள் நாளாந்தம் திருப்பிச் செலுத்தும் வகையில் நிதிக் கம்பனிகளில் இருந்து கடன் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தற்போது அந்தச் சுமையும் அதிகரிக்கும் அபாயமுள்ளமையினால் மாகாண சபையின் ஊடாக பொருத்தமான நிதிக் கம்பனிகளிடம் வர்த்தகர்களின் கடன் மற்றும் வட்டி என்பவற்றை அறவிடுவதை இரண்டு வருடங்களுக்கு ஒத்தி வைக்குமாறு விசேட கோரிக்கை முன்வைக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
1474198251_download%20%281%29.jpg
வட மாகாண முதலமைச்சர் தற்காலிக கடைத்தொகுதி அமைத்துக் கொடுப்பதற்கான தீர்மானத்தை விரைவாக எடுத்தமைக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் மாகாண சபை அமர்வின் போது விசேட பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணை ஊடாக ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு கோரவுள்ள தாகவும் அவர் தெரிவித்துள்ளார்

http://onlineuthayan.com/news/17763

15 லட்சம் புலம் பெயர் மக்கள் ஆளுக்கு 10 டொலர் வழங்கினால் இவர்களுடைய துன்பத்திரஹே போக்கலாம், செய்வார்களா? செய்வார்களா ??

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Dash said:

15 லட்சம் புலம் பெயர் மக்கள் ஆளுக்கு 10 டொலர் வழங்கினால் இவர்களுடைய துன்பத்திரஹே போக்கலாம், செய்வார்களா? செய்வார்களா ??

15 இலட்சத்தில் இரண்டரை இலட்சம் கூட ஆயுத போராட்டத்திற்கு உதவவில்லை, இதற்கா ????

  • தொடங்கியவர்

நிரந்தர கட்டடமே எல்லாவற்றுகும் தீர்வாகும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்:-

 

 

நிரந்தர கட்டடமே எல்லாவற்றுகும் தீர்வாகும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்:-

கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு பாதுகாப்புடனான நிரந்தர கட்டடமே ஒரேயொரு நிரந்தர தீர்வாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக் கிழமை  தீயினால் எரிந்து அழிந்து போன கிளிநொச்சி பொதுச் சந்தையினை சென்று பார்வையிட்ட அவர் அங்கு வியாபாரிகளிடம் கருத்து தெரிவிக்கும் போது,  யுத்தப் பாதிப்புகளுக்கு பின்னர் இந்த தீயும் வியாபாரிகளின் வாழ்க்கையில் அனைத்தையும் அழித்து நிர்ப்பத்தியான  நிலைக்கு தள்ளியுள்ளது எனக் கூறியு்ளார்.
 
இது  மிகவும் வேதனையான  சம்பவம்.  மீள் குடியேற்றத்தின் பின்னர் அம்பாள்குளத்தில் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்தவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை அதன் பின்னர் இங்கு சந்தை ஆரம்பிக்கப்பட்டு வியாபார முன்னெடுக்கப்பட்டது. முழுக்க முழுக்க கடன்களை கொண்டே வியாபாரத்தை ஆரம்பித்தவர்களின் வாழ்க்கையை தீ எரித்து அழித்துள்ளது. எனவே இந்த துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுடன் நானும் பங்குகொள்கின்றேன். எனத் தெரிவித்த அவர் சந்தை வியாபாரிகள் எவ்வாறு அம்பாள்குளத்தில்  இருந்து இங்கு வருவதற்கு எல்லாத் தரப்புக்கும் ஒரு அழுத்தச் சக்தியாக ஒற்றுயைமாக இருந்து செயற்பட்டார்களோ அவ்வாறே இனியும் தங்களுக்கான ஒரு நிரந்த தீர்வு கிடைக்கும் வரைக்கும் ஒற்றுமையாக செயற்படவேண்டும் எனவும் அதே வேளை வியாபாரிகளின்  பிரச்சினைகளை அரசியலுக்கு அப்பால் எல்லாத் தரப்பும் இணைந்து ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இதன்போது கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் கம்சநாதன், சந்தை வர்த்தக சங்கத் தலைவர் அ.யேசுராஜன், மற்றும் வர்த்தக சங்கத நிர்வாக உறுப்பினர்கள், மற்றும் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136104/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

15 லட்சம் புலம் பெயர் மக்கள் ஆளுக்கு 10 டொலர் வழங்கினால் இவர்களுடைய துன்பத்திரஹே போக்கலாம், செய்வார்களா? செய்வார்களா ??

நாங்கள் அரசியல் மட்டுமே பேசுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சோகமானதொரு துயரம். பயனயால் விழுந்தவனை மாடேறிமிதித்ததுபோன்ற நிலை. அரசியலுக்கப்பால் சிந்திக்கவேண்டிய விடயம். ஆனால் உலகமே அரசியலுக்குள் அகப்பட்டு அழிகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

நாங்கள் அரசியல் மட்டுமே பேசுவோம்

ஒரு நிலையான நிறுதிட்டமான கட்டமைப்பை உருவாக்குங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.