Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டான உடலமைப்பு

நீங்கள் தற்பொழுதுள்ள உங்கள் உடற்கட்டமைப்பைப் பற்றி எவ்வளவு தூரம் திருப்தியாக இருக்கின்றீர் 17 members have voted

  1. 1. நீங்கள் தற்பொழுதுள்ள உங்கள் உடற்கட்டமைப்பைப் பற்றி எவ்வளவு தூரம் திருப்தியாக இருக்கின்றீர்கள்?

    • மிகத்திருப்தி
      7
    • ஓரளவு திருப்தி
      4
    • திருப்தியில்லை
      3
    • மிகவும் திருப்தியில்லை
      3
    • சொல்லத் தெரியவில்லை
      0

Please sign in or register to vote in this poll.

Featured Replies

body%20build.jpg

வணக்கம்!

நானும்தான் நீண்ட காலமாக கட்டான உடலை பெறுவதற்கு (மேலுள்ள படத்தில் உள்ளது போன்று) முயற்சி செய்தேன். முடியவில்லை. முயற்சியைக்கைவிட்டு விட்டேன். ஆனால் இவ்விடையமாக நான் யாழ் கள உறவுகளின் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கின்றேன். யாழ் களத்தில் படத்தில் உள்ளது போன்ற உடலமைப்பை தீவிர பயிற்சியின் மூலம் பெற்ற நண்பர்கள் இருக்கக்கூடும். அவர்கள் தமது அனுபவங்களை மனந்திறந்து பகிர்ந்து கொள்ளலாம். மேலும் இதிலுள்ள தீய விளைவுகளைப் பற்றியும் விவாதிக்கலாம். இதைவிட எவ்வாறு உடற்பருமனைக் குறைக்கலாம் அல்லது கூட்டலாம் என்பது பற்றிய உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக இருக்கின்றேன். வேறு இணையத்தளங்களிலுள்ள கட்டுரைகளை வெட்டி ஒட்டாது, கூடுதலான வரை உங்கள் வாழ்பனுபவங்களை பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்! நானும் எனது அனுபவங்களை இதில் எழுதுகின்றேன்.நன்றி!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக சேர்த்துக் கொள்ளவேண்டிய பகுதி

  • கருத்துக்கள உறவுகள்

பட்த்தில் உள்ள மாதிரி எல்லாம் நம்மால முடியாது சாமி.ஆனால் உ. பருமனை குறைக்க சுலபமான வழி பட்டடினிதான். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படத்தில் இருப்பது யார்? எங்கள் கறுப்பியின் அண்ணணா?தம்பியா?மகனா? :(

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில் இருப்பது யார்? எங்கள் கறுப்பியின் அண்ணணா?தம்பியா?மகனா? <_<

அது நீங்களாத்தான் இருக்கோனும் குமாரசாமி சாமி ஏன்னா கறுப்பியின் அண்ணன் தம்பி எண்டால் கறுப்பாத்தானே இருக்கனும். இது வெள்ளை

அது நீங்களாத்தான் இருக்கோனும் குமாரசாமி சாமி ஏன்னா கறுப்பியின் அண்ணன் தம்பி எண்டால் கறுப்பாத்தானே இருக்கனும். இது வெள்ளை

அப்ப வெள்ளையை என்னவெண்று சொல்லுறது அக்கா? இது ஆண்கள் பகுதி என்று வேற போட்டிருக்கு <_<:blink::lol:

அது சரி இப்படி வந்தால் மனிசன் நடக்கிறது இல்லையோ(கையை விட்டால் கட்ஸ் போயிடும்), :lol::lol: இப்படியே எவ்வளவு நேரம் நிற்கிறது. :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப வெள்ளையை என்னவெண்று சொல்லுறது அக்கா? இது ஆண்கள் பகுதி என்று வேற போட்டிருக்கு <_<:blink::lol:

அது சரி இப்படி வந்தால் மனிசன் நடக்கிறது இல்லையோ(கையை விட்டால் கட்ஸ் போயிடும்), :lol::lol: இப்படியே எவ்வளவு நேரம் நிற்கிறது. :P :P :P

இது ஆண்கள் பகுதி எண்டு சொல்லாமல் சொல்வது கேட்குது.

சரி சரி நல்ல தகவலுடன் மீண்டும் வருகிறேன் இந்தப்பகுதிக்கு

ஐயோ, :blink: ....இது என்ன அசிங்கமான உடம்பு?..சீ..சீ <_<

  • தொடங்கியவர்

உடலை கட்டாக மேலுள்ள படத்தில் உள்ளது போன்று வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவம் எனக்கு வெளிநாடு வந்து பல்கலைக் கழகத்திலும், தொழில் செய்யுமிடத்திலும் வெள்ளைகார, மற்றும் வேற்றின மக்களோடு பழகியபோதுதான் தெரிய வந்தது. இதை விட ஒரு முறை வெளிநாட்டு காவல் துறையில் அக்சன் ஹீரோவாக சேர்ந்து பணியாற்றவும் விரும்பியிருந்தேன். இதற்கான தேர்வுக்காக என்னைத் தயார்ப்படுத்தும் போது உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று 06 மாதங்கள் தீவிர பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. அங்கு பயிற்சிக்கு வரும் கட்டுமஸ்தான உடலைக் கொண்ட மல்லர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்களின் ஆசியுடன் நானும் எனது உடலைக் கட்டாக உருவாக்குவதற்கான பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தேன்.

தொடரும்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பிளை ஒருக்கால் உங்கடை கொய்யான்ரை பேரை தரேலுமோ?

  • தொடங்கியவர்

மாப்பிளை ஒருக்கால் உங்கடை கொய்யான்ரை பேரை தரேலுமோ?

ஏன் கிரடிட் கார்ட் அடிச்சு தரப்போறீங்களோ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிளை ஒருக்கால் உங்கடை கொய்யான்ரை பேரை தரேலுமோ?

அது யாருங்க கொய்யான்ரை

கொய்யாப்பழமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது யாருங்க கொய்யான்ரை

கொய்யாப்பழமா?

இதிலிருந்து தெரிகின்றது நீங்கள் யாழ்ப்பாணத்தில் எந்த இடமென்பது.தயவு செய்து தப்பாக நினக்கவேண்டாம்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் கிரடிட் கார்ட் அடிச்சு தரப்போறீங்களோ? :rolleyes:

தம்பி மாப்பிளை நான் கிரடிட் காட் அடிக்கோணுமெண்டால் உம்மடை குடும்ப விவரம் ஒண்டுமே தேவையில்லை ராசா?சும்மா பகிடிக்குத்தான் கோவிக்காதையும். :P

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து தெரிகின்றது நீங்கள் எந்த நாட்டவரென்பது.தயவு செய்து தப்பாக நினக்கவேண்டாம்.

எந்த நாடாம் :rolleyes:

ஓய் கு. சா....!

உமக்கு 'மா"ப்பிள்ளையைப் பற்றி தெரியாதா?

அவருடைய இலட்சணத்தில் ஆக்ஷன் ஹீரோ ஆகிற கனவு வேறா?

இவர் உடற்பயிற்சி எடுத்த இடத்தில் கொஞ்சம் நோட்டை காண்பிச்சமா.... மாப்ளேயைப் பாருங்கப்பா.. :rolleyes:

Weak_guy.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த நாடாம் :rolleyes:

யாழ்ப்பாணந்தான் வேறை எங்கை? :lol:

  • தொடங்கியவர்

குமாரசாமி அண்ணா,

நீங்களும் கோவிக்க வேண்டாம். லண்டனில் 4,5 வீடுகள் வைத்திருப்பதாகவும், 7 சீட்டுக்கள் பிடிப்பதாகவும், மற்றும் வட்டிக்குக் பணம் குடுப்பதாகவும் களத்தில் நீங்கள் எங்கோ குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வந்தது. அதுதான் நீங்கள் பார்ட் டைம் வேலையாக கிரடிட் கார்ட்டும் அடிக்கிறீங்களோ என்று நினைச்சுப் போட்டன். கோவிச்சுடாதிங்கோ.

ஆதி,

எந்தன் தொடர் கதையக் கொஞ்சம் பொறுமையாக் கேளுங்கோ. நான் விரும்பினாப் போல, அதுவும் தமிழ் பெடியள் வெளிநாட்டு பொலிஸில் அக்சன் ஹிரோவா வர விடுராங்களே? நான் உடற்பயிற்சி நிலையத்துக்குப் போய் தீவிர பயிற்சி பெற்றபிறகு பொலிஸ் சோதனையில மிகச்சிறந்த புள்ளிகளிடன் (88/100) பாஸ் பண்ணினன். அன்று சோதனைக்கு வந்த 40 பேரில் பாஸ் பண்ணியது ஆக என்னோடு நாலு பேர் தான். ஆனால் பாவிகள் பக்ரவுண்ட் செக், அது இது என்றெல்லாம் 06 மாதங்கள் இழுத்தடித்துப் போட்டு கடைசியில சொறி சொல்லி என்னைச் சேர்க்கேலாதென்று சொல்லி கையை விரிச்சுப் போட்டானுகள். பிறகுதான் கேள்விப்பட்டன், விசயமறிந்த ஒருவர் சொன்னார் உள்ளூர் அரசியல் வாதிகளை நான் வால் பிடித்தால் தான் என்னை இதில் சேர்ப்பார்களென்று!

அது சரி எல்லாரும் வாரியள், வாசிக்கிறியள், ஆனால் ஏனுங்கப்பா வாக்கெடுப்பில் ஓட்டுப்போடுறீங்கள் இல்லை. நான் போட்ட ஒரே ஒரு ஓட்டுத்தான் கருத்துக்கணிப்பில் விழுந்திருக்கு! ஜனநாயக உரிமை வேணுமென்று சொல்லி அடிபடுறியள், வோட்டுப்போடாமல் இப்படி தள்ளி நின்றால் என்ன மாதிரியுங்கோ?

தொடரும்......

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிள்ளை சார் ஆண்களுக்குத்தானே இந்த வாக்கெடுப்பு

  • தொடங்கியவர்

கறுப்பி,

இல்லை, பெண்களும் தாராளமாகக் கலந்து கொள்ளலாம். மேலேயுள்ள படத்தைப் பார்த்துப் போட்டு பெண்கள் யாராவது பதறிவிடுவார்களோ என்று பயந்து தான் (அக்கா முகியின் பதறலைப் பாருங்கள்!)"ஆண்கள் பகுதி" எனப் போடப்பட்டது. மற்றும்படி பெண்களும் விரும்பினால் தாராளமாகக் கலந்து கொள்ளலாம்.

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

உடல் கட்டமைப்பு சம்மந்தமான ஆராய்ச்சிகளில் நமது தமிழ்ச் சித்தர்கள் படு மேதாவிகள். தாயகத்தில் நான் இருந்த போது ஒரு சித்தரின் வித்தியாசமான வைத்திய முறையைப் பற்றி அறியும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. நீங்களும் இதை உங்கள்பாட்டில் செக் பண்ணிப் பார்க்கலாம். ஆனால் உங்களுக்கு எப்படி நாடி பிடிப்பதென்று(பல்ஸ் செக் பண்ணுவது) தெரிந்திருக்க வேண்டும்.

இந்தச் சித்தர் உணவை ஆறு வகையாகப் பிரிக்கின்றார். உப்புப் பண்டங்கள், இனிப்புப் பண்டங்கள், புளிப்புப் பண்டங்கள், கசப்புப் பண்டங்கள், மற்றைய இரண்டு நினைவில் இல்லை. உங்கள் வலதுகை மணிக்கட்டில் உள்ள நடு, மற்றும் அதற்கு இருமருங்கிலுமுள்ள மூன்று நாடிகள் மேலே நான் குறிப்பிட்ட உணவுப்பண்டங்களில் மூன்றுக் குறியவை. இதைப்போல் உங்கள் இடதுகை மணிக்கட்டிலுள்ள நடு, மற்றும் அதற்கு இருமருங்கிலுமுள்ள மூன்று நாடிகள் மேலே நான் குறிப்பிட்ட உணவுப்பண்டங்களில் இன்னொரு மூன்றுவகைக் குறியவை.

இந்த வைத்திய முறையின் தத்துவம் என்னவென்றால் வலது, இடது கை மணிக்கட்டிலுள்ள நாடிகள்(01 சோடி) 1 : 1/2 : 1/4 (ஒன்றுக்கு : அரையுக்கு : கால்) என்ற விகிதத்தில் அடிக்கவேண்டும். அதாவது நீங்கள் நாடியை பிடிக்கும் போது அதன் வித்தியாசத்தை (அந்த அதிர்வை) உணரக்கூடியதாக இருக்கும். இங்கு சின்னி விரலிற்கு நேரே கீழே உள்ள நாடி கால் ஆகவும்(1/4), நடுவிரலிற்கு நேரே கீழே உள்ள நாடி அரையாகவும்(1/2), பெருவிரலிற்கு நேரே கீழே நாடி ஓன்றாகவும்(1) அடிக்க வேண்டும். ஒரு சுகதேகி மனிதனில் இவ்வாறு தான் அடிக்கும் என்று சித்தர் சொல்கின்றார். உங்களுக்கு வேறு விகிதங்களில் அடித்தால் அதாவது உதாரணத்திற்கு வலது கையிலும், இடது கையிலுமாக முறையே 1 : 1 : 1/4, 1 : 1/2 : 1/2.... இவ்வாறு வேறு விகிதங்களில் அடித்தால் உங்களுக்கு எதாவது நோயுள்ளது அலலது எதாவது நோய் விரைவில் வரப்போகின்றது என்று அர்த்தம். இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. நாடியை அரையுங் குறையுமாக பிடித்துப் பார்த்துப் போட்டு பிழையான விகிதங்களில் அடித்தால் பிறகு எனக்கு தர்ம அடிபோடுவதற்கு என்னிடம் வராதிங்கோ.

சரி அப்படியானால், பிழையான விகிதங்களில் அடிக்கும் நேயாளிகளை அல்லது நோய்வரப் போகின்றவர்களை காப்பற்றுவது தான் எவ்வாறு?

இதற்கு சித்தர் உலகில் உள்ள எல்லா உணவுப்பதார்த்தங்களும் எந்த உணவுவகையைச் சேர்ந்தவை (உப்பா/புளிப்பா/இனிப்பா......இவ்வாறு 06 வகைகள்) என்று வகைப்படுத்தி வைத்திருக்கின்றார். இதை வைத்து சிம்பில்(இலகுவாக) ஆக உலகில் உள்ள எந்த வியாதியையும் குணப்படுத்தி விடுவார் சித்தர்.

உதாரணமாக வலது 1/4 : 1/2 : 1/4, இடது 1 : 1/2 : 2 என்று அடித்தால், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், உணவில், வலது கையில் 1 அடிக்கவேண்டியது 1/4 தான் அடிக்கின்றது. அதற்கு பொறுப்பான உணவு வகையை மிகக் குறைவாகவே உட்கொள்கின்றீர்கள். எனவே வியாதி மாறுவதற்கு அந்தவகை உணவுகளை அதிகளவில் உட்கொள்ள வேண்டும். ஆனால் இடது கையைப் பாருங்கள்! 1/4 அடிக்க வேண்டிய நாடி 2 என்று 08 மடங்கு அதிகமாக அடிக்கின்றது. அதாவது குறிப்பிட்ட நாடிக்குரிய உணவுவகையை நீங்கள் மிதமிஞ்சி உள்ளெடுக்கின்றீர்கள். ஏனவே வியாதியிலிருந்து தப்புவதற்கு இந்தவகை உணவை உட்கொள்வதை விகிதம் மெல்ல மெல்லக் குறைந்து 1/4 ற்கு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

அதாவது 06 வகை உணவுகள் மூலம் 06 வகை நாடிகளை வலது, இடது கைகளில் 1 : 1/2 : 1/4, 1 : 1/2 : 1/4 நிலையில் வைத்துப் பேணுவதன் மூலம் சுகதேகியாக வாழ்வதே இந்தச் சித்தரின் தத்துவமாகும். இந்த சித்தர் தனது இம்முறை மூலம் உலகில் உள்ள எந்தவிதமான வியாதியையும் குணப்படுத்த முடியும் எனக் கூறுகின்றார்.

உங்களுக்கும் இதைப்பற்றி ஏதாவது தெரிந்திருந்தால் அல்லது நான் இங்கு பிழையான எதாவது தகவலைத் தந்திருந்தால் அறியப்படுத்துங்கள். மற்றது முக்கியமான இன்னொரு விடையம் இது மனிதர்களிற்கான வைத்தியம். ஐயா ஆதி, மற்றும் கடுவனுக்கு இவை பொருந்தாது.(சும்மா ஜோக் தான் ஐயா ஆதி, கடுவன் கோவிக்க வேண்டாம்)

தொடரும்......

  • தொடங்கியவர்

ஒரு சிறு திருத்தம்:

சின்னவிரலிற்கு கீழுள்ள நாடி : நடுவிரல் கீழுள்ள நாடி : பெருவிரலிற்கு கீழுள்ள நாடி

1/4 : 1/2 : 1

அல்லது

சின்னவிரலிற்கு கீழுள்ள நாடி : நடுவிரல் கீழுள்ள நாடி : பெருவிரலிற்கு கீழுள்ள நாடி

1 : 1/2 : 1/4

சுகதேகியின் கையில் நாடி மேலுள்ளதில் எவ்வாறு இருக்கும் என்று சரியாகத் தெரியவில்லை. குழப்பமாக இருக்கின்றது! ஒரு சுகதேகியில் சின்ன விரலிற்கு கீழுள்ள நாடி 1/4 ஆகவும், பெரு விரலிற்கு கீழுள்ள நாடி 1 ஆகவும் இருக்க வேண்டுமா அல்லது சின்ன விரலிற்கு கீழுள்ள நாடி 1 ஆகவும், பெரு விரலிற்கு கீழுள்ள நாடி 1/4 ஆகவும் இருக்க வேண்டுமா என்று சரியாகத் தெரியவில்லை. மறந்து விட்டேன்! யாராவது தெரிந்தவர்கள் அறியப்படுத்துங்கள்! சரியான தகவலை தரமுடியாமைக்கு மனம் வருந்துகின்றேன்.

தொடரும்.....

  • தொடங்கியவர்

சரி பிறகு நான் அந்த சித்தரின் புத்தகத்தை படித்து முடித்தபின் என்ன நடந்தது?

அட நல்ல விடையமாக இருக்கின்றதே என்று நினைத்துவிட்டு எனது வாழ்க்கையில் உணவு முறையை சித்தர் சொன்ன அறிவுரைப்படி மாற்றியமைக்க முயற்சி செய்தேன். சித்தரின் புத்தகத்தின் உதவியோடு என்பாட்டில் நாடி பிடிக்கப் பழகிக் கொண்டேன். நாடியில் நான் கண்ட துடிப்புகளின் விகிதக்கணக்கின்படி சாப்பிடும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணத்தொடங்கினேன். வீட்டில் எல்லாரும் என்னை வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கினார்கள்.

சுமார் ஒன்று, இரண்டு கிழமைகளின்பின் தான் இதன் விளைவுகள் எனக்குத்தெரியவந்தது. சர்புர் என்று வயிற்றால் அடிக்கத் தொடங்கியது. உடனடியாக என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஏனென்றால் நான் ஒருவிடையத்தில் தீர்மானமெடுத்து இறங்கிவிட்டால் பிறகு அதைவிட்டு விலகிவிட தெரிந்திருக்கவில்லை. என்பாட்டில் ஆராய்ச்சிகளைச் செய்து அதற்கேற்றவாறு உணவுகளைச் சாப்பிட்டு பழைய நிலைக்கு உடம்பைத் தேற்றிவிட்டேன். எனினும் இந்த சித்தரின் புத்தகத்தில் கூறப்பட்டபடி மாற்றியமைத்த எனது வாழ்க்கைமுறையை சுமார் இரண்டு மாதங்களின்பின் கைவிட்டுவிட்டேன்.

நான் இங்கு சொல்லவரும் விடயம் என்னவென்றால், தமிழில் சில பழமொழிகள் உண்டு.

1. "குரு இல்லாத வித்தை குருட்டு வித்தை!"

2. "தொட்டுகாட்டினால் ஒழிய சுட்டுப்போட்டாலும் வராது!"

இவை என்னைப்பொறுத்தவரை நான் எனது வாழ்வில் கற்றுணர்ந்த வேத வாக்கியங்கள்!

வெறும் புத்தகப்படிப்புடன் நாம் எமது வாழ்வை வெற்றிகரமாகக் கொண்டு செல்ல முடியாது. வாழ்வின் ஒவ்வொரு துறைக்கும் நாம் எமக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய "குரு" வை, ஆசானை தேர்ந்தெடுத்து அவர்களின் உதவியுடந்தான் வாழ்க்கையை வெற்றி கொள்ள முடியும். இல்லாவிட்டால் வாழ்வுமுழுதும் துடுப்பில்லாத ஓடமாக கடலில் போகவேண்டிய இடம் தெரியாது நின்று தத்தளித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.

உங்கள் வாழ்வில் எத்தனை பேர் ஆசானை அல்லது ஆசான்களை உதவிக்கு வைத்துள்ளீர்கள்?

தொடரும்......

அட பேந்தென்ன மாப்பிள்ளையும் விடுற இல்லை எண்டு ஒரு கை பார்க்கிறார் :rolleyes:

  • தொடங்கியவர்

உடலைக் கட்டாக வைத்திருப்பதற்கு நமவர்கள் நாடும் வழிமுறைகளில் ஒன்றான யோகாசனம் கொஞ்சம் சிக்கலான விடயம். சரியான முறையில் ஒரு சிறந்த குருவின் கண்காணிப்பின் கீழ் யோகாசனம் செய்தால் நிறைய நன்மைகள் எமக்கு கிடைக்கும். எமதுபாட்டில் புத்தகங்களின் அல்லது வேறு கைட்ஸ் மூலம் குருவின் நேரடிக்கண்காணிப்பின்றி யோகாசனம் செய்வது மிகவும் ஆபத்தானது. அவ்வாறு செய்வது விபரீதமான விளைவுகளை எமது உடலில் ஏற்படுத்திவிடும்.

நான் தினமும் கீழே உள்ள படத்தில் உள்ளமாதிரி சிரசாசனம் செய்கின்றேன். காலையில் எழுந்து சிரசாசனம் செய்யும் போது எமக்கு புத்துணர்ச்சி கிடைக்கின்றது. முக்கியமாக காலையில் எழுந்து சோதனைக்குப் படிப்பவர்கள் சிரசாசனம் செய்தால் படிக்கும் போது புத்தகத்தின் மேல் எச்சிலைக் கொட்டி தூங்கிவழிந்து துன்பப்படவேண்டிவராது!

sirsha-vj-o.gif

yoga3.jpg

தொடரும்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.