Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டை பிளவுப்படுத்த சூழ்ச்சி : இரவில் சதிசெய்பவன் நானல்ல : இரத்தினப்புரியில் மஹிந்த

Featured Replies

நாட்டை  பிளவுப்படுத்த சூழ்ச்சி : இரவில் சதிசெய்பவன் நானல்ல : இரத்தினப்புரியில்  மஹிந்த  

 

 

Mahinda-Rajapaksa-ratnapura.jpg

(லியோ நிரோஷ தர்ஷன்)

பொது மக்கள்  கேட்பதை கொடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன். ஆளால் மாற்றத்திற்கான நேரம் வந்துள்ளது. நாட்டை பிளவுப்படுத்தும் ரணில் - மைத்திரி கூட்டு ஆட்சியை  வீட்டிற்கு அனுப்புவதே மக்களின் எதிர்பார்ப்பு. அதனை நிறைவேற்றுவதற்கு நான் தயாராக உள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார். 

 

அப்பம் சாப்பிட்டு இரவில் சதி செய்பவன் நானல்ல. எதனையும் வெள்ளிப்டையாகவே செய்வேன். அரசியலமைப்பு  ஊடாக நாட்டை  பிளவுப்படுத்தும் தற்போதைய நல்லாட்சியின் சதியை வேடிக்கை பாரக்க முடியாது. ஆகவே மக்கள் ஒன்றிணைந்து  வெற்றிப்பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

 

இரத்தினப்புரியில் இடம்பெற்ற கூட்டு எதிர்க் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். 

போராட்டங்களுக்கு உயிர் கொடுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரத்தினப்புரி கூட்டம் சர்வமத வழிபாடுகளுடன் இடம்பெற்றது.  

பிற்பகல் 3மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் பின்வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களான  தினேஷ் குணவர்தன , வாசுதேவ நாணயக்கார , விமல் வீரவன்ச , உதய கம்மன்பில  உள்ளிட்ட கூட்டு எதிரணியில் உள்ள அனைவரும் கலந்து  கொண்டனர். 

இந்த கூட்டத்தில் கலந்து  கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 5.15 மணியளவில் வந்ததுடன் 6.15 க்கு மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

இதன் போது அவர் கூறுகையில் ,

இந்த மக்கள் தொகையை பார்த்து  பவித்ராவை விலக்கியது  முட்டாள்தனம் என கூட மைத்திரிபால சிறிசேன சிந்திக்கலாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கியவர்கள்  மக்கள் செல்வாக்கை பெற்றுக் கொண்டுள்ளனர். 

கொள்கையில் இருந்தே  செயற்படுகின்றோம் .  ஆனால் தற்போது சுதந்திர கட்சியை  யானையின் பின்பக்கம் கொண்டு போய் வைத்துள்ளனர். 

எனக்கு  யாருடனும் தனிப்பட்ட  கோபம் இல்லை. நாட்டை  துண்டாட தயாராகின்றனர். அரசியலமைப்பில் உரிமைகளை பறித்து சதியை செய்கின்றனர். 

அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஏலத்தில் விடுகின்றனர். எனவே மாற்றம் வேண்டும். 

மக்கள் எதிர்பார்ப்பதை கொடுப்பதற்கு  நான் தயாராக உள்ளேன். அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைத்து செல்வதற்கு  தேவையான அனைத்து பணிகளையும் முன்னெடுப்போம். 

எதற்கும் அச்சப்பட வேண்டாம். பாராளுமன்றத்தில் எண்ணிக்கையை அதிகரிப்பது கடினமான விடயமல்ல. அதற்கு பல வருடங்களும் தேவையில்லை.  நல்லாட்சியில் உள்ள பலர் எம்முடன் வருவார்கள்.  இன்னும் கொஞ்ச காலம் பொறுத்தால் தெரியும். இனி அனைத்து அமைச்சர்கள் பின்னாலும் ஆள் அனுப்புவார்கள். 

நான் இரகசியமாக சதி செய்பவன் அல்ல. வெள்ளிப்டையானவன். எதனையும் வெளிப்படையாக செய்வேன்.  இரவில் அப்பம் சாப்பிட்டு சதி செய்ய மாட்டேன். மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை கொண்டு வர நான் தாயாராக உள்ளேன் .

மூழ்குகின்ற கப்பலில் யாரும்  பயணிக்கமாட்டார்கள். பாதுகாப்பை கருத்தில் கொண்டு தாவ முற்படுவர்.  இதுவே இனி நடக்க போகின்றது என  குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/12215

  • தொடங்கியவர்
ஆட்சி மாற்றத்திற்கு நீண்டநாள் காத்திருக்க தேவையில்லையாம் -மகிந்த
 
 
ஆட்சி மாற்றத்திற்கு நீண்டநாள் காத்திருக்க தேவையில்லையாம் -மகிந்த
தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றி புதிய ஆட்சி யை   ஏற்படுத்துவோம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.
 
கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று இரத்தினபுரியில் நடத்திய பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ச, ஆட்சி மாற்றமடைவதற்கு நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை என்றும் தெரிவித்தி ருக்கின்றார்.
 
குறிப்பாக ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்திருக்கும் நாட்டு மக்கள் அதற்காக நான்கு ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்று கூறியுள்ள மஹிந்த ராஜபக்ச, மக்களின் இந்த எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
இதற்காக அனைத்து முற்போக்கு சக்திகளையும் இணைத்துக்கொண்டு எதிர்கட்சியிலுள்ள கூட்டு எதிர்கட்சி, ஆளும் காட்சியாக ஆட்சி பீடம் ஏறும் என்றும் தெரிவித்துள்ளார்.
1475937886_download%20%283%29.jpg
இதற்கு நாடாளுமன்றிலுள்ள உறுப்பினர்களின் பெரும்பான்மைப் பலத்தை தமது பக்கம் ஈர்த்துக்கொள்வது என்பது பெரிய விடயமல்ல என்று குறிப்பிட்டுள்ள மஹிந்த தேவைப்படின் ஓரிரு நாட்களிலேயே அதனை செய்துவிடுவேன் என்றும் சூளுரைத்திருக்கின்றார்.
 
அதேவேளை முதன்முறையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பெயரைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்த மஹிந்த ராஜபக்ச, மைத்ரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்து, சுதந்திரக் கட்சியின் தனித்துவத்தை அழித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
 
போராட்டத்திற்கு உயிரூட்டும் புதிய மக்கள் சக்தி என்ற தொனிப்பொருளில் இரத்தினபுரியில் கூட்டு எதிர்கட்சி நடத்திய பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தொடர்ந்தும் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ச,
 
”புதிய அரசியல் யாப்பின் ஊடாக நாட்டை பிளவுபடுத்த மைத்ரி – ரணில் அரசாங்கம் சதி செய்கின்றது.
 
இதற்கு இடமளிக்க முடியாது. படைவீரர்கள் தமது உயிர்களை தியாகம் செய்து ஒருங்கி ணைத்த நாட்டை மீண்டும் பிளவுபடுத்த இடமளிக்கக்கூடாது. இந்த அரசாங்கத்திற்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும்.
 
தற்போது அரச சொத்துக்கள் அனைத்தையும் இந்த அரசாங்கம் விற்க முற்பட்டுள்ளது. குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் விற்க நடவடிக்கை எடுத்துள்ளது.
 
இதன்மூலம் நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுத் தனி யார்களுக்கு விற்று நாட்டு மக்களை அடிமைப்படுத்த முற்பட்டுள்ளது.
 
நாட்டு மக்களின் உரிமைகளை வெளிநாட்டவர்களிடம் விற்று, குறிப்பாக மாணிக்கக் கல்லை யும் விற்கும் உரிமையை வெள்ளைக்காரனிடம் தாரை வார்த்துக்கொடுக்க இந்த அரசாங்கம் முற்பட்டுள்ளது.
 
இவற்றை விமர்சித்தால் நாங்கள் தேசத்துரோகிகளாம். அது மாத்திரமன்றி அரச பயங்கர வாதத்தை அனைத்து தரப்புக்கும் கட்டவிழ்த்துவிட்டு அச்சுறுத்தி அவர்களை தமது கட்டு ப்பாட்டுக்குள் கொண்டுவர இந்த அரசாங்கம் முனைகின்றது.
 
நீதிமன்றத்திற்கு சட்ட மருத்துவ அதிகாரியொருவர் அறிக்கை சமர்ப்பித்தால் அனைவரை யும் அச்சுறுத்தி மருத்துவ அறிக்கையை மாற்றியமைக்க முயற்சிக்கின்றனர்.
 
அது மாத்திரமன்றி பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினர், பாரிய இலஞ்ச ஊழல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றை பயன்படுத்தி அனைவரையும் கைதுசெய்து, விளக்கமறியலில் வைத்து மிரட்டி ஆட்சியை கொண்டுசெல்ல முற்பட்டுள்ளனர்.
 
இதனாலேயே நாட்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துமாறு  எம்மை வலியுறுத்தி நிற்கி ன்றனர். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக்கொடுக்க நான் தயாராக இருக்கின்றேன். இவற்றுக்கு தலைமை தாங்குவதற்கு  தயாராக இருக்கின்றோம்.
 
நாட்டிலுள்ள அனைத்து முற்போக்கு சக்திகளையும் இணைத்துக்கொண்டு இந்த பயணத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதன் ஊடாக கூட்டு எதிர்கட்சியாக இருக்கும் நாம் கூட்டு அரசா ங்கத்தை அமைத்து ஆட்சியில் இருப்போம்.
 
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலர் விரைவில் எமது பக்கம் வரவுள்ளனர். அதனால் எவ ரும் அஞ்ச வேண்டியதில்லை.
 
நாடாளுமன்றில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றியமைப்பது பெரிய விடையமல்ல. அதனால் நான்கு ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கூடிய விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மாற்றமடையும்.
 
இவற்றைக் கேட்டு அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்னர் உளவுத்துறையை கண்காணிப்பில் ஈடுபடுத்துவர். எனது வீட்டிற்கு முன்னாலும் சிறப்பு படையணியொன்றை நிறுத்தியுள்ளனர். எமது வீட்டிற்கு வந்து செல்லுபவர்களை கண்காணிக்கவே இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர்.
 
ஆனால் நாங்கள் இந்த ஆட்சியை கவிழ்க்க நினைத்தால் இரகசியமாக சதி செய்ய மாட்டோம். வெளிப்படையாக ஆட்சியை கவிழ்க்க நடவடிக்கை எடுப்போம். அது தான் எமது வழக்கம். அதனால் ஆட்சியில் உள்ளவர்கள் ரகசிய சதி புரட்சிகள் இடம்பெறும் என்று அஞ்சத் தேவையில்லை. இந்த உறுதிமொழியை எங்களால் ஆட்சியாளர்களுக்கு வழங்க முடியும் என்று மஹிந்த தெரிவித்துள்ளார். 

http://onlineuthayan.com/news/18699

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நவீனன் said:
ஆட்சி மாற்றத்திற்கு நீண்டநாள் காத்திருக்க தேவையில்லையாம் -மகிந்த
 
 
ஆட்சி மாற்றத்திற்கு நீண்டநாள் காத்திருக்க தேவையில்லையாம் -மகிந்த
தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றி புதிய ஆட்சி யை   ஏற்படுத்துவோம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.
 
கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று இரத்தினபுரியில் நடத்திய பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ச, ஆட்சி மாற்றமடைவதற்கு நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை என்றும் தெரிவித்தி ருக்கின்றார்.
 

விரைந்து வாருங்கள் மகிந்தா! அவர்களே நீங்கள் வந்தால் தமிழர்களும் தன்னாட்சி கொண்டுவாழ நீண்டநாள் காத்திருக்க தேவையில்லாமல் போய்விடும்போல் தோன்றுகிறது. சீனாவுக்கு அடிபணியாமல், அவர்கள் ஆதரவின்றி உங்களால் ஆட்சிசெய்ய முடியாது, அப்படி உங்கள் ஆட்சி அமைந்தால்... உங்களைக் கையாள  மேற்குலகத்திற்கும், அமெரிக்காவுக்கும் தமிழர்கள் அவசியம் தேவைப்படுவார்கள். உங்களைப் போலவே எங்களுக்கும் இந்த நல்லாட்சி அரசில் நம்பிக்கை குறைந்துவிட்டது. :oO:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்னதான் தலையால கிடங்கு கிண்டினாலும், இரண்டு விசயத்தால தடுமாறுகிறார்.

எக்காரணம் கொண்டும், இவரை பிரதமர் ஆக்க மைத்திரி முன் வர மாடடார். முன்வந்தால், அவர் தொலைந்தார்.இலங்கைச் சடடப் படி, ஜனாதிபதி இறந்தால் பிரதமர் ஜனாதிபதி. மைத்திரி தொலைத்துக் கடடப் படின், பாராளுமனற உறுப்பினர்களை மடக்கி,உடனடியாக சட்டத்தினை மாத்தி, ஜனாதிபதி ஆவார் என்பதால் மைத்திரி கவனமாக இருக்கின்றார்.

அமெரிக்காவோ, இந்தியாவோ ஆதரவு தர தயார் இல்லை.

இவர் திமிரத், திமிர வழக்குகள் இறுகுகின்றன. வழக்குகள் இறுகுவதால் இவர் திமுறுகிறார்.

இது தவிர, தம்பி பசிலுக்கு ஒரு ஆசை, தம்பி கோதாவுக்கு வேறு ஒரு ஆசை, மகனுக்கு இன்னொன்று.

ஆக, இவர் வேகமாக திமிர, இவரது குடும்பத்தினர் சிறை கதவுகள் நோக்கி நகர்கின்றனர். 

ஆகவே இவரது முக்கிய நோக்கம், தனக்கு, மக்கள் ஆதரவு இருப்பதாக காட்டி, மைத்திரியிடம் பேச்சு வார்த்தை மூலம் சலுகைகள் சில பெறுவது. ஆனால் மைத்திரிக்கு இது புரிவதே இவரது பிரச்சனை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனா இந்தியா அமெரிக்கா என்பதற்கு அப்பால் மகிந்தவிற்கு சிங்கள மக்கள் ஆதரவு மைத்திரியை விட அதிகம் என்பது கசப்பான உண்மை.

ஒருசில மேற்கத்தைய நாடுகளில் உள்ள அரசியல் கூட்டுக்கட்சி முறையில் ரணிலும் மைத்திரியும் ஆட்சியை கைப்பற்றினார்களே தவிர.......tw_glasses:

இவர்கள் தனித்தனிய நின்று போட்டியிட்டால்......:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சீனா இந்தியா அமெரிக்கா என்பதற்கு அப்பால் மகிந்தவிற்கு சிங்கள மக்கள் ஆதரவு மைத்திரியை விட அதிகம் என்பது கசப்பான உண்மை.

ஒருசில மேற்கத்தைய நாடுகளில் உள்ள அரசியல் கூட்டுக்கட்சி முறையில் ரணிலும் மைத்திரியும் ஆட்சியை கைப்பற்றினார்களே தவிர.......tw_glasses:

இவர்கள் தனித்தனிய நின்று போட்டியிட்டால்......:rolleyes:

இலங்கை வரலாறில் தனிக்கட்சி தொடங்கி ஆட்சி பிடித்தவர் பண்டாரநாயகே மட்டுமே.

பிரேமதாச, லலித், காமினி, சந்திரிகா எல்லோரும் தனிக்கட்சி கண்டவர்கள். லலித், காமினி மறைய, அடுத்தவர்கள் அனைவரும் தாய்கட்சி திரும்பியே பதவிக்கு வந்தவர்கள். தனிக்கட்சி கண்டதும், தாய்கட்சி திரும்பியதும் வயது இருக்கும் போதே நடந்தது. அவர்கள் கீழிருந்து மேலே, உயர் பதவிக்கு முயன்று வென்றார்கள்.

மகிந்தவுக்கு 70 வயது. தேர்தலுக்கு இன்னும் 5 வருடங்கள்....  இவர் மேலிருந்து கீழ் தூக்கி வீசப்பட்டு, மீண்டும் ஏற நினைக்கிறார்.

இவர் மீண்டும் பதவிக்கு வருவதற்கு இருக்கக் கூடிய ஒரே காரணம், பிரபாகரன் மீண்டும் வருவது மட்டுமே.

கவுரவமாக ஒதுக்குவது அவருக்கு நல்லது. மக்கள் பேராசைக்குகாரருக்கு மீண்டும் வாக்கு போட மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

விரைந்து வாருங்கள் மகிந்தா! அவர்களே நீங்கள் வந்தால் தமிழர்களும் தன்னாட்சி கொண்டுவாழ நீண்டநாள் காத்திருக்க தேவையில்லாமல் போய்விடும்போல் தோன்றுகிறது. சீனாவுக்கு அடிபணியாமல், அவர்கள் ஆதரவின்றி உங்களால் ஆட்சிசெய்ய முடியாது, அப்படி உங்கள் ஆட்சி அமைந்தால்... உங்களைக் கையாள  மேற்குலகத்திற்கும், அமெரிக்காவுக்கும் தமிழர்கள் அவசியம் தேவைப்படுவார்கள். உங்களைப் போலவே எங்களுக்கும் இந்த நல்லாட்சி அரசில் நம்பிக்கை குறைந்துவிட்டது. :oO:

இதைத் தான் தேர்தலின் போதும் சொன்னோம் எவரும் ஏற்கவில்லையே.
கஜேந்திரகுமாரும் இதனாலேயே மக்கள் தாமாகவே சிந்தித்து வாக்களிக்கட்டும் என்றார்.
யார் கேட்டார்கள்.

1 hour ago, Nathamuni said:

 

மகிந்தவுக்கு 70 வயது. தேர்தலுக்கு இன்னும் 5 வருடங்கள்....  இவர் மேலிருந்து கீழ் தூக்கி வீசப்பட்டு, மீண்டும் ஏற நினைக்கிறார்.

மகிந்தவை மக்கள் தூக்கி எறியவில்லை.வெளிநாடுகள் அதுவும் சூழ்ச்சியால் வெற்றி கொண்டனர்.

மகிந்த தனித்து நின்று எடுத்த வாக்குகளையும்

யு என் பி
சுதந்திரகட்சி(மைத்திரி சார்பு)
ஜே வி பி
ரி என் ஏ
முஸ்லீம் காங்கிரஸ்
இவர்கள் எல்லாம் சேர்ந்து எடுத்த வாக்குகளையும் கணக்கிட்டுப் பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

மகிந்தவை மக்கள் தூக்கி எறியவில்லை.வெளிநாடுகள் அதுவும் சூழ்ச்சியால் வெற்றி கொண்டனர்.

அதுதான் ஜனநாயக அரசியல்.

அவரை சூழ்ச்சியா, தேர்தலை இருவருடம் முன்னதாக வைக்க வைத்தது?

புலிகளின் தேர்தல் பகிஸ்பரிப்பு இல்லாவிடில், அவரும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.