Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின் முதல்முறையாக மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த மஹிந்த

Featured Replies

ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின் முதல்முறையாக மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த மஹிந்த

 

 

(ஜவ்பர்கான்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று  மட்டக்களப்பிற்கு  விஜயம் செய்தார். கடந்த 2015 இல் ஜனாதிபதி தேர்தல் தோல்வியினை தொடர்ந்து இவர் இன்று முதன்முறையாக மட்டக்களப்பிற்கு  விஜயம் செய்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்த இவர் விகாரையில் அமைக்கப்படவுள்ள கட்டிடத்திற்கான அடிக்கல்லையும் நாட்டி வைக்கும் வைபவம் கிழக்கு மாகாண பிரதம சங்கநாயக்கரும் விகாராதிபதியுமான அம்பிட்டிய சுமணரத்ண தேரரரின் தலைமையில் இடம் பெற்றது.

முன்னாள் ஜனாதிபதியுடன் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர்களும இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தனர். மஹிந்த ராஜபக்ஷ  வருகையையொட்டி மட்டக்களப்பில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

unnamed__38_.jpg

unnamed__37_.jpg

unnamed__36_.jpg

unnamed__34_.jpg

unnamed__35_.jpg

unnamed__33_.jpg

http://www.virakesari.lk/article/12300

  • கருத்துக்கள உறவுகள்

உவர், எங்கண்ட தூசனப் பிக்கரற்ற வந்திருக்கிறார்..

மைத்திரியின்ற பெயர் இருக்குது என்று தண்ணியப் போட்டு அடிச்சு உடைச்சுப் போட்டு, இப்ப மகிந்த பெயரோட எழுப்பீட்டு திறக்க இவரைக் கூப்பிட்டிக்கிறார்.

தூசனப்பிக்கர், கள்ளக் கரண்ட் எடுத்து பிடிபட்டு, பிடிக்க ஆள் அனுப்பினவோ எண்டு அப்பத்தயான் மின்சக்தி அமைச்சர் பவித்திரா வனஜனியாராச்சியை, மகிந்தரோட சேர்த்து கிழி, கிழி எண்டு கெட்ட தூசணத்தால கிழித்தவர். 

இப்ப உவர் அங்க போய் குந்திப் பிடிச்சுக் கொண்டிருக்கிறார். :224_monkey:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின் முதல்முறையாக மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த மஹிந்த

(ஜவ்பர்கான்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று  மட்டக்களப்பிற்கு  விஜயம் செய்தார். கடந்த 2015 இல் ஜனாதிபதி தேர்தல் தோல்வியினை தொடர்ந்து இவர் இன்று முதன்முறையாக மட்டக்களப்பிற்கு  விஜயம் செய்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அப்போ, சனாதிபதி தேர்தல் தோல்விக்குப் பிறகு பாசிக்குடாவுக்குக் குடும்பத்தோடை போய்க் கூத்தடிச்சது..... படங்களோடு செய்தியாக வந்ததே! பாசிக்குடா என்ன மட்டக்குளியாவிலா இருக்கு??:grin: 

  • தொடங்கியவர்

நாட்டை இரண்டாக துண்டாடுவதற்கு திட்டம் ; அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க கூடாது - மஹிந்த

 

 

 

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இன்று நாட்டை இரண்டாக துண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க கூடாது. ஒன்றிணைக்கப்பட்ட இலங்கையை மீண்டும் பிரித்து நாட்டை சீரழிக்க முற்படுகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மட்டக்களப்பு மங்கள ராம ரஜமஹா பௌத்த விகாரையில் நடைபெற்ற யுத்தத்தினால் உயிரிழந்த படை வீரர்களுக்க ஆசி வேண்டி இன்று நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்துரையாற்றுகையில்  நாட்டில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இடம் பெற்று வந்த மிகவும் பயங்கரமான கொடிய யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்தேன்.

காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அதே போன்று ஆலயங்களிலும் பௌத்த விகாரைகளிலும் தாக்குதல்கள் இடம் பெற்றதுடன் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

unnamed__39_.jpg

பிள்ளைகளுக்கு ஒழுங்கான கல்வியிருக்கவில்லை ஆசிரியர்களுக்கு பாடசாலைகளுக்கு செல்வதவதற்கு அச்சப்பட்டனர்.  வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் வருவதற்கு அச்சப்பட்டனர்.

இந்த நிலையை மாற்றி அனைவரும் சுத்திரமாக இருக்க கூடிய நிலைமையை மாற்றியமைத்தேன்.

வடக்கு கிழக்கில் சரியான வீதிப் போக்குவரத்து இருக்கவில்லை அவற்றினை செப்பணிட்டு புதிய பாதைகளை அமைத்துக் கொடுத்தேன். யுத்தத்தினால் சிதைந்து போன பாலங்களை குறுகிய காலத்தினுள் புனரமைத்துக் கொடுத்தேன்.

மிககுறுகிய காலத்தினுள் நாட்டை அபிவிருத்தி செய்தேன். எனது அபிவிருத்தியைப் பார்த்து ஆச்சரியமைடைந்தனர். ஆனால் இன்றுள்ள நிலைமையை பாருங்கள்.

இன்று நாட்டை இரண்டாக துண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க கூடாது. ஒன்றினைக்கப்பட்ட இலங்கையை மீண்டும் பிரித்து சாட்டை சீரழிப்பதற்கு திட்டமிடுகின்றனர்.

வடக்கு கிழக்கு இணைப்புக்கு மக்களின் ஆணையைக் கோருவதற்காக தேர்தலை நடாத்துவோம் என்றவர்கள் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். இது மக்களுக்கு இவர்கள் செய்யும் பெரிய அநியாயமாகும்.

unnamed__40_.jpg

தற்போதுள்ள அரசியல் யாப்பில் எந்த மாற்றத்தினையும் கொண்டு வரவேண்டிய அவசியமில்லை.அரசாங்க தரப்புச் செய்திகள் ஊடகங்களில் வருகின்றது ஆனால் எங்களது செய்திகள் எங்களது கருத்துக்கள் ஊடகங்களில் தணிக்கை செய்யப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக எழுதினால் அதை எடுத்து விடுங்கள் என கூறுகின்றனர்.அவர்களின் தேவைகளுக்கு ஊடகவியலாளர்களைப் பயன்படுத்துகின்றனர்.

எங்களிடம் 51 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் 16பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியிடம் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் எதிர்க் கட்சி யாரிடம் உண்டு என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். 

பாராளுமன்றத்தில் எங்களுக்கு பேசுவதற்கு சரியான நேரம் கூட தரப்படுவதில்லை.பாராளுமன்றத்தில் இருக்கும் சபாயநாயகரும் கூட அரச தரப்பானவராகும் இந்த நிலையில் பாராளுமன்றத்திலும் உண்மையான ஜனநாயம் இல்லை. எதிா்க்கட்சி தலைவரும் அரசாங்க தரப்புக்கே ஆதராவாக செயற்படுகின்றார்.

இன்று பாராளுமன்றத்திலுள்ள நிலைமை ஜனநாயகமானதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.தங்களுக்கு விருப்பமில்லாதவர்களை பாரிய இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவை காட்டி அச்சுறுத்துகின்றனர்.

12000 பயங்கரவாதிகளை புனர்வாழ்வளித்து அவர்களை விடுவித்துள்ளேன். ஆயுதங்களுடன் சயனைட் குப்பிகளுடன் நடமாடிய தமிழ் இளைஞர்களை இன்று பேணாவுடன் நடமாட வைத்துள்ளேன்

இன்று பாதுகாப்பு படை வீரர்களையும் பயங்கரவாதிகளாக பார்க்கின்றனர்.ஜனாநாயகத்திற்கு திரும்பி கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பிள்ளையானை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அடைத்து வைத்துள்ளனர். ஆனால் பயங்கரவாதிகளை வெளியே சுதந்திரமாக நடமாட விட்டுள்ளனர்.

பயங்கரவாதம் என்பது நாட்டு மக்களுக்கான பிரச்சினையாகும். இது சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்களுக்கான பிரச்சினையல்ல நாட்டுக்கான பிரச்சினையாகும்.

நாங்கள் அனைவரையும் ஒன்றினைத்துத்தான் பங்கராவதத்திற்கு எதிராக போராடி வெற்றியடைந்தோம். நாட்டை துண்டாடி எவ்வாறு ஜனநாயகத்தை நிலை நாட்டப் போகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/12304

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

மிககுறுகிய காலத்தினுள் நாட்டை அபிவிருத்தி செய்தேன். எனது அபிவிருத்தியைப் பார்த்து ஆச்சரியமைடைந்தனர். ஆனால் இன்றுள்ள நிலைமையை பாருங்கள்

உண்மை தான் ....மொத்தத்தேசிய உற்பத்தியில் 97% வாங்கிய கடனை கட்டுவதற்க்காகவே  கொண்டுபோய் விட்டிருக்கிறது
நாட்டின் நிகர கடன் சுமை எவ்வளவு என்றே தெரியாது என்று ஆட்சியாளர்களே கையை விரிக்குமளவுக்கு ஆக்கியிருக்கிறது உம்மடை அபிவிருத்தி
அபிவிருத்தி செய்தேன் அபிவிருத்தி செய்தேன் என்றால் ....மொத்தத்தேசிய உற்பத்தியை கூட்டி அந்நிய செலவாணியை அதிகரித்தோ அபிவிருத்தி செய்தீர்கள் ஊரெல்லாம் கடனை வாங்கி அபிவிருத்தி செய்தீர்கள் ...
 

உதெல்லாம் எங்க சிங்களவனின் மண்டையில் ஏறப்போகுது ...இனத்துவேசத்தில் ஊறிகிடந்தால் அது மட்டும் தான் தலையில் இருக்கும் 
வெகு விரைவில் பிச்சைஎடுக்கும் நிலை வரலாம் 
 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, அக்னியஷ்த்ரா said:

உண்மை தான் ....மொத்தத்தேசிய உற்பத்தியில் 97% வாங்கிய கடனை கட்டுவதற்க்காகவே  கொண்டுபோய் விட்டிருக்கிறது
நாட்டின் நிகர கடன் சுமை எவ்வளவு என்றே தெரியாது என்று ஆட்சியாளர்களே கையை விரிக்குமளவுக்கு ஆக்கியிருக்கிறது உம்மடை அபிவிருத்தி
அபிவிருத்தி செய்தேன் அபிவிருத்தி செய்தேன் என்றால் ....மொத்தத்தேசிய உற்பத்தியை கூட்டி அந்நிய செலவாணியை அதிகரித்தோ அபிவிருத்தி செய்தீர்கள் ஊரெல்லாம் கடனை வாங்கி அபிவிருத்தி செய்தீர்கள் ...
 

உதெல்லாம் எங்க சிங்களவனின் மண்டையில் ஏறப்போகுது ...இனத்துவேசத்தில் ஊறிகிடந்தால் அது மட்டும் தான் தலையில் இருக்கும் 
வெகு விரைவில் பிச்சைஎடுக்கும் நிலை வரலாம் 
 

இரண்டு வருடம் முன்பு இங்கு கோசனுடன் ஒரு வாதம் செய்தேன் இங்கு ....

அவர்கள் வேண்டும் என்றே கடன் கொடுக்கிறார்கள் 
மொத்த பொருளாதாரமும் ... அவர்கள் கைகளில் இறுக போகிறது என்று.

கடனை அவப்போது அவர்கள் ரத்து செய்துவிடுவார்கள் என்றும் 
சிங்களவர்கள் கெட்டி காரர்கள் என்றும் அவர் சொன்னார்.

இப்போ நிலைமை வேறு ....

"உலக வங்கி"
ஒரு பிரைவேட் வாங்கி சிஸ்ட்டம் என்பது பலருக்கு புரிவதில்லை 
உலக வங்கி என்று பெயரை கண்டவுடன் அது உலகிட்கு சொந்தம் 
என்றுதான் பலரும் எண்ணி கொள்கிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

இரண்டு வருடம் முன்பு இங்கு கோசனுடன் ஒரு வாதம் செய்தேன் இங்கு ....

அவர்கள் வேண்டும் என்றே கடன் கொடுக்கிறார்கள் 
மொத்த பொருளாதாரமும் ... அவர்கள் கைகளில் இறுக போகிறது என்று.

கடனை அவப்போது அவர்கள் ரத்து செய்துவிடுவார்கள் என்றும் 
சிங்களவர்கள் கெட்டி காரர்கள் என்றும் அவர் சொன்னார்.

இப்போ நிலைமை வேறு ....

"உலக வங்கி"
ஒரு பிரைவேட் வாங்கி சிஸ்ட்டம் என்பது பலருக்கு புரிவதில்லை 
உலக வங்கி என்று பெயரை கண்டவுடன் அது உலகிட்கு சொந்தம் 
என்றுதான் பலரும் எண்ணி கொள்கிறார்கள்.  

உலக வங்கி மட்டுமில்லை அண்ணை 
IMF என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியமும் அதே கோக்கு மாக்கு கூட்டம் தான் 

கடனை கொடுத்து கொடுத்து கடைசியில் தாலியை அறுப்பினம் 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, அக்னியஷ்த்ரா said:

உலக வங்கி மட்டுமில்லை அண்ணை 
IMF என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியமும் அதே கோக்கு மாக்கு கூட்டம் தான் 

கடனை கொடுத்து கொடுத்து கடைசியில் தாலியை அறுப்பினம் 

Sri Lanka Trade Last Previous Highest Lowest Unit  
Balance of Trade -542.00 -779.00 -50.10 -1100.70 USD Million [+]
Exports 891.00 897.00 1070.10 304.80 USD Million [+]
Imports 1433.00 1676.00 1986.41 408.00 USD Million [+]
Current Account -713.00 -81.00 255.28 -1695.29 USD Million [+]
Current Account to GDP -2.40 -2.50 -0.40 -19.30 percent [+]
External Debt 3671100.00 3584617.00 3671100.00 70173.30 LKR Million [+]
Terms of Trade 111.00 84.59 161.24 74.50 Index Points [+]
Tourist Arrivals 148499.00 186288.00 209351.00 5536.00   [+]
Gold Reserves 22.45 22.45 23.10 3.63 Tonnes [+]
Foreign Direct Investment 117.00 309.00 388.00 20.00 USD Million [+]
Remittances 572.77 644.48 708.84 241.34 USD Million [+]
Terrorism Index 4.08 4.07 7.13 4.07   [+]
Tourism Revenues 346.98 195.64 346.98 19.31 USD Million [

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.