Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வயதானவர்களை அச்சுறுத்தி திருடர்கள் கைவரிசை ; முரசுமோட்டையில் சம்பவம்

Featured Replies

வயதானவர்களை அச்சுறுத்தி திருடர்கள் கைவரிசை ; முரசுமோட்டையில் சம்பவம்

 

 

(எஸ்.என்.நிபோஜன்)

கிளிநொச்சி முரசுமோட்டை  பழையகமம்  பகுதியில் உள்ள வீடொன்றில்  முகத்தினை  மறைத்துக்கட்டியவாறு  வீடொன்றினுள்  புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த வயதான தம்பதியர்களை பொல்லுகளால்  அடிப்போம்  எனப்பயமுறுத்தி  வீட்டிலிருந்த  இருபதாயிரம் பணம் மற்றும் ஐந்தரைப் பவுன் நகைகள்  என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

unnamed-_5_.jpg

குறித்த சம்பவம் தொடர்பாக சம்பவத்தில் பாதிக்ப்பட்ட வயதான பெண் தெரிவிக்கையில்,

அதிகாலை  பன்னிரண்டு  நாற்பது மணியளவில் நாய்கள்  குறைத்ததாகவும்  அதனை தான் வெளியில் வந்து பார்வையிட்டபோது  திடீர் என கைகளில் பொல்லுகளுடன்  நுழைந்த  மூவர்  தனது கைகளை பிடித்தவாறு சத்தம் போட்டால்  அடிப்போம் என கொச்சை தமிழில் பேசியவாறு வீட்டினுள்  தன்னை அழைத்துச் சென்றதாகவும் பின்னர் கணவனையும் தன்னையும் பிடித்து ஒரு இடத்தில்  இருத்திவிட்டு வீட்டின் மின்குமிழ்களை அடித்து உடைத்து விட்டு, முப்பதுநிமிடமாக வீட்டினை சல்லடை போட்டு  வீட்டில் இருந்த  இருபதாயிரம் ரூபா பணம் மற்றும் மூன்று பவுண் சங்கிலி, இரண்டுபவுண் சங்கிலி, அரைப்பவுண்  மோதிரம் உள்ளடங்கலாக  ஐந்தரைப் பவுண் நகைகள்  என்பவற்றையும்  திருடிச் சென்றுள்ளதாகத்  தெரிவித்தார்.

unnamed-_2_.jpg

அதற்கிடையில் கணவனுக்கு நெஞ்சுவலி ஏற்ப்பட்டதகவும்  அதில் தம்மை  கட்டுப்பாட்டில் வைத்திருந்த நபர் குடிப்பதற்கு தண்ணீர் மற்றும் காற்று விசுக்குவதற்கு மட்டை என்பவற்றையும் எடுத்துக் கொடுத்ததாகவும்  தெரிவித்தார். 

unnamed-_3_.jpg

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்த முறைப்பாட்டுக்கமைய  கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினர்  விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர். 

unnamed-_6_.jpg

unnamed-_4_.jpg

http://www.virakesari.lk/article/12311

  • கருத்துக்கள உறவுகள்

உந்த களவை நிட்சயமாக அந்த முதியவர்களது நெருங்கிய சொந்தம் தான் செய்திருக்கும். மகன்/பேரப் பிள்ளையாகவும் இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

உந்த களவை நிட்சயமாக அந்த முதியவர்களது நெருங்கிய சொந்தம் தான் செய்திருக்கும். மகன்/பேரப் பிள்ளையாகவும் இருக்கலாம்

அனுபவ வார்த்தைகள் போல் தெரிகிறது ....
அக்காவிட்க்கு லண்டன் களவுகளில் தொடர்பு இருக்குமோ ?? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

அனுபவ வார்த்தைகள் போல் தெரிகிறது ....
அக்காவிட்க்கு லண்டன் களவுகளில் தொடர்பு இருக்குமோ ?? 

அமெரிக்காவில் இருக்கிற தைரியமா?! :D:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12.10.2016 at 7:51 PM, Maruthankerny said:

அனுபவ வார்த்தைகள் போல் தெரிகிறது ....
அக்காவிட்க்கு லண்டன் களவுகளில் தொடர்பு இருக்குமோ ?? 

மருதங்கேணிக்கு ஏழரைச்சனி சிலோமோசன்லை தொடங்குது....:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.