Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிலிருந்து மின்சாரம் கொள்வனவு: கடலுக்கடியாக கொண்டுவரத் திட்டம்

Featured Replies

இந்தியாவிலிருந்து மின்சாரம் கொள்வனவு: கடலுக்கடியாக கொண்டுவரத் திட்டம்
 
 

article_1476244363-caran.jpgகடலுக்கடியிலான மின்வட (கேபிள்) திட்டத்தின் ஊடாக, இலங்கைக்கு மின்சார விநியோகத்தை வழங்க, இந்தியா தயாராக இருக்கின்றதென, அந்நாட்டு மின்சக்தி அமைச்சின் செயலாளர் பி.கே.புஜாரி தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்நாட்டுத் தேவையை ஈடுசெய்யும் முகமாக , 500 மெகாவொட் மின்சாரத்தை இந்தியாவிடம் இலங்கை கோரியுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மின்சார இணைப்பு வசதிகள்

இல்லாமையால் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது துணை - கடல் சக்தி இணைப்பு தொழிநுட்பத்தை பயன்படுத்துவது குறித்து, இந்திய மின்சக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட இந்தியாவின் மின்சக்தி அமைச்சின் செயலாளர் பி.கே.புஜாரி,

“தற்போது நாம் பங்களாதேஷ், நேபாளம், மியான்மார், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்கிறோம். கடலுக்கடியிலான மின் இணைப்புக் கட்டமைப்பின் மூலம், இலங்கைக்கும் மின்சார விநியோகத்தை மேற்கொள்வது குறித்து தற்போது ஆலோசிக்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இன்னமும் இதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் நாம், துணை - கடல் இணைப்புத் தொடர்பான புதிய தொழிநுட்பத்தை கண்டறிந்துள்ளோம். இலங்கைக்கு மின்சார விநியோகம் செய்வது குறித்து, முன்னர் இந்தியா ஆலோசனை நடத்தியது.

ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்தத் திட்டம் சாத்தியமானதாக இருக்கவில்லை என்பதே அதற்குக் காரணம். அப்போது நல்ல தொழிநுட்பம் இருக்கவில்லை. அது செலவுமிக்கதாகவும் இருந்தது. இப்போது தொழிநுட்பம் பெருமளவில் உயர்ந்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க சக்தியை இறக்குமதி செய்வதற்கு, ஐரோப்பிய நாடுகள் இந்தத் தொழிநுட்பத்தை பயன்படுத்துகின்றன. எனவே, இலங்கைக்காக இதனை நாம் மீளப் பரிசீலிக்கிறோம். கடலுக்கடியில் மின் இணைப்புக் கட்டமைப்பை ஏற்படுத்துவது சாத்தியமா என்று ஆராய்கிறோம். இது நல்ல தொழிநுட்பம் மாத்திரமன்றி, செலவும் குறைவானது” என்று, அவர் மேலும் தெரிவித்தார்.  

http://www.tamilmirror.lk/183765/இந-த-ய-வ-ல-ர-ந-த-ம-ன-ச-ரம-க-ள-வனவ-கடல-க-கட-ய-க-க-ண-ட-வரத-த-ட-டம-

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் புகாரியை என்ன செய்யிறது.

தாய் மனிசி பட்டினி, பிள்ளை அன்னதானம் கொடுக்கிறாராம் கதை போல தமிழ் நாட்டில பவர்கட், இவர் கடலுக்குளாள கேபிள் புடுங்கப் போறாராம்.

சைனாகாரன் நல்லா கடுக்காய் கொடுக்கிறான் எண்டு மட்டும் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

இந்தாள் புகாரியை என்ன செய்யிறது.

தாய் மனிசி பட்டினி, பிள்ளை அன்னதானம் கொடுக்கிறாராம் கதை போல தமிழ் நாட்டில பவர்கட், இவர் கடலுக்குளாள கேபிள் புடுங்கப் போறாராம்.

சைனாகாரன் நல்லா கடுக்காய் கொடுக்கிறான் எண்டு மட்டும் தெரியுது.

மின் தடத்தைப் போட்டு இணைத்துவிட்டால் அது ஒரு வலைப்பின்னல் மாதிரி. 2003 இல் என நினைக்கிறேன். அமெரிக்காவில் மின் பொறிகளில் ஏதோ பிரச்சினை. அங்கு தடைப்பட்ட மின்சாரம் கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தை அப்படியே இருட்டாக்கிவிட்டது. அங்கே சிக்கல் தீரும்வரையில் இங்கே ஒன்றும் செய்ய முடியவில்லை. போக்குவரத்து விளக்குகள் எரியாமல், எரிபொருள் தட்டுப்பாடு, அவசர உணவுத் தட்டுப்பாடு என ஒரே களேபரம்.

இலங்கைக்கும் இந்த மாதிரி மின் இணைப்பைக் கொடுத்தால் இலங்கை மறைமுகமாக இந்தியாவுக்கு அடிமை ஆவதை தடுக்க முடியாது. :unsure:

https://en.wikipedia.org/wiki/Northeast_blackout_of_2003

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிந்தியா எண்டால் பாலும் தேனும் இல்லாட்டி பஞ்சாமிர்தம் எண்டு நினைக்காதேங்கோ...
கிந்தியா எண்டால் தேளும் விசமும் 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

கிந்தியா எண்டால் பாலும் தேனும் இல்லாட்டி பஞ்சாமிர்தம் எண்டு நினைக்காதேங்கோ...
கிந்தியா எண்டால் தேளும் விசமும் 

ஓமோம், விட்டியல் எண்டால், காவேரி தண்ணியை,யாழ்ப்பாணப் பக்கமா விடுவினம் .....

ஹிந்திய பிச்சைக்காரர்களுக்கு தங்கள் நாட்டுக்குள்ளேயே சீரான மின்சாரம் வழங்க வக்கில்லை, அதுக்குள்ள ஏற்றுமதி ஆசையில் அலைகிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.