Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யா்ழ். கந்தர்மடத்தில் வெள்ளப்பெருக்கு

Featured Replies

யா்ழ். கந்தர்மடத்தில் வெள்ளப்பெருக்கு
 
யா்ழ். கந்தர்மடத்தில் வெள்ளப்பெருக்கு
 
இந்த வெள்ளத்தை பார்த்ததும் எவரும் யாழ்ப்பாணத்தில் மழை பெய்து விட்டது இதனால் வற ட்சி   நீங்கி விட்டதென  நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள்.இது யாழ்ப்பாணம் கந்தர்ம டம் பகுதியில் செல்லும் நீர்க்குழாயில் ஏற்பட்ட வெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளம்.
 
இன்று மதியத்திலிருந்து இந்த நீர்க்குழாய் வெடித்து நீர் ஓடியபோதிலும் யாழ்.மாநகரசபை அதனை கவனமெடுக்கவில்லையென அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர்.விளைவு வீதி அருகே இருந்த கடைகளுக்குள் எல்லாம்   வெள்ளம் ஓடியதுதான்.
 
14642809_1836286659938318_1251888788_n.jpg
 
14658208_1836286663271651_1405866998_n.jpg

http://onlineuthayan.com/news/18943

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்லைன் உதயன் வெளியிட்டால் நம்புவதற்கு நாங்கள் என்ன கேணையர்களா? யாழ் கந்தர்மடம் முற்றாகவே தமிழர் வாழும் பகுதி. அங்குள்ள கடைகளில் ஒரு தமிழ் எழுத்தைக்கூடக் காணவில்லை! போகட்டும்... ஒரு பனைமரமோ! அதன் நிழலைக்கூடத் தண்ணீரிலும் காணவில்லையே??:(

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

ஒன்லைன் உதயன் வெளியிட்டால் நம்புவதற்கு நாங்கள் என்ன கேணையர்களா? யாழ் கந்தர்மடம் முற்றாகவே தமிழர் வாழும் பகுதி. அங்குள்ள கடைகளில் ஒரு தமிழ் எழுத்தைக்கூடக் காணவில்லை! போகட்டும்... ஒரு பனைமரமோ! அதன் நிழலைக்கூடத் தண்ணீரிலும் காணவில்லையே??:(

கந்தர்மடத்தில் வாழ்ந்த எனக்கும், தமிழ் சிறியருக்கும் தெரியும், அங்க குழாய் தண்ணீர் ஒரு போதும் இருந்ததில்லை. கிணத்துத் தண்ணிதான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

ஒன்லைன் உதயன் வெளியிட்டால் நம்புவதற்கு நாங்கள் என்ன கேணையர்களா? யாழ் கந்தர்மடம் முற்றாகவே தமிழர் வாழும் பகுதி. அங்குள்ள கடைகளில் ஒரு தமிழ் எழுத்தைக்கூடக் காணவில்லை! போகட்டும்... ஒரு பனைமரமோ! அதன் நிழலைக்கூடத் தண்ணீரிலும் காணவில்லையே??:(

பாஞ்ச்  அண்ணே...
நாங்கள்..... ஊரில் இல்லை என்றவுடன், தமிழ் வாசிக்க மறந்து போயிருப்பம் எண்டு நினைச்சு, 
கடைக்காரர்... இங்கிலீசிலை போர்டு எழுதி வைச்சிரிக்கினம்  போல கிடக்கு. :grin:

அட... நாங்கள், புலம் பெயர்ந்தாப் பிறகு தான்.... எமக்கு, தமிழில்.. ஆசையும், வெறியும் வந்தது என்று, கடைக்காரனுக்கு தெரியாது. :)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கந்தர்மடத்தில் வாழ்ந்த எனக்கும், தமிழ் சிறியருக்கும் தெரியும், அங்க குழாய் தண்ணீர் ஒரு போதும் இருந்ததில்லை. கிணத்துத் தண்ணிதான்.

நாத முனியர், 
இது, பலாலி வீதியில் உள்ள கோண்டாவில் சந்தியிலிருந்து... இருபாலை நோக்கி செல்லும் வீதியில் உள்ள கிணற்றில் எடுக்கப் பட்ட  குடி நீர்,
குழாய் வழியாக... யாழ்ப்பாண  நகரத்துக்கு செல்கின்றது. அதில் இன்னும் பகுதியை... திருநெல்வேலி  விவசாய திணைக்களமும் நிறைவேற்றுகின்றது.
இந்தக் குழாய்கள்,  ஆங்கிலேயரால்...... யாழ்ப்பாண அரசன் " மாமன்னன்  சங்கிலியனை"  பிடித்த பின், போட்ட  குழாய்கள்.  அதற்குப் பின்... எவனும், அதை மாற்ற வில்லை. 
2016´ப் பின்.... வெடிக்கிற  குழாயை மாத்த...   எ. க.  தலைவர், "சம்பந்த  சபதம்"  எடுத்துள்ளார் எண்டு, சனம் குசுகுசுக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

கந்தர்மடத்தில் வாழ்ந்த எனக்கும், தமிழ் சிறியருக்கும் தெரியும், அங்க குழாய் தண்ணீர் ஒரு போதும் இருந்ததில்லை. கிணத்துத் தண்ணிதான்.

அடப்பாவிகளா.. வீதி ஓர தண்ணீர் குழாய்களையே மறந்திட்டியளே. 

இப்படிக்கு முன்னாள் கந்தர்மடம் வாழ் அந்த மண்ணின் மைந்தன். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 14/10/2016 at 8:25 PM, தமிழ் சிறி said:

இந்தக் குழாய்கள்,  ஆங்கிலேயரால்...... யாழ்ப்பாண அரசன் " மாமன்னன்  சங்கிலியனை"  பிடித்த பின், போட்ட  குழாய்கள்.  அதற்குப் பின்... எவனும், அதை மாற்ற வில்லை. 
 
ஆங்கிலேயர் வந்தது 18ம் நூறாண்டிறுதியில்... சங்கிலியன் வீழ்ந்துது 15ம் நூறாண்டு ஆரம்பத்தில்.... ?

  • கருத்துக்கள உறவுகள்
On 15.10.2016 at 9:58 AM, nedukkalapoovan said:

அடப்பாவிகளா.. வீதி ஓர தண்ணீர் குழாய்களையே மறந்திட்டியளே. 

இப்படிக்கு முன்னாள் கந்தர்மடம் வாழ் அந்த மண்ணின் மைந்தன். tw_blush:

அட,  நெடுக்ஸ்சும் நம்ம ஊரா...
நான்... கலட்டி அல்லது வண்ணார் பண்ணை என நினைத்திருந்தேன்.:)

5 hours ago, Nathamuni said:

ஆங்கிலேயர் வந்தது 18ம் நூறாண்டிறுதியில்... சங்கிலியன் வீழ்ந்துது 15ம் நூறாண்டு ஆரம்பத்தில்.... ?

நாதம்ஸ்.... வெள்ளிக்கிழமை,  அதுகும்  இரவு 9 மணிக்கு... குத்து மதிப்பாக எழுதியதை சீரியஸாக எடுத்து ஆராயப்படாது. :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.