-
Tell a friend
-
Topics
-
Posts
-
காதலா கட்சியா என்று ஒரு முடிவுக்கு வரவேண்டிய நேரமிது. சுமந்திரனை பின்பற்றி சிங்கள சம்பந்தி என விக்கினேஸ்வரனை விளித்தவர்கள், இப்போ அவரொருவர் சிங்கள சம்பந்தியாகிவிட்டார், அதைப்பற்றி யாரும் மூச்சு விடுவதில்லை. இதைத்தான் சொல்வது, "பழிப்பு படலேக்கை, சிரிப்பு சேலேய்க்கை," என்று.
-
By ஏராளன் · பதியப்பட்டது
தன்னைப்பற்றிய சிவஸ்ரீ பிரசாத் அவர்களின் 20 நிமிட காணொளி. -
By ஏராளன் · பதியப்பட்டது
14 DEC, 2024 | 01:47 PM (துரைநாயகம் சஞ்சீவன்) இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி, ஏற்றுக்கொண்ட சீடோ சமவாயத்தின் அடிப்படையில் புதிய சட்டமூலத்தினை கொண்டுவருவதன் ஊடாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் நிறுத்த உடனடியாக உதவுங்கள் என கிழக்கு மாகாண பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. இன்று சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இந்த அமைப்பினர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில், இலங்கையின் அனைத்துப் பெண்களும் இன, மத, சமூக வேறுபாடுகளைக் கடந்து ஆணாதிக்க அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். ஆணாதிக்க மயப்பட்ட குடும்ப, சமூக, வேலைத்தள, அரச அடக்குமுறைகளுக்கு இலங்கைப் பெண்கள் அனைவருமே உள்ளாகின்றனர். இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் இம்சைகள், வன்முறைகளால் சிறுமிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனினும் காத்திரமான சட்ட ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் தவறு செய்கின்றவர்கள் தப்பித்துக் கொள்கின்ற நிலைதான் தற்போதும் இருக்கின்றது. இருந்த போதும், கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதியில் திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள 15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 41 வயதான நபருக்கு 30 வருட கடூழிய சிறை தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபா நஸ்டஈடு வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்றம் கடந்த 11 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியதை எமது கிழக்கு மாகாண பெண் மனித உரிமை பாதுகாவலர் அமைப்பு வரவேற்கிறது. இலங்கையில் இடம்பெறுகின்ற பெண்கள் மீதான வன்முறைகளை நிறுத்துவதற்கான சட்டங்களை விரிவுபடுத்துவதுடன், சட்டங்களில் சீர்திருத்தங்களை உடன் மேற்கொண்டுதவுமாறும், அத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெண்களுக்கு எதிரான எல்லா விதமான பாராபட்சங்களையும் இல்லாது ஒழிக்கும் (சீடோ) சமவாயத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை முழுமையாக இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக புதியதொரு சட்ட மூலத்தை உருவாக்குமாறும், இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இடம்பெறும் விசாரணைகளை உடன் நிறுத்த வேண்டும் எனவும், இலங்கையில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குமாறும், மேலும் அரசுக்கு எதிரான குற்ற செயல்களை கையாள்வதற்கு போதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற அடிப்படையில் பயங்கரவாதத் தடை சட்டத்திற்கு பதிலாக புதிய பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/201251 -
ஆமா ....முன்பு சுமந்திரனும் காலதாமதமாக வந்துள்ளார். இருக்கட்டும்.... என்ன காரணம் என்று கேட்டால் குறைந்தா போய்விடுவார்கள்? ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருந்தால் என்ன ஆவது? இவ்வாறு சக உறுப்பினர் மீது கரிசனை இல்லாதவர்கள் மக்களை எப்படி அணுகுவார்கள்? நல்லவேளை, சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்படுவார் என்கிற செய்தி வந்ததும், விசாரணைக்கு அழைத்துச் சென்றதும் சாணக்கியன் தப்பித்துக்கொண்டார். இல்லையென்றால் முந்திய வரலாற்றை மறந்திருக்க மாட்டார் என நினைக்கிறன். அர்ச்சுனனையும் அனுராவையும் மக்கள் தெரிந்தெடுக்க யார் காரணம் என்பது உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், ஆனால் மக்களுக்கு தெரியும். மக்கள் அல்லல் படும்போது அதை தடுக்க திராணியில்லை, கட்சிக்குள் குடைச்சல், மக்கள் தமக்கு உதவக்கூடியவர்களை தெரிந்தெடுத்தார்கள். சும்மா இருப்பதற்கு மக்கள் ஏன் வாக்குபோடவேண்டும்? அதிகாரம் செலுத்தவும் மக்களை குறை சொல்லவுமா?
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.