Jump to content

தேவதைகளால் கைவிடப்பட்ட காலத்தில்

Recommended Posts

பதியப்பட்டது

இது கதையா? அல்லது கடிதமா என்பதற்கு அப்பால், பேசப்படும் பொருள், தற்போதைய ஈழத்து நிகழ்வுகள் தனிமனிதர்களிடம் ஏற்படுத்தும் உணர்வோட்டாங்கள் என்பவற்றை திறம்பட எழுத்தில் வடித்திருப்பதாக நான் கருதுகிறேன். ஈழத்தில் ஏற்படும் போரியல் மாற்றங்கள் ஏன் ஒருவரை மனதளவில் துவண்டுவிடச்செய்கிறன, ஏன் அதீத மகிழ்ச்சியில் திழைக்கச்செய்கிறன என்பதை தமிழ்நதி சொல்லியிருக்கிறார்.

அன்பு நித்திலா,

நலம். போர்சூழ்ந்த இந்நேரத்தில் நீயும் அவ்விதம் இருப்பாயென்றே இன்னமும் நம்புகிறேன்.

“இப்போது எங்கே இருக்கிறாய்…?”என்ற கேள்வியுடன் தொடங்கி எனது நாடோடித்தன்மையைக் குறித்துப் பரிகசித்திருந்தாய். ‘நான் உன்னுடன் தான் இருக்கிறேன்’ என்று நாடகத்தன்மையுடன் பதிலளிக்கவே விருப்பம். அக்கணத்தில் பொங்கும் நெகிழ்ச்சியில் உனது கண்கள் பனிக்கக்கூடும். தெரிந்தே சொல்லும் பொய்கள் உன்னதமான கணங்களை அளிக்கக்கூடுமெனில், நான் பொய்யுரைக்க விரும்புகிறேன்.

தோழி! இருப்பிற்காக அலைந்தது ஒரு காலம். அலைவதற்காகவே இருப்பென்று இப்போது தலைகீழாக்கிவிட்டேன். பால்வீதியில் மிதந்து செல்லும் கோள்களைப் போல நாடுகள். நான் இருக்குமிடமே இப்போதென் சூரியன் மையப்புள்ளி. இங்கு மோட்டார் சைக்கிள்களும் கார்களும் விசையிலிருந்து இழுத்துவிடப்பட்டவை போல விரைகின்றன. பரபரப்பு இந்நகரின் பிரதான தொனி. இங்கு இருக்கிறேன். ஆனால், இல்லை. ரொறன்ரோவில் வெள்ளைத்தோல் பளபளக்க நீண்ட குளிர்க்கோட்டுகள் அணிந்து பாதையைக் கடக்க காத்திருக்கிறார்கள். அவர்களோடு மண்ணிறத்தவளாகிய நானும் கடக்கிறேன். ஆனால் நான் அங்குமில்லை. இலண்டனில் புகையிரதத்தில் கரகரத்த குரலில் இருள் நிறத்திலொருவன் குரலுயர்த்திப் பாடுகிறான். இடையிடையே பிசிறடிக்கும் குரல் வழியே பிரிவின் துயர்பொதிந்த வரிகளை அவன் எனக்குள் விசிறுகிறான். நான் அங்குமில்லை. நேதன்ஸ் பிலிப்ஸ் ஸ்குயாரின் அருகிலுள்ள மரத்தடியில் இருக்கிறேன். நித்திலா! என்னை அவ்விதம் கற்பனை செய்யாதே! நான் அங்குமில்லை!

திருவையாற்றில் கனகாம்பிகைக் குளத்தினருகில் இருந்தேன். நீ சைக்கிளை மரத்தில் சாய்த்துவைத்துவிட்டு என்னை நோக்கி வருகிறாய். சீருடை உனக்கு அழகாகப் பொருந்தியிருக்கிறது. நிழலின் குளிர்ச்சியில், நீரின் தெளிவினில் கோவிலிலிருந்து மிதந்துவரும் ஊதுபத்தி வாசனையில் உன் வார்த்தைகளின் வசீகரிப்பில் அன்றைக்கு நானிருந்தேன். நாங்கள் ‘அறிவமுது’பொத்தகசாலைக்குப் (‘பொத்தகசாலையா…?’என்றதற்கு ‘அதுதான் சரி’ என்றாய்) போயிருந்தோம். என்னைவிடச் சிறியவள்… வாழ்வின் இனிய கணங்களில் இன்னமும் கால்பதிக்காதவள்…(அப்படி இல்லை என்பாய் வேறொரு அர்த்தத்தில்) நீ… குனிந்து புத்தகங்களைப் புரட்டியபோது பார்த்துக்கொண்டிருந்த எனக்குள் எதுவோ புரண்டது.

கிளிநொச்சியில் சாலைப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திய நீலநிறச் சீருடையணிந்த காவலன் என்னைப் பார்த்து எதேச்சையாக உதிர்த்த புன்னகையைப் பிரதி செய்தபோது அங்கு நானிருந்தேன். “பாண்டியன் சுவையூற்று”அந்தப் பெயரை உச்சரித்தபோதெழுந்த கிளர்ச்சியில் இருந்தேன். அந்தச் சாலையின் தூய்மையில், கடைகளுக்குச் சூட்டப்பட்டிருந்த கவித்துவப் பெயர்களில் எங்கெங்கும் ஒலித்த தமிழில் இருந்தேன் சில காலம். வானளாவ என்பதெல்லாம் பொய்…. அலைந்த இடங்களில் நெடிதுயர்ந்த நேர்த்தியான அந்தத்தை அண்ணாந்து பார்க்கவியலாத கட்டிடங்களை கண்டதுண்டு. வியப்பெழுந்த போதும் பெருமிதமோ நெகிழ்ச்சியோ கொண்டதில்லை. ஐந்தாறு தானென்றாலும் கிளிநொச்சி-யாழ் சாலையில் இருந்த கட்டிடங்களின் நேர்த்தியில் நெகிழ்ந்துபோன நினைவுகளில் நானிருந்தேன். மீண்டும் போரெழும் போதினில் இவையெல்லாம் என்னாகும் எனும் துக்கத்தில் நானிருந்தேன். இந்தக் கடிதத்தில் நீக்கமற எங்கும் நானிருக்கிறேன் என்று நீ சிரிப்பாய். வேறெப்படிச் சொல்வதென எனக்குச் சொல்லித்தா நித்திலா! உணர்ச்சி எழுத்தானால் அறிவு விலகிப்போய் வேடிக்கை பார்க்கிறது.

ஆனையிறவைக் கடந்து யாழ்ப்பாணம் போனபோது இலங்கை இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட கவசவாகனம் ஒன்றைப் பார்த்தேன். அதில் போராளியொருவனின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பெயரை பூவைத் தொடுமொரு கவனத்துடன் விரல்களால் தடவிப் பார்த்தபோது அழுகை வந்தது. ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய’என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கும்போது கட்டுப்படுத்த முடியாமல் எப்படிக் கண்ணீர் பொங்குமோ… அதைப் போல துடைக்கத் துடைக்க வழிந்தது கன்னத்தில். துன்பியலையே நான் எழுதுவதாக நண்பன் ஒருவன் கூறினான். வலிந்து நான் முயலும் கொண்டாட்டங்களை எப்படியோ மேவிவிடுகிறது உள்ளிருக்கும் வலி.

ஆனையிறவு கைப்பற்றப்பட்ட செய்தியை அறிந்த அன்று அலுவலகத்தில் இருந்த நாங்கள் ஒருவரையொருவர் பெருமிதம் பொங்கப் பார்த்துக்கொண்டோம். அன்று உவகை எங்களைக் காவித்திரிந்தது. ஒருவரையொருவர் நேசமுடன் பார்த்துக்கொண்டோம். நீண்ட நாள் முகம் திருப்பித்திரிந்த தோழியொருத்தி எனக்குத் தேநீர் தந்து ‘மன்னித்துக் கொள்’என்றாள்.

இப்போது நான் செய்திக்குருடாயிருக்கிறேன். ஊரிலிருந்து வரும் செய்திகளிலிருந்து செவிடாகி தப்பித்து ஓடிவிட விரும்புகிறேன். இருந்தும் குரல்கள்… குரல்கள்… வலியைச் செவிகளில் வலுக்கட்டாயமாகக் செலுத்துகின்றன. எனது நம்பிக்கைகளின் மீது சம்மட்டிகள் இறங்குகின்றன. ‘இராஜதந்திரப் பின்னகர்வு’ என்ற சொல்லை துரோகிக்கப்பட்ட துக்கத்தோடு கேட்டுக்கொண்டிருக்கிறேன். நித்திலா! ‘சுயநலத்தால் தம் நிலத்தைக் கைவிட்டு ஓடிப்போனவர்கள் குற்றவுணர்வு கொள்வதுதானே நியாயம்… நீயேன் கோபம்கொள்கிறாய்’என்று நீ வியந்துகொள்வாய். எனினும், கையிலிருந்து சொரியும் மணல்போல நம்பிக்கைகள் உதிர்ந்துபோய்விடுமோ என்றஞ்சுகிறேன். அன்றைக்கு எனது தோழிகளில் ஒருத்தி சொன்னாள் “அவர்கள் மௌனமாக்க விரும்பும் எதிர்க்குரலால் நான் பேச விரும்புகிறேன்”என்று. நேற்றொரு தோழன் சொன்னான் “அவர்களின் பாசிசத்தை நான் மறுதலிக்கிறேன்”என்று. நான் கேட்க விரும்பாதவற்றைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். “நாமெல்லோரும் தேசியத்தை விற்றுக்கொண்டிருக்கிறோம்”எ

Posted

வெள்ளைத்தோல் பளபளக்க நீண்ட குளிர்க்கோட்டுகள் அணிந்து பாதையைக் கடக்க காத்திருக்கிறார்கள். அவர்களோடு மண்ணிறத்தவளாகிய நானும் கடக்கிறேன்.

தாயக நினைவுகளோடு வெளிநாட்டில் கஷ்டப்பட்டு வாழும் ஒருவரின் உணர்வுகளை ரொம்ப அழகான வரிகளில இந்த கடிதம் சொல்லி இருக்கின்றது.

வாசிக்க வாசிக்க ரொம்ப கவலையாக இருந்தது. நன்றி குளம் அண்ணா :)

நெடிதுயர்ந்த நேர்த்தியான அந்தத்தை அண்ணாந்து பார்க்கவியலாத கட்டிடங்களை கண்டதுண்டு. வியப்பெழுந்த போதும் பெருமிதமோ நெகிழ்ச்சியோ கொண்டதில்லை. ஐந்தாறு தானென்றாலும் கிளிநொச்சி-யாழ் சாலையில் இருந்த கட்டிடங்களின் நேர்த்தியில் நெகிழ்ந்துபோன நினைவுகளில் நானிருந்தேன்.

உண்மையாக தான்..இங்கு என்னதான் வசதிகள் இருந்தாலும் நிறையப்பேர் ஊரை நினைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். கோதுமை விதைச்சிருக்கும் இடத்தை பார்த்தால் காத்துக்கு அசைஞ்சு கொண்டு..அழகா இருக்குற ஊர் வயல்கள் ஞாபகம் வரும்.நேராக..சீராக தார் போட்ட ரோட்டில் போவதிலும் ஒழுங்கே இல்லாமல் கற்களும் குழியுமா இருக்குற ஒழுங்கைக்குள் ஓடி திரியுறது என்னவோ சுகமா இருக்கும்.வாடகை பிளாற்றில் பக்கத்து வீட்டுக்காரரை கூட தெரியாமல் இருக்கும் போது..அங்க பக்கத்து வீட்டில் பையனை காலேல தாய் எழுப்புற சத்தம் கேட்டு நாங்கள் எழும்புற ஞாபகம் வரும். :D:D

Posted

\\நேதன்ஸ் பிலிப்ஸ் ஸ்குயாரின் அருகிலுள்ள மரத்தடியில் இருக்கிறேன். நித்திலா! என்னை அவ்விதம் கற்பனை செய்யாதே! நான் அங்குமில்லை! \\

\\அதில் போராளியொருவனின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பெயரை பூவைத் தொடுமொரு கவனத்துடன் விரல்களால் தடவிப் பார்த்தபோது அழுகை வந்தது. ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய’என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கும்போது கட்டுப்படுத்த முடியாமல் எப்படிக் கண்ணீர் பொங்குமோ… அதைப் போல துடைக்கத் துடைக்க வழிந்தது கன்னத்தில்.\\

\\இப்போது நான் செய்திக்குருடாயிருக்கிறேன். ஊரிலிருந்து வரும் செய்திகளிலிருந்து செவிடாகி தப்பித்து ஓடிவிட விரும்புகிறேன்.\\

.எல்லாரும் கிட்டத்தட்ட ஒரே மனநிலையில்தான் இருக்கிறோம் போலுள்ளது.

முந்தி ஒரு காலத்தில தமிழ்நெற் பதிவு போன்ற தளங்களுக்கு அடிக்கடி போய்ப்பார்த்து வந்த பலர் இப்போது போவதே இல்லை.காரணம் செய்திக்குருடாக இருப்பது எவ்வளவோ மேல்.

அருமையான கடிதம் தமிழ்நதி.இங்கு இணைத்ததற்கு நன்றி குளக்காட்டன்.

Posted

thanks kulakkaddan. Tamil font is not working so i could not write in tamil. anyway thank you so much for posting my letter.

nathy

இது கதையா? அல்லது கடிதமா என்பதற்கு அப்பால், பேசப்படும் பொருள், தற்போதைய ஈழத்து நிகழ்வுகள் தனிமனிதர்களிடம் ஏற்படுத்தும் உணர்வோட்டாங்கள் என்பவற்றை திறம்பட எழுத்தில் வடித்திருப்பதாக நான் கருதுகிறேன். ஈழத்தில் ஏற்படும் போரியல் மாற்றங்கள் ஏன் ஒருவரை மனதளவில் துவண்டுவிடச்செய்கிறன, ஏன் அதீத மகிழ்ச்சியில் திழைக்கச்செய்கிறன என்பதை தமிழ்நதி சொல்லியிருக்கிறார்.

அன்பு நித்திலா,

நலம். போர்சூழ்ந்த இந்நேரத்தில் நீயும் அவ்விதம் இருப்பாயென்றே இன்னமும் நம்புகிறேன்.

“இப்போது எங்கே இருக்கிறாய்…?”என்ற கேள்வியுடன் தொடங்கி எனது நாடோடித்தன்மையைக் குறித்துப் பரிகசித்திருந்தாய். ‘நான் உன்னுடன் தான் இருக்கிறேன்’ என்று நாடகத்தன்மையுடன் பதிலளிக்கவே விருப்பம். அக்கணத்தில் பொங்கும் நெகிழ்ச்சியில் உனது கண்கள் பனிக்கக்கூடும். தெரிந்தே சொல்லும் பொய்கள் உன்னதமான கணங்களை அளிக்கக்கூடுமெனில், நான் பொய்யுரைக்க விரும்புகிறேன்.

தோழி! இருப்பிற்காக அலைந்தது ஒரு காலம். அலைவதற்காகவே இருப்பென்று இப்போது தலைகீழாக்கிவிட்டேன். பால்வீதியில் மிதந்து செல்லும் கோள்களைப் போல நாடுகள். நான் இருக்குமிடமே இப்போதென் சூரியன் மையப்புள்ளி. இங்கு மோட்டார் சைக்கிள்களும் கார்களும் விசையிலிருந்து இழுத்துவிடப்பட்டவை போல விரைகின்றன. பரபரப்பு இந்நகரின் பிரதான தொனி. இங்கு இருக்கிறேன். ஆனால், இல்லை. ரொறன்ரோவில் வெள்ளைத்தோல் பளபளக்க நீண்ட குளிர்க்கோட்டுகள் அணிந்து பாதையைக் கடக்க காத்திருக்கிறார்கள். அவர்களோடு மண்ணிறத்தவளாகிய நானும் கடக்கிறேன். ஆனால் நான் அங்குமில்லை. இலண்டனில் புகையிரதத்தில் கரகரத்த குரலில் இருள் நிறத்திலொருவன் குரலுயர்த்திப் பாடுகிறான். இடையிடையே பிசிறடிக்கும் குரல் வழியே பிரிவின் துயர்பொதிந்த வரிகளை அவன் எனக்குள் விசிறுகிறான். நான் அங்குமில்லை. நேதன்ஸ் பிலிப்ஸ் ஸ்குயாரின் அருகிலுள்ள மரத்தடியில் இருக்கிறேன். நித்திலா! என்னை அவ்விதம் கற்பனை செய்யாதே! நான் அங்குமில்லை!

திருவையாற்றில் கனகாம்பிகைக் குளத்தினருகில் இருந்தேன். நீ சைக்கிளை மரத்தில் சாய்த்துவைத்துவிட்டு என்னை நோக்கி வருகிறாய். சீருடை உனக்கு அழகாகப் பொருந்தியிருக்கிறது. நிழலின் குளிர்ச்சியில், நீரின் தெளிவினில் கோவிலிலிருந்து மிதந்துவரும் ஊதுபத்தி வாசனையில் உன் வார்த்தைகளின் வசீகரிப்பில் அன்றைக்கு நானிருந்தேன். நாங்கள் ‘அறிவமுது’பொத்தகசாலைக்குப் (‘பொத்தகசாலையா…?’என்றதற்கு ‘அதுதான் சரி’ என்றாய்) போயிருந்தோம். என்னைவிடச் சிறியவள்… வாழ்வின் இனிய கணங்களில் இன்னமும் கால்பதிக்காதவள்…(அப்படி இல்லை என்பாய் வேறொரு அர்த்தத்தில்) நீ… குனிந்து புத்தகங்களைப் புரட்டியபோது பார்த்துக்கொண்டிருந்த எனக்குள் எதுவோ புரண்டது.

கிளிநொச்சியில் சாலைப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திய நீலநிறச் சீருடையணிந்த காவலன் என்னைப் பார்த்து எதேச்சையாக உதிர்த்த புன்னகையைப் பிரதி செய்தபோது அங்கு நானிருந்தேன். “பாண்டியன் சுவையூற்று”அந்தப் பெயரை உச்சரித்தபோதெழுந்த கிளர்ச்சியில் இருந்தேன். அந்தச் சாலையின் தூய்மையில், கடைகளுக்குச் சூட்டப்பட்டிருந்த கவித்துவப் பெயர்களில் எங்கெங்கும் ஒலித்த தமிழில் இருந்தேன் சில காலம். வானளாவ என்பதெல்லாம் பொய்…. அலைந்த இடங்களில் நெடிதுயர்ந்த நேர்த்தியான அந்தத்தை அண்ணாந்து பார்க்கவியலாத கட்டிடங்களை கண்டதுண்டு. வியப்பெழுந்த போதும் பெருமிதமோ நெகிழ்ச்சியோ கொண்டதில்லை. ஐந்தாறு தானென்றாலும் கிளிநொச்சி-யாழ் சாலையில் இருந்த கட்டிடங்களின் நேர்த்தியில் நெகிழ்ந்துபோன நினைவுகளில் நானிருந்தேன். மீண்டும் போரெழும் போதினில் இவையெல்லாம் என்னாகும் எனும் துக்கத்தில் நானிருந்தேன். இந்தக் கடிதத்தில் நீக்கமற எங்கும் நானிருக்கிறேன் என்று நீ சிரிப்பாய். வேறெப்படிச் சொல்வதென எனக்குச் சொல்லித்தா நித்திலா! உணர்ச்சி எழுத்தானால் அறிவு விலகிப்போய் வேடிக்கை பார்க்கிறது.

ஆனையிறவைக் கடந்து யாழ்ப்பாணம் போனபோது இலங்கை இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட கவசவாகனம் ஒன்றைப் பார்த்தேன். அதில் போராளியொருவனின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பெயரை பூவைத் தொடுமொரு கவனத்துடன் விரல்களால் தடவிப் பார்த்தபோது அழுகை வந்தது. ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய’என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கும்போது கட்டுப்படுத்த முடியாமல் எப்படிக் கண்ணீர் பொங்குமோ… அதைப் போல துடைக்கத் துடைக்க வழிந்தது கன்னத்தில். துன்பியலையே நான் எழுதுவதாக நண்பன் ஒருவன் கூறினான். வலிந்து நான் முயலும் கொண்டாட்டங்களை எப்படியோ மேவிவிடுகிறது உள்ளிருக்கும் வலி.

ஆனையிறவு கைப்பற்றப்பட்ட செய்தியை அறிந்த அன்று அலுவலகத்தில் இருந்த நாங்கள் ஒருவரையொருவர் பெருமிதம் பொங்கப் பார்த்துக்கொண்டோம். அன்று உவகை எங்களைக் காவித்திரிந்தது. ஒருவரையொருவர் நேசமுடன் பார்த்துக்கொண்டோம். நீண்ட நாள் முகம் திருப்பித்திரிந்த தோழியொருத்தி எனக்குத் தேநீர் தந்து ‘மன்னித்துக் கொள்’என்றாள்.

இப்போது நான் செய்திக்குருடாயிருக்கிறேன். ஊரிலிருந்து வரும் செய்திகளிலிருந்து செவிடாகி தப்பித்து ஓடிவிட விரும்புகிறேன். இருந்தும் குரல்கள்… குரல்கள்… வலியைச் செவிகளில் வலுக்கட்டாயமாகக் செலுத்துகின்றன. எனது நம்பிக்கைகளின் மீது சம்மட்டிகள் இறங்குகின்றன. ‘இராஜதந்திரப் பின்னகர்வு’ என்ற சொல்லை துரோகிக்கப்பட்ட துக்கத்தோடு கேட்டுக்கொண்டிருக்கிறேன். நித்திலா! ‘சுயநலத்தால் தம் நிலத்தைக் கைவிட்டு ஓடிப்போனவர்கள் குற்றவுணர்வு கொள்வதுதானே நியாயம்… நீயேன் கோபம்கொள்கிறாய்’என்று நீ வியந்துகொள்வாய். எனினும், கையிலிருந்து சொரியும் மணல்போல நம்பிக்கைகள் உதிர்ந்துபோய்விடுமோ என்றஞ்சுகிறேன். அன்றைக்கு எனது தோழிகளில் ஒருத்தி சொன்னாள் “அவர்கள் மௌனமாக்க விரும்பும் எதிர்க்குரலால் நான் பேச விரும்புகிறேன்”என்று. நேற்றொரு தோழன் சொன்னான் “அவர்களின் பாசிசத்தை நான் மறுதலிக்கிறேன்”என்று. நான் கேட்க விரும்பாதவற்றைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். “நாமெல்லோரும் தேசியத்தை விற்றுக்கொண்டிருக்கிறோம்”எ

Posted

post-845-1169924093_thumb.jpg

thanks kulakkaddan. Tamil font is not working so i could not write in tamil. anyway thank you so much for posting my letter.

nathy

தமிழ்நதி வாருங்கள். வணக்கம், எனது படி பதிவு உங்களையும் யாழுக்குள் இழுத்து வந்துவிட்டதா? :lol:

முன்னமே தள முகவரிகள் பகுதியில் உங்கள் வலைப்பதிவை அறிமுகம் செய்திருந்தேன்.

தமிழில் எழுதுவதற்கு படத்தில் காட்டியது போல் கருத்து களத்தின் கீழே உள்ள பகுதில் ஆங்கில வகை -தமிழ் என தெரிவு செய்தால் தமிழ் உச்சரிப்பை ஆங்கிலத்தில் எழுதினால் தமிழில் வரும்.

post-845-1169924093_thumb.jpg

post-845-1169924112_thumb.jpg

முயற்சி செய்து பாருங்கள். அல்லது கீமான் / ஈ கலப்பை பவித்தும் எழுத முடியும்.

குறிப்பு :படத்தில் அழுத்தி பெரிதாக்க முடியும்.

Posted

நல்ல உயிரோட்டமான எழுத்து நடை நதி, எல்லோருக்கும் இதே உணர்வுதான் .ம்ம்ம்ம்ம் எமக்கென ஒரு தேசம் ஓரு நாள் பிறக்கும்.

இணைப்புக்கு நன்றி குளம்

Posted

thanks kulakkaddan. Tamil font is not working so i could not write in tamil. anyway thank you so much for posting my letter.

nathy

நதி போன்ற உங்கள் தமிழ், யாழ்க் களத்திலும், மடை திறந்து பெருகி ஓட, வருக வருக என வரவேற்கிறேன்.

தமிழ் நதி நலமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.