Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே.கூட்டமைப்பினரை சந்தித்தார் ரீட்டா

Featured Replies

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா சிறுபான்மை இன விவகாரங்களை ஆராயும் விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார்.

இலங்கையின் பாராளுமன்ற கட்டட தொகுதியில் இன்று புதன்கிழமை (19.10.2016) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்திப்பின் போது இலங்கையில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக பல்வேறு இன மத ரீதியிலான இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்ற நிலையில், மக்களுக்கு சம அந்தஸ்து அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இலங்கைக்கு 10 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வந்துள்ள ஐ.நா சிறுபான்மை இன விவகாரங்களை ஆராயும் விஷேட தூதுவர், வடக்கு, கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/politics/01/121553?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

நிக்கிற நிலையிலும் கதைக்கிற மாதிரியிலும் தெரியுது ..நீங்க போங்க நாங்க பாத்துக்கிறம்...எல்லாம் டிசம்பருக்குள்  முடிந்திடும்..

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோமலாய் ஒரு பிரச்சனையும் இல்லை எண்டு சொல்லியிருப்பினம். மாங்கோஸிலை தனியப்போய் சாப்பிட்டவர் இங்கிலிசிலை வெளுத்து வாங்கியிருப்பார்....பேந்தென்ன ரீட்டா....ஓ...ரீட்டா...

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு  என்றால் இவர்கள் இருவர் தானோ???

ஆட்கள் குறைய குறைய நம்பிக்கைகளும் குறையும்

குறையுது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு இன்று ஒரு தலைவன் இல்லையே என்று எல்லோரும் கவலைப்படுகிறோம். இங்கோ இரண்டு தலைவர்கள், வேறென்ன குறை....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Paanch said:

தமிழர்களுக்கு இன்று ஒரு தலைவன் இல்லையே என்று எல்லோரும் கவலைப்படுகிறோம். இங்கோ இரண்டு தலைவர்கள், வேறென்ன குறை....:grin:

உங்க கவலை வெகு விரைவில் தீரும்

ஒருவர் தான் இருப்பார்....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை தொடரலாம் என உத்தேசித்து உள்ளேன் .. ஒரு சின்ன சாம்பிள்

டிஸ்கி:

நிருபர் : ஈழதமிழர் உரிமைகளுக்கு எதிராக பெரும்பான்மை சிங்களவாதிகள் இருப்பதாக கருதுகிறீர்களா..?

தற்போதைய தலைமை : நிச்சயம் கிடையாது ..அவர்களும் எமக்கான நீதியை உணர்ந்து உள்ளர்கள்.,.. அவர்களும் எங்கள் சகோதரர்கள்.. ஆனால் பெரும்பான்மையோர் இதற்கு மாறு பாடான எதிர் மனஉளவியலில் உள்ளார்கள்  ..

இதை  திருப்பி திருப்பி படித்தீர்கள் என்றால் மரை கழண்டு ஏர்வாடி தர்க்காவில் தான் சேரணும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.