Jump to content

கனடா கணவரிடமிருந்து விவாகரத்து கோருகிறார் நடிகை ரம்பா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, தமிழ் சிறி said:

floppy

உண்மை தான்... தனியன் யானைக்கு, மதம் பிடித்தால்.... ஊரையே துவம்சம் பண்ணி விடும். tw_dizzy: :grin:

சரியா

நம்ம முனிவர் மாதிரியே இருக்கே...:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, MEERA said:

நெடுக்கர் தயாரான முனிவரையும் குழப்பிவிடுவார் போல் உள்ளது.

ம்ம் வயது போகுது ஏதாவது வயல் ஒன்றை எடுத்து உழவி பயிரை விதைப்போம் என்று பார்த்தால் உதுகள் விடாதுகள் போல்

அதில் சிறியருக்கும், விசுகருக்கும் என்ன சந்தோசம் பாருங்கள் 

9 hours ago, விசுகு said:

சரியா

நம்ம முனிவர் மாதிரியே இருக்கே...:grin:

யோவ் இது குட்டி யானை நான் கொம்பன் யானையாக்கும்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • 4 weeks later...
Posted

கணவரை சேர்த்து வைக்கக்கோரிய நடிகை ரம்பா வழக்கு ஒத்திவைப்பு

ramba-_husband_11209.jpg

கணவர் இந்திரகுமாருடன் சேர்த்து வைக்கக்கோரி நடிகை ரம்பா தொடர்ந்த வழக்கு விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பிரபல நடிகையான ரம்பா, இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இதனிடையே, கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி நடிகை ரம்பா, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

http://www.vikatan.com/news/cinema/74045-kollywood-actress-rambhas-divorce-petition-adjourned.art

ரம்பா அல்வா கேட்டவர் நோட் திஸ் நியூஸ்...:grin:

Posted
On 10/25/2016 at 4:03 PM, Nathamuni said:

ஆடின பாதமும், பாடிய வாயும் சும்மா இராது என்று சும்மாவா சொன்னாங்க 

:rolleyes:

இலங்கைத்தமிழரில் திரை உலகக் காதல் கொண்டவர்களில்...

வித்யா நடிகர் விஜய்... இந்தக் காதல், விஜய் நடிக்க ஆரம்பிக்கு முன்னர் ஆரம்பித்ததால்... தப்பிப்பிழைக்கிறது.

மாதுரி என்னும் நடிகையினை, லண்டனில் இருந்து போன அரவிந்தன் கலியாணம் செய்தார். விசா கிடைக்கவில்லை.. பிரிந்து விட்டனர். அந்த நடிகையும் பின்னர் விபசார வழக்கில் சிக்கினார்.

லண்டனை சேர்ந்த முரளி என்பவர் நடிகை பானுப்பிரியாவுடன் வாழ்ந்து விலகினார்

முதல் மரியாதைக்கு படத்தில் நடித்த ரஞ்சனி என்னும் (மலேசிய ) நடிகையினை கேதீஸ் என்பவர் கட்டி, இருவருமாக வாழ்தம்ஸ்டோவ் பகுதில் ட்ராவல் agency நடத்தி... சரி வரவில்லை... பிரிந்தனர்.

நடிகை ரம்பா.... இந்திரன் இப்போது...

தகவல்களை விரல் நுனியில் வச்சிருக்கிறது எண்டால் இதுவா, சார்?! :D:

  • 1 month later...
Posted

விவகாரத்து வழக்கில் ஆஜராகாததால் நடிகை ரம்பாவுக்கு கோர்ட்டு கண்டனம்

விவகாரத்து வழக்கில் ஆஜராகாததால் நடிகை ரம்பாவுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.

 
 
201701211339513464_Court-Condemned-ramba
 
நடிகர் பிரபு நடித்த உழவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரம்பா என்ற விஜயலட்சுமி.

இவருக்கும், இலங்கை தமிழரான இந்திரகுமார் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் கனடாவில் வாழ்ந்தனர்.

இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், கணவருடன் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ரம்பா சென்னைக்கு வந்து விட்டார்.

இதையடுத்து சென்னை குடும்பநல கோர்ட்டில் நடிகை ரம்பா ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ‘தன் கணவரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

தற்போது சினிமாவில் நடிக்காததால் தனக்கு வருமானம் எதுவும் இல்லை. அதனால், மாதந்தோறும் தனக்கு ரூ.1.50 லட்சமும், தன் இரு மகள்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம், ரூ. 1. லட்சமும், ஆக ரூ.2.50 லட்சம் ஜீவனாம்சம் வழங்க கணவர் இந்திரகுமாருக்கு உத்தரவிட வேண்டும்’ என் றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த டிசம்பர் 3-ந்தேதி விசா ரணைக்கு வந்தபோது, ரம்பா மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அதில், என் னுடைய கணவர் என் னுடன் சேர்ந்து வாழவில்லை. குழந்தைகள் இருவரும் என்னுடைய கட்டுப் பாட்டின் கீழ் தான் உள்ளனர். அவர்கள் சென்னையில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர். எனவே, இந்த இரு குழந்தைகளின் சட் டப்படியான பாதுகாவலராக என்னை (ரம்பாவை) அறி விக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பூங்குழலி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரம்பாவும், அவரது கணவரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர்கள் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கேட்டு வழக்கு தொடர்ந்து விட்டு ரம்பா விசாரணைக்கு வராமல் இருந்தால் என்ன அர்த்தம்? கடந்த டிசம்பர் மாதம் நடந்த விசாரணைக்கும் அவர் வரவில்லை. இப்போதும் அவர் வரவில்லை என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

பின்னர் வழக்கு விசாரணையை பிப்ரவரி 4-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/01/21133951/1063393/Court-Condemned-ramba-in-the-case-of-divorce.vpf

  • 1 month later...
Posted

நடிகை ரம்பாவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

ramba-_husband_12086.jpg

கணவன்-மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை இன்று மாலை 6 மணிக்குள் சமரச மையத்தில் பேசி தீர்க்க ரம்யாவுக்கும், அவரது கணவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

கனடா தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதன் என்பவரைக் கடந்த 2010-ம் ஆண்டு நடிகை ரம்பா திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனிடையே, கணவரைத் தன்னுடன் சேர்த்து வைக்கோரி ரம்பா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், இரண்டு பெண் குழந்தையுடன் தனியாக வாழ முடியவில்லை. குடும்ப வாழ்க்கையை தற்போது புரிந்துகொண்டுவிட்டேன். கருணை அடிப்படையில் தன் கணவருடன், தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரம்பா தனது இரண்டு குழந்தைகளுடன் ஆஜரானார். அவரது கணவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, கணவன்-மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை இன்று மாலை 6 மணிக்குள் சமரச மையத்தில் பேசி தீர்க்க ரம்யாவுக்கும், அவரது கணவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/84103-actress-rambha-seeks-courts-help-to-save-marriage.html

  • 3 weeks later...
Posted

நடிகை ரம்பாவின் கணவர், உயர்நீதிமன்றத்தில் முக்கிய தகவல்

Actress Ramba

கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாதன் என்பவரை கடந்த 2010-ம் ஆண்டு நடிகை ரம்பா திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனிடையே, கணவரைத் தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் ரம்பா. அதில், இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வாழ முடியவில்லை. குடும்ப வாழ்க்கையைத் தற்போது புரிந்துகொண்டுவிட்டேன். கருணை அடிப்படையில் தன் கணவருடன் தன்னைச் சேர்த்துவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, இந்திரன், ரம்பாவிடம் உள்ள குழந்தைகளை மீட்டுத்தரக் கோரியிருந்தார். இதனிடையே, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கணவன்-மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை சமரச மையத்தில் பேசித் தீர்க்கவும் அறிவுரை வழங்கி இருந்தது.

இந்நிலையில், வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனைவி ரம்பாவுடன் சேர்ந்து வாழ இருப்பதாக கணவர் இந்திரன் பத்மநாதன் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது.

http://www.vikatan.com/news/tamilnadu/85505-case-between-actress-ramba-and-her-husband-has-come-to-end.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது பெரும் பிரச்சினையா இருக்குதே 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு என்னமோ ரம்பா கனடா சிட்டிசன் எடுக்க 
கலியாணம் கட்டின மாதிரிதான் தெரியுது .......

இனி கள்ள காசை வெள்ள காசு ஆக்கலாம் 
வெள்ளையை கறுப்பாக்கலாம் ...

ரம்பாவின் வலையில் மாப்பிளை விழுந்த மாதிரிதான் இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, முனிவர் ஜீ said:

இது பெரும் பிரச்சினையா இருக்குதே 

சீ

அப்படி இருக்காது..:grin:

Posted

கணவருடன் சேர்ந்த ரம்பா குடும்பத்துடன் திருப்பதியில் தரிசனம் - வீடியோ இணைப்பு

கணவருடன் மீண்டும் சேர்ந்த ரம்பா, தனது குடும்பத்துடன் திருப்பதியில் தரிசனம் செய்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

 
201704111148088527_Ramba-dharshan-in-Tir
 
நடிகை ரம்பாவுக்கு, கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனுக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு லான்யா, சாஷா என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக நீதிமன்றம் வரை சென்று தனது கணவரை பிரிய முடிவு செய்தார் ரம்பா.

பின்னர், மனம் மாறி தன்னை கணவருடன் சேர்த்து வைக்குமாறு நீதிமன்றத்திடம் முறையிட, அவர்களுக்கு நீதிமன்ற நல்ல தீர்ப்பை வழங்கி சேர்த்தும் வைத்தது. இந்நிலையில், கணவருடன் மீண்டும் சேர்ந்த ரம்யா முதல் வேலையாக தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

201704111148088527_ramba1-X._L_styvpf.gi

ரம்பா தற்போது எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இருப்பினும், தனியார் தொலைக்காட்சி நடத்தும் ரியாலிட்டி ஷோவில் நடுவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்யா தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த காட்சி
 
 
 
 

 

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/04/11114804/1079326/Ramba-dharshan-in-Tirupathi-Temple-with-family.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.