Ltte-Ledrதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காலத்தில் வடக்கில் ‘ஆவா’ குழு போன்ற சமூகவிரோதக் குழுக்கள் தலைத்தூக்க இடமளிக்கப்படவில்லை என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ஆவா குழு எனப்படும், உந்துருளிகளில் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடும் சமூகவிரோத குழுவை, முன்னைய ஆட்சி காலத்தில் வடக்கில் உயர் பதவியில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவரே, இரகசியமாக உருவாக்கினார் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே இவ்விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போர் முடிவுக்கு வந்த பின்னர், நன்கு திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட அடிப்படையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே பொலிஸ்துறை இதனைக் கண்டுபிடித்துள்ளது.

வடக்கில் யுத்தத்திற்கு முன்னரும், பின்னருமான காலப்பகுதியில் இத்தகைய செயற்பட்டு வந்துள்ள போதிலும், விடுதலைப் புலிகள் இருந்த போது, இத்தகைய குழுக்கள் ஏதும் இருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.