Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண வெற்றிக்கு பிறகு தேசியத்தலைவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாம்-லங்காதீப

Featured Replies

வாகரை மற்றும் கிழக்கு மாகாணப் பிரதேசங்களில் அரச படையினருக்கு பெருவெற்றி கிடைத்திருக்கும் இந்த நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு பற்றித் தெரிவிக்கப்பட்டிருக்கும் விமர்சனங்களுக்கேற்ப, கடந்த எந்தவொரு காலகட்டத்திலும் எந்தவொரு யுத்த முனை நடவடிக்கையிலும் பிரபாகரனுக்குக் கிடைக்காத தோல்வியும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் அரச படையினர் மேற்கொண்டிருக்கும் தற்போதைய வெற்றிகரமான தாக்குதல்களுக்குப் பின்னர் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், அதன் தலைவர் பிரபாகரனுக்கும் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் முன்னர் இந்திய அமைதிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட `ஒபரேஷன் பவன்' (Operation Bawan) இராணுவ நடவடிக்கையின் போதுகூட ஏற்படவில்லையெனவும் மட்டுப்படுத்தப்படாத இந்திய இராணுவத்தின் தீவிர இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் புலிகள் இயக்கத்துக்கும் பிரபாகரனுக்கும் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காட்டிலும் ஷ்ரீலங்கா அரச படையினரின் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலம் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது அரச படையினரின் தாக்குதல் பலம் பெருமளவில் அதிகரித்திருப்பதையே துல்லியமாக எடுத்துக் காட்டுவதாகவும் மேற்படி விமர்சனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த நிலைமையைத் தொடர்ந்து தற்போது புலிகள் இயக்கத் தலைவருக்கு அவருடைய நெருங்கிய சகாக்கள் அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாகவும் அவற்றுக்கேற்ப பிரபாகரன் அவருடைய வழமையான பிரதான இரகசிய நிலையத்தில் அவர் பதுங்கியிருப்பதே பாதுகாப்பானது எனச் சகாக்கள் கூறியிருப்பதாகவும் தெரிகிறது.

மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பினதும் பிரபாகரனினதும் பாதுகாப்பு நிலைமைப் பற்றித் தெரிவிக்கப்பட்டிருக்கும் விமர்சனங்களில் இவ்வாறு பிரபாகரன் சுகமாக பதுங்கியிருந்து கொண்டு பதில் யுத்த நடவடிக்கைகளைத் தொடரக் கூடிய சாத்தியமே இருப்பதாகவும் இவ்வாறு முடிவில்லாத யுத்தம் ஒன்றே பிரபாகரனின் குறிக்கோளாக இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை "சொக்கன்கள்" யுத்தப் பலியாக `லொக்கன்கள்" சுகமாக இருப்பது போன்றே எனவும் இதனால் யுத்தம் பற்றிய ஒரு தீர்மானமான நிலைமை ஏற்படப் போவதில்லை எனவும் விமர்சனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவினைவாதக் கொள்கையில் நிலையூன்றிவிட்ட இந்தப் புலிகள் இயக்கத் தலைவர்கள் பலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது முல்லைத்தீவு பிரதேசத்திலேயே ஆகும். ஏனைய அனைத்துப் பிரதேசங்களிலும் பிரபாகரனும் முக்கிய உபதலைவர்களும் பதுங்கியிருப்பது தற்காலிகமான மறைவிடங்களிலேயே ஆகும். அந்தத் தற்காலிக பதுங்குமிடங்களை அவர்கள் எந்த நேரத்திலும் கைவிட்டுப் போகக்கூடிய நிலைமையே தற்போது உள்ளது. வேறு வகையில் கூறுவதானால் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும், அவருடைய ஏனைய பிரதான தலைவர்களும் தற்போது செய்துகொண்டிருப்பது நடமாட்ட யுத்தம் (Mobile Warfare) ஒன்றையே. எனவே, தற்போது அரசபடையினர் தொடுத்திருக்கும் வெற்றிகரமான யுத்தத்தின் பின்னர் புலிகள் இயக்கத்தினரால் நடமாட்ட யுத்தத்தை மட்டுமே மேற்கொள்ளக்கூடிய பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், தற்போது புலிகள் இயக்கத் தலைவரும் அவருடைய நெருங்கிய சகாக்களான உபதலைவர்களும் தற்போது பதுங்கியிருக்கும் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் இன்னும் வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனினும், முல்லைத்தீவுக்குத் தெற்கே மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் முல்லைத்தீவைக் குறிவைத்து அதன் திசையிலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இதுவரை, முல்லைத்தீவில் எதிர்பார்க்கப்பட்ட யுத்தவெற்றி கிட்டவில்லை. எனவே, பிரபாகரன் முல்லைத்தீவிலோ அதற்குத் தெற்கிலோ ஒரு அதிசிறந்த தாக்குதல் நடவடிக்கையே (Super Operation) ஆரம்பிப்பதற்கான அறிவுறுத்தலைக் கொடுக்கும் பட்சத்தில் அதற்கு எதிரான அரச படையினரின் தீவிர தாக்குதல்களுக்கு பதுங்கி வாழும் பிரபாகரனும் உள்ளாகவேண்டிய நிலையேற்படும்.

லங்காதீப விமர்சனப் பகுதி 25.01.2007

http://www.thinakkural.com/news/2007/1/27/...s_page20121.htm

இதற்கு மிக விரைவில் விளக்கமான பதில் கிடைக்கும்.

சிங்களப் பத்பதிரிகைகள் அந்த மக்களுக்கு இப்படித்தான் சொல்வார்கள்.

மகிந்த பதுங்கு குழி வெட்டுவதை மறைத்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்களுக்குள் பிழை பிடிக்கும் யாழ்கள மேதாவிகள் இப்படிச் சிங்கள அரசு செய்யும் பிரச்சாரங்களுக்கு மக்கள் மயங்காமல் இருப்பதற்கும் ஆவன செய்வார்களா? அல்லது நம்மவர்களை எள்ளி நகையாடி தங்களின் மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்வார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவருடைய சகாக்கள் கதைத்ததை இவர்களால் அறியமுடிகிறது.. ஆனால் அவர் இருக்கும் இடத்தை அறியமுடியவில்லை..

இதில் இருந்தே தெரிகிறது இவர்களது பொய் பித்தலாட்ட சித்தரிப்பு..

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் சந்தோஷமாக இருக்க அவர்களது பத்திரிகைகள் இயலுமான உதவிகளைச் செய்கின்றன. தமிழர்கள் இத்தகைய செய்திகளைப் படித்து மிரட்சியடைவதை விட்டுவிட்டு சிரித்து ஒதுக்கவேண்டும்!

இது ஒரு உளவியல் யுத்தமாக இருக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மவர்களுக்குள் பிழை பிடிக்கும் யாழ்கள மேதாவிகள் இப்படிச் சிங்கள அரசு செய்யும் பிரச்சாரங்களுக்கு மக்கள் மயங்காமல் இருப்பதற்கும் ஆவன செய்வார்களா? அல்லது நம்மவர்களை எள்ளி நகையாடி தங்களின் மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்வார்களா?

இந்த ஊடகங்களின் நம்பகத்தன்மை தமிழ் மக்களிடம் மட்டுமல்ல சிங்கள மக்களிடமே தொலைத்து வெகுகால மாகிவிட்டது. பயித்தியக்காறனுடைய கற்பனை வளத்துக்கு எல்லை கிடையாது.

முண்டங்களாயும், உடல் துண்டங்களாயும் இராணுவச் சடலங்களாக தெற்கில் வந்து குவிந்த போதும்,

இந்த வாய்பேச்சின் குணம் மட்டும் அன்றும் அப்படியேதான் இருந்தது. கெடுகுடி சொல் கேளாது.

இப்படி முப்பது வருடங்களாக தொடர்ந்து ஒன்றையே சொல்லிக் கொண்டுருப்பதற்கு அவர்கள் ஊடகங்கள் வெட்கப்படப் போவதும் இல்லை. இதையே தமது ஊடக மரபாக்கிக் கொண்டு விடார்கள்.

முன்புதான் தமிழீழத்தேசியத்தலைவர் சுனாமியில் பொட்டுஅம்மானுடன் சேர்ந்து இறந்துவிட்டதாய் சொன்னார்களே! இப்போது தலைவரின் ஆவியைப்பற்றியா பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்? விளங்காத்தீபத்தின் செய்திகள் யாழ் தளத்திற்குத் தேவைதானா? :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.