Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்குத் தாவினர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

24 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்குத் தாவினர்.

- பண்டார வன்னியன் Sunday, 28 January 2007 12:30

சிறிலங்காவின் ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சிகளில்இருந்து 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாவியுள்ளதாக கொழும்புச்செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.தே.க.விலிருந்து 18 பேரும் முஸ்லீம் கொங்கிரசிலிருந்து 6 பேருமே இவ்வாறு கட்சிதாவியுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடக ஒருங்கிணைப்பாளராகிய லூசியன் இராஜகருணநாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற சிறிலங்கா அமைச்சரவை விஸ்தரிப்பின் போது இந்தக்கட்சி தாவிய பாராளுமன்ற உறுப்பினர்களுட் பலர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

கொழும்பின் இரண்டு பிரதானகட்சிகளிடையேயும் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை இந்தக் கட்சித்தாவல்மூலம் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தமது கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்குள் உள்வாங்குவாராக இருந்தால் தமக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிந்துபோகும் என ஐ.தே.கட்சியின் உயர்வட்டாரங்கள் பலதடவைகள் நேரிலும் கடிதமூலமும் அறிக்கைகள் மூலமும் எச்சரித்திருந்தபோதும் மகிந்தராஜபக்ச கட்சித்தாவிய ஐ.தே.க உறுப்பினர்களுக்கு அமைச்சர்களாகப் பதவிப்பிரமாணம் செய்துவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்குள்ளும் கட்சிதாவும் உறுப்பினர்களை உள்வாங்குவது தொடர்பாக அதிருப்தி நிலவுகின்றது. “பல ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவுதர முன்வருவது அமைச்சர் பதவிகளுக்கும், தமது புகழுக்கும், அரச உடமைகளை தாம் திருடிய குற்றத்தில் இருந்து தப்புவதற்குமே” என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மகிந்த ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

இணைத்தலைமை நாடுகள், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகமும் இருகட்சிகளுக்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் எக்காரணம்கொண்டும் முறிந்துபோகக் கூடாதென தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.

24 கட்சிதாவிய உறுப்பினர்களுடன் சேர்த்து ஆளுங்கட்சிக்கு இப்போது 114 ஆசனங்கள் பாராளுமன்றத்தில் உள்ளன.

சங்கதி.கொம்

குரங்குகள் மரங்களில் தாவித்தாவித் திரியும் என்பதை பள்ளிக்கூடத்தில் முதலாம் வகுப்பில் நீங்கள் படிக்கவில்லையோ? இதையெல்லாம் போய் பெரிசுபடுத்திக்கொண்டு இருக்கிறியள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வகையில் இது எமக்கு நன்மை தான். இரண்டு கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தி, தமிழனின் தலையில் ஏதும் கட்டிவிடலாம் என்றும், சிங்களக் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தி தமிழர் போராட்டத்தை நசுக்க முயன்ற சக்திகளுக்கும் இது பெரிய அடி.

இந்த விடயத்தில் உலகம் ஒரு பாடத்தினைப் படித்துக் கொள்ளும். என்றைக்கும் சிங்கள தேசம் ஒற்றுமையாக இருக்காது. அது தமிழனுக்கு சரியான தீர்வினைத் தரவும் போவதில்லை என்பதை, ஒற்றுமையாகக் காலம்கடத்திய கடந்த 94நாள் இருகட்சித் தேனிலவில் நடந்தவை பதில் சொல்லி நிற்கும்.

.................................

ஆளும்கட்சிக்கு ஆட்கள் கூடிவிட்டார்கள் என்று நினைக்கத்தேவையில்லை. சந்திரிக்கா காலத்திலும் பாராளுமன்றம் பெரும்பான்மையையோடு தான் யுத்தம் நடத்தியது. அன்று 113வது ஆசனமாக, மலையகமக்கள் முன்ணனித் தலைவர் சந்திரசேகரன் ஆதரவளித்தார். ஆனால் பின்பு சந்திரிக்கா அவரை 4ம் மாடியில் போட்டு எடுத்தார். இப்பவும் அவர் மகிந்த அரசுக்கு ஆதரவளிக்கின்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரணில் கட்சி 'டமால்': 18 அதிருப்தி எம்.பிக்கள் அமைச்சர்களாக பதவியேற்பு சமரவீரா நீக்கம்!

ஜனவரி 28, 2007

கொழும்பு: இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி உடைந்தது. 18 அதிருப்தி எம்.பிக்கள் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்றனர். வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்து மங்கள சமரவீரா நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் சுதந்திராக் கட்சியின் தலைமையில் அங்கு கூட்டணி ஆட்சி உள்ளது. இந்தக் கட்சிக்கு சிங்கள கட்சிகள் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு கொடுத்து வருகின்றன.

சமீபத்தில் சில கட்சிகள் தாங்கள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றன. இதையடுத்து ஆட்சியைக் காப்பாற்ற ரணில் கட்சியுடன் அதிபர் ராஜபக்ஷே பல்வேறு உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் ரணில் கட்சியில் தற்போது பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. ரணில் கட்சியைச் சேர்ந்த முக்கியமான 18 எம்.பிக்கள் அக்கட்சியிலிருந்து விலகி சுதந்திரா கட்சியில் இன்று இணைந்தனர்.

ரணில் கட்சியின் முக்கியத் தலைவரான கரு ஜெயசூர்யா தலைமையில் 18 எம்.பிக்களும் கட்சி தாவியுள்ளனர். கட்சி தாவியவர்களில் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் முக்கியமானவர். ரணில் ஆட்சியின்போது விடுதலைப் புலிகளுடன் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் அரசுக் குழுவுக்கு பெரீஸ்தான் தலைமை தாங்கினார் என்பது நினைவிருக்கலாம்.

ரணில் கட்சி உடைந்ததன் மூலம் ஆளுங்கட்சியுடன் அக்கட்சி செய்து கொண்ட ஒப்பந்தம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அதிபர் ராஜபக்ஷேவின் சதியால்தான் ரணில் கட்சி உடைந்துள்ளதாக இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

அமைச்சர்களாகப் பதவியேற்பு:

கட்சி தாவிய 18 எம்.பிக்களும் பின்னர் அதிபர் ராஜபக்ஷேவை அவரது அதிகாரப்பூர்வ இல்லமான ரெய்ன்ட்ரீ மாளிகையில் சந்தித்தனர். இதையடுத்து அவர்களுக்கு அதிபர் ராஜபக்ஷே அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் இலங்கை அமைச்சரவை 51 அமைச்சர்களாகக் கொண்டதாக விரிவடைந்தது.

2005ம் ஆண்டு அதிபராக ராஜபக்ஷே பதவியேற்ற பிறகு அமைச்சரவை முதல் முறையாக இன்றுதான் விரிவுபடுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ராப் ஹக்கீம், துறைமுகத் துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்தக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ஐந்து எம்.பிக்கள் உள்ளனர்.

புதிய வெளியுறவு அமைச்சர்:

அமைச்சரவையில் முக்கிய மாற்றமாக வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியை வகித்து வந்த மங்கள சமரவீரா அப்பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக ரஹிதா பொகல்லகாமா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமைதிப் பேச்சுக்களுக்கான அமைதி செயலகத்தின் செய்தித் தொடர்பாளராக இதுவரை இருந்து வந்தார்.

ரணில் கட்சியிலிருந்து விலகிய 18 எம்.பிக்கள் குழுவின் தலைவரான கரு ஜெயசூர்யா, பொது விவகாரம் மற்றும் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்லார்.

ஜி.எல். பெரீஸ், ஏற்றுமதி மற்றும் சர்வதேச வர்த்தக் துறை அமைச்சராகியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் ராஜபக்ஷே அரசுக்கு 135 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் சிங்களக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் 38 எம்.பிக்களும் அடக்கம். ரணில் கட்சி எம்.பிக்களை ஆட்சியில் சேர்த்தால் ஆதரவை வாபஸ் பெறுவோம் என ஜனதா விமுக்தி பெரமுனா ஏற்கனவே எச்சரித்துள்ளது நினைவிருக்கலாம்.

தற்போது 18 எம்.பிக்கள் சுதந்திராக் கட்சியில் சேர்ந்துள்ளதால், ராஜபக்ஷே அரசுக்கு மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், ஜனதா விமுக்தி பெரமுனா தனது ஆதரவை விலக்கிக் கொண்டாலும் கூட ராஜபக்ஷே அரசுக்கு பெரும்பான்மை பலம் இருக்கும்.

ராஜபக்ஷே அரசுக்கு ஏற்கனவே தமிழர் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் முன்னணி, ஜாதிக ஹேல உருமயா ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன.

http://thatstamil.oneindia.in/news/2007/01/28/lanka.html

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா,, போற போக்கை பார்த்தால் எண்ட கட்சி அதுதானப்பா ஜனநாய்கட்சி EPDP (எடுபிடி.பிள்ளை கடத்தும் கும்பல்) தான் இலங்கையின் எதிர்கட்சியா வரப்போகுது போல?? நான் ரெடி சங்குரி நீ ரெடியா?? (அட மண்டையை போடுறதிற்கில்லையப்பா) கட்சியை ஒண்டாக்கிறதுக்கு.. :D

ஆக்க இப்ப ரணிலோட ஜெலத் ஜெயவர்த்தனாவும் ,மகேஸ்வரனும் தான் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள் போலும்

மஹிந்த கணக்கிலை புலி 24 குரங்குகள் எடுத்து 114 ஆக்கிட்டார் அவருக்கு பெரும்பாண்மையைவிட ஒருவர் கூடிவிட்டார் அவர் டக்கிலசைய் கணக்கில் எடுக்கவில்லை போலா

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா,, போற போக்கை பார்த்தால் எண்ட கட்சி அதுதானப்பா ஜனநாய்கட்சி EPDP (எடுபிடி.பிள்ளை கடத்தும் கும்பல்) தான் இலங்கையின் எதிர்கட்சியா வரப்போகுது போல?? நான் ரெடி சங்குரி நீ ரெடியா?? (அட மண்டையை போடுறதிற்கில்லையப்பா) கட்சியை ஒண்டாக்கிறதுக்கு.. :D

எஸ் பி இருக்கின்றார்...ரணில் அவரை முன்னிலை படுத்தினால் ஜக்கிய தேசிய கட்சிக்கு சிறப்பான எதிர் காலம் அமையும் மகிந்தவுக்கு போட்டியாக எதிர் கட்சி வரிசையில் இருப்து அவர் ஒன்று தான் சிறந்த பேச்சாளர் தொண்டாகளை கைக்குள் வைத்து இரு;பவர் அடிமட்ட மக்களோடு பழக கூடியவர்...

உண்மைதான். ஆனால் அவரும் ரெண்டு மனசிலை தான் இருக்கிறார். மஹிந்த அவரைச் சேர்த்துக் கொள்ள அதிகம் விருப்பம் காட்ட இல்லையாம்.

28_01_07_cabinet_min_03.jpg

புரிந்துணர்வு உடன்படிக்கை முடிவுக்கு வருகிறது?

சுதந்திரக் கட்சியுடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை முடிவுக்கு வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

நேற்று சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்வை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனநாயக்க, தமது கட்சியின் மாற்று அணியினர் அரசாங்கத்தில் இணையும் போது, புரிந்துணர்வு உடன்படிக்கை முடிவுக்கு வரும் என கூறியுள்ளார்.

இதனிடையே சிறீலங்கா அரசாங்கத்திற்கு கட்சி தாவியிருக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்று அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுயாதீன அணியாக நாடாளுமன்றத்தில் செயற்படப் போவதாக சபாநாயகருக்கு எழுத்து மூலம்

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

கரு ஜெயசூரியா கம்பகா மாவட்டத்தில் செல்வ்வக்கு மிக்க தலைவர் பண்டாரநாயக்கா குடும்பத்தை கம்பகா மாவட்டத்தில் ஓரம் கட்ட கருவை பயன்படுத்தக் கூடும்.ஆனால் கரு ஒரு எளிமையான அரசியல் வாதி டக்ல்ஸ் வீட்டுக்கு அருகிலேயே அவ்வர் வீடும் இருக்குது எந்தவிதமான பாதுகாப்புதடையும் அங்கில்லை பொல்லிஸ் மாத்திரமே அவருக்கு காவலுக்கு நிற்பார்கள் அதுவும் மிசக்ட்தி அமைசாராக அவர் ஈருந்த காலத்தில் ஆனால் அவர் ஏன் கட்சிமாறினார் என புரியவில்லை

ஐ.தே.க.எம்.பி.க்கள் அரசில் இணைவதால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வுவரப்போவதில்லை

[28 - January - 2007] [Font Size - A - A - A]

-யுத்தமே தொடரும் என்கிறார் மகிந்த விஜயசேகர

- ப.பன்னீர்செல்வம் -

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் ஐ.தே.கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைவதால் வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லையென உறுதியாகத் தெரிவிக்கும் ஐ.தே.கட்சியின் மாத்தறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த விஜயசேகர, இதனால் தான் அரசாங்கத்துடன் இணையப்போவதில்லையென்றும் ஜே.வி.பி யும், ஜாதிக ஹெலஉறுமயவும் வெளியேற்றப்பட்ட பின்னரே அரசுடன் இணையமுடியுமென்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும் ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த விஜேசேகர மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும், மங்கள சமரவீரவும் ஜே.வி.பி.யினதும்,ஹெல உறுமயவினதும் ஆதரவைத் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளனர். அத்தோடு ஐ.தே.கட்சியினர் அமைச்சர் பதவிகளுக்காகவே இணைகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. இந்த நிலையில் வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கல் மூலமே தீர்வு காணப்பட வேண்டுமென்ற ஐ.தே.கட்சியின் நிலைப்பாட்டை முன்னெடுக்க முடியாது- மாறாக யுத்தமே தொடரும்.

எனவே அரசாங்கத்துடன் இணைவதால் நாட்டிற்கு நன்மை கிடைக்கப்போவதுமில்லை, தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதுமில்லை.

அத்தோடு ஐ.தே.கட்சியிலிருந்து வெளியேறும் குழுவினரை குறை கூறவும் மாட்டேன். ஏனென்றால் கட்சித் தலைவர் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாது மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாலேயே இவ்வாறான பிரிவுகள் இடம் பெறுகின்றன.

எனவே நான் அரசாங்கத்துடன் இணைவதில்லையென்ற தீர்மானத்தை எடுத்துள்ளேன் என்றும் மகிந்த விஜயசேகர எம்.பி தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/2007/1/28/...s_page20187.htm

கரு ஜயசூரியவின்

அலுவலகம் மூடப்பட்டது

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக இருந்த கரு ஜயசூரியவின் கம்பஹா மாவட்ட அலுவலகம் நேற்று கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களால் இழுத்து மூடப்பட்டது.

கரு ஜயசூரிய, அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டதால் ஆத்திரமடைந்த கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் நேற்று அவரது அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்த கட்சியின் பெயர்ப் பலகையினை அகற்றினர். அலுவலகத்தின் உள்ளே இருந்த கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் படம் மற்றும் தளபாடங்களையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவர்கள் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. (த9)

http://www.sudaroli.com/pages/news/today/15.htm

  • கருத்துக்கள உறவுகள்

ஜி.எல்.பிரிஸ் தமிழக மந்திரிமார்களைவிட நல்லாய் கட்சி தாவுவார் போல இருக்குது. சுதந்திரக் கட்சியில் இருந்து ரணிலின் ஜக்கிய தேசிய கட்சிக்கு வந்து பிறகு மகிந்தாவின் சுதந்திரக் கட்சிக்கு தாவிவிட்டார். இனி ஜக்கிய தேசியக்கட்சி பிற்காலத்தில் பலமாக வந்தால் திரும்பி போனாலும் போவர்

28_01_07_cabinet_min_03.jpg

புரிந்துணர்வு உடன்படிக்கை முடிவுக்கு வருகிறது?

சுதந்திரக் கட்சியுடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை முடிவுக்கு வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

நேற்று சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்வை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனநாயக்க, தமது கட்சியின் மாற்று அணியினர் அரசாங்கத்தில் இணையும் போது, புரிந்துணர்வு உடன்படிக்கை முடிவுக்கு வரும் என கூறியுள்ளார்.

இதனிடையே சிறீலங்கா அரசாங்கத்திற்கு கட்சி தாவியிருக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்று அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுயாதீன அணியாக நாடாளுமன்றத்தில் செயற்படப் போவதாக சபாநாயகருக்கு எழுத்து மூலம்

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

கரு ஜெயசூரியா கம்பகா மாவட்டத்தில் செல்வ்வக்கு மிக்க தலைவர் பண்டாரநாயக்கா குடும்பத்தை கம்பகா மாவட்டத்தில் ஓரம் கட்ட கருவை பயன்படுத்தக் கூடும்.ஆனால் கரு ஒரு எளிமையான அரசியல் வாதி டக்ல்ஸ் வீட்டுக்கு அருகிலேயே அவ்வர் வீடும் இருக்குது எந்தவிதமான பாதுகாப்புதடையும் அங்கில்லை பொல்லிஸ் மாத்திரமே அவருக்கு காவலுக்கு நிற்பார்கள் அதுவும் மிசக்ட்தி அமைசாராக அவர் ஈருந்த காலத்தில் ஆனால் அவர் ஏன் கட்சிமாறினார் என புரியவில்லை

டக்கி கதிரை இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஜி.எல்.பிரிஸ் தமிழக மந்திரிமார்களைவிட நல்லாய் கட்சி தாவுவார் போல இருக்குது. சுதந்திரக் கட்சியில் இருந்து ரணிலின் ஜக்கிய தேசிய கட்சிக்கு வந்து பிறகு மகிந்தாவின் சுதந்திரக் கட்சிக்கு தாவிவிட்டார். இனி ஜக்கிய தேசியக்கட்சி பிற்காலத்தில் பலமாக வந்தால் திரும்பி போனாலும் போவர்

நாட்டின் ஸ்திரத்தன்மையைவிட சொந்த நலன் முக்கியமல்ல என்ற நல்ல சிந்தனையுடன் அவரும் (மற்றவர்களும்) அமைச்சராகியுள்ளார் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

113 பெரும்பான்மைக்காக இழுத்து வரப்பட்ட மகிந்த விஜயசேகர

ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மகிந்த விஜயசேகரவை உள்வாங்கியது அரச மட்டத்தில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் விஜயசேகர, அரசில் உள்வாங்கப்பட மாட்டார் என பரவலான பத்திரிகைச் செய்திகள் வெளியாகிய நிலையில். அது தொடர்பாக தான் கருத்தில் எடுக்கவில்லை என மகிந்த விஜயசேகர மகிந்தவிடம் தெரிவித்திருந்தார்.

எனினும் சனிக்கிழமை நள்ளிரவு விஜயசேகரவை தொடர்பு கொண்ட அரச தலைவரின் செயலாளர் பசில் ராஜபக்ச, அரசில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அரசு, தனது பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் ஏற்படுத்துவதற்கு ஒரு உறுப்பினர் குறைந்ததே அதற்குரிய காரணமாகும்.

மாத்தறை மாவட்டத்தில் மங்கள சமரவீரவிற்கு எதிராக விஜயசேகரவை நிறுத்துவதற்கு மகிந்த முடிவு எடுத்துள்ளதுடன், தற்போது தற்காலிகமாக விஜயசேகரவுக்கு வழங்கப்பட்டுள்ள துணை அமைச்சர் பதவியை நீக்கிவிட்டு விரைவில் அதிகாரமுள்ள அமைச்சர் பதவியை வழங்குவதற்கும் மகிந்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

-----------------------

அனுராவை தேற்றிய சந்திரிகா

அனுரா பண்டாரநாயக்கவின் சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பறித்ததை அடுத்து மனமுடைந்து காணப்பட்ட அனுரா பண்டாரநாயக்காவுக்கு அவரது சகோதரியும் முன்னாள் அரச தலைவருமான சந்திரிகா குமாரதுங்கா ஆறுதல் கூறியுள்ளார்.

அனுராவின் இல்லத்திற்கு லண்டனில் இருந்து தொலைபேசியூடாக சந்திரிகா உரையாடியதாக அனுராவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சந்திரிகா தொலைபேசியில் பேசும் போது அனுராவுடன் மற்றுமொரு மனமுடைந்து போன அரச தரப்பு அமைச்சரான மங்கள சமரவீரவும் கூட இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மங்களவின் இல்லத்திற்கு வந்த பல சுதந்திரக்கட்சி அமைச்சர்கள், மகிந்தவால் எடுக்கப்பட்ட முடிவை விமர்சித்ததுடன், அரசுக்கு எந்தவித பங்களிப்பும் செய்யாத பலர் தற்போது முன்னணி அமைச்சர்களாக இருப்பதையிட்டு தமது விரக்தியையும் தெரிவித்துள்ளனர்.

-----------------------------

'கட்சித்தாவல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பாதிக்காது': பிரியதர்சன யாப்பா

"ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித்தாவலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமும் வேறு வேறானவை" என அரசின் ஊடகத்துறை அமைச்சர் பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

"ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அரசிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நாட்டின் தேசியப்பிரச்சனையை தீர்ப்பதற்கானது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிற்கு ஆதரவளிப்பது முற்றிலும் வேறுபட்டது. ஐக்கிய தேசியக் கட்சி, ஏன் இவை இரண்டையும் சேர்த்து குழப்புகின்றார்கள் என தெரியவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது கட்சியின் உள்ளக பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசு நிறைய கால அவகாசம் வழங்கியிருந்தது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் எமக்கு ஆதரவளிக்க முன்வரும் போது நாம் என்ன செய்ய முடியும்?

மேலும் பல ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவளிப்பார்களானால் அவர்களையும் உள்வாங்குவதற்கு அரசு ஆவலாக உள்ளது. மகிந்த ராஜபக்ச பதவியேற்றதில் இருந்து 40 எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் அரசில் இணைந்துள்ளனர்.

தற்போது அரசில் இணைந்த 18 ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், 6 முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் போன்றோரின் ஆதரவுடன் 113 பெரும்பான்மையை அரசு பெற்றுள்ளது. மேலும் கெல உறுமய மற்றும் ஜே.வி.பி போன்றவற்றின் உதவியுடன் அரசின் பலம் 159 ஆக அதிகரிக்கலாம்.

மகிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்த உறுதியான ஒரு அரசு நாடாளுமன்றத்தில் தேவை. அதற்கு இருவழிகள் தான் இருந்தன ஒன்று பொதுத்தேர்தல் நடத்துவது அல்லது எதிர்த்தரப்பு உறுப்பினர்களை உள்வாங்குவது.

பொதுத்தேர்தலை நடத்துவதனால் 2 பில்லியன் ரூபாய்கள் செலவாகும். ஆனால் கட்சித்தாவல் மூலம் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் ஊதியமே செலவாகும். ஓவ்வொரு அமைச்சருக்கும் ஒவ்வொரு செயலாளர்களே நியமிக்கப்படுவார்கள்" என்றார் அவர்.

-புதினம்

சுதந்திர[அப்படி எண்டால்] இலங்கையின் பிரமாண்டமான அமைச்சரவை

- எம்.ஏ.எம்.நிலாம் -

* 52 அமைச்சர்கள்,

* 33 அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள்

* 19 பிரதியமைச்சர்கள்

சுதந்திர இலங்கையில் அதிக எண்ணிக்கையான உறுப்பினர்களைக்கொண்ட பிரமாண்டமான அமைச்சரவை நேற்று ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றிருக்கிறது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப்பகல் இடம் பெற்ற இந்த நிகழ்வில் 52 அமைச்சர்கள், 33 அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள், 19 பிரதியமைச்சர்கள் அரசாங்கத்தின் தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் மேற்கொண்டனர்.

புதிய அமைச்சரவை பதவியேற்பு

வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக்கலை 10 மணிக்கு ஆரம்பமானது. இந்த பதவியேற்பையொட்டி ஜனாதிபதி செயலக சுற்று வட்டம் உட்பட கோட்டை காலிமுக வீதியில் கொள்ளுப்பிட்டி வரையுள்ள பிரதேசங்களில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. காலி வீதியால் கொழும்பு வரும் அனைத்து வாகனங்களும் கொள்ளுப்பிட்டிச் சந்தியால் திருப்பப்பட்டு கொம்பனித்தெரு ஊடாக அனுப்பப்பட்டன.

அமைச்சுப்பதவி ஏற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குடும்ப சகிதம் பதவி ஏற்பு வைபவத்துக்கு வருகை தந்தனர். காலை 10.10 மணிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வருகை தந்ததும் பதவியேற்பு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. முதலில் சகல அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் பதவிக்காப்புப் பிரமாணம் செய்து பத்திரத்தில் கையெழுத்திட்டதும், பதவிப்பிரமாணம் தொடங்கியது.

பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க உள்ளக நிருவாக அமைச்சராக முதலில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அதனையடுத்து 51 பேர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

முன்னைய அமைச்சரவையில் அமைச்சுப்பதவிகள் வகித்த பலருக்கு புதிய பதவிகளும், பலரது அமைச்சுகள் குறைக்கப்பட்டுமிருந்தன. சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த அனுர பண்டாரநாயக்காவுக்கு தேசிய மரபுரிமைகள் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டு, சுற்றுலாத்துறை ஐக்கிய தேசியக்கட்சியின் மிலிந்த மொரகொடவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மங்கள சமரவீரவுக்கு துறைமுகம், விமான சேவைகள் அமைச்சு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்த வெளிவிவகார அமைச்சுப் பதவி ரோஹித்த போகொல்லாகமவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏ.எச்.எம்.பௌஸிக்கு பெற்றோலியம், பெற்றோலியவள அமைச்சுப் பதவி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்த போக்குவரத்து அமைச்சு டளஸ் அழகப்பெருமவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

டி.எம்.ஜயரத்னவுக்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டு அவரிடமிருந்த தபால் தொலைத் தொடர்பு ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சு ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேக்கு வழங்கப்பட்டு அவரிடமிருந்த வர்த்தக, வாணிப நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சுப் பதவி ஐக்கிய தேசியக் கட்சியின் பந்துல குணவர்தனவுக்கு வழங்கப்பட்டது.

கலாநிதி சரத் அமுனுகமவிடமிருந்த பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுப் பதவி ஐ.தே.க.வின் கருஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமுனுகமவுக்கு நிறுவன அபிவிருத்தி முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு கொடுக்கப்பட்டுள்ளது. ரிஷாத் பதியுதீனுக்கு முன்பிருந்த மீள்குடியேற்ற அமைச்சுடன் அனர்த்த நிவாரண பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசு பக்கம் தாவிய 18 பாராளுமன்ற உறுப்பினர்களில் 10 பேருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கருஜயசூரிய, பி.தயாரத்ன, தர்மதாஸ பண்டார, எம்.எச்.முஹம்மத், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, டாக்டர் ராஜித சேனாரத்ன, மகிந்த விஜேசேகர, மிலிந்த மொரகொட ஆகியோரே இந்த பத்துப்பேருமாகும்.

இவர்கள் தவிர லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஹேமகுமார நாணயக்கார, நவீன் திசாநாயக்க, மனோ விஜேரத்ன ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர்களாகவும் மயோன் முஸ்தபா, எட்வேர்ட் குணசேகர, நியுமால் பெரேரா ஆகியோர் பிரதியமைச்சர்களாகவும் பதவியேற்றுள்ளனர்.

ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து ஐந்து பதவிகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஆறு உறுப்பினர்களைக் கொண்ட, அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவை அமைச்சராகவும் பஷீர் சேகுதாவூத் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும் எம்.ரி.ஹஸன் அலி, பைசல் காசிம், கே.ஏ.பாயிஸ் ஆகியோர் பிரதியமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

thinakkural_logo.gif

front-l-2.jpg

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பொது நிர்வாக உள்விவகார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்கிறார் ஐ.தே.க. எம்.பி. கரு ஜயசூரிய. ...

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சுப் பதவிகளில் அதிக காலம்

நீடிக்கமாட்டோம் என்கிறார் கரு

கொழும்பு, ஜன. 31

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலுள்ளபடி ஒரு குறிப்பிட்ட காலத்துக்கே நாங்கள் அமைச்சுப் பொறுப்புகளை வகிப்போம். இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது உட்பட நான்கு அம்சங்களை அரசுடன் இணைந்து நிறைவேற்றுவதே எமது நோக்கம். இதன் காரணமாகவே நாம் அரசுடன் இணைந்தோம் என ஐ.தே.கட்சியிலிருந்து அரசுடன் இணைந்துகொண்ட 18 பேரடங்கிய அதிருப்தியாளர் குழுவின் தலைவர் அமைச்சர் கரு ஜயசூரிய நேற்றுத் தெரிவித்தார்.

அரசுடன் இணைந்துகொண்ட அதிருப்தித் குழுவினர் நேற்று மாலை கொழும்பு "ஹொலிடே இன்' ஹோட்டலில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். அரசுடன் இணைந்து அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட 18 பேரில் 17 பேர் இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர். அமைச்சர் தர்மதாச பண்டா மாத்திரம் இச் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. இங்கு அமைச்சர் கரு ஜயசூரிய தொடர்ந்து தகவல் வெளியிட்டபோது கூறியதாவது:

அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட நாங்கள் நேற்று மகாநாயக்க தேரர்கள், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிபெற்றோம். காலம் தாழ்த்தியாவது நாங்கள் எடுத்த முடிவை மதத் தலைவர்கள் பாராட்டினர். முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவையும் சந்தித்தோம். அவர் கண்ணீர் மல்க எம்மை வாழ்த்தினார். இது நாங்கள் திடீரென எடுத்த முடிவல்ல. நன்கு ஆராய்ந்து நிதானமாக எடுத்த முடிவு.

ஐக்கிய தேசியக் கட்சியை நாம் நேசிக்கின்றோம். எமது ஆதரவாளர்கள், வாக்காளர்களின் நன்மை கருதி இதய சுத்தியுடன் இந்த முடிவை எடுத்தோம். எமது ஆதரவாளர்களில் 73 சதவீதமானோர் எமது முடிவை ஆதரிக்கின்றனர். சிலர் எம்மை பலவாறாக விமர்சித்து சேறு பூச எத்தனிக்கின்றனர். நாம் புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதியுடன் இணைந்து செயல்படுவோம் என்றார் கருஜெயசூரி

- சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.