Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிலுள்ள சிங்கள மக்களான நீங்கள் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளீர்கள் (மணலாறு விகாரையில் வைத்து மகிந்த உசுப்பேற்றல் பேச்சு)

Featured Replies

12506.jpg
சிங்களவர்களை சிறுபான்மையினராக்கும் சதி நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.முல்லைத்தீவு மணலாற்று பகுதியிலுள்ள விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் மக்கள் சந்திப்பை மேற்கொள்வதற்கும் என நேற்று விஜயம் செய்த போதே மகிந்த இந்த கருத்தை தெரிவித்துள்ளார். 
அங்கு மகிந்த மேலும் கருத்து தெரிவிக்கையில், 

வடக்கிலுள்ள சிங்கள மக்களான நீங்கள், சிறுபான்மையினராக இன்று மாற்றப்பட்டுள்ளீர்கள். அதுவே உண்மை, வடக்கு கிழக்கு முழுவதையும் வேறுபடுத்தி அதை  தமிழர்களின் இரசதானியாக்கும் நடவடிக்கையையே அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. புதிய அரசியலமைப்பில் சமஷ்டி ஆட்சிமுறையை கொண்டு வருவது தொடர்பில் தற்போது பேசப்படுகின்றது. 

கூட்டு எதிர்க்கட்சி என்ற வகையில் கொள்கை ரீதியில் சமஷ்டி ஆட்சிமுறையை கொண்டுவருவதை முழுமையாக எதிர்க்கிறோம் என நாம் தெளிவாக கூறியுள்ளோம். 30 வருட யுத்தத்தின் பின்னர் ஒன்றிணை த்த நாட்டை மீண்டும் துண்டு துண்டாக பிளவுபடுத்தும் செயற்பாடே இதன் ஊடாக இடம்பெறும். இதற்கு எங்களால் இடம்கொடுக்க முடியாது. 

ஆகவே அதற்காக எமது பலத்தை கொண்டு நடவடிக்கை எடுப்போம். சிறு பான்மையினர் அனைத்து அதிகாரங்களையும் கேட்கின்றனர். பகிரப்பட்ட  அதிகாரம், பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங் களையும் கேட்கின்றனர். இதுவொரு சிறிய நாடு, அவ்வாறு பிரிப்பதற்கு முடியாது. அமெரிக்கா போன்று இந்தியா போன்று மிகப் பெரிய நாடு அல்ல. 

இலங்கை  அவர்களின் நாடு என இந்தியாவிலுள்ள சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.அதனால் வேண்டியவாறு பிளவுபடுத்தி, பிரிக்க முடியும் எனினும் இதற்கு கூட்டு எதிரணி ஒருபோதும் இடமளிக்காது என மகிந்த தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.   

http://www.valampurii.lk/valampurii/content.php?id=12506&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Athavan CH said:

இலங்கை  அவர்களின் நாடு என இந்தியாவிலுள்ள சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.அதனால் வேண்டியவாறு பிளவுபடுத்தி, பிரிக்க முடியும் எனினும் இதற்கு கூட்டு எதிரணி ஒருபோதும் இடமளிக்காது என மகிந்த தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.   

http://www.valampurii.lk/valampurii/content.php?id=12506&ctype=news

கொய்யால,

சீனாகாரன் குடுத்த 'கீ'.

எங்கபோய் முடியப் போகுதோ?:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Athavan CH said:

சிங்களவர்களை சிறுபான்மையினராக்கும் சதி நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.முல்லைத்தீவு மணலாற்று பகுதியிலுள்ள விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் மக்கள் சந்திப்பை மேற்கொள்வதற்கும் என நேற்று விஜயம் செய்த போதே மகிந்த இந்த கருத்தை தெரிவித்துள்ளார். 
அங்கு மகிந்த மேலும் கருத்து தெரிவிக்கையில், 

வடக்கிலுள்ள சிங்கள மக்களான நீங்கள், சிறுபான்மையினராக இன்று மாற்றப்பட்டுள்ளீர்கள். அதுவே உண்மை, வடக்கு கிழக்கு முழுவதையும் வேறுபடுத்தி அதை  தமிழர்களின் இரசதானியாக்கும் நடவடிக்கையையே அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இதை சிங்களச்சனம் நம்புமா? இல்லாட்டி நாங்கள் சொல்லுற மாதிரி  மோட்டுச்சிங்களவன் எண்ட வார்த்தை உண்மையாகுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ட்டிரம் ன் வெற்றி மகிந்தவை யோசிக்க வைத்துள்ளது ஆனால் பல்லாயிரம் பில்லியன் ரூபாக்களை  கடனாக வைத்திருக்கும் நாட்டுக்கு இதை பார்த்தால் மோட்டு சிங்களவன் தான்

  • கருத்துக்கள உறவுகள்

 எங்கே நாளானால் தன் குட்டு, கொள்ளை, கொலை வெளியில் வந்து அரசியலிலும், மக்கள் மனதிலும் இருந்து நிரந்தரமாக துடைக்கப்படுவதுமல்லாமல், சிறைக்கும் போகவேணும் அதற்கு முதல் எல்லாவற்றயும் குழப்பி அரசியலை பிடித்து விட்டால் தப்பித்து விடலாம் என்று கணக்குப்போட்டு எல்லா பக்கமும் தீ மூட்டுறார் மச்சான். எனக்கென்னமோ அரசாங்கமும் தன் திட்டத்தை இவர் மூலம் சாதிக்க இவரைப் பயன்படுத்துவது போல் தெரிகிறது. திட்டம் நிறைவேறியபின் நாணயம் குத்துப்படுவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.