Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஒரே மாதிரியான செய்திகள்

Featured Replies

என்னால் செய்திகளை களவு எடுத்து ஒட்ட முடியவில்லையே?

ஏன்ப்பா சாதி பிரித்து விட்டிர்களா?

எந்த எந்த சாதி எந்த பக்கத்தில் கருத்துகள் ஒட்டலாம் என்று?????? :unsure::lol:

Edited by வினித்

  • Replies 65
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வேளை தரப்படுத்தல் இங்கேயும் இருக்கின்றதோ????

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஊடக விடயங்கள் என்றாலே இப்படியான பிரச்சினைகள் வரத்தான் செய்யும். ஆனால் இந்தத்தளத்தில் உள்ள பிரச்சினை சற்று வித்தியாசமானது அதாவது எவ்வளவு அதிக எண்ணிக்கைகளில் செய்திகளை பதியவேண்டும் என்ற ஆசைகள் உள்ளவர்களே இங்கு அதிகம் காணப்படுகின்றனர். தங்களால் பதியப்படும் செய்திகள் தரமானவையா அல்லது ஏற்கெனவே பதியப்பட்ட செய்திகளா என்றெல்லாம் ஆராய்ந்து பார்ப்பதற்க்கே அவர்களின் ஆசைகள் தான் தடையாக இருக்கின்றன என்பது எனது கருத்து. பத்திரிகை சம்பந்தப்பட்ட விடயங்களிலும் இதேபோன்ற தவறுகள் இருக்கத்தான் செய்கின்றன, அதாவது யார் செய்திகளை முந்திக்கொண்டு கொடுப்பது என்ற ஆசைகள். ஆகவே எங்கும் இந்த ஆசைகள் தான் பிரச்சினையாக இருக்கின்றன. இந்த தவறுகளை தவிர்ப்பதிற்க்குரிய வழி என்னவென்றால் கட்டுப்பாடுகள் சற்று இறுக்கமாக்கப்படவேண்டும்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும், மீண்டும் ஒரே செய்திகள் மறுபடியும் குறிப்பிட்ட இணைக்கப்பட்டு வருகிறது. வெவ்வேறு ஊடகங்களில் வந்த ஒரே செய்திகள் புதிய புதிய தலைப்புகளில் மறுபடியும் இடப்பட்டுள்ளது.

இன்று இணைக்கப்பட்டவற்றில் சில ஊதாரணங்கள்

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=300234

http://www.yarl.com/forum3/index.php?showtopic=23464

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=300209

http://www.yarl.com/forum3/index.php?showtopic=23465

Edited by கந்தப்பு

நானும் கவனித்தேன். இதற்கான காரணம் ஒரே நேரத்தில் இருவர் ஒரே செய்தியை ஒட்டியுள்ளார்கள்..

செய்திகளை ஒட்டுபவர்கள் தங்களிடையே Communicate செய்யலாமே? இதற்கு எம்.எஸ்.என் ஐ கூட பயன்படுத்தலாம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நேரத்தில் நடந்தால் பரவாயில்லை. ஆனால் 1,2 மணித்தியாலங்களுக்கு பிறகு ஏற்கனவே இணைக்கப்பட்ட செய்திகள் மறுபடியும் இணைக்கப்படுகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அவர்கள் பாராளுமன்றத்தில் சொன்ன கருத்தும், அதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொன்ன கருத்துக்களும் பல்வேறு தலைப்புகளிலும், அமெரிக்க பெளச்சரின் யாழ் நகரின் சென்றபோது போது அவர் சந்த்தித்தவர்கள், அவருடைய கருத்துக்கள் பல்வேறு தலைப்பிலும் இடப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும், மீண்டும் ஒரே செய்திகள் மறுபடியும் குறிப்பிட்ட இணைக்கப்பட்டு வருகிறது. வெவ்வேறு ஊடகங்களில் வந்த ஒரே செய்திகள் புதிய புதிய தலைப்புகளில் மறுபடியும் இடப்பட்டுள்ளது.

இன்று இணைக்கப்பட்டவற்றில் சில ஊதாரணங்கள்

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=300234

http://www.yarl.com/forum3/index.php?showtopic=23464

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=300209

http://www.yarl.com/forum3/index.php?showtopic=23465

இரண்டாவதாக இணைக்கப்பட்ட செய்திகள் நீக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அவர்கள் பாராளுமன்றத்தில் சொன்ன கருத்தும், அதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொன்ன கருத்துக்களும் பல்வேறு தலைப்புகளிலும், அமெரிக்க பெளச்சரின் யாழ் நகரின் சென்றபோது போது அவர் சந்த்தித்தவர்கள், அவருடைய கருத்துக்கள் பல்வேறு தலைப்பிலும் இடப்பட்டுள்ளன.

முன்னரே பௌச்சர் பற்ரி ஒரு தலைப்பை உருவாக்கி அவர் பற்றி செய்திகளை ஒன்றாக இணைத்திருக்கலாம் :lol:

  • 3 months later...

பழையபடி திரும்பவும் ஊர்ப்புதினத்தில் ஒரேமாதிரியான செய்திகள் வரத்தொடங்கியுள்ளன போல் இருக்க்கின்றதே?

பழையபடி திரும்பவும் ஊர்ப்புதினத்தில் ஒரேமாதிரியான செய்திகள் வரத்தொடங்கியுள்ளன போல் இருக்க்கின்றதே?

செய்தித் திரட்டியில் பதியப்பட்ட செய்திகள் சில ஊர்ப்புதினத்திலும் பதியப்பட்டன. நிர்வாகத்தினரின் கவனத்திலிருந்து ஒரே மாதிரியான செய்திகள் தவறினால் எமக்கு அறியத் தரலாம்.

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே மாதிரிச் செய்தி இணைப்பது தொடர்பான பிரச்சனை என்னமும் தீர்ந்தமாதிரி இல்லை. முக்கியமான சோகம் என்னவென்றால் யாழ்களச் செய்தி இணைப்பார்களே(NEWSBot) இப்படித் தவறினை விடுவது தான். 2வது வரியில் கிடக்கின்ற செய்தியைக் கூடக் காணாமல் பாய்ந்தடிச்சு செய்தி இணைக்கின்ற போது, புதிதாக வந்து செய்தி இணைப்பவர்களைப் பற்றி எங்கனம் குறை சொல்வது?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32651

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32648

இது முதல் தடவையல்ல

பேபியன் என்றழைக்கப்படும், ஐதேக உறுப்பினரை யாழ்பாணத்தில் சிங்களப் புலனர்யவுக்குழுவினர் சுட்டுக் கொன்ற செய்தி தொடர்பாகவும் 2 தடவைகள் செய்தி இணைத்திருந்தனர்.

Edited by தூயவன்

தூயவன்

NEWSBot எனும் பெயர் தன்னியங்கியாக செய்திகளை புதினத்தில் இருந்து இணைக்கும் பெயர் என நினைக்கிறேன். இவ்வாறு தன்னியங்கியாக செய்திகளை இணைக்கும் போது சில நேரங்களில் தவறுகள் நேரலாம் என்றே நினைக்கிறேன்.

Edited by yarlpaadi

  • கருத்துக்கள உறவுகள்

குறித்த செய்தி தொடர்பாக வேறு ஒருவர், வேறு ஒரு தளங்களில் இருந்து எடுத்து இணைக்கும் செய்திகளை இனம் கண்டு அதற்குக் கீழாகவும் கூட செய்திகளைப் புதினத்தில் இருந்து எடுத்து இணைக்கின்ற Rss இன் சக்தி என்பது குறித்து ஆச்சரியப்படுகின்றேன்.

ஒரு செய்தியை புதினத்தில் இணைத்து சிலவேளைகளில் பல மணி நேரம் களியத்தான் செய்திகள் யாழில் வருகின்றது என்பது எவ்வளவு தூரம் தன்னியங்கி என்பது குறித்தான சந்தேகங்கள் உண்டு. அது ஒரு பிரச்சனையல்ல. ஆனால் முன்பும் யாழ் செய்தி இணைப்பாளர்களாக நிர்வாகத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் செய்கின்ற பிழைகளைத் தான் இத் தன்னியங்கியும் செய்வது அதை விட ஆச்சரியத்தைத் தருகின்றது. :lol::)

தானியங்கி செய்தித் திரட்டி பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள் தூயவன். தானியங்கி செய்தித் திரட்டி என்றால் என்ன, அது எப்படி செயற்படுகிறது என்பது பற்றி நீங்கள் அறிந்ததை சொல்லுங்கள்.

* தவறான அர்த்தம் தருவதாகவும், விளக்கம் குறைவாகவும் இருந்ததால் மேலுள்ளதில் சிறு மாற்றம் செய்துள்ளேன்.

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

குருவே இன்னா கேள்வி இது? இணையத்தைப் பற்றிச் சொல்லித் தந்த தாங்களே, இப்படி என்னிடம் கேள்வி எழுப்புவதா?

இவ்வளவு நாளும் தானியங்கி என்பது உங்களது அப்பால் தமிழில் இருக்கின்றது போல,பிபிசிச் செய்தித் தொடுப்பாகவும், அல்லது யாழ்கருத்துக்களத்தை யாழ் இணையத்தின் முகப்பில் காட்டும் தொடுப்பாகவும் தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் குறித்த செய்தியை இனம் கண்டு. அதற்குள் வந்து செய்தி இணைக்கின்ற சக்தி இருக்கும் என்பது ஆச்சரியமாக இருந்தது. அதைக் கேட்டால் என்னிடமே திருப்பிக் கேள்வி கேட்பது அசிங்கம் குருவே

தெரியாவிட்டால் தெரியவில்லையென்றோ, விளங்காவிட்டால் விளங்கவில்லையென்றோ சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ளலாமே. அதைவிட்டு மட்டம் தட்டுகிற பாணியும், குறைபிடிக்க முன்நிற்கிற அவசரமும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள உதவாது.

news (rss) feed - செய்தியோடை

feed reader / feed aggregator - செய்தித் திரட்டி

சுருக்கமாக:

செய்தித் திரட்டிகள் செய்திகளை சில விதிமுறைகளின் அடிப்படையில் திரட்டுகின்றன.

1. கால இடைவெளி

எத்தனை மணிக்கொரு தடவை செய்திகளைத் திரட்டுவது என்பதே இது. அது 1 மணித்தியாலமாக இருக்கலாம், அல்லது 1 நிமிடமாகக் கூட இருக்கலாம் அல்லது 1 செக்கனாகக் கூட இருக்கலாம் (சாத்தியமென்றால்). உடனுக்குடன் செய்தியைத் திரட்டிக் காண்பிப்பது என்பது சாத்தியக் குறைவே.

தமிழ்மணம் போன்ற வலைப்பதிவுத் திரட்டிகள் கூட உடனுக்குடன் பதிவுகளைத் திரட்டுவதில்லை. அப்பால் தமிழ் போன்ற இணையப்பக்கங்களும் அப்படித்தான் (ஒரு மணித்தியாலத்துக்கு ஒருமுறைதான் திரட்டுகின்றன அல்லது update செய்கின்றன. கருத்துக்களத்தில் திரட்டப்படுகிற புதினம் செய்திகளும் 30 நிமிடங்கள் அல்லது 1 மணித்தியாலத்துக்கு ஒருமுறைதான் திரட்டப்படுகின்றன அல்லது update செய்யப்படுகின்றன.

அந்த கால இடைவெளிக்குள் வருகிற செய்தியை ஒரு உறுப்பினர் பார்த்திருந்தால் அவர் அதனை வேகமாக இணைக்கமுடியும். ஆனால் உறுப்பினர் ஏற்கனவே இணைத்திருக்கிறார் என்பது செய்தித் திரட்டிக்கு தெரியாது. அதனால் அது தனது கடமையைச் (குறிப்பிட்ட காலத்துக்குள் வந்த அனைத்து செய்திகளையும் திரட்டும்) செய்யும். அதனால் ஒரே செய்தி இரண்டு தடவை இணைக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

சிலநேரங்களில் புதினம் தளத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அப்படித் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறபோது பதிவு இணைத்த நேரம் மாறும். சில இணையத்தளங்களில் இரண்டு விடயங்கள் தகவல் வங்கியில் பதிவு செய்யப்படும். ஒன்று பதிவு இணைத்த நேரம். மற்றையது பதிவில் திருத்தம் மேற்கொண்டுள்ள நேரம். புதினம் போன்ற சில இணையத்தளங்களில் பதிவு இணைத்த நேரமும், பதிவில் திருத்தம் மேற்கொண்ட நேரமும் ஒரே இடத்தில் தான் பதிவு செய்யப்படுகிறது. அதாவது பதிவு திருத்தப்பட்ட நேரம் பதிவு இணைத்த நேரமாக மாறும். அப்படி மாறுகிற போது, கருத்துக்களத்தில் புதிதாக திரட்டப்படும் செய்தியோடு அந்தச் செய்தி மீண்டும் திரட்டப்படும். அதனால், ஒரே செய்தி இரண்டு தரம் இணைக்கப்படும் வாய்ப்புள்ளது.

இந்தக் கால இடைவெளியை 5 நிமிடத்துக்கு ஒருமுறை என்று கூட மாற்றலாம். இதனால் கருத்துக்களம் செயற்படும் வேகத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். கருத்துக்களம் திறப்பதில் தாமதங்கள் ஏற்படும். உதாரணமாக சுரதா.கொம் தளத்தை திறக்கும் போது இதனை அவதானித்திருப்பீர்கள். அங்கு பல விடயங்கள் rss முறை மூலம் உடனுக்குடன் திரட்டப்படுவதால் இது ஏற்படுகிறது.

கருத்துக்களத்தில் உடனுக்குடன் புதினம் செய்திகளைத் திரட்டுவதால் இன்னொரு பிரச்சனை இருக்கிறது. புதினம் தளத்துக்கு பார்வையாளர்கள் செல்வது குறைந்துவிடும். செய்திகளை அனைவரும் கருத்துக்களத்துக்கு வந்து வாசித்துவிட்டு போய் விடுவார்கள்.

2. செய்திகளின் அளவு

ஒரே நேரத்தில் எத்தனை செய்திகளை இணைக்கவேண்டும் என்கிற அளவு. அது கடைசியாக வந்த 1 செய்தி ஆக இருக்கலாம், அல்லது 10 செய்திகளாக இருக்கலாம் அல்லது அதற்கு மேற்பட்டதாகவும் இருக்கலாம். இது அதிகமாக அதிகமாக கருத்துக்கள செயற்பாட்டில் தாமதங்களையும், சிக்கல்களையும் ஏற்படுத்தம்.

திரட்டப்படுகிற செய்திகளை பின்பு சில விதிமுறைகளின் அடிப்படையில் காண்பிக்கின்றன.

- தலைப்பு மட்டும் காண்பிப்பது

- தலைப்பை இணைப்பாகக் காண்பிப்பது

- தலைப்புடன், செய்தியின் teaser text ஐ (அறிமுகப் பந்தியை அல்லது சுருக்கத்தை) காண்பிப்பது

- முழுச் செய்தியையும் காண்பிப்பது

... இப்படி பல வகையாக உள்ளது. அது செய்திகளின் மூலத் தளம் தமது இணையப்பக்கத்துக்கு பயன்படுத்தும் மென்பொருளையும், செய்திகளைத் திரட்டும் தளத்தின் மென்பொருளையும் பொறுத்து மாறுபடலாம்.

பொதுவாக dynamic தளங்கள் அனைத்துக்கும் rss feeder மற்றும் rss reader போன்றன இருக்கும் அல்லது புதிதாக செய்யப்படலாம். இது கருத்துக்களங்களுக்கும் பொருந்தும். உதாரணமாக யாழ் கருத்துக்களத்தை எடுத்துக்கொள்வோம். யாழ் கருத்துக்களத்தில் உள்ள செய்தித் திரட்டி ஊடாக வெவ்வேறு செய்தித் தளங்களில் இருந்து செய்திகளை தானியங்கியாக திரட்டச் செய்யலாம். திரட்டுகிற செய்திகளை எந்தப் பகுதிக்குள் காண்பிக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்கலாம்.

தனியே செய்தித் தளங்களின் செய்திகளை மட்டுமில்லை, வேறு கருத்துக்களங்களின் பதிவுகளைக் கூட யாழ் கருத்துக்களத்தில் திரட்டச் செய்யலாம். இப்போது யாழ் கருத்துக்களத் தலைப்புகளும் rss reader மூலமாகவே யாழ் இணையத்தின் முன்பக்கத்தில் காண்பிக்கின்றன.

இதை போன்ற தொழில்நுட்பப் பின்னணிகள் இருக்கின்றன. இவற்றை கணக்கிலெடுக்காமல் :huh: என்னவோ பண்ணிட்டு போங்க...

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாவிட்டால் தெரியவில்லையென்றோ, விளங்காவிட்டால் விளங்கவில்லையென்றோ சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ளலாமே. அதைவிட்டு மட்டம் தட்டுகிற பாணியும், குறைபிடிக்க முன்நிற்கிற அவசரமும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள உதவாது.

இந்தத் தலைப்பில் இவ்வாறன சந்தேகங்கள் கிளப்புவதற்காகத் தான் போடப்பட்டிரு;ககின்றது. அந்த வகையில் தான் தொடர்ந்து இவ்வாறு நடக்கின்ற தவறுகள் ப்றறிக் கேட்டேன். அதை எவ்வகை மட்டம் தட்டும் கருத்தாக எடுத்துக் கொண்டீர்கள். நீங்கள் எழுதிய பதிலும் அந்த வகையில் எழுந்த அர்த்தம் என்றவுடன் திருத்தமும் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

உங்களைச் சுத்தி எல்லோரும் ரவுண்டு கட்டி மட்டம் தட்டுவதாகவும், கேலி பண்ணுவதாகவும் நினைத்துக் கொண்டிருந்தால் நான் அதற்குப் பொறுப்புக் கூற முடியாது. சொல்லப் போனால் விடயத்தை உங்களிடம் இருந்து தான் கற்றுக் கொண்டிருந்தேன்.

அதை வைத்து சில நண்பர்களுக்குக் கூட உதவியுமிருந்தேன்.

அவ்வாறே இப்போதும் கூட பல தகவல்களை உங்களிடம் இருந்து தான் பெறுகின்றேன். அப்படிப் பெறுவதைச் சொன்னது மட்டம் தட்டுதல் என்றால் நான் என்ன செய்ய???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறித்த செய்தி தொடர்பாக வேறு ஒருவர், வேறு ஒரு தளங்களில் இருந்து எடுத்து இணைக்கும் செய்திகளை இனம் கண்டு அதற்குக் கீழாகவும் கூட செய்திகளைப் புதினத்தில் இருந்து எடுத்து இணைக்கின்ற Rss இன் சக்தி என்பது குறித்து ஆச்சரியப்படுகின்றேன்.

தூயவன் உங்கள் கூர்த்த பார்வையை கண்டு மெச்சுகிறேன். பொதுவாக வேறொரு செய்திதளத்தின் செய்திக்கு கீழ் புதினத்தின் செய்தி இணைக்கப்படுவதும் தன்னியங்கியா என கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். இல்லை களத்தை அவதானித்தீர்கள் என்றால் சில சந்தர்பங்களில் செய்தியை இணைப்பவர்கள் தன்னியங்கியாக இணைக்கப்பட்ட புதினத்தின் செய்திக்கு கீழ் தாங்களும் செய்திகளை இணைப்பார்கள்.

சில சந்தர்பங்களில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் புதினத்தின் செய்திகள் தன்னியங்கியாக இணைக்கப்பட முன் உறுப்பினர்கள் வேறு தள செய்திகளை இணைத்திருப்பார்கள். அதன் பின் புதினத்தின் அதே விடயம் தொடர்பான செய்தி தன்னியங்கியாக வேறு புதிய தலைப்பிலேயே இணைக்கப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட இரண்டு தலைப்பையும் ஒன்றாக்கும் வேலையை பொதுவாக அந்த நேரம் களத்தை அவதானிக்கும் மட்டுறுத்துனர்கள் செய்வார்கள். செய்தி இணைக்கப்பட்ட நேரத்துக்கு ஏற்ப புதினத்தின் இணைப்பு மற்றைய தள செய்தி இணைப்புக்கு கீழோ மேலோ தோன்றும்.

ஒரே மாதிரிச் செய்தி இணைப்பது தொடர்பான பிரச்சனை என்னமும் தீர்ந்தமாதிரி இல்லை. முக்கியமான சோகம் என்னவென்றால் யாழ்களச் செய்தி இணைப்பார்களே(NEWSBot) இப்படித் தவறினை விடுவது தான். 2வது வரியில் கிடக்கின்ற செய்தியைக் கூடக் காணாமல் பாய்ந்தடிச்சு செய்தி இணைக்கின்ற போது, புதிதாக வந்து செய்தி இணைப்பவர்களைப் பற்றி எங்கனம் குறை சொல்வது?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32651

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32648

இது முதல் தடவையல்ல

பேபியன் என்றழைக்கப்படும், ஐதேக உறுப்பினரை யாழ்பாணத்தில் சிங்களப் புலனர்யவுக்குழுவினர் சுட்டுக் கொன்ற செய்தி தொடர்பாகவும் 2 தடவைகள் செய்தி இணைத்திருந்தனர்.

இதைத்தான் குறைபிடிக்க முன்நிற்கிற அவசரம் என்று சொன்னேன்.

குறித்த செய்தி தொடர்பாக வேறு ஒருவர், வேறு ஒரு தளங்களில் இருந்து எடுத்து இணைக்கும் செய்திகளை இனம் கண்டு அதற்குக் கீழாகவும் கூட செய்திகளைப் புதினத்தில் இருந்து எடுத்து இணைக்கின்ற Rss இன் சக்தி என்பது குறித்து ஆச்சரியப்படுகின்றேன்.

ஒரு செய்தியை புதினத்தில் இணைத்து சிலவேளைகளில் பல மணி நேரம் களியத்தான் செய்திகள் யாழில் வருகின்றது என்பது எவ்வளவு தூரம் தன்னியங்கி என்பது குறித்தான சந்தேகங்கள் உண்டு. அது ஒரு பிரச்சனையல்ல. ஆனால் முன்பும் யாழ் செய்தி இணைப்பாளர்களாக நிர்வாகத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் செய்கின்ற பிழைகளைத் தான் இத் தன்னியங்கியும் செய்வது அதை விட ஆச்சரியத்தைத் தருகின்றது. :D:D

இப்படியான எழுதலைத்தான் மட்டம் தட்டுகிற பாணி என்று சொன்னேன்.

சந்தேகங்களை கேட்பதை பிழை என்று சொல்லவில்லை. அதை கேட்கிற விதத்தைத்தான் நான் இங்கு சுட்டிக் காட்டினேன்.

தானியங்கி செய்தித் திரட்டி பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள் தூயவன். தானியங்கி செய்தித் திரட்டி என்றால் என்ன, அது எப்படி செயற்படுகிறது என்பது பற்றி நீங்கள் அறிந்ததை சொல்லுங்கள்.

* தவறான அர்த்தம் தருவதாகவும், விளக்கம் குறைவாகவும் இருந்ததால் மேலுள்ளதில் சிறு மாற்றம் செய்துள்ளேன்.

திருந்தமாட்டீங்கடே திருந்தவே மாட்டீங்க :D

ஐயா ராசா... நான் திருத்தினது செய்தித் திரட்டி என்கிற சொல்லை மேலதிகமாகச் சேர்த்தது தான். காரணம், தனியே தானியங்கி என்று இருப்பதால் தனித்து வாசிக்கிற போது வேறு அர்த்தம் கொள்ளப்படும் என்பதால் தான்.

இந்த அவசரமாய், மேலோட்டமாய் வாசித்து விளங்கிக்கொண்டு எழுதுவதை விட்டால் சந்தோசம்... :huh:

Edited by இளைஞன்

அப்போ தானியங்கி என்பது 3ஆம் சக்தியினால் இயக்கப்படுகிறது என்று அர்த்தம் இல்லையா? இதை யாராவது விளக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் தூயவனின் கருத்து ஆதங்கமாகவே வெளிப்பட்டுள்ளது. இன்று காலை கூட நேற்றைய நெடுந்தீவுச் சம்பவத்தோடு ஒரு செய்தியை இணைக்க அந்தத் தலைப்பைத் தேடினால்.. அது 3 பக்கம் தாண்டி மறைந்து கிடக்கிறது.

அதுமட்டுமன்றி தானியங்கி முறையில் செய்தி இணைக்கும் போது சில வரிகளோடு செய்தி மட்டுப்பட்டு மிகுதிக்கு புதினத்தைத் தேடி ஓட வேண்டி இருக்கிறது. அதுதான் அவர்களின் இந்தச் செய்திச் சேவையை இங்கு அளிப்பதன் நோக்கமும். அவர்களின் தளத்துக்கு விளம்பரம்..!

இங்கு கோரப்படுவது.. குறிப்பிட்ட பிரச்சனைக்கு என்ன தீர்வு. ஊர்ப்புதினம் பகுதியில் புதினத்தில் வரும் அனைத்துச் செய்தியையும் அனுமதிக்க வேண்டுமா..??! புதினம் தலைப்பை திருத்தம் செய்யினும்.. குறித்த செய்தி மீள இங்கு பதியப்படும். புதினம்.. தவறுவிட்டால் அது இங்கும் தொடரும்..??! அதுமட்டுமன்றி புதினம் தூங்கிட்டு என்றால் செய்தியும் தூங்கும்..!

புதினத்தில் இருந்து செய்தியை இங்கிணைப்பது தவறல்ல. ஆனால் அதில் முன்னேற்றம் வேண்டும். யாழுக்கு என்ற தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையிலும் செய்திப் பிரிவின் வினைத்திறனை அதிகரிக்கும் வகையிலும் செயற்பாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றனவே தவிர.. மட்டம் தட்டுதல்.. குறை பிடித்தல் என்று தனியாட்கள் தங்களின் சொந்தப் பார்வைகளால் குறை பிடித்தலை கருத்துக்கள் எங்கிணும் செலுத்தின் யாரும் இங்கு கருத்துரைக்க முடியாது..! எல்லாக் கருத்திலும் குறை காண வாய்ப்பிருக்கும்.

முதலில் கருத்துக்களத்தில் கருத்துக்கள் மீது கருத்துத் தொடர்பான நிலைப்பாடைக் கொள்வது சிறந்தது. கருத்தைப் பதிபவருக்கும் எனக்கும் என்ன நிலை என்ற நோக்கில் பார்த்து கருத்துரைப்பதே பிரச்சனைகள் புரியப்படாமல் திசைமாற்றப்படும் வகையில் கருத்துரைக்க முக்கிய காரணம்..! :huh:

Edited by nedukkalapoovan

ஆம் புதினத்தின் செய்திகளை இங்கு ஒரு தலைப்பட்சமாக விளம்பரப்படுத்துவது தவறு.

அவர்களது நடத்தையில் பல்வேறு சந்தேகங்கள் உண்டு. உதாரணத்திற்கு

யாழ்குடாநாட்டுச் செய்தித் தொகுப்பு என்று மாத்திரம் வெளியிட்டு தமது பிரதேசவாதத்தை வெளியிட்டார்கள் சில மாதங்களிற்கு முன்னர்.

அண்மை காலத்தில் த நேசன் போன்ற சிங்களப் பத்திரிகைகளில் வருபவற்றை மொழிபெயர்த்து தமிழர்களை குழப்பத்திற்குட்படுத்தினார

  • கருத்துக்கள உறவுகள்

"யாழுக்கு என்ற தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையிலும் செய்திப் பிரிவின் வினைத்திறனை அதிகரிக்கும்..." :huh:

அப்ப யாழிடம் செய்திப் பிரிவு என்று ஒன்று உள்ளதா? தனித்துவம் வினைத்திறன் என்ற சோடிப்புகள் எல்லாம் கேக்க நல்லா இருக்கு அதுக்கு எல்லாம் முதல் அந்த "யாழ் செய்திப்பிரின்" நோக்கம் என்ன அவற்றை நிறைவேற்ற என்ன செயற்பாடுகள் நடக்கிறது அதற்கு பொறுப்பாக யார் யார் இருக்கிறார்கள்?

இதற்கான பதில்களை யாரால் தரமுடியும்?

யாழ் செய்திப் பிரிவு (செய்திகள், கருத்துப்படங்கள் இணைக்கப்படும் பிரிவும் அதனை இயக்குபவர்களும்) தானே இங்கு கருத்துப்படங்களுக்கு பொறுப்பா இருந்து இணைக்கினம்..!

அதற்கு மேலதிகமாக செய்திக் குழுமம் (இது தனிக்குழுமமாக வேறு செயற்படுகிறது.. செய்தி பிரிவில் செய்தி இணைப்பவர்களுக்கு மேலதிகமாக.. களத்தின் இன்னோர் பகுதியில்) என்ற ஒன்றும் உண்டு..! இவையெல்லாம் நோக்கமில்லாமலே இங்க இருக்குது. தினமும் கருத்துப் பகரப்படுது..???!

செய்திக் குழுமத்தில உள்ளவைக்கே செயற்படு நோக்கம் தெரியல்லைன்னா.. என்ன கதி..???!

புதினம் மீது பிரதேசவாத குற்றச்சாட்டுகளை முன் வைப்பதல்ல எமது நோக்கம். குடாநாட்டில் இராணுவ வன்முறைகளை தனித்து இனம் காட்டுவதில் தவறில்லை. ஆனால் அதை மட்டும் தனியே இனங்காட்டுவது போதுமானதல்ல..!

புலிகளின் குரலில் கூட நாளேடு நாழிகை என்று சிங்கள சிறீலங்காவின் ஆங்கிலப் பத்திரிகைகளின் செய்திகள் வாசிக்கப்படுகின்றன. ஆனால் அச்செய்திகள் ஏதோ தமிழ் மக்களுக்கு சாதகமான நிலையை வெளிப்படுத்துவது போன்ற தோற்றப்பாட்டைக் காட்ட வாசிக்கப்படுவதில்லை. த நேசன் பத்திரிகையையும் அந்த வகையில் அணுக வேண்டுமே தவிர.. அது இராணுவத்துக்கு சார்பில்லாத வகையில்.. செய்திகளை சரிவர நடுநிலை நின்று தருவதாக தோற்றம் காட்டுதல் தவறானது..! அதைச் சுட்டிக்காட்டுதல் தவறன்று..! :D

Edited by nedukkalapoovan

யாழின் செய்திப்பிரிவு கருத்துப்படங்களிற்கு பொறுப்பா இருந்து இணைக்கினமா? யார் அது? யாருடைய கருத்துப்படங்களை இணைக்கினம்?

செய்திக்குழுமம் என்று ஒன்று செயற்படுது என்பது தெரியும். அதன் செயற்பாட்டு நோக்கமும் தெரியும்.

இல்லாத செய்திப்பிரிவை இருப்பதாக சொல்பவர்கள் தான் அதற்கும் செய்திக்குழுமத்திற்கும் என்ன தொடர்பு இருக்கு என்று சொல்ல வேண்டிய கதியில் இருக்கிறார்கள்.

செய்திப்பிரிவு என்று கொண்டு யார் இருக்கினம் அவை என்ன செய்ய முயலீனம் என்பது தான் கேள்வி?

புதினம் மீதான பிரதேசவாத குற்றச்சாட்டு என்புது அவர்களது நடத்தையின் அடிப்படையிலானது. யாழ்குடாநாடு திறந்த வெளிச் சிறச்சாலையாக இருக்கிறது அங்கிருக்கும் இராணுவ வன்முறைகளை தொகுத்துக்காட்டுவது தப்பு அல்ல. ஆனால் அதை மாத்திரம் தொகுத்துவிட்டு வாகரை மூதூர் கதிரவெளி என்று லட்சக்கணக்கில் இடம்பெயர்ந்த மக்கள் ஆயிரம் ஆயிரமாக காயப்பட்டார்கள் தொகுதி தொகுதியாக மிலேச்சத்தனமான எறிகணை வான்குண்டுத் தாக்குதல்களால் கொல்லப்பட்டார்கள். இதை தொகுத்துக் காட்ட ஏன் மனம் வரவில்லை? எல்லா அவலங்களையும் பாரபட்சம் இன்றி தொகுத்துக் காட்டினால் அது ஏன் பிரதேசவாதமாக பார்க்கப்படப் போகுது.

புலிகளின் குரலில் மேற்கோள்காட்டப்படும் எந்த சிங்கள ஊடகத்துச் செய்திகளும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி புலிகளின் பேச்சாளர்களை மறுப்பறிக்கை விட வைக்கவில்லையே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.