Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் சங்கத்தானை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி.

Featured Replies

யாழ் சங்கத்தானை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி.

IMG_3151.jpg

சாவகச்சேரி  சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அப்பகுதி மக்களால் திங்கட்கிழமை மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.  தென் பகுதியில் இருந்து யாழ்ப்பணத்திற்கு சுற்றுலா வந்திருந்த பெரும்பான்மை இனத்தை  சேர்ந்த 11பேர் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தனர்.  உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அப்பகுதி மக்கள் விபத்து நடைபெற்ற பகுதியில் 11 மெழுகுதிரி ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

IMG_3165.jpg
இதேவேளை திங்கட் கிழமை காலை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (769) வழித்தட பயணிகள் சிற்றூர்தி உரிமையாளர்களின் ,வரையறுக்கப்பட்ட கம்பனி ஊழியர்களால் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கண்ணீர் அஞ்சலி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
 
அதேவேளை அன்றைய தினம் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பெறுப்பு ஏற்க யாழ்ப்பாணம் வந்திருந்த உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கான உணவு தங்குமிட வசதிகள் என்பன யாழ்.போதனா வைத்திய சாலை நிர்வாகத்தினரால் செய்து கொடுக்கப்பட்டது.
 
சடலங்களை பெறுப்பு ஏற்ற பின்னர் , தமிழ் மக்கள் எம் மீது வெறுப்புடன் இருப்பார்கள் என நினைத்து இருந்தோம் ஆனால் அவர்கள் அவ்வாறு இல்லாமல் எமக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு உதவிகள் புரிந்து இருந்தனர் அவர்களுக்கு எமது நன்றிகள் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூறி சென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
IMG_3166.jpgIMG_3167.jpg
 
http://globaltamilnews.net/archives/10863

  • கருத்துக்கள உறவுகள்

நினைவிடம் அமைக்காதவரை பிரச்சினையில்லை  

Edited by MEERA

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

சடலங்களை பெறுப்பு ஏற்ற பின்னர் , தமிழ் மக்கள் எம் மீது வெறுப்புடன் இருப்பார்கள் என நினைத்து இருந்தோம் ஆனால் அவர்கள் அவ்வாறு இல்லாமல் எமக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு உதவிகள் புரிந்து இருந்தனர் அவர்களுக்கு எமது நன்றிகள் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூறி சென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்களின் எந்த தலைமைகளை எடுத்துக்கொண்டாலும் அல்லது ஈழமக்களை எடுத்துக்கொண்டாலும் இதுவரைக்கும்....

சிங்கள மக்கள் மீது இனவாதத்தை காட்டியதில்லை.

இனவாதத்தை தூண்டியதில்லை.

சிங்கள மக்களை அழிக்க நினைத்ததில்லை.

சிங்கள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதில்லை.

சிங்கள மக்களின் சொத்துக்களை சூறையாடியதில்லை.

தமிழ்மண்ணில் இனக்கலவரங்களை நடத்தியதில்லை.

போர்க்களத்திலும் ஒரு சிங்கள இராணுவ வீரன் உயிருடன் அகப்பட்டாலும் தகுந்த மரியாதையுடனேயே அவன் பாதுகாக்கப்பட்டு உபசரிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டான்.

இதுதான் ஈழத்தமிழனின் பண்பாடும் பழக்கவழக்கமும்.
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சிங்கள மக்களை அழிக்க நினைத்ததில்லை.

சிங்கள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதில்லை.

போர்க்களத்திலும் ஒரு சிங்கள இராணுவ வீரன் உயிருடன் அகப்பட்டாலும் தகுந்த மரியாதையுடனேயே அவன் பாதுகாக்கப்பட்டு உபசரிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டான்.

இதுதான் ஈழத்தமிழனின் பண்பாடும் பழக்கவழக்கமும்.
 
அப்படியா ஐயா.

அப்ப சிங்கள எல்லைக் கிராமங்களை தாக்கி

குழந்தைகள் உட்பட பல சிங்கள பொதுமக்களை கொன்றது?

தெஹிவளை ரயில் நிலையத்தில் ரயிலில் குண்டு வைத்து

பொது மக்களை கொன்றது?

2006 இல் சிங்கள புறநகர் ஒன்றில் பஸ்ஸில் குண்டு வைத்து

பயணிகள் பலரை படுகொலை செய்தது?

தெற்கில் பொது மக்களை மட்டுமே இலக்காக வைத்து

படுகொலைகள் செய்தது?

1987 இல் யாழ் நகர பஸ் நிலையத்தில் கைதிகளாக சிறைப்பட்ட சிங்கள பொலிசார் எண்மரை சுட்டு

படுகொலை செய்து வீதியில் போட்டது? 

கல்முனையில் சரணடைந்த நூற்றுக்கும் அதிகமான சிங்கள பொலிசாரை

கருணா தலைமையில் சுட்டுக் கொன்றது (அப்ப அவர் புலியாக்கும்)?

சிங்கள பயங்கரவாதத்துக்கு சற்றும் சளைக்காமல் செய்த வேலைகளால் தான்

புனிதமான போராட்டம் இறுதியில் ஒரு சுவடும் இல்லாமல் போனது

ஐயா,

இரண்டு தரப்பும் தான் இப்படி மக்களை படுகொலை செய்தது.

இரண்டு தரப்புமே ஆளுக்கால் சளைத்ததில்லை

ஆனால் நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று சுத்தமான

சைவப்பிள்ளைகள் என்று பேய்க்காட்ட வெளிக்கிடுறியள் பாருங்கள்.

உந்தப் பேய்க்காட்டலை உலகில் ஒருத்தரும் நம்ப போவதில்லை

நீங்களே எழுதி நீங்களும் உங்கள் தொண்டரடிப்

பிள்ளைகளும் மகிழ்ந்து ஜின்ஜிஞ்சா அடிக்க வேண்டியது தானுங்கோ

உங்களைப் போன்றவர்களுக்கு மேலே இருக்கும் செய்தி கசப்பாகத்தானிருக்கும் பாருங்கோ

ஆனால் எங்கள் சனம் இப்ப வலு கவனமாக விசயங்களைச் செய்யினம்.

இனியும் புலம்பெயர் புண்ணாக்குகளின் விண்ணாளங்களை கேட்கப் போறதில்லை பாருங்கோ

அப்ப நான் வரட்டா

  • தொடங்கியவர்

சாவகச்சேரி விபத்தில் பலியான 11 பேருக்கு அப்பகுதி மக்களால் அஞ்சலி

யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அப்பகுதி மக்களால் நேற்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது. 

15644600_10206353205543718_50169578_n.jp

தென் பகுதியில் இருந்து யாழ்ப்பணத்திற்கு சுற்றுலா வந்திருந்தவர்களில் 11பேர் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தனர்.  

15645635_10206353208823800_1851943539_n.

உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அப்பகுதி மக்கள் விபத்து நடைபெற்ற பகுதியில் 11 மெழுகுதிரி ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

15571215_10206353208303787_1242783032_n.

15049671_10206353206183734_1731731072_n.

http://www.virakesari.lk/article/14549

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, வைரவன் said:

அப்படியா ஐயா.

அப்ப சிங்கள எல்லைக் கிராமங்களை தாக்கி

குழந்தைகள் உட்பட பல சிங்கள பொதுமக்களை கொன்றது?

தெஹிவளை ரயில் நிலையத்தில் ரயிலில் குண்டு வைத்து

பொது மக்களை கொன்றது?

2006 இல் சிங்கள புறநகர் ஒன்றில் பஸ்ஸில் குண்டு வைத்து

பயணிகள் பலரை படுகொலை செய்தது?

தெற்கில் பொது மக்களை மட்டுமே இலக்காக வைத்து

படுகொலைகள் செய்தது?

1987 இல் யாழ் நகர பஸ் நிலையத்தில் கைதிகளாக சிறைப்பட்ட சிங்கள பொலிசார் எண்மரை சுட்டு

படுகொலை செய்து வீதியில் போட்டது? 

கல்முனையில் சரணடைந்த நூற்றுக்கும் அதிகமான சிங்கள பொலிசாரை

கருணா தலைமையில் சுட்டுக் கொன்றது (அப்ப அவர் புலியாக்கும்)?

சிங்கள பயங்கரவாதத்துக்கு சற்றும் சளைக்காமல் செய்த வேலைகளால் தான்

புனிதமான போராட்டம் இறுதியில் ஒரு சுவடும் இல்லாமல் போனது

ஐயா,

இரண்டு தரப்பும் தான் இப்படி மக்களை படுகொலை செய்தது.

இரண்டு தரப்புமே ஆளுக்கால் சளைத்ததில்லை

ஆனால் நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று சுத்தமான

சைவப்பிள்ளைகள் என்று பேய்க்காட்ட வெளிக்கிடுறியள் பாருங்கள்.

உந்தப் பேய்க்காட்டலை உலகில் ஒருத்தரும் நம்ப போவதில்லை

நீங்களே எழுதி நீங்களும் உங்கள் தொண்டரடிப்

பிள்ளைகளும் மகிழ்ந்து ஜின்ஜிஞ்சா அடிக்க வேண்டியது தானுங்கோ

உங்களைப் போன்றவர்களுக்கு மேலே இருக்கும் செய்தி கசப்பாகத்தானிருக்கும் பாருங்கோ

ஆனால் எங்கள் சனம் இப்ப வலு கவனமாக விசயங்களைச் செய்யினம்.

இனியும் புலம்பெயர் புண்ணாக்குகளின் விண்ணாளங்களை கேட்கப் போறதில்லை பாருங்கோ

அப்ப நான் வரட்டா

உலக நாடுகள் எனும் போது எவை என குறிப்பிடுங்கள் பார்க்கலாம்.

30 வருடத்துக்கு மேலாக தமிழ் மக்களை கொன்ற சிங்கள அரசுகளை நீங்கள் சொன்ன நாடுகள் கண்டித்தனவா அல்லது சிறிலங்கா அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்களா என மனச்சாட்சியை தொட்டு கூறுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, வைரவன் said:

அப்படியா ஐயா.

அப்ப சிங்கள எல்லைக் கிராமங்களை தாக்கி

குழந்தைகள் உட்பட பல சிங்கள பொதுமக்களை கொன்றது?

தெஹிவளை ரயில் நிலையத்தில் ரயிலில் குண்டு வைத்து

பொது மக்களை கொன்றது?

2006 இல் சிங்கள புறநகர் ஒன்றில் பஸ்ஸில் குண்டு வைத்து

பயணிகள் பலரை படுகொலை செய்தது?

தெற்கில் பொது மக்களை மட்டுமே இலக்காக வைத்து

படுகொலைகள் செய்தது?

1987 இல் யாழ் நகர பஸ் நிலையத்தில் கைதிகளாக சிறைப்பட்ட சிங்கள பொலிசார் எண்மரை சுட்டு

படுகொலை செய்து வீதியில் போட்டது? 

கல்முனையில் சரணடைந்த நூற்றுக்கும் அதிகமான சிங்கள பொலிசாரை

கருணா தலைமையில் சுட்டுக் கொன்றது (அப்ப அவர் புலியாக்கும்)?

சிங்கள பயங்கரவாதத்துக்கு சற்றும் சளைக்காமல் செய்த வேலைகளால் தான்

புனிதமான போராட்டம் இறுதியில் ஒரு சுவடும் இல்லாமல் போனது

ஐயா,

இரண்டு தரப்பும் தான் இப்படி மக்களை படுகொலை செய்தது.

இரண்டு தரப்புமே ஆளுக்கால் சளைத்ததில்லை

ஆனால் நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று சுத்தமான

சைவப்பிள்ளைகள் என்று பேய்க்காட்ட வெளிக்கிடுறியள் பாருங்கள்.

உந்தப் பேய்க்காட்டலை உலகில் ஒருத்தரும் நம்ப போவதில்லை

நீங்களே எழுதி நீங்களும் உங்கள் தொண்டரடிப்

பிள்ளைகளும் மகிழ்ந்து ஜின்ஜிஞ்சா அடிக்க வேண்டியது தானுங்கோ

உங்களைப் போன்றவர்களுக்கு மேலே இருக்கும் செய்தி கசப்பாகத்தானிருக்கும் பாருங்கோ

ஆனால் எங்கள் சனம் இப்ப வலு கவனமாக விசயங்களைச் செய்யினம்.

இனியும் புலம்பெயர் புண்ணாக்குகளின் விண்ணாளங்களை கேட்கப் போறதில்லை பாருங்கோ

அப்ப நான் வரட்டா

அட நீங்கள் இஞ்சாலையே  நிக்கிறியள்....அங்காலை  அதுதான் 77,83 க்கு முதல் இலங்கையிலை கொஞ்ச சம்பவங்கள் நடந்தது. உங்களுக்கு தெரியாது எண்டு நினைக்கிறன். தெரியாட்டி உங்கினேக்கை பழைய வரலாறுகள் இருக்கும் தேடிப்புடிச்சு வாசிச்சிட்டு கதைக்க வாங்கோ...

வயிரவருக்கு நாய் வந்து வாய்ச்சமாதிரி சிங்களவனுக்கு மிண்டு குடுக்கிறதுக்கெண்டே வந்து வாய்ச்சிருக்கினம்..
சரி...அப்ப நான் கிளம்பட்டே...

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதியதை ஏன் தூக்கினார்களோ தெரியவில்லை. அங்கு சனம் படும் வைரவரனுக்கு தெரியாது.

சொந்த வளவுக்குள் கக்கூசு கட்டவே பெரிய பிரச்சனை ஆனால் அவன் 30, 40 அடி புத்தரை அடுத்தவன்ர வளவுக்குள்ள வைத்திட்டுப் போறான். 

இஞ்ச வாறதிலும் பார்க்க ஊருக்கு கிளம்புற வழியை பாருங்க

29 minutes ago, MEERA said:

முதலில் தமிழ் இனத்துக்கும் , தமிழ் தேசியத்துக்கு எதிரான வைரவனின் கருத்து ஏன் நீக்கப்படவில்லை என்பதை நிர்வாகம் விளக்கினால் நன்றாக இருக்கும்,மாற்று கருத்து எனத போர்வையில் தமிழ் இனத்துக்கு எதிரான கருத்தை விதைக்கவே இது வழி சமைக்கிறது!!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அட நீங்கள் இஞ்சாலையே  நிக்கிறியள்....அங்காலை  அதுதான் 77,83 க்கு முதல் இலங்கையிலை கொஞ்ச சம்பவங்கள் நடந்தது. உங்களுக்கு தெரியாது எண்டு நினைக்கிறன். தெரியாட்டி உங்கினேக்கை பழைய வரலாறுகள் இருக்கும் தேடிப்புடிச்சு வாசிச்சிட்டு கதைக்க வாங்கோ...

வயிரவருக்கு நாய் வந்து வாய்ச்சமாதிரி சிங்களவனுக்கு மிண்டு குடுக்கிறதுக்கெண்டே வந்து வாய்ச்சிருக்கினம்..
சரி...அப்ப நான் கிளம்பட்டே...

குமாரசாமி ஐயா,

தமிழர்களின் எந்த தலைமையும் இன்ன இன்னவற்றை செய்யவில்லை

என்று ஒரு பட்டியல் போட்டியள் அல்லவா அதுக்குத் தான் அடியேனின் பதிலும்

83 இற்கு முன் 77 களில் பின்வருவன நடந்து இருக்க முடியாது கண்டியளோ

Quote

சிங்கள மக்கள் மீது இனவாதத்தை காட்டியதில்லை.

இனவாதத்தை தூண்டியதில்லை.

சிங்கள மக்களை அழிக்க நினைத்ததில்லை.

சிங்கள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதில்லை.

இதில் பெருமைப் படக்கூடிய விசயம், சிங்கள மக்களின் சொத்துகளை சூறையாடவில்லை என்பது மட்டும் தானுங்கோ

நீங்கள் குத்தி முறிஞ்சது புலி / தமிழர்கள் குற்றமே செய்யவில்லை என்று காட்டத்தான்.

அதையும் எங்க வந்து சொல்லுகின்றியள் என்றால்

தமிழ் சனம் விபத்தில் செத்த சிங்களவர்களின் இறப்புக்கு மரியாதை செய்த திரியில்

Quote

வயிரவருக்கு நாய் வந்து வாய்ச்சமாதிரி சிங்களவனுக்கு மிண்டு குடுக்கிறதுக்கெண்டே வந்து வாய்ச்சிருக்கினம்..

புலிகளின் தவறுகளை விமர்சிப்பவர்களை சிங்களவருடன் தொடர்பு படுத்தி

பார்க்கும் வங்குரோத்து அரசியலை தவிர வேறு என்ன உங்களுக்கு தெரியும் அப்பு?

3 hours ago, MEERA said:

நான் எழுதியதை ஏன் தூக்கினார்களோ தெரியவில்லை. அங்கு சனம் படும் வைரவரனுக்கு தெரியாது.

சொந்த வளவுக்குள் கக்கூசு கட்டவே பெரிய பிரச்சனை ஆனால் அவன் 30, 40 அடி புத்தரை அடுத்தவன்ர வளவுக்குள்ள வைத்திட்டுப் போறான். 

இஞ்ச வாறதிலும் பார்க்க ஊருக்கு கிளம்புற வழியை பாருங்க

ஆனால் இந்த பிரச்சனைகளை எல்லாம் நேருக்கு நேராக அனுபவிக்கும்

ஈழத்தில் வாழும் (இன்னும் மிச்சம் இருக்கும்) தமிழ் இனம் தானே விபத்தில் இறந்த சிங்கள

யாத்திரிகளுக்கு அஞ்சலி செய்யுது?

அச் செயலுக்குள் வந்து

தம் வங்குரோத்து அரசியலை நிரப்பி கொள்பவர்கள் பற்றி

தம்பி என்ன நினைக்கின்றியள்?

2 hours ago, Dash said:

முதலில் தமிழ் இனத்துக்கும் , தமிழ் தேசியத்துக்கு எதிரான வைரவனின் கருத்து ஏன் நீக்கப்படவில்லை என்பதை நிர்வாகம் விளக்கினால் நன்றாக இருக்கும்,மாற்று கருத்து எனத போர்வையில் தமிழ் இனத்துக்கு எதிரான கருத்தை விதைக்கவே இது வழி சமைக்கிறது!!

அதாவது புலிகள் செய்தவை என நான் பட்டியலிட்டது எல்லாமே தமிழ் இனத்துக்கும் தமிழ் தேசியத்துக்கும் எதிரானவை என்று ஏற்றுக் கொண்டதுக்கு நன்றி டாசு தம்பி. 

உந்த எதிரான விடயங்கள் தான் தம்பு எம் போராட்டத்தினை அடியோடு கருவறுத்தமைக்கு நியாயம் கற்பிக்க உதவுது

புலிகள் செய்த விடயங்களை, எல்லாருக்கும் தெரிந்த/ அறிந்த விடயங்களை எழுதினால் அது தமிழ் தேசியத்துக்கு எதிரான கருத்து என்று நீக்கும் அளவுக்கு நிர்வாகத்தில் உங்களைப் போன்ற முட்டாள்கள் இல்லை என நம்புகின்றேன்

அப்ப நான் வரட்டே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.