Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடிய விரைவில் இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச..!

Featured Replies

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே, அந்தத் தகுதி அவருக்கு மட்டுமே இருக்கின்றது கூடிய விரைவில் இது நிறைவேறும் என தம்மாலோக தேரர் உறுதி கூறினார்.

நேற்றைய தினம் யப்பானில் கோத்தபாய தலைமையில் ஓர் பௌத்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் ஏராளமான பௌத்தர்களும் பிக்குகளும் கலந்து கொண்டிருந்தனர். அந்த நிகழ்வில் உரையாற்றும் போதே தம்மாலோக தேரர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

இப்போது பெளத்தத்திற்காக குரல் கொடுத்து அதனை பாதுகாத்து சிங்களவர்களை காப்பாற்றும் ஒருவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மட்டுமே.

பௌத்தத்தை காக்க பாடுபடுகின்ற ஒருவரும் சிங்கள இனத்தை பாதுகாக்கின்ற ஒருவருமே அடுத்த தலைவர் ஆக முடியும். அந்த வகையில் முழு சிங்களத்தையும் காத்துக் கொண்டு வரும் ஒருவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்.

முழுமையானதோர் சிங்களவராக பௌத்தனான வலம் வந்து கொண்டிருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சாதாரண மனிதர் அல்ல சிங்களவர்களை காக்க பாடுபடும் மாமனிதர். இப்போது போலவே எதிர் காலத்திலும் சிங்களவரே எழுக பௌத்தனே எழுக என பௌத்தத்திற்காக நீங்கள் குரல் கொடுப்பீர்கள் என்று நாம் முழுமையாக நம்புகின்றோம்.

அதன் படி எதிர்காலத்தில் ஜனாதிபதியாகக் கூடிய தகுதி கோத்தபாயவிற்கு மட்டுமே உண்டு. நிச்சயமாக அவர் இலங்கையில் ஜனாதிபதியாக கூடிய விரையில் பதவி ஏற்பார். அப்படி அவர் பதவி ஏற்கும் போது இலங்கையில் ஸ்ரீ மஹா போதியில் இருந்து ஓர் புத்தர் சிலையை யப்பானில் நிறுவவேண்டும் இதனை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என்பது நிச்சயம்.

நீங்கள் ஜனாதிபதி ஆனவுடன் இந்த வேண்டுகோளை நிறைவேற்றுவீர்கள் என்ற ஆவலுடன் நாம் காத்திருக்கின்றோம் எனவும் தம்மாலோக தேரர் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/statements/01/128776?ref=right_featured

  • கருத்துக்கள உறவுகள்

தேரர் சொன்னா உண்மையாத் தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

தேரர் சொன்னா உண்மையாத் தான் இருக்கும்.

கடலுக்கு அங்காள பக்கம், ஒரு சின்னம்மா, இங்காலிப் பக்கம் ஓர் சின்னாம்பி...

தூக்கி உள்ள போடுற வரை பிக்கர் ஓயார் போல கிடக்குது. :grin: 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

கடலுக்கு அங்காள பக்கம், ஒரு சின்னம்மா, இங்காலிப் பக்கம் ஓர் சின்னாம்பி...

தூக்கி உள்ள போடுற வரை பிக்கர் ஓயார் போல கிடக்குது. :grin: 

நாதமுனியார் நடந்தாலும் நடக்கலாம். அதனால் அவசரப்படாமல் இருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

நாதமுனியார் நடந்தாலும் நடக்கலாம். அதனால் அவசரப்படாமல் இருப்பம்.

உண்மையில் கோத்தா வந்தால் தமிழருக்கே நல்லது.

வருவார், ஆனா வரமாட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Nathamuni said:

உண்மையில் கோத்தா வந்தால் தமிழருக்கே நல்லது.

வருவார், ஆனா வரமாட்டார்.

நடந்தாலும் நடக்கும்.அரசியல்லை இப்ப ஒண்டையும் நிறுதிட்டமாய் சொல்லேலாமல் கிடக்கு......:cool:

ஆனால் எங்கடை தமிழ்தலைமையள் இன்னும் நூறுவருசத்துக்கு எப்பிடி இருப்பினம் எண்டதை பால்குடி குழந்தையும் அரங்காமல் பிசகாமல்     அச்சொட்டாய்  சொல்லும்.tw_tounge_xd:

  • தொடங்கியவர்

மிக மோசமான ஒரு கடத்தல்காரன், கப்பம் பெறுபவன், கொலைகாரன், போர்க்குற்றவாளி தான் உண்மையான சிங்கள-பௌத்தனாகவும் சிங்கள அரச பயங்கரவாத இயந்திரத்தின் ஜனாதிபதியாகவும் இருக்கும் தகுதி கொண்டுள்ளதாக இங்கு கூறப்பட்டுள்ளது.  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.