Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் விக்கியை விமர்சித்ததால் மாகாண சபையில் பெரும் அமளி! நிலைமையை கட்டுப்படுத்த சபை ஒத்திவைப்பு

Featured Replies

வடமாகாண சபையில் கடும் கூச்சல் குழப்பம்.

IMG_3185.jpg
வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான கருத்துக்களை ஆளும் கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்க முற்பட்டதை அடுத்து சபையில் கடும் குழப்பம் ஏற்பட்டு சபை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

வடமாகாண சபை வரவுசெலவுத்திட்ட விவாதம் இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர் கே.சயந்தன் முதலமைச்சர் மீது குற்றம் சாட்டும் வகையில் சில கருத்துக்களை முன்வைத்தார். அதனை அடுத்து சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் கடும் கருத்து மோதல் இடம்பெற்றது.

அதன் உச்சகட்டமாக ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபை நடுவில் சென்று குழுக்களின் தலைவர் முன்பாக நின்று அவைத்தலைவருடன் கருத்து மோதலில் ஈடுபட்டார்.
IMG_3186.jpg
அதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா உள்ளிட்ட உறுப்பினர்கள் சிவாஜிலிங்கத்தை சமாதானப்படுத்தி அவரது இருக்கைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து சபை அமர்வை ஒரு மணி நேரத்திற்கு அவைத்தலைவர் ஒத்திவைத்தார்.

http://globaltamilnews.net/archives/11071

  • தொடங்கியவர்
செங்கோலை தூக்க சிவாஜிலிங்கம் முயற்சி
 
 

article_1441713603-Sivajilingam.jpg-எம்.றொசாந்த்

வடமாகாண சபையின் அமர்வுகள் கடும் கூச்சல் குழப்பத்தின் மத்தியில் 1 மணித்தியாலம் ஒத்திவைக்கப்பட்டது.

வடமாகாண சபையின் வரவு -செலவுத் திட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் செவ்வாய்க்கிழமை (20) முன்வைக்கப்பட்டு, அது தொடர்பிலான தற்போது விவாதம் இன்று புதன்கிழமை இடம்பெறுகின்றது.

வடமாகாண உறுப்பினர் கே.சயந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகளை விமர்சித்து உரையாற்றினார். இதற்கு ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலர் பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர்.
“உங்களுடைய விமர்சனங்களை வெளியில் வைத்துக்கொள்ளுங்கள். தற்போது வரவு - செலவுத் திட்டம் தொடர்பிலான விவாதம் இடம்பெற்று வருகிறது. அது தொடர்பாக மட்டும் உரையாற்றுங்கள்” என தெரிவித்தனர்.

எனினும் சயந்தன் தனது உரையை தொடர்ந்தமையால், சபையில் அமளி துமளி ஏற்பட்டது. இதன் உச்சக்கட்டமாக, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், செங்கோலை தூக்க முயற்சி செய்தார். இதனையடுத்து, வடமாகாண சபையின் அமர்வுகள் 1 மணித்தியாலம் ஒத்திவைக்கப்பட்டது.

- See more at: http://www.tamilmirror.lk/188418/-ச-ங-க-ல-த-க-க-ச-வ-ஜ-ல-ங-கம-ம-யற-ச-#sthash.kLHnDuDL.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வடமாகாண சபை அமர்வுகள் மீண்டும் ஆரம்பம்
 

article_1482314454-NPC.jpg-எம்.றொசாந்த்

கடும் கூச்சல் குழப்பத்தின் மத்தியில் 1 மணித்தியாலம் ஒத்திவைக்கப்பட்ட வடமாகாண சபையின் அமர்வுகள் தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது, சபையில் சிவாஜிலிங்கம் “என்னால் சபை அமர்வுக்கு இடையூறு ஏற்பட்டதாக நீங்கள் கருதுவீர்களேயானால் அதற்கு நான் மன்னிப்பு கோருகின்றேன்” என தெரிவித்தார்.

அதற்கு உறுப்பினர் சயந்தன், “சிவாஜிங்கத்தின் பெருந்தன்மையை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன். மன்னிப்பு கேட்ட அவரது பெருந்தன்மையை முன்னுதாரணமாக கொள்கின்றேன்” என தெரிவித்தார்.

இதன்போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் “சம்பவம் நடைபெற்ற போது நானே சிவாஜிலிங்கத்தை சபையின் முன்னால் வருமாறு அழைத்தேன். நான் அழைத்தமைக்கு அமைய அவர் முன்னால் வந்ததை அனைவரும் தவறாக எண்ணி கூச்சல், குழப்பம் விளைவித்து விட்டனர். எனவே சகலதையும் மறந்து விவாதத்தை தொடர்வோம்” என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, விவாதம் மீண்டும் ஆரம்பமாகியது.

- See more at: http://www.tamilmirror.lk/188420/வடம-க-ண-சப-அமர-வ-கள-ம-ண-ட-ம-ஆரம-பம-#sthash.B0K80Xqy.dpuf

Edited by நவீனன்

வடமாகாணசபையில் முதலமைச்சர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரையாற்ற முயற்சித்த ஆளுங்கட்சி உறுப்பினர்களால் மாகாணசபையில் கடும் குழப்ப நிலை உருவாகி செங்கோலை தூக்கவும் முயற்சித்த நிலையில் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்துடன் முரண்பட்டு செங்கோலை தூக்கவும் முயற்சித்துள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் முதலமைச்சரின் அமைச்சுக்கான ஒதுக்கீட்டின் மீதான விவாதம் இன்றைய தினம் நடைபெற்றது.

இதன்போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசியலுக்கு வரும்போது என்ன நிலைப்பாட்டில் கொண்டு வரப்பட்டார். இப்போது முதலமைச்சர் அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகி நடந்து கொண்டிருக்கின்றார் என குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன், முதலமைச்சரை சூழ உள்ளவர்கள் முதலமைச்சரை தவறாக வழி நடத்துகின்றார்கள். என மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் சயந்தனும் எழுந்து,

வரவுசெலவுத் திட்ட முன்மொழிவில் உறுப்பினர்களின் ஒத்துழைப்பை கேட்ட முதலமைச்சர் வெளியே விகாரைகள் கட்டப்படுவதன் பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகள் துணைபோகிறார்கள். எனவும் வெளிநாடுகளுக்கு சென்று மாகாணசபையில் உறுப்பினர்கள் சிலர் குழப்பம் விளைவிக்கின்றார்கள். எனவும் குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், சர்வேஸ்வரன் போன்றவர்கள் முதலமைச்சரை விமர்சிப்பதாக இவர்களுடைய பேச்சுக்கள் இருக்கின்றன. மலும் இந்த விடயம் தொடர்பாக விவாதிப்பதானால் வேறு இடத்தில் விவாதிக்கலாம் எனக் கூறியதுடன் சபையை ஒத்திவைக்கலாம் எனவும் கூறினார்.

இந்த நிலையில் சபையை எப்போது ஒத்திவைப்பது, எப்போது கூட்டுவது என எனக்கு தெரியும். இந்த சபையை கலைக்க ஒருபோதும் நான் இடமளிக்கமாட்டேன் என அவைத் தலைவர் கூறியதுடன் 'நீ' கீழே இரு எனவும் கூறினார்.

இந்த நிலையில் அவைத் தலைவரை நோக்கி “பேசும் வார்த்தைகளை சிந்தித்து பயன்படுத்துங்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து இருவருக்குமிடையில் வாக்குவாதம் மூண்ட நிலையில் சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்குவதற்காக அவைத் தலைவரை நோக்கி சென்றார். எனினும் மற்றய உறுப்பினர்கள் அவரை தடுத்து சமாதானப்படுத்தினார்கள்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

மேலும் சில உறுப்பினர்கள் சிவாஜிலிங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டனர். இந்த சம்பவம் நடந்துகொண்டிருக்கும் போதே அவைத் தலைவர் ஆங்கிலத்தில் தகாத வார்த்தைகளை மீளவும் பயன்படுத்தினார். இந்நிலையில் குழப்பம் நீடித்ததை தொடர்ந்து சபை ஒரு மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/politics/01/128935?ref=home

 

 

  • கருத்துக்கள உறவுகள்

செங்கோல் இப்போ கிட்டி பொல்லு மாதிரி போச்சா?

3 hours ago, நவீனன் said:
, சபையில் அமளி துமளி ஏற்பட்டது. இதன் உச்சக்கட்டமாக, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், செங்கோலை தூக்க முயற்சி செய்தார். இதனையடுத்து, வடமாகாண சபையின் அமர்வுகள் 1 மணித்தியாலம் ஒத்திவைக்கப்பட்டது.

உந்தாலுக்கு செங்கோல் மேல ஒரு கண். யாராவது ஒரு டூப்ளிகேட் செங்கோல் செய்து உந்தாளுக்கு குடுங்கோ. அதை வச்சு விளையாடட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரே சத்தமாத்தான் கிடக்கு   இதைப்பார்க்க என்னத்த சொல்ல.......................................................................... இடைவெளி நிரப்புங்கள் 

12778.jpg

 

 

 
 
 

வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சு மீதான விவாதம் நேற்று இடம்பெற்ற நிலையில், குறித்த விவாதத்தில் உரையாற்றிய உறுப்பினர்கள் சிலர் பட்ஜெட் தொடர்பில் விவாதிக்காமல் முதலமைச்சரை அரசியல் ரீதியாக விமர்சித்தமையால் ஆளுங்கட்சி உறுப் பினர்களிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்று சபையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. நிலைமையை கட்டுப்படுத்த சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தால் ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.  

வடக்கு மாகாண ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சரினை விமர்சித்து பேசியதால் சபையில் ஆளுங்கட்சிக்குள்ளேயே பெரும் அமளி துமளி ஏற்பட்டது. நான், நீ, போ, பேயா எனவும் கருத்து மோதல்கள் இடம்பெற்றமையால் அவையே நேற்று கலவரமாகியது.இந்த மோதல்களின் தொடர்ச்சியாக உறுப்பினர் சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்க முயன்றமையால் பெரும் குழப்பம் ஏற்பட்டு ஒருமணித்தியாலம் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

வடக்கு மாகாண சபையின் 71 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. இதன் போது வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சும் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பாதீடு தொடர்பில் கருத்துக்களை முன்வைக்காமல், முதலமைச்சரினை அரசியல் ரீதியாக விமர்சித்தமையும், தரக்குறைவான வார்த்தை பிரயோகங்களுமே குழப்பத்திற்கு காரணமாக அமைந்தது. இந்த குழப்பங்கள் அனைத்துலும் எதிர்க்கட்சி சம்பந்தப்படவில்லை. 

மாறாக ஆளுந்தரப்பு தமக்குள்ளே மோதுண்டுதனை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சியினர் யார் என்று தெரியாத நிலைக்கு தலைகீழாக நேற்றைய சபை மாறியிருந்தது. 

சண்டை ஆரம்பம் 
முதலமைச்சு அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றிய அஸ்மின்,வடக்கு மாகாண முதலமைச்சரினை சுற்றி இருப்பவர்கள் அவரை தவறாக வழிநடத்துகின்றார்கள். இங்கு உரையாற்றிய கொள்கை விளக்கவுரை யாரோ எழுதி குடுத்ததனை தான் வாசிக்கின்றார். எனவே முதலமைச்சர் தான் முதலமைச்சராக இங்கு வந்த போது மக்களின் எதிர்பார்ப்புக்கள் எவ்வாறு இருந்தது என முதலமைச்சர் சிந்தித்து பார்க்க வேண்டும். தன்னை சுற்றி இருப்பவர்கள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அஸ்மின் கூறினார்.

இவ்வாறு அஸ்மின் உரையாற்றி கொண்டு இருக்கும் போது ஏனைய சில உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் போது எழுந்த உறுப்பினரான சர்வேஸ்வரன், முதலமைச்சரின் தனிப்பட்ட விடயங்களை பேசுவது ஏற்க முடியாது. அவ்வாறு பேச வேண்டும் என்றால் அதனை கட்சி குழுக்கூட்டத்தில் பேச முடியும். மாறாக சபையில் முதலமைச்சரின் தனிப்பட்ட விடயம் தொடர்பில் கேள்விக்கு உட்படுத்த முடியாது என தெரிவித்தார். 

இதன் பின்னர் கருத்து தெரிவித்த உறுப்பினர் ரவிகரன், தமிழ் மக்களின் உரிமை தேசியம் பற்றி யார் கதைப்பது என்று தெரியாத நிலை உள்ளது. முதலமைச்சர் பற்றி இப்போது பேசுபவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை. என சாடினார். இங்கு கருத்து தெரிவித்த உறுப்பினர் சிவாஜிலிங்கம், உறுப்பினர் அஸ்மின் முதலமைச்சர் பற்றி கூறிய நிலையில்,

நானா? நீயா?
இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ன? தமிழ் மக்களுடைய தீர்வு தொடர்பில் யார் செல்வது சரி? என்பது தொடர்பில் எங்கு என்றாலும் நாம் விவாதிக்க தயார். ஆகவே அரசியல் பேசுவதற்கு எங்களுக்கும் போதிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். என சிவாஜிலிங்கம் ஆவேசமாக கூறினார். இதன் போது சபையில் மேலும் சலசலப்பு ஏற்பட அவைத்தலைவர் ஓரளவு சமாளிப்புக்குள் கொண்டுவந்தார்.

எனினும் மீண்டும் எழுந்த உறுப்பினர் அஸ்மின், வடக்கு மாகாண முதலமைச்சர் அடுத்த வருட ஆரம்பத்திலாவது தான் இப்போது சென்று கொண்டிருக்கும் பாதையை மீள் பரிசீலனை செய்ய வேண்டும். தன்னை சூழ உள்ளவர்கள் அவதானமாக இருக்க வேண்டும். எதிர்வரும் ஆண்டிலாவது அவர் வடக்கு மக்களுக்கு சிறந்த சேவையை ஆற்ற முன்வர வேண்டும் எனவும் மீளவும் கூறினார்.

எனினும் முதலமைச்சரினை அஸ்மின் மீளவும் தாக்கி பேசியதால் உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் போது எழுந்த உறுப்பினர் சுகிர்தன், உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி வழங்கும் போது அனைவருக்கும் சமனாக வழங்க வேண்டும் என அவைத்தலைவரை நோக்கி கூறினார். பின்னர் எழுந்த உறுப்பினர் இந்திரராசா, ஆயுதப்போராட்டத்தை கொச்சை படுத்தி பேசிய அஷ்மினுக்கு கண்டனத்தை தெரிவிப்பதாக கூறி, வடக்கு மாகாண சபை ஆயுத போராட்டத்தினால் தான் உருவாகியிருந்தது எனவும் கூறினார்.

அருகதையற்றவர்கள் 
இதன் போது கருத்து தெரிவித்த உறுப்பினர் சயந்தன், முதலமைச்சர் ஆயுத போராட்டத்தில் ஈடுபடவில்லை, அதை தான் அஸ்மின் கறைபடியவில்லை என கூறினார். மாறாக ஆயுத போராட்டத்தை கொச்சைப்படுத்தவில்லை என தெளிவுபடுத்தினார். இதன் பின்னர் எழுந்த உறுப்பினர் விந்தன், இப்போது பேசுபவர்கள் எல்லோரும் ஆயுதப்போராட்டம் பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்கள். சில்லறைத்தனமாக இந்த உறுப்பினர்கள் பேசுகின்றார்கள். அது தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை எனவும் கூறினார்.

மீண்டும் கருத்து தெரிவித்த உறுப்பினர் இந்திரராசா, தம்மால் ஒதுக்கப்படும் நிதிக்கு என்ன நடைபெறுகின்றது? என்பது குறித்து எமக்கு தெரியப்படுத்தப்படுவதில்லை. அரச அலுவலர்கள் தாம் நினைத்தபடி, எம்மால் குரிப்பிடடப்படாத வீதிகளையும் செப்பனிடுகின்றனர். என அரச அதிகாரிகளை சாடினார். இதே போன்று குறித்த போதல் சம்பவத்தில் இருந்து சபை விடுபட்டு, மீண்டும் ஆரோக்கியமான கலந்துரையாடலுக்கு அவை சென்றது.

யார் எதிர்க்கட்சி என்று தெரியவில்லை.
எனினும் மீண்டும் உறுப்பினர் சயந்தன் உரையாற்றும் போது, விவாதம் என்பது குறைகளை சுட்டிக்காட்டத்தான். ஆனால் இங்கே நிறைகளை மட்டுமே கூற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு என்றால், விவாதமே தேவையில்லை. ஒன்றும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றிவிட்டு போய்விடலாம். என சாந்தன் கூறினார்.

இதன் போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் தவராசா, இங்கு யார் எதிர்க்கட்சியினர் என்று தெரியவில்லை. நாங்கள் செய்ய வேண்டியதை ஆளுங்கட்சியினரே செய்து கொள்கின்றனர். என ஒரு குத்தல் போட்டார். எதிர்க்கட்சி தலைவர் ஆளுங்கட்சியின் தயவில் தான் பதவியில் உள்ளார். ஆகையால் தான் அவரது வேலையை நாங்கள் செய்கின்றோம் என சயந்தன் பதிலுக்கு குத்தல் போட்டார்.

குழப்பத்துக்கு இடம் கொடுத்த அவைத்தலைவர் 
தொடர்ந்தும் பேசிய சயந்தன், உள்ளூராட்சி அமைச்சின் செயபாடுகள் சிறந்த முறையில் அமையவில்லை எனவும், முதலமைச்சர் வெளி இடங்களில் உரையாற்றும் போது சில உறுப்பினர்கள் சபையை குழப்புவதாகவும் விகாரைகள் கட்டப்படுவதற்கு தமிழ் தலைமைகள் துணை போவதாகவும் உரையாற்றியுள்ளார். இலண்டனில் உரையாற்றும் போதும் முதலமைச்சர் உறுப்பினர்கள் சிலர் சபையை குழப்புகின்றனர் எனவும் கூறினார். இதன் போது குறுக்கிட்ட சர்வேஸ்வரன், சபை மீண்டும் வேறு திசை நோக்கி செல்கின்றது.

முதலமைச்சரினை தனிப்பட்ட ரீதியாக உறுப்பினர் ஒருவர் விமர்சித்து கொண்டு உள்ளார். அதற்கு அவைத்தலைவராகிய நீங்கள் இடம் கொடுத்து கொண்டுள்ளார்கள். இவ்வாறு பக்கச்சார்பான முறையில் செயற்படுவதனை தவிருங்கள். எனவும் அவைத்தலைவரிடம் சர்வேஸ்வரன் கூறினார். மேலும் ஆயுதப்போராட்டம் தொடர்பில் முதலமைச்சர் ஆரம்பத்தில் ஒரு விமர்சனம் ஒன்றை செய்திருந்தார். அது தொடர்பில் நான் பத்திரிகைகள் மூலம் தான் விளக்கமளித்தேன். எனவே பேச வேண்டியவற்றை, பதில் அளிக்க வேண்டியவற்றை, அந்த இடங்களிலேயே வழங்குங்கள் என சிவாஜிலிங்கம் கூறினார்.

குழப்பம் ஆரம்பம் 
வடக்கு மாகாண முதலமைச்சரினை தெரிவு செய்யும் போது தமிழரசு கட்சியும் தான் பங்கு பற்றி இருந்தது. என சிவாஜிலிங்கம் கூற, எவ்வாறு கட்சி பெயரை சபையில் பயன்படுத்தலாம் என உறுப்பினர்களான, அஸ்மின், ஆணல்ட், பரஞ்சோதி, மற்றும் அவைத்தலைவர் சிவஞானம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். எனினும் தான் கட்சியை இழுவுபடுத்தி கூறவில்லை அனைத்து கட்சிகளோடும் தமிழரசு கட்சியும் இருந்தது என்று தான் கூறினேன் என தெளிவு படுத்தினார்.

சபை குழம்பி கொண்டு உள்ளது, உறுப்பினர்கள் கட்டுப்படுகின்றனர் இல்லை என அவைத்தலைவர் கூற, உறுப்பினர்கள் வேறு சம்பவம் தொடர்பில் பேசத்தொடங்கி விட்டார்கள் எனவே சபையை ஒத்திவைக்கலாம் என உறுப்பினர் சிவாஜிலிங்கம் மீண்டும் கூறினார். அது எனக்கு தெரியும் நீ இரு, என கூறிய அவைத்தலைவர், சும்மா கதைத்து பிரயோசனம் இல்லை. வடக்கு மாகாண சபையை கலைக்குமாறு கூறியவர் தான் நீர் என சிவாஜிலிங்கத்தை சாடினார்.

செங்கோலை தூக்க முயன்றதால் பதற்றம்
உங்களுடைய கருத்துக்களை யோசித்து பேசுங்கள், என தனது இருக்கையில் இருந்து சிவாஜிலிங்கம் கூற, மீண்டும் அவைத்தலைவர் முரண்பட சிவாஜிலிங்கம் செங்கோலை நோக்கி வேகமாக சென்றார். இவ்வாறு சிவாஜிலிங்கம் செல்ல தனது இருக்கையில் இருந்து அவைத்தலைவர் எழும்பி வா வா போயா பேயா என ஏட்டிக்கு போட்டிக்கு நின்றார். இதனால் அருகில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து செங்கோல் நோக்கி சென்ற சிவாஜியை சமாதானப்படுத்தினார்கள்.

இந்த சம்பவத்தில் அனைத்து உறுப்பினர்கள் அனைவரும் பதற்றத்தினால் தமது இருக்கைகளில் இருந்து எழுந்தனர். ஒருசிலர் உறுப்பினர்கள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சபை நடத்தேலாது என உறுப்பினர் பரஞ்சோதி உரத்த குரலில் கூறினார். மேலும் சபையை வெளிநடப்பு செய்ய போவதாகவும் உறுப்பினர்களான பரஞ்சோதி, அஸ்மின், ஆனல்ட், ஆகியோர் கூறி, வெளிநடப்பு செய்ய ஆயத்தமானார்கள். உடனடியாக குழு நிலையிலிருந்த அவையை சபை நிலைக்கு கொண்டுவருவதாக அவைத்தலைவர் அறிவித்தார்.

பின்னணி கண்டறியப்பட வேண்டும்
இதற்கிடையில் கருத்து தெரிவித்த உறுப்பினர் விந்தன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை கோபம் ஏற்படுத்தும் வகையிலும் இயக்கங்களை கீழ்த்தரமாக கூறியும் வேண்டுமென்ற சிலர் குழப்பியுள்ளனர். அவர் செங்கோலை தூக்க முயன்றதற்கு இங்கே இருக்கும் ஒருசிலர் தான் காரணம். போராட்ட இயக்கங்களை கொச்சை படுத்தும் வகையில் இங்கே சில உறுப்பினர்கள் பேசியுள்ளார்கள். அவ்வாறு பேசியதால் தான் சிவாஜிலிங்கம் கோபமடைந்தார். இவற்றை விட பாராளுமன்றத்தில் பாரிய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. எனினும் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை அந்தளவு நிலைக்கு தள்ள கூடாது அதனை பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பு அவைத்தலைவருக்கு உண்டு. 

ஆரம்பம் முதலே வேண்டுமென்றே சபை சிலரால் குழப்பப்பட்டு வந்தது. இந்த பின்னணிகள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என விந்தன் கூறினார். இதன் போது உறுப்பினர் ஆனல்ட்க்கும் விந்தனுக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒவ்வொரு உறுப்பினர்களும் தாமாக பேசிக்கொண்டு இருந்தார்கள். இந்த சத்தத்தினால் வெளியில் இருந்தவர்கள் காதை பொத்தியதனையும் காண முடிந்தது. தாம் ஆயுத போராட்டத்தை கொச்சை படுத்தவில்லை எனவும், இங்கே ஆயுதப்போராட்டம் தொடர்பில் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை எனவும் விந்தனுடைய கருத்தை மறுத்து பேசினார் உறுப்பினர் ஆனல்ட்.

ஒரு மணிநேரத்திற்கு திடீர் ஒத்திவைப்பு!
இந்த குழப்ப நிலைகளால் சபையில் ஒருவித பதற்றம் ஏற்பட்டு கொண்டிருக்க சபையை உடனடியாக ஒரு மணித்தியாலத்திற்கு ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார். இதன் போது உறுப்பினர் சிவாஜிலிங்கத்துடன் கோபமாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கோரினார். இந்த ஒத்திவைப்பு நேரத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதன் பின்னர் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் சபை கூடியது. மீண்டும் சபை மதிய உணவின் பின்னர் கூடிய போது சபையில் ஏற்பட்ட குழப்பத்திற்கு உறுப்பினர்களின் வேண்டுதலுக்கு அமைய மன வருத்தத்தை தெரிவிப்பதாக கூறினார். 

அதனை தாம் பெருந்தன்மையுடன் ஏற்பதாக உறுப்பினர் சயந்தன் கூறினார். இவ்வாறான சங்கடங்கள் ஜனாயக அமைப்பில் ஏற்படுவது வழமை தான். நான் மிகவும் மதிப்பு வைத்துள்ள உறுப்பினர்களில் ஒருவர் தான் சிவாஜிலிங்கம் தான். எதோ தவறுதலாக நடைபெற்று விட்டது என அவைத்தலைவர் சிவஞானம் கூறினார். இதன் பின்னர் உரையாற்றிய உறுப்பினர் ரவிகரன், எமது நிலங்கள் பறிபோய் கொண்டிருக்கின்றது. அனால் நாம் சண்டை போட்டு கொண்டுள்ளோம். என ஆவேசத்துடன் கூறினார். இதன் பின்னர் சபை அமைதிக்கு வந்தது.

உறுப்பினர்களுக்கு உறைக்கும் கதை 
வானம்பாடி ஒரு பறவை உண்டு, அந்த பறவை பகல் முழுவதும் பறந்து கொண்டே இருக்கும், பின்னர் இரவு நேரத்தில் காலை மேலே வைத்து தலைகீழாக தான் தூங்கும். ஏனென்றால் வானத்தை தான் தான் பகல் முழுவதும் தனது முதுகில் தாங்கியது என்று. இந்த நினைப்பில் தான் இங்கு பல உறுப்பினர்கள் பேசிக்கொண்டு உள்ளார்கள். இங்குள்ள உறுப்பினர்கள் கதைத்ததை எல்லாம் சேர்த்து பார்த்தால் ஒன்றுமே பிரயோசனம் இல்லை என்று தான் தோன்றும்.

இங்குள்ள உறுப்பினர்களில் ஐந்து பேர்களை தவிர ஏனையோர் மாகாண சபை மீது நம்பிக்கையற்ற நிலையில் தான் உள்ளனர். மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் பொறுப்பை உறுப்பினர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மாறாக தேவையற்ற விதத்தில் ஒருவரினை சுரண்டி பார்க்கும் வகையில் ஒருவரின் கருத்து அமைய கூடாது என உறுப்பினர் பசுபதிப்பிள்ளை அறிவுரை கூறினார். இதன் பின்னர் கருத்து தெரிவித்த உறுப்பினர் மயூரன், இங்குள்ள உறுப்பினர்கள் சிலரை குழப்ப வாதிகளாக தான் மக்கள் பார்க்கின்றனர் என ஒரு உண்மையை போட்டுடைத்தார்.

முதலமைச்சரை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்!
வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் எனக்கும் முரண்ட்பாடு உண்டு என்பதனை நான் நேரடியாக கூறுகின்றேன். மற்றவர்கள் போன்று முன்னாள் புகழ்ந்து விட்டு, பின்னால் இகழ்பவன் அல்ல. உறுப்பினர் அஸ்மின் கூறுவது போன்று முதலமைச்சரினை யாரும் செயற்படுத்தவில்லை. அவ்வாறு யாரும் இருந்தாலும் அவர்கள் சொல்வதை கேட்டு செயற்படும் ஆள் முதலமைச்சர் இல்லை. எமது முதலமைச்சர் ஒரு நீதியரசர் அவருக்கு தீர்ப்பு எழுத தெரியும் என புகழ்ந்து பேசினார்.
இதே போன்று மதிய உணவிற்கு முன்னர் சண்டை பிடித்த உறுப்பினர்கள் மதிய உணவின் பின்னர் ஒற்றுமையுடன் பேசி கூடி  குழாவி மகிழ்ந்தனர். அவைத்தலைவரும் தனது மனக்கிடைக்களை அவையில் கொட்டி தீர்த்தார். எதிர் வரும் ஆண்டிலாவது நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் செயற்படுவோம் எனவும் அவைத்தலைவர் மீண்டும் மீண்டும் கூறினார். இதனை அடுத்து அவையில் ஏற்பட்ட குழப்பம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
 

தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்

வடக்கு மாகாண சபையில் நடக்கும் திருக்கூத்துக்களை மக்கள் நன்கு பார்த்து வருகின்றனர். வடக்கு மாகாண சபையைக் குழப்பியது, குழப்புவது யார்? என்பது மக்களுக்கு நன்கு புரியும்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஹோட்டல்களில் கூட்டம் கூடி முதலமைச்சருக்கு எதிராகக் கடிதம் எழுதி உறுப்பினர்களிடம் கையயழுத்து வாங்கியது முதல் சமுகமளிக்காத  உறுப்பினர்களின் கள்ளக் கையெழுத்து போட்டது வரை வடக்கு மாகாண சபையைக் குழுப்புகின்ற முயற்சியில் ஈடுபடுவது யார் என்பதை தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக அறிந்து வைத்துள்ளனர்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஒரு தடவை வெற்றி பெற்றவர்கள் தாங்களே தொடர்ந்தும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் என்று நினைக்கின்றனர்.  இந்த நினைப்பு எல்லாரிடமும் இல்லை என்பதையும் கூறித்தானாக வேண்டும்.

மிகப்பெரியதொரு யுத்த அழிவுக்குப் பின்னர் தமிழ் மக்கள் தங்களின் பொன்னான வாக்குகளை மன விருப்போடு அளித்தது வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

யுத்தத்தில் இரண்டு கால்களையும் இழந்தவர்கள் கூட அரைந்தும் தவழ்ந்தும் வாக்களிக்கச் சென்றதைப் பார்த்து நெக்குருகாதவர்கள் இல்லை எனலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரே தலைமையின் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தை ஏற்றுக் கொண்டு தமிழ் மக்கள் வாக்களிக்க,
வீட்டுச் சின்னத்தில் தும்புத்தடி போட்டியிட்டாலும் வெல்லும் என்றிருந்த நிலைமையில், மாகாண சபையில் பதவியைப் பெற்றவர்கள் உளர். 

நிலைமை இதுவாக இருந்த போதிலும் இவ்வாறு வெற்றி பெற்றவர்களில் சிலர் கொழும்பு தமிழ் அரசியல் தலைமையின்  ஏவலில் வடக்கு மாகாண சபையைக் குழப்பி, வடக்கின் முதலமைச்சரை தாமாகப் பதவி விலகச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனினும் அந்தச் சதித்திட்டங்கள் வெற்றி பெறவில்லையாயினும் தமிழ் மக்களுக்கான சேவையை  வடக்கு மாகாண சபை வழங்க முடியாத அளவில் களநிலைமையை மோசமாக்கி தமிழ் அரசின் செயற்பாட்டை நாசமறுத்தனர்.

இத்தகையவர்கள் சிறிது காலம் அமைதியாக இருந்தனராயினும் இப்போது மீண்டும் வடக்கு மாகாண சபையின் இயல்பு நிலைமையைக் குழப்பத் தலைப்பட்டுள்ளனர்.

இதற்கு அடிப்படைக் காரணம் புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை - உரிமையைத் தரும் என்பதில் நம்பிக்கை இல்லை என்று வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வெளிப்படையாகக் கூறியமைதான்.

அதாவது மேற்போந்தவாறு வடக்கின் முதலமைச்சர் கூறுவது, கொழும்பு ஆட்சியாளர்களுக்குத் தாம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகும் என்ற ஏக்கம் சிரசுக்கேற, வடக்கு மாகாண சபையை மீண்டும் குழப்பும் கொடுமைத்தனம் அரங்கேறியது என்பதே நிஜம்.

அதிலும் மிக நுட்பமாக வடக்கு மாகாண சபையை கடுமையாகக் குழப்புவது பின்னர் தாம் ஒற்றுமை போல நடித்து தமிழ் மக்களை ஏமாற்றுவது என்ற கபட நாடகம் தமிழினத்துக்கு செய்யப்படும் மிகப் பெரிய துரோகத்தனமாகும். 

எதுவாயினும் அன்புக்குரிய தமிழ் மக்களே! நீங்கள்தான் உயர்ந்த நீதிபதிகள் பத்திரிகையில் இவ்வாறு எழுதப்பட்டு விட்டது என்பதற்காக நீங்கள் இதை ஏற்க வேண்டும் என்றில்லை.

நீங்களே சிந்தியுங்கள். வடக்கு மாகாண சபையின் அமர்வுகளில் யார் யார் எப்படி நடந்தனர், நடக்கின்றனர் என்பதை அவதானியுங்கள். நீங்கள் நீதிபதிகள். அடுத்த தேர்தலில் உங்கள் தீர்ப்புத்தான் அடுத்த மாகாண அரசிலும் இதே குழப்பமா? கூத்தா? அல்லது இந்த சபை அடுத்த சபைக்கு நல்ல பாடமா? என்பதைத் தீர்மானியுங்கள். 

உங்கள் தீர்ப்பு தெளிவாக இருக்கட்டும். தேரான் தெளிவும் தெளிந்தான்  கண் ஐயுறவும் தீரா இடும்பைத் தரும் என்ற வள்ளுவனின் குறளை மன திருத்தி வடக்கு மாகாண சபையின் அமர்வுகளை முன்னோக்கியும் பின்நோக்கியும் பாருங்கள்.
 நீங்கள் வழங்கும் தீர்ப்பு சிலரின் அரசியல் துறவுக்கு அடி கோலட்டும். 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=12771&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.