Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் விடுகதைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 8/7/2018 at 11:38 PM, Ahasthiyan said:

அண்ணன் இனிப்பு, தம்பி புளிப்பு, தங்கை மட்டும் மணப்பாள், அவர்கள் யார்?

Ãhnliches Foto  Bildergebnis für mango Ãhnliches Foto 

மாம்பழம், மாங்காய்,  மாம்பூ. 

  • Replies 2.2k
  • Views 319.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதில்: பால், தயிர், நெய் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரச்சனைக்கு உங்கள் தீர்ப்பு என்ன?

ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போகர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர்.

முன்னவர் இருவரில் ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர் ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் ,இதனை நாம் எப்படி
மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார். மூன்றாம் நபர் இதற்கு
நான் ஒரு வழி சொல்ல்கிறேன்.( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)

நீங்கள் உங்கள் ரொட்டிகளை ,ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்ப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்.

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்.

பொழுது விடிந்தது.மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணய்ங்களை கொடுத்து நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளை கொடுதவர் அந்த காசுகளை சமமாகப்பிரித்து ஆளுக்கு

நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார். மற்றொருவர் இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்.

ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(5:3)

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன்.

நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது.அதனால் என் செய்கையே பாராட்ட தக்கது! என்றாலும் பரவாயில்லை.சமமாகவே பங்கிடுவோம் என்றார்.

சுமுகமான முடிவு எட்டாத்தால் விஷயம் அரசனின் சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை. நாளை தீர்ப்பு சொல்லதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான்

அரசன் மறு நாள் ஒரு தீர்ப்பு சொன்னான், அந்த தீர்ப்பு என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Ahasthiyan said:

அரசன், அரசியுடன்... ? "படுக்கையில்" ?  கலந்து,  ஆலோசித்த போது.... 
இவை... எல்லாம்,  அரசியின்  தங்கக் காசுகள்,  அவற்றை அரச கஜானாவில், 
சேர்க்க வேண்டும் என்று சொல்லி... 
அரச பொருட்களை... களவெடுத்த, குற்றத்திற்காக... 
இடுப்பிலிருந்த... வாளை, "சரக்"  என்று உருவி.....  
அந்த மூன்று பேரின்  தலையையும்,  குறி வைத்தான்... ?

(யாழ்ப்பாணத்தில் அதிக வாழ் வெட்டு செய்தி வருவதால்... என்னால், இப்படித்தான் யோசிக்க முடியும்) ⛑️

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவதாக இணைந்து கொண்டவர் மாறு வேடத்தில் வந்த  அரசனாக இருக்கலாம்.  

ஐந்து  ரொட்டி  வைத்திருந்தவர் மூன் றாம்   நபருக்கு கொடுத்து ஏழு ரொட்டி துண்டுகள்  ... மூன்று வைத்திருந்தவர் மூன்றாம் நபருக்கு கொடுத்து ஒரு  துண்டு ... எனவே ஐந்து வைத்திருந்த்வருக்கு எழுபொற்காசுகள்  மூ ன்று ரொட்டி வைத்திருந்தவருக்கு ஒருபொற்காசு ...

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 8/14/2018 at 12:37 AM, நிலாமதி said:

ஐந்து  ரொட்டி  வைத்திருந்தவர் மூன் றாம்   நபருக்கு கொடுத்து ஏழு ரொட்டி துண்டுகள்  ... மூன்று வைத்திருந்தவர் மூன்றாம் நபருக்கு கொடுத்து ஒரு  துண்டு ... எனவே ஐந்து வைத்திருந்த்வருக்கு எழுபொற்காசுகள்  மூ ன்று ரொட்டி வைத்திருந்தவருக்கு ஒருபொற்காசு ...

மிகச் சரியான பதில் வாழ்த்துக்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒல்லியான மனிதருக்கு ஒரே காது, அது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

ஒல்லியான மனிதருக்கு ஒரே காது, அது என்ன?

தையல் ஊசி 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Ahasthiyan said:

ஒல்லியான மனிதருக்கு ஒரே காது, அது என்ன?

Ãhnliches Foto

தையல் ஊசி..

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Image associée

  • 1 year later...
On 1/15/2017 at 11:23 PM, MEERA said:

ஆத்துக்காரி சொல்லித்தந்தது அகஸ்தியன், பச்சை வேணாம்..

🙄🙄🤔🤔

On 8/24/2018 at 3:17 AM, Ahasthiyan said:

ஒல்லியான மனிதருக்கு ஒரே காது, அது என்ன?

ஊசி

On 8/24/2018 at 3:17 AM, Ahasthiyan said:

ஒல்லியான மனிதருக்கு ஒரே காது, அது என்ன?

இந்த திரியை ஏன் நிறுத்தி விட்டீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருஷ்ணா said:

இந்த திரியை ஏன் நிறுத்தி விட்டீர்கள்? 

கிருஷ்ணா நீங்களே.... தொடருங்களேன்.
போட்டியில் கலந்து கொள்ள, பலர் இருக்கிறார்கள்.:)

இந்த விடுகதை ஏற்கனவே இடம் பெற்றிருந்தால் மன்னிக்கவும். 

ஒற்றைக்கால் கோழிக்கு வயிறு நிறைய முட்டை. அது என்ன? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 பனையும் நொங்கும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பிலே சுட்டவள் நெடுங்காலம் வாழ்வாள், அவள் யார்?

  • கருத்துக்கள உறவுகள்

பொன் (தங்கம்)

23 hours ago, Ahasthiyan said:

 பனையும் நொங்கும் 

வெண்டைக்காய், மிளகாய் 

12 hours ago, நிலாமதி said:

பொன் (தங்கம்)

17 hours ago, Ahasthiyan said:

நெருப்பிலே சுட்டவள் நெடுங்காலம் வாழ்வாள், அவள் யார்?

இருப்பு? 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் கிருஷ்ணா .....மேலும் ஒரு விடுகதை போட்டால் குறைந்தது  48 மணித்தியாலமாவது சரியான விடை சொல்வதை தவிருங்கள். அப்போதுதான் நாங்கள் பிழை பிழையாக சொல்லி உங்களை குஷிப்படுத்தலாம்.....!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/8/2019 at 9:10 PM, Ahasthiyan said:

நெருப்பிலே சுட்டவள் நெடுங்காலம் வாழ்வாள், அவள் யார்?

பதில் பொன், இரும்பு அல்ல

வால் நீண்ட கருவிக்கு வாயுண்டு வயிறில்லை. அது என்ன? 

20 minutes ago, கிருஷ்ணா said:

வால் நீண்ட கருவிக்கு வாயுண்டு வயிறில்லை. அது என்ன? 

அகப்பை

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

On 12/12/2019 at 8:28 PM, தமிழினி said:

அகப்பை

சரியான பதில் 

கந்தல் துணி கட்டியவன் முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன? 

1 hour ago, கிருஷ்ணா said:

கந்தல் துணி கட்டியவன் முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன? 

சோளப்பொத்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.