Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்தது..!

Featured Replies

மீண்டும் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்தது..!

 

 

நீண்டகாலமாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மீது  விதிக்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீதான தடை இன்று நீக்கப்பட்டுள்ளது. GSP_-to-SL.jpg

இதன்படி இன்று முதல் இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்மொழியப்பட்ட மனித உரிமைகள், தொழில் சட்டங்கள், சுற்றாடல் பாதுகாப்பு, நல்லாட்சி ஆகிய விடயங்களின் கீழ் 27 சர்வதேச இணக்கப்பாடுகளை செயற்படுத்தவும் அமுல்படுத்தவும் இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளதை கவனத்தில் கொண்டே ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை கிடைக்க வேண்டுமாயின் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளும், ஐரோப்பிய நாடாளுமன்றமும் அனுமதி வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதனை நடைமுறைப்படுத்த சுமார் நான்கு மாத காலம் எடுக்கும் என என ஐரோப்பிய ஆணைக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தைத்த ஆடைகள் மற்றும் மீன் உற்பத்திகள் உட்பட இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யும் குறிப்பிட்ட உற்பத்தி பொருட்களுக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மூலம் ஐரோப்பிய நாடுகள் 66 வீத வரியை அறவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்த பின்னர், இவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்பதுடன் இந்த பொருட்கள் குறைந்த விலையில் ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/15358

  • கருத்துக்கள உறவுகள்

அர்ப்பணிப்புக்களின் பிரதிபலன்; பிரதமர் - வெளிவிவகாரக் கொள்கையின் வெற்றி; ஜனாதிபதி

அர்ப்பணிப்புக்களின் பிரதிபலன்; பிரதமர் - வெளிவிவகாரக் கொள்கையின் வெற்றி; ஜனாதிபதி


 
 
மக்களின் உரிமைகளை பாதுகாத்து இலங்கையில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு மேற்கொண்டு அர்ப்பணிப்புக்களின் பிரதிபலனாக ஜி.எஸ்.பி.வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள முடிந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இது நல்லாட்சி அரசாங்கத்தினால் மட்டும் பெற்றுக் கொள்ளப்பட்ட வெற்றியல்ல என்றும் முழு இலங்கை மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ஆடைத்தொழில்துறை உள்ளிட்ட தேசிய தயாரிப்புகக்களை முழு அளவில் ஐரோப்பிய வர்த்தக சந்தையில் மீண்டும் முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 

புதிய தொழில்வாய்ப்புக்கான சந்தர்ப்பங்கள் நாட்டில் ஏற்படும். நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் ஜி.எஸ்.பி.வரிச்சலுகை வழி வகை செய்யும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற முடிந்தமை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. 

இலங்கையின் நல்லாட்சி அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி, நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்த முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு இந்த வரிச்சலுகை வலுவான சக்தியாக அமையும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 
  • தொடங்கியவர்

மீண்டும் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ்

Sp10-19adecb15f94aaac496995975d23a0fb1022b061.jpg

 

(பா.ருத்­ர­குமார்)
ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை

ஐரோப்­பிய ஒன்­றி­யம் இலங்­கைக்­கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கையை மீள வழங்­கு­வ­தற்­கான பரிந்­து­ரையை முன்­வைத்துள்­ளது. இலங்­கையில் யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்தித் திட்­டங்­களை வர­வேற்­றுள்­ள­தோடு மனித உரி­மை­களை பாது­காப்­பது தொடர்பில் நல்­ல­ாட்சி அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற செயற்­பா­டு­க­ளுக்கும் தனது ஆத­ரவை வழங்­கு­வ­தாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மனி­த­ உ­ரி­மைகள், சிறுவர் உரி­மைகள், தொழில் சூழல் உட்­பட 27 சர்­வ­தே­ச ­பி­ர­க­டனங்­களில் கைச்­சாத்­திட்டு அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தென இலங்கை வழங்­கி­யுள்ள உறு­தி­மொ­ழியைத் தொடர்ந்தே  ஐரோப்­பிய ஒன்­றியம் இந்த பரிந்­து­ரையை விடுத்­துள்­ளது. 

இது தொடர்பில் ஐரோப்­பிய ஒன்றியம் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்­கையின் பொரு­ளா­தார  அபி­வி­ருத்­தியில் ஜீ.எஸ்.பி. பிளஸ்  வரிச்­ச­லுகை முக்­கி­ய­மான பங்கு வகிக்­கின்­றது. ஆனாலும் இலங்­கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்­ச­லு­கையை வழங்­கு­வது தொடர்பில் தமது ஆட்­சே­ப­னை­களை ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றமும்,பேர­வையும் அடுத்த நான்கு மாதத்­திற்குள் வெளியி­டலாம். அதன் பின்­னரே இந்த பரிந்­துரை நடை­மு­றைக்கு வரும்­இந்த பரிந்­து­ரை­கா­ர­ண­மாக ஆடைகள் மீன்­பி­டிப்­பொ­ருட்கள் உட்­பட பல்­வேறு பொருட்கள் மீதான 66 வீத வரி நீக்­கப்­படும் நிலை உரு­வா­கி­யுள்­ளது.  

இதே­வேளை இது குறித்து கருத்து தெரி­வித்­துள்ள ஐரோப்­பிய ஓன்­றிய வர்த்­தக ஆணை­யாளர் சிசி­லியா மாம்ஸ்ட்ரோம்,

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்­ச­லுகை ஐரோப்­பா­விற்­கான ஏற்­று­ம­தியை அதி­க­ரிப்­பதன் மூலம் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்தும். மேலும் இது நாங்கள் இலங்கை மனித உரி­மைகள், சட்­டத்தின் ஆட்சி, நல்­லாட்சி, சீர்­தி­ருத்­தங்கள் போன்­ற­வற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு எந்த வகையில் உதவ விரும்­பு­கின்றோம் என்­ப­தையும் வௌிப்­ப­டுத்­து­கின்­றது. இலங்­கையின் புதிய பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் சர்­வ­தேச தரா­த­ரத்தில் அமை­வதை உறு­தி­செய்­வதும் அவ­சி­ய­மாகும்

ஜிஎஸ் பி வரிச்­ச­லு­கையை வழங்­கு­வதன் மூலம் இலங்­கையில் குறிப்­பிட்ட 27 பிர­க­ட­னங்­களும் சிறப்­பாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என நாம் கரு­து­கின்றோம் என அர்த்­தப்­ப­டுத்த முடியாது.

இந்த பிரகடனங்களில் மேலும் முன்னேற்றத்தை காண்பதற்கான சலுகையாகவே இது அமைகின்றது. அதேவேளை இந்த வரிச்சலுகை வழங்கப்பட்டாலும் இலங்கையின் மனித உரிமை நிலவரத்தை தொடர்ந்தும் கண்காணிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-12#page-1

  • தொடங்கியவர்

திங்கட்கிழமை தெளிவாக சொல்வேன் : மனோ கணேசன்  

 

 

 

ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்குமா அல்லது கிடைக்காதா என எதிர்வரும் திங்கட்கிழமை தெளிவாக சொல்வேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள்  அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.Mano.jpg

 

 

 

ஜி.எஸ்.பி. வரிச்சலுகை தொடர்பில் அமைச்சர் மனோ கணேசனிடம் ஊடகங்கள் இன்று வினவிய போது அமைச்சர்கூறியதாவது,

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இடை நிறுத்தப்பட்டு இருந்த ஜீஎஸ்பி+ வரிசலுகை கிடைக்கின்றது, கிடைத்து விட்டது என்ற கோஷங்கள் இலங்கை அரசியல் பரப்பில் இன்று எழுப்பப்பட்டு வருகின்றன. மனித உரிமை மீறல்கள் மற்றும் பொதுவான சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் (சிசிபிஆர்) என்ற விதிகளில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளை கடைபிடிக்காமை தொடர்பில் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீஎஸ்பி+ வரிசலுகை கடந்த ஆட்சியில், ஐரோப்பிய ஒன்றியத்தால் இடை நிறுத்தப்பட்டது. இந்த நல்லாட்சியில் அது மீண்டும் வழங்கப்படும் என்ற கருத்து இப்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இலங்கையின் ஏற்றுமதி பெறுமதியில் அரைவாசியை அடையக்கூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதி மீண்டும் கிடைக்குமானால், இலங்கையின் ஆடை ஏற்றுமதி துறையில் மீள் எழுச்சியும், பெருந்தொகை வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஜீஎஸ்பி+ வரிசலுகை கிடைக்குமானால், அது இன்றைய இலங்கை பொருளாதாரத்துக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

 

 

“உண்மையில் எனக்கு தெரிய ஐரோப்பிய ஆணைக்குழு, இலங்கைக்கு மீண்டும் சலுகைகள் வழங்க சிபாரிசு மட்டுமே செய்துள்ளது. இது இனி ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய பாராளுமன்றம் என்ற தடைகளை கடக்க வேண்டும். ஆணைக்குழு என்பது, ஒன்றியத்தின் நிர்வாக குழு ஆகும். வரி சலுகைகள் வழங்க இன்னமும் முன்னோக்கி நகர வேண்டும். இந்நிலையில், இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு, திங்கட்கிழமை எனது அமைச்சில் என்னை சந்தித்து பேச்சுகள் நடத்த உள்ளது. அதன்பின்னர் இதுபற்றி தெளிவான உண்மை நிலை பற்றி அறிந்துக்கொள்ள முடியும். அதுபற்றி அதன்பிறகு அறியத்தருகிறேன்”  

http://www.virakesari.lk/article/15423

'

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை பெற்றுக் கொள்ள 58 நிபந்தனைகள்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை பெற்றுக் கொள்ள 58 நிபந்தனைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க உயர்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீளவும் வரிச்சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்காக ஆபத்தான 58 நிபந்தனைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிபந்தனைகளுக்கு இணங்கி இது பற்றிய முன்னேற்றத்தை ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

  • பயங்கரவாதத்தடைச் சட்டத்தை ரத்து செய்து சர்வேதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக புதிய சட்டமொன்றை உருவாக்கி சர்வதேச சமூகத்திடம் அது குறித்து தெளிவுபடுத்தல்
  • கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த விசாரணைகளை துரித கதியில் விசாரணைக்கு உட்படுத்தல்
  • அனைத்து முன்னாள் புலி உறுப்பினர்களது புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளை பூர்த்தி செய்தல்
  • தடுப்புக் காவலில் வைக்கப்படுவோரின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இலங்கையின் குற்றவியல் சட்டத்தை திருத்தி அமைத்தல்
  • பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீளாய்வு செய்தல்
  • காணாமல் போனவர்கள் தொடர்பில் தனியான காரியாலயம் அமைத்தல்
  • மனித உரிமை செயற்பாட்டு பொறிமுறைமை ஒன்றை அறிமுகம் செய்தல்
  • பயங்கரவாத அமைப்புக்கள் நபர்கள் தொடர்பிலான பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழ் அமைப்புக்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் மீளாய்வு செய்தல்
  • நிதி மோசடி விசாரணைப் பிரிவு, லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவு மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆகியனவற்றினால் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை துரித கதியில் பூர்த்தி செய்தல்
  • ஊழல் மோசடிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் ஊடாக புதிய செயற்திட்டமொன்றை அறிமுகம் செய்தல்
  • புதிய அரசியல் அமைப்பின் ஊடாக மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளித்தல்
  • புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருதல்
  • காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை செய்தல்
  • தமிழ்மொழி பேசும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்
  • நாடாளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைந்தபட்சம் 25 வீதமாக உயர்த்துதல்
  • முஸ்லிம் சட்டத்தின் ஊடாக் விவவாகம் செய்யக்கூடிய குறைந்தபட்ச வயது எல்லையை நிர்ணயம் செய்தல்

உள்ளிட்ட 58 நிபந்தனைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும் இந்த நிபந்தனைகள் அமுல்படுத்தப்பட்டு அவற்றின் முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு அறிக்கை வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

இதே வேளை நிபந்தனைகள் எதுவுமின்றி ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை வழங்குவதாகவும் இந்த அரசாங்கத்தின் மீதான சர்வதேச நன்மதிப்பினை இது பறைசாற்றுவதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/statements/01/131782?ref=morenews

 
10 minutes ago, போல் said:

58 நிபந்தனைகள்

கூட்டுதொகை 13வருது புத்தனை தினமும் கொல்பவர்களுக்கு இனி பிரச்சினைதான் இனி இலங்கையில் இருந்து வரும் மீன் டின் ,பிஸ்கெட்கள் லெமன் பப் என்பவற்றில் அவதனாமாக இருக்கணும் எல்லாம் மறு திகதி போட்டு ஐரோப்பிய சந்தைக்கு வரும் வேகமாக இதுகளை சாப்பிட்டு கான்சர் போன்ற நோய்களில் மாட்டுப்படவேண்டும்

இது பொய் என்று பின்னால் சில வன்னைகள் வந்து ஆடும் ஒரு கேள்வி ஒரு லெமன் பொப் இலங்கையில் 210ரூபா எப்படி இங்கு ஒரு பவுனுக்கு மூன்று தமிழ் கடைகளில் விற்கிறார்கள்?

அதே போல் சைனாவில் இருந்து வரும் கண்ட மாமிச வகைகளில் இருந்து சிலோன்மீ ன் டின் என்று உடுப்பு போட்டு  இங்கு வரும் வேண்டி சாப்பிடுபவனுக்கு மீன் போல் இருந்தால் சரிதானே 

  • தொடங்கியவர்
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்படவில்லை-ஐரோப்பிய ஒன்றியம்
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்படவில்லை-ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கைக்கு இன்னமும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படவில்லை என்றும், இதுதொடர்பான இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
 
இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை கடுமையான நிபந்தனைகள் மற்றும் கண்காணிப்பின் கீழ் வழங்குவதற்கு ஐரோ ப்பிய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
 
எனினும், இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்து விட்டதாக, அமைச்சர்கள் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
 
இதுகுறித்து, கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய பணியக அதிகாரி ஒருவர் தகவல் வெளியிடுகையில், “இது ஒரு பரிந்துரை தான். ஐரோப்பிய நாடாளுமன்றமும், பேரவையும் தான் இதனை முடிவு செய்ய வேண்டும்.
 
வரும் மார்ச் 12ஆம் நாளுக்கும், மே 12ஆம் நாளுக்கும் இடையில் தான் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும்.” என்று கூறியுள்ளார்

http://onlineuthayan.com/news/22691

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.