Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெ., நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் உண்ணாவிரதம்?

Featured Replies

ஜெ., நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் உண்ணாவிரதம்?

 

 

சென்னை: மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் இருப்பதற்காக அமர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று (செவ்வாய் கிழமை) இரவு 9 மணிக்கு ஜெ., நினைவிடத்திற்கு சென்ற ஓ. பன்னீர் செல்வம் 15 நிமிடங்களுக்கு மேலாக அமைதியாக கண்மூடி தியானம் செய்து வருகிறார். முதல்வர் பன்னீர் செல்வம் ஜெ., சமாதியில் திடீரென உண்ணாவிரதம் இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1706390

Tamil_News_large_1706392_318_219.jpg

  • கருத்துக்கள உறவுகள்

panner.jpg

  • தொடங்கியவர்
மன குமுறலை வெளிப்படுத்த முடியாமல் ஓ.பி.எஸ்., மவுன விரதம்

 

 

சென்னை: முதல்வர் பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வற்புறுத்தியது, அ.தி.மு.க.,வில் நிலவும் பிரச்னைகள் உள்ளிட்டவற்றை வெளியில் சொல்ல முடியாமல் ஓ.பன்னீர் செல்வம் ஜெ., நினைவிடத்தில் மவுனமாக அமர்ந்துள்ளார்.

 

 

 

தலைமை செயலகத்திலிருந்து காமராஜர் சாலை வழியாக சென்றுகொண்டிருக்கும் போது திடீரென காரை நிறுத்தி சொல்லி, ஜெ., நினைவிடத்திற்கு சென்றுள்ளார். இது அவர் பயணத்திட்டத்தில் இல்லை. இதனால், தமிழக அரசு உயரதிகாரிகள் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டுள்ளது.

 

 

 

 

 

இதையடுத்து, மெரினாவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
 
 
  • தொடங்கியவர்

ஜெ., நினைவிடத்தில் 40 நிமிடங்களாக தியான நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்..! #LiveUpdates

f51b0225-e937-4435-b9af-e4f9947b3597_215

தற்போது அங்கு மக்கள் அனைவரும் வெளியேற்றபட்டுவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் பன்னீர் செல்வத்தை சூழ்ந்து நின்றுகொண்டு இருக்கிறார்கள். பத்திரிகையாளர்களிடம் பேச அவர் ஆயுத்தமாகிக் கொண்டு இருக்கிறார்.

06bff5b9-66fc-4f38-b547-6e650048b887_213

மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார். ஜெ., சமாதி முன் அமர்ந்த அவர் கண்களை மூடி சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் மவுன அஞ்சலி செலுத்தினார். ஓபிஎஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளார். ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்பியதும் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா முதல்வராக பதவியேற்க இருக்கும் நிலையில், ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் இந்த திடீர் மவுன அஞ்சலி கவனிக்க வைத்திருக்கிறது.

 

http://www.vikatan.com/news/tamilnadu/80078-cm-opanneer-selvam-in-jayalalithas-epitaph.art

  • கருத்துக்கள உறவுகள்

மெரீனாவில் கூட்டம்   போடக்கூடாது என்று பன்னீருக்கு  தெரியாதோ??

தடியடி என்னவென்று உணரப்போகிறார்

இப்பவெல்லாம் உடனுக்குடன் அனுபவிக்:க வேண்டி வருகுது

  • கருத்துக்கள உறவுகள்

 

கட்டாயப்படுத்தியதால் ராஜினாமா செய்தேன் என்று சொல்லிவிட்டார்..! :unsure:

  • தொடங்கியவர்

கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் : சசிகலாவை எதிர்த்த ஓபிஎஸ் #OPSVsSasikala

f51b0225-e937-4435-b9af-e4f9947b3597_215

தற்போது அங்கு மக்கள் அனைவரும் வெளியேற்றபட்டுவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் பன்னீர் செல்வத்தை சூழ்ந்து நின்றுகொண்டு இருக்கிறார்கள். பத்திரிகையாளர்களிடம் பேச அவர் கண்ணீரைத் துடைத்தபடியே ஆயுத்தமாகிக் கொண்டு இருக்கிறார்.

அவர் கூறியதாவது, "மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆன்மாவின் உந்து  சக்தியால் தான் நான் இங்கு வந்தேன். மாண்புமிகு அம்மா அவர்கள் நோய்வாய்ப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவரது உடல்நிலை, மிகவும் கிட்டத்தட்ட மோசமான நிலையை எட்டியபோது, என்னிடம் வந்து 'மாண்புமிகு அம்மாவின் நிலை மோசமாக இருக்கிறது,கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும்' என்று சொன்னார்கள்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது ஏன் மாற்று ஏற்பாடு என்றேன் அசாதாரண சூழ்நிலையில், ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார்கள்.

கிட்டத்தட்ட அரைமணி நேரம், நான் அழுது புலம்பினேன். முதல்வர், பொது செயலாளர் என இரு பொறுப்பையும் என்னை ஏற்று நடத்த சொன்னார்கள்.  மாண்புமிகு அவைத் தலைவர் மதுசூதனனை பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என சொன்னார்கள். என்னை முதல்வராக இருக்க சொன்னார்கள். 

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திவாகரன் போன்றோர். சசிகலாவை பொதுசெயலாளராக ஆக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். நான் சசிகலாவிடம் இதை சென்று சொன்னபோது, அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.

வர்தா புயலில் நான் தீவிரமாக வேலை செய்தது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.                      

ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதால் டெல்லியில் முகாமிட்டேன்.அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், பிரதமரிடம் சிறப்பு சட்டம் வேண்டும் என்றேன். புதிய சட்டம் உருவாக்கினோம் மத்திய அரசின் ஒப்புதல் வாங்கினோம் .   

030a1ec8-71ef-4553-af45-b62d6fac9f3f_225           

      
நான்  செய்த நற்பணிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. உதயகுமார் பேசியது நீதிக்கு புறம்பானது என சசிகலாவிடம் முறையிட்டேன்.    

நான் முதல்வராக இருக்கும் போது, உதயகுமார் சசிகலா முதல்வராக வேண்டும் என்று சொன்னார். உதயகுமார் பேசியது நீதிக்கு புறம்பானது என சசிகலாவிடம் முறையிட்டேன். உதயகுமாரைக் கூப்பிட்டு கண்டித்துவிட்டோம் என்றார்கள்.ஆனால், அவர் மதுரைக்கு சென்றும், இதையே தான் பேசினார். ஒட்டுமொத்த நாட்டு மக்களும், நம்மீது வருத்ததில் இருக்கிறார்கள். தொண்டர்களும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.என்னை ஏன் அசிங்கப்படுத்துகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள் என்றேன். என்னை தனிப்பட்ட ரீதியில் அவமானப்படுத்தினால், நான் அதை ஏற்றுக்கொள்வேன். பொது வாழ்விற்கு வந்தால் சிலவற்றை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என அமைதியாக இருந்தேன். 

                   
நான் பிரதமரை சந்தித்தால் தம்பிதுரை தனியாக எம்பிகளை சென்று பிரதமரை சந்திக்கிறார். இருவரும் ஒரே கோரிக்கைக்கு வந்ததால், எனக்கு அனுமதி கொடுத்தார்கள்.

கழகத்தின் பொது செயலாளர் தான் முதல்வர் ஆக வேண்டும் என பலர் பேசினார்கள். என்னுடைய அமைச்சரவையில் இருக்கும் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் எனக்கு எதிராக பேசினார்! செல்லூர் ராஜூவும் செங்கோட்டயனும் சொல்கிறார்.நான் மூத்த அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினேன்.என்னை அவமானப்படுத்துவதாக உணர்ந்தேன். வேண்டாம் என்று சொன்ன என்னை ஏன் இப்படியெல்லாம் அவமானப்படுத்துகிறீர்கள் என்றேன்.

என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். கழகத்தின் கட்டுப்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதால் ராஜினாமா செய்தேன். மக்கள் விரும்பினால் , ராஜினாமாவைத் திரும்ப பெறுவேன். மக்கள் நம்பிக்கையை பெற்ற ஒருவர் முதல்வராக வேண்டும்"  என்று கூறி கிளம்பினார்

 

06bff5b9-66fc-4f38-b547-6e650048b887_213

மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார். ஜெ., சமாதி முன் அமர்ந்த அவர் கண்களை மூடி சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் மவுன அஞ்சலி செலுத்தினார். ஓபிஎஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளார். ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்பியதும் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா முதல்வராக பதவியேற்க இருக்கும் நிலையில், ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் இந்த திடீர் மவுன அஞ்சலி கவனிக்க வைத்திருக்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/80078-cm-opanneer-selvam-in-jayalalithas-epitaph.art

பரபரப்பை நோக்கி தமிழக அரசியல்...
 
சசிகலா முதல்வர் என்று உதயகுமார் பேசியது நியாயமா : ஓ.பி.எஸ்
மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்ப பெறுவேன் : ஓ.பி.எஸ்.
 
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு எனக்கு அழைப்பில்லை : ஓ.பி.எஸ்.
 
கட்டாயப்படுத்தி என்னை ராஜினாமா செய்ய வைத்தனர் : ஓ.பி.எஸ்.
 
தமிழகத்தை காப்பாற்ற தன்னந்தனியாக போராடுவேன் : ஓ.பி.எஸ்.சபதம்
 
சசிகலாவிற்கு மக்கள் ஆதரவு இல்லை : ஓ.பி.எஸ்.
 
சசிகலாவிற்கு ஓ.பி.எஸ்., எதிர்ப்பு
  • கருத்துக்கள உறவுகள்

16299404_1440998749245959_77064462205319

:(

  • தொடங்கியவர்

BREAKING: போயஸ் கார்டன் விரைந்த அமைச்சர்கள்!

poes garden

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அதிரடிப் பேட்டியை தொடர்ந்து தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் அனைவரும் போயஸ் கார்டன் விரைந்துள்ளனர். அவர்கள் அங்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் கார்டன் விரைந்துள்ளனர். இந்நிலையில் அதிமுகவின் முக்கிய பிரமுகர் ராஜன் செல்லப்பா, 'கட்சியை காப்பாற்ற நினைக்கிறாரா.. அல்லது களங்கப்படுத்த நினைக்கிறாரா?' என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80082-admk-ministers-meet-sasikala-in-poes-garden.art

  • கருத்துக்கள உறவுகள்

எப்படித்தான் இப்படி கற்பனை செய்து மீம்ஸ் போடுகிறார்களோ?

கலக்கல்!

  • தொடங்கியவர்

ஓ.பி.எஸ் எதிர்ப்பு எதிரொலி.. சசிகலா முதல்வராவதில் சிக்கல்! ஆளுநர் கையில் முடிவு

 
 

சென்னை: மக்கள் விரும்பினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த முடிவை வாபஸ் பெற தயார் என்று காபந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதால் அதிமுக பொதுச்செயலர் சசிகலா முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கட்டாயப்படுத்திதான் தன்னை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சசிகலா மற்றும் அவரை சார்ந்தோர் நிர்பந்தம் செய்துவிட்டனர் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், தனி நபராக எதிர்த்து போராட தயார் என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

 
Sasikala may not become CM as O.Pannerselvam oppose
 

 

மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெற தயார் என கூறியுள்ளார். எனவே பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சசிகலாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் ஒருவரே பகிரங்கமாக இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளதால், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அல்லது ஆட்சியையும் கலைக்க வாய்ப்புள்ளது.

இந்த களேபரங்கள் காரணமாக சசிகலாவுக்கு முதல்வராக பதவிபிரமாணம் செய்து வைக்க ஆளுநர் விரும்ப மாட்டார் என்று தெரிகிறது. அடுத்தவாரம் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியாக உள்ளதால் இதையெல்லாம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் கருத்தில் கொள்வார் என தெரிகிறது.

http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-may-not-become-cm-as-o-pannerselvam-oppose-273522.html

31 எம்.எல்.ஏக்களுடன் பேச்சுவார்த்தை! ஒன் இந்தியா தமிழ் செய்தியை உறுதி செய்தார் முதல்வர் ஓபிஎஸ்!

 

சசிகலாவுக்கு எதிராக எம்எல்ஏக்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என ஒன் இந்தியா தமிழ் இன்று செய்தி வெளியிட்டது.

 

இதனை உறுதி செய்யும் வகையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வர் இன்று திடீர் தியானம் மேற்கொண்டார். சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ், எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என ஒன் இந்தியா தமிழ் செய்தி தளம் தான் முதலில் செய்தி வெளியிட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் ஓபிஎஸ் மேற்கொண்டுள்ள இந்த திடீர் அமைதிப் புரட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பதவி ஏற்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். VIDEO : அண்ணா நினைவு தினத்தை ஒட்டி பொதுவிருந்து - முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பு அண்ணா நினைவு தினத்தை ஒட்டி பொதுவிருந்து - முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்புPolitics Powered by ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக பதவி வகித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீரென தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை ஏற்க முடியாது: தொண்டர்கள் எதிர்ப்பு- வீடியோ 05:46 அம்மா இல்லாத இடத்தில் எனக்கு வேலை இல்லை சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக கண்களை மூடி அவர் தியானம் மேற்கொண்டு செய்தார். தற்போது தமிழக அரசியலில் நிலவி வரும் பரபரப்புகளுக்கு இடையே ஓபிஎஸ் ஜெ. நினைவிடத்தில் மேற்கொண்டுள்ள இந்த தியானம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

முதல்வர் ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக 31 எம்எல்ஏக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக ஒன் இந்தியா தமிழ் முதலில் செய்தி வெளியிட்டது. ஒன் இந்தியா தமிழின் செய்தியை உறுதி செய்யும் வகையில் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓபிஎஸ் தியானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ops-conforming-one-india-tamil-news-which-was-telling-that-o-273518.html

  • தொடங்கியவர்

திடீர் புரட்சியில் குதித்த ஓ.பி.எஸ்.ஸை டிஸ்மிஸ் செய்வாரா சசிகலா.. ?

 

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியை விட்டு சசிகலா நீக்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

சென்னை: திடீரென புரட்சியில் குதித்து அதிமுகவினரை தூங்க விடாமல் செய்து விட்ட முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீது அதிமுக நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்படி எடுத்தால் அதிமுக உடைவது உறுதியாகி விடும் என்பதால் அரசியல் ரீதியாக பரபரப்பு அதிகரித்துள்ளது. இதுவரை பணிவு, அமைதி, மென்மையான சிரிப்பு என்ற அளவில்தான் தமிழக மக்கள் ஓ.பன்னீர் செல்வத்தைப் பார்த்துள்ளனர். ஆனால் முதல் முறையாக ஒருவரை, குறிப்பாக தனது கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை குற்றம் சாட்டி பகிரங்கமாகப் பேசியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். இது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

சென்னையில் டிசிஎஸ் நிறுவன பேருந்தை கவிழ்த்த பேய்க்காற்று: வீடியோ 02:25 அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை ஏற்க முடியாது: தொண்டர்கள் எதிர்ப்பு- வீடியோ 05:46 அம்மா இல்லாத இடத்தில் எனக்கு வேலை இல்லை வழக்கமாக கட்சித் தலைமைக்கு எதிராக யாராவது கருத்து கூறினால் அவரை கட்சியை விட்டு நீக்குவார்கள். அந்த வகையில் தற்போது ஓ.பன்னீர் செல்வமும் கட்சியை விட்டு நீக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அப்படி ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டால் அது அதிமுகவின் பிளவுக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ஓ.பன்னீர் செல்வத்திற்கு கிட்டத்தட்ட 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி ஓ.பன்னீர் செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டால் கட்சி உடையும், ஆட்சியும் கவிழும் என்று தெரிகிறது.

அப்படி ஒரு நிலை வந்தால் திமுக, வெளியிலிருந்து அதிமுகவுக்கு ஆதரவு தரக் கூடிய சூழல் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி நாலாவித சூழலையும் முன்கூட்டியே ஊகித்து, அதுதொடர்பாக உரியவர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே மெரீன் கடற்கரைக்கு ஓ.பன்னீர் செல்வம் வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/will-sasikala-dismiss-ops-from-party-273525.html

பன்னீர் செல்வத்தை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஸ்டாலின் பேட்டி

முதல்வர் பன்னீர் செல்வத்தை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 
 
 
 
பன்னீர் செல்வத்தை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஸ்டாலின் பேட்டி
 
சென்னை:

தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் செய்தியாளர்கள் பல்வேறு அதிரடியாக தகவல்களை தெரிவித்தார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பன்னீர் செல்வம் பேட்டி குறித்து ஸ்டாலின் கூறியதாவது:-

இந்த ஆட்சியில் அனைத்துமே மர்மமாக இருகிறது. முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை சசிகலா செயல்படவே விடவில்லை.

முதல்வரையே மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. அரசியல் சாசனப்படி உரிய ஆட்சியை ஆளுநர் அமைக்க வேண்டும்.

பன்னீர் செல்வம் தலைமையில் அமைந்துள்ள ஆட்சி நடைபெற்ற மக்கள் நல பணிகளை  ஆதரித்தோம். மக்களுக்கு ஆதரவான பணிகளுக்கு எப்போதும் திமுக துணை நிற்கும். திமுக எதிர்க்கட்சியாக தான் செயல்படும். எதிரி கட்சியாக செயல்படாது.

இவ்வாறு தெரிவித்தார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/07233429/1066940/Action-should-be-taken-who-given--threat-ton-Paneer.vpf

ஓபிஎஸ் குமுறல் - சசிகலாவின் பேனர்கள் கிழிப்பு ( படங்கள் )
 
2.jpg
 
  ன்னை பதவியிலிருந்து விலகச்சொல்லி மிரட்டி கையெழுத்து வாங்கியதாக முதல்வர் பன்னீர் செல்வம் கூறியதையடுத்து  தேனிமாவட்டம் போடியில் அமைச்சரின் ஆதரவாளர்கள் சசிகலா பேனர்களை கிழித்தும் சசிகலாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி நகரின் முக்கிய விதிகள் வழியாக அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் கண்டன பேரணி நடத்தினர்.  இதனால் போடியில் பதட்டமான சுழல் உருவாகியுள்ளது.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=183835

  • தொடங்கியவர்
ஓ.பி.எஸ்., பேட்டி: தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

 

சென்னை: பன்னீர் செல்வம் சசிகலா செய்த சதியை ஊடகங்களில் போட்டு உடைத்தார். அ.தி.மு.க., நடந்த சூழ்ச்சிகளையும் தனக்கு ஏற்பட்ட அவமானங்களையும் மன குமுறலாக பேட்டியில் தெரிவித்தார்.

பன்னீர் செல்வத்தின் பேட்டியை அறிந்த அ.தி.மு.க., தொண்டர்கள் தமிழகம் முழுவதும் வெடி வெடித்து உற்சாகமாக வரவேற்று வருகின்றனர். அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் கூடி கொண்டாடி வருகின்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1706431

என்னை முதல்வராக வைத்துக்கொண்டு அசிங்கப்படுத்துகிறார்கள்: ஓ.பன்னீர்செல்வம்

என்னை முதல்வராக வைத்துக்கொண்டு அசிங்கப்படுத்தியதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

என்னை முதல்வராக வைத்துக்கொண்டு அசிங்கப்படுத்துகிறார்கள்: ஓ.பன்னீர்செல்வம்
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சுமார் 45 நிமிடங்கள் தியானம் செய்த பின்னர் ஓ.பன்னீர்செல்வம்  செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது,

புரட்சி தலைவி அவர்களது நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்த எனது மனசாட்டி உந்தியதால் தியானம் செய்ததாக கூறிய  பன்னீர்செல்வம், நாட்டு மக்களுக்கும், அதிமுக உடன்பிறப்புகளுக்கும் சில உண்மை விவரங்களை தெரியபடுத்த அம்மாவின்  ஆன்மா என்னை உந்தியது. எதுவே எனது கடமையும் ஆகும் என்ற கூறினார்.

அதனைத்தொடர்ந்து, ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அவரது  உடல்நிலை மோசமாக இருந்த போது என்னிடம் வந்து அம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது கட்சியையும்  ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்று என்னை கேட்டதால் நான் முதல்வராக பதவியேற்றேன்.

முதல்வரான பின்னர் எனது பணியை செவ்வனே செய்ய வேண்டும் என்று நினைத்து பணியை தொடங்கினேன். அப்போது வர்தா  புயல் வந்த போது 4 நாட்களிலே சிறப்பான முறையில் முடித்தேன். அரசின் மீது நற்பெயர் கிடைத்தது. அது மாண்மிகு அம்மா  ஆட்சிக்கு வந்த நல்லப் பெயர் என்று நினைத்தேன். ஆனால் அது கட்சித்தலைமைக்கு எரிச்சல் ஊட்டியது.

மேலும் ஜல்லிக்கட்டு, குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தான் தீர்வு கொண்டுவந்ததால் அவர்களது எரிச்சல்  மேலும் அதிகரித்தது. எனவே என்னை முதல்வர் பதவியில் வைத்துக்கொண்டு கட்சித்தலைமை என்னை அவமானப்படுத்தியது.  அசிங்கப்படுத்தியது.

சட்டப்பேரவையில் எனக்கு கீழே இருக்கும் அமைச்சர் என்னை பதவி விலகச் சொல்லி கட்சித்தலைமையை முதல்வராக  பதவியேற்க வேண்டும் என்றனர். என்னை முதலமைச்சராக உக்கார வைத்துக் கொண்டு இவ்வாறு அசிங்கப்படுத்துகிறார்கள்.  

என்னை தனிப்பட்ட முறையில் பேசினால் பொறுத்துக் கொள்வேன். பொதுவாக பேசியதால் எனது முதல்வர் பதவியை நான்  ராஜினாமா செய்தேன் என்று கூறினார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/07223102/1066933/They-Blamed-me-insult-me-says-OPaneerselvam.vpf

சசிகலா முதல்வராக பொறுப்பேற்பதற்கு இப்போது என்ன அவசரம்: பன்னீர் செல்வம் பேட்டி

தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்பதற்கு தற்போது என்ன அவசியம் என்று தெரிவித்ததாக என்று முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
சசிகலா முதல்வராக பொறுப்பேற்பதற்கு இப்போது என்ன அவசரம்: பன்னீர் செல்வம் பேட்டி
 
சென்னை:
 
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பன்னீர் செல்வம் திடீரென மவுன அஞ்சலி செலுத்தினார். 
 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
 
எண்ணெய் கசிவு குறித்து ஆய்வு மேற்கொண்டு இருந்த போது, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் கூட்டப்பட்டு இருப்பதாக எனக்கு தகவல் அளிக்கப்பட்டது. 
 
நான் உடனே போயஸ் தோட்டம் சென்றேன். அங்கு மூத்த அமைச்சர்கள் கட்சி பொறுப்பும், ஆட்சிப் பொறுப்பும் ஒருவரிடத்தில்  இருப்பது தான் நல்லது என்று கூறினார்கள். 
 
முதல்வர் பதவியை ராஜினா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இல்லையெனில் நீங்களே கட்சி கட்டுப்பாட்டை மீறியதக ஆகிவிடும். 
 
அப்போது இந்த நடவடிக்கைக்கு என்ன அவசரம் என்று கேட்டேன். ஆனால் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 
 
முதல்வர் நினைவிடத்தில் சென்று கூறிவிட்டு வருகிறேன் என்று தெரிவித்தேன். ஆனால் அதனையும் ஏற்காமல், பிறகு செல்லலாம் என்றும் கூறினர். 
 
இவ்வாறு தெரிவித்தார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/07230910/1066937/What-is-now-urgent-to-sworm-Sasikala-as-TN-CM.vpf

  • கருத்துக்கள உறவுகள்

16508746_267957496967589_285605389157474

  • தொடங்கியவர்

சசிகலா முதல்வராக பன்னீர் கடும் எதிர்ப்பு: ஜெ.,நினைவிடத்தில் மன குமுறலை வெளிப்படுத்தினார்

 

 

சென்னை: தமிழகத்ததை காக்க தனியாக போராடுவேன் என ஜெ., நினைவிடத்தில் திடீரென தியானம் செய்த ஓ.பன்னீர் செல்வம், சசிகலா முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து தனது நிலையையும் உள்ள குமுறலையும் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

இன்று இரவு 9 மணியளவில் ஓ.பன்னீர் செல்வம் சென்னை மெரினா வந்தார். திடீரென ஜெ., நினனவிடத்தில் அமர்ந்து சுமார் 40 நிமிடங்கள் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்தார்.இதனால் மெரினா கடற்கரை பரபரப்பானது. தகவலறிந்த செய்தியாளர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். பொதுமக்களும் குவிந்தனர். தியானத்தை முடித்த பன்னீர் செல்வம் தனது மன குமுறைலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது கட்டாயத்தின் பேரில் ராஜினாமா செய்ய வைத்ததாகவும் கூறினார். இவரது திடீர் பேட்டி தமிழக அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது. இதன் மூலம் சசிகலா முதல்வராக பன்னீர் செல்வம் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.

முதல்வர் பன்னீர் செல்வம் பேசியதாவது:
 

gallerye_224149537_1706409.jpg

ஜெயலலிதா இறந்த பிறகு அவருடைய நினைவிடத்திற்கு சென்று நினைவிடத்திற்கு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்த மனசாட்சி உந்தப்பட்டதால் வந்தேன். சில உண்மை விவரங்களை நாட்டு மக்களுக்கு அ.தி.மு.க., தொண்டர்களுக்கு உள்ளார்ந்த அன்போடு சொல்வார்கள். அவர்களுக்கு சில உண்மைகளை சொல்லா ஜெயலலிதாவின் ஆன்மா என்னை உந்தியது.
ஜெ., நோய் வாய்ப்பட்டு அப்பல்லோவில் சிகிச்சையிலிருந்து 70 நாட்களுக்கு பிறகு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என கூறினார்கள். மாற்று ஏற்பாட்டிற்கு என்ன தேவை என கேட்டேன்.
ஜெயலலிதா அ.தி.மு.க., பொதுச்செயலராக அவை தலைவர் மதுசூதனனை நியமிக்க கூறினார்.
என்னை முதல்வராக சொன்னார். நான் முதல்வராக மறுத்தேன். அதற்கு, 2 முறையை என்னால் முதல்வராக அடையாளம் காட்டப்பட்டவர் நீ்ங்கள். தற்போது, உங்களை தவிர்த்து வேறு ஒருவரை முதல்வர் ஆக்கினால் கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் விளையும் என சொன்னார்கள். அதனால், முதல்வர் பதவியை ஏற்றேன்.
முதல்வரான பிறகு சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கருடன் வந்த திவாகரன் என்னுடைய அக்காவை ஊருக்கு அழைத்து செல்ல உள்ளேன் என்றார். காரணம் கேட்டதற்கு என்னுடைய அக்கா தான் பொதுச்செயலராக வேண்டும் என்றார்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் டில்லியில் பிரதமரை சந்திக்க சென்ற போது தம்பிதுரை தலைமையில் 50 எம்.பி.,க்கள் வந்தார்கள். பிரதமர் எனக்கு அனுமதி அளித்து இருக்கிறார். வாருங்கள் அனைவரும் ஒன்றாக சென்று சந்திப்போம் என சொன்னதற்கு மறுத்துவிட்டார்.
நான் முதல்வராக இருக்கும் போது, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சசிகலா முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். நான் முதல்வராக இருக்கும் போது எனக்கு கீழ் உள்ள அமைச்சர் இவ்வாறு பேட்டி அளித்தது குறித்து கட்சி தலைமைக்கு தெரிவித்தேன். அவர்கள் அமைச்சரை கண்டிப்பதாக கூறினார்கள். இதேபோல், தொடர்ந்து அமைச்சர் செல்லுார் ராஜூ, செங்கோட்டையன் உள்ளிட்டோர் சசிகலா முதல்வராக வேண்டும் என பேட்டி அளித்தனர்.
என்னை முதல்வர் ஆக்கி அவமானப்படுத்தி விட்டார்கள்
அ.தி.மு.க., சட்டசபை கூட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை. அவர்களே அனைத்து பணிகளை முடித்து விட்டு என்னை குறிப்பிட்டு என்னிடம் கூறினார்கள். நான் அவர்களுடன் பொறுமையாக நீண்ட நேரம் விவாதித்தேன்.
என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கினார்கள்.
என்னை பொறுத்தவரை நான் முதல்வர் ஆக வேண்டும் என விரும்பவில்லை. அ.தி.மு.க., தொண்டர்கள், மக்கள் விரும்பும் ஒருவரே முதல்வராக பதவி ஏற்க வேண்டும். தமிழகத்தை காப்பாற்ற தனித்து போட்டியிடுவேன். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்ப பெறுவேன்.இவ்வாறு அவர் பேசினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1706409

  • கருத்துக்கள உறவுகள்

சரசக்காவுக்கு கோவம் வந்திட்டுது.. tw_cold_sweat:

 

  • தொடங்கியவர்

கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள்: ஜெ. நினைவிடத்தில் தியானத்துக்கு பின் ஓபிஎஸ் அதிரடி பேட்டி: சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரி குற்றச்சாட்டு

 

 
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம். | படங்கள்: எல்.சீனிவாசன்
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம். | படங்கள்: எல்.சீனிவாசன்
 
 

தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யவைத்தனர் என்றும் முதல்வராக தான் சிறப்பாக பணியாற்றியது சசிகலாவின் குடும்பத்தாருக்கு எரிச்சல் ஏற்படுத்தியது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தமிழக பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 9 மணியளவில் திடீரென ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்தார். அங்கு ஜெயலலிதாவின் நினைவிடத்தை வலம் வந்து அஞ்சலி செலுத்தியவர் 40 நிமிடங்கள் அங்கேயே தியான நிலையில் அமர்ந்திருந்தார். அவர் தியானத்தில் அமர்ந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ்., முன்னாள் முதல்வர் நினைவிடத்தில் மவுன அஞ்சலி செலுத்திய தகவல் பரவியதையடுத்து அங்கு ஊடகவியளாளர்கள் குவிந்தனர். அவர் தொடர்ந்து மவுன நிலையிலேயே இருந்தார். அவ்வப்போது கண்களில் கசிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தார். அதிமுக நிர்வாகிகள் பலரும் அங்கு குவிந்தனர்.

தியானத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், "எனது மனசாட்சியின் உந்துதலால் நான் மவுன அஞ்சலி செலுத்தினேன்.

சில உண்மைகளை உங்களிடத்தில் சொல்ல வந்திருக்கிறேன். முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நான்தான் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என வற்புறுத்தினார்கள். இரண்டு முறை ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவரை விடுத்து வேறு ஒருவரை முன் நிறுத்தினால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்ததாலேயே பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். அதன்பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் பதவி மதுசூதனனுக்கு கொடுக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கு மாறாக சசிகலா அதிமுக பொதுச் செயலாளரானார். அதற்கு முன்னதாக திவாகரன் தனது அக்கா சசிகலாவை ஊருக்கு கூட்டிச் செல்லவிருப்பதாகக் கூறியதாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் வந்து சொன்னார், "சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் விரும்புகின்றனர்" என்றார். நானும் சம்மதித்தேன். அதன் பின்னரே சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.

அந்த வேளையில் 'வார்தா’ புயல் தாக்கியது. புயல் பாதிப்புகளில் இருந்து சென்னை நகரை மீட்டெடுப்பதில் சிறப்பாக பணியாற்றினேன். எனது சிறப்பான பணி அவர்களை (சசிகலா குடும்பத்தாரை) எரிச்சல் படுத்தியது.

தொடர்ந்து சென்னை நகரின் குடிநீர் தேவையை ஈடுகட்ட ஆந்திர அரசிடம் பேசி தண்ணீர் பெற்றேன். அதுவும் அவர்களுக்கு எரிச்சலூட்டியது.

பின்னர் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது. அதிலும், மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு வெற்றி கண்டேன். அதிலும் அவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டது. பின்னர்தான், அதிமுக சட்டமன்ற குழு கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்தார்கள்.

அந்தக் கூட்டம் நடைபெறப்போவதே எனக்குத் தெரியாது. அந்த நிலையில்தான் போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலாவை நான் சந்தித்தேன். அப்போது, எனது பதவியை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தினார்கள். சசிகலா முதல்வராவதற்கு என்ன அவசியம் இருக்கிறது என வினவினேன். ஆனால், என்னைத் தொடர்ந்து வற்புறுத்தினார்கள். நான் வேண்டாம் என்ற பதவியை கொடுத்துவிட்டு இப்போது அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்துவது நியாயமா எனக் கேட்டேன்.

ஆனால், அவர்களோ என் கையைப் பிடித்துக் கொண்டு இதற்கு சம்மதிக்காவிட்டால் கட்சி கட்டுப்பாட்டை மீறுவதாகிவிடும் என்று வற்புறுத்தினர். அதனாலேயே பதவியை ராஜினாமா செய்தேன். என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்.

அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை. தற்போது கட்சியில் நடைபெறும் நிகழ்வுகளால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். மக்களுக்காக தன்னந்தனியாக போராடத் தயாராக இருக்கிறேன்" என்றார்.

தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்கவுள்ள நிலையில் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடிப் பேட்டி.

http://tamil.thehindu.com/tamilnadu/கட்டாயப்படுத்தி-ராஜினாமா-செய்ய-வைத்தார்கள்-ஜெ-நினைவிடத்தில்-தியானத்துக்கு-பின்-ஓபிஎஸ்-அதிரடி-பேட்டி-சசிகலா-குடும்பத்தினர்-மீது-சரமாரி-குற்றச்சாட்டு/article9527272.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

16473473_247274895726277_818724096249151

  • தொடங்கியவர்

பன்னீர்செல்வம் சொன்ன 10 விஷயங்கள்

  •  

மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்த அவர் சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் அமைதியாக அமர்ந்திருந்தார்.

 
 

பன்னீர்செல்வம்,முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளார். அதே சமயம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்பியதும் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா முதல்வராக பதவியேற்க இருக்கும் இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் திடீர் தியானம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

 

40 நிமிட மௌனத்திற்கு பிறகு பன்னீர்செல்வம் சொன்ன முக்கியமான பத்து விஷயங்கள்:

1)என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர்.

2)கழகத்தின் கட்டுப்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதால் ராஜினாமா செய்தேன்.

3)மக்கள் , தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் , ராஜினாமாவைத் திரும்ப பெறுவேன்.

4)மக்கள் நம்பிக்கையை பெற்ற ஒருவர் முதல்வராகவும் பொதுச் செயலாளராகவும் வர வேண்டும்.

5) முதலில் மதுசூதனனை பொதுச் செயலாளராக்கவேண்டும் என்று கூறினார்கள். நான் மறுத்தேன்.

6) பின்னர், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், என்னை சந்தித்து, சசிகலாவின் சகோதரர் திவாகரன் போன்றோர் சசிகலாவை பொதுசெயலாளராக ஆக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார். நான் சசிகலாவிடம் இது பற்றிக் கேட்டபோது, அவர் அதை ஏற்றுக் கொண்டார்.

  ``என்னை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள் என்று கேட்டேன்``

7)வர்தா புயல் நிவாரணப் பணி, ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஆகியவற்றை நான் சிறப்பாகக் கையாண்டது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

8)பிரதமரை நான் சந்திக்கும் போது, துணை சபாநாயகர் தம்பிதுரையும் தனியாக எம்பிக்களுடன் சென்று பிரதமரை சந்திக்க முயன்றார். இது பற்றி கட்சித் தலைமையிடம் சொன்ன போது நீதி கிடைக்கவில்லை.

9) நான் முதல்வராக இருக்கும் போது, என்னுடைய அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் உதயகுமார் சசிகலா முதல்வராக வேண்டும் என்று சொன்னார். உதயகுமார் பேசியது நீதிக்கு புறம்பானது என்று சசிகலாவிடம் முறையிட்ட போது, உதயகுமாரை கண்டித்துவிட்டதாக சொன்னார்கள். ஆனால் பிறகு செல்லூர் ராஜூவும் என்னிடம் தனிப்பட்ட முறையில் உதயகுமாரை விமர்சித்துவிட்டு, மதுரை சென்று அவரும் சசிகலா முதல்வராகவேண்டும் என்று பேசினார்.

10)ஒட்டுமொத்த நாட்டு மக்களும், நம்மீது வருத்ததில் இருக்கிறார்கள். தொண்டர்களும் வருத்தத்தில் இருக்கிறார்கள், என்னை ஏன் அசிங்கப்படுத்துகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள் என்று கேட்டேன். தன்னந்தனியாக நின்று போராடவும் தயாராக இருக்கிறேன்.

http://www.bbc.com/tamil/india-38892774

  • கருத்துக்கள உறவுகள்

OPS பொருளாளர் பதவியில் இருந்து நீக்கம் - சின்னம்மா அதிரடி tw_blush:

  • தொடங்கியவர்

முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு 50 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு..?

 

 
panneerselvam

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அமர்ந்து மெளன அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் திடீர் தியானம் செய்ய காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் அளித்தார். கட்சித் தொண்டர்கள் விரும்புபவர்கள்தான் பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்தார். அவரது அதிரடியான பேச்சுக்குப் பின்னர் தமிழகத்தில் அரசியல் சூழலில் பல்வேறு திருப்பங்கள்  ஏற்பட உள்ளது. 

முதல்வர் பன்னீர் செல்வத்தின் அதிரடிப் பேச்சுக்குப் பின்னர் அதிமுக உடைவது உறுதியாகிவிட்டது. தற்போது முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு 50 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளித்து வருவதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகி வருகிறது. 

http://www.dinamani.com/

அ.தி.மு.க., பொருளாளர் பொறுப்பிலிருந்து ஓ.பி.எஸ்., நீக்கம்

 

சென்னை: அ.தி.மு.க., பொருளாளர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். திண்டுக்கல் சீனிவாசன் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

 

ஓ.பி.எஸ்., நீக்கம்:


ஜெ., சமாதிக்கு முன் தியானம் செய்த பன்னீர் செல்வம், தொடர்ந்து அளித்த அதிரடி பேட்டியை அடுத்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களின் அவசரக்கூட்டம் போயஸ் கார்டனில் கூடியது. கூட்டத்துக்கு பின் அ.தி.மு.க., பொருளாளர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் போயஸ் கார்டன் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1706507

ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவு!

அமைச்சர் சி.வி.சண்முகம்

ஓ.பன்னீர்செல்வம் அளித்த அதிரடிப் பேட்டியைத் தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் பேட்டி அளித்து முடித்த சில நிமிடங்களிலேயே அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் போயஸ் கார்டன் சென்று ஆலோசனை செய்து வருகின்றனர்

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக அமைச்சராக இருக்கும் சி.வி.சண்முகம், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார். சசிகலாவிற்கு எதிராக பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ள நிலையில், ஒரு அதிமுக எம்.எல்.ஏ.வும், அமைச்சராகவும் இருக்கும் ஒருவர் ஓ.பிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் பல எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என கருதப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/80089-cvsanmugam-support-for-opannirselvam.art

  • தொடங்கியவர்

போயஸ் தோட்டம், பன்னீர் செல்வம் இல்லத்தில் குவியும் அதிமுக தொண்டர்கள்

 

போயஸ் தோட்டம், ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
 
போயஸ் தோட்டம், பன்னீர் செல்வம் இல்லத்தில் குவியும் அதிமுக தொண்டர்கள்
 
சென்னை:

போயஸ் தோட்டம், ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து குவிந்து வருவதால் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.

பசுமைவழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக தொண்டர்கள்  அவரது வீட்டில் குவிந்துள்ளனர். அதே நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளரான சசிகலாவை சந்திக்க போயஸ் இல்லத்திற்கு  அதிமுக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர்.

முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த பின்னர் செய்திளார்களை சந்தித்து பன்னீர்செல்வம்  பேட்டியளித்தார். அதன் பின்னர் தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் தமிழகம் முழுவதும் போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர்.

பன்னீர்செல்வம் மிரப்பட்டதற்கு கட்சிப் பிரமுகர்கள், தலைவர்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஓ.பி.எஸ்-ஐ   மிரட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/08004154/1066943/ADMK-supporters-gathered-in-poes-garden-and-OPaneerselvams.vpf

  • கருத்துக்கள உறவுகள்

தேவைப்படடால், கட்டாயப்படுத்தி செய்ய வைத்த  ராஜினாமாவை திருப்பிப் பெறுவேன்.

நிமிடத்துக்கு நிமிடம் அதிர்வுறும் தமிழக அரசியல்.

கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர்: ஓ.பி.எஸ் பகிரங்க குற்றச்சாட்டு

என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர், நான் தனியாக இருந்து போராடுவேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டேன். ஆந்திரா சென்று தண்ணீர் பெற்று கொடுத்தது, ஜல்லிக்கட்டு சட்டம் இயற்றியது, வர்தா புயல் நிவாரணம் போன்றவற்றின்போது எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இது பிடிக்காமல் எனக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தனர்.
இறுதியில் கட்டாயப்படுத்தியே என்னிடம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய கூறி கடிதம் பெற்றனர். அம்மாவின் சமாதிக்கு சென்று அவரின் ஆன்மாவிடம் ஆசி பெற்றுவிட்டு ராஜினாமா கடிதம் தருகிறேன் என்று சொன்னதை கூட அவர்கள் ஏற்கவில்லை. பிறகு போய் ஆசி பெறலாம் என கூறினர். கட்டாயத்தின் பேரில்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தேன். ஜெயலலிதாவின் நல்லாட்சிக்கு களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது. அவரது வழிநின்று ஆட்சிபுரிபவர்கள் வேண்டும். பன்னீர்செல்வம் என்று இல்லை யாராக இருந்தாலும் சரிதான். மக்களால் விரும்புபவரே முதல்வராக வேண்டும். இதற்காக நான் தனியாக நின்று போராடுவேன். இவ்வாறு ஓ.பி.எஸ் தெரிவித்தார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/i-was-resigned-due-the-pressure-given-sasikala-says-o-panne-273521.html

சசி குடும்பம் மீது சரமாரி புகார்கள்.. வாய் திறந்த ஓ.பி.எஸ்.. விடிவதற்குள் உடையுமா அதிமுக?!

 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடலாம்?

 
secretriat

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அமர்ந்து மெளன அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெற தயார் என கூறியுள்ளார். எனவே பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சசிகலாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் ஒருவரே பகிரங்கமாக இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளதால், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அல்லது ஆட்சியையும் கலைக்க வாய்ப்புள்ளது. இந்த களேபரங்கள் காரணமாக சசிகலாவுக்கு முதல்வராக பதவிபிரமாணம் செய்து வைக்க ஆளுநர் விரும்ப மாட்டார் என்று தெரிகிறது.

அடுத்தவாரம் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியாக உள்ளதால் இதையெல்லாம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் கருத்தில் கொள்வார் என தெரிகிறது.

http://www.dinamani.com/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.