Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐபிஎல் 2017 சீசன்!

Featured Replies

  • தொடங்கியவர்

'தோனி தான் சிறந்த ஃபினிஷர்' : புனே அணி உரிமையாளர் ஹர்ஷ் கோயங்கா அந்தர் பல்டி!

இன்று சன்ரைசர்ஸுடன் நடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய தோனியை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் புனே அணியின் உரிமையாளர் ஹர்ஷ் கோயங்கா.

goenka

 

கடந்த சில போட்டிகளுக்கு முன்பு புனே அணியின் உரிமையாளர் ஹர்ஷ் கோயங்காவின் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை கிளப்பி வந்தன. இந்த ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக விளையாடி வரும் தோனி முதலில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் தான் சிறந்த கேப்டன் என ஹர்ஷ் கோயங்கா ட்விட்டரில் பதிவிட்டார்.மேலும் முதற்கட்ட ஆட்டங்களில் தோனி ரன் குவிக்க தடுமாறிய போது ஹர்ஷ் கோயங்கா புனே அணி வீரர்களின் சராசரியை ட்வீட்டாக போட்டு தோனி ரசிகர்களை மேலும் வெறுப்பேற்றினார்.

Masterful innings by Dhoni. Great to see him back in form. Nobody can be a greater finisher. Takes @RPSupergiants to a nail-biting win.

இதையடுத்து தோனியின் மனைவி சாக்‌ஷி மாலிக் உள்பட பலர் கோயங்காவை, திட்டியும், கலாய்த்தும் ஸ்டேட்டஸ் தட்டினர். அவர்களை கோயங்கை ஃப்ளாக் செய்தார்.

இந்நிலையில், தற்போது 'தோனியே சிறந்த ஃபினிஷர்' என அவர் பதிவிட்டுள்ளார் கோயங்கா. சன்ரைசர்ஸ் உடன் நடந்த போட்டியில் தோனி அரைசதம் அடித்ததோடு, கடைசி வரை நின்றுதான் ஒரு சிறந்த ஃபினிஷர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இதையடுத்து,'தோனியின் சிறப்பான ஆட்டம். அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது மகிழ்ச்சி' என கூறியுள்ளார் கோயங்கா. இதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் தோனியின் ரசிகர்கள் கோயங்காவின் ட்வீட்டை வைத்து அட்டகாசம் செய்து வருகின்றனர்.

http://www.vikatan.com/news/sports/87274-dhoni-is-the-best-finisher-says-harsh-goenka.html

 

 

 

  • Replies 368
  • Views 44.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

#MIvDD டெல்லி அணிக்கு 143 ரன்கள் டார்கெட்

 
 

ஐபிஎல் போட்டியில் இன்று நடந்த 25 ஆட்டத்தில், மும்பை, டெல்லி அணிகள் மோதி வருகின்றன. சனிக்கிழமை என்பதால் மும்பை வான்கஹாடே மைதானம் முழுவதும் ப்ளூ நிறத்தால் நிரம்பி இருந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

IPL


இதையடுத்து, மும்பை அணி முதலில் பேட் செய்தது. துவக்கம் முதலே அந்த அணி சொதப்பி வந்தது. அதிகபட்சமாக அந்த அணியின்  பட்லர் 28,  பொல்லார்டு 26, பாண்ட்யா 24 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பில் அமித் மிஷ்ரா, கமின்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி சற்று நேரத்தில் களமிறங்க உள்ளது.

ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

http://www.vikatan.com/news/sports/87282-mumbai-fixed-143-runs-target-for-delhi.html

  • தொடங்கியவர்

"பாட்ஷா.. மாணிக் பாட்ஷா!" - தோனி ரிட்டர்ன்ஸ் #RPSVsSRH

 

கேப்டன் பதவி பறிப்பு, புனே உரிமையாளர் கோயங்காவின் நக்கல் ட்வீட், மோசமான ஃபார்ம், ஓய்வு சர்ச்சைகள் என தோனிக்கு கொஞ்ச நாள் போதாத காலம். இப்படியே ஆடிக்கொண்டிருந்தால் புனே அணியில் ஒரு வீரராக கூடத் தொடர முடியாது எனும் அளவுக்கு சொதப்பல் இன்னிங்ஸ் ஆடிக்கொண்டிருந்தார் தோனி. புனே நிர்வாகத்துக்கும் தோனிக்கும் என்ன புகைச்சலோ தெரியவில்லை. அவர் சொதப்பல் ஆட்டம் ஆடுவதை ஒரு வகையில் ரசித்துக் கொண்டிருந்தனர். ரசிகர்கள் தோனி பக்கம் நின்றார்கள். தோனி இனியும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை என சப்போர்ட்டுக்கு வந்தார் வார்னே. 

முதல் மூன்று ஆட்டங்களில்,  தோனி பேட் பிடிக்க வந்தால் பவுலர்கள் குஷியாகும் அளவுக்கு நிலைமை இருந்தது. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ஸ்டேடியத்தை விட்டு வெளியே செல்லும் அளவுக்கு ஒரு இமாலய சிக்ஸர்  வைத்த தோனி, தனது மின்னல் வேக ஸ்டம்பிங்கால் டிவில்லியர்ஸை பெவிலியனுக்கு அனுப்பி புனேவுக்கு வெற்றியை உறுதிப்படுத்தினார். கடந்த  போட்டியில் லேசாக ஃபார்முக்கு வரும் அறிகுறி தெரிந்தது. இதோ இன்று பழைய பன்னீர் செல்வமாக திரும்பி  வந்திருக்கிறார் தோனி.

                                                                          தோனி

சன்  ரைசர்ஸ் அணியும், புனே அணியும் இன்று புனே மைதானத்தில் மோதின. புனே மைதானத்தை பொறுத்தவரையில் அது ஸ்லோ பிட்ச். அதிரடி  ஆட்டம் ஆடுவது  அவ்வளவு எளிதல்ல. டேவிட் வார்னரும், ஷிகர் தவனும் முதல் பத்து ஓவர்களில்  ஒன்றிரண்டாகவே ரன்களைச்  சேர்த்தனர். அதிரடி வீரர் வார்னர் களத்தில் இருந்தபோதும் ரன் ரேட் 7ஐ கூட தொடவில்லை. கடைசி  கட்ட ஓவர்களில் மோசஸ் ஹென்றிக்ஸ் அதிரடி காட்ட 175  ரன்கள் என்ற கவுரமான இலக்கை அடைந்தது. இந்த பிட்சில் 170 ரன்கள் என்பது நல்ல இலக்கு தான். ஆகவே புனே வெற்றி பெறுவது  அவ்வளவு சுலபமல்ல என்றே எல்லோரும் கருதினார்கள்.

ஸ்லோ பிட்ச்களில் நன்றாக ஆடக் கூடிய ரஹானே இரண்டே ரன்களில் திருப்திபட்டார். ஸ்மித்  பந்தை தவறாக கணித்து அவுட் ஆனார். இன்னொரு முனையில் அசாத்திய இன்னிங்ஸ் ஆடிக்  கொண்டிருந்தார் ராகுல் திரிபாதி. நிஜத்தில் இன்று பாராட்டப்பட வேண்டிய இளம் வீரர் அவர் தான். வேகப்பந்து வீச்சாளர்களை  இறங்கி வந்து அவர் சாத்திய விதத்தை பார்க்கும் போது, அவர்  நீல ஜெர்சியில் ஆடப்போகும் நாள்  அவ்வளவு தூரம் இல்லை என்றே தோன்றியது . ஒரு கட்டத்தில் திரிபாதி அவுட் ஆகும் போது அணியின் ஸ்கோர் 98 / 3 . 

6.5 ஓவர்களில் 78 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை. களத்தில் தோனியும், ஸ்டோக்சும் இருந்தார்கள். இருவருமே முழு ஃபார்மில் இல்லை என்பதால், புனே அணி அவ்வளவு தான் என தோன்றியது. எதிர்பார்த்தது போலவே ஸ்டோக்ஸ் 10 ரன்னில் அவுட் ஆகினார். புவனேஸ்வர் குமாருக்கு இன்னும் இரண்டு ஓவர் மீதம்  இருந்தது. இந்த சீசனில் புவனேஸ்வர் குமார் மிக அற்புதமாக வீசி வருகிறார். அவரது பந்துவீச்சை எதிர்கொண்டு விக்கெட்டைக் கொடுக்காமல் ஆடினாலே போதுமானது என்ற மனநிலையில் தான் ஆடுகிறார்கள் எதிரணி பேட்ஸ்மேன்கள்.  துல்லியமான புவியின் ஓவரை எப்படிச் சமாளிக்கப் போகிறது புனே அணி என மிகப்பெரிய கேள்வி எழுந்தது.

முதல் 26 ரன்களை எடுக்க 23 பந்துகளை எடுத்துக் கொண்ட தோனி, அதன் பின்னர் முதல் கியரில் இருந்து தடலாடியாக நான்காவது கியருக்கு மாற்றினார். 3 ஓவருக்கு 46 ரன் அடிக்க வேண்டும் என்ற நிலையில், 18 வது ஓவரை வீசிய முகமது சிராஜ் ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி வீசினார். மிக முக்கியமான 19 வது ஓவரை வீச வந்தார்  புவனேஸ்வர் குமார்.  அவரின் முதல் பந்தை எல்லைக்கோட்டுக்கு அனுப்பி வரவேற்றார் தோனி. இரண்டாவது பந்தில் கிட்டதட்ட தேர்ட்மேன் திசையில் ஒரு அட்டகாச பவுண்டரி அடித்தார். மூன்றாவது பந்தை ஒரு முரட்டு சிக்ஸர் அடித்தார். மேட்ச் புனே பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் 11 ரன் எடுக்க வேண்டும் புனே.  தனது பாணியில் பவுண்டரி விளாசி  மேட்ச்சை  முடித்து வைத்தார் தோனி. இந்த போட்டியில் தோற்றிருந்தால் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு மங்கியிருக்கும். தோனி, மனோஜ் திவாரி, ராகுல் திரிபாதி ஆகியோரின் ஆட்டத்தால் தப்பித்தது புனே. 

நீண்ட நாட்களுக்கு பிறகு மேட்ச் முடிந்த பிறகு நடக்கும் பிரசன்டேஷன் நிகழ்வில் தோனி கலந்து கொண்டார். அவர் தான் மேன் ஆஃப் தி மேட்ச்.  "கொஞ்சம்  கஷ்டமான தருணம் தான். ஆனால் எங்களிடம் நல்ல பேட்ஸ்மேன் வரிசை இருந்தது . எங்கள் திட்டப்படி ஆடி ஜெயித்தோம். இந்த போட்டியில் மனோஜ் திவாரியின் பங்களிப்பு மிக முக்கியமானது. பாராட்டப்பட வேண்டியது" என்றார். 

ஐபிஎல் முடிந்து சாம்பியன்ஸ் டிராபி ஆரம்பிக்கவுள்ள  சூழ்நிலையில், தோனியின் ஃபார்ம்  மிக முக்கியம்.  அவரின் பங்களிப்பு இல்லாமல் கோலி கோப்பையை தூக்குவது  இப்போதைக்கு கடினமே. கொஞ்ச நாட்களாக தோனியின் ரசிகர்கள் சோகத்தில் இருந்தார்கள். சிஎஸ்கே ரசிகர்களும் தான். அவர்களுக்கு தோனியின் இந்த இன்னிங்ஸ் உற்சாக டானிக்காக அமைந்திருக்கிறது.

http://www.vikatan.com/news/sports/87280-dhoni-finishes-in-style-for-one-more-time.html

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: டெல்லியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி

 

ஐ.பி.எல். சீசன் 10-ன் 25வது லீக் ஆட்டத்தில் டெல்லி மேர்டெவில்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.

 
ஐ.பி.எல்: டெல்லியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி
 
கொல்கத்தா:

ஐ.பி.எல். சீசன் 10-ன் 25-வது லீக் ஆட்டம் மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த 142 ரன்களை எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக பட்லர் 28 (18), பொல்லார்டு 26 (29), பாண்டியா 24 (23) ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி சார்பில் மிஷ்ரா, கம்மின்ஸ தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய டெல்லி அணியின் முதல் ஆறு வீரர்களான சஞ்சு சாம்சன் 9 (6), தாரே 0 (1), கருண் நாயர் 5 (15), ஸ்ரேயாஸ் ஐயர் 6 (7), கோரி ஆண்டர்சன் 0 (3), ரிஷப் பாண்ட் 0 (3) ரன்கள் எடுத்து அவுட்டாக 24 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது.
201704222353262925_d3yefy5l._L_styvpf.gi
இதையடுத்து ஜோடி சேர்ந்த கிறிஸ் மோரிஸ் - ரபாடா அதிரடி காட்ட அணியின் ரன்வேகம் உயரத் தொடங்கியது. எனினும் முதலில் இந்த ஜோடியை கட்டுப்படுத்த திணறிய மும்பை பந்துவீச்சாளர்கள், 19வது ஓவரின் போது ராபாடா விக்கெட்டை வீழ்த்த மும்பைக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. ரபாடா 39 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சர் என 44 ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் போல்டானார்.

இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை எடுத்தது. டெல்லி அணியில் மோரிஸ் அதிகபட்சமாக 52 (41) ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியில் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/22235324/1081410/IPL-MI-won-against-DD-by-14-runs.vpf

  • தொடங்கியவர்

குஜராத் - பஞ்சாப் இன்று மோதல்

 

சதம் அடித்த ஆம்லா. | படம்.| ஏ.எஃப்.பி.
சதம் அடித்த ஆம்லா. | படம்.| ஏ.எஃப்.பி.
 
 

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு ராஜ்கோட்டில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் - கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

குஜராத் அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி, 4 தோல்விகளை பெற்றுள் ளது. கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றி, அணியின் தன்னம் பிக்கையை அதிகரிக்க செய்துள் ளது. இந்த ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா ஆல்ரவுண்டராக அசத்தியிருந்தார்.

பந்து வீச்சில் இரு ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். பேட்டிங்கில் 46 பந்துகளில் 84 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். ரெய்னா இந்த சீசனில் 243 ரன்கள் சேர்த்துள்ளார்.

இதேபால் 258 ரன்கள் குவித் துள்ள மெக்கலம் தனது அதிரடி யால் அணிக்கு சிறந்த தொடக்கம் அமைத்து கொடுக்கிறார். கொல்கத் தாவுக்கு எதிராக அவரது அதிரடி யால் முதல் 5 ஓவர்களில் 62 ரன்களை குஜராத் அணி குவித்தது. ஆரோன் பின்ச், இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக், ஜடேஜா ஆகி யோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர்.

பந்து வீச்சில் கடந்த ஆட்டத்தில் பாசில் தம்பி, ஜேம்ஸ் பாக்னர் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் பாசில் தம்பி கடைசி கட்டங்களில் யார்க்கர்கள் வீசி நெருக்கடி கொடுத்தார். இன்றைய ஆட்டத்தில் டுவைன் ஸ்மித் நீக்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த இரு ஆட்டத்திலும் அவர் பேட்டிங்கில் சோபிக்க தவறினார். அவருக்கு பதிலாக ஆன்ட்ரூ டை மீண்டும் களமிறங்கக்கூடும்.

பஞ்சாப் அணியும் 6 ஆட்டத்தில் 2 வெற்றி, 4 தோல்விகளை பெற்றுள்ளது. இந்த சீசனில் அடுத்தடுத்து இரு வெற்றிகளை பெற்ற அந்த அணி தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்துள்ளது. மும்பை அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் ஆம்லாவின் சதத்தால் 198 ரன்கள் குவித்த போதும் பஞ்சாப் அணியால் வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது.

மேக்ஸ்வெல் தனது அதிரடி யால் பலம் சேர்க்கிறார். சிறப்பாக விளையாடும் அவர் அதனை பெரிய அளவிலான ரன்குவிப்பாக மாற்ற தவறுகிறார். குஜராத் அணியை போலவே பஞ்சாப் அணியின் பந்து வீச்சும் பலவீனமாக உள்ளது.

இந்திய வீரர்களான மோகித் சர்மா, சந்தீப் சர்மா ஆகியோர் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் விளையாடிய நிலையில் ஓவருக்கு 9 ரன்களுக்கு மிகாமல் வாரி வழங்கி உள்ளனர். 3 ஆட்டத்தில் பங்கேற்ற வருண் ஆரோன் 8 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார்.

சுழற்பந்து வீச்சில் அக் ஷர் படேல் மட்டுமே ஆறுதல் அளிக்கிறார். அவர் ஓவருக்கு 7 ரன்களுக்கு மேல் வழங்கி உள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சில் அதிக மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

இடம்: ராஜ்கோட்

நேரம்: மாலை 4

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

http://tamil.thehindu.com/sports/குஜராத்-பஞ்சாப்-இன்று-மோதல்/article9658886.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

கொல்கத்தாவுடன் இன்று மோதல்: கெய்ல் அதிரடி தொடருமா?

 

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. கிறிஸ் கெய்லின் அதிரடி இன்றும் நீடிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.

 
 
 
 
கொல்கத்தாவுடன் இன்று மோதல்: கெய்ல் அதிரடி தொடருமா?
 
கொல்கத்தா:

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 19-வது நாளான இன்று இரண்டு இடங்கள் ஆட்டங்கள் நடக்கிறது. ராஜ்கோட்டில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ்- மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

குஜராத் லயன்ஸ் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி புனே, கொல்கத்தாவை வீழ்த்தி இருந்தது. கொல்கத்தா, ஐதராபாத், மும்பை, பெங்களூர் அணிகளிடம் தோற்று இருந்தது.

பஞ்சாப்பை வீழ்த்தி 3-வது வெற்றிக்காக குஜராத் அணி காத்திருக்கிறது. அந்த அணியின் கேப்டன் ரெய்னா, மெக்கல்லம், ஆரோன் பிஞ்ச், சுமித், ஜடேஜா போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர்.

201704231046265644_dr7hywcc._L_styvpf.gi

பஞ்சாப் அணி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தல் புனேயை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் பெங்களூரை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. அதை தொடர்ந்து தொடர்ச்சியாக கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், மும்பை அணிகளிடம் தோற்றது.

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து 3-வது வெற்றி பெறும் வேட்கையில் பஞ்சாப் அணி உள்ளது.

அந்த அணியில் கேப்டன் மேக்ஸ்வெல், ஹசிம் அம்லா, மில்லர், மனன் வோரா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இரு அணிகளும் மோதிய 2 போட்டியில் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன.

201704231046265644_lpgabn85._L_styvpf.gi

இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. கடந்த போட்டியில் குஜராத்திடம் 180 ரன்னுக்கும் மேல் குவித்து தோற்றதால் கொல்கத்தா அதிர்ச்சியில் உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் கவனமுடன் விளையாடும். அதே நேரத்தில் கெய்லின் அதிரடியை சமாளிப்பது அந்த அணிக்கு சவாலானதே.

கொல்கத்தா அணியில் கேப்டன் காம்பீர், உத்தப்பா, மனிஷ் பாண்டே, யூசுப் பதான், சுனில் நரீன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

201704231046265644_y8wjj7n1._L_styvpf.gi

பெங்களூர் அணி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. கொல்கத்தாவை வீழ்த்தி முன்னேற்றம் காணும் ஆர்வத்துடன் உள்ளது.

கிறிஸ் கெய்ல் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமே. குஜராத்துக்கு எதிராக அவர் 38 பந்தில் 77 ரன் (5 பவுண்டரி, 7 சிக்சர்) குவித்தார். 20 ஓவர் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்னை குவித்து சாதனையாளரான கிறிஸ் கெய்லின் அதிரடி இன்றும் நீடிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.

இதுதவிர கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ், கேதர் ஜாதவ், டிரெவிஸ் ஹெட் போன்ற சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் பெங்களூர் அணியில் உள்ளனர்.

இரு அணிகள் மோதிய போட்டியில் தலா 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/23104623/1081435/IPL-2017-Kolkata-vs-Bangalore-clash-today.vpf

  • தொடங்கியவர்

நெருக்கடியில் இருந்து டோனி மீண்டார்: ஸ்டீவ் சுமித் பாராட்டு

 

ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய மகேந்திரசிங் டோனி நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளதாக புனே கேப்டன் சுமித் தெரிவித்தார்.

 
நெருக்கடியில் இருந்து டோனி மீண்டார்: ஸ்டீவ் சுமித் பாராட்டு
 
புனே:

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் ரைசிங்புனே சூப்பர் ஜெயின்ட்- சன்ரைசர்ஸ் ஜதராபாத் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. ஹென்ரிக்ஸ் 55 ரன்னும், வார்னர் 43 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடி புனேவுக்கு சீரான இடைவெளியில் விக்கெட் இருந்தது. ஆனால் டோனி கடைசி வரை நின்று அபாரமாக விளையாடினார். கடைசி பந்தில் 2 ரன் தேவை என்று இருந்த போது பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார்.

அவர் 34 பந்தில் 61 ரன் எடுத்தார். இதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வெற்றி குறித்து புனே கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறியதாவது:-

201704231243249818_orqw2y9b._L_styvpf.gi

ஆட்டம் கடைசி கட்டம் வரை சென்றது. டோனி களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடினார். அவர் நெருக்கடியில் இருந்து மீண்டு வந்து சிறப்பாக விளையாடினார்.

இந்த ஆடுகளம் 160 முதல் 165 ரன் எடுக்கக்கூடியதாகும். ஆனால் பந்து வீச்சில் எங்களது திட்டத்தை செயல்படுத்தவில்லை. இருந்தாலும் நன்றாக பேட்டிங் செய்தோம். உள்ளூரில் இன்னும் எங்களுக்கு 4 போட்டிகள் உள்ளது. புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காண்போம் என நம்புகிறேன் என்றார்.

ஆட்ட நாயகன் விருது பெற்ற டோனி கூறுகையில் இது கடினமான ஆட்டம். கடைசி கட்டத்தில் நாங்கள் அடித்து ஆடினோம். அது முக்கியமானது மனோஜ் திவாரி நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

ஒரு ஓவரில் 7,8,9,10 ரன் எடுப்பது பெரிய வி‌ஷயமல்ல. உங்களுடைய அமைதியை கடைபிடிப்பதுதான் முக்கியம் என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/23124322/1081453/Pune-captain-smith-praise-dhoni-recovered-from-the.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்.: 26 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ராஜ்கோட்டில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றுள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

 
ஐ.பி.எல்.: 26 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
 
ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக குஜராத் லயன்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அம்லா (65), ஷேன் மார்ஷ் (30), மேக்ஸ்வெல் (31), அக்சார் பட்டேல் (34) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் லயன்ஸ் அணியின் மெக்கல்லம், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குஜராத் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மெக்கல்லம் 6 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் ஷர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து ரெய்னா களம் இறங்கினார். மற்றொரு தொடக்க வீரர் பிஞ்ச் 13 ரன்னில் வெளியேற, ரெய்னா 32 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

70 ரன்களுக்கும் முக்கிய மூன்று விக்கெட்டுக்களை இழந்த குஜராத் அணியால், சரிவில் இருந்து மீள முடியாமல் போனது. தினேஷ் கார்த்திக் மட்டும் கடைசி வரை அவுட்டாகாமல் 44 பந்தில் 58 ரன்கள் சேர்க்க, குஜராத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் பஞ்சாப் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் சந்தீப் ஷர்மா, கரியப்பா, அக்சார் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/23194204/1081516/IPL-Kings-XI-punjab-beats-gujarat-lions-by-26-runs.vpf

  • தொடங்கியவர்
49 ரன்னில் சுருண்டு பெங்களூரு அணி படுதோல்வி
  • தொடங்கியவர்

49 ரன்களுக்குள் சுருண்டு கொல்கத்தா அணியிடம் பரிதாபமாக தோற்றது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்

 

ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 
 
49 ரன்களுக்குள் சுருண்டு கொல்கத்தா அணியிடம் பரிதாபமாக தோற்றது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
 
கொல்கத்தா:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்களுக்கு இடையிலான போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வெற்றி பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 19.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

132 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பெங்களூர் அணியின் கெயில் மற்றும் கேப்டன் விராட் கோலி களம் இறங்கினர். 132 ரன்கள் என்பதால் பெங்களூர் அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
201704232354159144_Kolkatta2._L_styvpf.g
கேப்டன் விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். அவரை தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்திற்குள் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணம் இருந்தன.

கெயில்(7), மந்தீப் சிங்(1), டி வில்லியர்ஸ்(8), ஜாதவ்(9), பின்னி(8) என்ற அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. இறுதியாக பெங்களூர் அணி 9.4 ஓவர்களில் 49 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் கொல்கத்தா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில்  அபார வெற்றி பெற்றது.

அபாரமாக பந்துவீசி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய கவுண்ட்டர் நைல் ஆட்டநாயகன் விருது பெற்றார். வோக்ஸ் மற்றும் கிராந்தோம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/23235412/1081521/Kolkata-Knight-Riders-won-by-82-runs.vpf

  • தொடங்கியவர்

காயம் காரணமாக ஐபிஎல் 10-வது சீசனில் இருந்து வெளியேறினார் பிராவோ!

 
 

Dwa_2_02379.jpg

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டரான ட்வெய்ன் பிராவோ, தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை விளையாடாமல் ஓய்வு எடுத்துவந்தார். மேலும், காயம் சீக்கிரம் குணமாகி களத்தில் இறங்குவதற்கான அனைத்து  நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவந்தார். இருப்பினும், அவரின் காயம் ஆற மேலும் சில வாரங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டதால், இந்த ஐபிஎல் தொடரிலிருந்து தான் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இந்த ஐபிஎல் சீசனில், சுரேஷ் ரய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாட இருந்தார். இதுவரை, காயம் காரணமாக களத்தில் இறங்காமல் இருந்த பிராவோ, ஒரு போட்டியில்கூட விளையாடாமல் நாடு திரும்புகிறார். இந்தச் செய்தி, ஏற்கெனவே போட்டிகளில் சோபிக்காமல் திணறிக்கொண்டிருக்கும் குஜராத் லயன்ஸ் அணிக்கு பேரிடியாக இறங்கியுள்ளது.

இதுகுறித்து பிராவோ, 'என் தொடையில் ஏற்பட்ட காயம் காரணாக இந்த ஆண்டின் ஐபிஎல் சீசனில் நான் பங்கேற்கப் போவதில்லை' இதை, மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் காரணமாக நான் ஓய்வில் இருந்தபோது, நல்ல முன்னேற்றம் கண்டு, அணியிடருடன் பயிற்சியில் ஈடுபட்டுவந்தபோதும் என்னால் முழுமையாகக் குணமடைய முடியவில்லை' என்று உருக்கமாகக் கூறியுள்ளார். 

http://www.vikatan.com/news/sports/87352-dwayne-bravo-ruled-out-of-ipl-due-to-injury.html

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையின் ‘வீறுநடை’க்கு தடை போடுமா புனே?

 

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் மும்பை அணியின் வீறுநடைக்கு புனே சூப்பர் ஜெயன்ட் முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 
 
 
 
ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையின் ‘வீறுநடை’க்கு தடை போடுமா புனே?
 
இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி அதில் தொடர்ச்சியாக 6-ல் வெற்றியை பதிவு செய்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் மும்பை பலம் வாய்ந்ததாக விளங்குகிறது. இத்தனைக்கும் அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் மெச்சும்படி இல்லை.

‘லெக்-ஸ்பின்’ பந்து வீச்சை துல்லியமாக கணிக்க முடியாமல் வீழ்ந்து விடுகிறார். பேட்டிங்கில் ஜோஸ் பட்லர், பார்த்தீவ் பட்டேல், ஆல்-ரவுண்டர்களான பாண்ட்யா சகோதரர்கள், பொல்லார்ட், நிதிஷ் ராணா கைகொடுக்கிறார்கள். பந்து வீச்சில் மெக்லெனஹான், ஹர்பஜன்சிங், பும்ரா உள்ளிட்டோர் மிரட்டுகிறார்கள். இந்த சீசனில் மும்பை அணி அடைந்த ஒரே தோல்வி இதே புனே சூப்பர் ஜெயன்ட்டுக்கு எதிராகத்தான்.

புனேயில் நடந்த அந்த ஆட்டத்தில் புனே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்து இருந்தது. அதற்கு பழிதீர்க்க மும்பை வீரர்கள் வரிந்து கட்டி நிற்பார்கள். மும்பை அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால், தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற தனது முந்தைய சாதனையை (2008-ம் ஆண்டு தொடர்ந்து 6 வெற்றி) முறியடித்து விடும்.

201704241004244523_match-on-today._L_sty

முதல் 4 ஆட்டங்களில் 3-ல் தோல்வியை தழுவிய புனே சூப்பர் ஜெயன்ட் அணி அதன் பிறகு கடைசியாக ஆடிய இரு ஆட்டங்களில் (பெங்களூரு, ஐதராபாத்துக்கு எதிராக) வெற்றி கண்டு புத்துணர்ச்சி பெற்றுள்ளது. டோனியும் பார்முக்கு திரும்பி விட்டார். ஐதராபாத்துக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 34 பந்துகளில் 61 ரன்கள் விளாசியதுடன் கடைசி பந்தில் வெற்றிக்குரிய ரன்னை அடித்து கலக்கினார். திரிபாதி, கேப்டன் ஸ்டீவன் சுமித், மனோஜ் திவாரியும் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளனர். அதே சமயம் ரஹானேவின் தடுமாற்றம் அந்த அணிக்கு கொஞ்சம் கவலை அளிக்கிறது.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இதுவரை நடந்துள்ள 4 ஆட்டங்களிலும் மும்பை அணியின் வசமே வெற்றிக்கனி கனிந்துள்ளது. அவர்களின் வீறுநடைக்கு புனே சூப்பர் ஜெயன்ட் முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/24100420/1081571/Pune-Supergiants-Vs-Mumbai-Indians-match-on-today.vpf

  • தொடங்கியவர்

கோஹ்லியின் ஆட்டமிழப்பு : அரங்கிற்கு திரும்பிய பின் நடந்தது என்ன?

 

https://vid.me/Zrib

 

 

ஐ.பி.எல்.தொடரின் நேற்றைய கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் பெங்களூர் அணி 49 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வியடைந்தது.

Virat-Kohli-8.jpg

இந்த போட்டியில் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லி ஓட்டங்கள் எதுவும் பெறாமல் “டக்கவுட்” ஆனார்.

ஆட்டமிழந்த விராட் கோஹ்லி மிகவும் ஆத்திரமடைந்த நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இதன் பிறகு பெங்களூர் அணியின் அனைத்து விக்கட்டுகளும் 49 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

Virat-Kohli-dug-out.jpg

இந்நிலையில் போட்டியில் ஆட்டமிழந்ததற்கான காரணம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மைதானத்தில் துடுப்பாட்ட வீரர்கள் பந்துகளை எந்தவித இடையூறுகளுமின்றி பார்வையிடுவதற்கு கறுப்பு நிறத்திலான திரைகள் மைதானத்தின் இரண்டு பக்கங்களில் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் விராட் கோஹ்லி துடுப்பெடுத்தாடும் போது குறித்த திரை பகுதியில் இடையூறு ஏற்படுவதாக நடுவர்களுக்கு அறிவித்துள்ளார். எனினும் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு தாமதமாகியுள்ளது.

588863-kohli-angry-ipl.jpg

இதனால் விராட் கோஹ்லி முதல் பந்தில் ஆட்டமிழந்து மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

அதன்பிறகு கெயிலும் குறித்த திரையில் இடையூறு இருப்பதாக அறிவித்ததையடுத்து பொலிஸ் அதிகாரி ஒருவரின் மூலம் குறித்த இடையூறு 2 பந்துகளுக்கு பிறகு நிவர்த்திசெய்யப்பட்டுள்ளது.

Virat-Kohli-sight-screen.jpg

எனினும் குறித்த இடையூறுக்கு உடனடியாக தீர்வை பெற்று தர முடியாததினால் விராட் கோஹ்லி கோபத்துடன் நான்காவது நடுவரிடம் முறையிடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/19342

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது புனே

மும்பையில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில், முதலில் ஆடிய புனே அணி, மும்பை அணிக்கு 161 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

 
ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது புனே
 
மும்பை:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 28-வது ஆட்டம், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில், உள்ளூர் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி, ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை எதிர்கொண்டது. டாஸ்வென்ற மும்பை அணி, புனே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இதையடுத்து புனே அணியின் அஜிங்கியா ரகானே, ராகுல் திருப்பதி ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இவர்கள் இருவரும் இணைந்து 76 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். ரகானே 38 ரன்களும், திருப்பதி 45 ரன்களும் சேர்த்தனர்.
201704242210534080_tirupathi._L_styvpf.g
ஆனால், அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. கேப்டன் ஸ்மித் 17 ரன்கள் மட்டுமே அடித்தார். டோனி 7 ரன்கள், ஸ்டோக்ஸ் 17 ரன்கள் எடுத்தனர். கடைசி நேரத்தில் விறுவிறுப்பாக ஆடிய மனோஜ் திவாரி 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் புனே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது.

மும்பை தரப்பில் கரண் சர்மா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ஹர்பஜன் சிங் , மிட்செல் ஜான்சன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
201704242210534080_harbajan._L_styvpf.gi
இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/24221047/1081754/Rising-Pune-Supergiant-sets-a-target-of-161-runs-for.vpf

Rising Pune Supergiant 160/6 (20/20 ov)
Mumbai Indians 124/5 (16.3/20 ov)
Mumbai Indians require another 37 runs with 5 wickets and 21 balls remaining
  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., லீக் போட்டி: புனே அணி 'ஹாட்ரிக்' வெற்றி
  • தொடங்கியவர்

மும்பை அணியை 3 ரன்களில் வீழ்த்தி புனே ஹாட்ரிக் வெற்றி

 

ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
 
 
 
மும்பை அணியை 3 ரன்களில் வீழ்த்தி புனே ஹாட்ரிக் வெற்றி
 
மும்பை:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 28-வது ஆட்டம், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில், உள்ளூர் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி, ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை எதிர்கொண்டது. டாஸ்வென்ற மும்பை அணி, புனே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

பின்னர் விளையாடிய புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் ராகுல் திரிபாதி 45(31), அஜய் ரகானே 38(32) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் மனோஜ் திவாரி 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.
201704250002145794_Cricket2._L_styvpf.gi201704250002145794_Cricket3._L_styvpf.gi
இதனையடுத்து 161 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை அணி விளையாடியது. ஆனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

புனே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி தனது 4-வது வெற்றியை பதிவு செய்தது. அதேபோல் மும்பை அணி தனது இரண்டாவது தோல்வியை சந்தித்தது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற புனே அணி பின்னர் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து தற்போது ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது.

அற்புதமாக பந்து வீசிய பென்ஸ் ஸ்டோக் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதில் ஒரு ஓவர் மெயிடன் ஆகும். அவர்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/25000208/1081762/IPL-Rising-Pune-Supergiant-beats-Mumbai-indians-by.vpf

  • தொடங்கியவர்

ஏப்ரல் 23: சாதனை செய்த அதே தினத்தில் எதிர்பாராத சோதனை!

gayle_kohli1

 

ஏப்ரல் 23.

இந்த நாளை பெங்களூர் ஐபிஎல் ரசிகர்களால் மறக்கவே முடியாது.

இந்த நன்னாளில் தான் அதிகபட்ச ரன்களை எடுத்தது ஆர்சிபி. ஆனால் அதே நாளில் ஐபிஎல் போட்டியின் மிகக்குறைந்த ஸ்கோரையும் எடுத்து அவமானத்தைச் சந்தித்துள்ளது. 

சாதனை நாள்

முதலில் நல்ல விஷயத்தைப் பார்த்துவிடுவோம்.

2013 ஏப்ரல் 23. இந்த நாளை பெங்களூர் ரசிகர்களால் மட்டுமல்ல, ஐபிஎல் ரசிகர்களாலும் மறந்துவிடமுடியாது. எத்தனை சிக்ஸர்கள்... பவுண்டரிகள்...!

அன்றைய தினம் 30 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் கிறிஸ் கெயில்.

மிகப்பெரிய  சோதனையைச் சந்திக்கப் போகிறோம் என்றறியாத புணே அணி, அன்று டாஸ் வென்று முதலில் பந்துவீசுவது என்கிற தவறான முடிவை எடுத்தது. பெங்களூர் அணியில் கெயில், தில்ஷான் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர்.

2-வது ஓவரின் முதல் இரு பந்துகளை கெயில் பவுண்டரிக்கு விரட்டினார். அப்போது லேசான தூறலுடன் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. சுமார் 45 நிமிடங்களுக்குப் பின் ஆட்டம் தொடங்கியது. எனினும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை.

மழை ஓய்ந்ததும் கெயில் புயல் வீசத் தொடங்கியது. அவர் பந்துகளைத் தொடர்ந்து சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டினார். புணே வீரர்கள் மாறி மாறி பந்து வீசியபோதிலும், கெயிலின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

5-வது ஓவரின் முடிவில் கெயில் 17 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும்.

அடுத்த இரு ஓவர்களில் கெயில் தொடர்ந்து பந்துகளை எல்லைக் கோட்டுக்கு வெளியே விரட்டினார். 9-வது ஓவரில் 30 பந்துகளை எதிர்கொண்டு கெயில் சதமடித்தார். 50 ரன்களில் இருந்து 100 ரன்களை எட்ட அவர் 13 பந்துகளையே எதிர்கொண்டார். 14-வது ஓவரில் தில்ஷான் ஆட்டமிழந்தார். அவர் 36 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த கோலி 11 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார்.

தொடர்ந்து டிவில்லியர்ஸ் கெயிலுடன் ஜோடி சேர்ந்தார். டிவில்லியர்ஸும் தனது பங்குக்கு புணே பந்து வீச்சை சிதறடித்தார். அவர் 8 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி வரை களத்தில் இருந்த கெயில் 175 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது.

கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகக்குறைந்த பந்துகளை எதிர்கொண்டு சதமடித்த வீரர் என்ற பெருமையை கெயில் பெற்றார். அதற்கு முன்பு 2004-ம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட்டில் கென்ட் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் 34 பந்துகளில் சதமடித்தார். அதுவே கிரிக்கெட்டில் அதிவேக சதமாக இருந்தது.

ஐபிஎல் போட்டியில் 2009-ம் ஆண்டில் மும்பை இண்டின்ஸ் அணிக்கு எதிராக யூசுப் பதான் 37 பந்துகளில் 100 ரன்கள் எடுத்ததே அதற்கு முன்பு ஐபிஎல்-லில் அதிவேக சதமாக இருந்தது. அந்தச் சாதனையும் கெயில் தகர்த்தார். இன்றுவரை கெயிலின் சாதனை முறியடிக்கபடாமல் உள்ளது. 

அன்றைய தினம்  கெயில் மொத்தம் 175 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதில் 17 சிக்ஸர், 13 பவுண்டரி அடங்கும். ஐபிஎல் போட்டியில் அதிகபட்ச ரன்னும் கெயில் ஆட்டமிழக்காமல் எடுத்த 175 ரன்கள்தான். அதற்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் மெக்கல்லம் 158 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததே சாதனையாக இருந்தது. அவர் பெங்களூர் அணிக்கு எதிராக இந்த ரன்களை எடுத்தார். அந்தச் சாதனையும் அன்றைய தினம் முறியடிக்கப்பட்டது. 

அதேபோல அன்றைய தினம் ஐபிஎல் போட்டியில் ஓர் அணி எடுத்த அதிகபட்ச ரன் என்பது புணேவுக்கு எதிராக பெங்களூர் எடுத்துள்ள 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள்தான். அதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்திருந்ததே ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதேபோல அன்றைய தேதியில் டி20 போட்டியில் 263 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. சமீபத்தில், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இலங்கை அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்து அதிகபட்ச டி20 ஸ்கோரைச் சமன் செய்தது. ஆஸி. அணி தொடக்க வீரர் மேக்ஸ்வெல், 65 பந்துகளில் 9 சிக்ஸர்கள்  14 பவுண்டரிகள் உள்பட 145 ரன்கள் குவித்தார். 

இத்தனை சாதனைகளையும் செய்த அதே நாளில் ஐபிஎல் போட்டியின் குறைந்தபட்ச ஸ்கோரையும் எட்டியது முரண்நகை தானே!

சோதனை நாள்

அதே ஏப்ரல் 23 அன்றுதான் இந்தத் துயரம் ஏற்படவேண்டுமா?

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் ஆட்டத்தில் 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைத் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா, 19.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு சுருண்டது. பெங்களூர் தரப்பில் யுவேந்திர சாஹல் 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டைமல் மில்ஸ், பவன் நெகி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பெங்களூர் தோல்வி: பின்னர் ஆடிய பெங்களூர் அணியில் கேப்டன் விராட் கோலி டக் அவுட்டாக, அந்த அணியின் சரிவு ஆரம்பமானது. இறுதியில் பெங்களூர் அணி 9.4 ஓவர்களில் 49 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேதார் ஜாதவ் 9 ரன்கள் எடுத்தார். அந்த அணியில் அனைவருமே ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இதுபோல ஐபிஎல்-லில் நடந்ததே கிடையாது. கொல்கத்தா தரப்பில் நாதன் கோல்ட்டர் நைல், கிறிஸ் வோக்ஸ், டி கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கோலி, டிவில்லியர்ஸ், கேதார் ஜாதவ் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய கோல்ட்டர் நைல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் வரலாற்றில் ஓர் ஆட்டத்தில் 20 விக்கெட்டுகளும் வீழ்ந்தது இது 2-ஆவது முறையாகும். பெங்களூர் அணி 49 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு ராஜஸ்தான் அணி 2009-ல் பெங்களூருக்கு எதிராக 58 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்ச ஐபிஎல் ஸ்கோராக இருந்தது.

பெங்களூர் ஐபிஎல் ரசிகர்களிடம் ஏப்ரல் 23-ம் தேதி குறித்து தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் மறக்காமல் அதன் சாதனை மற்றும் சோதனைத் தருணங்களைச் சொல்லிவிடுவார்கள். அப்படியொரு விநோத நாள் அது!

http://www.dinamani.com/sports/sports-news/2017/apr/24/on-april-23-rcb-recorded-the-highest-ipl-total---263-2690183.html

  • தொடங்கியவர்

ஹர்பஜன் சிங் வீழ்த்திய 200-வது விக்கெட் யார் தெரியுமா? #IPL

 
 

ஹர்பஜன்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்தப் பந்துவீச்சாளர், ஹர்பஜன் சிங். இவரது மாயச் சுழல்பந்து வீச்சை திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்களும் சிரமப்படுவர். ஒருநாள் டெஸ்ட், டி20 என அனைத்து வகைப் போட்டிகளிலும் தன் திறமையைக் காட்டிவருகிறார். தற்போது டி20 போட்டிகளில், 200 விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார் ஹர்பஜன் சிங். மும்பைக்கும் புனே-வுக்கும் இடையேயான ஐபிஎல் டி20 போட்டியில், புனே அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தி, பந்து வீச்சில் 200ஐ தொட்டார் ஹர்பஜன்.

http://www.vikatan.com/news/sports/87461-harbhajan-singhs-200-th-wicket.html

  • தொடங்கியவர்

ஐபிஎல்-லில் நான்காம் இடத்துக்குத் தாவியது புனே அணி #IPL10 

 
 

மும்பை  அணியை மூன்று ரன்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தியதன்மூலம், நான்காம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. நான்கு நாட்களுக்கு முன்பு வரை, கடைசி இடத்துக்கு தள்ளப்படும் நிலையில் இருந்த புனே அணி, அடுத்தடுத்த  இரண்டு வெற்றிகளால் புள்ளிப்பட்டியலில்  நான்காம் இடத்துக்கு வந்துள்ளது. முதல் நான்கு இடங்களுக்குள் வரும் அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற முடியும் என்பதால், இந்த வெற்றி, புனே அணிக்கு உற்சாக டானிக்காக அமைந்துள்ளது. 

புனே

புனே அணியுடனான போட்டியில், மும்பை அணி தோல்வியடைந்திருந்தாலும், ஐபிஎல்-லின் புள்ளிப்பட்டியலில், இன்னமும் நம்பர் 1 இடத்திலேயே உள்ளது. இரண்டாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் ஹைதராபாத் அணியும் உள்ளன. ஐந்தாவது இடத்தில் பஞ்சாப் ஆறு புள்ளிகளுடன் உள்ளது. ஆறாவது  இடத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் உள்ளது.  ஏழாவது இடத்தில் குஜராத் அணி நான்கு புள்ளிகளுடன் உள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி  கடைசி இடத்தில் உள்ளது.

http://www.vikatan.com/news/sports/87458-pune-jumps-into-4th-place-in-ipl-points-table.html

  • தொடங்கியவர்

ஐதராபாத் அணிக்கு பெங்களூர் பதிலடி கொடுக்குமா?

 

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூர்- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பெங்களூர் பதிலடி கொடுக்கமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
ஐதராபாத் அணிக்கு பெங்களூர் பதிலடி கொடுக்குமா?
 
பெங்களூர்:

10-வது ஐ.பி.எல். போட்டியின் 29-வது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

சிறந்த வீரர்களை கொண்ட பெங்களூர் அணி கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. குஜராத், டெல்லி அணிகளை வென்று இருந்தது. ஐதராபாத், புனே, மும்பை, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம் தோற்று இருந்தது.

நடப்பு சாம்பியனான ஐதராபாத்திடம் 35 ரன்னில் தொடக்க ஆட்டத்தில் தோற்றதற்கு பெங்களூர் அணி பதிலடி கொடுத்து 3-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி கொல்கத்தாவிடம் 49 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. அதில் இருந்து மீண்டு பெங்களூர் அணி எழுச்சி பெறும் ஆர்வத்துடன் உள்ளது.

201704251131368426_myy8ij3y._L_styvpf.gi

ஐதராபாத் அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி பெங்களூர், குஜராத், பஞ்சாப், டெல்லி அணிகளை வீழ்த்தி இருந்தது. மும்பை, கொல்கத்தா, புனே அணிகளிடம் தோற்று இருந்தது.

ஏற்கனவே பெங்களூரை வீழ்த்தி இருந்ததால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. 5-வது வெற்றி ஆர்வத்துடன் அந்த அணி இருக்கிறது.

இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் ஐதராபாத் 6 போட்டியிலும், பெங்களூர் 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/25113129/1081822/IPL-2017-Hyderabad-vs-Bangalore-clash-today.vpf

  • தொடங்கியவர்

வாய்ப்பில்லாமல் ஐபிஎல் கிரிக்கெட்டில் உட்கார்ந்திருப்பது வேஸ்ட்: ஏமாற்றத்தால் மனம் மாறும் ஜேசன் ராய்

 
ஜேசன் ராய். | படம்.| கிளைன் கர்க்.
ஜேசன் ராய். | படம்.| கிளைன் கர்க்.
 
 

குஜராத் லயன்ஸ் அணிக்கு ஆடிவரும் இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய், நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து விலகி சர்ரே அணிக்காக ராயல் லண்டன் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கவனம் செலுத்துவது சிறந்தது என்று கூறியுள்ளார்.

டெய்லி மிரர் பத்திரிகையில் அவர் கூறியிருப்பதாவது:

நான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ஆண்ட்ரூ ஸ்ட்ராசுடன் ஆலோசித்து வருகிறேன். ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து பாதியில் விலகி ராயல் லண்டன் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக ஆடலாம் என்பது பற்றி சிந்தித்து வருகிறேன்.

50 ஓவர் கிரிக்கெட்டில் ஆடுவது சிறந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. குறிப்பாக ஐபிஎல் கிரிக்கெட்டில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைப்பதில்லை. இது ஒருவிதத்தில் விரயமாகவே உள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு முன்பாக சர்ரேவுக்காக 3 போட்டிகளில் ஆடுவது சிறப்பாக இருக்கும் என்றே கருதுகிறேன். இது மிகச்சிறந்த தயாரிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் நல்ல பார்மில் இருக்கிறேன், ஆனால் அணியில் தேர்வு செய்யப்படுவது பற்றி நான் எதுவும் செய்ய முடியாது. எனவே இங்கிலாந்து கிரிக்கெட் சீசனுக்குத் தயார் செய்து கொள்வது உருப்படியான காரியமாக இருக்குமென்று கருதுகிறேன். சாம்பியன்ஸ் டிராபி வருவதால் இத்தகைய முடிவுகளை நோக்கி நகர்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறென். இது குறித்து ஆண்ட்ரூ ஸ்ட்ராசிடம் ஆலோசித்து வருகிறேன்.

இவ்வாறு கூறினார் ஜேசன் ராய்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர் ஜேசன் ராய் குஜராத் லயன்ஸ் அணிக்காக 3 போட்டிகளில் ஆடியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 12 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார், ஹைதராபாத் அணிக்கு எதிராக 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ராய் 6-ம் இடத்தில் இறங்கி 14 நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

இந்நிலையில் அவரது மனநிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/வாய்ப்பில்லாமல்-ஐபிஎல்-கிரிக்கெட்டில்-உட்கார்ந்திருப்பது-வேஸ்ட்-ஏமாற்றத்தால்-மனம்-மாறும்-ஜேசன்-ராய்/article9662799.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

262110.jpg

மழை

  • தொடங்கியவர்

குஜராத் அணியிலிருந்து காயத்தால் விலகிய பிராவோ-வுக்கு பதிலாக களமிறங்கும் இர்பான் பதான்

 

ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணியிலிருந்து காயம் காரணமாக விலகிய பிராவோ-வுக்கு பதிலாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் களமிறங்க உள்ளார்.

 
குஜராத் அணியிலிருந்து காயத்தால் விலகிய பிராவோ-வுக்கு பதிலாக களமிறங்கும் இர்பான் பதான்
 
புதுடெல்லி:

10-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த வெய்ன் பிராவோ காயம் காரணமாக ஒரு போட்டிகள் கூட ஆடாமல் இருந்தார். மேலும், காயம் சரியாகாததால் சிகிச்சை மற்றும் ஓய்வுக்காக தன்னுடைய சொந்த நாட்டிற்கு அவர் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், பிராவோவின் இடத்தை நிரப்ப இந்திய அணியின் முன்னாள் இடது கை பந்து வீச்சாளர் இர்பான் பதானை தேர்ந்தெடுத்து குஜராத் அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வீரர்களின் ஏலத்தின் போது இரு முறை இடம் பெற்றும் இர்பான் பதானை எடுக்க எந்த அணியும் முன் வரவில்லை.

201704251323078107_bravo._L_styvpf.gif

102 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள இர்பான் பதான் 80 விக்கெட்டுகள் மற்றும் 1137 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/25132300/1081858/Irfan-Pathan-replaces-injured-Dwayne-Bravo-for-Gujarat.vpf

  • தொடங்கியவர்

நடுவர்களின் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த ரோகித் சர்மாவுக்கு 50 சதவிகிதம் அபராதம்

 

நடுவரின் தீர்ப்புக்கு எதிராக அதிருப்தி தெரிவித்த மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அந்த போட்டிக்கான சம்பளத்திலிருந்து 50 சதவிகிதம் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

 
 
நடுவர்களின் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த ரோகித் சர்மாவுக்கு 50 சதவிகிதம் அபராதம்
 
மும்பை:

ஐ.பி.எல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - புனே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி மும்பையை வீழ்த்தியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது.

களத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். கடைசி ஓவரை புனே வீரர் உனத்கண்ட் வீசினார். முதல் பந்தில் பாண்டியா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். உனத்கண்ட் வீசிய இரண்டாவது பந்து வைடாக சென்றது. ஆனால், இந்த பந்தை கள நடுவர்கள் வைடு என அறிவிக்கவில்லை.

நடுவர்களின் செயலால் ஆத்திரமடைந்த ரோகித் சர்மா ஆவேசமாக இரண்டு நடுவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரோகித் சர்மாவின் இந்த செயல் போட்டி விதிமுறைகளை மீறிய செயல் என தெரிவித்துள்ள ஐ.பி.எல் நிர்வாகம், அந்த போட்டி சம்பளத்திலிருந்து 50 சதவிகிதம் தொகையை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/25130446/1081852/Rohit-Sharma-fined-50-of-his-match-fee-for-showing.vpf

  • தொடங்கியவர்

ஐபிஎல்: பெங்களூரு - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் ரத்து

ஐபிஎல் தொடரில் பெங்களூரு - ஹைதராபாத் இடையேயான போட்டி ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.

kohli

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான 29-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்தது. விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள காத்திருந்தன. இந்த ஐபிஎல் சீசனின் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸை தோற்கடித்து வெற்றிக் கணக்கை தொடங்கியிருந்தது நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத். இதனால், இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியை எப்படியாவது வீழ்த்தி விடவேண்டும் என்ற முனைப்பில் களம் காண காத்திருந்தது கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி. 

ஆனால், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பிருந்தே மழை பெய்து கொண்டிருந்தது. இதனால், டாஸ் கூட போடமுடியாத நிலை ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆட்டத்தை கைவிட முடிவு செய்யப்பட்டது. பின்னர் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் பெங்களூரு - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வழங்கப்பட்டது. பட்டியலில் 9 புள்ளிகளுடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மூன்றாவது இடத்திலும், 5 புள்ளிகளுடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆறாவது இடத்திலும் உள்ளது.

http://www.vikatan.com/news/sports/87556-ipl-rcb-vs-srh-match-abandoned-due-to-rain.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.