Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நார்வே முதலிடம்

Featured Replies

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நார்வே முதலிடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நார்வே நாடு முதலிடம் பிடித்துள்ளது.

 
 
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நார்வே முதலிடம்
 
சர்வதேச மகிழ்ச்சி தினம் உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, சமூக ஆதரவு, நம்பிக்கை, வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் சுதந்திரம், பெருந்தன்மை உள்பட ஆறு காரணிகளைக் கொண்டு உலகின் அதிக மகிழ்ச்சியான நாடு எது? என சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது.

531B7A71-F344-41C1-A1E5-1D28C4DDB88C_L_s

இதில் அதிக புள்ளிகள் பெற்று நார்வே நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா இந்தப் பட்டியலில் 14-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதில் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகள் வருமாறு:-

1.நார்வே(7.537)
2.டென்மார்க்(7.522)
3.ஐஸ்லாந்து(7.504)
4.சுவிட்சர்லாந்து(7.494)
5.பின்லாந்து(7.469)
6.நெதர்லாந்து(7.377)
7.கனடா(7.316)
8.நியூசிலாந்து(7.314)
9.ஆஸ்திரேலியா(7.284)
10.ஸ்வீடன்(7.284)

http://www.maalaimalar.com/News/World/2017/03/20190951/1074952/worlds-happiest-country-list-norway-gets-first.vpf

 

 

 

மகிழ்ச்சியான மக்கள் வசிக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு 122-வது இடம்!

collage_23555.jpg

வ்வொரு வருடமும் உலகத்தில் எந்த நாட்டு மக்கள் அதிக மகிழ்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என்று 'வேர்ல்டு ஹேப்பினஸ் ரிப்போர்ட்' பட்டியலிட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரம், ஆரோக்கியம், அரசியல்,  மற்றும் தனிப்பட்ட வாழக்கை என அனைத்திலும் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நாடு எது? என்ற அடிப்படை தகுதிகளோடு கணக்கிடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இந்த வருடம் நார்வே முதல் இடத்தையும், டென்மார்க் இரண்டாவது இடத்தையும், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து ஆகிய நாடுகள் முறையே மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தை பெற்றிருக்கின்றன. இந்த வகையில் இந்தியா 122 வது இடத்தையும், பாகிஸ்தான் 80 வது இடத்தையும், நேபாளம் 99 வது இடத்தையும், ஸ்ரீலங்கா 110 வது இடத்தையும் பெற்றிருக்கின்றன.

சென்ற வருட கணக்கின் படி நார்வே 4 வது இடத்திலும், இந்தியா 118 வது இடத்திலும் இருந்தது. 155 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கருத்துகணிப்பின் படி நார்வே அரசு தனது மக்களை மகிழ்சியாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தியதால் நான்காம் இடத்திலிருந்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதுபோல சென்ற ஆண்டு 118 வது இடத்தில் இருந்த இந்தியாவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழவில்லை என்ற காரணத்தில் 122 வது இடத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/india/84166-the-happiest-populated-countries-india-got-122-rank.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா...
இவ்வளவு குண்டுவெடிப்பு, தீவிரவாத பிரச்சனைக்குள் இருந்தாலும் பாக்கிகள் 80 வது இடத்தில் ஹேப்பி அண்ணாச்சி...:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க ஏழாவது இடத்தில இருக்குறோம் மக்களே..! :D:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ இது சரியாக தெரியவில்லை ...........
சும்மா எதோ சித்து விளையாட்டிற்கு யாரோ செய்த குல்மால் மாதிரி இருக்கு. 

பிஜி தீவு மக்கள் செல்வந்தராக இல்லாது விடடாலும் மிக மகிழ்ச்சியாகவும் 
ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்.

இந்த சர்வே செய்தவர்கள் எல்லா நாட்டிற்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை 
மொத்தம் 196 நாடுகளில் ஒரு வருடத்தில் இரண்டுநாள் படி சென்றால் கூட முடியாது.
குழுக்களாக பிரிந்து சென்றால் ..........?
இறுதி முடிவு மாற்றம் அடைய வாய்ப்பிருக்கு 

இவை அரசுகளின் சேவைகள் அடிப்படையில் வைத்தே 
கணிக்க பட்டிருக்கு 
அதாவது ஒரு அரசு எவ்வளவு சேவைகளை மக்களுக்கு அளிக்கிறது என்பதில் 
இருந்த்து தொடங்குகிறார்கள் என்று எண்ணுகிறேன். அதோடு வேலை வாய்ப்பு வீதம் 
கணக்கில் கொள்கிறார்கள் என்று எண்ணுகிறேன் 
அதனால்தான் ஸ்கேண்டிநேவியன் நாடுகள் இடம் பிடிக்கின்றன 

இதை வைத்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது ...........
சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
ஈழ தமிழரை பொறுத்தவரை ஒரு சர்வே செய்தால் ....?
ஒன்றும் இல்லாத காலத்தில் நாட்டில் வாழ்ந்த வாழ்க்கையே மகிழ்ச்சி என்பார்கள் 
இப்போ எல்லாம் இருக்கும் மகிழ்ச்சி இருக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இசைக்கலைஞன் said:

நாங்க ஏழாவது இடத்தில இருக்குறோம் மக்களே..! :D:

லாங் கொலிடே ஜீவன் சிவாவைப் பார்க்கத் தெரியுதே.... நோர்வே நம்பர் ஒன் தான் என்று. ?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

லாங் கொலிடே ஜீவன் சிவாவைப் பார்க்கத் தெரியுதே.... நோர்வே நம்பர் ஒன் தான் என்று. ?

இருந்தாலும் உலகத்தில இரண்டாவது பெரிய நாட்டை கட்டி காப்பாற்றி ஏழாவது இடம் வாறது பெரிய விசயமல்லோ?! tw_blush: 

2 minutes ago, இசைக்கலைஞன் said:

இருந்தாலும் உலகத்தில இரண்டாவது பெரிய நாட்டை கட்டி காப்பாற்றி ஏழாவது இடம் வாறது பெரிய விசயமல்லோ?! tw_blush: 

ஆங் அதுதானே !

அவுஸ்திரேலியா வாவது 10 ஆவது இடததில் இருக்கு, ஆனால் பாவம் பிரித்தானியர்கள் தான் 19 ஆம் இடத்துக்கு போய்ட்டினம். எப்படித்தான் அங்கு சனம் இருக்கினமோ பாவம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஆங் அதுதானே !

அவுஸ்திரேலியா வாவது 10 ஆவது இடததில் இருக்கு, ஆனால் பாவம் பிரித்தானியர்கள் தான் 19 ஆம் இடத்துக்கு போய்ட்டினம். எப்படித்தான் அங்கு சனம் இருக்கினமோ பாவம்

அட பாருடா....

எங்கண்ட காலணிக்காரருக்கு வந்த சந்தோசத்த..

பிள்ளயள் நல்லா இருக்கட்டும் எண்டு ஆனந்தக் கண்ணீர்...

 

  • தொடங்கியவர்

உலகிலேயே அதிக மகிழ்ச்சியான நாடு நார்வே, 122-ஆவது இடத்தில இந்தியா

 
 

உலகிலேயே மிக அதிக மகிழ்ச்சியான நாடு நார்வே என கண்டறியப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி அறிக்கை: உலகிலேயே மிக அதிக மகிழ்ச்சியான நாடு நார்வேபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மகிழ்ச்சி அறிக்கை என்ற பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையில் 122-ஆவது இடத்தில் இந்தியா, இலங்கைக்கு 120-ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

முதலிடத்தில் இருந்த அண்டை நாடான டென்மார்க்கை பின்தள்ளி நார்வே முதலிடத்தை பிடித்தது.

உள்ளார்ந்த மகிழ்ச்சியை கணிக்கும் உலக மகிழ்ச்சி அறிக்கை, மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அதற்கு காரணம் என்ன என்று ஆராய்கிறது.

டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து ஆகிய நாடுகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும் நிலையில், மத்திய ஆஃப்ரிக்க குடியரசு பட்டியலில் இறுதி இடத்தை பிடித்திருக்கிறது.

மகிழ்ச்சி அறிக்கையில் 122-ஆவது இடத்தில் இந்தியா,படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவும், பட்டியலின் உயர்வான இடங்களை பிடிக்க, அமெரிக்காவும் பிரிட்டனும் முறையே 14 மற்றும் 19 -வது இடங்களை பிடித்துள்ளன.

ஆஃப்ரிக்காவில் சஹாராவை ஒட்டியுள்ள நாடுகளும், உள்நாட்டு சண்டை மிகுந்த நாடுகளும் குறைவான மகிழ்ச்சியுடையதாக இருக்கின்றன. 155 நாடுகள் கொண்ட பட்டியலில், சிரியா 152-வது இடத்தையும், ஏமன் மற்றும் தெற்கு சூடான் 146, 147 வது இடத்தையும் பிடித்துள்ளன.

சர்வதேச மகிழ்ச்சி தினமான மார்ச் 20 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டது.

உலகில் மகிழ்ச்சியான - சோகமான நாடுகள்

முதல் 10 மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:

நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்வீடன்.

மிகவும் மகிழ்ச்சி குறைவான நாடுகள்

ஏமன், தெற்கு சூடான், லிபியா, கினியா, டோகோ, ரவாண்டா, சிரியா, தான்சானியா, புருண்டி மற்றும் மத்திய ஆஃப்ரிக்க குடியரசு

ஆண்டுதோறும் 150 -க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பாக எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

"அது பூஜ்ஜியத்தில் இருந்து 10 வரை மேல் நோக்கிச் செல்லும் ஒரு ஏணியை கற்பனை செய்து கொள்ளுங்கள்" என்று கூறி அதன் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

"ஏணியின் மேற்புறம் இருக்கும் படியானது, உங்கள் வாழ்க்கையின் மிகவும் சிறப்பானது என்றும், கடைசிப்படி வாழ்க்கையின் மிக மோசமானது என்றும் வைத்துக்கொண்டால், இப்போது நீங்கள் வாழ்க்கையின் எந்த நிலையில் (படியில்) இருப்பதாக சொல்வீர்கள்?" இதற்கு கிடைக்கும் பதிலின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது.

ஒரு நாட்டின் சராசரி மதிப்பெண்ணை அடிப்படையாக பார்த்தால், நார்வே 7.54 என்ற அதிக மதிப்பெண்ணும், மத்திய ஆஃப்ரிக்க குடியரசு 2.69 மதிப்பெண்ணும் பெற்றுள்ளது. இதைத்தவிர, ஒரு நாட்டை விட மற்றொன்று எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறது, அதற்கான காரணம் என்ன என்பவை குறித்த தரவுகளையும் இந்த அறிக்கை ஆய்வு செய்கிறது.

பொருளாதார பலம் (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில்), சமூக ஆதரவு, ஆயுட்காலம், தெரிவு செய்யும் சுதந்திரம், பெருந்தன்மை, ஊழலில் இருந்து பாதுகாப்பு போன்ற காரணிகளையும் கவனத்தில் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

இந்தியா, இலங்கையில் மகிழ்ச்சியின் தரவரிசை என்ன?

இந்தப் பட்டியலில் இந்தியா எந்த நிலையில் இருக்கிறது? கடந்த ஆண்டை விட ஒரு நிலை கீழிறங்கி, இந்தியா 122 -ஆவது இடத்தில் இருக்கிறது. இலங்கை, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகள் இந்தியாவை விட மகிழ்ச்சி பட்டியலில் நாடுகள் என்று பட்டியலில் இந்தியாவை முந்திவிட்டன.

மகிழ்ச்சியின் அளவு குறைந்து வரும் பட்டியலில், இந்தியா, வெனிசுலா, செளதி அரேபியா, எகிப்து, ஏமன் போட்ஸ்வானா உள்ளிட்ட பத்து நாடுகள் உள்ளன.

இந்தப் பட்டியலில், சோமாலியா 76, சீனா 79, பாகிஸ்தான் 80, இரான் 105, பாலஸ்தீனிய பகுதிகள் 108, பங்களாதேஷ் 110 வது இடத்தையும் பிடிக்க, இந்தியா 122 -வது இடத்தில் இருப்பது மகிழ்ச்சியான விசயமாக இல்லை.

அமெரிக்காவிலும் மகிழ்ச்சியின் அளவு குறைந்து வருகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.

'அமெரிக்கர்களுக்கு அதிகரிக்கும் செல்வம், குறையும் நிம்மதி'படத்தின் காப்புரிமைGETTY IMAGES

'அமெரிக்கர்களுக்கு அதிகரிக்கும் செல்வம், குறையும் நிம்மதி'

இந்த ஆண்டின் ஐ.நா.வின் மகிழ்ச்சி தொடர்பான அறிக்கையில் "அமெரிக்கர்களின் மகிழ்ச்சியை மறுசீரமைப்பது" என்ற அத்தியாயமும் இடம் பெற்றிருக்கிறது. அதில், அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், மகிழ்ச்சியான மனோநிலை ஏன் குறைந்து வருகிறது என்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

"அமெரிக்கா, பொருளாதார வளர்ச்சிக்கு பிரத்யேக கவனம் கொடுப்பதை விட, நாட்டில் அதிகரித்துவரும் சமத்துவமின்மை, ஊழல், தனிமை, அவநம்பிக்கை போன்ற பன்முக சமூக நெருக்கடிகளை சீரமைக்கவேண்டும் அது மிகவும்அவசியமானது" என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

"அமெரிக்காவின் சிக்கல் என்பது சிறியது, ஒரு சமூக பிரச்சனை, அது ஒரு பொருளாதாரம் சார்ந்தது அல்ல"

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்குவதாக, இந்த அறிக்கையை வெளியிட்ட நிலையான அபிவிருத்தி தீர்வுகளுக்கான தொடரமைப்பின் இயக்குனர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறுகிறார்.

'அமெரிக்கர்களுக்கு அதிகரிக்கும் செல்வம், குறையும் நிம்மதி'படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சமத்துவமின்மையை அதிகரிப்பதை இலக்காக கொண்டு அவர்கள், மேல் நிலையில் இருப்பவர்களுக்கு வரியை குறைப்பது, மக்களுக்கான சுகாதார பாதுகாப்பு பங்களிப்பதில் இருந்து விலகுவது, உணவிற்கான பங்களிப்பை குறைத்து இராணுவத்திற்கான செலவை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இவை அனைத்தும் தவறான திசையில் செல்வதாக நான் நினைக்கிறேன்" என்று ரியூட்டர்ஸ் சொல்கிறார்.

"வெள்ளை சட்டை" வேலைகளை மேற்கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்தினரை விட, "நீலச் சட்டை" அணியும் தொழிலாளர்கள் அதிக மகிழ்ச்சியாக இருப்பதாக கூறும் இந்த அறிக்கை, ஆனால் வேலையில் இருப்பதும் மகிழ்ச்சிக்கு ஒரு முக்கியமான காரணம் என்று தெரிவிக்கிறது.

"நல்ல ஊதியத்துடன் வேலையில் இருப்பவர்கள் அதிக திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள்" என்று சொன்னாலும், தொடக்கத்தில் ஏற்படும் திருப்தியும், மகிழ்ச்சியும் நாளடைவில் குறைந்து போகும் லா ஆஃப் டிமினிஷிங் என்ற கோட்பாடு, இங்கே வேலை செய்கிறது. "ஊதியத்தை விட 100 ரூபாய் அதிகமாக கிடைத்தால் கீழ்நிலையில் இருக்கும் சிலருக்கு அதிக மகிழ்ச்சி தருவதாக இருந்தால், அது, அதிகமாக வருமானம் ஈட்டும் ஒருவருக்கு பெரிதாக தோன்றுவதில்லை".

ஐந்து ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் இந்த வருடாந்திர அறிக்கையில், நோர்டிக் நாடுகளே முதல் இடங்களை பிடித்துள்ளன.

பட்டியலில் நோர்டிக் நாடுகளின் ஆதிக்கம், அதிலும் குறிப்பாக டென்மார்க், சொல்வது என்னவென்றால், "ஹ்யூக்" எனப்படும் அன்பு, ஆதரவு மற்றும் அமைதியாக இருக்கும் அந்நாட்டின் கலாசார பாரம்பரியத்தை பிற நாடுகள் ஏற்றுக்கொள்வதற்கு ஊக்கமளிக்கிறது.

http://www.bbc.com/tamil/global-39343650

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனி இவ்வளவு துயரங்களை தாங்கியும் 16வது இடத்தில் இருப்பதையிட்டு புளகாங்கிதம் அடைகின்றேன்.:grin:
16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க.:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.