Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் சொல்லைக் கேட்டிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்! - ஆனந்தசங்கரி 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
என் சொல்லைக் கேட்டிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்! - ஆனந்தசங்கரி 
[Monday 2017-04-10 06:00]
தனது அறிவுரையைக் கேட்டிருந்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்றும் உயிருடன் இருந்திருப்பார் என்று  தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலை கூட்டணி தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்-

தனது அறிவுரையைக் கேட்டிருந்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்றும் உயிருடன் இருந்திருப்பார் என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலை கூட்டணி தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்-  

முன்னைய காலத்தில் மக்களுக்கு சேவை செய்ய பாராளுமன்றத்தில் போதியளவு வசதிகள் காணப்பட்டது. சேவையை நோக்கமாக கொண்டு பாராளுமன்றக்கு வந்தனர். ஆனால் இன்று பாராளுமன்ற தொழில் ஒரு வியாபாரமாக போய்விட்டது. அதிலும் எமது மக்கள் பிரதிநிதிகளால் நாங்கள் அழிக்கப்படுகிறோம். பல கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ளோம்.

பிரபாகரனுக்கு நான் எதிரி இல்லை, நான் சகல விடயங்களையும் ஆழ்ந்து அறிந்தவன் என்ற ரீதியில் சில நடவடிக்கையில் இருந்து பிரபாகரனை திருந்தி செயற்படச் சொன்னேன். தம்பி சாபத்துக்கு ஆளாக போகிறாய் உடனடியாக பேச்சுவார்த்தையை நடத்துங்கள் என தெரிவித்தேன். அன்று நான் கூறியதை கேட்டிருந்தால் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருப்பார். அன்றைய ஜனாதிபதிக்கு யுத்தத்தை நிறுத்துமாறு கோரி கடிதம் அனுப்பினேன். ஆனால் நிறுத்தவில்லை.

இப்பகுதியில் ஒருவர் கூட யுத்தத்தை நிறுத்துவதற்கு நினைத்திருந்தால் இன்று இந்த நிலை எமக்கு வந்திருக்காது. பல தலைவர்கள், பல நாடுகள் யுத்தத்தை நிறுத்துமாறு கேட்டார்கள். கேட்கவில்லை இறுதியில் மக்கள் அழிக்கப்பட்டார்கள்.

யுத்தத்தை நிறுத்துமாறு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் சொல்லவில்லை. மக்களை காப்பாற்ற வேண்டிய புனிதமான கடமையை யாரும் செய்யவில்லை. நடந்த அநீதிகளுக்கு தற்போது நீதி வேண்டி சர்வதேசத்திடம் போய் நிற்கிறோம்.

விடுதலைப்புலிகள் தான் தமிழ் மக்களை அதிகம் கொலை செய்தார்கள் என புதிதாக வந்துள்ள சுமந்திரன் எலிக்குட்டி தெரிவித்துள்ளார். இவ்வாறு தெரிவித்து விட்டு அத்துடன் 2 வருடங்களில் நல்ல வெளிநாட்டு தலையீடு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே இது நடக்கப்போற விடயம் இல்லை சர்வதேச விசாரணையும் நடக்கப்போவதில்லை. சம்பந்தன் மாவைக்கு அரசியல் தெரியாது. சுமந்திரனுக்கு அறவே அரசியல் தெரியாது. இவர்கள் எல்லாரும் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பொய்யர்களின் செயல்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=180100&category=TamilNews&language=tamil

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
39 minutes ago, nochchi said:

பிரபாகரன் தான் உயிருடன் இருப்பதற்காகவோ அல்லது நீங்கள்/நான் உயிருடன் இருப்பதற்காகவோ போராட வரவில்லை.

இந்த பூமியில் தமிழினம் மற்ற இனங்களைப்போல் சுதந்திரமாக சுயநிர்ணய உரிமையுடன்  வாழவேண்டும் என்பதற்காக போராடினார்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்  யார் சொன்னது தலைவர் உயிருடன் உயிருடன் இல்லை என்று.

  • கருத்துக்கள உறவுகள்

கோழையாக வாழ்வதை விட வீரனாக சாவது மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தசங்கரிபற்றி முன்பு வெளிவந்த சில செய்திகளின் சிறு தொகுப்பு:

2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை முதல் தடவையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போது அதில் ஆனந்தசங்கரி கலந்து கொண்டார். அதன் பின் கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடந்த சந்திப்புக்கள் எதிலும் ஆனந்தசங்கரி கலந்து கொள்ளவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞானத்திற்கு எதிராக செயற்படுகிறார் என்றும், தமிழீழ விடுதலைப்புலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறிவருகிறார் என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறையினருக்கும் இடையில் கிளிநொச்சியில் நடைபெற்ற சந்திப்புக்களிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆனந்தசங்கரியின் நிலைப்பாடு தொடர்பாக அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட கிளைகள் வி.ஆனந்தசங்கரியை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியிருந்தன.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி மீது நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. தமிழர்களின் அபிலாசைகளுக்கு முரணாக செயற்படுகிறார் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகிறார் என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் கூட தமிழீழ விடுதலைப்புலிகளை விமர்சித்தது கிடையாது. ஆனால் எம்.சிவசிதம்பரம் அவர்கள் காலமானதை தொடர்ந்து தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆனந்தசங்கரியின் போக்கில் தமிழ் மக்கள் மட்டுமன்றி தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கத்தவர்களே அதிருப்தி அடைந்திருந்தனர்

ஆனந்தசங்கரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியை சிலர் விடுதலைப்புலிகளிடம் அடகு வைக்க நினைக்கின்றனர் என்றும் அதற்கு தான் ஓரு போதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை நான் நிராகரிக்கிறேன்.

 

பின் குறிப்பு  :

உடும்பு இறைச்சி உண்டு உடம்பை இரும்பாக வைத்திருக்கும் ஆலோசனையை ஆனந்தசங்கரி அவர்கள் கேட்டுப் பின்பற்றியதால் இன்றும் உயிரோடு இருக்கின்றார்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.