Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொல்காப்பியத்தில் தாவரங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆய்வுச் சிந்தனைகள்

தொல்காப்பியத்தில் தாவரங்கள்

உலகம் தழுவிய உயர்ந்த சிந்தனைகள் பொதுமையான சிந்தனைகள் வாழ்வியல் நெறிகள் வடித்து தமிழ் வளர்த்தனர், புலவர் ஆனால் அடிமைக்கனவுகளை அறுவடை செய்வதற்கு அட்சயப் பாத்திரத்தை அடகு வைத்த கதையாய் தேர்வில் தோற்றுக் கொண்டிருக்கிறது பாடபுத்தகம் இந்நிலை மாற வேண்டும். அதற்கு பாடமும் வாழ்வும் ஒன்றாக இருக்க வேண்டும். வெற்றி மாலை சூட்டுவதற்காக ஜெயதேவதை பூச்செடிகளுக்கு நீர் வார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உலகம் உணர வேண்டும்.

பூமி - வானம், இயற்கை - செயற்கை, அறிவியல் - வரலாறு, கலை - காலம், வாழ்க்கை - உணர்வு என்ற நிலையில் இலக்கணமும் இலக்கியமும் வாழ்க்கைக்கூறுகளை எடுத்து இயம்ப வேண்டும்.

ஐந்து பூதங்கள்

ஐந்து பொறிகள் உலகம் அனைத்திற்கும் பொது இலக்கணம் ஐந்து. நில அமைப்பு ஐந்து - தமிழுக்கே உரிய சியறப்பு ஆம் வாழ்வியல் நெறிகள் என்னும் போது மொழி அமைப்பு என வகைப்படுத்தும் போது தமிழுக்கே உரிய சிறப்பு பொருளதிகாரம் உணர்த்தும் தொல்காப்பியரின் ஐவகை நிலங்கள் பற்றிய செய்திகளே!

தட்ப வெப்பம் நில அமைப்பு மக்களின் வாழ்க்கை நெறி இவைகளின் அடிப்படையில் எச்செய்தியும் விடாது சொல்லிச் செல்வது தொல்காப்பியர் தனித்தன்மை அத்தன்மைகளில் இயற்கையோடு இயைந்து மக்களின் வாழ்வில் பெருமளவு நன்மையை உண்டாக்குவது தாவரங்கள்.

பொதுவாக தாவரங்கள் என்னும் போது புல் செடி கொடி மரம் என்ற வகைகள் இடம் பெறுகின்றன.

உயிர்த்தன்மை உடையன அனைத்தும் நகரும் தன்மை உடையன என்னும் அடிப்படையில் தாவரங்கள் உணவுக்காக இடம் நகரும் தன்மையுடையன.

கீழ்நிலைத்தாவரங்கள் பாசிகள் ஆல்ககாக்கள் கசையிழை போன்றவை வேர் பிடித்தற்காக நீர் நோக்கி நகருகின்றன. அதே போல மண் நோக்கி ஒளி நோக்கி தாவரங்கள் இயக்கம் அமைகின்றன.

அதேபோல நிறத்தின் அடிப்படையில் காலை மாலை எனப்பூக்கள் மலருகின்றன. பெரும்பாலும் வெந்நிறப்பூக்கள் காலையில் மலரும் மஞ்சள் நிறப்பூக்கள் மாலையில் மலரும் குறிப்பிட்ட திசை நோக்கி மலரும் பூக்களும் உண்டு.

உ.ம்: சூரிய காந்தி பூ. இவை போல பல நுட்ப முறைகளைக் கண்டே தொல்காப்பியர் திணை ஒழுக்கத்தைச்சுட்ட அத்திணைக்குரிய மரம் பூ முதலியவற்றை கருப்பொருளில் அடுக்கிச்செல்கிறார்.

''தெய்வம் உணாவே மாமரம் புட்பறை

செய்தி யாழின் பகுதியோடு

அவ்வகை பிறவும் கருவென மொழிப''

தெய்வம் உணவு விலங்கு மரம் பறவை பறையென்னும் முழக்கருவி தொழில் பண் (இசை) முதலியனவும் அத்தகைய பிறவும் கருப்பொருள் என்று கூறுவர். பிறவும் என்றதனால் பூவகையும் நீரும் கருப்பொருளாகக் கொள்ளப்படும்.

நல்லாசிரியரின் இயல்பு கூறும் போது நன்னூல் ஆசிரியர் மலரின் சிறப்புப்பற்றி பேசுகிறார். ஏனெனில் தமிழர்வாழ்வில் எல்லா நிகழ்வுகளிலும் பூக்கள் முக்கிய இடம் பெறுகின்றன.

''மங்கலம் ஆகி இன்றியமையாது

யாவரும் மகிழ்ந்து மேற்கொளமெல்கி பொழுதின் முகமலர் உடையது பூவே'' என்பார் பவணந்தி முனிவர். அத்தகைய சிறப்பு உடையதால்தான் பூ கருப்பொருளில் ஒன்றாயிருத்தல் வேண்டும்.

மலை காடு வயல் கடல் என்ற பகுப்பில் ஐந்திணை ஒழுக்கத்தை அமைத்துள்ள தொல்காப்பியர் மரங்களையும் அவ்வாறே உரையாசிரியர்கள் வரிசைப்படுத்துகிறார்.

குறிஞ்சி : வேங்கையும் கோங்கும்

முல்லை : கொன்றை, குருத்து, புதல்

பாலை : பாலை, இருப்பை, கள்ளி, சூரை

நெய்தல் : புன்னை, கைதை

பொருளதிகாரம் புறத்திணையியலில் கரந்தைத்துறைகள் பற்றி ஆசிரியர் கூறும் போது ''உடல் வேந்த் அடுக்கிய உன்ன நிலையும்'' எனப் பகைமன்னனது எண்ணத்தை உன்ன மரத்தோடு பொருத்திக் காண்கின்ற உன்னநிலையும் என்னும் போது உன்ன என்ற மரத்தைக் குறிப்பிடுகிறார்.

பொருளதிகாரம் மரபியலில் ஒரறிவுயிரின் சில சிறப்பு மரபுகள் என்னும் போது ''புறக் காழனவே புல்லலெனப்படுமே'' நூ 86

புறவுயிர்ப்பு உடையனவற்றை புல் என்று சொல்லுவர். அவை தெங்கு, பனை, கமுகு, மூங்கில் என புலியூர் கேசிகன் உரை கூறுகிறார்.

''அகக் காழனவே மரனெனப்படுமே'' நூ 87

உள்ளுறுதி உடையன மரமென்றும் கூறப்பெறும். அவ்வாறாயின் மரவகையின் உறுப்புகள்

''இலையே முறியே தளிரே தோடே

சினையே குழையே பூவே அரும்பே

நனையே உள்ளுறுத் தனையவை யெல்லாம்

மரனொடு வரூஉம் கிளவி யென்ப'' - நூ 89

இலை, முறி, தளிர்தோடு சினை, குழை, பூ, அரும்பு, நனை என்று கூறப்படுபவை எல்லாம் மரத்தின்கண் வரும் உறுப்புச் சொற்களாம். இவைகள் மட்டுமின்றி இல்லம், எகின் போன்ற மரப்பெயர்களும் தொல்காப்பியர் கூறிச்செல்லும் மரங்களாம், அத்திப்பூ, வேப்பம்பூ, பனம்பூ காந்தள் மலர், கொடடி, தாமரை, செங்கழுநீர், மலர், வள்ளி என்று வரிசைப்படுத்தும்போது கொடி, செடி போன்றவற்றையும் நீர் வாழ்த்தாவரங்களையும் தொல்காப்பியர் எடுத்துக்காட்டுகிறார்.

முடிவுரை

மருந்தாக, உணவாக, அன்றாடம் பயன்தரு பொருளாக மரங்கள் பயன்படுகின்றன. அப்பயன்களை நாம் தொடர்ந்து பெற தொல்காப்பியர் காலம் முதல் காக்கப்படும் மரங்களை நாமும் காப்போம் நலம்பல பெறுவோம்.

நன்றி "கூடல்"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக நல்ல பதிவு. இணைப்புக்கு நன்றி குமாரசாமி அவர்களே.

ஊரில் நாம் இருந்திருந்தால் நமக்கு இக்கட்டுரை பயன்பட்டிருக்கும். வெளிநாடுகளில் இவைகளை நாம் எங்கு தேடுவது?

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை பயன்மிக்கதே ஆனாலும் சில விடயங்களைக் கூறித்தான் ஆகவேண்டும். அதாவது தொல்காப்பியம் ஐவகை நிலங்களைப் பற்றிக் கூறவில்லை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நால்வகை நிலங்களைப் பற்றியே கூறுகின்றது. மாயோன் மேய காடுறை உலகம - முல்லை, சேயோன் மேய மைவரை உலகம் - குறிஞ்சி, வேந்தன் மேய தீம்புனல் உலகம் - மருதம், வருணன் மேய பெருமணல் உலகம் - நெய்தல் என்ற நான்கு நிலங்களே தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ளன. பிற்கால நூல்கள் உ-ம்: சிலப்பதிகாரம், கலித்தொகை, நற்றிணை போன்றனவே பாலை நிலத்தைப் பற்றியும் கூறுகின்றன. கட்டுரையாளர் இதனைக் கருத்திலெடுக்க வேண்டுமென்று வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தொல்காப்பியத்தோடு தான் நாம் நிற்கின்றோம். ஆனால் நவீன காலத்தில், புதிய கலைச்சொற்கள் உருவாக்க வேண்டிய தேவைகள் அதிகமாக இருக்கின்றன. அது பற்றி யாரும் முயற்சி எடுக்கவோ, பரிந்துரைகளோ செய்யாமலே ஏன் இருக்கின்றோம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொல்காப்பியத்தோடு தான் நாம் நிற்கின்றோம். ஆனால் நவீன காலத்தில், புதிய கலைச்சொற்கள் உருவாக்க வேண்டிய தேவைகள் அதிகமாக இருக்கின்றன. அது பற்றி யாரும் முயற்சி எடுக்கவோ, பரிந்துரைகளோ செய்யாமலே ஏன் இருக்கின்றோம்?

வந்துகொண்டுதானிருக்கின்றன. உதாரணம் "இணையம்" இது ஒரு புதிய தமிழ்ச்சொல்.

online english-tamil, tamil-english dictionary களே இன்றக்குத் தேவை. எங்கும் உள்ளதா?

ஏன் உதரணம்...

பேக்கறி- வெதுப்பகம்

கேக்- குதப்பி-

ஜஸ்கிறம்- குளிர்களி

சைக்கிள்- ஈர்உருளி

லொறி- பாரா ஊர்தி

மின்னஞ்சல்- ஊந்துகணை- ஊந்துருளி...

இவை எதை குறிக்கின்றன...???

கண்ணை மூடிக்கொண்டு கருத்தை எழுதாதீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

தொல்காப்பியத்தோடு தான் நாம் நிற்கின்றோம். ஆனால் நவீன காலத்தில், புதிய கலைச்சொற்கள் உருவாக்க வேண்டிய தேவைகள் அதிகமாக இருக்கின்றன. அது பற்றி யாரும் முயற்சி எடுக்கவோ, பரிந்துரைகளோ செய்யாமலே ஏன் இருக்கின்றோம்?

தாவரக் கலைச் சொற்கள் தமிழ் தேசியத்துக்கு என்ன செய்யப் போகுது.. மோகன் சார் இந்தத் தலைப்பை அகற்றுங்கள் என்பதுதான் சரி. :lol::lol::lol:

உங்களைப் போல அல்ல உலகம். தமிழகம் தேவையான அளவுக்கு தமிழ் கலைச் சொற்களை உருவாக்கிக் கொண்டு தான் இருக்கிறது. யாகூ தமிழில் கூட தமிழகம் செல்வாக்குச் செய்கிறது. நம்மாக்கள் தமிழ் தேசியம் வளக்கினம் தங்களுக்க தாங்களே. பலியிடுவதற்கு. :lol::lol:

http://in.tamil.yahoo.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தாவரக் கலைச் சொற்கள் தமிழ் தேசியத்துக்கு என்ன செய்யப் போகுது.. மோகன் சார் இந்தத் தலைப்பை அகற்றுங்கள் என்பதுதான் சரி. :lol::lol::lol:

உம்முடைய கிறுக்கு வருத்தம் என்னும் மாறவில்லையோ! அடுத்த அனுதாப வாக்கெடுப்பு ஏதும் செய்ய வேண்டும் என்று ரெம்ப ஆசைப்படுகின்றீர் போல

  • கருத்துக்கள உறவுகள்

வந்துகொண்டுதானிருக்கின்றன. உதாரணம் "இணையம்" இது ஒரு புதிய தமிழ்ச்சொல்.

இது போதுமானது என்று நினைக்கின்றீர்களா? ஆனைப் பசிக்கு சோளப்பெரி போன்று, உலகமாயமான சூழலில், அவற்றிக்கு போட்டி போட வேண்டிய நிலமையில், இப்படி, 4,5 சொற்கள் போதுமானது அல்ல.

யாகுவில் தமமழ் என்று பெருமையடிக்கின்றீர்கள். யாகுவில் தமிழ் என்று, பாதிச் சொற்கள், தமிழிங்கிசாகவே இருக்கின்றது. இதை விடப் பேசாமல் ஆங்கிலத்தில் எழுதலாம்.

தூயவன்,

ஏராளமான தமிழ்ச்சொற்கள் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக

  • கருத்துக்கள உறவுகள்

உம்முடைய கிறுக்கு வருத்தம் என்னும் மாறவில்லையோ! அடுத்த அனுதாப வாக்கெடுப்பு ஏதும் செய்ய வேண்டும் என்று ரெம்ப ஆசைப்படுகின்றீர் போல

தமிழ் தேசியக் காய்ச்சலில் உளறுவது மட்டும் வாக்கெடுப்புக்கு அப்பால் பட்டது. வாக்கெடுப்பு நடத்துபவர்களும் நீங்களே வாக்களிப்பவர்களும் நீங்களே. நீங்களும் உங்கள் போலி முகங்களும் யாரையும் முடக்கப் போவதில்லை. தாவரங்கள் பற்றிப் பேசும் நீங்கள் தாவரங்களுக்கு வைக்கப்படும் லத்தீன் பெயர்களை தமிழுக்கு மாற்ற தமிழ் தேசியக் குறள் எழுப்பலாமே. தமிழ் தேசிய வேசம் கலையும் போது சினிமா நடிகனின் முகமும் கலையும். தமிழ் பற்றும் வெளிறும். :lol::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பால பண்டிதர் விடுதலைப் புலிகள் இயற்றுபவை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளவர்களால் மட்டும் பாவிக்கப்படுபவை. அவையெல்லாம் உலகத் தமிழ் மகாநாடுகளின் போது சமர்க்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டவையாகவோ சர்வதேச அளவில் தமிழ் மொழிக்குள் உள்வாங்கப்பட்டவவயாகவோ இன்னும் அமையவில்லை. அதற்கு ஏற்ற வகையில் சிந்திக்கவோ ஒத்துழைக்கவோ ஈழத்தமிழ் ஆர்வலர்கள் தயாராக இல்லை. தாவரவியல் பற்றிய அறிவில்லாதவர்களே அதைப் பற்றி தமிழ் தேசிய வெறியில் பினாத்துவது எல்லாம் தமிழ் சங்கம் ஏறாது. சரியான வழிமுறைகள் பின்பற்றப்படும் அளவுக்கு ஈழத்தமிழ் உலகம் இன்னும் உருப்படவில்லை என்பது வருத்ததுக்குரிய உண்மை.:lol::lol::rolleyes:

தாயகத்திலுள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் ஆயுதப் பயிற்சிவழங்கப்படுகிறது. அவர்களின் திறமைகள் ஏது என்று ஆராயாமல், ஒரு தமிழ் ஆசிரியரும், ஒரு கூலித்தொழிலாளியும் இணைந்து போர்ப்பயிற்சி பெறுகிறார்கள்.

அதேபோல, வெளிநாட்டிலுள்ள அனைவரும், தமது expertise எதுவானாலும், இணைந்து போர் பயிலவேண்டும். நாம் செய்யப் போகும் போர் பரப்புரைப் போர், ஊடகப்போர். சும்மா 10 பேர் கவனயீர்ப்புப் பொராட்டம் நட்டத்தி ஒன்றும் பெயராது.

விலகி இருக்கும் படித்த கூட்டம் அரவணைத்து உள்ளே இழுக்கப்பட வேண்டும்.

தமிழை வளர்க்க இதுவல்ல நேரம். அதற்கு ஒரு நேரம் வரும். அப்போது பார்க்கலாம்.

தனி ஈழத்தைப் பெற எங்களுக்கு எல்லா காரணங்களும் உள்ளது ஒன்றைத்தவிர. எங்களுக்கு எங்களது சுய நிர்ணய உரிமை வாதத்தை சரியான முறையில் வெளிஉலகுக்கு பிரச்சாரப்படுத்த முடியவில்லை.

அதைச் செய்ய சகலரதும் ஆதரவு தேவை.

சிந்தியுங்கள் நெடுக்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் காய்ச்சலில் உளறுவது மட்டும் வாக்கெடுப்புக்கு அப்பால் பட்டது. வாக்கெடுப்பு நடத்துபவர்களும் நீங்களே வாக்களிப்பவர்களும் நீங்களே. நீங்களும் உங்கள் போலி முகங்களும் யாரையும் முடக்கப் போவதில்லை. தாவரங்கள் பற்றிப் பேசும் நீங்கள் தாவரங்களுக்கு வைக்கப்படும் லத்தீன் பெயர்களை தமிழுக்கு மாற்ற தமிழ் தேசியக் குறள் எழுப்பலாமே. தமிழ் தேசிய வேசம் கலையும் போது சினிமா நடிகனின் முகமும் கலையும். தமிழ் பற்றும் வெளிறும். :lol::rolleyes:

ஏதோ நாங்கள் எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு இருப்பது போல லொயிக்காக கதைக்கப்பதாக பெருமிதம் வேண்டாமே! இங்கே, உம்மையும், வாக்கெடுப்பு நபரினதும் இடத்தைக் கண்டு பிடிப்பது பெரிய வேலையல்ல. ஏதோ மோகனுக்கு இது தெரியாது என்ற கணக்கில் உளற வேண்டடாமே!

வாக்கெடுப்பு விடயம் உமக்குச் சம்பந்தமில்லை, என்றால் பிறிதொரு தலைப்பில், "தீவிர இலக்கியம்" அமைத்ததற்கு சில தினங்களுக்கு விளக்கம் கேட்டது மட்டும் என்னவாம். அப்போது நீர் இல்லை. விவாதித்தவர்களுக்கு தனிப்பட்டரீதியில் விளக்கம் தரப்பட்டிருக்கின்றது. சம்பந்தமே இல்லாத உமக்கு மட்டும், ஏன் நிர்வாகம் சொல்ல வேண்டும் என்று அழுதீர்?

தமிழ் மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றால், தமிழ் தேசியம் என்பது அவசியம். அது நீர் நினைப்பது போல குருவிகள், நெடுங்காலபோவானாகவோ, அல்லது yaalஎன்ற பெயரில் போட்ட வேசமோ அல்ல.

தூயவன்,

ஏராளமான தமிழ்ச்சொற்கள் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்திலுள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் ஆயுதப் பயிற்சிவழங்கப்படுகிறது. அவர்களின் திறமைகள் ஏது என்று ஆராயாமல், ஒரு தமிழ் ஆசிரியரும், ஒரு கூலித்தொழிலாளியும் இணைந்து போர்ப்பயிற்சி பெறுகிறார்கள்.

அதேபோல, வெளிநாட்டிலுள்ள அனைவரும், தமது expertise எதுவானாலும், இணைந்து போர் பயிலவேண்டும். நாம் செய்யப் போகும் போர் பரப்புரைப் போர், ஊடகப்போர். சும்மா 10 பேர் கவனயீர்ப்புப் பொராட்டம் நட்டத்தி ஒன்றும் பெயராது.

விலகி இருக்கும் படித்த கூட்டம் அரவணைத்து உள்ளே இழுக்கப்பட வேண்டும்.

தமிழை வளர்க்க இதுவல்ல நேரம். அதற்கு ஒரு நேரம் வரும். அப்போது பார்க்கலாம்.

தனி ஈழத்தைப் பெற எங்களுக்கு எல்லா காரணங்களும் உள்ளது ஒன்றைத்தவிர. எங்களுக்கு எங்களது சுய நிர்ணய உரிமை வாதத்தை சரியான முறையில் வெளிஉலகுக்கு பிரச்சாரப்படுத்த முடியவில்லை.

அதைச் செய்ய சகலரதும் ஆதரவு தேவை.

சிந்தியுங்கள் நெடுக்ஸ்.

30 வருடமாச் சிந்திச்சுக் கண்டது என்ன.. ஆமிக்காரனை முழத்துக்கு முழம் நிறுத்தினதைத் தவிர. தமிழ் மொழிக்கு ஈழத்தமிழர்களின் பங்களிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. கல்வி பெற வேண்டிய மாணவ சமூகம் கல்வியற்று அகதி முகாம்களிலும் போர் பாசறைகளிலும் கிடக்கின்றன. இந்த 30 வருட போராட்டம் தமிழ் மக்களின் கல்வியில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை நிவர்த்திக்க இன்னும் 30 வருடங்களுக்கு மேல் தேவை. நிலைமை அப்படி இருக்க இன்னும் தனிநாடு பெறும் வரை உட்கார்ந்து இருந்து அதைப் பற்றி சிந்திப்போம் ஆனால் புலம்பெயர்ந்து எங்கள் வயுதுப்பாட்டையும் வாழ்க்கையும் வளமாக்கிக்குவோம் என்ற முழக்கம் தொடர்கிறது.

இப்போராட்டம் சுயநிர்ணய உரிமையைப் பெற்றுத்தந்ததோ இல்லையோ தமிழர்களின் சமூக கட்டமைப்பைப் பலமாக பலவீனப்படுத்தியுள்ளது. <_<:icon_idea:

ஏதோ நாங்கள் எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு இருப்பது போல லொயிக்காக கதைக்கப்பதாக பெருமிதம் வேண்டாமே! இங்கே, உம்மையும், வாக்கெடுப்பு நபரினதும் இடத்தைக் கண்டு பிடிப்பது பெரிய வேலையல்ல. ஏதோ மோகனுக்கு இது தெரியாது என்ற கணக்கில் உளற வேண்டடாமே!

வாக்கெடுப்பு விடயம் உமக்குச் சம்பந்தமில்லை, என்றால் பிறிதொரு தலைப்பில், "தீவிர இலக்கியம்" அமைத்ததற்கு சில தினங்களுக்கு விளக்கம் கேட்டது மட்டும் என்னவாம். அப்போது நீர் இல்லை. விவாதித்தவர்களுக்கு தனிப்பட்டரீதியில் விளக்கம் தரப்பட்டிருக்கின்றது. சம்பந்தமே இல்லாத உமக்கு மட்டும், ஏன் நிர்வாகம் சொல்ல வேண்டும் என்று அழுதீர்?

தமிழ் மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றால், தமிழ் தேசியம் என்பது அவசியம். அது நீர் நினைப்பது போல குருவிகள், நெடுங்காலபோவானாகவோ, அல்லது yaalஎன்ற பெயரில் போட்ட வேசமோ அல்ல.

இங்கே பழைய இரண்டு போறத்துக்கும் இணைப்புத் தந்தபோது குருவிக்கும் நெடுக்ஸுக்கும் தொடர்பை ஏற்படுத்த உங்கள் போன்றோர் எண்ணிய போதே சில விடயங்களை வாசித்தும் கேட்டும் தெரிந்து கொண்டோம்.

தமிழ் தேசியம் என்ற பெயரில் ஆளாளுக்கு சட்டம் இயற்றுவதுதான் தமிழ் தேசியத்துக்கு பெறுமதியே இல்லாமல் செய்துவிட்டது. அதை விட இக்களத்தில் உள்ள முகமூடிகள் பறுவாயில்லையே. தாங்களும் தங்கள் பாடும். ஒரு சில தமிழ் தேசிய காப்புப்புப் போட்ட முகமூடிகளைத் தவிர. :lol::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பழைய இரண்டு போறத்துக்கும் இணைப்புத் தந்தபோது குருவிக்கும் நெடுக்ஸுக்கும் தொடர்பை ஏற்படுத்த உங்கள் போன்றோர் எண்ணிய போதே சில விடயங்களை வாசித்தும் கேட்டும் தெரிந்து கொண்டோம்.

தமிழ் தேசியம் என்ற பெயரில் ஆளாளுக்கு சட்டம் இயற்றுவதுதான் தமிழ் தேசியத்துக்கு பெறுமதியே இல்லாமல் செய்துவிட்டது. அதை விட இக்களத்தில் உள்ள முகமூடிகள் பறுவாயில்லையே. தாங்களும் தங்கள் பாடும். ஒரு சில தமிழ் தேசிய காப்புப்புப் போட்ட முகமூடிகளைத் தவிர. :rolleyes::icon_idea:

அது தான் சொல்கின்றேன். நீர் சம்மதித்தால் நிர்வாகி அவர்கள், குருவிகள், மற்றும் உமது இடவிபரங்கள் ஒன்றானதா என்பதை பரிசோதித்து சொல்ல முடியும். ( ஒன்றானதா என்பதை மட்டும் சொன்னால் போதும்) ஆனால் நீர் என்ன தான் குருவிகள் இல்லை என்று சொல்லிக் கொண்டாலும், உம் எழுத்துக்களில் அது ஏதோ ஒரு வழியில் அடையாளப்படுத்தப்படுகின்றன.

எந்தவொரு கருத்து எழுதினாலும் இறுதியில், முகக்குறிகள் இட்டுக்கொள்ளும் வழக்கம் குருவிகளுக்குரியது. பந்தி பந்தியாகப் புலம்புவார். ஆனால் கருத்துக்களில் அர்த்தம் இருக்காது மட்டுமல்ல, தொடக்கமும், முடிவும் நேர் எதிர்கருத்துக்களாகவே இருக்கும்.

அதை விட தன்னைக் குறித்தான கருத்து எப்படியும் பன்மையில் இருக்கும். செய்கின்றோம், புடுங்குகின்றோம், வழிகின்றோம் என்று.

மற்றும்படி, வந்த நாள் கருத்துக்களை எடுத்துப் பாரும். அப்போதும் கூட யாரோ உமக்குச் சொன்னது போல, யாழ்களத்தின் ஆரம்பக் பிரச்சனைகளைக் கூடச் சொல்லியிருப்பீர். நிற்க, பிரச்சனைக்குரிய விவாதக் கருத்தக்கள் அகற்றப்பட்டிருந்தன. அதை இப்போது போய்ப் பார்த்த்தேன் என்று சொல்வதும் வேடிக்கை, 200,000த் தாண்டியுள்ள கருத்துக்களில் தேடிப்பார்த்தேன் என்று கதை விடுவதும் அதை விட வேடிக்கை!

அப்படியென்றால் கொஞ்சகாலமாக தெருநாய் என்று ஒருவர் எழுதியதை(இப்ப ஆளை காணவில்லை, நாய்பிடி வண்டியினுள் அகப்பட்டுக் கொண்டாரோ தெரியாது!) பார்க்கும் போதும் நெடுக்கின் ஸ்டைல் போல் உள்ளதே? அப்படியானால் தெருநாயும் குருவியின் அல்லது நெடுக்கின் மறு அவதாரம் என்று கூறுகின்றீர்களா?

யாழ் களத்திற்கு நெடுக்கு போன்று வித்தியாசமாக சிந்திக்ககூடியவர்களும் தேவை. பத்துவிதமாகச் சிந்தித்தால் தான் சிந்தனையில் வளர்ச்சி பெற முடியும். ஒற்றையடிப்பாதையில் போவது ஆபத்தானது. எனவே நெடுக்கு குருவியாகவோ, தெருநாயாகவோ, நினைத்த்ததை முடிப்பவனாகவோ அல்லது வெறும் நெடுக்காகவோ இருந்திட்டு போகட்டும். கூறப்படும் கருத்துக்களை மாத்திரம் உள்வாங்கி கருத்தாடுவோம்!

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிளை!

அவர் போகவேண்டும் என்று யாரும் கூறியதில்லை. நிர்வாக வேலைகளில் மூக்கை நுழைத்து, வாங்கிக் கட்டியதால் தான் போகப் போறேன் என்று படம் காட்டினார். ஆனால் போனமாதம் கூட ஆள் வந்து போயிருக்கின்றார் என்பதிலிருந்து கூட அவரின் வீராப்புத் தெரியும்.

நிற்க, நெடுங்காலபோவன் என்று நிற்பவர் பற்றி எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் சும்மா, ஏன் பொய் சொல்ல வேண்டும். அதுவும் அப்பொய்யை வைத்து மற்றவர்களை மட்டம் தட்டும் பாணியில் கதைப்பதும் சரியல்ல. குருவிகள் வந்து எழுதப் போகின்றேன் என்று சொன்னாலும் பிரச்சனையில்லை. ஏனென்றால் தானாகச் சவால் விட்டுப் போனது அவர் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு கிடைக்கின்ற வரைக்கும் காத்திருப்பது என்பது சரியானதல்ல. அதையும் புலிகள் தான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் பிழையானது. நாங்கள் இப்போது சும்மா தானே இருக்கின்றோம். அந்தக் காலப்பகுதியைப் பாவித்தால் என்ன?

அதில் தவறு என்று யாரும் சொன்னதில்லையே! போராட்டத்தில் மட்டுமல்ல, கலை, மதம், கலாச்சாரம் என்று அனைத்து வளர்ச்சியிலும் ஒவ்வொரு தமிழனின் பங்்களிப்பு அவசியம். வெறுமமன புலிகளைச் சுமக்க வைத்துவிட்டு, வேடிக்கை பார்ப்பது என்பது நியாயம் அல்ல.

ஈழத்தை அமைப்பது அவ்வளவு எளிதல்ல. அதனால் தான் சொல்கிறேன் முதலில் அதைக் கவனிப்போம் என்று. இன்றைக்கு பலரினதும் கருத்துப்படி புல்ம்பெயர் மக்களின் பங்களிப்பு போதாது (with all due respect to the huge support the are already giving). ஆகவே அதை முதல் தெரிவாக (priority) கொண்டுவருவோம். நாங்கள் இன்னும் செய்ய நிறைய இருக்கிற்றது என்பதை ஏஎற்றுக்கொள்கிறீர்கள் தானே? எப்போது செய்வது?

மற்றது, நெடுக்ஸ் சொன்னது போல, புதிய சொற்களை எல்லாம் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தான் அறிமுகப்படுத்தவேணும். அது தான் சொன்னேன் இப்போதைக்கு நமது தமிழ் நாட்டு நண்பர்களிடம் தமிழைவளர்க்கும் வேலையை தத்துக் கொடுத்து விடுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.