Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனுக்கு பாடம் கற்பிக்கும் சங்கரி

Featured Replies

சம்பந்தனுக்கு பாடம் கற்பிக்கும் சங்கரி
 

article_1494237980-SM.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரீ, ஒரு நாட்டை மட்டுமல்ல, அந்த நாட்டு மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் அறிக்கைகள் விட இடமளிக்க வேண்டாமென, இது இராஜதந்திர அணுகுமுறைக்கு பாதமாகிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில், சம்பந்தனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'இலங்கையின் செயற்பாடுகள், இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

இதனால் எமது அப்பாவி மக்களே கடுமையாகப் பாதிக்கப்படுவர். எமது நாட்டு மக்களுக்கு உதவ முன்வருகின்றவர்களை, பல தரப்பட்ட அறிக்கைகளை விடுத்து, அவர்களின் மன உணர்வுகளை புண்படுத்த வேண்டாம்.

எமது இனப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கக்கூடிய தகுதியுடைய நாடு இந்தியா மட்டுமே. ஆகவே, இறுதித் தீர்வு ஏற்படும்வரை அதனுடைய செயற்பாட்டில் எவரும் தலையிடக்கூடாது.
குளவிக்கூட்டுக்கு கல்லெறிந்து எவரையும் சங்கடத்துக்கு உள்ளாக்க நான் விரும்பவில்லை.

ஆகவே தான், எந்த விடயத்தையும் நியாயப்படுத்தவில்லை. ஆனால், மக்கள் உங்களிடமிருந்து எதனை எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை அறிந்திருப்பீர்களென நம்புகிறேன்' என, அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/196257/சம-பந-தன-க-க-ப-டம-கற-ப-க-க-ம-சங-கர-#sthash.cSjUYF8C.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für தலைவர் சங்கரி

  • கருத்துக்கள உறவுகள்

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. நீவிர் என் தீயில் எரிந்து நீறாகப் போகக் கடவது.

  • கருத்துக்கள உறவுகள்
தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை கட்டுப்பாட்டுடன் வைத்திருங்கள்! - சம்பந்தனுக்கு சங்கரி அறிவுரை 
[Monday 2017-05-08 19:00]
தங்கள் கூட்டணியிலுள்ள தமிழரசு கட்சி உறுப்பினர்களை கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுமாறு மிக அக்கறையுடன் கோருவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

தங்கள் கூட்டணியிலுள்ள தமிழரசு கட்சி உறுப்பினர்களை கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுமாறு மிக அக்கறையுடன் கோருவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,   

ஒரு நாட்டை மட்டுமல்ல அந்த நாட்டு மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் அவர்கள் அறிக்கைகள் விட முடியாது. சிந்தனையற்ற செயற்பாடுகள், அறிக்கைகள் போன்றவை கூடுதலாக தமிழரசு கட்சி உறுப்பினர்களிடமிருந்து வெளிவருவது, இந்தியாவுடனான நட்பையும் நல்லெண்ணத்தையும் கடுமையாக பாதிக்கின்றது. இத்தகைய உறுப்பினர்களுடைய நடவடிக்கைகளை கண்டும் காணாமலும் அமைதியாகவும் இருப்பதே ஏனைய உறுப்பினர்கள் செய்யும் தவறாகும். சில சமயம் அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கலாம்.

நான் பகிரங்கமாக வெளிப்படுத்தாத, சில காரணங்களால், இலங்கையில் செயற்படும் இரு நாடுகளுக்கிடையிலுள்ள முரண்பட்ட செயல்கள், இரண்டு நாடுகளுக்கிடையில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில், விரிசல்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம். இதனால் எமது அப்பாவி மக்களே கடுமையாக பாதிக்கப்படுவர். எமது சிந்தனையற்ற உரைகளால் அப்படி நடப்பதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. அரசியலில் மிகவும் அனுபவமுடையவரும், இக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் நீங்கள் இந்தியாவுடன் படிப்படியாக குறைந்துவரும் நட்புறவையும், நல்லெண்ணத்தையும் வளர்த்தெடுக்க தவறி விட்டீர்கள்.

முதலாவதாக மிகமுக்கியமாக அறியவேண்டியது யாதெனில் இந்தியா எமது அயல்நாடு என்பதையும், எமக்கு இன்னல்கள் ஏற்படும் போதெல்லாம் எமக்கு அத்தியாவசியமாக தேவைப்படும், வைத்தியக்குழு, உணவு போன்றவற்றுடன் முதன்முதலில் வந்திறங்குவது இந்தியாவே. குளவிக்கூட்டுக்கு கல்லெறிந்து எவரையும் சங்கடத்திற்குள்ளாக்க நான் விரும்பவில்லை. ஆகவேதான் எந்த விடயத்தையும் நியாயப்படுத்தவில்லை. ஆனால் மக்கள் உங்களிடமிருந்து எதனை எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை அறிந்திருப்பீர்களென நம்புகிறேன் என ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார்.http://www.seithy.com/breifNews.php?newsID=182004&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Paanch said:

Bildergebnis für தலைவர் சங்கரி

படத்திலை இருக்கிறதுகள் ஒண்டுக்கொண்டு கடிபட்டு செத்தாவது.......

ஈழத்தமிழ்ச்சனம் சகல உரிமையோடையும் சந்தோசமாயும் வாழவேணும் எண்டு கடவுளை பிரார்த்திக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரியே.... சம்பந்தனுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய நிலையில்..
தமிழரசு கட்சியின்  நிலைமை மோசமாகி விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.