Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிநபரை பலிக்கடாவாக்கி தப்ப முயலும் கூட்டமைப்பு!?

Featured Replies

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சம்பந்தனுக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த விவகாரத்தை குழந்தைகளுக்கு நிலாக்காட்டி சோறு ஊட்டுவது போல திசைதிருப்ப முற்பட்டிருக்கிறது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. அந்த விவகாரத்தை மூடிமறைப்பதற்கு தங்களாலான விசுவாத்தைக் காட்டவும் முற்பட்டிருக்கின்றன யாழ்ப்பாணத்து பத்திரிகைகள் சிலவும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் திரண்டிருந்தவர்கள் ஏழு ஆண்டுகளைக் கடந்தும் நீதிக்காக அழுது அரற்றி கண்ணீர்வற்றிப் போன உறவுகள் தான். நினைவேந்தல் நிகழ்வுக்காக ஒன்றுகூடிய மக்கள் சம்பந்தன் தொடர்பில் எழுப்பிய கூச்சலும் விக்னேவஸ்வரின் காலில் விழுந்து சம்பந்தனை வெளியேற்றுமாறு மன்றாடிய சம்பவங்களும் சில இணைய ஊடகங்களில் மட்டும் வெளிவந்திருக்கின்றன.

ஆனால் அந்தச் சம்பவங்களை ஒரு ஊடகவியலாளரின் தலையில் கட்டி தப்பித்துக்கொள்வதற்கு முண்டியத்து அறிக்கைவிட்டிருக்கின்றார் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன்.

நினைவேந்தல் நிகழ்வின் போது மக்கள் மத்தியில் தனது கருத்தினைத் தெரிவித்துக்கொண்டிருந்திருக்கிறார் இரா.சம்பந்தன், அந்த நேரத்தில் அவர் தெரிவித்துக்கொண்டிருந்த கருத்துக்கள் போர் முடிவுற்ற பின்னர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு முரண்பாடானதாக இருந்தமையால், அங்கு அவ்வாறு தெரிவித்தீர்களே ஐயா இங்கு இவ்வாறு தெரிவிப்பது ஏன்? என்ற சாரப்பட ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியிருக்கின்றார். இதுதான் நடந்தது.
இலங்கையின் மூத்த அரசியல்வாதியாக சொல்லப்படுகின்ற இரா.சம்பந்தன் குறித்த கேள்விக்கான பதிலை வழங்கியிருக்கலாம், அல்லது அது பொருத்தமில்லை எனில் இது உகந்த இடம் இல்லை எனக் கூறிவிட்டு அந்த நிகழ்வினை நிறைவுசெய்திருக்கலாம்.

இங்கே முன்வைக்கப்படுகின்ற கேள்வி?

சம்பந்தனுக்கு எதிராக கோசம் எழுப்பிய மக்கள் நாடகக் கொம்பனிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களா?, ஒரு ஊடகவியலாளர் தன் நிலையில் சரியெனப்பட்டதை அந்த இடத்தில் கேட்டிருக்கிறார். அந்தக் கேள்வியைக் கடந்து செல்வதற்கு சம்பந்தன் தரப்பால் ஏன் முடியவில்லை. அவர் ஒரு கேள்விதானே கேட்டார்.. அவர் தான் அங்கிருந்த மக்களை வலியுறுத்தினாரா?

ஒரு ஊடகவியலாளர்தான் குழப்பத்தை ஏற்படுத்தினார் எனத் தெரிவித்து அங்கு திரண்டிருந்த அனைத்து மக்களது உணர்வுகளையும் மூடிமறைப்பதற்கு முற்படுவதை எந்த வகையறாக்குள் அடக்குவது?

அந்த மக்களின் குரல்களின் வலியை, அவற்றின் வலிமையை முள்ளிவாய்க்கால் என்கிற பேரவலம் நிகழ்ந்தேறிய மண்ணிலிருந்து அவர்கள் எழுப்பிய ஓலத்தை அரசியல்ரீதியாக கையாண்டு தங்கள் மீதான சேறுகளைக் கழுவுவதற்கு ஒரு ஊடகவியலாளர் மீது பழிபோட்டுத் தப்பித்துக்கொள்வதை எப்படி ஏற்றுக்கொள்வது.
அங்கு கூச்சல் இட்டுக் கதறியவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஒருவரை தங்கள் குடும்பத்தில் இருந்து பறிகொடுத்தவர்கள் தான். தந்தையை, தாயை, பிள்ளைகளை என அவர்களின் வலிகளின் தார்ப்பரியம் புரியுமா இவர்களுக்கு? அங்கு சம்பந்தனுக்கு எதிராக கொதித்த மக்கள் தங்கள் குடும்பங்களிலிருந்து பறிகொடுத்த உறவுகளின் விபரங்களை பட்டியலிடுவதற்கு ஏற்பாடு செய்தால்? சம்பந்தனோ சுமந்திரனோ உரிய பதில் வழங்குவார்களா?

http://tamilleader.org/?p=1474

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சம்முக்கு சும் வக்காலத்து வாங்குவதை இலையான்கூட விரும்பவில்லை. :shocked: :grin:

டெல்லி அதிகாரமாயைத்துக்கும்  கொழும்பு  இனவாதா அதிகார மையத்துக்கும் வாலாட்டிக்கொண்டு இருந்தால் தாங்கள் இங்கு தொடர் அதிகாரம் பரம்பரையாக செய்யலாம் எனும் கனவு தகர்ந்துபோயிருக்கிறது தயாபரன் ஒரு அரசியல் கட்சி தலைவர் வாகனத்தில் வந்து போனது பிழை சைக்கிளில் வந்து கேள்வி கேட்டு இருந்தால் அது நியாயம் எனும் ரீதியில் சுமத்திரன் இங்கு வாந்தி எடுக்குது .

இந்த இடத்தில் சங்கரி வந்து இருந்தால் கூட சனம் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு இருக்காது ஆனால் அது செய்வம் இது செய்வம் என்று சவுண்டு விட்டு பதவிக்கு வந்த பசுத்தோல் போர்த்திய மலைப்பாம்புகள் இப்ப இருக்கும் சொத்து பத்துக்களை கணக்கில் போட்டாலே உண்மை வெளிச்சத்துக்கு வந்து விடும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.