Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

  • தொடங்கியவர்

:lol::o:o :P :P :P

சரி சரி கிண்டல் பண்ணியது போதும் சில சமயங்களில் துடுப்பாட்டத்தில் இப்படியான முடிவுகள் வருவது வழக்கம் தான். நாளைய போட்டியில் எங்கட கங்காருக் குட்டிகள் இங்கிலாந்து அணியுடன் மோதுகின்றன ஒப்பசிசன் குறூப் மெம்பர்மார் எல்லாரும் தவறாமல் ஆட்டத்தை பாருங்கோ கில்லி, றிக்கி சிக்ஸ் அடிக்கும் போது ரென்ஷனாகாமல் அமைதியாக இருந்து பாருங்கோ. :mellow:

  • Replies 1k
  • Views 70.5k
  • Created
  • Last Reply

சரி சரி கிண்டல் பண்ணியது போதும் சில சமயங்களில் துடுப்பாட்டத்தில் இப்படியான முடிவுகள் வருவது வழக்கம் தான். நாளைய போட்டியில் எங்கட கங்காருக் குட்டிகள் இங்கிலாந்து அணியுடன் மோதுகின்றன ஒப்பசிசன் குறூப் மெம்பர்மார் எல்லாரும் தவறாமல் ஆட்டத்தை பாருங்கோ கில்லி, றிக்கி சிக்ஸ் அடிக்கும் போது ரென்ஷனாகாமல் அமைதியாக இருந்து பாருங்கோ. :mellow:

ஒசி ஓசி ஓய் ஓய் ஓய்

ஓசி ஓசி ஓய் ஓய் ஓய்கில்லி கில்லி கில்லி

பங்களாதேஷ் வெற்றிபெற்றுட்டாம் அதற்கு காரணம் கோச் நம்ம ஆளு

மகன் சோதனை பாஸ் பண்ணிவிட்டால் கணவன் மனைவியிடம் சொல்வது.. அது என்ரை பிள்ளையெல்லோ

பெயில் ஆகிவிட்டால் மனைவியைப்பார்த்து --உன்ரை பிள்ளை உன்னைப் போலைதானே இருக்கும்..

பிதாவே.. இவர்களை மன்னியும்

:P :P

ஒசி ஓசி ஓய் ஓய் ஓய்

ஓசி ஓசி ஓய் ஓய் ஓய்கில்லி கில்லி கில்லி

:P :P :P

நேற்றைய ஆட்டத்தில் பங்களதேசம் தென்னாபிரிக்காவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

251 ஓட்டங்களை வெற்றியிலக்காக் கொண்டு களமிறங்கிய தென்னாபிரிக்கா தனது சகல விக்கட்டுக்களையும் 48.4 ஓவர்களில் இழந்து 184 ஓட்டங்களை மட்டுமே பெற்று வங்கப் புலிகளிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

H Gibbs 56 ஒட்டங்களை 59பந்துகளில் பெற்றார். இவரைத் தவிர தென்னாபிரிக்க அணியில் யாரும் அரைச்சதத்தை தாண்டாதது குறிப்பிடத் தக்கது.

ஜானா

தென்னாபிரிக்கா.. ஆ.. ஆ. ஆ.. ஆ.. ஆ.. ஆ...ஆ

தென்னாபிரிகாவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .அப்படியே அவுஸ்திரேலியாவுக்கும் எனது அட்வான்ஸ் அனுதாபத்தை தெரிவிதுக்கொள்கிறேன்

தென்னாபிரிக்கா.. ஆ.. ஆ. ஆ.. ஆ.. ஆ.. ஆ...ஆ

தென்னாபிரிகாவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .அப்படியே அவுஸ்திரேலியாவுக்கும் எனது அட்வான்ஸ் அனுதாபத்தை தெரிவிதுக்கொள்கிறேன்

அப்படிப் போடுங்க மறுத்தான்..

:P :P ..

இங்கிலாந்துடன் 2 ரன் வித்தியாசத்தில் இலங்கை பெற்ற வெற்றியில் சர்ச்சை - இங்கிலாந்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடுவர்கள் தவறு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-8 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில், இங்கிலாந்து அணி வெற்றியின் விளிம்பு வரை வந்து கோட்டை விட்டது. கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன் தேவை என்ற நிலையில், இங்கிலாந்து வீரர் ரவி போபரா போல்டு ஆனார். திரிலிங்கான இந்த ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்த ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடுவர்கள் தவறு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டத்தின் 26-வது ஓவரை இலங்கை அணியின் ஆல்-ரவுண்டர் ஜெயசூர்யா வீசினார். இந்த ஓவரில் அவர் 5 பந்துகளை மட்டுமே வீசியிருப்பது இப்போது தெரிய வந்துள்ளது. இந்த ஒரு பந்து வீசப்பட்டு, அதில் ஏதாவது ரன் எடுத்து இருந்தால், ஆட்டத்தின் முடிவு கூட மாறியிருக்க வாய்ப்பிருக்கிறது.

கிரிக்கெட்டில் இது போன்ற தவறு நடந்து இருப்பது இதுவே முதல் முறையாகும். பீல்டிங் நடுவர்கள், போட்டி நடுவர், 3-வது நடுவர், மாற்று நடுவர், ஸ்கோரர் உள்பட யாரும் இந்த தவறை உடனடியாக கண்டுபிடிக்காதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஓவரில், இங்கிலாந்து வீரர் இயான்பெல்லுக்கு (47 ரன்) ரன்-அவுட் கோரப்பட்டது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் 3-வது நடுவரின் முடிவுக்கு விடப்பட்டது. இதில் இயான் பெல் ரன்-அவுட் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ரன்-அவுட் பிரச்சினையில், ஒரு பந்து குறைவாக வீசப்பட்டு இருக்கிறது. `வழக்கமாக டி.வி.யை பார்த்து ஸ்கோர் எழுதுபவர்கள் இது போன்ற தவறு நடந்து விட்டால் உடனடியாக சுட்டிகாட்டிவிடுவார்கள். ஆனால் அவர்கள் அப்படி எதுவும் சொல்லவில்லை' என்று போட்டி நடுவர் ஜெப்குரோவ் தெரிவித்தார்.

http://www.lankasrisports.com/index.php?su...amp;ucat=4&

Edited by மறுத்தான்

  • தொடங்கியவர்

இங்கிலாந்துடன் 2 ரன் வித்தியாசத்தில் இலங்கை பெற்ற வெற்றியில் சர்ச்சை - இங்கிலாந்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடுவர்கள் தவறு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-8 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில், இங்கிலாந்து அணி வெற்றியின் விளிம்பு வரை வந்து கோட்டை விட்டது. கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன் தேவை என்ற நிலையில், இங்கிலாந்து வீரர் ரவி போபரா போல்டு ஆனார். திரிலிங்கான இந்த ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்த ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடுவர்கள் தவறு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டத்தின் 26-வது ஓவரை இலங்கை அணியின் ஆல்-ரவுண்டர் ஜெயசூர்யா வீசினார். இந்த ஓவரில் அவர் 5 பந்துகளை மட்டுமே வீசியிருப்பது இப்போது தெரிய வந்துள்ளது. இந்த ஒரு பந்து வீசப்பட்டு, அதில் ஏதாவது ரன் எடுத்து இருந்தால், ஆட்டத்தின் முடிவு கூட மாறியிருக்க வாய்ப்பிருக்கிறது.

கிரிக்கெட்டில் இது போன்ற தவறு நடந்து இருப்பது இதுவே முதல் முறையாகும். பீல்டிங் நடுவர்கள், போட்டி நடுவர், 3-வது நடுவர், மாற்று நடுவர், ஸ்கோரர் உள்பட யாரும் இந்த தவறை உடனடியாக கண்டுபிடிக்காதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஓவரில், இங்கிலாந்து வீரர் இயான்பெல்லுக்கு (47 ரன்) ரன்-அவுட் கோரப்பட்டது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் 3-வது நடுவரின் முடிவுக்கு விடப்பட்டது. இதில் இயான் பெல் ரன்-அவுட் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ரன்-அவுட் பிரச்சினையில், ஒரு பந்து குறைவாக வீசப்பட்டு இருக்கிறது. `வழக்கமாக டி.வி.யை பார்த்து ஸ்கோர் எழுதுபவர்கள் இது போன்ற தவறு நடந்து விட்டால் உடனடியாக சுட்டிகாட்டிவிடுவார்கள். ஆனால் அவர்கள் அப்படி எதுவும் சொல்லவில்லை' என்று போட்டி நடுவர் ஜெப்குரோவ் தெரிவித்தார்.

http://www.lankasrisports.com/index.php?su...amp;ucat=4&

இலங்கை போன்ற பலமற்ற அணிகள் இப்படி தான் அதிஸ்டவசமாக புள்ளிகளை பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகின்றன. அன்றைய போட்டியில் இறுதி ஓவரில் 12 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்று இருந்த நிலையில் இங்கிலாந்து அணியினர் 9 ஓட்டங்கள் மட்டுமே பெற்றனர் ஆனால் அன்று இலகுவாக 12 ஓட்டங்களை பெற்றிருக்க முடியும் கடைசி பந்து வீச்சில் 3 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்று இருந்தது அந்த சமயத்தில் அந்த கடைசி பந்தை வீசுவதற்கு வந்த பந்து வீச்சாளர் டில்கார பெர்னாண்டோ ஓடி வந்து பந்து வீசுவது போல அக்சன் எடுத்து விட்டு பந்தை வீசாமல் துடுப்பாட்ட வீரனை ஏமாற்றி விட்டார் பின்னர் சற்று நேரத்தின் பின் தான் அந்த இறுதிப்பந்தை வீசினார் இது கையால ஆகாதவன் செய்கின்ற ஒரு கேவலமான செயல் தான் இந்த செயலை ரெக்னிக் என்றோ அல்லது மதிநுட்பமான செயல் என்றோ சொல்ல முடியாது அப்படிப்பட்ட ஒரு ரென்ஷனான வேளையில் துடுப்பாட்ட வீரனை ஏமாற்றி அவரின் மனநிலையை குளப்பி விக்கெற்றை கைப்பற்றுவது என்பது நேர்மையான முறையல்ல இதை கிளெவர் போலிங் என்று சொல்பவர்கள், ரெக்னிக் போலிங் என்று சொல்பவர்கள் தங்களுடைய இயலாமையை ஒத்துக்கொள்கின்றார்கள் என்று தான் அர்த்தம். அன்று தவற விடப்பட்ட அந்த ஒரு பந்து வீசப்பட்டிருந்தால் அது நிச்சயம் இங்கிலாந்து அணியினர் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. நடுவர்கள் விடுகின்ற சிறிய தவறுகள் ஆட்டங்களில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதுண்டு அந்த போட்டியிலும் அது தான் நடந்துள்ளது நடுவருக்கு அபராதம் அறிவித்திருக்கின்றார்கள் இது இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட இழப்பினை ஈடுசெய்யப்போவதில்லை.

2003 உலக கிண்ண சுப்பர் 6 போட்டியில் தென்னாபிரிக்கா - இலங்கை அணிகளுக்கிடையே நடைபெற்ற அரை இறுதிப் போட்டிக்கு செல்லும் அணியினை தெரிவு செய்யும் மிக முக்கியமான ஆட்டம் மழை வந்து குழம்பிய காரணத்தினால் தான் இலங்கை அணி அன்று அரை இறுதிப் போட்டிக்கு தெரிவானது என்பது எல்லோரும் அறிந்த விடயம் அது போல தான் இந்த தடவை இங்கிலாந்து அணியுடன் அதிஷ்டவசமாக பெற்ற வெற்றி மற்றும் நேற்று தென்னாபிரிக்காவை பங்களாதேஷ் வென்றது இவை தான் இலங்கை அணி அரை இறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

Edited by யாழ்வினோ

இலங்கை போன்ற பலமற்ற அணிகள் இப்படி தான் அதிஸ்டவசமாக புள்ளிகளை பெற்று ..

ஏன் வினோ- இது சரியா இருக்குமா?

"இலங்கை" சவாலான அணிதான்! - கடந்த சில காலமாய் - இல்லையா?

மத்தும்படி - அவங்க வின் பண்ணினா என்ன - தோத்தா - என்ன..............

சும்மா.... திறமைக்கு - மரியாதை!

எது என்னமோ- யார்..... கப் எடுத்தாலும் .....

இந்த ...வேர்ல்ட் கப் போட்டில - பெரிய சாதனை - பங்களாதேசம் தான்!

அவுங்க - அரையிறுதிக்கு முன்னேறமுடியாம போயிடாலும்.... :lol:

இன்றைய ஆட்டம் தென்னாபிரிக்காவுக்கும் தெற்காசியா நாடு ஒன்றுக்கும் இடையே தான் நடைபெறப்போகின்றது இந்த போட்டியில் தென்னாபிரிக்கா அமோக வெற்றியீட்டுவதன் மூலம் சுப்பர் 8 சுற்றுப் போட்டி புள்ளி அடிப்படையில் தென்னாபிரிக்கா இரண்டாவது இடத்துக்கு வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. :(

நான் என்னுடைய தனிப்பட்ட கருத்தை தான் எழுதுகிறேன் அது சரியா அல்லது தவறா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் தானே ஏன் இப்படி பொறுமையில்லாமல் உணர்ச்சி வசப்படுகின்றீர்கள், ரென்ஷனாகின்றீர்கள் கூல் டவுண் கூல் டவுண் :(

:lol::(:o:o:o:(

  • தொடங்கியவர்

வங்காளதேசத்திடம் தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி.

9-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர்-8 சுற்றின் 10-வது ஆட்டம் கயானாவில் உள்ள ஜார்ஜ் டவுனில் இன்று நடந்தது.

இதில் பி பிரிவில் 2-வது இடத்தை பிடித்த வங்காளதேசம், ஏ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இதனால் வங்காளதேசம் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 251 ரன் என்ற நிலையில் இருந்தது.

252 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது. தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வங்காளதேசத்தின் அபாரமான பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். கிப்ஸ் மட்டுமே தாக்குபிடித்து விளையாடினார்.ஆட்டம் இழக்காமல் 56 ரன்கள் எடுத்தார்.

தென்ஆப்பிரிக்கா 8 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 10 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்து. இதில் வங்காளதேசம் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

-Lankasri-

  • தொடங்கியவர்

இன்றைய ஆட்டத்தில் பங்குபற்றும் அவுஸ்ரேலியா அணி வீரர்கள்.

mastheadlogodp5.jpg

1 Adam Gilchrist (wk), 2 Matthew Hayden, 3 Ricky Ponting (capt), 4 Michael Clarke, 5 Brad Hodge, 6 Michael Hussey, 7 Andrew Symonds, 8 Brad Hogg, 9 Nathan Bracken, 10 Shaun Tait, 11 Glenn McGrath.

இன்றைய ஆட்டத்தில் பங்குபற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள்.

1 Andrew Strauss, 2 Michael Vaughan (capt), 3 Ian Bell, 4 Kevin Pietersen, 5 Paul Collingwood, 6 Andrew Flintoff, 7 Ravi Bopara, 8 Paul Nixon (wk), 9 Sajid Mahmood, 10 James Anderson, 11 Monty Panesar.

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சை குறைவாக மதிப்பிட்டதன் விளைவு தென்னாபிரிக்காவின் தோல்வி..!

பெரிய அணிகள் என்று உச்சியில் ஏற்றுவதால் எதிரணியின் திறமைகளை சரிவர மதிப்பிட தவறுவதால் ஏற்படும் தோல்விகள்..!

பங்களாதேஷ் எல்லா பலமான அணிகளையும் மண்கவ்வ வைத்த அணி. வளர்ந்து வரும் திறமையான அணி..!

அவுஸ்திரேலிய அணி கிறிக்கெட்டில் கிழட்டு அணி..! அவுஸ்திரேலியா கோப்பைக்கு ஆசைப்பட்டு அணியில் இளம் வீரர்களுக்கு கூட இடமளிக்கக் கூட மனமில்லாத ஒரு வரட்டுக் கெளரவம் பிடித்த அணி. ஏற்கனவே இங்கிலாந்திடம் முக்கோணச் சுற்றில் கோப்பையை பறிகொடுத்த அவுஸ்திரேலியா இன்றைய போட்டியில் கூட அதிர்சி வைத்தியம் பெறலாம்..! ஆனால் இங்கிலாந்து பீல்டிங்கிலும் பற்றிங்கிலும் ஸ்ரெடியாக இருக்கும் என்றால் அது சாத்தியம்..!

------------

இந்தியர்களின் பார்வையில் சிறீலங்கா ஒரு சொத்தை அணியாக இருந்தது..! இன்று அது உலகக் கிண்ணத்தை வென்ற அணி மட்டுமன்றி எதிரணிக்கு இறுதிவரை அச்சுறுத்தல் வழங்கும் அளவுக்கு பலமான அணியாக இருக்கின்றது..! அதுதான் கிரிக்கெட்..! :lol: :P

கைக்கெட்டிய தூரத்தில் உலகக் கிண்ணம்

இலங்கை கிரிக்கெட் அணி `சுப்ப -8' போட்டியில் தற்போது சிறப்பாக விளையாடி வருவதினால், இவ்வணி இம்முறை உலக கிண்ணத்தை கைப்பற்றும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ், முன்னாள் விக்கெட் காப்பாளரான கிர்மானி, பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரான அப்துல் காதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணி ஆரம்ப சுற்று ஆட்டங்களில், பங்களாதேஷ், பெர்முடா, இந்திய அணிகளை வெற்றிபெற்று, `சுப்ப - 8' ஆட்டத்துக்கு பி - பிரிவில், முதல் அணியாகத் தெரிவு செய்யப்பட்டது. `சுப்ப - 8' ஆட்டத்தில் இலங்கை அணி 1 ஆவது போட்டியில் தென். ஆபிரிக்க அணியிடம் இறுதி நேரத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தினால் தோல்வியடைந்தது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ஓட்டங்களையே பெற்றது. இப்போட்டியில் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாகத் துடுப்பெடுத்தாடவில்லை என்றே கூற வேண்டும்.

பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களான டில்சானும் ஆர்னோல்ட்டும் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி முறையே 58, 50 ஓட்டங்களைப் பெற்றமையினால் தான் இலங்கை அணி 200 ஓட்டங்களுக்கு மேல் எடுக்க முடிந்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணியும், இலங்கை வீரர்களின் சிறப்பான பந்து வீச்சினால் தடுமாற்றத்துடனேயே ஓட்டங்களை எடுத்தவண்ணம் இருந்தது. இவ்வணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஸ்மித்தும் வீரர் கிப்ஸும் மட்டுமே முறையே 59, 86 ஓட்டங்களைப் பெற்றனர்.

இவ்வணி, ஒரு கட்டத்தில் 44.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில், தென் ஆபிரிக்க அணியின் வெற்றி இலகுவாகிவிட்டது என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.

வெற்றிக்கு 4 ஓட்டங்களை மட்டுமே எடுக்க வேண்டிய இவ்வணியினர் இலங்கை வீரர் மலிங்க பண்டாரவின் அபாரப் பந்துவீச்சினால் அடுத்தடுத்து, 4 விக்கெட்டுகளை ஓட்டங்கள் ஏதும் எடுக்காத நிலையில் இழந்தனர். 4 பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர் மலிங்க உலக சாதனை படைத்தார். அப்போது தென் ஆபிரிக்க அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது.

வெற்றி தமக்குத்தான் என்ற பூரிப்பில் திகழ்ந்த இலங்கை வீரர்கள், இறுதி நேரத்தில் களத்தடுப்பில் முக்கிய கவனம் செலுத்தாததினால் வீரர் மலிங்க வீசிய பந்தை, வீரர் பீற்றசன் ஓங்கி அடித்து 4 ஓட்டங்களைப் பெற்றதினால், தென். ஆபிரிக்க அணி 1 விக்கெட்டினால் வெற்றிபெற்றது.

இத்தோல்வியினால், இலங்கை அணி வீரர்கள் சோர்வடைந்துவிடவில்லை. இவர்கள் 2 ஆவது போட்டியில் மே. இந்தியத்தீவு அணியை சந்தித்தனர். கயானா தீவு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை கண்டுகழிப்பதற்காக மே.இந்தியத்தீவு ரசிகர்கள் தமது அணி, தமது மண்ணில் இலங்கை வீரர்களை நிச்சயம் தோற்கடிப்பார்கள் என்ற நம்பிக்கையில், விளையாட்டு அரங்கின் இருப்பிடங்களை முழுமையாகவே தமதாக்கிக் கொண்டனர். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இப்போட்டியில் தான் விளையாட்டு அரங்கு ரசிகர்களினால் நிறைந்து வழிந்ததாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சிறப்பாகவும் வேகமாகவும் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றது. அதிரடி வீரர் என்ற சிறப்புப் பெயரை 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் பெற்ற சனத் ஜெயசூரியா, இன்னமும் நான் அதிரடி வீரராகவே திகழ்கின்றேன் என்பதை நிரூபிக்கும் விதத்தில் இப்போட்டியில் 115 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகளும் 4 சிக்சரும் அடங்கும். இது அவரது ஒருநாள் போட்டியில் பெற்ற 25 ஆவது சதமாகும்.

இப்போட்டியில் தான், இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன, தான் மீண்டும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடும் நிலைக்குத் திரும்பிவிட்டேன், என்பதை அனைவரும் அறியும் விதத்தில் 82 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இதில் அவர், ஒருநாள் போட்டியில் 36 ஆவது அரைச் சதத்தைப் பெற்ற பெருமையையும் சம்பாதித்துக் கொண்டார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மே.இந்தியத்தீவு அணி, இலங்கை வீரர்களின் அபாரப் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாது. 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களை மட்டுமே பெற்று 113 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.

தமது சொந்த மண்ணில் உலகக் கிண்ணப் போட்டி நடைபெறுவதினால் தமது அணி அரைஇறுதிப் போட்டிக்கு தெரிவாகும் என்ற ரசிகர்களின் கனவு, இத்தோல்வியினால் பகல் கனவாகிப் போனது மட்டுமல்லாது, மே.இந்தியத்தீவு அணியின் தலைவர் லாராவின் பதவிக்கும் ஆபத்து ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்தை இம்முறை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக, இலங்கை அணியும் திகழ்கின்றது என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில், இலங்கை அணி, இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றதன் மூலம் புலனாகிவிட்டது.

இலங்கை, இங்கிலாந்து அணிகளிடையே நடைபெற்ற போட்டி ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக இருந்ததுடன், இரு அணிகளின் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்றும் கூறலாம்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இங்கிலாந்து வீரர்களின் சிறந்த பந்து வீச்சினாலும் சிறந்த பந்து தடுப்பினாலும் இலங்கை வீரர்களின் அதிரடி துடுப்பாட்டம், சோகை இழந்தே காணப்பட்டது.

அதிரடி மன்னன் சனத் ஜெயசூரியா 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தும் இலங்கை வீரர்களின் ஓட்ட வேகம், ஆமை நகர்வது போலவே இருந்தது. இதற்கு உதாரணமாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உப்புள்தரங்கவின் துடுப்பாட்டத்தை கூறலாம். இவர் 80 பந்துகளை சந்தித்த பின்புதான், 1 ஆவது பவுண்டரியை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இவரும் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தனாவின் நிதானமான துடுப்பாட்டத்தினால் தான் இலங்கை அணி 235 ஓட்டங்களைப் பெறும் நிலை ஏற்பட்டது. உப்புள்தரங்க 62 ஓட்டங்களுடனும் மஹேல 56 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து அணியில், அணித் தலைவர் வோகன், பெல், பீற்றர்சன், கொலிங்வூட், பிளின்டோப் உட்பட சிறந்த பல துடுப்பாட்ட வீரர்கள் இருப்பதினால், இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை (235) இவர்கள் விரைவாகப் பெற்று, போட்டியில் வெற்றிபெறக்கூடுமென்றே பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், இலங்கை வீரர்களின் சிறந்த பந்துவீச்சு, இங்கிலாந்து அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களை திணற வைத்துவிட்டது.

இங்கிலாந்து அணி முதல் 6 விக்கெட்டுகளையும் 133 ஓட்டங்களுக்குள் இழந்துவிட்டது. ஆனாலும், இதன் பின்பு துடுப்பெடுத்தாடிய, ரவிபோபரா, நிக்சன் சோடிகளின் சாமர்த்தியமான துடுப்பாட்டம், வெற்றிதோல்வி எவர் பக்கம் என்பதை கேள்விக்குறியாக்கியது. ஆனாலும், டில்கார பெர்னாண்டோ, மலிங்க பண்டார ஆகிய இரு வீரர்களின் சிறந்த பந்துவீச்சு, இறுதிநேரத்தில் இலங்கைக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

48 ஆவது ஓவரில் வீரர் நிக்ஷன் மலிங்க பண்டாரவின் பந்துவீச்சுக்கு மஹேல ஜெயவர்தனவிடம் பிடிகொடுத்து 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும், வெற்றி இங்கிலாந்து அணியின் பக்கமே இருந்தது. 50 ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் இங்கிலாந்து அணி 3 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி நிச்சயம் என்ற நிலை இறுதியில் உருவானது. இறுதிப்பந்தை எதிர்கொள்ளும் வீரர் போபரா அப்போது 52 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இறுதிப்பந்தை வீசிய டில்கார பெர்னாண்டோ, "யேசுபிரானை" தியானித்தபடி வீசிய பந்து, விக்கெட்டை வீழ்த்தியதினால், இலங்கை அணி 2 மேலதிக ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 233 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இங்கிலாந்து அணியுடனான வெற்றியின் மூலம், இலங்கை அணிக்கு அரை இறுதிச்சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் புள்ளிகள் அடிப்படையில், அவுஸ்திரேலிய அணி 1 ஆம் இடத்திலும் இலங்கை அணி 2 ஆம் இடத்திலும் நியூஸிலாந்து அணி 3 ஆம் இடத்திலும் தென் ஆபிரிக்க அணி 4 ஆம் இடத்திலும் இருக்கின்றன.

இலங்கை அணி இன்னும் 3 போட்டிகளில் பங்குபற்ற வேண்டும். 12 ஆம் திகதி நியூஸிலாந்து அணியுடனும் 16 ஆம் திகதி அவுஸ்திரேலிய அணியுடனும் 18 ஆம் திகதி அயர்லாந்து அணியுடனும் போட்டியிட வேண்டும். இவற்றில் நியூஸிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுடனான ஆட்டங்கள் இலங்கை அணிக்கு பலத்த பலப்பரீட்சையாகவே இருக்குமென்று தெரிவிக்கப்படுகின்றது. இவ்விரு போட்டிகளிலும் இலங்கை வீரர்களின் பந்து தடுப்புமுறை சிறப்பாக இருந்தால், வெற்றி பெறலாம் என்று தெரிவிக்கப்படுவதுடன், வீரர் அத்தப்பத்துவையும் அணியில் இணைத்துக் கொண்டால், இலங்கை அணியின் பலம் மேலும் அதிகரிக்கக்கூடுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில், அர்ஜுன ரணதுங்கவின் தலைமையிலான இலங்கை அணி, முழு உலகமுமே ஆச்சரியப்படும் வகையில், இறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்து, முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

தற்போதைய இலங்கை அணியும் உலகக் கிண்ணப் போட்டியில் பல சாதனைகளைப் படைத்த வண்ணம் முன்னேறி வருகின்றது. இவ்வாறான பலம்வாய்ந்த இலங்கை அணி இம்முறை உலகக் கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதே இலங்கை ரசிகர்களின் கனவாகும். கைக்கு எட்டிய தூரத்திலேயே உலகக் கிண்ணம் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். தட்டிக்கொள்ளுமா இலங்கை அணி?

thinakkural.com

யாழ் வினோ.. சொத்தையான சாக்கு போக்குகள் கண்டுபிடித்துகொண்டே வருகிறார்.. பாவம்..

தென்னாபிரிக்கா மகத்தான வெற்றி பெறும் என்றார். இப்போது கட்சி மாறி..

நடடா ராஜா.. நடடா..

:P :lol: :P

சுப்ப -8 இல் இன்றைய போட்டிகள்

`சுப்ப-8' இல் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகள் சென்.பீற்றர்ஸ் விளையாட்டு அரங்கில் போட்டியிடுகின்றன. இவ்விரு அணிகளில் அவுஸ்திரேலிய அணியே இதுவரை எந்த ஒரு போட்டிகளிலும் தோல்வி அடையாத நிலையில் முதலாம் இடத்தில் இருந்து வருகிறது.

இங்கிலாந்து அணி ஆரம்பச் சுற்று ஆட்டங்களில் நியூசிலாந்து அணியிடமும் `சுப்ப -8' ஆட்டங்களில் இலங்கை அணியிடமும் தோல்வி அடைந்துள்ளது. ஆனாலும், இவ் இரு அணிகளுக்குமிடையில் போட்டிகள் நடைபெறும் போது எதிர்பாராத முடிவுகள் நிகழ்வது வழக்கம். இவ் இரு அணிகளுக்குமிடையில் இறுதியாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு நாள் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனால், இவ்விரு அணிகளுக்குமிடையில் இன்று நடைபெற விருக்கும் போட்டியிலும் எதிர்பாராத முடிவுகள் நிகழக் கூடுமென்று அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

thinakkural.com

யாழ் வினோ.. சொத்தையான சாக்கு போக்குகள் கண்டுபிடித்துகொண்டே வருகிறார்.. பாவம்..

தென்னாபிரிக்கா மகத்தான வெற்றி பெறும் என்றார். இப்போது கட்சி மாறி..

நடடா ராஜா.. நடடா..

:P :o :P

கருத்து பகிர்வுதானே ......+ பெற்!

அவர் சொன்னமாதிரி - தென்னாபிரிக்கா - வெற்றி பெற்றிருந்தால்??

என்ன செய்திருக்கலாம் நாங்க?

சும்மா விளையாட்டு...!:lol:

இதில என்ன ,,,,,,,,,,,,,,,,? :(??

வங்க தேசம் - தெ. ஆப்பிரிக்கா

தெ. ஆப்பிரிக்கா :

252 ரன்கள் எடுத்தால் வெற்றி, இது தெ.ஆ,வுக்கு மிக கடினமான இலக்கு இல்லை, எனினும் இவ்வளவு ரன்களை வங்கதேசம் குவித்தது தெ.ஆ,விற்கு அதிர்ச்சி என்றே சொல்ல வேண்டும்.

அதிர்ச்சி இன்னும் தெ.ஆப்பிரிக்காவை தொடர்ந்தது.

துவக்க ஆட்டக்காரர்கள் ஸ்மித்(12), டி வில்லியர்ஸ் (15) ஆட்டத்தை துவக்கிவைத்து விட்டு தங்கள் ஆட்டங்களை முடித்துக்கொண்டனர்,

அடுத்து வந்த காலிஸ்(32) பொறுமை காத்து வெளியேற,

பொறுமை இழந்த கெம்ப்(7), ப்ரின்ஸ்(1), பெளச்சர்(12) விரைவில் வெளியேறினர்.

தெ. ஆப்பிரிக்கா - 87 / 6 / 26.5

27 ஓவர்களில் 87 ரன்களுக்கு 6 விக்கெட் என்பது தெ.ஆப்பிரிக்காவின் சமீப வரலாற்றில் ஆஸியுடன் கூட நடக்க வில்லை.

இடையே கிப்ஸ்(56), பொலாக்(17) ஆகியோர் வெற்றியை பிடிக்க சிறிது நேரம் போராடி பின்னர் முடியாமல் தோற்றனர்.

38 ஓவர்களில் 137 ரன்களுக்கு 8 விக்கெட் என தோல்வி உறுதியான நிலையில்

அடுத்த விக்கெட்டுக்களையும் ஒற்றை இலக்கத்தில் இழந்து தெ.ஆ, 48.4 ஓவர்களில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த வெற்றியின் மூலம் உலக அணிகளின் பார்வையை மீண்டும் தன் பக்கம் திரும்ப வைத்தது வங்க தேசம்.

இந்த போட்டியில் பீல்டிங், பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் வங்க தேசம் மிகச்சிறப்பாக செயல்பட்டது பிரமிக்க வைக்கிறது.

எனினும் இந்த சுற்றின் ஆரம்பத்திலிருந்து முயன்றிருந்தால் அரையிருதிக்கு செல்லும் வாய்ப்புகூட வங்க தேசத்திற்கு சாத்தியமே. ஆனால் இது காலம் கடந்த வெற்றி என்றே தோன்றுகிறது.

வங்கதேசம் : 251 / 8 / 50

தெ. ஆ : 184 / 10 / 48.4

வெற்றி : வங்க தேசம் (67 ரன்கள் வித்தியாசத்தில்)

ஆட்டநாயகன் : அஷ்ரபுல்

  • கருத்துக்கள உறவுகள்

Australia 2.10 Bet

Sri Lanka 4.50 Bet

New Zealand 5.00 Bet

South Africa 6.50 Bet

England 15.00 Bet

West Indies 29.00 Bet

Bangladesh 81.00 Bet

Ireland 2001.00 Bet

  • கருத்துக்கள உறவுகள்

Team MP W L PCF Pts NRR

AUS 3 3 0 2 6 +2.01

SRI 4 3 1 2 6 +1.55

NZL 3 3 0 2 6 +1.44

RSA 4 2 2 0 4 -0.63

ENG 3 1 2 0 2 +0.02

WIN 4 1 3 2 2 -1.18

BAN 4 1 3 0 2 -1.78

IRE 3 0 3 0 0 -0.93

http://cricketworldcup.indya.com/

Edited by nedukkalapoovan

இங்கிலாந்து எதிர் அவுஸ்திராலியா இன்றைய துடுப்பெடுத்தாட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியினர் 49.5 ஓவர்முடிவில் சகலவிக்கற் இழப்பிற்கு 247ஓட்டங்களை எடுத்துள்ளனர்.

  • தொடங்கியவர்

இங்கிலாந்து எதிர் அவுஸ்திராலியா இன்றைய துடுப்பெடுத்தாட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியினர் 49.5 ஓவர்முடிவில் சகலவிக்கற் இழப்பிற்கு 247ஓட்டங்களை எடுத்துள்ளனர்.

நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்ட போதும் அவுஸ்ரேலியா அணியின் பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறந்த முறையில் பந்து வீசி விக்கெற்றுக்களை கைப்பற்றினார்கள்.

@ நாதன் பிறேக்கன் 10 ஓவர்கள் பந்து வீசி 33 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெற்றுக்களை கைப்பற்றினார்.

@ சான் ரைற் 10 ஓவர்கள் பந்து வீசி 41 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெற்றுக்களை கைப்பற்றினார்.

@ கிளன் மக்கிராத் 9.5 ஓவர்கள் பந்து வீசி 62 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெற்றுக்களை கைப்பற்றினார்.

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

அணித்தலைவர் றிக்கி பொன்டிங் மற்றும் மைக்கல் கிளாக் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் அவுஸ்ரேலியா அணி இங்கிலாந்து அணியை 7 விக்கெற்றுக்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. பொன்டிங் 86 ஓட்டங்களையும் கிளாக் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இங்கிலாந்து அணி - 247 (All Out)

அவுஸ்ரேலியா அணி - 248 / 3 விக்கெற் இழப்பு.

gilli2fw4.jpg

அடம் கில்கிறிஸ்ற் லோங் ஓவ் பிரதேசத்தினூடக அடிக்கும் டிரைவ் ஷொட்.

rickeygr1.jpg

றிக்கி பொன்டிங் எக்ஸ்ரா கவர் பிரதேசத்தினூடக அடிக்கும் டிரைவ் ஷொட்.

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

Australia 2.10 Bet

Sri Lanka 4.50 Bet

New Zealand 5.00 Bet

South Africa 6.50 Bet

England 19.00 Bet

West Indies 23.00 Bet

Bangladesh 81.00 Bet

Ireland 2001.00 Bet

அணித்தலைவர் றிக்கி பொன்டிங் மற்றும் மைக்கல் கிளாக் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் அவுஸ்ரேலியா அணி இங்கிலாந்து அணியை 7 விக்கெற்றுக்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. பொன்டிங் 86 ஓட்டங்களையும் கிளாக் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இங்கிலாந்து அணி - 247 (All Out)

அவுஸ்ரேலியா அணி - 248 / 3 விக்கெற் இழப்பு.

27 ஓட்டங்களுக்குள் கிள்ளி உப்பிடியும் அடிச்சவரா.. அல்லது பழைய படமா ?

:P :P

Sri Lanka have jumped Pakistan to take the No. 4 place, meaning the four favourites to make the semi-finals - Australia, South Africa, New Zealand and Sri Lanka - are officially the four best teams in the world.

<_<:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.