Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்.ரி.ரி.ஈ அமைப்பின் செயற்பாடுகளால் அழிவுகள் ஏற்படுமென எடுத்துக்கூறியதால் தாக்கப்பட்டேன்: டக்ளஸ்

Featured Replies

எல்.ரி.ரி.ஈ அமைப்பின் செயற்பாடுகளால் அழிவுகள் ஏற்படுமென எடுத்துக்கூறியதால் தாக்கப்பட்டேன்: டக்ளஸ்

எல்.ரி.ரி.ஈ அமைப்பின் செயற்பாடுகளால் அழிவுகள் ஏற்படுமென எடுத்துக்கூறியதால் தாக்கப்பட்டேன்: டக்ளஸ்

எல்.ரி.ரி.ஈ அமைப்பின் செயற்பாடுகளினால் அதன் உறுப்பினர்கள் மாத்திரமின்றி நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அழிவுகள் ஏற்படும் என்பதை தான் எடுத்துக் கூறியமையால், தனக்கு களுத்துறை சிறைச்சாலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று சாட்சியமளித்துள்ளார்.

எல்.ரி.ரி.ஈ அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகளினால் 1998 ஆம் ஆண்டு களுத்துறை சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுவதாக அறிந்தவுடன், அங்கு சென்று அவர்களுக்கு விடயங்களை எடுத்துக்கூறி அந்த உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டதாக டக்ளஸ் தேவானந்தா இன்று மன்றில் குறிப்பிட்டுள்ளார்.

எல்.ரி.ரி.ஈ அமைப்பின் செயற்பாடுகளை தான் விமர்சித்தமையால் ஆவேசப்பட்ட எல.ரி.ரி.ஈ. சந்தேகநபர்கள் களுத்துறை சிறைச்சாலைக்குள் தன்னைத் தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சாட்சியம் வழங்கியுள்ளார்.

1998 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது கூரிய மற்றும் வேறு சில ஆயுதங்களைக் கொண்டு டக்ளஸ் தேவானந்தாவைக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளபட்டமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எல்.ரி.ரி.ஈ அமைப்பின் வடக்கு, கிழக்கு நிதிப்பிரிவிற்கு பொறுப்பாகவிருந்த அன்ரனி எமில்காந்தன் உள்ளிட்ட 16 பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும் அவர்களில் அதிகமானவர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்தமையால் 14 ஆவது பிரதிவாதியான பொன்னுசாமி ஶ்ரீசங்கராஜா என்பவரே நீதிமன்றத்தில் தொடர்ந்தும் ஆஜர்படுத்தப்படுகின்றார்.

இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

http://newsfirst.lk/tamil/2017/06/எல்-ரி-ரி-ஈ-அமைப்பின்-செயற/

  • கருத்துக்கள உறவுகள்

மற்றும்படி தவறியும் நான் எந்த ஈ எறும்புகளை கூட மிதித்ததில்லை .....

கிட்டத்தட்ட ஒரு புத்தனை போலவே வாழ்ந்து வருகிறேன் ...
யாழ்ப்பாணத்தில் இருந்தால் புத்தனுடனான தூரம் தொலைவனத்தால் 
இந்தியா ஊடாக கொழும்பு வந்து 
புத்தனுடைய அதே அர்ச்சய தட்டை ஏந்தி வாழ்வமைத்து கொண்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைப் பேச ஆக்களில்லை என்ற துணிவில்.. சிலர் பொய்களை உரைத்துக் கூறிக் கொள்வதால்.. தாம் சுத்தமானவர்கள் என்று காட்டிக்கொள்ள.. நினைக்கிறார்கள். 

சொந்த மக்களுக்குள் மோதலையும்.. சர்வதேச அரங்கில் எமது போராட்டத்தை பயங்கரவாதமாக்கியதையும் தொடக்கி வைச்சது இந்த கொடும் பாசிசத் தாடி. அடுத்தவர் சீரழிவில்.. தான் வாழனும் என்ற ஒரு வித மனநோய் கொண்டது இந்தத் தாடி வர்க்கம். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மண் களவாக எடுத்து விற்ற போது பேசாமல் இருந்த அரசும் அதன் அடிவருடிகளூம் இப்போ அதிகமாக பயிர்செய்யப்பட்டு விட்டதாம்.தண்ணீர் காணாமல் போய் விடுமார்.ஆகவே அதிகமான பயிரிடப்பட்ட பயிர்களை அழிக்க வேண்டுமாம். இப்போ அதே ஆள் புலிகளை விமர்சித்ததால் அடிபோட்டார்களாம். போராடின திறத்தில் மக்கள் அன்பு கொள்வார்கள் அண்ணையின் மேல் என நினைக்கிறார் போலும்.

  • தொடங்கியவர்
‘என் மீது பாய்ந்து தாக்கினர் அதனால் பார்வை இழந்தேன்’
 

“களுத்துறை சிறைச்சாலையில் இடம்பெற்ற கைதிகளின் உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு கூறுவதற்குச் சென்ற என்னை, சிறைக் கூடமொன்றுக்குள் வைத்து கைதிகள் சிலர், பாய்ந்து தாக்கினர்” என, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று (01) சாட்சியமளித்தார்.  

தம்மை விடுவிக்குமாறு கோரி, 1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி, தமிழ்க் கைதிகளால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு கூறுவதற்கு, ஜூலை 30ஆம் சென்ற டக்ளஸ் எம்.பி, அங்கிருந்த சிறைக்கைதிகள் சிலரால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்தார்.  
இது தொடர்பான வழக்கு விசாரணை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.   

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பவித்தினி டி சில்வா கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,  
“சிறையிலுள்ள அவர்களின் நிலை தொடர்பில் ஸ்ரீஸ்கந்தராஜா என்ற கைதியால், சில கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதன்பின்னர், தாம் உண்ணாவிரதம் இருப்பதாகவும் அது தொடர்பில் வந்து பார்க்குமாறும் கூறப்பட்டது.  

“அந்த உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு கூற, நானும், சட்டத்தரணி மகேஷ்வரி வேலாயுதமும் என்னுடைய பாதுகாப்பு அதிகாரிகளும் களுத்துறை சிறைச்சாலைக்குச் சென்றிருந்தோம்.   
“சுமார் 15 கைதிகள், சிறைச்சாலை அலுவலகத்தில் எம்மை வந்து சந்தித்தனர்.

உண்ணாவிரத்தைக் கைவிடுமாறும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றும் கம்லத்திடம் கூறி (சுகத கம்லத்) ஒரு மாதத்துக்குள் தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் நான் கூறினேன்.  

“இந்த விடயத்தை சிறைக்குள் இருக்கும் ஏனைய கைதிகளிடமும் சொல்லுமாறு அவர்கள், என்னை அழைத்தனர். நானும் அவர்களுடன், இரண்டு மூன்று சிறைக்கூடங்களுக்குச் சென்று விடயத்தைக் கூறி திரும்பிக்கொண்டிருந்தேன்.  

“அப்போது, ஒரு கைதியும் சிறைச்சாலை அதிகாரிகள் இருவரும் வந்து, இன்னோர் அறையும் இருப்பதாகவும் அங்கும் வந்து கூறுமாறும் கூறினர்.  

“நான், அங்கு சென்றபோது, சுமார் 15பேர் வரை இருந்தனர். அவர்களிடம் நான் விடயத்தைக் கூறிக்கொண்டிருந்தபோது, திடீரென என் மீது பாய்ந்து தாக்க ஆரம்பித்தனர். 15 -20 நிமிடங்களின் பின் நான் மயங்கிவிட்டேன். அதன் பின்னரே என்னுடைய ஒரு கண் பார்வையும் இல்லாமல் போனது” என சாட்சியமளித்தார்.  

அதன் பின்னர், பிரதிவாதி ஸ்ரீஸ்கந்த ராஜாவின் சட்டத்தரணி சஞ்ஜெய எஸ். ஆரியதாஸ குறுக்குக் கேள்விகளைக் கேட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே தான் அங்கு சென்றதாகவும், தம்முடைய கொள்கைக்கு எதிரானவர்களே தன்னைத் தாக்கினர் எனவும் குறிப்பிட்டார்.  

அதுமட்டுமின்றி, அப்போதைய அடையாள அணிவகுப்பில் சிலரை அடையாளம் காட்டியதாகவும் 19 வருடங்கள் கடந்துள்ளமையால் அடையாளம் காட்டுவது சிரமம் எனவும் குறிப்பிட்டதையடுத்து, அவருடைய சாட்சியப்பதிவு நிறைவுற்றது.  

வழக்கு விசாரணை இம்மாதம் 21,22 மற்றும் 23ஆம் திகதிகளில் இடம்பெறும் என அறிவித்த நீதிபதி, 2, 3, 8 மற்றும் 9ஆம் இலக்க சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.   

http://www.tamilmirror.lk/செய்திகள்/‘என்-மீது-பாய்ந்து-தாக்கினர்-அதனால்-பார்வை-இழந்தேன்’/175-197822

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.