Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய நலனை புறக்கணித்து இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகம் தலையிடாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[24 - February - 2007] [Font Size - A - A - A]

* எவருமே கனவு காணவேண்டாம்

இந்தியாவின் நலனையும் பாதுகாப்பையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகம் தலையிடுமென்று எவரும் கனவு காண வேண்டாமென்று எச்சரித்திருக்கும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி, விடுதலைப் புலிகளுடன் அரசியல்வாதிகளுக்கு இரகசிய கூட்டு இருக்குமேயானால் தயவு தாட்சண்யமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

தனது கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உத்தியோகபூர்வ ஏடான முரசொலியில் `கேள்வி- பதில்' பத்தியிலேயே கருணாநிதி இந்த விடயம் தொடர்பாக விரிவாக தெரிவித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களுக்கு தேவையான அலுமினியத்தை விநியோகிக்கும் தொழிற்சாலையொன்றை மதுரையில் தமிழகப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அதனையடுத்து, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக இந்தியக் கடற்படை, எல்லைக் காவற்படை, தமிழக மாநில பொலிஸார் ஆயுதங்களை கைப்பற்றி வருகின்றனர். கடந்த பெப்ரவரி 13 இல் கடலில் ஏ.கே.-56 ரக துப்பாக்கி, எறிகுண்டு, இரசாயனப் பொருட்கள், தற்கொலைத் தாக்குதல் அங்கி போன்றவற்றுடன் படகு ஒன்று கைப்பற்றப்பட்டது. இலங்கையில் கொந்தளிப்பான நிலைமை உள்ள இந்தத் தருணத்தில் தமிழ் நாட்டை ஆயுத விநியோகம் செய்யும் இடமாக புலிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக்கூடாதென சென்னையிலிருந்து வெளியாகும் `இந்து' ஆங்கில நாளேடு வியாழக்கிழமை (22.02.2007) ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது. இது தொடர்பாக தங்கள் கருத்து என்ன? என்று கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்கு பதில் அளித்திருக்கும் கருணாநிதி தெரித்திருப்பதாவது;

இலங்கையில் சிங்கள இராணுவத்தால் கொடுமைப்படுத்தப்படுகின்ற அல்லது கொல்லப்படுகிற அப்பாவி தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு இந்திய மத்திய அரசு முன்வர வேண்டுமென்று தமிழ் நாட்டிலே உள்ள கட்சிகள் குறிப்பாக பா.ம.க., தி.மு.க. போன்றவை கேட்டுக் கொள்வதற்கும் அதற்காக `இந்து' பத்திரிகை எழுதியிருப்பதைப் போல நடைபெறுகின்ற புலிகளுக்கான ஆயுத விநியோக இடமாக தமிழகத்தைப் பயன்படுத்துவதற்கும் அனுமதிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை இன்றைய தமிழக அரசு உணராமல் இல்லை.

`இந்து' தலையங்கத்திலே குறிப்பிடிருப்பதைப் போல அத்தகைய செயலில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கண்காணிக்கப்படுகிறார்கள். அத்தகைய ஆயுதங்களை தாங்கி வருகிற படகுகளும் கைப்பற்றப்படுகின்றன. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டும் உள்ளன. இந்து குறிப்பிட்டிருப்பதைப் போல தமிழகத்து அரசியல்வாதிகளுடைய இரகசிய கூட்டு இருக்குமேயானால் அவைகளும் கண்டுபிடிக்கப்பட்டு தயவு தாட்சண்யமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டு மக்களுக்கும் தமிழக அரசுக்கும் இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் மத்திய அரசுக்கு விடுக்கின்ற வேண்டுகோள்களையும் எடுக்கும் நடவடிக்கைகளையும் இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள இதுபோன்ற காரியங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி என்று எவரும் தவறாகக் கருதிக் கொண்டு செயற்படக் கூடாது.

இந்தியாவின் நலனையும் பாதுகாப்பையும் அதற்காக இந்திய மத்திய அரசு எடுக்கின்ற தேவையான நடவடிக்கைகளையும் புறந்தள்ளி விட்டு, இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் தலையிடுமென்று யாரும் கனவு காண வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் ஈழத்தமிழர் விபரம் கணக்கெடுப்பு

இதேவேளை, தமிழகப் பொலிஸார் ஈழத் தமிழர்கள் தங்கியிருக்கும் முகாம்களில் கணக்கெடுப்பு பணியை ஆரம்பித்துள்ளனர்.

இதுதவிர தமிழகம் முழுவதும் வசிக்கும் ஈழத்தமிழர்கள் வீடுகளுக்கும் சென்று விசாரணை நடக்கிறது. அவர்கள் தமிழக அரசிடம் முறையான ஆவணங்கள் பெற்றுள்ளார்களா என்று ஆய்வு செய்யப்படுகிறது. தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக 133 முகாம்கள் உள்ளன. இங்கு தங்கி இருப்பவர்களில் யார், யார்? எங்கு செல்கிறார்கள் என்று கேட்கப்படுகிறது. சந்தேகப்படும் வகையில் இருப்பவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

ஈழத் தமிழர்களின் 133 முகாம்களில் செங்கல்பட்டு முகாம் மட்டுமே கட்டுப்பாடு மிகுந்தது. அங்கு புலிகளுடன் தொடர்புடையவர்கள் மட்டுமே தங்க வைக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு முகாமில் இருப்பவர்கள் மட்டும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மற்ற முகாம்களில் இருப்பவர்கள் வெளியில் சென்று வேலைகள் செய்து சுயமாக வாழ அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களில் பலர் ஈழப்போரை பயன்படுத்தி சில தொழில்களை செய்கிறார்கள். அப்படி தொழில் செய்யும் அனைவரும் பொலிஸ் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ஈழத் தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு வந்துள்ளனர். சமீபத்தில் வந்த இவர்கள் மீது பொலிஸார் கூடுதல் சோதனை நடத்தி வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி தமிழ் நாட்டின் முகாம்களில் சுமார் 75 ஆயிரம் ஈழத் தமிழர்களும் வெளியில் சுமார் 45 ஆயிரம் ஈழத் தமிழர்களும் வசித்து வருகிறார்கள்.

இது இவ்வாறிருக்க அடுத்தடுத்து வெடி பொருட்கள் கடத்தும் படகுகள் பிடிபட்டதைத் தொடர்ந்து உஷாரான இந்திய உளவுத் துறையினரும், பொலிஸாரும் கடலோரப் பகுதிகளில் அதிரடி வேட்டை நடத்தி விசாரித்து வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் முகவர்கள் சிலர் தமிழ் நாட்டில் தங்கி இருந்து அலுமினிய கட்டிகள், இரும்புக் குண்டுகள், இரசாயன கலவைகள் மற்றும் வெடி பொருட்களை சேகரித்து அவற்றை தமிழக மீனவர்கள் மூலம் எளிதில் கடத்தி வருவது விசாரணையில் தெரிந்தது. இது தொடர்பாக பலர் கைதானார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் தற்கொலை படகு பிடிபட்டதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.

2 ஆயிரம் கிலோ டி.என்.டி. வெடிமருந்து நிரப்பப்பட்டிருந்த அந்தப் படகு காங்கேசன்தறை துறைமுகத்தை தாக்கி அழிக்க வடிவமைக்கப்பட்டிருந்ததாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. அந்த படகில் பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழ் நாட்டில் எங்கு இருந்தெல்லாம் வெடி பொருட்கள் கிடைக்கிறது. அவற்றை கடத்துவது யார்-யார் என்பன என்ற தகவல்கள் கிடைத்தன.

இதுவரை கைதானவர்களிடம் நடந்த விசாரணைகள் மூலம் ஆயுதம், வெடி பொருட்கள் கடத்துவதில் `மூளை"யாக இருந்து செயற்படுவது கிருபா என்ற கிருபாகரன் எனத் தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் அடிக்கடி விமானத்தில் தமிழ் நாட்டுக்கு வந்துள்ளார். மதுரை, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருச்சி, சென்னையில் உள்ள சிலரை சந்தித்து பேசி உள்ளார்.

வெடி பொருட்கள் சேகரிப்பவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுப்பார். பிறகு விமானத்தில் கொழும்பு சென்று விடுவார். அவரது புகைப்படம் தமிழக பொலிஸாரிடம் சிக்கி உள்ளது.

தற்போது அவர் தமிழ் நாட்டில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எந்த நேரத்திலும் அவர் விமானத்தில் தப்பக் கூடும் என்று பொலிஸார் சந்தேகிக்கிறார்கள். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளன என்று `இந்து' நேற்று முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

கிருபாகரனுக்கு கண்ணன் வலது கரம் போல் இருந்து வெடி பொருட்களை படகுகளில் ஏற்றி அனுப்பும் வேலையை செய்துள்ளார். கிருபாகரனுக்கும், கண்ணனுக்கும் தேவையான எல்லா உதவிகளையும் மதுரை மாவட்டம் கொடை வீதி அருகே உள்ள அம்மையா புரத்தைச் சேர்ந்த வேலுசாமி செய்து கொடுத்துள்ளார்.

கண்ணன், வேலுசாமியும் தலைமறைவாகி விட்டனர். இவர்களை பிடிக்க தமிழகம் முழுக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.thinakkural.com/news/2007/2/24/...s_page22063.htm

இதை யாரும் எதிர்பாக்கவும்மிலை கன்வுலகூட னினைக்கவும் இல்லை. கருடா நாட்டு தலைவர்களுக்கு தங்கள் உயிரைக்குடுக்கம் தமிழர்களிடமிருந்தும் எதுவும் தேவ இல்லை. தமிழக தமிழர்களின் உதவியை எப்பவும் செய்வது போல் செய்துவந்தால் காணும்.

கருணானிதி+கருணா> தமிழ் துர்ஷ்டம்

தமிழர்தரப்பான விடுதலைப்புலிகளின் எண்ணமும் அதுவே.

இந்திய நலனைப் பாதிக்கும் எந்தச் செயலிலும் தமிழர்

தரப்பு ஈடுபடாது என்பதை தலைவர் அவர்கள் ஏற்கெனவே

அறிவித்து விட்டார்.

சபாஸ் சரியான நெத்தியடி பாவம் ஈழத்தமிழர்கள் ஏமந்துபோய்விட்டார்கள்.

:P

சபாஸ் சரியான நெத்தியடி பாவம் ஈழத்தமிழர்கள் ஏமந்துபோய்விட்டார்கள்.
:P :P :P ரெம்ப நகைச்சுவையாய் எழுதுறீங்க :P :P :P
  • கருத்துக்கள உறவுகள்

சபாஸ் சரியான நெத்தியடி பாவம் ஈழத்தமிழர்கள் ஏமந்துபோய்விட்டார்கள்.

சபாஸ்! rmsachitha தன் ஈழத்தமிழர் மீதான வெறியைக் காட்டிக் கொள்கின்றார். அறிக்கைகளை வைத்து அரசியல் செய்வது நாங்களல்ல. தேவையானவர்களுக்கு மட்டும் தான் அது தேவை!

-------------------------

நண்பர்களே!

rmsachitha போன்ற அழைய விருந்தாளிகளின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள். தலைப்புகளுக்கு ஏற்ற மாதிரிக் கருத்து எழுதாமல் ஒழுங்கான கொள்கை கொண்டிருந்தோமானால் மட்டும் தான், நம் மீதான மதிப்பு உயரும். வெளியால் எதிர்ப்புக் கதைப்பது மட்டும், யதார்த்தமல்ல.

நண்பர்களே.. தயவுசெய்து எல்லோரும் குறுக்கால போக வெளிக்கிடாதீர்கள்..... :angry:

rmsachitha போன்ற விருந்தாளிகளின் நோக்கம் என்னவெண்டால் ஈழதமிழருக்கு இந்தியடமிழர் மேல் வெறுப்பு வரும்படி பார்த்துக்கொள்ளுவது. :icon_idea:

நோக்கம் எதுவாக இருந்தபோதும், இவர் தனக்கு எழுதப்படும் பதில் கருத்துகளுக்கு பொதுவாக பதில் அளிக்காததால் இவருக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை யாருக்கும் இல்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கான சுதந்திரத்தை நாங்கள் தான் போராடிப்பெற வேண்டும். இதுவரை எம் அண்ணா யாரிடமும் எதற்கும் கையேந்தி நிற்கவில்லை இனி நிற்கப்போவதும் இல்லை.

நான் பதில் கருத்து எழுதுவது இல்லை கூறூகிறார்கள், ஆனால் பாருங்கள் பதில் எழுதினால் அசிங்க மாக திட்டுகிறார்கள், மிகவும் அசிங்கமாக தீட்டுகிறார்கள், ராஜபாக்ஷேவுக்கு மணி சங்கர் அய்யர் விருந்து கொடுத்ததுபற்றி ஒரு விவாதம் அதில் மணிசங்கர் விருந்து தனிபட்ட முறையில் விருந்து கொடுத்தது ஒன்றும் தவறில்லை நட்புணர்வை அதிரகரிக்கும் என்று கருத்து பதித்து இருந்தேன் ஆணால் அதற்க்கு எதிற்கருத்து எழுதியவர் உன் அம்மாவை மானபங்கம் செய்பவனுக்கு விருந்து கொடுப்பீர்களா என்று கேட்டார், அவர் கேட்டது எவ்வளவு கீழ்த்தரமானது மகா கேவலமான உதாரணம், இப்படி கருத்துக்களை தெறிவித்தால் எப்படி எழுதமுடியும் அதுமட்டு மல்ல ஈழத்தமிழர்கல் இப்படி நாகரீகமற்று பேசுவது வேதனை அளிக்கிறது அதனால்தான் யாருக்கும் பதில் அளிப்பது இல்லை.

சில நபர்கள் அநாகரீகமாக பதிலளித்தது குறித்து நான் வருந்துகிறேன். அது அவர்களின் தனிப்பட்ட தரம் மற்றும் வாழ்க்கை முறை குறித்த பிரச்சனை. பலதரப்பட்டவர்கள் வருகின்ற இத் களத்தில் அவ்வாறான சிலரும் வருவது தவிர்க்க முடியாதது. ஆனால் இவர்களுக்கு நீங்கள் பதிலளிக்கத் தேவையில்லை, காரணம் அவர்களது கருத்துக்களே அவர்களை இன்னாரென அனைவருக்கும் காட்டிக் கொடுக்கும். மேலும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் அதனை நிர்வாகத்திற்கு முறையிடுங்கள் (Report ).

அநாகரீகமான பேச்சு, செயல் என்பன ஈழத்தவர் இந்தியர் அமெரிக்கர் என அனைத்து சமுகங்களுக்கும் பொதுவானது. உங்கள் நாட்டினரோ அல்லது இனதவரோ அவ்வாறானவர்கள் இல்லை என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா?

ஆரம்பத்திலிருந்து உங்கள் கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. உங்கள் வேறுபட்ட சிந்தனைகளை இங்கே எழுதும் போது "ஏன்" "எதற்காக" "ஆதாரம்" என்பவற்றுடன் எழுதினால் உங்கள் கருத்துக்களை பலரும் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துச் சுதந்திரத்தில் நான் தலையிடவில்லை. இது எனது வேண்டுகோள் ஏற்பதும் ஏற்காததும் உங்கள் இஷ்டம்.

அன்புடன்,

நான் பதில் கருத்து எழுதுவது இல்லை கூறூகிறார்கள், ஆனால் பாருங்கள் பதில் எழுதினால் அசிங்க மாக திட்டுகிறார்கள், மிகவும் அசிங்கமாக தீட்டுகிறார்கள், ராஜபாக்ஷேவுக்கு மணி சங்கர் அய்யர் விருந்து கொடுத்ததுபற்றி ஒரு விவாதம் அதில் மணிசங்கர் விருந்து தனிபட்ட முறையில் விருந்து கொடுத்தது ஒன்றும் தவறில்லை நட்புணர்வை அதிரகரிக்கும் என்று கருத்து பதித்து இருந்தேன் ஆணால் அதற்க்கு எதிற்கருத்து எழுதியவர் உன் அம்மாவை மானபங்கம் செய்பவனுக்கு விருந்து கொடுப்பீர்களா என்று கேட்டார், அவர் கேட்டது எவ்வளவு கீழ்த்தரமானது மகா கேவலமான உதாரணம், இப்படி கருத்துக்களை தெறிவித்தால் எப்படி எழுதமுடியும் அதுமட்டு மல்ல ஈழத்தமிழர்கல் இப்படி நாகரீகமற்று பேசுவது வேதனை அளிக்கிறது அதனால்தான் யாருக்கும் பதில் அளிப்பது இல்லை.

உங்கள் தாய் மாதிரி, தங்கை மாதிரி தானே ஈழத்தில் வாழும் தமிழ் பெண்களும்?இந்த இனவெறி மகிந்தனின் அரசு, இராணுவத்தை ஏவிவிட்டு எத்தனை கிருஷாந்திகளை அவர்கள் காமப்பசிக்கு பலியாக்கி இருக்கிறது தெரியுமா? பாலியல் பலாத்காரமும் செய்து விட்டு பெண் உறுப்பில் வெடிகுண்டு வைத்து தகர்த்து கொலை செய்த பாதகங்கள் தெரியுமா?

விருந்து வைத்தானே மணிசங்கரன், அவன் மகளின் வயதை ஒத்த, கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண்களை, தன் மகள் போலவே ஒரு தமிழ் தாய் சுமந்து பெற்றிருப்பாள் என்று நினைத்திருந்தால், தன் தாய் போலவே ஒரு பெண் தானே என்று நினைத்திருந்தால், வேதம் ஓதுவதை என்றோ மறந்து விட்டு பெயரில் மட்டும் வேதியனை ஒட்டி வைத்திருக்கும் அந்த மணிசங்கரன், ஒரு மாபாதகனுக்கு விருந்தும் வைத்து தன் மகளுக்கு ஆசியும் வழங்க அழைத்திருக்க மாட்டான்.

அந்த பாதிக்கப்பட்ட பெண்களை உங்கள் தாய் போல், தங்கை போல் நினைத்து இருந்தால், விருந்து தானே வைத்தால் என்ன, என்று கேட்கும் அளவுக்கு உங்கள் புத்தியும் சிறுத்து போய் இருக்காது. இப்படி ஒர் அநியாயம் உங்கள் தாய்க்கோ தங்கைக்கோ நடந்து இருந்தால், அது நடக்க காரணமானவனுக்கு மணிசங்கரன் விருந்து வைத்தால், விருந்து தானே வைத்துவிட்டு போகட்டும் என்றா சொல்வீர்கள்?

இது தான் அன்று கேட்ட கேள்வியின் கருத்து. இதில் என்ன மரியாதை குறைவோ விரசமோ இருக்கிறது?!

தமிழில் எழுதும் கருத்துகளை சரிவர புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு உங்களுக்கு தமிழ் அறிவு குறைவா? அல்லது அறிவே குறைவா? என்று தெரியவில்லை.

"தன்னை போல பிறரை என்னும் தன்மை வேண்டுமே!

அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே!"

அந்த பாடல் வரிகள் தான் அன்று உங்களிடம் கேட்ட கேள்வியின் சாராம்சம்.

ஒரு வேதியன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு என் தந்தை போன்றவர்கள் உதாரணம்.

ஒரு வேதியன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு மணிசங்கரன், சுப்பிரமணிய சுவாமி போன்றவர்கள் உதாரணம்.

வேதம் ஓதும் வேதியர்க்கோர் மழை

கற்பு தவறா மங்கையர்க்கோர் மழை

நீதி வழுவா மன்னவர்க்கோர் மழை.

என்கிறது பழந்தமிழ் பா

வேதம் ஓதா வேதியன் இந்த மணிசங்கரன்

மங்கையர் கற்பை பறித்து கொலை செய்து

நீதியை எட்டி உதைத்து எள்ளி நகையாடும்

ஒரு கொடுங்கோல் ஆட்சியாளனுக்கு

கல்யாண விருந்து வைப்பது தர்மம் என்று

நான் கற்ற வேத தர்மங்கள் சொல்லித் தரவில்லை

சோம பானம் தரும் சொர்க்கத்தில் மிதக்கும் இவர்களுக்கு

ஐயர் என்ற அடைமொழி வேறு.

பிரச்சனை என்ன ஈழப்பெண்களை ராணுவம் கற்ப்பழித்து கொள்கிறது. இது வருந்தக்கூடிய விசயம் அதுமட்டுமல்ல் வெட்க்கப்படக்கூடிய விசயம்.

உங்கள் அளவுக்கு அறிவு எனக்கு குறவுதான், இருந்தாளும் நான் கேட்கிறேன் தமிழ் பெண்களை கற்பழிப்பது போல சிங்களபெண்ணை கற்பழித்து தமிழ் பெண்களுக்கை கொளை செய்வதுபோல கொள்ளாமே என்று நான் கூறினால் அதற்க்கு உங்களைபோல அறிவாளிகளின் பதில் என்னவாக இருக்கும். அதை அறிய விரும்புகிறேன்.

நீங்கள் அளிக்கும் பதில்தான் மணிசன்கர் அய்யர் விருந்து வைத்தை சரியா தவறா என்று முடிஉவுக்கு வரமுடியும்.

பாலியல் வல்லுறவு என்று சொல்லை இன்றைக்கும் எதற்கு பாவிக்கிறீர்கள்?

வல்லுறவு, வன்புணர்வு போன்ற சொற்களே சரியானவை

சிங்கள பெண்களை எம்மவர்கள் வல்லுறவுக்கு உட்படுத்தும் கொடிய செயலை செய்யமாட்டார்கள். எந்த தமிழனும் அதை ஏற்றுக்கொள்ளவோ ஆதரிக்கவோ மாட்டான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் நல்லா சொன்நீர்கள் நாங்கள் சிங்களபென்களாக இருந்தாள் என்ன தமிழ்ப்பென்காளாகஇருந்தாள் என்ன எல்லோரையும் தாய்குலமாகவேமதிப்பவர்கள்ஃட

உங்கள் அளவுக்கு அறிவு எனக்கு குறவுதான், இருந்தாளும் நான் கேட்கிறேன் தமிழ் பெண்களை கற்பழிப்பது போல சிங்களபெண்ணை கற்பழித்து தமிழ் பெண்களுக்கை கொளை செய்வதுபோல கொள்ளாமே என்று நான் கூறினால் அதற்க்கு உங்களைபோல அறிவாளிகளின் பதில் என்னவாக இருக்கும். அதை அறிய விரும்புகிறேன்.

பதில் சொல்லில் அல்ல செயலிலேயே காட்டப்பட்டுள்ளதோ!

எமது கடந்த 30 வருடப் போராட்டத்தில் ஓரு சிங்களப் பெண்னேணும் மானபங்கப் படுத்தப்படவில்லை!

தமிழீழ விடுதலை போர்பற்றி நீங்கள் குறைவான அறிவை கொண்டுள்ளீர்கள் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளதே, நீங்கள் அதை புரிந்து கொள்வதற்கான முதல் படி. உங்கள் முயற்சியால் அந்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்!

கருத்துக்களுக்கு பதிலளித்தமைக்கு நன்றி.

<<<

போயும் போயும் உவருக்கே போய் பதில் சொல்லுறீங்கள். காந்தி தேசத்தில் இருந்து எப்பேற்பட்ட வார்த்தையை உதிர்க்கின்றார். இந்திய மக்கள் அனைவருமே இவரைப் பார்த்து வெட்கப்படும் வார்த்தைகளைச் சொல்லும் இவருக்கு நீங்கள் பதில் கொடுத்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

'' இந்தியாவின் நலனையும் பாதுகாப்பையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகம் தலையிடுமென்று எவரும் கனவு காண வேண்டாமென்று எச்சரித்திருக்கும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி"

எல்லோருக்கும் வணக்கம் .

இதே மாதிரியான செய்தி ஒன்று சில நாட்களின்முன்பு பிரசுரமாகியபோது நான் ஒரு பதில் கருத்தும் தெரிவித்திருந்தேன்.

அந்த கருத்து இரண்டு நாட்களின்பின்பு நிர்வாகத்தினரால் நீக்கப்பட்டுவிட்டது. அப்போதுதான் எனக்கும் புரிந்தது அதாவது நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன் என்று. என்னய்யா செய்வது பாதிக்கப்பட்ட மக்கள் எங்கள் உடன்பிறப்பாச்சே.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக கவிதைமுலம் முதலைக்கண்ணீரா வடிக்கமுடியும்? நான் உலகத்தில் எந்த மூலையிலாவது ஒரு தமிழனுக்கு பிரச்சினையென்றால் குரல்கொடுக்காமல்

சும்மா பார்த்துக் கொண்டிருக்கமாட்டேன்.

நிறைய கவிதை வடித்துக்கொண்டே இருப்பேன். அது தான் எனக்கு கைதேர்ந்த கலையாச்சே.....

நண்றி

வல்வை மைந்தன்.

' நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால் "

Edited by Valvai Mainthan

பிரச்சனை என்ன ஈழப்பெண்களை ராணுவம் கற்ப்பழித்து கொள்கிறது. இது வருந்தக்கூடிய விசயம் அதுமட்டுமல்ல் வெட்க்கப்படக்கூடிய விசயம்.

உங்கள் அளவுக்கு அறிவு எனக்கு குறவுதான், இருந்தாளும் நான் கேட்கிறேன் தமிழ் பெண்களை கற்பழிப்பது போல சிங்களபெண்ணை கற்பழித்து தமிழ் பெண்களுக்கை கொளை செய்வதுபோல கொள்ளாமே என்று நான் கூறினால் அதற்க்கு உங்களைபோல அறிவாளிகளின் பதில் என்னவாக இருக்கும். அதை அறிய விரும்புகிறேன்.

நீங்கள் அளிக்கும் பதில்தான் மணிசன்கர் அய்யர் விருந்து வைத்தை சரியா தவறா என்று முடிஉவுக்கு வரமுடியும்.

அறிவை கொஞ்சம் ஆழமாக!

அறிவை கொஞ்சம் கூர்மையாக!

அறிவை கொஞ்சம் பரந்ததாக! ஆக்கி கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளுக்கு உங்களுக்கே பதில் தெரியும்.

ஆழ்ந்து தூங்குகிறீர்களா? விழித்துக்கொள்ளுங்கள்!

தூங்குவது போல் நடிக்கிறீர்களா? ஆழ்ந்த அனுதாபங்கள்!!

"கள்ளுறவை மறந்து நல்லுறவை வளர்த்து

உன் உள்ளுணர்வை கேட்டு பாரு

பெண்ணை வல்லுறவு செய்யும் வல்லூறு அல்ல

ஈழத்தமிழன் என்று கூறும்"

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான்டா வளர்ச்சி!

உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த கருத்து இரண்டு நாட்களின்பின்பு நிர்வாகத்தினரால் நீக்கப்பட்டுவிட்டது. அப்போதுதான் எனக்கும் புரிந்தது அதாவது நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன் என்று. <<<<<<

வல்வை மைந்தன் அவர்களே,

உணர்ச்சியை உங்கள் வசப்படுத்துங்கள், நீங்கள், உணர்ச்சி வசப்படக்கூடாது. ஏனெனில் நாம் சாதிக்கவேண்டியவை எத்தனையோ! அத்தனையையும் புறம் தள்ளி விட்டு எம் வார்த்தைகளுக்குள் நாமே சிக்கிக்கொள்ளக்கூடாது. புரிந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். இது என் அனுபவத்தால் நான் கற்றுக்கொண்ட பாடம்.

நண்றி

வல்வை மைந்தன்.

' நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால் "

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழதமிழ் மக்களின் விடுதலை பாரதத்தின் பாதுகப்பு பொருளாதாரம் பூலோக அமைப்புடன் சம்மதபட்ட விடயம்

இது உங்களின் கருத்தா? அப்படியானால் அது எவ்வாறு என்று சற்றே விளக்கமுடியுமா?

அல்லது

உங்கள் ஒரு வரி குறளுக்கு பொழிப்பை எதிர்பார்க்கிறீர்களா?

அல்லது

எங்கோ ஒட்டியதை இங்கே 3 முறை தவறுதாலாக ஒட்டிவிட்டீர்களா?

Edited by saanakiyan

vettri-vel Posted நேற்று, 10:37 PM

QUOTE(rmsachitha @ Feb 28 2007, 01:41 PM)

பிரச்சனை என்ன ஈழப்பெண்களை ராணுவம் கற்ப்பழித்து கொள்கிறது. இது வருந்தக்கூடிய விசயம் அதுமட்டுமல்ல் வெட்க்கப்படக்கூடிய விசயம்.

உங்கள் அளவுக்கு அறிவு எனக்கு குறவுதான், இருந்தாளும் நான் கேட்கிறேன் தமிழ் பெண்களை கற்பழிப்பது போல சிங்களபெண்ணை கற்பழித்து தமிழ் பெண்களுக்கை கொளை செய்வதுபோல கொள்ளாமே என்று நான் கூறினால் அதற்க்கு உங்களைபோல அறிவாளிகளின் பதில் என்னவாக இருக்கும். அதை அறிய விரும்புகிறேன்.

நீங்கள் அளிக்கும் பதில்தான் மணிசன்கர் அய்யர் விருந்து வைத்தை சரியா தவறா என்று முடிஉவுக்கு வரமுடியும்.

அறிவை கொஞ்சம் ஆழமாக!

அறிவை கொஞ்சம் கூர்மையாக!

அறிவை கொஞ்சம் பரந்ததாக! ஆக்கி கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளுக்கு உங்களுக்கே பதில் தெரியும்.

ஆழ்ந்து தூங்குகிறீர்களா? விழித்துக்கொள்ளுங்கள்!

தூங்குவது போல் நடிக்கிறீர்களா? ஆழ்ந்த அனுதாபங்கள்!!

"கள்ளுறவை மறந்து நல்லுறவை வளர்த்து

உன் உள்ளுணர்வை கேட்டு பாரு

பெண்ணை வல்லுறவு செய்யும் வல்லூறு அல்ல

ஈழத்தமிழன் என்று கூறும்"

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான்டா வளர்ச்சி!

உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி.

------------------------------------------------------------------------------------

அய்யா கேட்டது கேள்விதான் அது யோசைனையோ தூண்டுகோல அல்ல நண்பர்களே, விடுதலைபுலிகள் கட்டுப்பாடான இயக்கம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை நீங்கள் செய்கிறீர்கள், அப்படி என்றாள் ஏன் ராஜபாக்ஷேவை தன் திறுமனத்திற்க்கு அழைத்ததையும் விறுந்து உபசரிப்பையும் ஏன் குறுகிய கண்ணோடத்தோடு எதிற்க்கவேண்டும்.

பரந்த சிந்தனை பற்றி பேசும்போது ஒரு தாயை உதாரணமாக்கி கேவலபடுத்தலாமா என்பதே என் கேள்வி.

வெற்றிவேல் அவர்களை நீங்கள் அளித்த மேல உள்ள கருத்துக்களை உங்களுக்குண்டானவை என்பதை தெறிவித்துக்கொள்கிறேன்.

கற்பூரம் சற்றென்று பற்றிக்கொள்ளும்!

கரி கொஞ்சம் முயற்சி எடுத்து ஊதி ஊதி பற்ற வைத்தால் பற்றிகொள்ளும்!

வாழைமட்டையை பற்ற வைக்க நினைத்தால் காலவிரயம் தான் ஆகும்!

அதை நான் செய்வதில்லை!!!

சொல்லும் போது புரியாத பல உண்மைகள் அனுபவம் கற்றுக் கொடுக்கும்!

கற்றுக் கொள்ளக் கூடிய அந்த அனுபவங்களை காலம் உங்களுக்கு கொடுக்கட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெண்களை எம்மவர்கள் வல்லுறவுக்கு உட்படுத்தும் கொடிய செயலை செய்யமாட்டார்கள். எந்த தமிழனும் அதை ஏற்றுக்கொள்ளவோ ஆதரிக்கவோ மாட்டான்.

--------------------

இனவிடுதலையும் பகுத்தறிவும் எம் இரு கண்கள்

நன்றிகள் (Advanced Member)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.