Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான்கு குரங்குகள் மரத்தில் அமர்ந்துள்ளன.

முதல் குரங்கு கண்களை மூடிக்கொண்டுள்ளது.

இரண்டாவது குரங்கு வாயை மூடிக்கொண்டுள்ளது.

மூன்றாவது காதுகளை பொத்திகொண்டுள்ளது

நான்காவது கணனியில்ல் இந்த செய்தியை படித்துக்கொண்டுள்ளது

உங்களையே சொல்லுறீங்களா? எவ்வளவு பெரிய மனசு. :P

நல்லா இருக்கு வானவில் sms jokes.

  • Replies 764
  • Views 74.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பின்னீட்டங்கள் வான் வில். :):unsure::unsure::blink:

  • தொடங்கியவர்

பின்னீட்டங்கள் வான் வில். :rolleyes::rolleyes::o:lol:

மாயி அண்ணன் SMS அனுப்பினாக...

மாப்பிள்ளை மொக்கசாமி SMS அனுப்பினாக...

மற்றும் நம் உறவினரெல்லாம் SMS அனுப்பினாக...

நீ மட்டும் SMS அனுப்பவே இல்லையே...

அனுப்பும்மா மின்னல்!!!

-------------

தட்டி பாத்தேன்

கொட்டாங்கச்சி

கீழ பாத்தா

கரப்பான் பூச்சி

எடுத்து பாத்தேன்

செத்து போச்சி

கீழ வுட்டேன்

ஓடிப் போச்சி!

SMS பன்னினா

கொறஞ்சா போச்சி???

----------------------

கலெக்டர் ஆகனும்னா ஐஏஎஸ் படி

போலீஸ் ஆகனும்னா ஐபிஎஸ் படி

ஆடிட்டர் ஆகனும்னா சிஏ படி

எடிட்டர் ஆகனும்னா மாஸ் கம்யூனிகேசன் படி

வீனாப் போகனும்னா என் எஸ்எம்எஸ் படி

ஹா..ஹா..ஹா போய் வேலையப் பாருடா டுபுக்கு!

---------------------------------------------------

இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பன்னு

உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?

என்னது இல்லையா?

அதுசரி, சும்மாவா சொன்னாங்க

"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!!!"

  • தொடங்கியவர்

உலகத்தில் பெரிய கேட் என்ன கேட்?

உங்க கிட்னிய பயன்படுத்தி யோசிங்க

இன்னுமா யோசிக்கிறீங்க

சுத்த வேஸ்ட்டு நீங்க

காலையில் தினமும் கண்விழித்தால் நான்

கை தொடும் தேவதை எது?

கோல்கேட்தான் வேறென்ன..!

----------------------------

மாட்டுக்கும் மனுஷனுக்கும்

என்ன வித்தியாசம்?

மாடு கழுத்துல பெல்லு

மனுஷன் கழுத்துல செல்லு...! :rolleyes:

======================

நான் கோடு போட்டா

நீ ரோடு போடுவே..!

நான் புள்ளி வெச்சா

நீ கோலம் போடுவே..!

நான் மிஸ்கால் கொடுத்தா மட்டும்

நீ ஏண்டா திரும்பக் கூப்பிடமாட்டேங்கிறே..? :P

======================

ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி

ஊட்டி, கொடைக்கானல்னு சுத்துனா

'சுற்றுலா'ன்னு சொல்றாங்க..!

பைசா செலவு இல்லாம

உள்ளூருக்குள்ளயே நாம சுத்துனா

மட்டும் ஏன்டா திட்றாங்க..??? :shock:

======================

மச்சான்..! உன்ன ஒரு வேலைக்கு

அனுப்பி வெச்சா போன வேகத்துலயே

திரும்பி வந்துடறியே....

மனசுக்குள்ள என்ன பெரிய

'கங்குலி'ன்னு நெனைப்பா??? :twisted:

=====================

'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்

அவள் மாம்பழம் வேண்டுமென்றாள்!'

'நல்லவேளை.. நீ டாஸ்மாக்ல நிக்கலை!!!' :wink:

======================

டேய் மறந்துடாத...

பஸ்ஸ்டாண்டுக்கு உன்னை

'ரிசீவ்' பண்ணவர்ற ஆள்கிட்ட

'அடையாளம்' சொல்லி

அனுப்பி வெச்சிருக்கேன்...

அதனால வழக்கம்போல

தண்ணியப் போட்டுட்டு

'கீழ படுத்துக்க' ஆமா!!! :rolleyes:

=======================

காலையில் உனக்கு தினத்தந்தி, தினமலர்,

தினமணி, தினகரன்

நாலும் வேணுமாமே..!

ஆனா எனக்கு இட்லி, தோசை,

பொங்கல், உப்புமான்னு

ஏதாச்சும் ஒன்னு போதும்டா!!! :roll:

----------------------------

மாட்டுக்கும் மனுஷனுக்கும்

என்ன வித்தியாசம்?

மாடு கழுத்துல பெல்லு

மனுஷன் கழுத்துல செல்லு...! :lol:

======================

:rolleyes::rolleyes::o

  • தொடங்கியவர்

'மிருக காட்சி சாலையில் யானை குளிப்பதை அதிசயமாகப் பார்த்தாய்.

குளிப்பது யானை என்பதால் அப்படி பார்க்கிறாயோ என்று நினைத்தேன்,

பிறகு தான் தெரிந்தது குளிப்பதே உனக்கு அதிசயம் என்று! '

--------------------

அம்மன் பாட்டுக்கு ஈஸ்வரி

ஐயப்பன் பாட்டுக்கு வீரமணி

முருகன் பாட்டுக்கு டி.எம்.எஸ்

கிராமிய பாட்டுக்கு புஷ்பவனம்

பஞ்சபாட்டுக்கு மவனே நீ தான்

---------------------------------

*என் இதயத்தில் உன்னை மட்டும்தான் வைத்திருக்கிறேன்! காரணம் நீதான் என்னிடம் அதிகமாகக் கடன் வாங்கி இருக்கிறாய் நண்பா!

கருப்பு வண்ண கண்ணாடி அணிந்தால் நீ அழகாகத்தான் இருக்கிறாய்! போடாவிட்டால் இன்னும் அழகாக இருப்பாய் என்பதை அறிவாயா?

-------------------------------------

நாளை அதிகாலையில் வந்துவிடு நண்பா! என்னை நரி முகத்தில் விழிக்கச் சொல்லியிருக்கிறார் ஜோசியர்!

-------------------------------------

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லட்டுமா? புத்தகம் படிக்கிறீர்கள்.. இல்லை!.. ஓ... கண்டுபிடித்துவிட்டேன்.. என்னுடைய எஸ்.எம்.எஸ் படிக்கிறீர்கள்!

------------------------------

கடிகாரத்தை ஏன் காலில் கட்டவில்லை தெரியுமா? காலில் கட்டினால் அதன் முள் குத்தும்..! எப்படி என் கண்டுபிடிப்பு!

--------------

சிக்கன் பற... பற...

மட்டன் பற... பற...

ஆம்லெட் பற... பற...

பில் வருது பற... பற!

:rolleyes:

  • தொடங்கியவர்

*ஓரணா ரெண்டணா உண்டியலை உடைச்சு

நாலணா எட்டணா கடனை உடனை வாங்கி

அண்டா குண்டா அடகு வெச்சு

பிரிபெய்டு கார்டு வாங்கி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்

பதில் அனுப்புறது...?

---------------------

*கவலைகள் உன்னை நோகடிக்கும் பொழுது

உன்விழி ஓரம் ஒரு துளி நீர் சிந்தும் பொழுது

என்னிடம் சொல்...

நான் உனக்காக அங்கு வருவேன்!

காரணம் நான் டிஸ்யூ விற்கிறேன்

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்!

===========================

*அன்பே... உன்னைப் பார்க்கும்வரை நான் நானாக இருந்தேன்.

உன்னைப் பார்த்த பின்பு கடன்காரனாக ஆகிவிட்டேன்.

==============================

*அன்புக்கு அம்மா, ஆத்திரத்திற்கு அப்பா.

சிந்திப்பதற்கு நான், பைத்தியக்காரன்மாதிரி சிரிப்பதற்கு நீ!

========================

*உன்னைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் என

துடித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் டிக்கெட் எடுத்தால்தான் மிருகக் காட்சிச்

சாலைக்குள் விடுவேன் என்று சொல்கிறார் காவல்காரர்!

=======================

*சத்தியமாகச் சொல்கிறேன்... உன்னை விட்டால் யாருமில்லை..

எனக்குக் கடன் கொடுப்பதற்கு!

===================

*நீ வானொலியில் பாடினால் எனக்கு அதிக மகிழ்ச்சி!

அடைத்துவிடவும் வசதி.

இப்படி நேரில் கொல்கிறாயே நண்பா...

=============================

*கண்ணீர்விட மாட்டேன்

கண்ணுக்குள் இருக்கும் நீ

மூழ்கிவிடுவாய் என்பதால்!

===============================

*இதயத்தைக் காணவில்லை!

திருடியது நீ...

இல்லை என்றால் உனது

தங்கையாக இருக்கும்!

============================

பச்சை அம்மாவுக்குப் பிடிக்கும்

மஞ்சள் கலைஞருக்குப் பிடிக்கும்

சிவப்பு நல்லகண்ணுக்குப் பிடிக்கும்

கறுப்பு வீரமணிக்குப் பிடிக்கும்

காவி ராமகோபாலனுக்குப் பிடிக்கும்

காக்கி உன்னை கையும் களவுமாப் பிடிக்கும்!

=====================

பப்ளிக்கா கிஸ் அடிப்பாங்க.

ஆனா, பிஸ் அடிக்க மாட்டாங்க

அது அமெரிக்கா!

பப்ளிக்கா பிஸ் அடிப்பாங்க.

ஆனா, கிஸ் அடிக்க மாட்டாங்க

அதான் இந்தியா!

=================================

நான் உமி கொண்டு வர்றேன். நீ அரிசி

கொண்டு வா. இரண்டு பேரும் சேர்ந்து

ஊதி ஊதித் தின்போம் இது பழசு.

நான் மிஸ்டு கால் உட்றேன். நீ கால் பண்ணு.

ரெண்டு பேரும் கடலை போடலாம் இது புதுசு

  • தொடங்கியவர்

டேய் விச்சு!

நீயோ ஊருக்குப் புச்சு!

நீ இருக்கிறதோ குச்சு!

ஆதிகேசவன்

அளவுக்கு உன் வேஷம் ரிச்சு!

உன் தகுதிக்கு இது டூ மச்சு!

போலீஸ்ல மாட்டினே,

மவனே, பிச்சுருவான் பிச்சு!

-----------------------------

நேத்து நான் சச்சின்

டெண்டுல்கர்கிட்ட

போன்ல பேசினேன்.

சூப்பர்! என்ன

சொன்னார்?

ஸாரி, ராங்

நம்பர்ன்னார்!

-----------------------

வார்டன் சார்..

உங்கள் மந்தையிலிருந்து

இரண்டு ஆடுகள்

வேறு வேறு திசையில்

போகின்றன.

ஒன்று

கனா கண்டேனுÕக்குப் போகிறது.

மற்றொன்று

உள்ளம் கேட்குமேவுக்குப்

போகிறது.

இரண்டையும் சந்திக்க நேர்ந்தால்...

திட்டிவிடாதீர்கள்.

---------------------

செல்போனைக்

கண்டுபிடித்தது

அமெரிக்கா!

மிஸ்டு கால்

கண்டு பிடித்தது

இந்தியன்!

-----------------------

ஏசு, காந்தி, புத்தர்

மூணு பேருக்கும்

உள்ள ஒற்றுமை என்ன?

மூணு பேருமே லீவு

நாள்ல பிறந்தவங்க சார்!

----------------------

பழகுவதில் நீ ஜென்டில்மேன்

தேசப்பற்றில் நீ இந்தியன்

கடலை போடுவதில் நீ முதல்வன்

எல்லாம் சரி... கடன் கேட்டா மட்டும்

ஏண்டா அந்நியன் ஆயிடறே!

----------------------

கர்நாடிக் பாட்டுக்கு எம்.எஸ்.எஸ்,

சினிமாப் பாட்டுக்கு டி.எம்.எஸ்,

தபால் அனுப்புறதுக்கு ஆர்.எம்.எஸ்.

உன்னை மாதிரி வெட்டிப்பய

படிக்கிறதுக்குத்தாண்டா எஸ்.எம்.எஸ்.

-----------------------

விஜய் சிவகாசியில பிஸி!

தனுஷ் புதுப்பேட்டையில பிஸி!

நீ எங்கே மாப்ளே

வேலூரா... பாளையங்கோட்டையா?

=================

கெழக்கு செவக்கையிலே...

டாஸ்மாக் தொறக்கயிலே...

நீ பீரு குடிக்கையிலே...

உங்க அப்பா அங்க வந்துட்டாராமே...

மச்சான் மாட்டிக்கிட்டியா?

===================

எப்போ பார்த்தாலும் கோயிலுக்குள்ள

நின்னுக்கிட்டு நான் சாமி புள்ளைடா!னு

சவுண்டு வுடுறியாமே...

எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க... இப்படி

உண்டை கட்டி வாங்கித் திங்க!

==================

அமெரிக்கா போகப் போறேன்...

சிங்கப்பூர் போகப் போறேன்Õனு

சொல்லிட்டிருக்கியாமே!

முதல்ல, அங்கேயெல்லாம் பிச்சை

எடுக்கிறது சட்டப்படி குற்றமா...

இல்லையானு தெரிஞ்சு வெச்சுக்கடா...

பின்னால பிரச்னை ஆகிடப் போவுது!

==================

காதலோட வலி எப்படி இருக்கும்னு

எனக்கு தெரியலை. ஆனா நான்

உனகிட்டே ஐ லவ் யூ சொன்னப்ப

காதோட சேர்த்து ஒரு அப்பு

அப்புனியே...

யப்பா... காது வலி எப்படி இருக்கும்னு

நல்லா தெரிஞ்சிடுச்சு.

================

செங்கக்கல்லு செல்லுக்காரா

ரண்டக்க... ரண்டக்க...

செருப்பு திருடும்

கொள்ளைக்காரா

ரண்டக்க... ரண்டக்க...

எச்சி பீடி உதட்டுக்காரா

ரண்டக்க... ரண்டக்க...

ஓசி குவார்ட்டரு எச்சில்காரா

ரண்டக்க... ரண்டக்க...

சிம் கார்டு இல்லாமலே

சீன் காட்டாதடா பிச்சைக்காரா

ரண்டக்க... ரண்டக்க...

==================

  • தொடங்கியவர்

ஏன் கங்குலி ரன்னே அடிக்க மாட்டேங்கிறே?

நான் அடிக்கலாம்னு பேட்டை தூக்கினேன். அப்போ எதிர் டீம்காரன் ஒருத்தன் சொன்னான்... டேய்... நாம எப்படி பந்தைப் போட்டாலும் இவன் அடிக்கவே மாட்றான். இவன் ரொம்ப நல்லவன்டா!னு சொன்னான்... அதான்

----------------

துணிக்கடையில்

ஒரு பெண்: இந்த உடை எவ்வளவு?

கடைக்காரர் ஜொள்ளுடன்: 5 முத்தங்கள் மட்டுமே:P

பெண்:இந்த உடை?

கடைக்காரர்: 10 முத்தங்கள் மட்டுமே.

பெண்: சரி, அப்போ இந்த உடையே இருக்கட்டும். பில்லை எனது பாட்டி செலுத்துவார்! :idea:

---------------------

ஒருவன் தனது நண்பன் வீட்டுக்கு சென்றிருந்தான். அவன் அப்போது வீட்டில் இல்லை. நண்பனின் மனைவியிடம், "ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா?", என்றான். நண்பனின் மனைவியும் எரிச்சலுடன் ஒரு கோப்பையில் சூடாக பால் கொண்டுவந்து கொடுத்தாள். உடனே அங்கிருந்த ஒரு நாய் இவனைச் சுற்றி வந்தது. இவனும், "பரவாயில்லையே, இந்த நாய்க்கு என்னைத் தெரிந்திருக்கிறதே", என்றான். அதற்கு அவள், "நீங்கள் குடித்துக் கொண்டிருப்பது அதன் கோப்பையில்!" என்றாள்.

_________________

ஒருவன் சாராயக் கடைக்கு வெளியே அமர்ந்திருந்தான். அவன் கையில் ஒரு சாராய பாட்டில் இருந்தது. அப்போது ஒரு லாரியில் வேகமாக வந்து ஒருவன் அவன் பாட்டிலில் இருந்ததைக் குடித்து விட்டு சிரித்தான். முதலாமவன் சோகமாக லாரி ஓட்டுநரைப் பார்த்தான். ஓட்டுநரோ, 'இந்தா பணம். இன்னுமொன்று வாங்கிக் கொள்' என்று மேலும் சிரித்தான்.

முதலாமவன் பேச ஆரம்பித்தான். "நான் இன்று காலை தாமதமாக சென்றேனா, முதலாளி என்னை வசவாக வைதாரா, வேலையை விட்டு விட்டேனா, இங்கு வரலாம் என்று நினைக்கும் போது என்னுடைய பணத்தை வீட்டில் வைத்தது ஞாபகம் வந்ததா, அங்கு சென்று பார்த்த போது என் மனைவி தோட்டக் காரனுடன் இருப்பதைப் பார்த்து ஒரு வேகம் வந்ததா, உடனே இங்கு வந்து சாவதற்காக ஒரு பாட்டில் சாராயம் வாங்கி அதில் விஷம் வாங்கி வைத்திருந்தேனா, அதைத் தான் நீ குடித்தாய்" என்றான்.

_________________

  • தொடங்கியவர்

என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும்,

முட்டைதான் போடும்.

நூத்துக்கு நூறெல்லாம் போடாது.

------------

நேத்து உன் ஃபோட்டோ பார்த்தேன். அழகான கண்ணு நீளமான மூக்கு அகலமான காது எல்லாம் ஓகே.. அது என்ன வசனம்.. "என்னைப் பார்யோகம் வரும்"!?!

_________________

ஒருவர்: பிரதமர் ஏன் மாலையில் நடைப்பயிற்சி செல்கிறார்.

மற்றொருவர்: தெரியவில்லையே?

ஒருவர்: ஏன்னா அவர் PM தான் AM இல்லையே.

_________________

வீடு வரை - Land Line

வீதி வரை - Public Booth

காடுவரை - Cell Phone

கடைசி வரை .........................

ம்........

என்னோட SMS தான்

-------------------

மனைவி : என்னங்க டிவி சீரியல பார்த்துட்டு இப்படி அழறீங்க

கணவன் : அது டிவி சீரியல் இல்லை நம்ம கல்யாண சிடி

-------------------------

இரவு முழுக்க யோசிச்சேன்

2 மணியிலிருந்து 3 மணி வரைக்கும் உன்கிட்ட எதுக்கு சொல்லணும்

3 மணியிலிருந்து 4 மணி வரை சொன்னா என்ன தப்புன்னு நினைச்சேன்.

4 மணியிலிருந்து 5 மணி வரைக்கும் யோசிச்சேன் சொன்னா உன்கிட்ட தான் சொல்லணும்னு முடவு பண்ணிட்டேன்

மாட்டேணு சொல்லிராத

குளிச்சிடு இன்னைக்காவது.

_________________

மனைவி : ஏங்க சொர்கத்துல கணவன் மனைவி சேர்ந்து வாழ முடியாதாம்ல?

கணவன் : அதனாலதான் அதற்கு பெயர் சொர்க்கம்.

_________________

  • தொடங்கியவர்

''சர்தார்ஜி நர்ஸைக் காதலிக்கிறாராம்.''

''அப்புறம் ஏன் நர்ஸ் கோபமா இருக்காங்க?''

''ஐ லவ் யூ சிஸ்டர்னு சொல்லிட்டாராம்!''

----------------

இரண்டு சர்தார்ஜிக்கள் ஒரு திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தன࠮?்.இடைவேளையின் போது ஹீரோ ஒரு கட்டிடத்தின் மேல் குதிப்பது போல் நிற்கிறான்.நம்ம 2 சர்தார்களும் பந்தயம் கட்டினர்.

முதலாமவர் : ஹீரோ கட்டத்தில் இருந்து குதித்து இறந்து போவான் 100 ரூபாய் பந்தயம்.

இரண்டாமவர் : குதிக்க மாட்டான் 100 ரூபாய் பந்தயம்

இடைவேளை முடிந்து படம் தொடங்கியது ஹீரோ குதித்து இறந்துவிட்டான்.

முதலாமவர் : நான் உன்கிட்ட உண்மைய மறைச்சுட்டேன் நான் ஏற்கனவே படம் பார்த்துவிட்டேன்

இரண்டாமவர்:நானும் நேற்றே பார்த்துட்டேன் நேத்து தான் குதிச்சு செத்து போனவன் இன்னைக்கு திரும்பவுமா அப்படி பன்னபோறானு நினைச்சேன்.

---------------------

சாண்டா: (புத்தகதை வாசித்துகொண்டே) தெரியுமா, நான் ஒவ்வோரு முறை மூச்சுவிடும் போதும் ஒரு மனிதன் இறக்கிறான்.

பாண்டா: நீ முதல்ல போய் வாயைக் கழுவு....

---------------

கேள்வி: இராமன், கிருஷ்ணன், காந்தி, இயேசு. இவர்களின் ஒற்றுமை என்ன?

சர்தாரின் பதில்: இவர்கள் எல்லோரும் அரசு விடுமுறையில் பிறந்தவர்கள்.

______________

சர்தார்: (தன் நண்பியிடம்) இரவுக்கு என் வீட்டுக்கு வா. யாரும் இருக்க மாட்டார்கள்.

(நண்பி அவ்வாறே சர்தாரின் விட்டுக்கு இரவு சென்றார். உண்மையில் யாருமே அங்கு இல்லை. சர்தார் உட்பட)

_________________

சுற்றுப்பயனம் முடிந்து வந்த ஜனாடிபதி சர்தாரை அழைத்து அமெரிக்க ரஷ்ய விஞ்ஞானிகள் ஒவ்வொரு கிரகமா போய்ட்டு வராங்க..நாமும் நமது விஞ்ஞானிகளை ஏதாவது ஒரு கிரகத்துக்கு அனுப்ப வேண்டும்..எங்கே அனுப்பலாம்? என்றார்.

சர்தார் உடனே 'சூரியனுக்கு அனுப்பலாம்.!' என்றார். ஜனாதிபதி யோசனையுடன் 'இங்கேயே வெயில் இந்த கொளுத்து கொளுத்துகிறது..சூரியனுக்஠?ு போனால் எரிந்து சாம்பலாகி விடுவார்கள்' என்றார்.

சர்தார் சளைக்காமல் 'அப்ப ஒன்னு செய்யலாம்..ராத்திரில போய்ட்டு வரட்டும்'.

_________________

சர்தார்ஜி ஒரு புது கைப்பேசி வாங்கினார். உடனே அதில் தன் நண்பர்களை எல்லாம் கூப்பிட்டு "என் கைப்பேசி எண் மாறிவிட்டது. இதற்கு முன் Nokia 3310 தற்போது Nokia 6610"

_________________

இரண்டு சர்தார்கள் ஜாலியாக தனி விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது இரண்டு விமானக்களும் மோதிக் கொண்டு பஞ்சாபிலுள்ள சுடுகாட்டில் விழுந்து இறந்து விட்டனர். உள்ளூர் சர்தார்கள் அவர்களின் சடலங்களை தேடி மண்ணை தோண்டி வருகின்றனர். இதுவரை 500 சடலங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இன்னும் தோண்டிக் கொண்டிருக்கிறார்களாம்

-----------

சர்தார் பெருமையாக தன் நண்பரிடம் சொன்னார்." என் தாத்தா சாகும் போது அமைதியாக எந்த சத்தமும் போடாமல் பஸ்சில் தூக்கத்திலிருக்கும்போது செத்தார். ஆனால் அவர் ஓட்டிக்கொண்டிருந்த பஸ் பயனிகள்தான் அலறிக் கொண்டே செத்தார்கள்"

:lol:

  • தொடங்கியவர்

பஸ்சை பின்னால் தள்ளினால் என்ன ஆகும்?

PIN வளைந்து போகும்.

--------

இரவு முழுக்க யோசிச்சேன்

2 மணியிலிருந்து 3 மணி வரைக்கும் உன்கிட்ட எதுக்கு சொல்லணும்

3 மணியிலிருந்து 4 மணி வரை சொன்னா என்ன தப்புன்னு நினைச்சேன்.

4 மணியிலிருந்து 5 மணி வரைக்கும் யோசிச்சேன் சொன்னா உன்கிட்ட தான் சொல்லணும்னு முடவு பண்ணிட்டேன்

மாட்டேணு சொல்லிராத

குளிச்சிடு இன்னைக்காவது.

---------

மனைவி : ஏங்க சொர்கத்துல கணவன் மனைவி சேர்ந்து வாழ முடியாதாம்ல?

கணவன் : அதனாலதான் அதற்கு பெயர் சொர்க்கம்.

_________________

அவர்: என்னோட மூத்த பையன் பல் டாக்டர் அடுத்தவன் வக்கீல்.

இவர்: அப்போ அவர் சொத்தைப் பிடுங்குபவர், இவர் சொத்தைப் பறிக்கிறவர்னு சொல்லுங்க!

_________________

முதலாளி: நல்ல கேரம்போர்டா பாத்து வாங்கி வரச் சொன்னேனே என்னாச்சி?

தொழிலாளி: எதுவுமே சரியில்லை. எல்லாத்துலயும் ஓட்டை ஒட்டையா இருக்கு.

_________________

எடிசன் கரண்ட்டைக் கண்டுபிடிச்சது நல்லதாப் போச்சி.

ஏன்?

கரண்ட் மட்டும் கண்டுபிடிக்கலைன்னா உலகம் பூரா நட்டு வச்ச மின்கம்பம், ஒயர், பல்பு எல்லாம் வீணாப் போயிருக்குமே.

_________________

என் தங்கச்சி வாஷிங் மெசினுக்குள் தலையை விட்டுட்டா.

ஐயோ அப்புறம் என்ன ஆச்சி?

மூளையை நல்லா சலவை செய்து அனுப்பிருச்சி.

_________________

உனக்கு ஏதாவது மிருக வைத்தியர் தெரியுமா?

இல்லை! எனக்குத் தெரிஞ்ச எல்லா வைத்தியர்களும் மனுசங்க தாம்ப்பா.

_________________

  • தொடங்கியவர்

சாண்டாவும் பாண்டாவும் கைப்பேசிகளை உபயோகப்படுத்தி வெறுத்துப் போயினர். இனிமேல் புறாக்களை பயன்படுத்துவதாக முடுவெடுத்தனர்.

பின்னர் ஒருநாள் பாண்டாவிடம் இருந்து ஒரு புறா எந்த செய்தியும் இல்லாமல் வந்தது.

கோபமுற்ற சாண்டா கைப்பேசியில் பாண்டாவை அழைத்து கத்தினார்.

ஆனால் பாண்டாவோ பொறுமையாக "ஓய் (சர்தா பாணியில் உச்சரிக்கவும்) அது missed கால்"

_________________

ஒரு சர்தார்ஜி இதுவரை விடைதெரியாத "எது முதலில் வந்தது கோழியா? முட்டையா?" என்ற கேள்விக்கு விடை சொல்லிவிட்டார்.

இதோ "ஓய் எதை முதலில் ஆர்டர் பண்ணுகிறோமோ அதுதான் முதலில் வரும்"

_________________

மின்னல் தாக்கி ஒரு சத்தார்ஜி இறந்து போனார். மேலோகத்தில் அவரிடம்:

சித்திரகுப்தன் : சாகும் போதும் சிரித்துக் கொண்டேயிருந்தது நீர் ஒருவர் தானையா

சத்தார்ஜி : ஐயையோ என்னை யாரோ படம் எடுக்கின்றார்கள் என்றல்லோ நினைத்துக் கொண்டிருந்தேன்.

------------

ஒரு அரசியல் மீட்டிங். மீட்டிங் நடக்கும் போது ஒரே துர்வாசனை. பேசிக்கொண்டிருந்த தலைவர் பேச்சை நிறுத்திவிட்டு கூட்டத்தை நோட்டம் விட்டார். ஒரு சர்தார்ஜி பாவமாய் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவரிடமிருந்து தான் ஒரே ஸ்மெல். பேச்சாளர் மூக்கைப் பிடித்துக்கொண்டு, ஸர்தாஜியைப் பார்த்து, ஏய் இனிமே நீ மீட்டிங்குக்கு வந்தா குளிச்சுட்டுத்தான் வரணும் சரியா?

சர்தார்ஜியும் தலையை ஆட்டினார்.

ஒரு மாதம் கழித்து மீண்டும் மீட்டிங். இப்பவும் ஒரே பேட் ஸ்மெல். பேச்சாளர் பார்த்தார். அதே சர்தார்ஜி பாவமாய் உட்கார்ந்து கொண்டிருந்தார். பேச்சாளர் சர்தார்ஜியைப் பார்த்து உன்ன குளிச்சுட்டுத்தான் வரணும்னு சொன்னேனே குளிச்சியா?

குளிச்சேன்.

பின்ன ஏன் இன்னும் பேட் ஸ்மெல் வருது.

சர்தார்ஜி மெதுவாய் சொன்னார். நீங்க துணிய மாத்த சொல்லலையே!!!!

_________________

இரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர். அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர். அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர். மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றி ருந் தார். கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு இந்த சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடியது என்றார்.

_________________

ஒரு முறை ஒரு சர்தார்ஜிக்கு ஒரு SMS வந்தது.

"Sender is Cool

Reader is Fool"

படித்த சர்தார்ஜிக்கு உடனே கோபம் வந்து விட்டது.

உடனே Reply அனுப்பினார்.

"Reader is Cool

Sender is Fool"

_________________

டீச்சர்: ஒரு ஊருல ஒரு வயசான பாட்டி இருந்தாங்க..

குட்டி சர்தார்ஜி: போங்க டீச்சர்! ஒரு வயசுன்னா அது பாட்டி இல்லை, சின்னக் குழந்தை..!

டீச்சர்: ...??

_________________

  • கருத்துக்கள உறவுகள்

ஓரு சர்தார் ஒலம்பிக்குக்குப் போனார். அங்கே அம்பு விடும் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

சர்தார்(வீரனிடம்): பையா! உந்த அம்பில ஒன்று கொடு.

வீரன்: வில்லோடு சேர்த்துக் கொன்டுபோம்.

சர்தார்: வில்லு வேண்டாம். அம்பு மட்டும் போதும்.

வீரன்: என்ன சர்தார் போர்க்களத்தில் வில்லின்றி அம்பு பயன்படாதே!

சர்தார்: இது யாழ்களத்தில் ஒரு வில்லு எம்மைரெம்ப லொள்ளு பண்ணுது, அதுக்கு இது போதும்.

:P :P

;

  • தொடங்கியவர்

நம்மோட வாழ்க்கத் தத்துவம்...

சொந்தமா ஒரு காரு

இரவுன்னா ஒரு பாரு

சில்லுன்னு ரெண்டு பீரு

தேவைபட்டா கொஞ்சம் சோறு

காலைல வயிறு எரிஞ்சா ஒரு கிளாஸ் மோரு

இதுக்குமேல சொன்னா ரொம்ப போரு!

==========================

*நரி குழி பறிக்கும்

நாய் வாலை ஆட்டும்

பெருச்சாளி தீனிக்கு அலையும்

பச்சோந்தி நிறம் மாறும்

என்ன ஆச்சர்யம்...!

இந்த உயர்ந்த குணங்கள் எல்லாமே உன்கிட்ட இருக்கே...

அது எப்படிடா?

=======================

நவக்கிரகங்கள் 9

திசைகள் 8

வானவில் 7

சுவைகள் 6

பஞ்ச பூதங்கள் 5

பருவநிலை 4

மூர்த்திகள் 3

துருவங்கள் 2

இம்சை 1

அது நீதான்!!!

====================

டார்லிங்... மை ஸ்வீர்ட் ஹார்ட்..

உன்னை முதன் முதலில்

பார்த்த அந்த நொடி...

அந்தப் பொழுது...

அந்த மாலை நேரம்...

ச்ச்சே... கொஞ்சம் சுதாரிச்சிருந்தா

நான் தப்பிச்சிருக்கலாம்!!!

========================

தீவிரவாதி: உன் பெயர் என்ன?

விஜயகாந்த்: சிம்மா! நரசிம்மா!

தீவிரவாதி: ப்ரீபெய்டு சிம்மா? போஸ்ட் பெய்டு சிம்மா?

விஜயகாந்த்: ? ? ?

_________________

ஒருவன் தனது நண்பன் வீட்டுக்கு சென்றிருந்தான். அவன் அப்போது வீட்டில் இல்லை. நண்பனின் மனைவியிடம், "ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா?", என்றான். நண்பனின் மனைவியும் எரிச்சலுடன் ஒரு கோப்பையில் சூடாக பால் கொண்டுவந்து கொடுத்தாள். உடனே அங்கிருந்த ஒரு நாய் இவனைச் சுற்றி வந்தது. இவனும், "பரவாயில்லையே, இந்த நாய்க்கு என்னைத் தெரிந்திருக்கிறதே", என்றான். அதற்கு அவள், "நீங்கள் குடித்துக் கொண்டிருப்பது அதன் கோப்பையில்!" என்றாள்.

---------------------

ஒருவன் சாராயக் கடைக்கு வெளியே அமர்ந்திருந்தான். அவன் கையில் ஒரு சாராய பாட்டில் இருந்தது. அப்போது ஒரு லாரியில் வேகமாக வந்து ஒருவன் அவன் பாட்டிலில் இருந்ததைக் குடித்து விட்டு சிரித்தான். முதலாமவன் சோகமாக லாரி ஓட்டுநரைப் பார்த்தான். ஓட்டுநரோ, 'இந்தா பணம். இன்னுமொன்று வாங்கிக் கொள்' என்று மேலும் சிரித்தான்.

முதலாமவன் பேச ஆரம்பித்தான். "நான் இன்று காலை தாமதமாக சென்றேனா, முதலாளி என்னை வசவாக வைதாரா, வேலையை விட்டு விட்டேனா, இங்கு வரலாம் என்று நினைக்கும் போது என்னுடைய பணத்தை வீட்டில் வைத்தது ஞாபகம் வந்ததா, அங்கு சென்று பார்த்த போது என் மனைவி தோட்டக் காரனுடன் இருப்பதைப் பார்த்து ஒரு வேகம் வந்ததா, உடனே இங்கு வந்து சாவதற்காக ஒரு பாட்டில் சாராயம் வாங்கி அதில் விஷம் வாங்கி வைத்திருந்தேனா, அதைத் தான் நீ குடித்தாய்" என்றான்.

_________________

ஒரு குடிகாரன் சாராயக்கடைக்கு வெளியே தள்ளாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அவ்வழியே வந்த ஒருவன், 'என்னப்பா? ஏதாவது பிரச்னையா?' என்றான்.

அதற்கு குடிகாரன், 'நான் யார் தெரியுமா?' என்றான்.

'யாரப்பா நீ?' என்று வழிப்போக்கன் கேட்டான்.

குடிகாரனோ, 'நான் தான் கடவுள். என்னால் அதை நிரூபிக்கவும் முடியும்' என்றான். 'பந்தயம் ரூ.100' என்றான் வழிப்போக்கன்.

பின்னர் குடிகாரன் வழிப்போக்கனையும் கூட்டிக் கொண்டு இருவரும் சாராயக் கடைக்குள் சென்றனர்.

உடனே கடைக்காரன், 'அடக் கடவுளே! நீ திரும்பவும் வந்து விட்டாயா?' என்றான்.

அப்போது குடிகாரன் வழிப்போக்கனைப் பார்த்தான் பாருங்கள் ஒரு பார்வை!

_________________

  • தொடங்கியவர்

ஓரு சர்தார் ஒலம்பிக்குக்குப் போனார். அங்கே அம்பு விடும் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

சர்தார்(வீரனிடம்): பையா! உந்த அம்பில ஒன்று கொடு.

வீரன்: வில்லோடு சேர்த்துக் கொன்டுபோம்.

சர்தார்: வில்லு வேண்டாம். அம்பு மட்டும் போதும்.

வீரன்: என்ன சர்தார் போர்க்களத்தில் வில்லின்றி அம்பு பயன்படாதே!

சர்தார்: இது யாழ்களத்தில் ஒரு வில்லு எம்மைரெம்ப லொள்ளு பண்ணுது, அதுக்கு இது போதும்.

:P :P

;

:o:huh::huh::lol::blink:

  • தொடங்கியவர்

சர்தார் ஜீ ஒரு நாள் தன் உறவினரின மரணச் சடங்கிற்கு தொலைநோக்கியுடன் சென்றார்.

ஏனெனில் இறந்தவர் சர்தார் ஜீ யின் தூரத்து உறவினன் ஆவார்.

-----------

சிறைச்சாலையிலிருந்து ஒரு தமிழன், குஜராத்தி, சர்தார் ஜீ ஆகிய மூவரும் தப்பினர். நீண்ட தூரம் ஒட முடியாத மூவரும் அருகிலிருந்த பழைய மண்டபத்தினுள் சென்று தம்மைத் தாமே கோணிப் பைகளில் கட்டிக்கொண்டனர். சிறிது நேரத்தில் அங்கு பொலீஸ் படையணி வந்து சேர்ந்தது. முதலில் தமிழன் இருந்த மூட்டையை காவல் துறை அதிகாரி காலால் உதைத்தார் அப்போது அவன் “வவ்! வவ்!” எனச் சத்தம் இட்டான். அடுத்து குஜராத்தி “மியாவ்! மியாவ!” எனச் சத்தமிட்டார். இந்த இரு கோணிப் பைகளிலும் முறையே நாய் மற்றும் பூனை இருப்பதாக எண்ணிக்கொண்டனர் காவல் துறையினர். இறுதியாக அவர்கள் சர்தார் ஜீ இருந்த பையை எட்டி உதைத்தார் நீண்ட நேரம் எந்த சத்தமும் வரவில்லை. மீண்டும் ஓங்கி உதைத்த போது “உருளைக் கிழங்கு” என ஒரு சத்தம் வந்தது.

-----------

சர்தார் 1: எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?

சர்தார் 2: மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க

சொன்னார். நான் 'மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட்

கொடுத்துட்டேன்

_________________

நெப்பொலியன் : 'முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.

சர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை. அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்

_________________

சர்தார்1 : Train கண்டுபிடித்தது நல்லாதாப் போச்சிபா...

சர்தார்2 : ஏன்பா?

சர்தார்1 : இல்லாட்டி போட்ட தண்டவாளம் எல்லாம் தண்டமா இல்ல போயிருக்கும்.

_________________

நம்ம சர்தார்ஜி வேலைக்கு அப்ளிகேஷன் போட ஃபார்ம் எழுதிட்டிருக்கார்.பேரு, ஊரு, முகவரி எல்லாமே எழுதிட்டார். நடுவில "Salary Expected" அப்டின்னு வந்திருக்கு , ரொம்ப நேரம் யோசிச்சு தயங்கி தயங்கி கடைசியா எழுதினார் "Yes".

_________________

ஒரு இன்டர்வியூவில்,

மேலாளர்: உங்களுக்கு எம்.எஸ். ஆபிஸ் தெரியுமா?

சர்தார்: தெரியாது சார், அட்ரஸ் குடுங்க எப்படியும் கண்டுபிடிச்சுடிவேன்.

_________________

போன் :- நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எண்ணுக்கு வெளியில் உள்ளார்.

சர்தார்:- தயவு செய்து உள்ளே வரச்சொல்லுங்க ஒரு முக்கியமான் விசயம் பேசனும்.

_________________

  • தொடங்கியவர்

ஒரு சர்தார்ஜிக்கு இடக்கை துண்டாகி விட்டது.ஒரே கையோடு போய்க் கொண்டிருந்தார்.அவரைப்பார ்த்த அவர் நண்பர் "என்ன பல்பீர்?எப்படி இப்படி ஆச்சு? என்று கேட்டார்.

"பேக்டரியில் வேலை செய்தபோது மிஷின் கையை வெட்டி விட்டது" என்றார் பல்பீர்.

"நல்லவேளை.இடக்கை போனது.வலக்கை போயிருந்தால் மிகவும் கஷ்டப்பட்டிருப்பாய்!" என்றார் அந்த நண்பர்

"வலக்கை தான் துண்டாக இருந்தது. நான் கடைசி நிமிடத்தில் மிஷின் இறங்குவதை கவனித்து வலக்கையை எடுத்து விட்டு இடது கையை வைத்தேன்." என பெருமையுடன் சொன்னார் பல்பீர்!!!

_________________

சர்தார்ஜீ ஒருமுறை லாட்ஜில் ரூம் புக் பண்ணினார். ரிசப்ஷனில் இருந்த பெண் ஒரு தாளில் சில தகவல்கள் எழுதச்சொன்னாள். அதில் SEX என்ற இடத்தில் நம்ம் சர்தார்ஜீ ஐந்து நிமிடம் யோசித்து பிறகு

BOTH என்று கொட்டை எழுத்தில் எழுதி அடிக்கோடு போட்டார்.

--------------

சர்தார்ஜியின் லீவ் லெட்டர்

‘என் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. அவளைப் பார்த்துக் கொள்ள கணவர்கள் என்று வேறு யாரும் இல்லாததால் எனக்கு விடுப்பு வேண்டும்’

-----------

சர்தார்ஜீக்கு குழந்தை பிறந்தது. ஆனால் அது பக்கத்து வீட்டுக்காரனைப் போல இருந்தது.சர்தாருக்கு ஒரே குழப்பம். மனைவியிடம் கேட்க பயம். பக்கத்து வீட்டுக்காரனை ப் பார்த்தாலே நம்ம சர்தாருக்கு கை கால் உதறல். ஒரு வழியாக பக்கத்து வீட்டுக்காரன் மனைவியிடம்," உன்னால் என்னைப்போல ஒரு பிள்ளை பெற்றுக் கொடுக்க முடியுமா? நான் ரெடி, நீ ரெடியா ? என்று பெட்ரூமுள் நுழைந்தார். அந்த பெண்ணிற்கோ ஒரே எரிச்சல். போ வெளியே என்றாள். உடனே சர்தாருக்கு கோபம் வந்து கத்தினார்."என் பொண்டாட்டி மட்டும் என்ன கேணச்சியா? உன் வீட்டுக்காரனைப் போல பிள்ளை பெற்றுக் கொடுக்கல ? "

---------------------

டாக்டர்: இந்த நோய் குணமாகணும்னா தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடிக்கணும்!

சர்தார்ஜி: அது மட்டும் முடியாது டாக்டர்!

டாக்டர்: ஏன்?

சர்தார்ஜி: எங்க வீட்டுல 4 டம்ளர்தான் இருக்கு

_________________

  • தொடங்கியவர்

"என் தலை தெரிந்தாலே எழுந்து நின்று கை கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும்", என்றார் ஆசிரியர்.

ஒரு முறை ஆசிரியர் கிணற்றுக்குள் விழுந்து விட்டார். அவரைக் கயிறைக் கட்டி மேலே தூக்கினர் மாணவர்கள். அவர் தலை தெரிந்ததும் கை கூப்பி ..... :lol:

---------------

நோயாளி: டாக்டர் எனக்கு வரவர ஞாபக மறதி அதிமாகிட்டே போகுது. அன்னைக்கு பாருங்க. தியேட்டரில படம் நல்லாயில்லைன்னு வீட்டுக்கு வந்துட்டேன்.

டாக்டர்: இதுல என்ன இருக்கு?

நோயாளி: தியேட்டரில ஆபரேட்டரே நான் தான்.

_________________

இதைப் படிக்கிறவன் லூசு

படிக்காதவன் முட்டாள்

Save பண்ணா கேனை

Erase பன்னா கிறுக்கு

சிரிச்சா கழுதை

கோவப்பட்டால் நாய்

எனக்கே திருப்பி அனுப்பினால் எருமைமாடு

யாருக்காவது forward செய்தால் குரங்கு

எதுவுமே பண்ணலேனா உருப்படாதவன்

இப்ப என்ன பண்ணுவ...........

--------------------

சர்தார் ஜி : நான் பாடும் போது ஒருவர் ஒரு செருப்பை என் மீது வீசினார்

நண்பர் : பாடுறதை நிறுத்திட்டிங்களா

சர்தார் : ஒரு செருப்பை வச்சு என்ன பண்றது அதனால அடுத்த செருப்பை வீசுற வரைக்கும் பாடினேன்

_________________

உங்கள் துக்கங'களையும் கவலைகளையும் படுக்கைக்கு எடுத்துச்செல்லாதீர்கள் என்று பழமொழி உண்டு

ஆனால் என்ன செய்வது இன்னும் பெரும்பாலோனர் தங்கள் மனைவியுடன் தூங்குகின்றனர்.

_________________

சில நிமிடங்கள் மகிழ்ச்சியாய் இருக்க ஒரு பாடலைக்கேள்

சில மணிகள் மகிழ்ச்சியாய் இருக்க ஒரு நல்ல படம் பார்

சில ஆண்டுகள் மகிழ்ச்சியாய் இருக்க ஒரு கல்லூரியில் சேர்

வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாய் இருக்க திருமணம் செய்து கொள்ளாதே

_________________

தங்கச் செயினை உருக்கினா தங்கம் வரும்

வெள்ளிச் செயினை உருக்கினா வெள்ளி வரும்

சைக்கிள் செயினை உருக்கினா சைக்கிள் வருமா

_________________

  • தொடங்கியவர்

ஒரு சர்தார் ஏப்ரல் 1 ந் தேதி பஸ்ஸில் ஏறினார் அவர் செல்ல வேண்டிய இடத்துக்கு டிக்கெட் எடுத்தார்.சிறிது நேரம் கழித்து கண்டக்டரிடம் நான் உங்களை ஏமாற்றி விட்டேன் என்னிடம் மாத பாஸ் உள்ளது என்று சிரித்தராம்

--------

ஒருமுறை சர்தார் சாலையோரமாக சென்ற போது சுவரில் "இதைப்படிப்பவன் முட்டாள்" என எழுதி இருந்தது. உடனே கோபம் கொண்ட சர்தார் அதை அழித்துவிட்டு இப்படி எழுதினார் "இதை எழுதியவன் முட்டாள்"

--------------

ஒரு நேர்காணல்....

கேள்வி கேட்பவர்: மின்சார மோட்டார் எப்படி வேலை செய்கிறது?

சர்தார்: டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர࠯?ர்...

கேள்வி கேட்டவர் (கத்தியபடி): நிறுத்து.

சர்தார்: டுர் டுப் டுப் டுப் டுப்.

_________________

சர்தார் வாங்கிய லாட்டரிச் சீட்டிற்கு 10 கோடி விழுந்தது. அந்தச் சீட்டின் விநியோகஸ்தர், வரிக் கழிவு போக 7 கோடியைத் தந்தார். சர்தார் அவரிடம் கோபப்பட்டார்: "எனக்கு 10 கோடி ரூபாயையும் முழுசாக் கொடுங்க; இல்லாட்டி நான் கொடுத்த 20 ரூபாயைக் கொடுத்திடுங்க

_________________

ஒரு சர்தார்ஜி ஆற்றோரமாய் நடந்து சென்று கொண்டிருந்தார். அதே நேரத்தில் அக்கரையில் ஒரு சர்தார்ஜி நிற்பதைப் பார்த்தார்.

உடனே, சத்தமாக, "ஓய்! அக்கரைக்கு எப்படி வருவது?" என்று கேட்டார்.

அதற்கு அந்த சர்தார்ஜி, "நீங்க அக்கரையில தானே இருக்கீங்க!" அப்படீன்னு சொன்னார்!

_________________

  • தொடங்கியவர்

ஒரு குண்டான சர்தார் உடம்பை குறைக்க வேண்டி மருத்துவரை அணுகினார். மருத்துவர் சர்தாரிடம் தினமும் 10 கி.மீ நடந்தால் உடல் எடை குறையும் என்றார்.

இருபது நாட்களுக்கு பின் சர்தார் மருத்துவரை தொலைபேசியில் அழைத்தார். "டாக்டர், நான் சர்தார் பேசுகிறேன். நீங்க சொன்ன மாதிரி தினமும் 10 கி.மீ நடந்தேன். உடல் எடையும் நஙு குறைந்து விட்டது. இப்போது ஒரு பிரச்சனை. நான் என் வீட்டிலிருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ளேன்" என்றாரே பார்க்கலாம்...........

-------

பள்ளியிலிருந்து திரும்பிய பண்ட்டூ சிங் தனது தந்தையிடம் :

மகன் : அப்பா இன்னிக்கு ஸ்கூல்ல மத்தவங்க எல்லாம் ஸ்பெல்லிங் தப்பா சொல்ல, நான் மட்டும் கரெக்டா சொன்னேன்!

தந்தை : சபாஷ் . . . எல்லாம் நீ சர்தாரா இருப்பதால்தான்!

மகன் : கணக்கு கிளாஸ்ல எல்லாரும் 10 வரைக்கும்தான் சொன்னாங்க, நான் 20 வரைக்கும் சொன்னேன்!

தந்தை : சபாஷ் . . . எல்லாம் நீ சர்தாரா இருப்பதால்தான்!

மகன் : இன்னிக்கு மெடிக்கல் எக்ஸாம் செஞ்சாங்க . . . மத்தவங்களை விட நான் 2 மடங்கு உயரம் அதிகமா இருந்தேன். நான் சர்தாரா இருப்பதால்தானே!

தந்தை : இல்லை மகனே! இதுக்கு காரணம் உனக்கு 31 வயசுங்கறதுதான்!

_________________

துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ.

மூன்று பேர் போனார்கள். அதில் ரக்பீர் சிங்கும் ஒருவர்.

முதலாமவர் தேர்வுக்கு போனார்.

“இயேசுநாதரை கொன்றது யார்?”

“ரோமானியர்கள்”

இரண்டாமவர் போனார். அதே கேள்வி

“யூதர்கள்” என்றார்.

ரக்பீர் சிங் போனார்.

யோசித்துச் சொல்ல எனக்கு நேரம் வேண்டும் என்றார்.

யோசித்து விட்டு நாளை வாருங்கள் என்றார்கள். வீட்டுக்குப் போனார் ரக்பீர். மனைவி கேட்டாள்-இன்டர்வியூ என்ன ஆயிற்று!

“துப்பறிகிற வேலை கிடைத்து விட்டது. இயேசுநாதரை கொன்றது யார் என்பதை துப்பறிந்து கொண்டிருக்கிறேன்” என்றார் ரக்பீர் சிங்

_________________

சோகமாக இருந்தார் ஜஸ்பிர் சிங்.

ஏன் சோகமாக இருக்கிறாய்?-பல்பீர் சிங்.

பந்தயத்தில் 1000 ரூபாய் தோற்றேன்.

என்ன பந்தயம்?

நேற்று இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி. இந்தியா ஜெயிக்கும் என்று 500 ரூபாய் பந்தயம் கட்டினேன். தோற்றுப் போனேன்.

500 ரூபாய் தானே தோற்றாய். 1000 ரூபாய் என்கிறாயே?

‘ஹைலைட்ஸ் காட்டினார்கள்’ அதிலும் பந்தயம் கட்டினேன்

------------

ஒரு சர்தார்ஜியின் கழுதை தொலைந்து போனது.

சர்தார்ஜி கடவுளுக்கு நன்றி சொன்னான்.

‘கழுதை தொலைந்ததற்கு ஏன் கடவுளுக்கு நன்றி சொன்னாய்?’-நண்பன் கேட்டான்.

‘நல்ல வேளை நான் அதில் சவாரி செய்யவில்லை. செய்திருந்தால் நானும் தொலைந்து போயிருப்பேனே!’

_________________

இன்டர்வியூவர் : நீங்க மூன்றாவது மாடில இருக்கிறதா கற்பனை பண்ணிக்கோங்க. அப்ப திடீர்னு தீப்பிடிச்சுருது! எப்படி தப்பிப்பீங்க?

சர்தார் : ரொம்ப ஈஸி! டக்குனு கற்பனை பண்றதை நிறுத்திடுவேன்.

_________________

நீங்க கூப்பிட வேண்டிய நபர் தூரத்திலிருந்தால் எப்படி கூப்பிடுவீர்கள்

சர்:- நான் பெரிய லென்ஸ வச்சிருக்கேன். பாத்தா கிட்டக்க தெரிவாங்க கூப்பிட்டுடுவேன்

  • தொடங்கியவர்

நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து சர்தார்ஜி பேசிக்கொண்டிருந்தார். நண்பர் கேட்டார்.

“25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?”

“என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்”

“வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?”

“அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்”

_________________

ஒட்டிப்பிறந்த இரட்டையர்"களில் ஒருவன் இறந்து போனான்.

துக்கம் கேட்க போனார் சஞ்சய் சிங். அழுது கொண்டிருந்த இரட்டையர்களில் ஒருவனிடம் போய்,

“இறந்தது நீயா உன் சகோதரனா?”

_________________

சர்தார்ஜி சென்ட்ரல் ஸ்டேஷன் போனார். அருகிலிருந்தவரை கேட்டார்.

“ஹெளராஹ் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு புறப்படும்?”

10.30 மணி

பெங்களூர் மெயில்?

11.25

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்?

1.15

சதாப்தி எக்ஸ்பிரஸ்?

பக்கத்திலிருந்தவர் எரிச்சலோடு-3.00 மணிக்கு

பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்?

பொறுமையிழந்தார் அடுத்தவர்.

“நீங்கள் எந்த ஊர் போக வேண்டும்?”

“இல்லை. நான் தண்டவாளத்தைத் தாண்டணும்”

_________________

சிங் 2 லட்ச ரூபாய் முதலீடு செஞ்சு நஷ்டப்பட்டாரா? ஏன்?

பஞ்சாப்பில் போய் சலூன் கடை ஆரம்பிச்சிருக்காரு.

_________________

தயவுசெய்து என்னை புரிந்து கொள்.

இனிமேல் என்னை தொந்தரவு செய்யாதே.

என்னை தனியாக இருக்க விடு.

நேற்றிரவு உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததில் தூக்கமே இல்லை.

அதனால் தயவுசெய்து எனது வாழ்க்கையோடு விளையாடாதே!

சர்தார்ஜி கொசுவிடம் கெஞ்சி கொண்டிருந்தார்.

-------------

சந்தா சிங் தன் வாழ்க்கையில முதல் முறையா விமானத்துல ஏறுறாரு. விமானத்துல ஏறுனதும் விமானப் பணிப்பெண் சொல்றாங்க இந்த விமானம் ஒரு போயிங் விமானம்னு. முதல்முறையா விமானத்தைப் பாத்த சந்தோஷத்துல சந்தாசிங் "போயிங்! போயிங்! போயிங்!"னு கத்தி குதிச்சு ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பிக்கிறாரு. இவுரு கத்துற கத்து விமானம் ஓட்டிட்டு இருக்குற பைலட் காது வரைக்கும் போயிடுது. அவரு கோவமா வெளியே வந்து "பீ சைலண்ட்" அப்படிங்குறாரு. ஒடனே சர்தார்ஜி கத்துறாரு "ஓயிங்! ஓயிங்! ஓயிங்!"

_________________

ரெண்டு சர்தார்ஜிகள் ஒரு பரிசோதனைக் கூடத்து வாசல்ல உக்காந்திருக்காங்க. அதுல ஒரு சர்தார்ஜி அழுதுட்டு இருக்காராம். ரெண்டாவது சர்தார்ஜி அதப் பாத்து "ஏம்பா அழுவுறே" அப்படின்னாராம். அதுக்கு முதல் சர்தார்ஜி சொன்னாராம் "நான் பிள்ட் டெஸ்டுக்காக வந்தேன். ரத்தம் எடுக்கறதுக்காக விரல் நுனியை லேசாக் கீறுனாங்க. பயங்கரமா வலிக்குது அதான் அழுவுறேன்" அப்படின்னாராம். இதை கேட்ட ரெண்டாவது சர்தார்ஜி "ஓ"ன்னு சத்தம் போட்டு அழ ஆரம்பிச்சிட்டாராம். முதலாமவரு கேக்கறாரு"நீ ஏம்பா இப்பிடி அழுவுறே?" அதுக்கு ரெண்டாவது சர்தார்ஜி "நீயாச்சும் பிளட் டெஸ்டுக்குத் தான் வந்தே...நான் யூரின் டெஸ்டுக்கு வந்துருக்கேன்பா"ன்னாராம் .

_________________

  • தொடங்கியவர்

புது சட்டை...

புது பேண்ட்டூ.......

புது வாட்ச்சூ......

புது மொபைலூ.....

புது ஷீ....

இரவல் வாங்கினா

திருப்பி கொடுத்துடனும்டா

நண்பா.....

_________________

அண்ணாமலை வசனம்:-

உன்னோட காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோ... இந்த நாள் என்னோட கார்ட ரீசார்ஜ் பண்ணி உன்னைவிட அதிகமா எஸ்.எம்.எஸ் அனுப்பி, நீ எப்படி எனக்கு தொல்லை கொடுத்தியோ, அதே மாதிரி நானும் கொடுக்கலை...... நான் "மலை" இல்லடா.

கூட்டிக்கழிச்சுப் பாரு கணக்கு சரியா வரும்!"

_________________

உனக்கு மட்டும் ஒரு கேள்வி

நீ அதற்கு தெரியும் அல்லது தெரியாது

என்று ம்டும் பதில் சொன்னால் போதும்

கேள்வி இதுதான்

நீ லூசுன்னு உன் நண்பர்கள் அனைவருக்கும் தெரியுமா?

_________________

வெளிநாட்டுக்கு பறந்த முதல் இந்திய பெண் யார்?

சீதை

பொதுஅறிவை வளர்த்துக்கங்கப்பா

சூப்பர் பிகருக்கும் சப்பை பிகருக்கும் என்ன வித்தியாசம்?

நீ பார்க்கிறதெல்லாம் சூப்பப் பிகரு உன்னை பார்க்கிறதெல்லாம் சப்பை பிகரு.

_________________

பால் கொடுப்பவர் பால்காரர்,

தபால் கொடுப்பவர் தபால்காரர்,

அப்படீன்னா? பிச்சை கொடுப்பவர் பிச்சைக்காரரா?

_________________

நான் கல்யாணம் செஞ்சுக்க போறேன், அதுவும் பதிவு திருமணம் கோவை பதிவு திருமண அலுவலகத்தில்,

என்னை மன்னிக்க வேண்டும் உனக்கு இதை sms மூலமாக தெரிவிப்பதற்கு...., ஏனெனில் இங்கே மிக பெரிய அளவில் பிரச்சினைகள் உள்ளது.

நான் சில முக்கிய நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளேன்.

எனவே கண்டிப்பாக கோவை பதிவு திருமண அலுவலகத்திற்கு காலை 10 மணி அளவிற்கு வா!!!!!

பரிசுபொருள் அதுவும் வேண்டாம்,

திருமணம் செய்வதற்கு மட்டும் ஒரு பெண்ணை கொணர்ந்து வா !!! அது போதும்....

_________________

என் பேரு மெசெஜ் ராமசாமி

என்னோட தொழில் பொழுது போக்கு எல்லாமே லூசுகளுக்கு மெஸேஜ் அணுப்புறதுதான்.

முடியாதுங்கிறீங்களா என்னால முடியும்

தன்னம்பிக்கைக்கும் தலைகனத்துக்கும் மெஸேஜ் அளவுக்கு தான் வித்தியாசம்

தலைக்கனம்றது என்னால மட்டும் தான் லூசுக்கு மெஸேஜ் அனுப்ப முடியும்ன்றது

தன்னம்பிக்கைன்றது என்னாலயும் லூசுக்கு மெஸேஜ் அனுப்ப முடியும்ன்றது.

என்னோட லட்சியம் எல்லா லூசுக்கும் என்னோட மெஸேஜ் போய்சேரனும்றது தான்.

_________________

பெண்மனி:- பின்னாடி பிகர் இருந்தா கண்ணு தெரியாதான்னு லாரி டிரைவர் திட்டீட்டே போறான் நீங்க சிரிக்கரீங்களே!!!!!!!!!!???????????

கணவன் :- உன்னை போய் பிகர்ன்னு சொன்னான்ல அதுதான் அவனுக்குதான், கண்ணு தெரியலே!!!!

_________________

  • தொடங்கியவர்

விமானத்தில் இருந்து லண்டன் வந்திறங்கிய சந்தாசிங் அடுத்த நாள் ஒரு கடற்கரைக்கு போனார். போனவர் கடற்கரையில் நடந்து திரிந்த களைப்பால் கடற்கரை மணலின் மேல் படுத்திருந்தார்....

அப்போது அவ்வளியால் போன ஆங்கிலக்காரர் சந்தாசிங்கைப் பார்த்து ஆர்யு ''ரிலாக்ச்சிங்''? என்று கேட்க அவருக்கு ஆங்கிலம் புரியவில்லை யாரோ ரிலாக்சிங் என்பவரை தேடுகின்றார்களென்று எண்ணி நோ....சந்தாசிங் என்றார் ... இப்படியே அந்தப் பக்கமாகப் போகின்றவர்கள் எல்லாம் கேட்க அவரும் அப்படியே பதிலளித்தார் பின்னர் தனது இடத்தை மாற்றி வேறு இடத்தில் போய் படுத்திருக்க அந்த இடத்திலும் அதே நிலமை....

வெறுப்படைந்து வீடு திரும்புகையில் தனது சிங் இனத்தினை சேர்ந்த ஒருவர் கடற்கரை மணலில் படுத்திருப்பதனைக் கண்டார் அவரின் அருகில் சென்று ஆர்யு ரிலாக்சிங் என வினவ படுத்திருந்த கிரிசிங் என்பவர் 'யா' என்று பதிலளிக்க சந்தாசிங்கிற்கு வந்ததே கோபம் தனது மொழியில் 'உன்னை எல்லோரும் தேடிக் கொண்டிருக்கின்றார்கள் நீ இங்கிருந்து என்ன செய்கின்றாய்' எனப்பேச கிரிசிங் திகைத்துப்போய் நின்றார்

--------------

நம்ம சர்தார்ஜி ஒரு வெண்ட்ரிகுலரிஸ்ட் ஷோவுக்கு போனார் அங்க அந்த ஆள் ஒரு பொம்மைய கைல வச்சிகிட்டு சர்தார்ஜி ஜோக் சொல்லி கிண்டல் அடிச்சாரு நம்ம சர்தார் எந்திரிச்சி

"எப்பவுமே ஏன் எங்களை கிண்டல் பன்னி முட்டாள் மாதிரி காட்டறே? உனக்கு யார் இந்த உரிமை குடுத்ததுன்னு" சத்தம் போட்டார் நம்ம ஆசாமி.

ஷோ நடத்துரவர் உடனே...

"மன்னிக்கனும் இனிமே இப்படி செய்யமாட்டேன் நீங்க கத்தாதீங்கன்னு சொன்னார்..."

அதுக்கு சர்தார் சொன்னாரு...

" நீ வாய மூடு நான் ஒன் மடில இருக்குற ஆள்கிட்ட பேசிக்கிட்டிருக்கேன்னார࠯? "

_________________

ஒரு நாள் பாண்டாசிங் ரோட்ல நடந்து போய்கிட்டிருந்தார். அப்போ ஒரு லாரியை இன்னொரு லாரி கயிறு கட்டி டோ பண்ணி போய்கிட்டு இருந்தது. அதை பார்த்த நம்மாளு,

"ஐயோ! ஐயோ!! ஒரு சின்ன்ன்ன கயிற கொண்டு போறதுக்கு ரெண்டு லாரியா?"

_________________

ஒருநாள் சென்னை விமான நிலையத்தில் சர்தார் உக்கார்ந்து இருந்தபோது இருவர் சண்டை போட்டுகொண்டு இருப்பதை வேடிக்கை பார்த்தார்.

அப்போ ஒருவன் சொன்னான்:- அடிச்சா அமெரிக்காவிலே போயி விழுவடா என...

அடுத்தவன் :- நான் உதைச்சா நீ ஆப்பிரிக்கா போயிடுவே என எதிர்வாதம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போ சர்தார் இதை பார்த்துட்டு

அவர்களிடம் என்னை கொஞ்சம் லேசா அடிங்க நான் தில்லி வரை போயாகனும்

-------------

சர்தார்ஜி ஒருமுறை இங்கிலாந்துக்கு விமானத்தில் பயணம் செய்யவேண்டி வந்தது. பிரிட்டீஷ் விமானம் அது. சாப்பாட்டு நேரத்தில் மேல்நாட்டு உணவு வகைகளை பறிமாறினார் விமான பணிப்பெண். தனக்கு அவை வேண்டாம் என அன்போடு மறுத்துவிட்டு தான் மூட்டையில் கட்டிக் கொண்டு வந்திருந்த ரொட்டியை எடுத்து திங்க ஆரம்பித்தார்.

அதனைப் பார்த்த அப்பெண், "இது என்ன?" என்று கேட்டார்.

"ஓ.. இதுவா? ப்ரெட் இண்டியா" என்றார்!

அடுத்து வந்த ஐஸ்க்ரீமையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டு தன் பையில் இருந்து ஒரு வெல்லக் கட்டியை எடுத்துத் தின்றார்.

அது என்னவென்று கேட்ட பணிப் பெண்ணிடம், "இது ஸ்வீட் இண்டியா!" என்றார்.

நிறைய சாப்பிட்டதால் கொஞ்ச நேரம் சென்றதும் பெரிய ஏப்பம் ஒன்றை விட்டார் சர்தார். "இது என்ன?" என்று மீண்டும் கேட்டார் அப் பணிப்பெண்.

"ஏர் இண்டியா!" என்றார் சர்தார்!:lol:

_________________

  • தொடங்கியவர்

நீ ஒரு மலர்

ஆங்கிலத்தில் ஃபிளவர்

சம்ஸ்கிருதத்தில் புஷ்ப்

அரபியில் ஜுரா

உருதில் குல்

ரொம்ப சந்தோஷப்படாதே!

ஏன்னா,

இந்தியில் நீ ஒரு ஃபூல்(Fool).

_________________

வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம்,

1000 துனபம் வரலாம்.

ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ!

1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1

தெரிஞ்சுகிட்டியா?

_________________

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

_________________

பஸ் ஸ்டாப் பக்கத்திலே நின்னா, பஸ் வரும்.

புல் ஸ்டாப் பக்கத்திலே நின்னா, புல் வருமா?

யோசிச்சுடீங்களா? சரி குவார்ட்டர் கூட வராது

_________________

கவனமாக படிக்கவும்!!

கஜஜேகெ கொஹாடு லொகு கிகா கொஜுகு குகாக் ஈகோகே கஜெவாஜோ ஜயூமோகு ககாஜா குஜாகி ஊஜீகா காவியூக் ஜரக்யகோ

கொஹடி ஜேகெயூ மொஜியாஹு கொர்க் ஹூரம் கோவிர்ஜெ விக்ரரபா ஹை

வாழ்த்துக்கள்.

நீங்கள் குரங்குகளின் மொழியை கற்றுக் கொண்டீர்கள். வந்து உங்கள் வாழைப்பழத்தை வாங்கிச் செல்லுங்கள்.

_________________

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.