Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

BLOOD DIAMONDநண்பர்களே உங்களில்யார்யார்

Featured Replies

நண்பர்களே உங்களில்யார்யார் இவ் திரைப்படத்தை என்னை பொறுத்தவரை இது படமல்ல காவியம் பார்த்தநீர்கள் பார்காதவர்கள் தயவுசெய்து உடனே பார்க்கவும்.

http://blooddiamondmovie.warnerbros.com/

wallpaper31280x960zd9.jpg

post-543-1172426086_thumb.jpg

post-543-1172426145_thumb.jpg

post-543-1172426293_thumb.jpg

Edited by விது

எங்கள் யாழ் கள தியேட்டர் ஓனர்கள் பெப்சி மற்றும் தமிழ் மாட்டுப் பையனிடம் (Pepsi & TamilCowBoy)இந்த படத்தை விரைவில் ஒன்லைனில் ரிலீசாக்கும்படி கேட்டுப் பார்க்கவேண்டும். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவனமப்பா கம்பியெண்ண வேண்டிவரும். B)

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தேன் (ஓசியில்தான்).. லைபீரியாவில் நடந்த உண்மைச் சம்பவங்களை (சிறுவர்களை படையில் சேர்த்து அவர்களின் எதிர்காலத்தைப் பாழடித்தல் நன்றாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது) வைத்துத் தயாரிக்கப் ஹொலிவூட் பிரமாண்டம். ஆனால் காவியம் என்று சொல்லமுடியாது..

சந்தேகமே இல்லை. உந்தக் குப்பையிலும் பார்க்க வல்லவன் எவ்வளவோ நல்லம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இந்தப்படத்துக்கு மினைக்கடத்தேவையில்லை.

  • தொடங்கியவர்

பார்த்தேன் (ஓசியில்தான்).. லைபீரியாவில் நடந்த உண்மைச் சம்பவங்களை (சிறுவர்களை படையில் சேர்த்து அவர்களின் எதிர்காலத்தைப் பாழடித்தல் நன்றாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது) வைத்துத் தயாரிக்கப் ஹொலிவூட் பிரமாண்டம். ஆனால் காவியம் என்று சொல்லமுடியாது..

என்ன அப்படியாயின் இப்படத்தை நீங்கள் தனிமையாகவிருந்து ரசித்து பார்கவில்லை தானே தயவு செய்து எனக்காக இன்னொரு முறை பார்க்கவும்(முடிந்தால் ஒரு தகப்பன்னாகவேனும் முயற்சிக்கவும்) உங்கள்கருத்த்து எனக்கு மிகுந்த ஏமார்ரத்தையழித்துள்ளது தயவுசெய்து மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அப்படியாயின் இப்படத்தை நீங்கள் தனிமையாகவிருந்து ரசித்து பார்கவில்லை தானே தயவு செய்து எனக்காக இன்னொரு முறை பார்க்கவும்(முடிந்தால் ஒரு தகப்பன்னாகவேனும் முயற்சிக்கவும்) உங்கள்கருத்த்து எனக்கு மிகுந்த ஏமார்ரத்தையழித்துள்ளது தயவுசெய்து மன்னிக்கவும்.

ஐயகோ ஐயகோ என்ன கொடுமை இது?????????

  • கருத்துக்கள உறவுகள்

தனியாகத்தான் பார்த்தேன்.. ஆனால் திரும்பப் பார்க்கும் அளவிற்கு அப்படியொன்றும் மிகப்பாரிய தாக்கத்தை மனதில் ஏற்படுத்தவில்லை.. எல்லாத் தகப்பன்மாரும்தான் தன் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் ஆசைப்படுகின்றார்கள் (அதற்குத்தானே தமிழில் "தவமாய் தவமிருந்து" என்று ஒரு படம் உள்ளது).. ஒரு தகப்பன் தன் பிள்ளையைக் காப்பாற்றுவதைத்தான் ஹொலிவூட்டால் காட்டமுடியும்.. அதற்காக லைபீரியாவின் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டனவா? உள்நாட்டு யுத்தம் ஓய்ந்துவிட்டாலும், வைரம் தற்போதும் களவாக அகழ்ந்து கடத்தப்படுகின்றது.. ஆயுதங்கள் தற்போதும் களவாக விற்கப்படுகின்றன.. ஆபிரிக்கமண் தனது தேவைக்கு மேலான இயற்கைவளங்களைக் கொண்டுள்ளது; எனினும் ஆபிரிக்க மக்கள் தொடர்ந்தும் வறுமையில்தான் வாழப்போகின்றார்கள். இதற்கான காரணம் மிகவும் வெளிப்படையானது: வளர்ந்த நாடுகள் (தற்போது சீனாவும்) தொடர்ந்தும் ஆபிரிக்க மண்ணைச் சுரண்டிக் கொண்டே இருக்கும், அதற்காக அங்கு பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.. இதற்கான தீர்வுகளைப் பற்றி படம் எதுவும் சொல்லவில்லை.. வைரம் கடத்துவதைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட Kimberley Process உண்மையில் இந்த நடவடிக்கைகளை நிறுத்தப் போகின்றதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விது அண்ணா நானும் இந்த படத்த பார்த்தனான்..... தியேட்டரில போய்த்தான் பார்த்தனான். பொதுவா வாற hollywood மசாலாப் படங்களுக்குள்ள இது பறவால்ல. கிருபன் அண்ணா சொன்னமாதிரி பிரமாண்டமான காட்சி அமைப்புக்கள்....... வைரக்கடத்தல்.... குழந்தைப்போராளியள்..... எண்டு கதை போகுது..... தகப்பனா நடிச்ச Djimon Hounsou நல்லா நடிச்சிருக்கிறார்....... பொதுவா எல்லாருமே நல்லா நடிச்சிருக்கினம்.... அதில இன்னொண்ட படத்தின்ர hero Leonardo DiCaprio படம் முடிய 5 நிமிசத்துக்கு முதல் செத்துப் போறார்..... இவர் இதுக்கு முதல் நடிச்ச இன்னொரு படத்திலயும் படம் முடிய 5 நிமிசத்துக்கு முதல் செத்து போட்டார்.......... :icon_idea:

சில இடங்களில வசனங்கள் நல்லா இருக்கு.... சுருக்கமான நறுக்கான வசனங்கள்......

மற்றது கடைசில Leonardo DiCaprio சாகிறதுக்கு முதல் அந்த வைரத்த Djimon Hounsouவிட்ட குடுத்திட்டு மண்ணை அள்ளி பாக்கிறது எங்கட சமூகத்துக்கும் பொருந்துற விசயமா இருக்கும்... அதப்போல தன்ர பிள்ளையை டொக்டராக்கி பாக்கணும் எண்டு படிப்பிக்கிற அந்த தகப்பன்ர மனநிலை.... அதப்போல அந்த சிறுவன் குழந்தைப்போராளியான பிறகு அவன தேடி அலையேக்க இருக்கிற தகப்பன்ர உணர்வு எண்ட எல்லாம் ஏதோ ஒருவகைல எங்கட சமூகத்துக்கும் பொருந்துற மாதிரி இருக்க.....

ஆனா படத்தில பல விசயங்கள் மறைக்கப்பட்டிருக்கு....படத்தி

  • 4 weeks later...

நன்றி விது,

நீங்கள் இதை இங்கு குறிப்பிட முன்னரே தற்செயலாக நான் இதனை பார்த்தேன்.

இது என்னை மிகவும் பாதித்தது. ஆரம்பத்தில் வரும் கட்டங்கள் மிகவும் வலித்தது. அதனை மீண்டும் மீண்டும் பின்னோக்கி பார்த்தேன். யாருடையதோ வெறிகளுக்காக நாமும் பயன்படுத்தப்படுகறோமோ என்ற ஒரு பயம் சூழ்ந்து கொண்டது. 100 வீதம் என்றில்லாவிடினும் ஏதோ ஒரு வீதத்தில் இது எமது மண்ணிலும் நடக்கிறது என்பதை மறுக்க முடியவில்லை.

மீண்டும் சொல்கிறேன் நெஞ்சம் வலிக்கிறது சியராலியோன் மக்களுக்காகவும் எங்களுக்காகவும்!

அன்புடன்,

Edited by சாணக்கியன்

விது திருட்டு விசீடி கிடைப்பதற்க்கு ஆவனை செய்யவும்

விது திருட்டு விசீடி கிடைப்பதற்க்கு ஆவனை செய்யவும்

:angry: :angry: :angry:

:angry: :angry: :angry:

:unsure::unsure::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.