Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகைப்பட ஆர்வலர்கள் வாங்க வேண்டிய முதல் கேமரா... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

Featured Replies

புகைப்பட ஆர்வலர்கள் வாங்க வேண்டிய முதல் கேமரா... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

‘தடி எடுத்த எல்லோரும் தண்டல்காரன் ஆகிவிட முடியாது’ என்பார்கள். ஆனால், கேமரா வைத்திருக்கிற எல்லோரும் புகைப்படக்காரர் ஆகிவிடுகிறார்கள். திருமணம் போன்ற விசேஷ வீடுகளில் யார் புகைப்படம் எடுப்பவர் என்பதைக் கண்டுபிடிக்கவே சிரமமாய் இருக்கிறது. புகைப்படக்கலையைப் பொறுத்தவரை பிலிம் ரோலில் இருந்து டிஜிட்டலுக்கு மாறியதே மிகப் பெரிய புரட்சிதான். இப்போது 15 ஆயிரத்தில் இருந்து DSLR கேமராக்கள் சந்தையில் கிடைக்க ஆரம்பித்து விட்டன. ஊட்டிக்கோ கொடைக்கானலுக்கோ சுற்றுலா என முடிவெடுத்துவிட்டால் முதலில் லிஸ்ட்டில் வருவது கேமராதான். இன்றயை காலத்தில் எல்லோர் வீடுகளிலும் ஒரு DSLR  கேமரா இருக்கிறது. புகைப்படத் துறையில் அடியெடுத்து வைக்கிறவர்கள் ஆரம்பத்தில் செய்ய வேண்டியது என்ன, வாங்க வேண்டிய கேமராக்கள் என்ன என்பது பற்றிய அலசல் இது.

புகைப்பட

புகைப்படத்துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிபவரும், புகைப்படம் பற்றிய பயிற்சி வகுப்பு எடுப்பவருமான திரு.சாய் ரகுநாத்திடம் பேசிய போது  "நான் போகிற இடங்களில் எல்லாம் வலியுறுத்துகின்ற ஒரே விஷயம், கேமராவுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்காதீங்க, எப்போதும் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் பழகுங்க. காரணம் நமக்காகத்தான் கேமராவே தவிர கேமராவுக்காக நாம இல்ல. உலக அளவில் பல விருதுகளைப் பெற்ற  புகைப்படங்கள் சாதாரண மொபைல் போனில் எடுக்கப்பட்டதுதான், அதற்கான சான்றுகள் கூட இருக்கு. வியட்நாம் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த புகைப்படத்தைப் பற்றித்தான் இப்போது வரை நாம் பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர அந்தப் புகைப்படத்தை எடுத்த  கேமராவைப் பற்றி அல்ல.

விருதுக்குப் படத்தைத் தேர்ந்தெடுப்பவங்க எந்த கேமராவுல எடுத்தது, எந்த லென்ஸில் எடுத்தது என்றெல்லாம் பார்க்க மாட்டாங்க. படத்தோட அழகு, ஃப்ரேமிங், உள்ளடக்கம் மட்டும்தான் பாப்பாங்க. புதுசா புகைப்படத்துறைக்கு வருகிற எல்லோருக்கும் நான் சொல்வது எல்லாவற்றையும் விஷுவலா பாருங்க. ஒரு ஃப்ரேம்க்குள்ள என்ன இருக்கு, அதைத் தாண்டி வெளிய என்ன இருக்குனு பாருங்க. கேமரா பற்றிய புரிதல்களோட இருங்க. புகைப்படம் சார்ந்த பயிற்சி வகுப்புகளுக்கு போங்க. சும்மா இருக்குற நேரத்துல கேமரா சார்ந்து இயங்கிக் கொண்டே இருங்க. எப்போதும் புகைப்படம் சார்ந்த நமது ரசனைக்கும், காட்சி அமைப்பிற்கும் முக்கியத்துவம் குடுங்க. கேமரா என்பது என்னைப் பொறுத்தவரை இரண்டாம்பட்சமே, நம்பிக்கையோடு செயல்பட்டால் செல்போனில் கூட அழகான படங்களை எடுக்கலாம். இன்றைய நவீன காலத்தில் அடிப்படையான கேமராக்கள் எல்லாமே அதிக வசதிகளைக் கொண்ட கேமராக்களாகத்தான் இருக்கின்றன. மோசமான புகைப்படக்காரர்கள்தான் இருக்கிறார்கள். மோசமான கேமரா என்ற ஒன்றே இப்போது அரிதுதான். அதனால், உங்கள் தேவை எது என்பதை அறிந்து அதற்கேற்ற கேமரா வாங்குங்கள்” என்கிறார்.

தொழில்முறை புகைப்படக்காரர்களுக்குப் பல லட்சங்களில் கேமரா என்பது தேவையான ஒன்றுதான். ஆனால் புதிதாக போட்டோகிராபி உலகத்திற்குள் வருகிறவர்கள் எந்த கேமரா வாங்குவது, எப்படிக் கற்றுக்கொள்வது என்பதைப் பற்றி கேமரா உபகரணங்கள் சார்ந்த கடை நடத்தி வரும் சென்னை கேமரா வினோத்திடம் கேட்டோம்.

“ஆரம்ப நிலையில் இந்தத் துறைக்குள் வருகிறவர்கள் கெனான் 1300D அல்லது நிக்கான் D 3300 வாங்கலாம். அதனோடு சேர்ந்து கிட் லென்சும் தருகிறார்கள். சில சலுகைகளாக டெலி லென்ஸும்  தருகிறார்கள். முதலில் கிட் லென்ஸில் பழகுவதே சிறந்தது. கேமரா பற்றிய நுணுக்கங்கள் தெரிந்தபிறகு அடுத்தக் கட்ட அப்டேட்டுகளுக்குப் போகலாம். ஆரம்ப நிலையில் 5D போன்ற விலை உயர்ந்த கேமராக்களை வாங்கி பயன்படுத்துவது என்பது ஆடி காரை வாங்கி டிரைவிங் பழகுவதற்கு ஒப்பானது. எல்லா ஊர்களிலும் இப்போது வீக் எண்ட் க்ளிக்கர்ஸ் என்கிற பெயரில்  புகைப்படம் சார்ந்து இயங்குகிறவர்கள் நிகழ்வுகள் நடத்துகிறார்கள். அதில் கலந்துகொள்ளலாம்.  அவர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுப்பது பற்றிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளலாம்” என்கிறார்.

புகைப்பட

 

ஒளிப்பதிவின் வேத நூலாகப் பார்க்கப்படும் 5C என்ற நூலை புகைப்படத்துறை சார்ந்த எல்லோருமே பரிந்துரைக்கிறார்கள். இவைத் தவிர்த்து கேமரா சார்ந்த பல  நூல்களை வாங்கிப் படிக்கலாம். 30 ஆயிரம் விலையுள்ள கேமராவில் புகைப்படம் பற்றிய அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொண்டு தொழில்முறை புகைப்படக்காரராக மாறும் போது 5D போன்ற கேமராக்களை வாங்கலாம். மாறாக நான் பொழுது போக்கிற்காகத்தான் கேமரா வாங்குகிறேன் என்றால் 50 ஆயிரத்திற்குள் இருக்கிற கேமராக்கள் போதும் என்கிறார்கள் கேமரா நிபுணர்கள். கேமரா என்பது இன்றைய காலத்தில் மனிதனின் ஆறாவது புலன். அதை எப்படி கையாள்கிறோம் என்பதில் இருக்கிறது நமது நலன்.

http://www.vikatan.com/news/information-technology/93934-things-to-consider-by-budding-photographers-before-buying-a-first-camera.html

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவ பதிவு

 

cam0092.jpg

 

நான் கடந்த 27ந் தேதி ரமலான் பண்டிகை முடிந்த மறுநாள், சலுகை விலையில் நிகான்(Nikon) காமெரா விற்பதாக அறிவுப்புகள் வெளிவரவே, நிகான் D5300 இரு லென்ஸ் தொகுப்புகளோடு வாங்கினேன். வாங்கிய பின்புதான் தெரிந்தது அடிப்படை லென்ஸ்ஸில்(18-55mm) VR எனப்படும் வசதி இல்லை என்பது. மற்றொரு  லென்ஸ்ஸில் (55-200mm) VR உள்ளது.

வாங்கிய ஷோரூமில் விசாரித்ததில், "VR (Vibration Reduction) இல்லாததினால்தான் இந்த சலுகை விலை, இல்லையேல் இதன் பெறுமதி விலை இன்னும் அதிகம்!" என சொல்லிவிட்டு, "உங்களுக்கு கொடுத்த மற்றொரு லென்ஸில்(55-200mm) VR உள்ளதுதானே, அதை பயன்படுத்துங்கள்!" எனக் கூறிவிட்டு "உங்களைப் பார்த்தால் இளமையாக(?)த்தானே இருக்கிறீர்கள், VR என்பது கை நடுக்கம் உள்ளவர்கள் காமிராவை கையாளும்போது படம் தெளிவில்லாமல் பல பிம்பங்கள் பதிவதை தடுக்கவே..!" என விளக்கினார்.

 

D3S_4440-vr-vs-non-vr.jpg

 

இப்பொழுது யோசித்துக்கொண்டிருக்கிறேன், 'மிகக்குறுகிய தூரத்திலுள்ளவற்றை எப்படி கை நடுக்கமில்லாமல் படமெடுப்பது..? மற்றொரு VR வசதியுள்ள லென்ஸ் வாங்கவேண்டி வருமோ..?' காமிராவை பழகிவிட்டு முடிவெடுக்கலாமென உள்ளேன்!

படிப்பினை:

குறுகியகால சலுகை விலையில் கிடைத்தாலும், பதம் பார்த்து பொருள் வாங்க வேண்டும்!

 

  • கருத்துக்கள உறவுகள்

 

img_lenses.png

கீழேயுள்ள இணைப்பில் நிகான்(Nikon) லென்ஸ்களின் வகைகளைப் படித்து, விலைகளை பார்த்தால் தலை சுத்துகிறது..

 

http://imaging.nikon.com/lineup/lens/

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

படிப்பினை:

குறுகியகால சலுகை விலையில் கிடைத்தாலும், பதம் பார்த்து பொருள் வாங்க வேண்டும்!

Bildergebnis für iphone 7

உங்களிடம்.... நவீன, "ஸ்மார்ட் போன்" உள்ளது தானே... வன்னியன்.
அதாலை... படம் எடுக்க, முடியாதா? :rolleyes:
பிறகு... என்னத்துக்கு... கமெரா வாங்கும்,  ஆசை.... வந்தது. :grin:
இங்கு.... கமெரா கடைகள்,  எல்லாம்.... "இலையான்", அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். :D:

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

உங்களிடம்.... நவீன, "ஸ்மார்ட் போன்" உள்ளது தானே... வன்னியன்.
அதாலை... படம் எடுக்க, முடியாதா? :rolleyes:
பிறகு... என்னத்துக்கு... கமெரா வாங்கும்,  ஆசை.... வந்தது. :grin:

நவீன கைப்பேசி என்னிடம் உள்ளது..

ஆனால் பொதுவாக கைப்பேசிகள் பல்வேறு தேவைகளை(Multi Purpose), அதன் தொழிற்நுட்பங்களை  ஒருங்கிணைத்து கொடுப்பதால், புகைப்படத்திற்காவென பிரத்யோக வடிவமைப்பு கிடையாது, அதன் வடிவமைப்பில், சமரசம் செய்வதால் ஒரு பொம்மை காமிராவிற்குரிய படத்தெளிவுதான் நமக்கு கிட்டும்..

புகைப்படதின் துல்லியத் தெளிவு, ஆழம், சரியான கலவையில் ஒளிக் கலப்பு, வண்ணப் பிரதிபலிப்பு, மிகத் தொலைவிலுள்ள பொருட்களையும் சரியாக நமக்கு தெளிவுபடுத்துவது இந்த பிரத்யேக வடிவமைப்பு(Professional Cameras) காமிராக்கள் தான்.. காமிரா தொழிற்நுட்பத்தை கற்க அதிக ஆர்வம் இருந்தாலும், அதைல் மினக்கெட நேரமும், பொருட்செலவும் அதிகம் தேவைப்பட்டதால் இதுநாள் வரை அத்துறையில் கவனம் செலுத்தவில்லை..

தற்பொழுது ஆர்வமும், எனது வேலையுடன் இணைந்த தேவையும் இருப்பதால் உயர் தொழிற்நுட்ப காமிரா வாங்க வேண்டிய அவசியம் வந்துள்ளது,தமிழ்சிறி..!

  • கருத்துக்கள உறவுகள்

இதே  போன்ற ஒரு  கமறா எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது ஒரு நண்பரால் போட்டோ எடுக்க விருப்பம் ஆனால்  நேரம் கிடைப்பதில்லை  ஆனால் கிடைக்கும் நேரத்தில் அழகான முறையில் படம் எடுத்து விடுவேன் 

  • கருத்துக்கள உறவுகள்
On 03/07/2017 at 6:10 PM, தனி ஒருவன் said:

இதே  போன்ற ஒரு  கமறா எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது ஒரு நண்பரால் போட்டோ எடுக்க விருப்பம் ஆனால்  நேரம் கிடைப்பதில்லை  ஆனால் கிடைக்கும் நேரத்தில் அழகான முறையில் படம் எடுத்து விடுவேன் 

முதல்ல படத்தை எடுத்து இங்க போடுங்க அது அழகா இல்லையா என்று நாங்கள் லைக்கிறம் ......! tw_blush:

குறிப்பு:

--- நீங்கள் அழகா ட்ரஸ் பண்ணி சென்ட் போட்டுக்கொண்டு கேமராவுக்கு பின்னால் நின்றுகொண்டு காமராவே காறித்துப்பற மாதிரி மொக்கையாய் படத்தைப் போட்டால் கவனிக்க மாட்டம்......! 

--- நீங்கள் லுங்கியோடு நிண்டாலும் சரி படம் கெத்தாய் ஜீவனுடன் இருந்தால் ரசிப்பம்.....!

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, suvy said:

முதல்ல படத்தை எடுத்து இங்க போடுங்க அது அழகா இல்லையா என்று நாங்கள் லைக்கிறம் ......! tw_blush:

குறிப்பு:

--- நீங்கள் அழகா ட்ரஸ் பண்ணி சென்ட் போட்டுக்கொண்டு கேமராவுக்கு பின்னால் நின்றுகொண்டு காமராவே காறித்துப்பற மாதிரி மொக்கையாய் படத்தைப் போட்டால் கவனிக்க மாட்டம்......! 

--- நீங்கள் லுங்கியோடு நிண்டாலும் சரி படம் கெத்தாய் ஜீவனுடன் இருந்தால் ரசிப்பம்.....!

இந்தாங்கோ பூக்களை மட்டும் சுட்டது இன்னும் இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனி ஒருவன் said:

இந்தாங்கோ பூக்களை மட்டும் சுட்டது இன்னும் இருக்கிறது 

உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகின்றேன்.....!பூக்கள் ஒவ்வொன்றும் அழகாய் இருக்கு, அது அவற்றின் இயல்பு. சும்மா காம்பில நிக்கிற பூக்களை மட்டும் போட்டால் எப்படி .....! உங்கள் அருகே வாழ்ந்து கொண்டிருக்கும் அறிஞர்கள், எழுத்தாளர்கள்,முதியவர்கள், பள்ளிக்கு கூடம் , பாடும் மீன்கள் என்று விஸ்தரித்துக் கொண்டு போங்கள் . உங்களின் யாத்திரைப் படங்கள் போல....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகின்றேன்.....!பூக்கள் ஒவ்வொன்றும் அழகாய் இருக்கு, அது அவற்றின் இயல்பு. சும்மா காம்பில நிக்கிற பூக்களை மட்டும் போட்டால் எப்படி .....! உங்கள் அருகே வாழ்ந்து கொண்டிருக்கும் அறிஞர்கள், எழுத்தாளர்கள்,முதியவர்கள், பள்ளிக்கு கூடம் , பாடும் மீன்கள் என்று விஸ்தரித்துக் கொண்டு போங்கள் . உங்களின் யாத்திரைப் படங்கள் போல....!  tw_blush:

இனி எதிர்பார்க்கலாம்  அண்ணை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.