Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக எப்படி வாழ்வது என்பதை ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ளவே இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2017 at 10:57 AM, colomban said:

முதலாவது தரப்பினரின் இரண்டாவது மூன்றாவது தலைமுறையினர் தாங்கள் தமிழர்கள் என்றோ அல்லது தமது தாய்நாடு இலங்கை என்றோ இப்போது வெளிக்காட்டி கொள்வதில்லை. ஐரோப்பிய வாழ்க்கை மற்றும் கலாசாரத்துடன் சங்கமமாகி விட்டார்கள். லண்டன் போன்ற நாடுகளில் முதலாவது தரப்பினர் இரண்டாம் தரப்பினரின் திருமணம், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா போன்ற வைபவங்களில் கலந்து கொள்வது கிடையாது. அவர்கள் இப்போது இலங்கைக்கு வருவதும் கிடையாது.

இந்தக் கட்டுரையாளரின் அனுமானம் இது. அதுசரி லண்டன் எப்ப இருந்து நாடானது..??!

(இங்கு கல்வி கற்கவும் தொழில்சார்ந்து வந்தோராலும் தான்.. தமிழீழ விடுதலைக்கான போராட்ட முனைப்புகளே ஆரம்பிக்கப்பட்டன. யாரும் தாய் தமிழீழத்தை மறந்தவர்களாக வாழ்ந்ததாகத் தெரியவில்லை. ஆனால் சாமத்திய வீடு.. பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்று.. அலைவது இல்லை.. நிபுணத்துவக் குடியேறிகள்.)

மேலும்.. இங்கிலாந்தில் கனடாவில்.. அவுஸியில்.. நியூசியில்.. அமெரிக்காவில்.. பிறந்து வளரும் ஒரு மாற்றுமொழி பேசுபவரின் பிள்ளை.. ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவது அதிசயமோ ஆச்சரியமோ அல்ல. மந்தைக் கூட்டத்தின் மத்தியில் வாழும் இடையனுக்கு அவற்றின் மொழி புரிவது போல இயற்கையானது. 

ஆனால்.. ஈழத்தில் உள்ள பிள்ளை ஆங்கிலத்தில் பேசுவது என்பது அவனின்/அவளின் தனிப்பட்ட திறமை. அதில் போய் இலக்கணப்பிழை... வசனப் பிழை.. சொற்பிழை தேடுபவர்கள் தான்.. தாம் பயணிக்க வேண்டிய பாதையில் நிறையப் பயணிக்க உள்ளது. காரணம்.. அவர்கள் வாழும் சூழல் தமிழ் மொழி பேசப்படும் சூழல். அங்கிருந்து ஆங்கில மொழியை அவர்கள் பேச ஆரம்பிப்பது என்பது ஆங்கிலேயர்கள் தமிழ் பேசுவதை விட எவ்வளவோ மேலாக உள்ளது. 

மொழி என்பது தொடர்பாடலுக்கானது. தற்பெருமைக்கானது அல்ல. ஆனால்.. எம் தமிழர்கள் பலரின் வேற்று மொழி.. குறிப்பாக ஆங்கில மொழி மோகம் என்பது.. தற்பெருமையாக மாறி நிற்கிறது. அதனால்.. வார்த்தைக்கு நாலு தூசணத்தை ஆங்கிலத்தில் பேசும் அவைட புலம்பெயர் பிள்ளைகள் பேசினாலும்.. பெருமை கொள்வார்கள். அதே தமிழ் பேசும் பிள்ளை தப்பித் தவறி ஒரு சொல்லை மாற்றிப் பேசினாலே போதும்......

ஆனால்.. கற்றோர் மத்தியில் பேசப்படும் ஆங்கிலம் என்பது வேறு. அதை பேச.. இங்கிலாந்தில்.. ஆங்கில மொழி பேசும் நாட்டில் பிறந்து வளர்ந்தது என்பது மட்டும் போதாது. இதே வேற்றுமொழி பேசும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் பொருந்தும். tw_blush:

Edited by nedukkalapoovan

  • Replies 60
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

நெடுக்கர் இங்கிலாந்து எப்ப இருந்து நாடானது?

இங்கு புலம்பெயர் பல தமிழர் தமிழ் கதைக்கவில்லை என்பதே கட்டுரையாளரின் வாதம்.

முற்று முழுதாக ஆங்கிலேய சூழலில் வாழும் பிள்ளைக்கு தமிழ் தெரியாததையும் இலங்கையில் உள்ள பிள்ளைக்கு தமிழ் தெரியாததையும் சரி என்பதா

  • கருத்துக்கள உறவுகள்

நிபுணத்துவ குடியேறிகள்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

நண்பரே 
நீங்கள் ஒரு வீட்டிற்கு செல்கிறீர்கள் செல்போனை மின்னேற்றித்தர முடியுமா என்று கேட்கிறீர்கள் ...இந்த அடிப்படை உதவியை கூட செய்யத்தெரியாத 
பண்பற்றவர்கள் அல்ல நாங்கள் ஆனால் கேட்பதற்கு ஒரு முறை உண்டு அல்லவா ....?
நீங்கள் எனது போனை மின்னேற்ற முடியுமா என்று கேட்டிருக்கலாம் .....?
அல்லது இன்னும் ஒருபடி மேலே போய் எனது I Phone ஐ மின்னேற்றித்தர முடியுமா என்றும் கேட்டிருக்கலாம் .....? தவறில்லை 
ஆனால் எனது I Phone 6 S Plus ஐ மின்னேற்றித்தர முடியுமா என்று கேட்டால் இதனை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்று நீங்களே சொல்லுங்கள் ...மற்றபடிக்கு அவர் மகிழ்ச்சியாக மின்னேற்றிவிட்டே சென்றார் 

புலம் பெயர் நாடுகளில் உள்ள காண்டிராக்ட் முறைமை எனக்கும் தெரியும் . ஆனால் இலங்கையில் இந்த முறைமை இல்லை இருந்தும் ஒரு விலை உயர்ந்த பொருள் வெளியாகும் அதே கணத்தில் 
PreOrder செய்து  முழுப்பணத்தையும் முதலில் செலுத்தி கொள்வனவு செய்யும் அளவுக்கு இங்குள்ளவர்களின் வாழ்க்கை தரமும் நாடும் முன்னேறியுள்ளது . ஆகவே இந்தகாலகட்டத்தில் 
இப்படியான வெற்று பந்தாக்கள் இங்குள்ளவர்களிடம் நகைப்பையே வரவழைக்கும் 

புலம் பெயர் உறவின் போனின் வயது எனக்கு பிரச்சினையில்லை ஆனால் அந்த புலம் பெயர் உறவுக்கு நான் வைத்திருக்கும் போனின் வயது பிரச்சினை ...
அப்போதுதானே அவரது பந்தா செல்லுபடியாகும் ...உண்மையில் I Phone பிரித்தானியாவை விட இலங்கையில் கொள்வனவு செய்வது மலிவு ..இந்த உண்மைகள் உறைக்காதவிடத்து ஒன்றுமே செய்யமுடியாது 
பார்த்து நகைக்க மட்டுமே முடியும் 

அக்கினீ,

குருடனும் யாணையும் கதை தெரியும் தானே. நேரே விசயத்துக்கு வராமல் சுத்தி மூக்கைத் தொடுவது.

உங்களது ஆள் 6 என்று குறித்து கேட்டது, 5 க்குப் பின் வயர் மாறீட்டுது. பழதைப் பாவீக்கேலாது, புதுசு 7 பத்தி தெரியாததால், 6 எண்டு நேர விசயத்துக்கு வந்திருக்கிறார்.

அட, அவரிட்ட வயர் இருந்திருந்தால் அவரே சார்ஜ் பண்ணியிருப்பாரோ இல்லையோ?

ஆகவே... டுபாய் ரிட்டேன் வடிவேலு... வேற விசயத்தில சும்மா பந்தா பண்ணி பார்த்தீபனிடம் வாங்குவது போல, உங்களிடம் அந்தாள் அலம்பரை பண்ணி இருக்கு.

நாம சின்னப்பொடீயளா இருக்கேக்க, கப்பலால வந்த ஒருத்தர் வீட்டுக்கு வெளீல குட்டி மதில்ல இருந்து புகை விட்டுக் கொண்டிருந்தார். தம் கிடைக்கும் எண்டு நாமும் போய் கதை குடுத்து, 'அண்ண... வெளிநாட்டு குளிர் எப்படி ? என்றோம்.

அட தம்பிமார்.. குளிர் எண்டால், குளிர்... அப்படி குளிரடாப்பா... அவசரத்துக்கு ரோட்டோரமா ஒன்னுக்கு அடிச்சியெண்டா, முறிச்சுத்தான் விட்டு களுசானைப் பூட்டுவாய்... வெளியால வந்தோன்ன ஜஸாயிருமடாப்பா என்று மேல பார்த்துக் கொண்டு புகையை விட்டான் பாவி.

வேலை செய்த கப்பல விலைக்கு வாங்கீயாச்சு... இப்ப 19 பேர் புதுசா எடுக்க வந்திருக்கிறன் எண்டதெல்லாம் தொடர்ந்து வந்த கப்சா...

அப்படியெல்லாம் கடந்து தான் வந்தம். இது சும்மா சாதா. 

*****

அடுத்தது சந்தையில் Product differentiation, price affordability என்ற விடயங்கள் உண்டு. இங்கே பிரித்தானியாவில், அப்பிள் மக் கம்பியூட்டர்கள் அமெரிக்காவை விட பல மடங்கு கூட விலை. அதற்காக அமெரிக்காவில் வாங்கிவந்து இங்கு பாவித்தால், ஆப்பிள் சப்போட், கீபோட் என பல பிரச்சனைகள்.

இந்த இந்த சந்தைக்கென அங்கே பெறக் கூடிய விலைக்கமைய பொருள் இருக்கும். இலங்கை, இந்தியாவில், பிரிட்டன் விலைக்கு விற்க முடியாது. மேற்கே பாவித்த ஆப்பிள் போன்களை மறுசீரமைத்து அங்கே சந்தைப்படுத்த அரசு அனுமதிக்காததால், இந்திய சந்தைக்கென, பெங்களூரில் புது பக்டரி ஆப்பிள் திறந்துள்ளது. 

நோக்கம் சற்றே தரம் குறைந்த, விலைக்கேற்ற பொருள்.

இன்னும் தெளிவாக சொல்வதானால் இலங்கை, இந்தியாவின் மிகச் சிறந்த விளை பொருட்கள், கடல் உணவுப் பொருட்கள், இங்கே தான் வருகின்றன... அதிக பணம் கிடைப்பதால்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

...ஆனால்.. கற்றோர் மத்தியில் பேசப்படும் ஆங்கிலம் என்பது வேறு. அதை பேச.. இங்கிலாந்தில்.. ஆங்கில மொழி பேசும் நாட்டில் பிறந்து வளர்ந்தது என்பது மட்டும் போதாது. இதே வேற்றுமொழி பேசும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் பொருந்தும். tw_blush:

எனது நண்பரின் அண்ணர் ஒருத்தர்

லண்டனில் 7அரை  வருடங்கள் படித்துவிட்டு 80 களில்  ஊர் வந்திருந்தார்

அப்பொழுது கொழும்பில் எங்களுடன் தங்கியிருந்தார்

எங்களுடன் ஆங்கிலத்திலும்  கொச்சை  தமிழிலும் தான் பேசுவார்

நமக்கு அவர்  லண்டனில் படித்தவர் என்பதால் ஆங்கிலத்தில் உரையாட  வெட்கமாக இருக்கும்

எங்களுடன்  விட்ட விளையாட்டை 

கொழும்பில் அதிகாரியாக இருந்த மாமா  ஒருவருடன் விட்டார்

மாமா கேட்டது தம்பி  லண்டனில் பள்ளிக்கூடம் போனனீர்களோ என்று.

அதன் பின்னர் தான் அவர் எமக்கு உண்மையை  சொன்னார்

இரவு தியேட்டரில் வேலை

காலை பாடசாலை

எப்படி ஒழுங்காக போவது??

அதனால் 7அரை வருடங்களை துலைச்சாச்சு  என்றார்.

பின்னர் அகதியாக யேர்மனிக்கு வந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

நெடுக்கர் இங்கிலாந்து எப்ப இருந்து நாடானது?

இங்கு புலம்பெயர் பல தமிழர் தமிழ் கதைக்கவில்லை என்பதே கட்டுரையாளரின் வாதம்.

முற்று முழுதாக ஆங்கிலேய சூழலில் வாழும் பிள்ளைக்கு தமிழ் தெரியாததையும் இலங்கையில் உள்ள பிள்ளைக்கு தமிழ் தெரியாததையும் சரி என்பதா

England is a country that is part of the United Kingdom.[5][6][7] It shares land borders with Scotland to the north and Wales to the west. The Irish Sea lies northwest of England and the Celtic Sea lies to the southwest. 

https://en.wikipedia.org/wiki/England

சர்வதேச தொடர்பாடல் மொழியை கற்பதும் அதில் பயிற்சி பெற மொழிப் பரீட்சையம் உள்ளவர்களோடு பேசிப் பழகுவதும் எந்தக் குற்றம் குறைக்கும் உரிய விடயமே அல்ல. ஆங்கிலம் தெரியும் என்ற காரணத்தை வைச்சு.. வெட்டிப் பெருமை அடைவதும் தாய் மொழியை தாழ்த்துவதும் தான் தவறான சிந்தனை ஆகும். tw_blush:

1 hour ago, MEERA said:

நிபுணத்துவ குடியேறிகள்

இந்தப் பதத்தை இப்போது தான் அறிமுகம் செய்துள்ளோம். tw_blush:

1 hour ago, விசுகு said:

எனது நண்பரின் அண்ணர் ஒருத்தர்

லண்டனில் 7அரை  வருடங்கள் படித்துவிட்டு 80 களில்  ஊர் வந்திருந்தார்

அப்பொழுது கொழும்பில் எங்களுடன் தங்கியிருந்தார்

எங்களுடன் ஆங்கிலத்திலும்  கொச்சை  தமிழிலும் தான் பேசுவார்

நமக்கு அவர்  லண்டனில் படித்தவர் என்பதால் ஆங்கிலத்தில் உரையாட  வெட்கமாக இருக்கும்

எங்களுடன்  விட்ட விளையாட்டை 

கொழும்பில் அதிகாரியாக இருந்த மாமா  ஒருவருடன் விட்டார்

மாமா கேட்டது தம்பி  லண்டனில் பள்ளிக்கூடம் போனனீர்களோ என்று.

அதன் பின்னர் தான் அவர் எமக்கு உண்மையை  சொன்னார்

இரவு தியேட்டரில் வேலை

காலை பாடசாலை

எப்படி ஒழுங்காக போவது??

அதனால் 7அரை வருடங்களை துலைச்சாச்சு  என்றார்.

பின்னர் அகதியாக யேர்மனிக்கு வந்தார்.

உப்படி வெட்டி பந்தா காட்டும் பலர் இப்போது இருக்கினம். இதில் அவலக் குடியேறிகள் முதன்மை வகிக்கினம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

52 minutes ago, nedukkalapoovan said:

உப்படி வெட்டி பந்தா காட்டும் பலர் இப்போது இருக்கினம். இதில் அவலக் குடியேறிகள் முதன்மை வகிக்கினம். tw_blush:

இந்தா  பந்தா

புலத்தில் பிறந்த அடுத்த தலைமுறையினரிடம் இல்லை  என்பதே நமக்கு சார்பானது

அவர்களுடன் உரையாடல்களை  தொடர்வதால்

இவ்வாறான பொய்த்தகவல்களிலிருந்து விடுபட வழியாகும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

England is a country that is part of the United Kingdom.[5][6][7] It shares land borders with Scotland to the north and Wales to the west. The Irish Sea lies northwest of England and the Celtic Sea lies to the southwest. 

https://en.wikipedia.org/wiki/England

சர்வதேச தொடர்பாடல் மொழியை கற்பதும் அதில் பயிற்சி பெற மொழிப் பரீட்சையம் உள்ளவர்களோடு பேசிப் பழகுவதும் எந்தக் குற்றம் குறைக்கும் உரிய விடயமே அல்ல. ஆங்கிலம் தெரியும் என்ற காரணத்தை வைச்சு.. வெட்டிப் பெருமை அடைவதும் தாய் மொழியை தாழ்த்துவதும் தான் தவறான சிந்தனை ஆகும். tw_blush:

இந்தப் பதத்தை இப்போது தான் அறிமுகம் செய்துள்ளோம். tw_blush:

உப்படி வெட்டி பந்தா காட்டும் பலர் இப்போது இருக்கினம். இதில் அவலக் குடியேறிகள் முதன்மை வகிக்கினம். tw_blush:

Countries(constituent parts) இது தான் நீங்கள் குறிப்பிட்ட தனி நாடு.

உந்த நிபுணத்துவ குடியேறிகள் பலர் 83 கலவரத்தை தொடர்ந்து அவலக்குடியேறிகளாகவும் இலங்கையிலிருந்து நிபுணத்துவ குடியேறிகளாகவும் மாணவர்களாகவும் வந்தவர்கள் அவலக்குடியேறிகளாக மாறிய காட்சிகள் இருக்கிறது.

உந்த நிபுணத்துவ குடியேறிகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு தாங்கள் போகவில்லை போலும்,

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, சுவைப்பிரியன் said:

முதலில் எமக்கு சாதகமோ பாதகமோ இந்த பத்தியில் உள்ளது எனது நேரடி அனுபவத்தில் 90 விpதம் உண்மை.மற்றது இங்குள்ள சில பதிவுகளைப் பாக்கும் போது தெரிந்தோ தெரியாமலோ இங்கு எல்hம் திறம் அங்கு ஒன்றும் இல்லை என்ற மாதிரி கருத்துக்கள்.அக்கினி சொன்ன மாதிரி இலங்கை இன்னும் அப்படித்தான் இருக்குது என்று நினைப்பவர்களை விட எப்பவும் அப்படித்தான் இருக்க வேணும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.இது இந்த திரியில் மட்டும் இல்லை வேறு திரியிலும்

1 - தாயகத்தில் வாழும் மக்களை (இதில் கள உறவுகளும் அடக்கம்.)பரிகசித்த சம்பவம் உண்டு.எப்பவும் அவர்களை தம்மிடம் கையேந்தும் நிலையில் வைத்திருக்கவே பல புலத்தார் விரும்புகிறார்கள்.

2- இங்கிருந்து போவர்கள் அங்குள்ளவர்களை பரிகசிக்கலாம் என்றால் அங்கு வசதியாக வாழ்பவர்கள் இங்கிருந்து போய் பிலிம் காட்ட நினைப்பவர்னளை களுவி ஊத்தத்தான் செய்வார்கள்.

1- இதில் புலத்தாரை  மட்டும்  குறை  சொல்லமுடியாது

அங்குள்ளவர்கள் இவர்களிடம் கையேந்தும்  நிலையிலிருந்து மாறினாலே போதும்

இவர்கள்  அடங்கி  விடுவார்கள்

ஆனால்....??

அது உங்களுக்கே தெரியும்

2- இது  இரு  பக்கத்துக்கும் பொருந்தும்

அங்குள்ளவர்களின்   கேள்விகளும் அரசியலானவை

அங்கு என்ன வேலை செய்கிறீர்கள்?

பிள்ளைகளின்  படிப்பு வேலை என்ன?

விசா என்ன?

எந்த நாடு??

இதற்குள்ளும் அரசியல் இருக்கிறது

குத்துக்கு  குத்து

அடிக்கு மறு அடி என்று  எல்லோரும் புறப்பட்டால்???

இதைத்தான் வேண்டாம் என்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

ஒரு ஐ போன் 7 பிளஸ் இலங்கையில் இப்போ என்ன விலை ?
அமெரிக்காவில்தான் விலை குறைவு என்பது எனது கணிப்பீடு 

இங்கு 7 பிளஸ் 4.5 இஸ்க்ரீன்  128 ஜி பி  $750.
(அங்கு ஒரு லட்ஷத்து 15 ஆயிரம் ரூபாய்) 

அங்கு என்ன விலை இருக்கும் என்று அறிய விரும்புகிறேன். 

சில தேடல்களின் படி அப்பிள் நேரடியாக இலங்கையில் விநியோகிக்காத காரணத்தினால் third party sellers இடம் கொள்வனவு செய்வது வழக்கம் 
அதன் படி seven plus 128  gb 
பெறுமதி 134500 (1 year apple care )
ஆனால் uk , usa  இல் அப்பிளின் உத்தியோகப்பூர்வ தளத்தின் இணைப்பின் படி 
usa -869 usd 
எனவே இலங்கைப்பெறுமதி
869 * 153 .52 =133408 

uk - 819 gbp 
இலங்கைப்பெறுமதி
819 * 197 . 96 = 162129 

  • கருத்துக்கள உறவுகள்

இத்தொலைபேசிகளின் தரம் ஒன்றா?

ஏனென்றால்  நான் 500  ஈரோக்களுக்கு   இங்கு  வாங்கி  வந்த  நோக்கியா  தொலைபேசி

அங்கு 20000  ரூபாவுக்கு சாதாரணமாக கிடைக்கிறது என்றார்கள்

ஆனால் தரம் ஒன்றல்ல  

இவை ஆசிய  நாடுகளில் மீள் தயாரிப்புக்கு உள்ளாகின்றன என்றார்கள்

உண்மையா??

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

இத்தொலைபேசிகளின் தரம் ஒன்றா?

ஏனென்றால்  நான் 500  ஈரோக்களுக்கு   இங்கு  வாங்கி  வந்த  நோக்கியா  தொலைபேசி

அங்கு 20000  ரூபாவுக்கு சாதாரணமாக கிடைக்கிறது என்றார்கள்

ஆனால் தரம் ஒன்றல்ல  

இவை ஆசிய  நாடுகளில் மீள் தயாரிப்புக்கு உள்ளாகின்றன என்றார்கள்

உண்மையா??

அண்ணை ஆப்பிள் நிறுவனத்தின் கூற்றுப்படி அனைத்து தொலைபேசிகளும் சீனாவில் foxconn நிறுவனத்தால் அஸெம்பிள் செய்யப்படுகிறது. எனவே அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விநியோகிக்கப்படும் தொலைபேசிகள் கூட ஆசியாவில் தான்  தயாரிக்கப்படுகின்றன 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை ஆப்பிள் நிறுவனத்தின் கூற்றுப்படி அனைத்து தொலைபேசிகளும் சீனாவில் foxconn நிறுவனத்தால் அஸெம்பிள் செய்யப்படுகிறது. எனவே அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விநியோகிக்கப்படும் தொலைபேசிகள் கூட ஆசியாவில் தான்  தயாரிக்கப்படுகின்றன 

அதற்காகத்தான் எனது நோக்கியா  என  எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

 ஐரோப்பாவிற்கு சட்டரீதியாக இறக்குமதி செய்யப்படும் பொருட்டகள் அனைத்தும் ஐரோப்பிய தரக்கட்டுப்பாட்டு அமைவாக உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

நான் ஏற்கனவே நாற்சந்தியில் இணைத்த திரி இருக்கிறது.

 இலங்கையில் ஓர் நிறுவனம் மிக மலிவு விலையில் அப்பிள் தயாரிப்புகளை மிக மலிவு விலையில் விற்கிறது ஒரு வருட உத்தரவாதத்துடன். 

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

சில தேடல்களின் படி அப்பிள் நேரடியாக இலங்கையில் விநியோகிக்காத காரணத்தினால் third party sellers இடம் கொள்வனவு செய்வது வழக்கம் 
அதன் படி seven plus 128  gb 
பெறுமதி 134500 (1 year apple care )
ஆனால் uk , usa  இல் அப்பிளின் உத்தியோகப்பூர்வ தளத்தின் இணைப்பின் படி 
usa -869 usd 
எனவே இலங்கைப்பெறுமதி
869 * 153 .52 =133408 

uk - 819 gbp 
இலங்கைப்பெறுமதி
819 * 197 . 96 = 162129 

அக்கினி நீங்கள் apple care என குறிப்பிடுவது apple warranty இல்லை தானே? 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:

 ஐரோப்பாவிற்கு சட்டரீதியாக இறக்குமதி செய்யப்படும் பொருட்டகள் அனைத்தும் ஐரோப்பிய தரக்கட்டுப்பாட்டு அமைவாக உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

நான் ஏற்கனவே நாற்சந்தியில் இணைத்த திரி இருக்கிறது.

 இலங்கையில் ஓர் நிறுவனம் மிக மலிவு விலையில் அப்பிள் தயாரிப்புகளை மிக மலிவு விலையில் விற்கிறது ஒரு வருட உத்தரவாதத்துடன்.  

இந்த  திரி  சார்ந்து

அடுத்த  கட்டத்துக்கு வந்திருக்கின்றோம் என  நினைக்கின்றேன்

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

உந்த நிபுணத்துவ குடியேறிகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு தாங்கள் போகவில்லை போலும்,

உண்மையான நிபுணத்துவக் குடியேறிகளின் விசேட பிறந்த நாள்  நிகழ்வுகளுக்கு (வருடா வருடம்.. ரோலும் கொத்துரொட்டியும் சாராயமும்.. வைச்சுக் கொண்டாடிறதில்லை)  போனதுண்டு. அவை அனைத்துமே.. வீடுகளுக்கு வெளியில்.. அதற்குரிய நட்சத்திர விடுதிகளில் தான் சிநேகித பூர்வமான முறையில் நினைவு கூறப்பட்டுள்ளன. யாரும் வருடா வருடம் அவலக் குடியேறிகள் போலக் கொண்டாடினதைக் காணவில்லை. tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

உண்மையான நிபுணத்துவக் குடியேறிகளின் விசேட பிறந்த நாள்  நிகழ்வுகளுக்கு (வருடா வருடம்.. ரோலும் கொத்துரொட்டியும் சாராயமும்.. வைச்சுக் கொண்டாடிறதில்லை)  போனதுண்டு. அவை அனைத்துமே.. வீடுகளுக்கு வெளியில்.. அதற்குரிய நட்சத்திர விடுதிகளில் தான் சிநேகித பூர்வாம நினைவு கூறப்பட்டுள்ளன. யாரும் வருடா வருடம் அவலக் குடியேறிகள் போலக் கொண்டாடினதைக் காணவில்லை. tw_blush::rolleyes:

இதிலிருந்து தெரிவது என்னவெனில் நீங்கள் குறிப்பிடும் நிபுணத்துவ குடியேறிகளுக்கும் உங்களுக்கும் வெகுதூரம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

இதிலிருந்து தெரிவது என்னவெனில் நீங்கள் குறிப்பிடும் நிபுணத்துவ குடியேறிகளுக்கும் உங்களுக்கும் வெகுதூரம்.

நாங்கள் உண்மையான நிபுணத்துவக் குடியேறிகள் பற்றிப் பேசுகிறோம். கலப்புக் குடியேறிகள் பற்றி அல்ல. tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

நாங்கள் உண்மையான நிபுணத்துவக் குடியேறிகள் பற்றிப் பேசுகிறோம். கலப்புக் குடியேறிகள் பற்றி அல்ல. tw_blush::rolleyes:

நான் இருக்கும் இடத்தில் உள்ள உணவகங்களில் ரோல்சும் கொத்து ரொட்டியும் இடியப்பமும் வரிசயில் நின்று வாங்குபவர்கள் உங்கள் உண்மையான நிபுணத்துவ குடியேறிகள். 

இந்த திரியை திசை மாற்றாது தலைப்பு சார்ந்து தொடர்வோம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

இந்தக் கட்டுரையாளரின் அனுமானம் இது. அதுசரி லண்டன் எப்ப இருந்து நாடானது..??!

(இங்கு கல்வி கற்கவும் தொழில்சார்ந்து வந்தோராலும் தான்.. தமிழீழ விடுதலைக்கான போராட்ட முனைப்புகளே ஆரம்பிக்கப்பட்டன. யாரும் தாய் தமிழீழத்தை மறந்தவர்களாக வாழ்ந்ததாகத் தெரியவில்லை. ஆனால் சாமத்திய வீடு.. பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்று.. அலைவது இல்லை.. நிபுணத்துவக் குடியேறிகள்.)

மேலும்.. இங்கிலாந்தில் கனடாவில்.. அவுஸியில்.. நியூசியில்.. அமெரிக்காவில்.. பிறந்து வளரும் ஒரு மாற்றுமொழி பேசுபவரின் பிள்ளை.. ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவது அதிசயமோ ஆச்சரியமோ அல்ல. மந்தைக் கூட்டத்தின் மத்தியில் வாழும் இடையனுக்கு அவற்றின் மொழி புரிவது போல இயற்கையானது. 

ஆனால்.. ஈழத்தில் உள்ள பிள்ளை ஆங்கிலத்தில் பேசுவது என்பது அவனின்/அவளின் தனிப்பட்ட திறமை. அதில் போய் இலக்கணப்பிழை... வசனப் பிழை.. சொற்பிழை தேடுபவர்கள் தான்.. தாம் பயணிக்க வேண்டிய பாதையில் நிறையப் பயணிக்க உள்ளது. காரணம்.. அவர்கள் வாழும் சூழல் தமிழ் மொழி பேசப்படும் சூழல். அங்கிருந்து ஆங்கில மொழியை அவர்கள் பேச ஆரம்பிப்பது என்பது ஆங்கிலேயர்கள் தமிழ் பேசுவதை விட எவ்வளவோ மேலாக உள்ளது. 

மொழி என்பது தொடர்பாடலுக்கானது. தற்பெருமைக்கானது அல்ல. ஆனால்.. எம் தமிழர்கள் பலரின் வேற்று மொழி.. குறிப்பாக ஆங்கில மொழி மோகம் என்பது.. தற்பெருமையாக மாறி நிற்கிறது. அதனால்.. வார்த்தைக்கு நாலு தூசணத்தை ஆங்கிலத்தில் பேசும் அவைட புலம்பெயர் பிள்ளைகள் பேசினாலும்.. பெருமை கொள்வார்கள். அதே தமிழ் பேசும் பிள்ளை தப்பித் தவறி ஒரு சொல்லை மாற்றிப் பேசினாலே போதும்......

ஆனால்.. கற்றோர் மத்தியில் பேசப்படும் ஆங்கிலம் என்பது வேறு. அதை பேச.. இங்கிலாந்தில்.. ஆங்கில மொழி பேசும் நாட்டில் பிறந்து வளர்ந்தது என்பது மட்டும் போதாது. இதே வேற்றுமொழி பேசும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் பொருந்தும். tw_blush:

UK இல் குறிப்பாக London இல் வளரும் தமிழ் பிள்ளைக்கிளின் ஆங்கிலத்தை  பற்றி கதைப்பதட்கு வேறு ஓர் திரி வேண்டும்.

UK இல் கம்யூனிட்டி, அக்கெடமி, செலெக்ட்டிவ், க்ராம்மர், பிரைவேட் மற்றும் பப்ளிக் ஸ்கூல் என்று படிமுறைகள் உண்டு என்பது உங்களுக்கு தெரியும்.

தமிழ் பெற்றோர் இத்தகைய  பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று விரும்பிகிறர்கள் என்பதும் உங்களைத் தெரியும்.

வெளிப்படையான கரணம் பிள்ளைகளிற்கு தம்மால் இயன்ற அளவு வழங்க கூடிய மிகச்ச சிறந்த கல்வியும் அதன் வாயிலாக அந்தப் பிள்ளைகளின் வாழ்க்கையை வளமாக்குவதற்கான மிகக்  கூடிய  வாய்ப்புகளையும் இத்தகைய பாடசாலைக் கல்வி வழங்குகிறது என்ற போதியளவு யதார்த்தமும் எதிர்பார்ப்பும்.

அனால் மிகக் குறைந்த அளவில் தமிழ் பெற்றோர் அறிந்தோ மற்றும்  கூடிய அளவில் தமிழ்  பெற்றோர் அறியயாமலேயே அவர்களின் பிள்ளைகளுக்கு ஓர் மிகச்ச சிறந்த வாய்ப்பு   இத்தகைய பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளுக்கு கிடைக்கிறது. அது தான் ஆங்கிலத்தை உரிய முறையில் பயிலவும், பழகவும், வட்டத்திற்கு அல்லது பொருத்தமான தட்டில் பேசப் பயிலவும்  ஏற்படும்  வாய்ப்பு.

இந்த வாய்ப்பை பெற்ற பெரும்பாலானான பிள்ளைகள் அவர்கள்  அறியாமேலேயே அத்தகைய ஆங்கிலம் அவர்களின் வெற்றிகரமான வாழ்க்கைப் பாதையை  தீர்மானிப்தில் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது. 

இதன் மூலம் நான் சொல்வது என்னவென்றால் லண்டன் இல் அல்லது UK இல் வளரும் எல்லாப் பிள்ளைக்கும், ஆங்கிலேயரும் இதில் உள்ளடக்கம், ஆங்கிலம் சரியாகவும் சரளமாகவும் தெரியும் என்பதல்ல.

பேச்சு ஆங்கிலம் வேறு (colloquial), ஒர்கிங் கிளாஸ் (working class) ஆங்கிலம் வேறு, நடுத்த தரத்தோர் பேசும் ஆங்கிலம் (middle class english) வேறு, குயின்ஸ் ஆங்கிலம் (Queen's English) வேறு.

UK இல் பிரதேசத்தை ஒற்றிய பேச்சு வழக்கும் (அக்ஸ்ன்ட்ஸ், accents) ஒருவர் பேசும் ஆங்கிலத்தில் மிகவும் தாக்கமுடையதாகவிருக்கிறது. சில பிரதேசத்தை ஒற்றிய பேச்சு வழக்கு ஆங்கிலத்தை உபயோகிப்பவரை   நடுத்தரத்தினரும், அரசு மற்றும் அரசியல் சேர்ந்த குழாமும் தமிழ் ஒருவராக ஏற்கமாட்டார்கள்.

சிறிய உதாரணம். லண்டன் இல் இருக்கும் பெரும்பாலான பிள்ளைகள் ஐ சோர் (which stands for "I saw") என்றே பேசுவார்கள். I have been pointing out and emphasasing the importance of pronouncing "I saw" exactly as "I saw", and not in the form of "I sore" (which has entirely different meaning), to so many young Tamil children, teenagers and adolescents. பெரும்பாலான தமிழ் பிள்ளைகளில் (London, UK) அதனையும் அதன் பாற்பட்ட விளைவுகளையும் சொல்லும் போது நன்கு கிரகித்து தங்களை திருத்திக் கொள்ளும் பக்குவம் இருக்கிறது.

இலங்கையில் இருக்கும் பிள்ளைகள் ஆங்கிலம் பேசக் கூடாது என்பது அல்ல.

ஆனால்  அவர்கள் பிளை விடும் போது அதனை எள்ளி நகையாடாமல், அதனை அவரிடம் பவ்வியமாக கூறும் போது அதனை பின்பற்றி தான் பேசும்  ஆங்கிலத்தை (அல்லது வேறு எந்த மொழியாயினும்) சரி செய்வதற்கான பக்குவம் வேண்டும்.

பொதுவாகவே தமிழரிடம் constructive crititcism  த்தை ஏற்கும் பக்குவம் குறைவு.

ஆனால் புலம் பெயர் தமிழ் பிள்ளைகளில் அந்தப் பக்குவம் மிகவும் நன்றாக பதிந்துள்ளது.

இது எனது தனிப்பட்ட அனுபவம் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இருந்து ஊருக்குப் போகைக்குள்ள காசைப் பொருட்களை  அள்ளிக் கொண்டு போகிறது யார் இங்கே இருப்பவர்கள் தானே...முதல் தரம் போகேக்குள்ள கண்ட பாட்டுக்கு சாமான்களை கொண்டு போய்க் கொடுத்துக்காட்டினால் அங்கே இருப்பவர்கள் திரும்ப,திரும்ப எதிர் பார்ப்பார்கள் தான்...அங்கே இருப்பவர்களை  சோம்பல் மாடுகளாக வைத்திருப்பவர்கள் இங்கே இருப்பவர்கள் தான்...அவர்கள் கேட்ட உடனே எப்படியாவது யாருட்டையாவது கடன் வாங்கி காசு அனுப்பி பழக்கினால் அவர்கள் அதில் சுகம் காணுவார்கள் தான்.

அங்கே இருப்பவர்கள் ஆங்கிலம் கதைத்தால்,கதைத்துப் பழகினால் அது தப்பில்லை. கட்டாயம் பழகத் தான் வேண்டும்...அங்கே பிறந்து தமிழ் மொழியில் படிச்சு வளர்ந்திட்டு இங்கே வந்த சிலர் ஊருக்குப் போய் அங்கே ஆங்கிலத்தில் பந்தா காட்டுவதைத் தான் சகிக்க முடியவில்லை... இங்கே பிறந்து வளர்ந்த குழந்தைகள் தமிழ் மொழியில் கதைப்பதையும்,தமிழ்க் கலாச்சாரத்தை பின்பற்றுவதும் அவர்களது பெற்றோர்களது கையில் தான் இருக்குது...அவதானித்துப் பார்த்தால் பெற்றோர்களால் கோயிலுக்கு கூட்டிச் செல்லப்படும் பிள்ளைகள் நிட்சயம் நன்றாகத் தமிழ் கதைப்பார்கள்...கோயில்கள் வருமானத்திற்காகத் தான் என எனக்கு விமர்சனம் இருந்தாலும் தமிழை வளர்ப்பதில் இக் கோயில்கள் பெரும் பங்காற்றுகின்றன...இங்கிருக்கும் பெற்றோர் பிள்ளைகளோடு தமிழில் கதைத்துப் பழகினால் இந்தப் பிள்ளைகள் ஊருக்குப் போனால் அங்கிருக்கும் பிள்ளகளோடு தமிழில் கதைத்தால் அங்கிருக்கும் பிள்ளைகளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வராது.

இங்கிருக்கும் சிலர் இங்கு கூப்பிடுவதற்கு இலகு என் ஆங்கிலத்தில் பேர் வைத்தால் அங்கிருப்பவர்களும் புரியாத மொழியில் தங்கட குழந்தைகளுக்குப் பேர் வைச்சிருக்கிறதை பார்க்க சிரிப்பாக இருக்கும்.

புலத்தில் இருப்பவர்கள் திறம் அவர்கள‌ மாதிரி தாங்களும்    செய்யொனும்,இருக்கோனும் என்டு நினைக்கிறதை ஊரில் இருப்பவர்கள் விடோனும். அதே மாதிரி இங்கே இருந்து போய் அங்கே பீலா காட்டுவதை இங்கிருப்பவர்கள் விடோனும்....சொர்க்கமே என்டாலும் சொந்த ஊர் போல் வராது...இடம் பெயராமல் அங்கேயே இருக்கும் அந்த மக்கள் தாங்கள் அதிஸ்டசாலிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்...புலத்தில் இருப்பவர்களை  விட தாங்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை விளங்கிக் கொண்டாலே பேதங்கள் இருக்காது.

70,80 ஆண்டுகல் வந்தவர்கள் பிள்ளைகளோடு தமிழில் கதைக்காது,தமிழ் படிப்பிக்காது விட்டதால் தான் அவர்கள் பிள்ளைகள் பிற நாட்டவரை திருமணம் செய்கின்றனர். அவர்களை  அவதானித்துப் பார்த்தால் அவர்களது பிள்ளைளைகள் பொது இடத்தில் தமிழில் கதைத்தாலும் பெற்றோர் அதுவும் பெண்கள் ஆங்கிலத்தில தான் கதைப்பினம். ஆனால் சோத்தைக் குழைச்சு ஒரு பிடி பிடிப்பினம்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நீங்கள் சொல்வது எல்லாம் சரி.

ஆனால் பிழைகளை தெரிந்தவர் திருத்தும் போது, வயதில்  இலங்கை வாழ் உறவுகளில் பெரியவரானாலும் சரி சிறியவரானாலும் சரி அதை  ஏன் தம்மை குறை குற்றம் கூறுவதாக ஏன் நோக்குகிறார்கள்?

பிழைகளை திருத்துவபவர் புலம்பெயர்  உறவாக இருந்தால் என்ன அல்லது அந்த உறவின் பிள்ளைகள் ஆக இருந்தால் என்ன?

ஆனால் புலத்தில் பிறந்த வளர்ந்து வரும் பெரும்பாலான பிள்ளைகள், மற்றவர்களின் கருத்தை சீர்தூக்கி, ஆய்ந்து,  தம்மில் தவறு இருந்தால் அதை ஏற்று திருத்திக்கொள்கிறார்கள்.

ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

ஆனால் புலத்தில் பிறந்த வளர்ந்து வரும் பெரும்பாலான பிள்ளைகள், மற்றவர்களின் கருத்தை சீர்தூக்கி, ஆய்ந்து,  தம்மில் தவறு இருந்தால் அதை ஏற்று திருத்திக்கொள்கிறார்கள்.

இதை இப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வீட்டில் இருந்து புறப்படும் புகலிடத்தில் பிறந்த பிள்ளை.. தோழிவீட்டில் உடுப்பு மாற்றிக் கொண்டு அல்லது.. போகும் இடத்தில்.. வேலை இடத்தில் உடுப்பு மாற்றிக் கொண்டு.. பப்பில் போய் மிணக்கடுவதையும் காண்கிறோம். இதெல்லாம் சொல்லி திருந்துங்கள். (பப்புக்குப் போவதை தவறென்று சொல்லவில்லை. ஆனால் அதனை வெளிப்படையாகச் செய்யாமல்.. தேவைக்கு ஏற்ப பெற்றோருக்கு மறைத்தும் செய்வார்கள் என்பதை தான் சொல்கிறோம்.)

காட்சிகள் காண வேண்டின்.. மத்திய லண்டன் போங்கள் தெரியும்.

நான் நினைக்கிறேன்.. புலம்பெயர் தேசப் பிள்ளைகள் ஏதோ அசாதாரண பிள்ளைகள் என்ற ஒரு தோற்றப்பாட்டை நிறுவ அவர்களைப் பெற்றவர்கள் நினைக்கிறார்கள் போலும்.

ஆனால்.. இவர்களின் தில்லாலங்கடிகளை நேரில் தரிசித்தவர்கள்..தரிசித்து வருபவர்கள் பலர் இருக்கினம். 

இங்கிலாந்தைப் பொறுத்த வரை மொழிப் பாண்டித்தியம் தேவை இல்லை. அந்தந்த வேலைக்கும் சமூகத்தோடு கலக்கவும் அந்தந்தத் தகுதி நிலைக்குரிய ஆங்கில அறிவே எதிர்பார்க்கப்படுகிறது.

ஈழத்தில் உள்ள பிள்ளைகள்.. உங்களின் ஆங்கில உச்சரிப்பே புரியுதில்லை. எங்களுக்குப் புரியக் கூடிய வகையில் பேசுங்கள் என்று தான் கோருகிறார்களே தவிர.. தவறை திருத்திக் கொள்ள மறுப்பவர்களாக நாங்க காணவில்லை. இது சமீபத்தில்..தாயகத்தில் பெற்ற அனுபவத்தில் இருந்து. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இங்கே இருந்து ஊருக்குப் போகைக்குள்ள காசைப் பொருட்களை  அள்ளிக் கொண்டு போகிறது யார் இங்கே இருப்பவர்கள் தானே...முதல் தரம் போகேக்குள்ள கண்ட பாட்டுக்கு சாமான்களை கொண்டு போய்க் கொடுத்துக்காட்டினால் அங்கே இருப்பவர்கள் திரும்ப,திரும்ப எதிர் பார்ப்பார்கள் தான்...அங்கே இருப்பவர்களை  சோம்பல் மாடுகளாக வைத்திருப்பவர்கள் இங்கே இருப்பவர்கள் தான்...அவர்கள் கேட்ட உடனே எப்படியாவது யாருட்டையாவது கடன் வாங்கி காசு அனுப்பி பழக்கினால் அவர்கள் அதில் சுகம் காணுவார்கள் தான்.

அங்கே இருப்பவர்கள் ஆங்கிலம் கதைத்தால்,கதைத்துப் பழகினால் அது தப்பில்லை. கட்டாயம் பழகத் தான் வேண்டும்...அங்கே பிறந்து தமிழ் மொழியில் படிச்சு வளர்ந்திட்டு இங்கே வந்த சிலர் ஊருக்குப் போய் அங்கே ஆங்கிலத்தில் பந்தா காட்டுவதைத் தான் சகிக்க முடியவில்லை... இங்கே பிறந்து வளர்ந்த குழந்தைகள் தமிழ் மொழியில் கதைப்பதையும்,தமிழ்க் கலாச்சாரத்தை பின்பற்றுவதும் அவர்களது பெற்றோர்களது கையில் தான் இருக்குது...அவதானித்துப் பார்த்தால் பெற்றோர்களால் கோயிலுக்கு கூட்டிச் செல்லப்படும் பிள்ளைகள் நிட்சயம் நன்றாகத் தமிழ் கதைப்பார்கள்...கோயில்கள் வருமானத்திற்காகத் தான் என எனக்கு விமர்சனம் இருந்தாலும் தமிழை வளர்ப்பதில் இக் கோயில்கள் பெரும் பங்காற்றுகின்றன...இங்கிருக்கும் பெற்றோர் பிள்ளைகளோடு தமிழில் கதைத்துப் பழகினால் இந்தப் பிள்ளைகள் ஊருக்குப் போனால் அங்கிருக்கும் பிள்ளகளோடு தமிழில் கதைத்தால் அங்கிருக்கும் பிள்ளைகளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வராது.

இங்கிருக்கும் சிலர் இங்கு கூப்பிடுவதற்கு இலகு என் ஆங்கிலத்தில் பேர் வைத்தால் அங்கிருப்பவர்களும் புரியாத மொழியில் தங்கட குழந்தைகளுக்குப் பேர் வைச்சிருக்கிறதை பார்க்க சிரிப்பாக இருக்கும்.

புலத்தில் இருப்பவர்கள் திறம் அவர்கள‌ மாதிரி தாங்களும்    செய்யொனும்,இருக்கோனும் என்டு நினைக்கிறதை ஊரில் இருப்பவர்கள் விடோனும். அதே மாதிரி இங்கே இருந்து போய் அங்கே பீலா காட்டுவதை இங்கிருப்பவர்கள் விடோனும்....சொர்க்கமே என்டாலும் சொந்த ஊர் போல் வராது...இடம் பெயராமல் அங்கேயே இருக்கும் அந்த மக்கள் தாங்கள் அதிஸ்டசாலிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்...புலத்தில் இருப்பவர்களை  விட தாங்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை விளங்கிக் கொண்டாலே பேதங்கள் இருக்காது.

70,80 ஆண்டுகல் வந்தவர்கள் பிள்ளைகளோடு தமிழில் கதைக்காது,தமிழ் படிப்பிக்காது விட்டதால் தான் அவர்கள் பிள்ளைகள் பிற நாட்டவரை திருமணம் செய்கின்றனர். அவர்களை  அவதானித்துப் பார்த்தால் அவர்களது பிள்ளைளைகள் பொது இடத்தில் தமிழில் கதைத்தாலும் பெற்றோர் அதுவும் பெண்கள் ஆங்கிலத்தில தான் கதைப்பினம். ஆனால் சோத்தைக் குழைச்சு ஒரு பிடி பிடிப்பினம்.:cool:

நன்றி  ரதி

பச்சை  கைவசம்  இல்லை

15 minutes ago, nedukkalapoovan said:

நான் நினைக்கிறேன்.. புலம்பெயர் தேசப் பிள்ளைகள் ஏதோ அசாதாரண பிள்ளைகள் என்ற ஒரு தோற்றப்பாட்டை நிறுவ அவர்களைப் பெற்றவர்கள் நினைக்கிறார்கள் போலும்.

ஆனால்.. இவர்களின் தில்லாலங்கடிகளை நேரில் தரிசித்தவர்கள்..தரிசித்து வருபவர்கள் பலர் இருக்கினம். 

தம்பி

தாயகம் இந்த விடயத்தில்  இப்ப முன்னுக்கு  போய்விட்டது

தனி  ஒருவனைக்கேளுங்கள்

கதை கதையாக சொல்வார்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

நன்றி  ரதி

பச்சை  கைவசம்  இல்லை

தம்பி

தாயகம் இந்த விடயத்தில்  இப்ப முன்னுக்கு  போய்விட்டது

தனி  ஒருவனைக்கேளுங்கள்

கதை கதையாக சொல்வார்.

லண்டனில் எம்மவர்கள் பிள்ளைகளே பல வகையான போதைப் பொருட்களை விற்றித் திரிகின்றன. இங்கு பிறந்து வளர்ந்தவர்களில் ஒரு சாரார் இலகுவாக பணம் பார்க்கத் திரிகிறார்கள். பெண் பிள்ளைகள் நிலமை இதை விட மோசம். 16 வயதுக்குள்.. பலருடன் டேட்டிங் என்று. குடும்பமே நடத்திவிடுகிறார்கள்.

தாயகம் இன்னும் இந்தளவுக்கு பெரிய எண்ணிக்கையில் போகவில்லை. ஆனால்.. எதிர்காலத்தில் போனாலும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில்.. இதனை எம்மவர்களே அங்கு கொண்டு போய் சேர்ப்பர்... அதனை சிங்கள ஆளும் வர்க்கம்.. ஊக்குவிக்கும்.

இப்போ யாழ் நகரில்.. எத்தனை இரவு நேர மதுபான விடுதிகள்.. வந்துவிட்டன. முன்னரெல்லாம்.. மதுபானச் சாலையில் தான் மது அருந்துவினம்.. ஊரில. இப்ப.. மதுபான விடுதிகளே வந்துவிட்டன.. மேற்குலக பாணியில்.

யார்.. இவற்றின் முதலீட்டாளர்கள்..?! இதன் விளைவு.... அங்குள்ள பிள்ளைகளின் சீரழிவு. 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.