Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலித்தியம் பேசாத தேசியம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புகழிட தேசிய ஊடகங்கள் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக சில நிமிடங்களாவது தொடர்ச்சியாக நேரம் ஒதுக்கி நிகழ்ச்சிகளை தர முன்வரவேண்டும். புகழிடத்தில் பல தலித்திய போராளிகள் இருக்கிறார்கள். அவர்களில் அனுபவங்கள் கருத்துகள் தமிழ் தேசிய பொது நிகழ்ச்சி நிரலுக்குள் வராதவரை தலித்தியம் தனக்குரிய வழிகளை தானே கண்டறிந்து கொள்ளும்.

தென்னிந்திய சினிமாக்கள் நாடகங்கள் மற்றும் லொட்டு லொடுக்குகளுக்கு ஒதுக்கும் நேரத்தில் அரை மணிநேரம் வாரத்தில்/மாதத்தில்/வருடத்தில் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து பேசும் நிகழ்ச்சிக்கு வழங்கினால் என்ன?

சம்பந்தபட்ட ஊடங்களில் உள்ளவர்கள் தொடர்புகள் உள்ளவர்கள் தங்கள் கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். சாதியம் அழியவிடாமல், பாதுகாத்துக் கொண்டு பிழைப்பைக் கொட்ட வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் என்று தங்களைத் தாங்களே, மக்கள் மனங்களில் அடிமைச் சிந்தனையை விதைக்க வேண்டும். என்றைக்குமே, நாங்கள் சம உரிமை உள்ளவர்கள் என்ற எண்ணத்தை வளரவிடாமல், தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற எண்ணக்கருவை பேணிப் பாதுகாக்க வேண்டும்.

மிகமுக்கியமாக, தமிழர்கள் என்ற ஒரு குடையின் கீழ் வராமல், தமிழன் தங்களுக்குள்ளேயே அடிபட்டுச் சாக வைக்க வேண்டும். அதன் மூலம், அன்னியன் எவனாவது தமிழனுக்குள் ஊடுருவல் செய்து, தமிழனின் கட்டுமானத்தைச் சிதைக்கத் துணை போக வேண்டும்.

வாருங்கள் புலம்பெயர் ஊடகங்களே! உங்களுக்கு நிகழ்ச்சியை என்னும் அதிகரிக்கவும், தமிழனுக்குள் குத்துப்பட்டுச் சாக வைப்பதற்கும், அரிய சந்தர்ப்பம்!

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் சார் போற இடமெல்லாம் சாதி சாதி என்று புலம்புறதுக்கு ஏன் சார் இடமளிக்கிறீங்கள். என்ன சாகப் போறதுக்கு தண்ணி ஊத்துறீங்களா சார். சாதிகள் இல்லையடி பாப்பான்னு பாரதி தொட்டு சொல்லுறது இன்னும் விழவில்லையா காதில. சாதி என்றதுக்கு எந்த அறிவியல் அடையாளமும் மனிதனிடமில்லை. சோ விட்டுத்தள்ளுங்கப்பா முட்டாள் தனமான பாகுபாடுகளை. ( உயிரியலில் உள்ள சாதி என்பது வேறுங்கோ. கீழத்தேச சமூகங்களில் உள்ள மனிதனுக்குள் உள்ள சாதிகள் வேறுங்கோ.. அவற்றிற்கு அறிவியல் உலகில் எந்த நியாயமும் கிடையாது) :P :huh:

  • கருத்துக்கள உறவுகள்

புலத்திலை தலித் தலித்தியம் எண்டு கொண்டு சிலர் என்ன செய்யினம் எண்டு எங்களுக்கும் தெரியும் அவையின்ரை பொழுது போகாத பதிவுகளிற்கும் மப்பிலை கதைக்கிற கதைகளிற்கும் நாங்கள் மினகெட்டு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைங்கோ .அவை வேணுமெண்டா புதைத்த பிணத்தை தோண்டியெடுத்து மாலை போடட்டும் ஆனால் நாங்கள் ஒப்பாரி வைக்க தயாரில்லை :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் நாச்சியார் தலித்! நீங்களே உங்களுக்கெண்டு ரேடியோவும், ரிவியும் தொடங்கலாந்தானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் நாச்சியார் தலித்! நீங்களே உங்களுக்கெண்டு ரேடியோவும், ரிவியும் தொடங்கலாந்தானே?

அப்ப தேசிய வானொலியில் தலித் தமிழருக்கு இடம் இல்லை என்று சொல்லாமல் சொல்லுறியளோ ?நைனார் குமாரசாமி.

நீர் உமது சாதித்திமிரை இங்கு காட்டவேண்டாம். தலித் குடிச்சிட்டு கத்தினாலும் குடிக்காமல் சொன்னாலும் சொல்லுறதுக்கு கைவசம் வெள்ளாளப் பதில் வைச்சிருப்பியள் ...சாத்திரி நைனார்.

அப்ப தேசிய வானொலியில் தலித் தமிழருக்கு இடம் இல்லை என்று சொல்லாமல் சொல்லுறியளோ ?நைனார் குமாரசாமி.

தமிழ் தேசியத்தில் தலித்திற்கு தனி இடம் தரப்படமாட்டாது,

எனெனில் அதை பேணி பாதுகாக்க வேண்டிய தேவை தமிழ் தேசியத்திற்கு இல்லை.

அதை இல்லாதொழிப்பதே அதன் கடமை.

தலித்துக்கள் என்பதனால் பெருமையடைபவரும் சரி சிறுமையடைபவரும் சரி,

தங்கள் வேலிகளை உடைத்துக் கொண்டு வெளியே வாருங்கள்.

வந்து தமிழர்களாக வாழுங்கள்.

ஒன்றாக வடம் பிடிப்போம் வாரீர்!

முடவன் என்று நீ உன்னை நினைத்தால் உன்னை யாராலும் நடக்கப்பண்ண முடியாது!

தலித்தியம் என்றால் என்ன என்பதை யாராவது இரண்டு வரியில் விளக்க முடியுமா? :rolleyes:

நீர் உமது சாதித்திமிரை இங்கு காட்டவேண்டாம். தலித் குடிச்சிட்டு கத்தினாலும் குடிக்காமல் சொன்னாலும் சொல்லுறதுக்கு கைவசம் வெள்ளாளப் பதில் வைச்சிருப்பியள் ...சாத்திரி நைனார்.

நண்பரே(உங்களை தலித் என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை),

இங்கே சாத்திரி உங்களை எந்தவிதத்திலும் சாதியை குறிப்பிடாது சில நபர்கள் பற்றிய செயற்பாட்டை பற்றிக் கூறிய தனிப்பட்ட கருத்திற்கு, நீங்கள் அளித்த பதிலில் "வெள்ளாளப் பதில் வைச்சிருப்பியள்" என்று கூறியுள்ளீர்கள்.

இது ஒரு நல்ல உதாரணம் ஏன் சாதீயக் கோட்பாடுகள் இன்னமும் உயிர் வாழ்கின்றது என்பதற்கு. குமாரசாமி என்ற தனிப்பட்டவருக்கு அளித்த பதிலில் எப்படி நீர் ஒரு குழுவினரை திட்டலாம்? நீங்களே உங்கள் மனத்திலிருந்து அகற்றாத வரையில் எப்படி சமுகத்திலிருந்த அகற்றலாம்?

இதனை அகற்றுவதாகக் கூறிக்கொண்டு இந்திய வானொலில் "தாழ்த்தப்பட்டவருக்கான வேலைவாய்ப்பு" இடஒதுக்கீடு என்று அறிவித்து வளரும் குழந்தைகளின் மனங்களில் எல்லாம் சாதி விதைகளை விதைத்து இந்தப் பரம்பரையில் இருந்து அடுத்த பரம்பரைக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள்! சாதியை கூறி வேலை பெற்றுக் கொண்டவன் வேலைத்தளத்தில் எப்படி சக தொழிலாளர்களுடன் எப்படி சரிசமமாக இணைந்து பணியாற்றலாம். அங்கு ஏற்படும் பிரச்சனைகளுகெல்லாம் சாதிச் சாயம் பூசி தன்னை தானே சமுகத்திலிருந்து விலத்தி வைக்கிறான்.

நீங்களும் நாங்களும் என எல்லோரும் முயல வேண்டும்.

இது பல பரம்பரைகளை கடந்தாலே மறக்கப்பட முடியும்.

அதற்கு எங்கள் சமுகத்திற்க குறுகிய நோக்கம் கொள்ளாத நல்ல அரசு வேண்டும்.

அந்த அரசை நிறுவ இப்போது எங்களுக்கு ஒற்றுமை வேண்டும்.

இப்போது, நீங்களே சொல்லுங்கள் மாப்பிள்ளைக்கு (சாதிபற்றி தெரியாத ஒருவருக்கு) அதை சொல்லிக் கொடுக்கலாமா வேண்டாமா?

மோகன் சார் போற இடமெல்லாம் சாதி சாதி என்று புலம்புறதுக்கு ஏன் சார் இடமளிக்கிறீங்கள். என்ன சாகப் போறதுக்கு தண்ணி ஊத்துறீங்களா சார். சாதிகள் இல்லையடி பாப்பான்னு பாரதி தொட்டு சொல்லுறது இன்னும் விழவில்லையா காதில. சாதி என்றதுக்கு எந்த அறிவியல் அடையாளமும் மனிதனிடமில்லை. சோ விட்டுத்தள்ளுங்கப்பா முட்டாள் தனமான பாகுபாடுகளை. ( உயிரியலில் உள்ள சாதி என்பது வேறுங்கோ. கீழத்தேச சமூகங்களில் உள்ள மனிதனுக்குள் உள்ள சாதிகள் வேறுங்கோ.. அவற்றிற்கு அறிவியல் உலகில் எந்த நியாயமும் கிடையாது) :P :lol:

நெடுக்கு நீங்களுகளா இப்படி?

ஒரு கருத்தாளரை கருத்தால் வெல்வதை விட்டுவிட்டு இப்படி முதுகில் குத்தலாமா? தன்வினை தன்னை சுடும்!

களவிதிகளுக்கமைவாக கருத்தாடும் ஒருவரின் கருத்துக்களில் கத்திவைப்பதை வெறுக்கிறேன்.

அன்புடன்,

  • கருத்துக்கள உறவுகள்

நீர் உமது சாதித்திமிரை இங்கு காட்டவேண்டாம். தலித் குடிச்சிட்டு கத்தினாலும் குடிக்காமல் சொன்னாலும் சொல்லுறதுக்கு கைவசம் வெள்ளாளப் பதில் வைச்சிருப்பியள் ...சாத்திரி நைனார்.

பெருமதிப்பிற்குரிய தலித்து அய்யா அல்லது அம்மா நீங்கள் இந்த பகுதியில் மட்டுமல்ல மற்றைய பகுதிகளிலும் வைக்கிற கருத்துகளை பார்த்தால் ஈழத்தின் 60 களில் இருந்த காலகட்டங்களின் பிரதி பலிப்பவையாகவே இருக்கின்றது எனவே நீங்கள் 70களில் வெளி நாடு வந்துவிட்டிருக்கலாம் அல்லது இதுவரை காலமும் எங்காவது கோமாவில் கிடந்திருக்கலாம். இங்கு ஒரு குறிப்பிட்ட சாதியை நீர் தொடர்ந்து வம்பிற்கு இழுப்பதிலேயே நான் சொன்னது போல இங்கு பிரிவினை நீர்தான் தூண்ட பார்க்கிறீர் என்பது புலனாகிறது எனவே உம்மை கண்டு தூர விலகுகிறேன் நன்றி :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலத்திலை தலித் தலித்தியம் எண்டு கொண்டு சிலர் என்ன செய்யினம் எண்டு எங்களுக்கும் தெரியும் அவையின்ரை பொழுது போகாத பதிவுகளிற்கும் மப்பிலை கதைக்கிற கதைகளிற்கும் நாங்கள் மினகெட்டு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைங்கோ .அவை வேணுமெண்டா புதைத்த பிணத்தை தோண்டியெடுத்து மாலை போடட்டும் ஆனால் நாங்கள் ஒப்பாரி வைக்க தயாரில்லை :angry:

தலித் தண்ணி போட்டுட்டு கதைக்கிறான் எழுதுறான் என்பதில் இருந்து உமது ஆழ் மனத்தை விளங்கிக்கொள்ள கூடியதாக இருக்கிறது. ஓம்.! தலித் தண்ணி போட்டுட்டுதான் எழுதுவான். இப்ப அதுக்கு என்ன?

இன்றைய காலத்தில் தலித் எழுத்தாளர்களால் மட்டுமே தமிழில் புதிய படைப்புகள் வருகின்றன என்பதை உம்மால் ஒப்புக்கொள்ளமுடியாத வக்கிர மனநிலை மூடிமறைக்கவே மப்பில் எழுதுகிறார்கள் தலித்துகள் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறீர். இன்று தலித் எழுத்துகள் இல்லையேல் தமிழில் புது எழுத்துகள் இல்லை. தலித்தியம்தான் தமிழுக்கு புதிய பார்வையை தருகிறது. புதிய இலக்கியதை தருகிறது. உலக அளவில் பேசக்கூடிய இலக்கியங்கள் தலித் படைப்புகளே. அதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் ஷோபாசக்தி.

ஒரு தலித் தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தில் முன்னோடியாக அடையாளப்படுத்தி விடக்கூடாது என்பதில் நீர் கடந்த காலத்தில் மிக அக்கரையாக இருந்து ஒரு தலித்தின் சுயசரிதைக்கு சேறடித்த வரலாறு எம்மால் மறக்கக்கூடியது அல்ல. மன்னிக்கக் கூடியதுகம் அல்ல நைனார் சாத்திரி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலித்தியம் என்றால் என்ன என்பதை யாராவது இரண்டு வரியில் விளக்க முடியுமா? :lol:

இது தெரியாமலா கருத்து களத்தில் உலக விசயங்கள் எல்லாத்திலும் ஓடியோடி கருதெழுதுகிறீர்.

பீ அள்ளும் மனிதனுக்கும் வாழ்வு கோரும் அரசியல் அறம் - தலித்தியம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தேசியத்தில் தலித்திற்கு தனி இடம் தரப்படமாட்டாது,

எனெனில் அதை பேணி பாதுகாக்க வேண்டிய தேவை தமிழ் தேசியத்திற்கு இல்லை.

அதை இல்லாதொழிப்பதே அதன் கடமை.

தலித்துக்கள் என்பதனால் பெருமையடைபவரும் சரி சிறுமையடைபவரும் சரி,

தங்கள் வேலிகளை உடைத்துக் கொண்டு வெளியே வாருங்கள்.

வந்து தமிழர்களாக வாழுங்கள்.

ஒன்றாக வடம் பிடிப்போம் வாரீர்!

முடவன் என்று நீ உன்னை நினைத்தால் உன்னை யாராலும் நடக்கப்பண்ண முடியாது!

தமிழ் தேசியத்தில் தலித்திற்கு தனி இடம் தரப்படமாட்டாது, என்கிறீர் நீர். அதைத்தான் சிங்களவரும் சொல்கிறார்கள் தமிழருக்கு தனியான தாயகம் இல்லை என்கிறார்கள்.

தலித்துக்கள் என்பதனால் பெருமையடைபவரும் சரி சிறுமையடைபவரும் சரி,

தங்கள் வேலிகளை உடைத்துக் கொண்டு வெளியே வாருங்கள். என்கிறீர் நீர். அதைதான் ஜேவிபி கட்சியும் சொல்லுகிறது தமிழர் என்னும் வேலியை உடைத்துக்கொண்டு இலங்கையர் என எல்லோரும் சேர்ந்து ஒன்றாக 'வடம் பிடிப்போம் வாரீர்! ' வாருங்கள் என்கிறார்கள்.

சிவா சொன்னதுபோல 'சிங்களப் பார்வை' வேண்டாம். யதார்த்தை முதலில் ஏற்றுக்கொண்டு அதற்கு பரிகாரம் காணுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு நீங்களுகளா இப்படி?

ஒரு கருத்தாளரை கருத்தால் வெல்வதை விட்டுவிட்டு இப்படி முதுகில் குத்தலாமா? தன்வினை தன்னை சுடும்!

களவிதிகளுக்கமைவாக கருத்தாடும் ஒருவரின் கருத்துக்களில் கத்திவைப்பதை வெறுக்கிறேன்.

அன்புடன்,

கருத்தைக் கருத்தால் வெல்ல வேண்டும் என்பதில் எமக்கும் மாற்றுக்கருத்தில்லை. தலித் என்ற பெயரில் போற இடம் வாற இடமெல்லாம் தலித்தியம் பேசுறது தேவைதானா என்பது தான் எமது வினவலின் நோக்கம். ஏலவே பல தலைப்புக்களில் இது நடைபெறும் போது ஏன் மீள மீள புதிய தலைப்புக்களில் களம் பூரா தலித்தியம் பேச வேண்டுமா என்பதைத்தான் வினவியுள்ளோம். எம்மைப் பொறுத்தவரை சாதிய உச்சரிப்புக்களை தொடர்வதை விரும்பவில்லை. அது எண்ணக்கருக்களுக்கான மாற்றத்துக்கு அடிகோலும் முதல் மாற்றமாகக் கூட இருக்கட்டுமேன் என்பதும் எமது அவா..! சாதிகளை உச்சரிக்காமலே இந்த விவாதங்களை எடுத்துச் செல்லலாம். தலித்தியம் என்ற ஒன்றை இந்தியாவில் இருந்து ஈழத்துக்கு காவுவதும் அநாவசியமானது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா தலித்து நீங்கள் சுற்றி எங்கு வருவீர்கள் என்று எனக்கு முதலே புரிந்துதான் இந்த வார ஒரு பேப்பரிற்காக ஒரு கட்டுரையை எழதியிருந்தேன் அதை யாழில் இப்போது இணைத்திருக்கிறேன் படித்து பாரும் உங்கள் அபிமான எழுத்தளர் சோபா சக்தியிட்டையும் படிக்க சொல்லும் படிச்சிட்டு முடிந்தால் இதோடை இன்னும் இரண்டு வசனத்தை அதாவது பாசிச புலிகளின் பினாமி சாத்திரியெண்டு எழுதினாலும் பிரச்சனையில்லை காரணம் அவர் அதை தானே செய்து கொண்டிருக்கிறார்.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry265074

ஒவ்வொருவரும் தமக்கு சரியென தெரியும் ஒர் அரசியல் பார்வையை வைத்திருப்பார்கள். நான் ஷோபாசக்தியின் சில அரசியல் கருத்துகளுடன் உடன்பாடு உடையவன் அல்ல. ஆனால் படைபிலக்கியத்தில் ஒரு எழுத்தாளனுக்குரிய சுதந்திரத்தை மதிக்கிறேன்.

பெரியாரின் அரசியலை விளங்கிக்கொள்ள நீர் இன்னும் கன தூரம் போகவேண்டும். பெரியாரை பற்றிய உமது படிப்பனுபவம் என்ன? எழுத முதல் நிறைய வாசியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தேசியத்தில் தலித்திற்கு தனி இடம் தரப்படமாட்டாது, என்கிறீர் நீர். அதைத்தான் சிங்களவரும் சொல்கிறார்கள் தமிழருக்கு தனியான தாயகம் இல்லை என்கிறார்கள்.

தலித்துக்கள் என்பதனால் பெருமையடைபவரும் சரி சிறுமையடைபவரும் சரி,

தங்கள் வேலிகளை உடைத்துக் கொண்டு வெளியே வாருங்கள். என்கிறீர் நீர். அதைதான் ஜேவிபி கட்சியும் சொல்லுகிறது தமிழர் என்னும் வேலியை உடைத்துக்கொண்டு இலங்கையர் என எல்லோரும் சேர்ந்து ஒன்றாக 'வடம் பிடிப்போம் வாரீர்! ' வாருங்கள் என்கிறார்கள்.

சிவா சொன்னதுபோல 'சிங்களப் பார்வை' வேண்டாம். யதார்த்தை முதலில் ஏற்றுக்கொண்டு அதற்கு பரிகாரம் காணுங்கள்.

எங்களுக்கு முதலே தெரியுமாக்கும் நாச்சியார் உங்கடை போக்கு எப்பிடியெண்டு?நீங்கள் கருத்து எழுத வந்தவரில்லியாக்கும்.சும்மாய

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நாச்சியார் தலித்! நீங்களே உங்களுக்கெண்டு ரேடியோவும், ரிவியும் தொடங்கலாந்தானே?

இருக்கிற ரேடியோ காணாதா?

இது தெரியாமலா கருத்து களத்தில் உலக விசயங்கள் எல்லாத்திலும் ஓடியோடி கருதெழுதுகிறீர்.

அப்படியானால் யாழ் கள நிருவாகத்திடம் சொல்லி தலிதியம் என்றால் என்ன என்று அறிந்ததன்பின்பே யாழ் களத்தில் உறுப்பினர்கள் கருத்து எழுதமுடியமென்ற ஒரு புதிய விதியை கொண்டுவருமாறு கேட்போம்! :rolleyes:

எங்களுக்கு முதலே தெரியுமாக்கும் நாச்சியார் உங்கடை போக்கு எப்பிடியெண்டு?நீங்கள் கருத்து எழுத வந்தவரில்லியாக்கும்.சும்மாய

தலித் தண்ணி போட்டுட்டு கதைக்கிறான் எழுதுறான் என்பதில் இருந்து உமது ஆழ் மனத்தை விளங்கிக்கொள்ள கூடியதாக இருக்கிறது. ஓம்.! தலித் தண்ணி போட்டுட்டுதான் எழுதுவான். இப்ப அதுக்கு என்ன?

இன்றைய காலத்தில் தலித் எழுத்தாளர்களால் மட்டுமே தமிழில் புதிய படைப்புகள் வருகின்றன என்பதை உம்மால் ஒப்புக்கொள்ளமுடியாத வக்கிர மனநிலை மூடிமறைக்கவே மப்பில் எழுதுகிறார்கள் தலித்துகள் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறீர். இன்று தலித் எழுத்துகள் இல்லையேல் தமிழில் புது எழுத்துகள் இல்லை. தலித்தியம்தான் தமிழுக்கு புதிய பார்வையை தருகிறது. புதிய இலக்கியதை தருகிறது. உலக அளவில் பேசக்கூடிய இலக்கியங்கள் தலித் படைப்புகளே. அதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் ஷோபாசக்தி.

ஒரு தலித் தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தில் முன்னோடியாக அடையாளப்படுத்தி விடக்கூடாது என்பதில் நீர் கடந்த காலத்தில் மிக அக்கரையாக இருந்து ஒரு தலித்தின் சுயசரிதைக்கு சேறடித்த வரலாறு எம்மால் மறக்கக்கூடியது அல்ல. மன்னிக்கக் கூடியதுகம் அல்ல நைனார் சாத்திரி .

வணக்கம் தலித்,

சோபாசக்தி கதை எழுதக்கூடியவராக இருக்கலாம்,ஆனால் புலிகள் பாசிஸ்ட்டுக்கள் என்றும், புலிகள் யாழ்ப்பாணி வேளாளர்களைப் பிரதினிதுவப்படுதுகிறார்கள் என்றும் சோபா சக்தி கூறுவதுடன் ஒருங்கு படுகிறீர்களா?

புலிகள் சாதிகள் அற்ற சம்தர்ம தமிழ் ஈழத்துக்கே போராடுகிறர்கள் என்பதையும், புலிகள் இயக்கத்துக்கள் சாதிய வேறுபாடுகளோ சமய அடையாளங்களோ இல்லை என்பதையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

புலிகள் சாதி சமய வேறுபாடுகளைக் கடந்த தமிழ் அடையாளத்துக்காகவே பாடுபடுகிறர்கள் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா?

புலிகளின் தலமையினாலான தேசிய விடுதலைப் போரே எம் எல்லோருக்கும் விடுதலையைத் தரும் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா?

எமது உள் முரண்பாடுகளால் நாம் பிளவு படுவது எல்லோருக்குமே பேரழிவைத் தரும் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?எதிரி இவ்வாறான உட் பிழவுகளைப் பயன் படுத்துவான் ஏன்பதையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

புலம் பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சமூகத்தில் நிலவும் பிற் போக்கான கருதுக்களையே இங்கு எழுதி வருகின்றனர்.இவை புலிகளின் கருதுக்கள் இல்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நாங்கள் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து இருந்து கொண்டே இவ்வாறான பிற் போக்குதனங்களுக்கு எதிராகாப் போராட வேண்டி உள்ளது.புலிகளின் தலமையில் இவ்வறான பிற் போக்குத் தனங்கள் இல்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதி இல்லை என்று விட்டு எவ்வளவு சாதியக் கருதுக்களைக் கூறி உள்ளீர்கள்? சமூக அடக்குமுறைகளால் காலம்காலமக அடக்கப்படவர்கள்,தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்தால் தமக்கு விடிவு கிடைக்கும் என்று நம்பினால் தான் எல்லோரும் ஒன்று பட்டுப் போராட முடியும்.முதலில் சாதி இல்லை என்று சொல்கிறீர்கள்.பிறகு நீங்கள் நாங்கள் என்று கதைக்கிறீர்கள்.அவர் நளவர்,பறையர் என்கிறீர்கள்.அந்த மக்கள் தங்களை அப்படிக் கீழத்தரமான சொற்களால் சொல்லாமல் தலித் என்று சொல்லுங்கள் என்று சொல்கிறார்கள்,அது கௌவுரமான பதமாக அவர்கள் கருதுகிறார்கள்.அதற்கான உரிமை அவர்களுக்கு இல்லையா?

சமூக விடுதலையோடு கூடிய தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டமே வெற்றி பெறும்.மேற் குறிப்பிட்ட பேச்சுக்கள் இன்னும் இன்னும் அம் மக்களை சோபா சக்தி போன்ற சந்தர்ப்பவாதிகளிடமே கொண்டு போய் சேர்க்கும்.இதனை ஏன் புரிந்து கொள்கிறீர்கள் இல்லை.காலம் காலமாக ஊட்டப்பட்ட சாதிய உணர்வுகள் எவ்வாறு இன்னும் வாழ்கின்றன் என்பதற்கு மேலே எழுதப்பட்டவை நல்ல சாட்சியங்கள்.இங்கே சாதி எங்கிருக்கிறது என்பவர்களுக்கு இதோ இங்கே இருக்கிறது என்று சொல்லக் கூடிய எழுதுக்கள்,எண்ணங்கள்.

உங்களுங்கள் இருக்கும் கழிவுகளில் இருந்து வெளியே வாருங்கள்.இந்தக் கழிவுகளை அகற்ற இன்னும் இன்னும் பல பன்னாடைகள் தேவையாக இருக்கிறது.கருணாவை உருவாக்கியது யாழ்ப்பாணி மட்டக்களப்பான் என்னும் பிரதேச வாதாம்.இனி தலித்தியம், சைவ வேளாளாம் என்று இன்னும் இன்னும் பல கருணாங்களை உருவாக்கப் போகிறோம். நாங்கள் இவை பற்றிப் பேசாம தலையை மண்ணுக்க புதைச்சுக் கொண்டு இருப்பம்.இவை எல்லாமும் தானகவே இல்லாது போய் விடும்.ஏனெண்டா புலத்தில் சாதி இல்லை, களத்திலையும் இல்லை.சாதியை உருவாக்கியது பெரியார் தான் .உந்தப்பெரியார் அடிப்பொடிகளை அழிச்சா அல்லது உவையைப் பேசாம இருக்க வச்சா ,சைவமும்,தமிழும் தளைக்க மீண்டும் யாழ்ப்பாணி வேளாள அரசு அமையும்.

இருந்து கனவு காணுங்கோ.

ஐயா நாரதரே! நான் போலி வாழ்க்கை வாழவில்லை!உள்ள பிரச்சனையை நீங்கள் உற்று நோக்குங்கள்.யார் இந்த பிரச்சனையை கொண்டு வருகிறார்கள்.எந்த ஊடகத்தில் சாதியைப்பற்றி கதைக்கின்றார்கள் அல்லது விவாதிக்கின்றார்கள்.சரி வெளிநாடுகளில் சாதிப்பிரச்சனை இருக்கின்றது.அந்த சாதிப்பிரச்சனையை அவர்கள் தங்களுடனேயே வைத்திருக்கட்டுமே!மேலை நாடுதானே சகல சுதந்திரமும் இங்குள்ளதே?சாதி குறைந்தவர்கள் என எண்ணுபவர்கள் அவர்கள் எந்த விதத்தில் இங்கு குறைக்கப்பட்டர்கள்?யாரால் எந்த விதத்தால் குறைக்கப்பட்டார்கள்?சிலவேளைகளில் ஒரு சிலரின் தனிப்பட்ட விழாக்களாயிருக்கலாம்.அது அவர்கள் தனிப்பட்ட பிரச்சனை.சாதிப்பிரச்சனை என்பது ஒருமணி நேரத்தில் அல்லது நாட்கணக்கில் ஒழியக்கூடியதல்ல.இதற்கு பல சந்ததிகள் மாற வேண்டும்.இந்தப்பிரச்சனை மனிதருக்கு வரும் தலைவலி போல் அல்ல மாத்திரை எடுத்தவுடன் அரைமணி நேரத்தில் மாறுவதற்கு.நான் எனது வதிவிடத்தில் கள்ளுக்கொட்டில் என குறிப்பிட்டுள்ளேன்.அது என் வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு!நான் சிறுவயதில் இத்தொழில் செய்பவர்களுடன் பழகியதாலும்,அவர்கள் வீடுகளில் உணவு உண்டதாலும் என் உறவினர்களால் அவமதிக்கப்பட்டேன்.என் பெற்றோர்,சகோதர்கள் ஊரில் ஒருசிலரால் அவமதிக்கப்பட்டனர்.இத்துடன் பாடசாலையிலும் ஒருசில பிரச்சனைகள் வந்தவுடன் மட்டக்களப்புக்கு இடம் பெயர்ந்தேன்(குடும்பத்தினரால

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் வெள்ளாளரை எதுக்கெடுத்தாலும் இழுக்கிறியள்?

பூனைக் குட்டி வெளியில வந்திட்டுது.

சாதியின் வேர்கள் மூலங்களை ஆராய்வதை விட அந்த எண்ணக் கரு ஒழிந்து போக நடைமுறைரீதியாக என்ன செய்யலாம் என ஆராயலாமே..?

சாதியின் தோற்றத்திற்கோ அல்லது சாதிக்கு தூபமிட்டதற்கோ இந்து மதம் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய நாளில் சாதித் திமிரைக் கடைப்பிடிக்கும் ஒருவருக்கு வர்ணாசிரமம் என்றால் என்ன என்று பெரும்பாலும் தெரியாமல்த் தான் இருக்கும். அவரைப் பொறுத்த வரை அது அவரது வழி வந்த நம்பிக்கை. இந்து மதத்தை அழித்துப் பாருங்கள் அப்பொழுதும் சாதி பற்றிய எண்ணம் இருக்கும்.

ஆக சாதியை யார் தோற்றுவித்தது எப்படித் தோன்றியது என்பதில் நேரத்தை செலவிடாமல் நடைமுறை ரீதியாக அதனை எவ்வாறு இல்லாதொழிக்கலாம். என பாருங்கள்.

இன்று குமாரசாமி சொன்னது போல ஏன் வெள்ளாளரை எதுக்கெடுத்தாலும் இழுக்கிறியள்? என்டது சாதி மனங்களில் இருக்கிறது என்பதற்கான ஒரு உதாரணம். அதேபோலவே தலித்துக்கள் என்பதுவும். இந்த இரண்டும் அற்ற நிலைக்கான செயற்பாட்டுத் தீர்வு என்ன.?

நடைமுறையிலிருக்கும் சமூகப் பிரிவுகளுக்குள் திருமணங்கள் நடைபெறுவது எந்த விதத்தில் பயன் அளிக்கும். ? அவ்வாறான திருமணங்களின் மூலமாக அடுத்த சந்ததி குறித்த ஒரு பிரிவின்றி இயங்குமா..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.