Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதியம்- உடன் பிறந்தே கொல்லும் வியாதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விபச்சாரம் என்பது ஓர் ஈனச்செயல். அதை செய்பவர்களை ஒழிப்பதன் மூலம் அதை ஒழிக்கலாம்.

விபச்சாரம் ஈனச்செயல் என்றால் சாதியம் மட்டும்தெய்வச்செயலா? :P :P :P

மனித பாகுபாட்டுக்கான எண்ணக்கருவுக்கான தளம் வேறு. தெய்வம், அரசியல், மனித ஒழுக்கம், பாலியல் ஈனத் தொழில் என்பது போன்றவற்றிற்கான தளம் வேறு. சித்தனுக்கு சித்தம் இருந்தால் சிந்திக்க. :blink:

  • Replies 115
  • Views 14.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித பாகுபாட்டுக்கான எண்ணக்கருவுக்கான தளம் வேறு. தெய்வம், அரசியல், மனித ஒழுக்கம், பாலியல் ஈனத் தொழில் என்பது போன்றவற்றிற்கான தளம் வேறு. சித்தனுக்கு சித்தம் இருந்தால் சிந்திக்க. :icon_mrgreen:

மனிதத்தை அழிக்கும் எதுவும் ஈனச்செயல்களே அதுவே எமது நிலைப்பாடு, விபச்சாரமும், சாதியமும் எமது பார்வையில் மனிதத்தை அழிக்கும் செயல்களாகவே நாம் கருதுகிறோம். :blink:

சாதியை அழித்தால் அதற்க்கு எதிரான தோற்றம் உருப்பெறும் எனக்கூறும் நீங்கள், விபச்சரிகளை அழித்தால் விபச்சாரம் அழிந்துவிடும் என்பது, கருத்துமயக்கத்தை உருவாக்கிறதே. :icon_mrgreen::icon_mrgreen::D

Edited by சித்தன்

சாதியிரண்டொளிய வேறில்லைச்

சாற்றுங்கால் நீதி வழுவா நெறி முறையில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கிலுள்ளபடி. :blink::icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen::D

Edited by Norwegian

  • கருத்துக்கள உறவுகள்

மனிதத்தை அழிக்கும் எதுவும் ஈனச்செயல்களே அதுவே எமது நிலைப்பாடு, விபச்சாரமும், சாதியமும் எமது பார்வையில் மனிதத்தை அழிக்கும் செயல்களாகவே நாம் கருதுகிறோம். :icon_mrgreen:

சாதியை அழித்தால் அதற்க்கு எதிரான தோற்றம் உருப்பெறும் எனக்கூறும் நீங்கள், விபச்சரிகளை அழித்தால் விபச்சாரம் அழிந்துவிடும் என்பது, கருத்துமயக்கத்தை உருவாக்கிறதே. :icon_mrgreen::icon_mrgreen::D

விபச்சாரம் எண்ணக்கரு அல்ல. அது மனிதத் துர்நடத்தை. மனிதப்பாகுபாடுகள் சாதியம் உள்ளிட்டவை மனித ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் எண்ணக்கருக்களின் விளைவு. சமூகத்தில் விபச்சாரத்தின் தாக்கம் போன்றதல்ல பாகுபாடுகளின் தாக்கம். இரண்டும் தீமைகளைத் தருகின்ற போதும் விபச்சாரத்தை செய்பவர்கள் குறிப்பிட்ட ஒரு தொகையினர். அதன் தாக்கம் மிக மோசமானது. மனிதப் பாகுபாட்டு எண்ணக்கருக்கள் என்பது மனித சமூகம் அனைத்திலும் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு அளவுகளில் விதைப்பட்டு இருக்கிறது. அவற்றின் தாக்கம் மோசமானதாகினும் மொத்த சமூகத்திலும் அது பரந்து கிடக்கிறது. அதை அழிப்பது என்பது புகுத்தப்பட்ட எண்ணங்கருக்களைப் பலவீனப்படுத்தும் அறிவியல் கருத்தியல் விளக்கங்கள் கொடுப்பப்படுவதன் மூலமே. எண்ணக்கருவை தாங்குவதற்காக தனிமனித நடத்தையை குறை சொல்ல முடியாது. ஆனால் விபச்சாரம் தனி மனித நடத்தைகளை மட்டுமன்றி சமூகப்பாதிப்புகளை விரைந்து அளிக்கக் கூடிய மிகக் கொடியவை.

நீங்கள் நாங்கள் சொல்ல வந்த கருத்தை உணரவில்லை சரியாக. சாதிய எதிர்ப்பு என்ற வகையில் சொல்லப்படும் கருத்துக்கள் ஒரு சில பிரிவுகளுக்கு எதிரான அல்லது சமூக அக்கறையாளர்களுக்கு எதிரான கருத்துக்கள் அப்பிரிவுகளையும் அவர்களையும் சார்ந்தோரை இந்தப் பிரச்சாரங்கள் தூர விலக்கி வைப்பதோடு பலவீனமான நிலையை அடைகின்றன. கருத்தியலில் நியாயம் இருந்தால் எவரும் பாகுபாடுகளுக்கு அப்பால் எண்ணக்கருக்களை மாற்றிக் கொள்ளத் தயங்கார். இங்கு நடக்கும் சாதி எதிர்பென்பது நாவலர் எதிர்ப்பு பிராமணர் எதிர்ப்பு வேளாளர் எதிர்ப்பு என்றுதான் உருப்பெருகிறதே தவிர மனிதர்கள் மத்தியில் உள்ள பாகுபாட்டுக்கான எண்ணக்கருக்கள் நோக்கியல்ல என்பதையே தெளிவாகச் சுட்டிக்காட்டி வருகின்றோம். நீங்கள் விளங்காதமாதிரி நடிக்கிறீர்களா அல்லது கருத்தை திரிக்க முயல்கிறீர்களோ தெரியவில்லை. இத்தளவோடு உங்களுக்கு தந்த விளக்கம் போது என்று நினைக்கின்றோம்.:blink:

Edited by nedukkalapoovan

உந்த நாவலர் எண்டவரைப் பற்றி முந்திக் கொஞ்சம் கதைச்சிருக்கிறம். அதையும் ஒருக்கா பாருங்க :blink:http://www.yarl.com/kalam/viewtopic.php?t=427

நாவலர் சைவத்தை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டவர். பல நூல்களை தமிழில் எழுதியுள்ளார். சைவ சமயத்தின்படி வாழ்ந்தவர். பசு பதி பாசம் பற்றி நன்கு அறிந்தவர்.

இந்து தர்மத்தின்படி சாதியத்தை கட்டிக் காத்தவர்.

யாழ்ப்பாண இந்து வேளாள சமூகத்திற்கு நாவலர் ஒரு மிகப் பெரிய மகான். அவர் பற்றி விமர்சனங்கள் வைத்தாலே பதறி அடித்துக் கொண்டு ஓடி வருவார்கள். இது புரிந்து கொள்ளக்கூடியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் நாவலர் பற்றி கேவலமாகப் பேசுவதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். அவர் ஆரம்பித்த எந்தப் பாடசாலைகளிலும் ஜாதி வாதம் நோக்கப்படவில்லை. அவர் போராடியதே, தமிழரில் பரவியிருந்த ஜாதிப் பிரிவுகளை வைத்து, மேலைத்தேயர் மதப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதைத் தடுப்பதற்கே!

மற்றும்படி அவர் எவ்விதத்திலும் ஜாதி வாதம் கொள்ளவில்லை. அவர் அவ்வாறு ஜாதி வெறி கொண்டிருந்தால், இன்று தமிழீழத்தில் உள்ள, வேளாளர், பிராமணர்கள் தவிர மிகுதி அனைவரும் கிறிஸ்தவ மதத்தில் தான் இருந்திருக்க வேண்டும்.

ஒரு தனிமனிதனால், போராட முடிந்த அளவு அவ்வளவு தான்.

மற்றும்படி, அவரைப் பற்றிய அவதூறுகளை இந்தப் பகுத்தறிவுப் பொறுக்கிகள் சொல்வது ஒன்றும் புதிதல்ல. அன்று ஆறுமுகநாவலரரோடு போட்டி போட முடியாத ஆங்கிலப் பாதிரிகள் அவர் மீது அவதூறுகளைப் பொழிந்தார்கள். அவ்வாறே தங்களின் மதங்களைப் பரப்ப, மேலைத்தேயன் ஐாதி வாதத்தை ஊக்குவித்து, தங்களின் மதங்களைப் பரப்பினான். அதை எல்லாம் தாண்டி, சைவமும், தமிழும் ஒன்று என்று தமிழின் பெருமை தன்னை பரப்பியவர் ஆறுமுகநாவலர்.

ஆனால் இந்தப் பொறுக்கிகள் தமிழை ஒரு துளியும் கூட காப்பாற்ற வக்கில்லாத நிலமையில் இருக்கின்ற நிலைமைக்கும், நாவலர் தனிமனிதனாக தமிழ் உணர்ச்சியை ஆங்கிலேயேர் எதிர்ப்புக்கு மத்தியில் போராடியதற்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது.

இந்தப் பகுத்தறிவுப் பொறுக்கிகள், மற்றவனைப் பற்றித் திட்டுவதைத் தவிர, என்ன தெரியும்.

ஜாதி வாதத்தை ஊக்குவித்து, அதில் குளிர்காய்ந்து பிழை்பபு ஓட்டுவதைத் தவிர!

--------------------------------------------------------

மேலும், தமிழ் உணர்வோடு வாழ்ந்த தாமோதரம்பிள்ளை, ஞானப்பிரகாசர் போன்றவர்களையும் இந்த நேரத்தில் ஆறுமுகநாவலரோடு போற்றுகின்றோம். யாழ்களத்தில் மதத்தை எதிர்க்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு தமிழ் எதிரிகளும் அதிகமாகிவிட்டார்கள் என்பதைத் தான் உணர முடிகின்றது.

தூயவன்! உங்களுக்கு நாவலரின் சாதி வெறி குறித்து எதுவும் தெரியாது விட்டால் அதை அறிந்து கொள்ள முயற்சியுங்கள்.

இணையத்தில் கூட நாவலர் மீது பற்றுள்ளவர்கள் எழுதிய பல கட்டுரைகள் இருக்கின்றன. அவர்களே நாவலரின் சாதியப் பிடிப்புக் குறித்து எழுதியுள்ளார்கள்.

நாவலரின் பாடசாலைகளில் வேளாளர், பிராமணர் தவிர்ந்த வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. மற்றைய சாதியினர் கிறிஸ்தவ மிசினரிமார்கள் நடத்திய பாடசாலைகளுக்கு செல்ல வேண்டி வந்தது.

மறுபுறம் சிங்களத்தில் அநாகரீக தர்மபாலா போன்றவர்கள் பௌத்த சிங்கள தேசியத்தை கட்டி எழுப்ப ஆரம்பித்திருந்த நேரத்தில், நாவலர் சைவ வேளாள சாதியை வளர்த்துக் கொண்டிருந்தார்.

இந்த உண்மைகளை படித்து அறிந்து விட்டு வாருங்கள்! பிறகு பேசுவோம்

ஆறுமுக நாவலர் சைவமும் தமிழும் ஒன்று என்று போராடியவர் என்று நகைச்சுவை ஒன்றையும் விட்டிருக்கிறீர்கள்.

ஆறுமுக நாவலர் சொல்கிறார்: தமிழும் சைவமும் ஒன்று அல்ல. தமிழ் என்பது ஒரு பாசை. அவ்வளவுதான்.

இதுவும் அவருடைய நூல்களிலேயே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே!

ஒரு விடயம் மட்டும் சொல்ல முடியும், நெடுங்காலபோவனை எதிர்ப்பதாக நினைத்து, தமிழ் வளர்த்த, பெரியார்களை அசிங்கப்படுத்துவது உண்மையில் மிகக் கீழ்தரமானது. என்னைப் பொறுத்தவரைக்கும் நெடு... ஒரு திருத்த முடியாத ஜன்மம். அவர் எதையும் ஆதரிக்கின்றார் என்பதற்காக, எம் முன்னோர்களைக் கீழ்தரமாக விவாதிக்காதீர்கள்.

வெள்ளைச்சுவரில் கறுத்தைப் புள்ளியை மட்டும் நோக்கும் மூடர்களைப் போல, நோக்கி, எம் முன்னோர்களை அசிங்கம் செய்தால், அடுத்த தலைமுறை பிறமொழியில் வாழ்ந்தபடி எம்மைக் குறி வைக்கும் என்பதை மறுக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகநாவலர் ஆரம்பித்த பாடசாலையில் படித்தவன் என்ற வகையில் அந்தப் பாடசாலை வரலாற்றை நான் அறிவேன். அங்கே, இன்றும் சரி, அன்றும் சரி சாதி வாதம் பார்ப்பதில்லை. இந்த விதண்டாவாதிகள் எங்கே பிழை பிடிக்கலாம் என்று அலைவர்கள். அதற்கு ஒன்றும் சொல்லமுடியாது. ஏனென்றால் அடிப்படை அறிவற்று, தங்களைப் பெரியவர்கள் ஆக்கும் போக்கிரிகள் இவர்கள்.

முன்பு ஒரு தடவை, வவுனியா பூந்தோட்ட முகாமில் பாதிரியார் ஒருவர் வந்திருந்தார். அவரோடு கதை்ததுக் கொண்டிருந்தபோது,தான் முந்தி சைவம் என்றும், பிறகு மதம் மாறியதாகவும் சொன்னார். அத்தோடு ஆறுமுகநாவலர் பெண்களைக் கற்பழித்தவர் என்றும் கூச்சமில்லாமல் சொன்னார். ( அந்தப் பாதிரியார் யார் என்று என்னால் சொல்லமுடியாது. ஆனால், அவர் மலையகத்தில் குருப்பணி செய்வதாக அப்போது சொல்லியும் இருந்தார்)

இதில் என்ன சொல்ல வருகின்றேன் என்றால், ஆறுமுகநாவலரை நேரடியாகச் சந்திக்க துப்பில்லாதவர்கள் அவர் மீது சேற்றை வாருவது தான். அவர் போன்று தங்களால் தமிழை வளர்க்க முடியாவிட்டால், உடனே அவரைத் தாழ்த்திக் கதைக்கின்ற புறம்போக்கு வேலை செய்வது தான் இவர்கள் வழமை.

சாதி என்ற ஒரு பேயின் இருப்பை நியாயப்படுத்த மதம் என்ற இன்னொரு பேய் இன்று தேவைப்பட வில்லை. சாதியே போதுமானது (தன்நிறைவு!)

நுன்றி பாலபண்டிதர் உங்களின் இக்கருத்தோடு நான் முற்றிலும் உடன்படுகிறேன். இக்கருத்தைத் தான் நான் முதலில் இருந்து முன்வைக்க எத்தனிக்கின்றேன். இன்னமும் சொல்வதானால் கிராமங்களில் இன்று சாதியத்தைக் கையாளும் மிகப் பெரும்பான்மையானோர் அதன் நதிமூலம் ரிசிமூலம் அறிந்தோ அல்லது அது எதனால் அவசியம் என்றோ ஆராய்ச்சி செய்து கையாளவில்லை. உண்மையில் பல இந்துக்கள் வர்ணக் கோட்பாடு என்ற விடயத்தை கேள்விப்படாதே வாழ்கிறார்கள்.

ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடை படிக்கும் பாக்கியம் கிடைத்தது..

-------

போசனஞ் செய்யத்தக்கது.

31.போசன பந்திக்கு யோக்கியர் ஆவார் யாவார்?

மதுபானமும், மாமிச போசனமும் இல்லாதவராகவும், சமசாதியாராயும், ஆசாரம் உடையவராயும் உள்ளவர்.

32.எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?

தாழ்ந்த சாதியார் இடத்திலும், கள்ளுக் குடிப்பவர் இடத்திலும், மாமிசம் புசிப்பவர் இடத்திலும், ஆசாரம் இல்லாதவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.

33. இவர்கள் காணும்படி போசனம் பண்ணலாமா?

போசனம் பண்ணல் ஆகாது.

--------

Removed

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று எத்தனை பேர் மலங்கழிக்கும் போது

"கிழக்கு நோக்கிக் குந்தி இருந்து இரு கை கூப்பி சிவசிவ என்று சொல்லியவாறு" மலங்கழிக்கிறீர்கள் ?

ஒருவருமில்லையல்லவா?

காலத்திற்கு ஒவ்வாதது என்று கழித்து விட்டீர்களல்லவா?

நாவலர் அவ்வாறு தான் சொன்னார்.

அதே போல

நாவலர் என்ன யார் கூறினாலும், காலத்திற்கு ஒவ்வாதது அழிதலே இயற்கை. சாதியும் அதிலொன்று.

சும்மா நாவலரையும், சாதி பற்றிய பக்கம் பக்கமான வியாக்கியானங்களும் சொல்பவர்கள் (இது விடயங்களில் தங்கள் தங்கள் பாண்டித்"தீ"யத்தைக் காட்டுவதற்காக), இன்று புலம் பெயர்ந்த தேசத்தில் சாதியை எவ்வாறு ஒழிப்பதன் மூலம் மக்களை தேசியத்தை நோக்கி அணிதிரட்டலாம் என்று சிந்தியுங்கள். அல்லது தேசியப்பாதையைல் மக்களை திரட்ட சிறந்த வேறு என்ன வழிகள் என்ன என்று சிந்தியுங்கள். சிங்கள பரப்புரை இயந்திரத்தை எவ்வாறு செயலிழக்க வைப்பது என்று சிந்தியுங்கள். உங்கள் கருத்தை முன் வையுங்கள். கருத்தாடுவோம். மற்றபடி இப்படி பழைய கதை பறைய நேரத்தை செலவழிப்போர் களத்தில் நிற்கும் போராளிகளிற்கு துரோகம் செய்வோரே!

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகநாவலரைப் பற்றி கதைக்க எந்த மனிதனுக்கும் துணிவிருந்தால் தான் பிடிக்கும் கொள்கையையும், அது எவ்வளவு தூரம் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் சேவை ஆற்றியது பற்றிக் கதைக்கத் துப்பிருந்தால், அவர்களோடு எந்த விவாதத்துக்கும் தயார்!

ஆனால் தனக்குப் பின்னணி இல்லை, என்று ஒளித்துக் கொண்டு மற்றவர்களைச் சுரண்டும் போக்கிரித்தனத்தைச் செய்ய வேண்டாம்.

ஓரு பிரச்சினை உள்ளது என்றால் அதனை எவ்வாறு கையாளலாம் தீர்க்கலாம என சிந்திப்பவன் மற்றும் உழைப்பவனால் தான் சமூகத்திற்கு நன்மை. ஆதை விடுத்து தமது உதிரிக் கொள்கைகளை நச்சுகத்தனமாக பரப்புவதற்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் ||கையாக||; செய்பவர்களை நானும் தீவிரமாகக் கண்டிக்கின்றேன்.

ஆறுமுக நாவலர் தமிழின் மாட்சிமைக்காக உழைத்தார் என்பது மறுக்கமுடியாதது. ஆவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சில கருத்தியல்கள் அவரின் படைப்புக்களில் தெரியலாம, அவரும் மனிதர் தானே.. அவர் செய்த சொன்ன சாதித்த அனைத்து நன்மைகளையும் விடுத்து குறைகளை தமது உள்ளார்ந்த நலன்களிற்காகத் தேடுபவர்கள் சற்றுச் சிந்தித்தல் வேண்டும.

ஆறுமுக நாவலர் வல்லுறவில் ஈடுபட்டவரா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

ஆறுமுக நாவலர் ஒரு சாதி வெறியர் என்பது பலரும் அறிந்த ஒரு விடயம். அவர் எழுதிய நூல்களே அதற்கு சாட்சி.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%....AE.AE.E0.AF.8D

இன்றைக்கு பாடசாலைகளில் சாதி பார்க்க முடியாது. அதை வைத்துக் கொண்டு அதே பாடசாலைகளில் என்றைக்கும் சாதி இருக்கவில்லை என்று சொல்வது அறிவற்ற செயல்.

ஒரு விவாதம் நடக்கின்ற பொழுது திறந்த மனதுடன் நேர்மையான முறையில் விவாதம் செய்ய வேண்டும்.

;இது நீதிமன்றம் அல்ல. எம்முடைய கட்சிக்காரரை பொய் சொல்லி காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

நாவலர் சாதி பார்க்கவில்லை, பிராமணர்களுக்கும் சாதிக்கும் சம்பந்தமில்லை என்று பொய் பேசியபடி உண்மைய ஏற்க மறுத்துக் கொண்டிருந்தால், சாதி பற்றி திறந்த மனதுடன் விவாதம் செய்து தீர்வு காண முடியாது.

இன்று வரை சாதி இருப்பதற்கு இது போன்று மனநிலைகளும் ஒரு முக்கிய காரணம்.

சாதி என்பது களையப்படவேண்டியது. இந்தப்பகுதியில் அவர் சாதியத்தை வளர்த்தார், இவர் சாதியத்தை வளர்த்தார் என்ற ஆய்வு நடத்தவில்லை. காலத்துக்கு ஒவ்வாத கடந்தகால நிகழ்வுகளை மீட்டு மீட்டு நிகழ்காலத்தில் உருவாக்க வேண்டியவையை கவனத்தில் எடுப்பதைக் காட்டிலும் விவாதிப்பதிலேயே இப்பகுதி நகர்கிறது. நேற்றைகளைப்பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு இன்று என்ன செய்யலாம் என்று ஏதேனும் ஆரோக்கியமான வழிகளைக் கூறுங்கப்பா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரான்சிலே சிறிலங்கா தூதரகத்தின் பின் பலத்தடன் நடக்கும் ஒரு கோவில் தேர் திருவிழாவுக்கு 50 ஆயிரம் பேர் திரள்கிறார்கள். ஆனால் சமீபத்தில் நடந்த பொறுமையின் விளிம்பில் தமிழர்கள் என்ற முக்கியமான தாயக நிகழ்வுக்கு 1800 பேர் மட்டுமே வந்திருந்தார்கள்.

Toronto வில் நடந்த பொங்கு தமிழுக்கு 75,000 பேர் வந்தார்களே. இருந்துமென்ன? ஒரு கனேடிய தேசியப் பத்திரிகையாளன் வரவில்லையே!! (ஒருவேளை நாவலரின் படத்தையும் தூக்கிக்கொண்டு போயிருந்தால் வந்திருப்பார்களோ? :blink::icon_mrgreen: :icon_mrgreen: )

கூட்டம் கூட்டினால் மட்டும் போதாது. அதை விட இன்னும் செய்ய இருக்கிறது ஐயா.

Edited by balapandithar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ சபேசன் எங்கயென்றில்லை கிடைக்கும் இடத்தில் மதவிரோதத்தை கடை போடுவதற்க்கென்றே அலைகிறீர்கள் போல் உள்ளது.

மதம் இன்னும் பல சொல்கிறதே1

பொய்சொல்லாதே!

வாழ்கையில் ஒழுக்கம் பேணு!

மாற்றான் சொத்துக்கு ஆசைப் படாதே!

....................................................

......................................................

இப்படி மதம் சொல்லும் எல்லாவற்றையும் உயிர் போல் போற்றி வாழ்கிறான். எனவே சாதியத்தையும் போற்றுவதற்கு மதமே குற்றவாளி என்று நிரூபித்து விடலாம் போல் இருக்கிறது. இல்லையா?

இந்து மதம் பொய் சொல்லக் கூடாதென்று சொல்லுதா?! நல்ல வேடிக்கை. இந்து மதக் கடவுள்கள் அத்தனை பேரும் பொய்யர்களும் புரட்டர்களும்தானே! துரோணரைக் கொல்வதற்காக தருமனை பொய் சொல்லத் தூண்டியது யார்?????

ஒழுக்கத்திற்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம்? பெத்த பெண்ணையே பெண்டாள நினைத்தவர்கள்தாம் இந்து மதத்து நாயகர்கள்.

அடுத்தவன் சொத்தை விடுங்கள் . அடுத்தவர்களின் பெண்சாதிமாரையே விட்டு வைக்காதவர்கள் தான் இந்து மத மும்மூர்த்திகள். அதில் சிவனார் மிகவும் விசேடமானவர்.

விலங்குகளும் மேற்கொள்ளாத இழிந்த முறைகளைக் கையாண்டவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது இந்து மதம்.

சாதியத்தின் ஆணிவேரே இந்து மதம்தான். இந்து மதத்தை ஒழிக்காமல் சாதியத்தை ஒழிக்கமுடியாது.

கிறிஸ்தவர்கள் உயர்ந்தவர்கள் எல்லக் கிறிஸ்தவர்களும் பைபிள் படிக்க வேண்டும் என்று கிறிஸ்தவம் கூறுகிறது

முஸ்லீமகள் உயர்ந்தவர்கள் எல்லக் முஸ்லீம்களும் குர்ரான் படிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது

ஆனால் இந்து மதமோ பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்றுதான் கூறுகிறது. இந்து மத்தை ஒரு தமிழன் தன்னுடையது என்று கூறினால் அவன் சூடு சொரணையற்றவன்.

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் !

நாங்கள் தமிழ் வளர்த்த பெரியார்களை அவமதிக்கவில்லை. உண்மைப் போன்ற சனாதனிகளைக் காட்டிலும் எமக்கு தமிழ் பற்று பல மடங்கு அதிகம் உள்ளது. தமிழை மதங்களிலிருந்து பிரித்து அதை அறிவியல் மொழியாக்கி வளர்த்தெடுக்க முனைகிறோம். உம்மைப்போல் ஆரியத்துக்கு அடகு வைப்பதல்ல தமிழ்ப்பற்று.

நான் வள்ளலார் இராமலிங்க அடிகளாரை மிகவும் நேசிப்பவன். பார்ப்னச் சாங்கராச் சாரி சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய் என்றபோது தமிழ் தந்தை மொழி என்றார் வள்ளலார். இந்துமதத்தை அவரும் கிழித்திருக்கிறார். தமிழர்களிடம் இருந்த சாதி சமைய வேறுபாட்டைக் களைந்தவர் அவர். அதுதான் தமிழ்ப் பற்று. அவர் எங்கே நாவலர் எங்கே!

சாதியை யார் வளர்த்தார் என்று ஆராயத் தேவையில்லை என்று என்று சிலர் சொல்கிறார்கள்

வேறு சிலர் சாதியை வளர்த்தவர்களை, அவர்கள் அப்படி செய்யவில்லை என்று அடமாக பொய் கூறுகிறார்கள்

எதற்காக சாதியை வளர்த்தவர்களை காப்பற்றுவதற்கு இப்படி அலைகிறீர்கள்.

நாம் பெரியாரில் பற்று உள்ளவர்கள். ஆனால் அவருடைய திராவிட தேசியக் கொள்கை நல்ல விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதை நாம் பல முறை சொல்லி இருக்கிறோம். இளங்கோ கூட திராவிட தேசியம் தவறு என்றும், தமிழ் தேசியமே சரி என்றும் பல முறை சொல்லி இருக்கிறார்.

இப்படி பெரியார் மீது பற்றுக் கொண்டிருந்தாலும், அவருடைய கொள்கைகள் குறித்து விமர்சனங்கள் செய்வதற்கும், அவர் பற்றிய விமர்சனங்களில் சரியானவற்றை ஏற்றுக்கொள்வதற்கும் பக்குவம் எம்மிடம் உண்டு.

இது போன்ற பக்குவத்தை நீங்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும். உண்மை என்று தெரிந்தும், அப்படி இல்லை என்று அடம்பிடிப்பது, அதை பேசாதீர்கள் என்று சொல்வது ஒரு நல்ல கருத்தாளனுக்கு அழகல்ல.

எதையும் மாற்றுவதற்கு, முதலில் திறந்த மனதுடனான வெளிப்படையான விவாதம் அவசியம். அது இல்லாதவரைக்கும் எதுவும் மாறப் போவதில்லை.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதி என்பது களையப்படவேண்டியது. இந்தப்பகுதியில் அவர் சாதியத்தை வளர்த்தார், இவர் சாதியத்தை வளர்த்தார் என்ற ஆய்வு நடத்தவில்லை. காலத்துக்கு ஒவ்வாத கடந்தகால நிகழ்வுகளை மீட்டு மீட்டு நிகழ்காலத்தில் உருவாக்க வேண்டியவையை கவனத்தில் எடுப்பதைக் காட்டிலும் விவாதிப்பதிலேயே இப்பகுதி நகர்கிறது. நேற்றைகளைப்பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு இன்று என்ன செய்யலாம் என்று ஏதேனும் ஆரோக்கியமான வழிகளைக் கூறுங்கப்பா!

ஆமாம். தர்க்கம் என்று வரும் போது பல சமயம் விடயங்கள் தர்க்கப்பொருளை மீறிச்செல்வதே வழமை. அந்த வகையில்

“புலம் பெயர்ந்த நாடுகளில் சாதி பார்க்கப்படுகிறதா? அது எந்த வகையில் பார்க்கப்படுகிறது? ஏன் பார்க்கப்படுகிறது? என்பது விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.”

என்பதே கட்டுரையாளரின் வினாவுமாகும். அது தவிர சாதியம் எவ்வாறு தேசியத்தை மழுங்கடிக்கிறது என்பதும் சாதியத்தை ஒழித்து எவ்வாறு புலம்பெயர் மக்களிடை தேசியத்தை பலப்படுத்தலாம் என்றரீதியில் இது வரை ஒருவரும் விவாதிக்க வில்லை. எனவே தான் நானும் ஒரு ரீஸ்ராட் கொடுப்போம் என் எண்ணினேன்.

தூயவன்,

ஆறுமுகநாவலர் ஆரம்பித்த பாடசாலையில் படித்தவன் என்ற வகையில் அந்தப் பாடசாலை வரலாற்றை நான் அறிவேன். அங்கே, இன்றும் சரி, அன்றும் சரி சாதி வாதம் பார்ப்பதில்லை.

என்று கூறி “வாதம்” செய்யும் உம்முடன் வாதம் செய்ய எனக்குப் பின்னணி ஒன்றுமே தேவையில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாண நகருக்குச் சமீபமாக ஒரு கிராமம்.அந்தக் கிராமத்தில் ஒரு நல்ல தண்ணிக் கிணறு இருகிறது.அந்தக் கிணறு அமைந்திருக்கும் காணி ஒரு தனி மனிதருக்குச் சொந்தமானது.அந்தத் தனி மனிதர் தன்னை ஒரு உயர் சாதிக்காரர் என எண்ணிக் கொள்பவர்.அந்தக் கிராமத்தில் தாழ்த்தப்படோர் எனப்படும் ஒரு மக்களும் பிரிவும் இருக்கிறது.இந்த மக்களுக்கு குடி தண்ணீர் வசதி இல்லை.அவர்களிந்த நல்ல தண்ணீர்க் கிணற்றிற்கு வருகிறார்கள்.தண்ணீர் அள்ளுவதற்கு முயற்ச்சிக்கிறார்கள்.இதைக் கண்டதும் கிணற்றுக் காணியின் சொந்தக்காரர் ஓடி வருகிறார். தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்கிறார். தாழ்த்தப்பட்டோர் தனது கிணற்றை தீண்டக் கூடாது என்கிறார்.

மேலும்... படிக்க..

http://www.viduthalaipulikal.com/file/docs/2005/08/20-09.pdf

சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரவாதியாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் பிற்போக்குவாதியாக இருந்தார். உயர் சாதியினரின் ஏகப் பிரதிநிதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தினார். "தாழ்ந்த சாதியார் இடத்தில் போசனம் பண்ணல் ஆகாது" போன்ற தீண்டாமைக் கருத்துக்களைத் தனது 'முதலாம் சைவ_வினாவிடை' எனும் நூலில் வலியுறுத்தியுள்ளார்[1].

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

  • கருத்துக்கள உறவுகள்

சாதியம்- உடன் பிறந்தே கொல்லும் வியாதிதான் அதைப்பற்றியே கதைத்தால் தீர்ந்தீடுமா?

எனக்குத் தெரிந்த ஒருவர் எப்போதும் தான் சாதியம் பார்ப்பது இல்லை எண்டு வாய்க்கு வாய் சொல்லித் திரிவார். ஆனால் அவரின் மகளின் திருமணத்தில் மாறுபட்டுத்தான் இருந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதியம்- உடன் பிறந்தே கொல்லும் வியாதிதான் அதைப்பற்றியே கதைத்தால் தீர்ந்தீடுமா?

எனக்குத் தெரிந்த ஒருவர் எப்போதும் தான் சாதியம் பார்ப்பது இல்லை எண்டு வாய்க்கு வாய் சொல்லித் திரிவார். ஆனால் அவரின் மகளின் திருமணத்தில் மாறுபட்டுத்தான் இருந்தது.

கறுப்பி,

நீங்கள் சொல்வது சரியே.

வெளிநாட்டில் முன் பின் தெரியாத ஒருவரின் வீட்டிற்குப் போகிறோம். நண்பர் என்று வையுங்களேன். அந்த் வீட்டில் ஒரு முதியவர் கதையை தொடங்குகிறார்.

“நாங்கள் சாதி பார்ப்பதில்லை” என்கிறார்.

இதன் அர்த்தம் “நாங்கள் உயர்ந்த சாதி”

பிறகு சொல்கிறார்,

“இப்ப இந்த வெளிநாட்டுத் தேசத்தில சாதி எல்லாம் பார்க்க முடியுமா? எல்லாரும் எல்லாம் செய்கிறினம்” என்றரீதியில் கதைக்கிறார்

இதன் அர்த்தம் “நீ என்ன சாதி?” என்ற கேள்வியே! இப்போது நாங்கள் நெளிவோம். இப்போது நான் என்ன செய்வது?

1) நானும் உயர்ந்த சாதிதான் என்ற ரீதியில் கதைப்பது

2) பேசாமலிருப்பது

3) சாதி கதைப்பதை சாடுவது

மேற்சொன்ன வற்றில் 2) 3) ஐ செய்தால் அவர்களின் பொதுவான அர்த்தம் நாங்கள் “கூடாத”சாதி என்ற ரீதியில் வரும். பிறகு நாங்கள் போன அந்த வீட்டுக்கார முதியவரின் “முதிர்ச்சியை”ப் பொறுத்து எம்மை நோக்கிய treatment இருக்கும்.

ஆக சாதி செழிப்பாக வாழ்கிறது இங்கு. எனது கேள்வி, அது தேசியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதும் அதை எவ்வாறு தடுக்கலாம் என்பதுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.