Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பிரதான சந்தேகநபர் – புங்குடுதீவைச் சேர்ந்த ஜெயந்தன்

Featured Replies

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பிரதான சந்தேகநபர் – புங்குடுதீவைச் சேர்ந்த ஜெயந்தன்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் முன்னாள் போராளி ஒருவரின் நண்பர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது யாழ்.பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பிரதான சந்தேகநபருடன் குறித்த இருவரும் நேற்றைய தினம் மது அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த ஜெயந்தன் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர் பேரூந்து ஓட்டுனர் எனத் தெரிய வருவதுடன் வித்தியா வழக்கில் குற்றவாளியாக இனங்கானப் பட்ட ஒரு சிலரின் நெருங்கிய உறவினர் எனத் தெரிய வருகிறது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் நல்லூர் பகுதியில் வைத்து, நீதிபதி இளஞ்செழியன் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

 

http://www.canadamirror.com/srilanka/04/132990

சுவிஸ் குமாருக்கும் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தவருக்கும் நெருங்கிய தொடர்பு? கொழும்பு ஊடகம் தகவல்

 

 

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தடுப்பு காவலில் உள்ள சுவிஸ் குமாருக்கும், நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் பிரதான சந்தேகநபருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். நல்லூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும், பிரதான சந்தேகநபரை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதான சந்தேகநபரின் உறவினர் ஒருவரும், நண்பர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், வித்தியா படுகொலை வழக்கில் தடுப்பு காவலில் உள்ள சுவிஸ் குமாருக்கும், நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் பிரதான சந்தேகநபருக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கு குற்றவியல் புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாகவே, நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை மாலை யாழ். நல்லூர் பகுதியில் வைத்து நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகளும் ட்ரயல்அட் பார் தீர்ப்பாய முறையில் விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/community/01/153042

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பிரதான சந்தேகநபர் – புங்குடுதீவைச் சேர்ந்த ஜெயந்தன்

கொஞ்ச நாளைக்கு  இந்த மருந்து  ஓடும் போலத்தான்  கிடக்கு....tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு! நடத்தியவரின் புகைப்படம் வெளியானது

 
030-2.jpg
 

நீதிபதி இளஞ்செழியனைச் சுட முயன்று அவரது பாதுாவலரை சுட்டுக் கொன்றவன் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் மீது தாக்குதல் நடத்தியவர் பெயர் ஜெயந்தன் என்றும்.

இவர் 2 முறை மணம் முடித்தவர் என்றும் அறியப்படுகிறது. ஒரு மனைவி மண் கும்பானிலும், மற்றைய மனைவி புங்குடு தீவிலும் வசித்து வருகிறார்கள்.

இவர் விடுதலைப் புலிகளின் துணைப் படையில் இருந்தவர் என்றும். வன்னி மாவட்டத்தை கரைத்து குடித்த ஆள் என்றும் கூறப்படுகிறது. சம்பவ தினத்தன்று. அவர் நிறை வெறியில் இருந்துள்ளார்.

இருப்பினும் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து அவரை நோக்கி சுட்டுள்ளார். பின்னர் தப்பிச் சென்ற அவரை பிடிப்பது என்பது சிங்கள பொலிசாருக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று விடையம் அறிந்த வட்டாரத்தினர் தெரிவிக்கிறார்கள்.

ஏன் எனில் அவர் தற்போது வன்னிக் காட்டுக்குள் சென்றிருக்க வாய்ப்புள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் சண்டையிட்ட பழக் கடைக்காரர், இவரது 2 மனைவிகள் என்று பலரை பொலிசார் தற்போது விசாரணை செய்து வருகிறார்கள்.

தப்பி ஓடும் வேளை அவர் வேண்டும் என்றே துப்பாக்கியை கீழே போட்டு சென்றதாகவும்.

இல்லையென்றால் அவர் துப்பாக்கியோடு தப்பிச் சென்றதால், அவர் மிக மிக ஆபத்தான நபர் என்று கூறி, பொலிசார் கண்டதும் சுடும் உத்தரவை பெற்று அவரை போட்டு தள்ள திட்டம் போட்டிருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

http://nadunadapu.com/?p=130803

  • கருத்துக்கள உறவுகள்

வடை பாயசம் பால் பழத்துடன் மக்களுக்கு விருந்துவைக்க மீடியாக்களுக்கு மொட்டைக்கறுப்பன் புங்குதீவில் என்னாமா விளைகிறது.! :grin:

ஒன்றுமட்டும் நிச்சயம். காவல்துறையின் உச்சியில் கைவைத்த நீதிபதிகள் இனி அடக்கித்தான் வாசிப்பார்கள்.:shocked:  

2 hours ago, விசுகு said:

கொஞ்ச நாளைக்கு  இந்த மருந்து  ஓடும் போலத்தான்  கிடக்கு....tw_angry:

வடை பாயசம் பால் பழத்துடன் மக்களுக்கு விருந்துவைக்க மீடியாக்களுக்கு மொட்டைக்கறுப்பன் புங்குதீவில் என்னாமா விளைகிறது.! :grin:

ஒன்றுமட்டும் நிச்சயம். காவல்துறையின் உச்சியில் கைவைத்த நீதிபதிகள் இனி அடக்கித்தான் வாசிப்பார்கள்.:shocked:  

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்தத் தாக்குதல் பல்வேறு தரப்பினரின் கூட்டுத்தேவைக்காக நடத்தப்பட்டுள்ளது.

முன்னாள் போராளி உபயோகிக்கப்பட்டிருக்கலாம்.. அல்லது வழமை போல பழிபோடப்பட்டிருக்கலாம்.

தாக்குதலின் சதிகாரர்கள் மீண்டும்.. சிங்கள உயர் பீடத்தில் உள்ளவர்கள் என்பது புலனாகிறது. 

அதனால் தான் எந்த விசாரணையையும் செய்யாமல் வழமை போல.. இத்தாக்குதல் நீதிபதியை குறித்து நடக்கவில்லை என்று சொறீலங்கா பொலிஸ் உயர் பீடம் அடிச்சுச் சொல்கிறது. ஆக.. அதற்கு இத்தாக்குதல் முன்னரே தெரிந்திருக்கிறது. அதை எப்படி திசை திருப்ப வேண்டும் என்பதும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு அந்த முன்னாள் போராளி பலிக்கடா ஆகி இருக்கலாம்.. அல்லது வழமை போல பழி அவர்கள் மீது போடப்பட்டு உண்மையான தாக்குதலாளி தப்ப விடப்பட்டிருக்கலாம். :rolleyes:tw_angry:

35 வருடங்களாக திரித்துப் பழகி.. சுகம் அனுபவிச்ச கூட்டம் லேசில திருந்தாது.tw_angry:

நீதிபதி இளஞ்செழியனின் படுகொலை முயற்சி சிங்கள-பௌத்த அரச  பாதுகாப்புத்தரப்புப் பயங்கரவாதக் கும்பலின் திட்டமிட சதி என்பது அவர்களின் அறிக்கைகளில் மிகத் தெளிவாக புலப்படுகிறது. அவர்கள் சிலநிமிடங்களிலேயே முன்னாள் போராளி என்று கண்டுபிடித்து அசத்தியுள்ளார்கள். சம்பவம் நடந்த இடத்தில்  இருந்த மக்கள் இதை உறுதிப்படுத்துகின்றனர். இந்த திட்டமிடலின் பின்னணியில் இந்திய பயங்கரவாதக் கும்பலின் பங்களிப்பும் இருப்பதாக தெரிகிறது.   

திட்டமிட்ட தமிழின அழிப்புக்காக கடந்த காலங்களில் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல கொலைகாரக் குழுக்களை  போலீஸ், இராணுவ, கடற்படை, விமானப்படை பயங்கரவாதக் கும்பலினுள் நுழைத்திருந்தனர். இந்தக் கும்பலில் ஈபிடிபி, புளொட், வரதர் ஈ.பி.ர்.எல்.எப். போன்ற கைக்கூலிக் குழுக்களில் இருந்த தமிழர் சிலரும் பொறுக்கி எடுக்கப்பட்டிருந்தனர்.

இந்த மோசமான அரச படுகொலைப் பயங்கரவாதக் கும்பல் இன்னமும் போலீஸ், இராணுவ, கடற்படை, விமானப்படை முகாம்களில் இருந்துகொண்டு தமிழ் மண்ணில் தமிழின விரோத செயற்பாடுகளை திட்டமிட்டு செய்து கொண்டிருக்கின்றன. இந்தக் கும்பலே விபூஷிகாவின் வீட்டில் நாடகமாடி பின்னர் ஒருகொலையையும் செய்து நாடகமாடியது. இந்தக் கும்பலே 99% ஆன வாள்வெட்டுக் கும்பல்களின்  பின்னணியில் இருக்கின்றன.   

வித்தியா படுகொலையில் சம்பந்தப்பட்ட பலருக்கும் இந்தக் கும்பலுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. தமிழ் மண்ணில் நடக்கும் 99% ஆன சமூகவிரோத செயற்பாட்டின் பின்னணியில் இந்த தமிழின விரோத அரச படுகொலைப் பயங்கரவாதக் கும்பலே உள்ளது.

இலங்கையில் நடக்கும் மோசமான சமூக விரோத செயல்களில் இந்த அரச பயங்கரவாதக் கும்பலே முன்னணியில் உள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, colomban said:

நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு! நடத்தியவரின் புகைப்படம் வெளியானது

 
030-2.jpg
 

நீதிபதி இளஞ்செழியனைச் சுட முயன்று அவரது பாதுாவலரை சுட்டுக் கொன்றவன் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் மீது தாக்குதல் நடத்தியவர் பெயர் ஜெயந்தன் என்றும்.

இவர் 2 முறை மணம் முடித்தவர் என்றும் அறியப்படுகிறது. ஒரு மனைவி மண் கும்பானிலும், மற்றைய மனைவி புங்குடு தீவிலும் வசித்து வருகிறார்கள்.

இவர் விடுதலைப் புலிகளின் துணைப் படையில் இருந்தவர் என்றும். வன்னி மாவட்டத்தை கரைத்து குடித்த ஆள் என்றும் கூறப்படுகிறது. சம்பவ தினத்தன்று. அவர் நிறை வெறியில் இருந்துள்ளார்.

இருப்பினும் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து அவரை நோக்கி சுட்டுள்ளார். பின்னர் தப்பிச் சென்ற அவரை பிடிப்பது என்பது சிங்கள பொலிசாருக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று விடையம் அறிந்த வட்டாரத்தினர் தெரிவிக்கிறார்கள்.

ஏன் எனில் அவர் தற்போது வன்னிக் காட்டுக்குள் சென்றிருக்க வாய்ப்புள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் சண்டையிட்ட பழக் கடைக்காரர், இவரது 2 மனைவிகள் என்று பலரை பொலிசார் தற்போது விசாரணை செய்து வருகிறார்கள்.

தப்பி ஓடும் வேளை அவர் வேண்டும் என்றே துப்பாக்கியை கீழே போட்டு சென்றதாகவும்.

இல்லையென்றால் அவர் துப்பாக்கியோடு தப்பிச் சென்றதால், அவர் மிக மிக ஆபத்தான நபர் என்று கூறி, பொலிசார் கண்டதும் சுடும் உத்தரவை பெற்று அவரை போட்டு தள்ள திட்டம் போட்டிருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

http://nadunadapu.com/?p=130803

இப்படி அவிக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள்.

நடுநிலையான சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே இந்த சதித்திட்டத்தின் உண்மைகள் பின்னணிகள் வெளிக்கொண்டு வரப்பட முடியும்.

  • தொடங்கியவர்

நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாவலர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் இவரா.?

Published by RasmilaD on 2017-07-25 09:20:11

 

யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழி­யனின் பாது­கா­வலர் ஒரு­வரின் உயிரைப் பறித்து மற்­றொ­ரு­வ­ருக்கு காயத்தை ஏற்­ப­டுத்­திய  துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய  பிர­தான சந்­தேக நபர், தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அமைப்பில் 8 வரு­டங்­க­ளாக இணைந்து செயற்­பட்டு ஆயுத பயிற்சி பெற்­றவர் என்­பது விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. அத்­துடன் பொலி­ஸாரால் தற்­போது தேடப்­பட்டு வரும்  பிர­தான சந்­தேக நபர் ஏற்­க­னவே 2012 ஆம் ஆண்டு கோப்பாய் பகு­தியில் இடம்­பெற்ற படு கொலை ஒன்றின் சந்­தேக நபர் எனவும், அது தொடர்பில் அவர் பிணையில் இருந்து வரு­வதும் மேல­திக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­து­வரும் சிறப்புக் குழு­வொன்றின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

 இந்த நிலையில் சந்­தேக நபரை கைது செய்­வ­தற்கு வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்­டோவின் நேரடி கட்­டுப்­பாட்டில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர்  பாலித்த பெர்­னாண்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஸ்ரெனிஸ்லெஸ் ஆகி­யோரின் மேற்­பார்­வையில் மூன்று சிறப்புக் குழுக்கள் விசா­ர­ணை­களை தொடர்­கின்­றன.

 இந் நிலையில் அடை­யாளம் காணப்­பட்­டுள்ள பிர­தான சந்­தேக நபர் தொடர்பில் இந்த மூன்று பொலிஸ் குழுக்­களும் விஷேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­து­வரும் நிலையில், சந்­தேக நபர் தொடர்பில் பல தக­வல்கள் பொலி­ஸாரால் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன.

 குறித்த சந்­தேக நபர் 1996 ஆம் ஆண்டு தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் இணைந்­துள்­ளதுடன் அங்கு ஆயுதப் பயிற்­சியைப் பெற்று 2004 ஆம் ஆண்டு வரை அந்த இயக்­கத்­துடன் இணைந்து செயற்­பட்­டுள்ளார். பின்னர் அந்த இய­கத்தில் இருந்து வில­கி­யுள்ள அவர் திரு­மணம் செய்­து­கொண்­டுள்­ள­தா­கவும், சந்­தேக நப­ருக்கு 6 பிள்­ளைகள் இருப்­ப­தா­கவும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. முதல் மனைவி மூலா­மாக நான்கு பிள்­ளை­களும் இரண்டாம் மனைவி ஊடாக இரு பிள்­ளை­களும் சந்­தேக நப­ருக்கு உள்­ள­தா­கவும் சந்­தேக நபர் தொழில் ரீதியில் பஸ் சார­தி­யாக செயற்­பட்­டுள்­ள­மையும் விசா­ர­ணைகள் ஊடாக தெரி­ய­வந்­துள்­ளன.

இந் நிலையில் தற்­போது கைது செய்­யப்பட்­டுள்ள சந்­தேக நபரின் சகோ­தரர், உற­வுக்­கா­ரர்­க­ளான 42 வய­தான பால­சிங்கம் மகேந்­திர ராசா, 49 வய­து­டைய  செல்­வ­ராசா மகேந்­திரன் ஆகி­யோ­ரிடம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணைகள் மற்றும் ஏனைய விசா­ர­ணை­க­ளுக்கு அமைய மேற்­படி தக­வல்­களை சேக­ரித்­துள்­ளனர். 

48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து சந்­தேக நபர்­க­ளிடம் முன்­னெ­டுக்­கப்ப்ட்ட விசா­ர­ணை­களில் சம்­பவம் தொடர்பில் பல தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்ப்ட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. இந் நிலை­யி­லேயே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­னாண்டோவின் நேரடி கட்­டுப்­பாட்டில் மேல­திக விசா­ர­ணைகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்பட்­டுள்­ளன.

http://www.virakesari.lk/article/22296

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.