Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளுக்கு ஆள் சேர்த்தவருக்கு ஆயுள் தண்டனை

Featured Replies

புலிகளுக்கு ஆள் சேர்த்தவருக்கு ஆயுள் தண்டனை

 
புலிகளுக்கு ஆள் சேர்த்தவருக்கு ஆயுள் தண்டனை
 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திற்காக, தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி, வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கண்ணதாசன், கொழும்பு அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர். இவர் மீது, கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பிள்ளையை பலவந்தமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பிடித்துச் சென்று இணைத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது

http://newuthayan.com/story/13785.html

  • தொடங்கியவர்

புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்புக்காக இசைத்துறை விரிவுரையாளருக்கு ஆயுள் தண்டனை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

gtn-special.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்த காலத்தில் கட்டாய ஆட்சேர்ப்புச் செய்த குற்றத்திற்காக விடுதலைப்புலிகளின் நுண்கலைக் கல்லூரியின பொறுப்பாளராக இருந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிக்கு, வவுனியா மேல் நீதிமன்றினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைகழகத்தின் இசைத்துறையில், மிருதங்க விரிவுரையாளராக கடமையாற்றும் க. கண்ணதாசன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பெண் ஒருவரை கடத்திச் சென்ற குற்றத்திற்காக புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியும், தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுபவருமான க.கண்ணதாஸன் என்பவருக்கே ஆயுள் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு ஜனவரி காலப்பகுதியில் கிளிநொச்சியில் வைத்து விஜயபாலன் மஞ்சுளா என்ற பெண்ணை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கொண்டு சென்ற குற்றச்சாட்டு தொடர்பில் 50 வயதுடைய கனகசுந்தரம் கண்ணதாஸ் என்ற முன்னாள் போராளிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்ணின் தந்தையால் முறைப்பாடு செய்யப்பட்டது. இதற்கு அமைவாக 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த எதிரிக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றில் வியபாலன் மஞ்சுளா என்பவரை விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாட்டுக்காக கடத்திய குற்றச்சாட்டுக்காக குற்றப் பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

2016 மே மாதத்தில் இருந்து குறித்த எதிரிக்கு எதிரான வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.

வழக்கு விசாரணைகளின் போது கடத்தப்பட்ட விஜயபாலன் மஞ்சுளா என்ற பெண்ணினுடைய தந்தை நாகரத்தினம் விஜயபாலன், தாய் விஜயபாலன் சாந்திமலர் சாட்சியமளித்திருந்தனர். இதன்போது தனது மகளை குறிப்பிட்ட எதிரி வீட்டில் இருந்து இழுத்துச் சென்றதாக சாட்சியமளித்தார். அத்துடன் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களும் சாட்சியமளித்தனர். அதன் பின் எதிரி நீதிமன்றிலே சாட்சியமளித்திருந்தார்.

எதிரி சாட்சியமளிக்கும் போது தான் தற்போது யாழ் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றி வருவதாகவும், தான் ஏற்கனவே விசேட புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நபர் எனவும் தெரிவித்திருந்தார்.

எதிர்தரப்பு விவாதம் முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் தீர்ப்புக்காக இம் மாதம் 17 ஆம் திகதி வழக்கு நியமிக்கப்பட்டு அன்றைய தினம் வழக்கு தீர்ப்புக்காக அழைக்கப்பட்டு எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எதிரியை குற்றவாளி எனக கண்டு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பு வழங்கியதோடு, தண்டனைத் தீர்ப்புக்காக இன்றைய தினம் (25. 07) வழக்கு நியமிக்கப்பட்டு இருந்தது.

இந்த எதிரி ஏற்கனவே புனர்வாழ்வு பெற்றிருந்தாலும் எதிரிக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி இந்த எதிரிக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

இதேவேளை, இந்த வழக்கு விசாரணைகளின் போது கடத்தப்பட்ட குறித்த பெண், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளின் போது மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைகளை அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன நெறிப்படுத்தியிருந்தார்.

http://globaltamilnews.net/archives/34179

  • கருத்துக்கள உறவுகள்

????

  • தொடங்கியவர்

தண்டனையும்! பாடமும்!

 

இறு­திப் போரில் தமிழ் மக்­கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட மனித உரிமை மீறல்­கள், மனித குலத்துக்கு எதி­ரான குற்­றங்­க­ளுக்­காக இலங்­கைப் படை­யி­ன­ருக்கு எதி­ராக போர்க்­குற்ற விசா­ரணை அது­வும் பன்­னாட்­டுப் போர்க்­குற்ற விசா­ரணை, ஒன்று நடத்­தப்­ப­ட­வேண்­டும் என்று தமிழ் மக்­கள் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கி­றார்­கள்.

அதற்கு இலங்கை அர­சும் தொடர்ந்து மறுப்­புத் தெரி­வித்து வரு­கி­றது. உள்­நாட்டு விசா­ரணை ஒன்றை நடத்­த­லாம் என்று அது கூறு­கின்­றது. ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளை­யும் உள்­ள­டக்­கிய விசா­ர­ணைக் குழு ஒன்றை ஏற்­ப­டுத்­தக் கொழும்பு இணங்­கி­னா­லும் அத­னைச் செயற்­ப­டுத்­தா­மல் பின்­ன­டித்து வரு­கின்­றது.

இப்­ப­டிப் படை­யி­ன­ருக்கு எதி­ரான போர்க்­குற்ற விசா­ர­ணை­களை நடத்­தா­மல் அரசு சாக்­குப்­போக்­குச் சொல்லி வரு­கை­யில் சத்­தமே இல்­லா­மல் விடு­த­லைப் புலி­கள் புரிந்­தார்­கள் என்று கூறப்­ப­டக் கூ­டிய போர்க்­குற்­றத்துக்காக முன்­னாள் போராளி ஒரு­வர் நீதி­மன்­றத்­தால் தண்­டிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்.

போர் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்த சம­யம் தனது பிள்­ளை­யைப் பல­வந்­த­மா­கப் பிடித்­துச் சென்று விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தில் சேர்த்­தார் என்று தாய் ஒரு­வர் வவு­னியா மேல் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருந்­தார். இந்த வழக்­குப் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் தாக்­கல் செய்­யப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்­டது.

குற்­ற­மி­ழைத்­த­வர் என்று சொல்­லப்­ப­டும் முன்­னாள் போரா­ளி­யான கண்­ண­தா­ச­னுக்கு நீதி­மன்­றம் ஆயுள் தண்­டனை வழங்­கித் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

கண்­ண­தா­சன் ஒரு மிரு­தங்க வித்­து­வான். விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தில் சேர்­வ­தற்கு முன்­பி­ருந்தே அவர் வித்­து­வான். இயக்­கத்­தி­லும் அவர் கலைத்­து­றை­சார் பணி­க­ளி­லேயே ஈடு­பட்­டி­ருந்­தார்.

புலி­க­ளின் அழ­கி­யல் கலைக்­கல்­லூரி ஒன்­றுக்­குப் பொறுப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­வர். இறு­திப் போரின் பின்­னர் ஏனை­ய­வர்­க­ளைப் போலவே சர­ண­டைந்து மறு­வாழ்­வுப் பயிற்­சி­க­ளைப் பெற்று வெளி­யே­றி­ய­வர்.

இறு­திப் போர் நடந்­து­கொண்­டி­ருந்­த­போது பிள்­ளை­களை அவர் பல­வந்­த­மா­கப் பிடித்­துச் சென்று இயக்­கத்­தில் இணைத்­த­தன் மூலம் அந்­தப் பிள்­ளை­யின் இறப்­புக்­குக் கார­ண­மாக இருந்­தார் என்­பதே அவர் மீதான குற்­றச்­சாட்டு. சிறு­வர்­க­ளையும் பல­வந்­த­மா­கக் கடத்­திச் சென்று போரில் ஈடு­ப­டுத்­தி­னார்­கள் என்று விடு­த­லைப் புலி­கள் இயக்­கம் மீது அந்­தக் காலப் பகு­தி­யில் கடு­மை­யான விமர்­ச­னங்­கள் இருந்­தன. புலி­க­ளின் போர்க்­குற்­ற­மா­க­வும் அது பார்க்­கப்­ப­டு­கி­றது.

இத்­த­கைய நிலை­யில்­தான் கண்­ண­தா­ச­னுக்கு ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இது, போர்க்­குற்­றம் குறித்த விட­யத்­தில் அரசு நடந்­து­கொள்­ளும் முறை குறித்­துப் பல­மான கேள்­வியை எழுப்­பி­யி­ருக்­கி­றது. அத்­தோடு ஏற்­க­னவே ஒரு தடவை விசா­ரணை ஏது­மின்­றியே தண்­ட­னைக்கு உள்­ளாக்­கப்­பட்ட முன்­னாள் போரா­ளி­க­ளின் எதிர்­கா­லம் குறித்த அச்­சத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த விட­யத்தை வழக்கு விசா­ர­ணை­யின்­போது நீதி­ப­தி­யும் சுட்­டிக்­காட்­டி­னார். ஏற்­க­னவே ஒரு தடவை தண்­டிக்­கப்­பட்­ட­வர் மீது மீண்டும் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை விதிப்பதற்காகத் தான் வருந்துகிறார் என்றார் நீதி­பதி. இது கவ­லைக்­கு­ரிய விட­யம் என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தி­லி­ருந்த பின்­னர் சர­ண­டைந்து மறு­வாழ்­வுப் பயிற்­சி­க­ளைப் பெற்ற ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் சமூ­கத்­து­டன் மீள இணைக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் எல்­லோர் மீதும் இது­போன்ற ஏதோ­வொரு குற்­றச்­சாட்­டைச் சுமத்தி அவர்­க­ளைச் சிறை­யில் தள்­ளி­வி­டக்­கூ­டும் என்ற அச்­சம் இப்­போது ஏற்­ப­டு­வ­தை­யும் தவிர்க்க முடி­யாது.

அரச இயந்­தி­ரம் இவ்­வாறு முன்­னாள் போரா­ளி­களை அச்­சு­றுத்­தும் விதத்­தில் செயற்­ப­டு­வது எதற்­காக? போர்க்­குற்ற விசா ­ர­ணைக்­கான கோரிக்­கை­க­ளைத் தமிழ் இனம் கைவி­ட­வேண்­டும் என்­ப­தற்­காவா? அல்­லது இது போன்ற விசா­ர­ணை­க­ளைப் பன்­னாட்­டுச் சமூ­கத்­திற்­குக் காட்டி தாம் போர்க்­குற்ற விசா­ர­ணை ­க­ளில் ஈடு­ப­டு­கின்­றோம் என்று ஏமாற்­று­வ­தற்கா?

எப்­ப­டி­யி­ருந்­தா­லும் மீண்­டும் மீண்­டும் இவ்­வாறு தமிழ் மக்­கள் அரச அதி­கா­ரத்­தால் இலக்கு வைக்­கப்­ப­டு­வது நல்­லி­ணக்­கத்­தை­யும் நீடித்த அமை­தி­யை­யும் ஒரு­போ­தும் ஏற்­ப­டுத்­தாது.

http://uthayandaily.com/story/14039.html

  • கருத்துக்கள உறவுகள்

20 வருடங்களுக்கு முன்பு 1996 பிப்ரவரி 11-ம் தேதி பெண்கள், குழந்தைகள் உட்பட 26 தமிழர்கள் சிறீலங்க இராணுவத்தினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்னர். 39 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் தமிழர்கள்.. தமிழர்களைச் சுட்டுக் கொன்றதால் கைதுசெய்யப்பட்ட இராணுவ வீரர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்னர். 

15 hours ago, நவீனன் said:

இந்த விட­யத்தை வழக்கு விசா­ர­ணை­யின்­போது நீதி­ப­தி­யும் சுட்­டிக்­காட்­டி­னார். ஏற்­க­னவே ஒரு தடவை தண்­டிக்­கப்­பட்­ட­வர் மீது மீண்டும் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை விதிப்பதற்காகத் தான் வருந்துகிறார் என்றார் நீதி­பதி. இது கவ­லைக்­கு­ரிய விட­யம் என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

 

15 hours ago, நவீனன் said:

இறு­திப் போர் நடந்­து­கொண்­டி­ருந்­த­போது பிள்­ளை­களை அவர் பல­வந்­த­மா­கப் பிடித்­துச் சென்று இயக்­கத்­தில் இணைத்­த­தன் மூலம் அந்­தப் பிள்­ளை­யின் இறப்­புக்­குக் கார­ண­மாக இருந்­தார் என்­பதே அவர் மீதான குற்­றச்­சாட்டு.

இந்த சம்பவம் உண்மையென்றால் தண்டனையில் தவறு காண முடியாது!

சுதந்திரம் வேணும், ஆனால் நாங்கள் கஷ்டப்படவே கூடாது என்று நினைக்கும் தமிழர் பரவலாக உண்டு. இந்தக் குடும்பமும் அதற்கு விதிவிலக்கில்லை என்று தெரிகிறது. இந்தக் குடும்பம் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் தூண்டுதலில் இதை செய்தது வேறுவிடயம். உண்மையை கண்டறியும் குழுவினர் இந்தக் குடும்பத்துக்கு ஆடு, கோழி வேண்டுமா என்று கேட்காமல், மூளைச்சலவை செய்து வழக்கு தொடர வைத்திருந்தனர் என்ற பின்னணி பலருக்கு தெரிந்திருக்காது.

இதே குடும்பத்தின் பெண் சிங்கள இராணுவப் பயங்கரவாதிகளால் பிடிக்கப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டால், இந்தக் குடும்பம் என்ன செய்திருக்கும்? வழக்கு தாக்கல் செய்தாலும் நீதி கிடைத்திருக்குமா? இசைப்பிரியா சம்பவத்தில் ஆதாரங்கள் இருந்தும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் நீதித்துறையால் யாருக்காவது தண்டனை வழங்கப்பட்டதா? இன்னும் எத்தனை ஆயிரம் தமிழ் குடும்பங்கள், பிள்ளைகள் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் பாதுகாப்புப் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இவர்களில் ஒருவருக்காவது நீதி கிடைத்துள்ளதா? அயோக்கியர்களுக்கு இவை விளங்காது.

புலிகளின் தலைமை என்றைக்கும் பலவந்தமாக ஆட்களை சேர்த்து கிடையாது. தானாக முன்வந்த பலரை திருப்பியனுப்பிய சம்பவங்கள் பல உண்டு. இது 2006 வரை நீடித்தது. அதன் பின்னரும் புலிகளின் தலைமை மக்களை தெளிவுபடுத்தி,  சொந்த விருப்பத்திலேயே குடும்பத்துக்கு ஒருவராவது வேணும் என்று கடுமையாக அறிவுறுத்தியிருந்தது. ஆனால் நடைமுறையில் அது சிலரால் (தமிழ்ச்செல்வன் உட்பட)  பின்பற்றப்படவில்லை என்ற உண்மையை மறைக்க முடியாது. இறுதி நேரத்திலும் அவரவர் ஆள் பிடித்த உண்மையை மறைக்க முடியாது. இவை அனைத்தும் தலைமையின் அனுமதியின்றியே நடந்தது என்ற உண்மையையும் மறைக்க முடியாது. திட்டமிட்ட இனப்படுகொலையை செய்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் அராஜகங்களுடன் ஒப்பிடுகையில் இவை மிகமிகச் சிறுதுளிகள் என்ற உண்மையையும் மறைக்க முடியாது. ஆனால் மிக மோசமான இனப்படுகொலையை செய்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் மாபெரும் உண்மைகளை தொடர்ந்து மூடி மறைத்து பொய்களை கூறி, காலத்தை கடத்தி வரும்போது, தமிழர்கள் மட்டும் உண்மையைக் கூறவேண்டிய தேவை இல்லை.  

கண்­ண­தா­ச­ன் தனது செயலை மறுக்காமை அவரது நேர்மையைக் காட்டுகிறது. நேர்மையானவர்கள் தொடர் துன்பம் அனுபவிப்பதும் அயோக்கியர்கள் கூத்தடிப்பதுவும் வழமையாக மோசமான நாடுகளில் நடப்பதுவே. அதே நேரம் இந்த நிலைமை நீடிப்பதில்லை. காலம் மாறும் என்பது வரலாறு.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் ஆட்சேர்ப்புக்கு தண்டனை கொடுத்தாச்சு. இராணுவத்தின் கட்டாய ஆட்சேர்ப்புக்கு யார் தண்டனை கொடுக்கிறது..???!  இராணுவத்தை விட்டு ஓடிப் போன அனைவர் சார்பிலும் ஒரு வழக்குப் போட்டு விசாரிச்சால்.. கன பேர் உள்ள போய் இருக்க நேரிடும். ஆனால்.. அதை செய்யமாட்டினம்.. நீதி பதிகள். :rolleyes:

  • தொடங்கியவர்

ஆயுள் தண்டனை – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நுண்கலைக் கல்லூரியின் அதிபராகச் செயற்பட்ட கண்ணதாசன் என்ற முன்னாள் போராளிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது. 2009ஆம் ஆண்டுக்கு முன்னைய காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்பட்டே கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு முன்னாள் போராளிகள் அனைவரது வாழ்விலும் பெரும் அதிர்வை உண்டு பண்ணியுள்ளது. அத்துடன் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்குமா? ஆயுள் தண்டனை கிடைக்குமா? என்ற சந்தேகத்தையும் வலுப்படுத்தியுள்ளமையும் கவனிக்கப்பட வேண்டியது.
 
2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்ட இன அழிப்புப் போரின்போது, பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் அனைத்து விடுதலைப் புலி உறுப்பினர்களையும் சரணடையுமாறும் இலங்கை அரசாங்கம் அறிவித்தது. இலங்கை அரசாங்கம் இறுதிப் போரின்போது வழங்கிய பல வாக்குறுதிகளை அந்தப் போர்க்களத்திலேயே மீறியது. சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்பதை நம்பிச் சென்ற அப்பாவித் தமிழ் இளைஞர் யுவதிகள் சித்திரவதை செய்யப்பட்டும் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டும் மிகவும் கொடூரமாக – மனித குலத்திற்கு விரோதமான முறையில் இன அழிப்பு செய்யப்பட்டனர்.
 
சரணடைந்த பெண் போராளிகள் இறுதிப் போர்க்களத்தில் எவ்வாறு கொன்று வீசப்பட்டார்கள் என்பதற்கான சாட்சியங்கள் பல வெளிவந்துள்ளன. சரணடைந்த ஆண் போராளிகள் நிர்வாணமாக இருத்தப்பட்டு பிடரிகளில் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டதும் உடலில் கத்தியால் கீறி இராணுவத்தினர் கொலை விளையாட்டுப் புரிந்தமையையும் இந்த உலகு அறியும். அத்துடன் ஓமந்தை இராணுவச் சோதனைச்சாவடியில் பல்லாயிரம் பேரின் கண்களுக்கு முன்னால் போராளிகளின் குடும்பங்களால் ஒப்படைக்கப்பட்ட போராளிகள், மற்றும் போராளிக் குடும்பங்கள் பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
 
அவர்கள் எல்லோரும் காணாமல் போனதாக இலங்கை அரசு கைவிரித்தது. அப்பாவித் தமிழ் மக்களும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்பதை நம்பிச் சரணடைந்த அல்லது குடும்பங்களால் சரணடைய வைக்கப்பட்ட முன்னாள் போராளிகளையும் காணாமல் ஆக்கிய- அந்த நேரத்தில் குறித்த இடங்களில் கடமை புரிந்த இராணுவத்தினர், இராணுவ அதிகாரிகள்மீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது? மாறாக அவர்களுக்கு பதவி உயர்வுகளும் வீரர்கள் என்ற விருதுகளும் பரிசளிக்கப்பட்டன. தமிழ் மக்கள்மீதான தமிழ்ப் போராளிகள் மீதான பாரபட்சம் இப்படித்தான் வெளிப்படுகிறது. தமிழ் மக்கள்மீதான ஒடுக்குமுறை இப்படித்தான் வெளிப்படுகிறது.
 
தமிழ் மக்கள், இலங்கை அரசின் இனப் பாரபட்சத்திற்கு எதிராக, இன ஒடுக்குமுறைக்கு எதிராக, இன ஆதிக்கத்திற்கு எதிராக, உரிமை மறுப்புக்கு எதிராக – அதாவது ஒரு நியாயமான காரணத்திற்காக போராடுகின்றனர். அந்த கொள்கைகக்காகவே தமிழ்ப் போராளிகள் ஆயுதம் ஏந்தும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டனர். இலங்கை அரசாங்கம், காலம் காலமாக தமிழ் இனத்திற்கு எதிராக, எப்படியான கட்டமைக்கப்பட்ட இன ஒடுக்குமுறையை நுட்பமாக முன்னெடுக்கிறதோ அவ்வாறே தமிழ் போராளிகளின் அழிப்பு விடயத்திலும் அதற்குப் பிந்தைய கால கட்ட நீதி அணுகுமுறைகளிலும் செயற்படுகிறது.
 
பல்வேறு கொடூரக் குற்றங்களைப் புரிந்த, மனித குலத்திற்கு விரோதமான குற்றங்களைப் புரிந்தவர்கள் உலவித் திரிய, பொதுமன்னிப்பு வழங்குவதாக கூறப்பட்டு சரணடைந்து, புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு தண்டனை வழங்குவது நியாயமற்றது. அப்படி என்றால் எதற்காக போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது? எதற்காக புனர்வாழ்வு வழங்கப்பட்டது? தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தின் ஒவ்வொரு போராளிகளும் அந்த இயகத்தின் பணியை ஆற்றியவர்கள். இயக்கம் சார்ந்த பணியை ஆற்றிய ஒவ்வொருவரையும் அவர்கள் ஆற்றிய பணிக்காக ஒரு வழக்கு மூலம் தண்டிக்க முடியும் ஒடுக்க முடியும் என்ற அச்சுறுத்தலை இந்த நிலை ஏற்படுத்துகிறதல்லவா?
 
பொதுமன்னிப்பு என்ற பெயரில் பல போராளிகள் அழிக்கப்பட்டனர். பல போராளிகள் காணாமல் ஆக்கப்பட்டனர். புனர்வாழ்வு என்ற பெயரில் பல போராளிகள் உள்ளத்தால் அழிக்கப்பட்டனர். வாதைகளுக்கு உள்ளாக்கப்பட்னர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? அவர்களை பற்றிய தகவல்களை வெளியிடு என்று தமிழ் மக்கள் போராடுகிறார்கள். அழிக்கப்பட்டவர்களுக்காக நீதியை வழங்கு என்று கோரி தமிழினம் போராடுகிறது. இந்த நிலையில் எஞ்சியவர்களையும் – மீதம் இருப்பவர்களையும் இழப்பதுதான் இலங்கையின் நீதி என்றால் இது ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்திற்கு எதிரான அநீதியல்லவா?
 
இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக எத்தனையோ படுகொலைகள் நடாத்தப்பட்டுள்ளன. மனித உரிமையாளர்கள், ஊடவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதனை நிகழ்த்தியவர்களும் அதற்கு ஆணை வழங்கியவர்களும் இன்று பதவிகளிலும் சுகபோகமாகவும் வாழ்ந்து வருகின்றனர். உரிமைக்காக போராளிகள் ஆயுதம் ஏந்தினர். அதனை பயங்கரவாதம் என்றது இலங்கை அரசு. இலங்கை அரசின் பார்வையில் தமிழ் இன விடுதலையை வலியுறுத்தி ஒரு பாடலைப் பாடினாலும் ஒரு பாடலுக்கு மேளம் இசைத்தாலும் அவர்கள் பயங்கரவாதிகள்தான்.
 
கண்ணதாசன் ஈழத்தின் இசைத்துறை சார்ந்த கல்வியியலாளர். புனர்வாழ்வு என்ற வதைமுகாமின் பின்னர், தனது புலமைத் திறமையால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறை விரிவுரையாளராகினார். அமைதியாக இசைத்துறை சார்ந்தும், இசை உயர் கல்வி சா்ர்ந்தும் அவர் செயற்பட்டு வந்தார். சமூகத்திற்கு முன்னூதாரணமாக செயற்பட்டு வந்த  நிலையிலேயே அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தமிழர்களை கொன்று தீர்த்து, இன்னும் வெறியுடன் அலைபவர்களை பாதுகாக்கும் நாட்டில், தன் இனத்திற்காக ஆயுதம் ஏந்திப் போராடி, அப் போராட்டம் மௌனிக்கப்பட்ட  பின் அமைதியாக முன்னூதாரணமான வாழ்வை வாழும் தமிழர்களின் இன்றைய நிலை இதுதான்.
உரிமை மறுக்கப்பட்டவர்களாய், நீதி மறுக்கப்பட்டவர்களாய், வீடு திரும்பாதவர்களாய், நிலம் இழந்தவர்களாய், காணாமல் ஆக்கப்பட்டவர்களாய், சிறைக் கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டவர்களாய் இன்னும் பலவாறு விதமாக ஆயுதள் தண்டணையை அனுபவிப்பவர்கள் ஈழத் தமிழர்கள். இன்னுமின்னும் சிறைகளும் ஒடுக்குமுறைகளுமே எம்மைச் சுற்றி வளர்கின்றன. தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படுகின்றன. எதிர்கொண்டவைகளுக்குள் இழந்தவைகளுக்கும் இந்தத் தீவில் நீதி கிடைக்காது என்பதையே மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றனர். இத் தீவில் மெய்யான நீதி நிலவியிருக்குமெனில் தமிழ் இனம் விடுதலையுடன் சுதந்திரத்துடன் உரிமையுடன் வாழ்ந்திருக்கும். ஒடுக்குமுறையை அழிப்பை சந்திக்க வேண்டிய நிலைமைகளும் ஏற்படாது.
 
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://globaltamilnews.net/archives/34691

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.